எல்லையற்ற அன்பு கொள்வோம்

Tuesday, January 02, 2007

DUBAI SHOPPING FESTIVAL

அல்லாருக்கும் வணக்கம்.

இப்ப ஒரு நாப்பத்தஞ்சி நாளைக்கு துபாயில ஷாப்பிங் பெஸ்டிவெல்னு
ஒண்ணு வெச்சி ஆம்பளைங்க பர்ச களவாடிட்டு இருக்கானுங்க.
திருவிழாவே என்னமோ அவுங்களுக்காக நடக்குற மாதிரி இருக்கு.
மருந்துக்கு கூட ஜீன்ஸ் பேண்டு கடை,ஒரு டீ சர்ட் கடை இல்ல.
நேத்து துபாய் ஷாப்பிங் பெஸ்டிவெல் போயிட்டு திரும்ப வரும்போது
இந்த டவுட்டு வலுவாயிருச்சி. என்னாதுன்னு கேக்குறிங்களா! குளோபல்
வில்லேஜ்னு ஒரு எடம் அங்கதான் இந்த அக்கிரமம் நடக்குது.
அத்தாதண்டி பெரிய எடத்தில ஒவ்வொரு நாட்டுக்காகரவங்களும்
தனித்தனிய கடை போட்டுருக்காங்க ஆனா பாருங்க எல்லா
நாட்டுக்காரங்களும் சொல்லி வெச்சா மாதிரி பொம்பளைங்க போடற
துணிவகைகள் மட்டும் வெச்சிருக்கானுங்க. (என்னதான் கடை
வெச்சிருந்தாலும் நாம வாங்கிக்க போறது கிடையாது. வாங்கி
குடுத்து அழுவறதுதான் நம்ம பொழப்பு அது வேற விசயம்)

அடப்பாவிங்களா!!

ரைட்டு விடுன்னு இந்தியா பெவிலியன் போய் பார்த்தா அங்க அதை
விட பெரிய கொடுமை. புடவை, சுடிதார், சமையல் பாத்திரங்கள்,
கரண்டி, கடாய், அய்யப்பன் கேசட் வெங்காயம் முதலான காய்கறிகளை
ஈசியா வெட்டறதுக்கு ஒரு சாதனம் நம்ம ஊரு மக்கள்ஸ் அதை டெமோ
காட்ட சொல்லியே அவனை வெங்கயாம் வெட்ட வச்சிட்டாங்க.
கிட்டத்தட்ட அரை டன் வெங்காயம் வெட்டி அவன் கண்ணே விஜயகாந்து
கண்ணு மாதிரி ஆகிப்போச்சி.

Photobucket - Video and Image Hosting


அமீரகத்து பெவிலியன் பக்கம் போனா வாசனை திரவியம் விக்கிற கடை
மட்டும் இருந்தது பெரும்பாலும் அதேதான். அங்கே நவயுக நங்கைகளாம்
காந்த கன்னிகள் வாசனை திரவியங்களை அள்ளித்தெளிக்க (சாம்பிளாம்!!)
இந்தா ரைட்டுல போடு, இந்தா லெப்டுல போடுன்னு ஓசிலயே ஒரு
வாரத்துக்கு தேவையான வாசைனைய தேக்கி வெச்சாச்சி. ஒரு குப்பி
நல்ல வாசனையா இருக்கவே எம்புட்டு புள்ளன்னு விசாரிச்சா 200 திராம்ஸ்
சொலிச்சி. தினமும் குளிப்பதே சாலச்சிறந்ததுன்னு எஸ்கேப் ஆயிட்டேன்.

எகிப்து கடைகளுக்கு போனேன் ஒண்ணும் சொல்லிக்கற மாதிரி இல்லை.
சோப்பு, சீப்பு, கண்ணாடி, அவங்க நாட்டு பாரம்பரிய ஆடைகள்
விக்கற கடை மட்டும் நாலஞ்சி இருந்தது. நுழைவுவாயிலில் துபாய்
ஷேக்கின் பழைய கால வெள்ளைப்படங்கள் ஒட்டி வெச்சிருந்தாங்க.
அமீரகத்தின் வளர்ச்சிக்கு அவர்தான் காரணம்னு ரெண்டு பேர் பேசிகிட்டு
இருந்தாங்க.

ஈரான் நாட்டுக்கடைகளில் பெரும்பாலும் கைவினைப்பொருட்கள் விற்கும்
கடை வெச்சிருந்தாங்க. கைவேலைப்பாடுகளால் ஆன திரைச்சீலைகள்,
தரைவிரிப்புகள். கத்தி, கபடா விற்கும் கடை. ரொம்பவே ரசிக்கிறமாதிரி
இருந்தது.

மிகவும் ரசிச்சது கென்ய நாட்டின் கடைகள்தான் முழுக்க முழுக்க விலங்கு
தோலினால் ஆன சிறுசிறு பரிசுப்பொருட்கள்னு வித்தியாசமா இருந்துச்சி.
அவ்வளவு அன்பா பழகி விக்கிறாங்க. பாக்கறதுக்குதான் கருப்பா
இருந்தாலும் வெள்ளை மனதுடைய பெண்கள். அவுங்க நாட்டுக்காரங்க
கூந்தலை சிறு சிறு பின்னல்களாக போட்டு ரொம்ப அழகா
வெச்சிருப்பாங்க அது மாதிரி ரெண்டே ரெண்டு பின்னல் போடறதுக்கு
எம்புட்டுன்னு பக்கத்தில இருந்த ஒரு அக்கா கேட்டுச்சி 28 திராம்ஸ்னு
சொன்னதும் எஸ்கேப் ஆயிருச்சி. விலங்கு தோலினால் சிறிய
பின்னல்களுடன் செய்த ஒரு கயிறு நல்லா இருந்தது. வாங்கி கைல
கட்டிகிட்டேன் அந்த அக்காவே கட்டி விட்டுச்சி. எலேய் நரிக்கொறவன்
கெட்டாண்டா வித்தியாசம்னு சொல்லிட்டு இதை கட்டி நீயே
நாறிக்காதன்னு பாசக்கார பய ஒருத்தன் சொன்னான் வழக்கம்போல
புறந்தள்ளினேன்.

மற்ற நாட்டின் கடைகளுக்கும் சும்மா பேருக்கு போயிட்டு வந்தேன்.

ராட்சத ரங்கராட்டினம் இருந்துச்சி அட கடேசியா நம்ம ஊரு திருவிழால
ராட்டினம் சுத்தினது ரொம்ப நாள் ஆச்சே போய்த்தான் பாப்போமேன்னு
வெலைய விசாரிச்சேன் 15 திராம்ஸ் கொஞ்சம் அதிகமா தோணினாலும்
100 அடி உசரத்துல சுத்த போற ஆசையில குடுத்தேன். டேய் இது பெருசு
கீழ எறங்ககுள்ள வாந்தி எடுத்துறுவே வேணாம் போயிடலாம்னு
சொன்னாங்க. நாந்தான் கேக்கவே இல்ல. ஆவுறது ஆவட்டும்னு
ஏறிட்டேன். வயித்துக்கும் தொண்டக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும்
உருளுதடின்னு வைரமுத்து சொன்னது போல மொத ரவுண்டு மேல
போகும்போது இருந்துச்சி. போகப் போக வேகத்த கூட்டுவானுங்கன்னு
பாத்தா கிழவி மாவாட்டுற மாதிரி சுத்தறானுங்க. நல்லா கரகரன்னு
சுத்துங்கடான்னா சுத்த வெண்ணைங்க சொன்னாலும் கேக்கமாட்டேன்றானுங்க.
குடுத்த காசுக்கேத்த மாதிரி 15 ரவுண்டும் இல்லையாம் 6 ரவுண்டுதான்
சுத்தினாங்க. தண்டமா போச்சி.


ரமேஷ் கண்ணா ஒரு படத்தில சின்ன வட்டம் போட்டு சில்லறைய தூக்கி
போட்டு வட்டத்துக்குள்ள விழற காசு எல்லாம் உனக்கு சிதறுற ஒண்ணு
ரெண்டு மட்டும் எனக்குன்னு சொல்லுவாரு. அதே மாதிரி ஒரு இடத்தில
பெரிய மேசை போட்டுருந்தாங்க அஞ்சு திராம்ஸு குடுத்தா ஒரு சின்ன
நாணயம் தராங்க அதை ஏதாவது ஒரு வட்டத்துல போட்டா
வட்டத்துக்கேத்த மாதிரி டெடிபியர் (கரடிபொம்மை) தருவாங்களாம்.
பொண்ணுங்க கட்டி பிடிச்சி தூங்கறதுக்காகவே கண்டுபிடிச்ச ஒரு
பொம்மை அது. இதிலயும் பெண்ணாதிக்க போக்கு தெரிஞ்சதால எஸ்கேப்.

பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிடலாம் இல்லாதவன் பாயாசம்
குடிக்கலாம்
என்ற பழமொழிக்கேற்ப எல்லாத்தையும் வேடிக்கை
மட்டும் பார்த்துட்டு வந்துட்டேன்.

40 comments:

கப்பி | Kappi said...

:))

கலக்கல் தம்பி!!

Anonymous said...

;)

பினாத்தல் சுரேஷ் said...

கலக்கல் வர்ணனை தம்பி!

ஆக, போவாதே-ன்றே! சரி எப்படி எஸ்கேப் ஆவறதுன்னு பாக்கறேன். ட்ராபிக், லீவுநாள்னு சொல்லி நாலுநாள் லீவ்லே ஏமாத்திட்டேன்.. முயற்சிப்போம்.. மத்தபடி நம்ம விதி!

Anonymous said...

ஒரு பெரிய அறிஞர் இப்படித் தான் கடை வீதிக்கு சென்று தினமும் பொருட்களை பார்ப்பாராம். ஆனால் எதுவும் வாங்கமாட்டாராம். அவரிடம் இது பற்றி ஒரு கடைக்காரர் கேட்டாராம். அதற்கு அவர் எனக்கு எது எல்லாம் தேவை இல்லை என்று பார்த்துக் கொண்டு இருக்கிறேன் என்றாராம். அந்த ரேஞ்சுக்கு நீங்க போயிட்டீங்கள்

கப்பி | Kappi said...

//தினமும் குளிப்பதே சாலச்சிறந்ததுன்னு எஸ்கேப் ஆயிட்டேன்//

சாலச் சிற்ந்ததுன்னு வாய்பேச்சு மட்டும் போதாது தம்பியண்ணன்...குளிக்கோனும் ;))

//ஓசிலயே ஒரு
வாரத்துக்கு தேவையான வாசைனைய தேக்கி வெச்சாச்சி.//

அப்ப இன்னும் ஒரு வாரத்துக்கு இந்த பக்கமே வரக்கூடாதுப்பா!!

Anonymous said...

//அரை டன் வெங்காயம் வெட்டி அவன் கண்ணே விஜயகாந்து
கண்ணு மாதிரி ஆகிப்போச்சி//

சாதாரன ஆள் வெங்காயம் வெட்டினா அவன் கண்ணுல தண்ணி வரும்..நான் வெங்காயம் வெட்டினா வெங்காயத்துக்கே தண்ணி வரும்!!

கப்பி | Kappi said...

மருதநாயகம்,

அது சாக்ரடீசு...அவரோட நம்மள கம்பேர் பண்ணி நானும் ஒரு பதிவு போட்டிருக்கேன் :))

கப்பி | Kappi said...

//கத்தி, கபடா விற்கும் கடை. ரொம்பவே ரசிக்கிறமாதிரி
இருந்தது.
//

அடக்கொலகார பாவிகளா..கத்தி கபடாவையெல்லாம் ரசிச்சு வாங்குறாய்ங்களா!

Anonymous said...

ஆ ஆஹா துபாய் திருவிழாவுக்கு கூட்டிப் போகணும்னு எங்க வீட்லெ அடம் பிடிச்சப்பவே நினெச்சேன் ஏதோ வில்லங்கம் இருக்கும்னு. ஏதோ என் அதிர்ஸ்டம் போகும் கெட்ட வாய்ப்பு தவறிவிட்டது.

இப்பத்தான் தெரியுது இதுக்குத்தானான்னு. தம்பி பெரிய ஆபத்திலிருந்து காப்பாத்திட்டெயே....

நீ நீடூழி வாழ்க. என் சார்பா இருட்டுக்கடை அல்வா வாங்கி அனுப்பறேன்.

கதிர் said...

கப்பி பயலே!

இந்த கலக்கல் தம்பிய விடவே மாட்டியா?

நன்றி ராம்! ரொம்ப சிக்கனமா இருக்கீங்களே!

சுரேஷ்! வளர்பிறை என்பது தேய்பிறை என்பதும் நிலவுக்கு தெரியாதுன்னு சொல்ற மாதிரி நம்ம பொழப்பு!

கதிர் said...

சாக்ரடீசு ரேஞ்சுக்கு என்னை நினைச்சு பாக்கறதுக்கு பெரிய மனசு வேணுங்க மருதநாயகம்.

உங்களுக்கு இருக்கு!! மிக்க நன்றி!

நாமக்கல் சிபி said...

//பாக்கறதுக்குதான் கருப்பா
இருந்தாலும் வெள்ளை மனதுடைய பெண்கள். //

நோட் திஸ் பாயிண்ட் யுவரானர்

//எலேய் நரிக்கொறவன்
கெட்டாண்டா வித்தியாசம்னு சொல்லிட்டு இதை கட்டி நீயே
நாறிக்காதன்னு பாசக்கார பய ஒருத்தன் சொன்னான் வழக்கம்போல
புறந்தள்ளினேன். //
நல்லத சொன்னா என்னைக்கு நீ கேட்டுருக்க...

ஊர் பக்கம் இதெல்லாம் கட்டிட்டு வந்துடாத...

நாமக்கல் சிபி said...

//கப்பி பய said...

//கத்தி, கபடா விற்கும் கடை. ரொம்பவே ரசிக்கிறமாதிரி
இருந்தது.
//

அடக்கொலகார பாவிகளா..கத்தி கபடாவையெல்லாம் ரசிச்சு வாங்குறாய்ங்களா! //

ரிப்பீட்டே...

நாமக்கல் சிபி said...

//ரமேஷ் கண்ணா ஒரு படத்தில சின்ன வட்டம் போட்டு சில்லறைய தூக்கி
போட்டு வட்டத்துக்குள்ள விழற காசு எல்லாம் உனக்கு சிதறுற ஒண்ணு
ரெண்டு மட்டும் எனக்குன்னு சொல்லுவாரு. //

அது கார்த்திக்...
ரமேஷ் கண்ணா மேல தூக்கி போடற காசுல உனக்கு வேண்டியதெல்லாம் எடுத்துட்டு மிச்சத்தை மட்டும் எனக்கு கீழ அனுப்புனு சொல்லிவாரு ;)

ramachandranusha(உஷா) said...

தம்பி, "அக்காவே" கட்டிவிட்ட நூலுக்கு எவ்வளவு குடுத்தீக? ஊருக்கு போனா உங்க அம்மா கேட்டா பன்னிரண்டரையால பெருக்கி, சொல்லுங்க, அப்ப என்ன நடந்துன்னு இன்னொரு பதிவு போடுங்க :-)
ஆமாம், அண்ணன் கட்டியிருந்தா அந்த கயிறை வாங்கியிருப்பீரா? சுண்டு விரல் சைஸ் குப்பி இருநூறு திராம்ஸ் என்று அழைக்கும் தங்கச்சிகள், பாசத்துடம் அழைப்பதே உங்களைப் போன்ற அண்ணாச்சிகளைத்தானே, அதை எல்லாம் எழுத மாட்டீங்களே!
காய்வெட்டர மிஷினு, கத்தி கப்டான்னு அதை வாங்கி நாங்க என்ன கழுத்துலையா மாட்டிக்க போறோம். வர வர பதிவுல ஆணீயம் அதிகமாயிட்டே போகுது.

Anonymous said...

நல்லா இருக்குங்க கதிர்

கதிர் said...

//அப்ப இன்னும் ஒரு வாரத்துக்கு இந்த பக்கமே வரக்கூடாதுப்பா!!//

அப்படிலாம் பண்ணிறாதப்பா! உங்கள நம்பிதான் பொழப்பையே ஓட்டிகிட்டு இருக்கேன்!

கதிர் said...

//சாதாரன ஆள் வெங்காயம் வெட்டினா அவன் கண்ணுல தண்ணி வரும்..நான் வெங்காயம் வெட்டினா வெங்காயத்துக்கே தண்ணி வரும்!!//

நீங்க சாதாவா, ஸ்பெசலா அங்கிள்?

கதிர் said...

\\அது சாக்ரடீசு...அவரோட நம்மள கம்பேர் பண்ணி நானும் ஒரு பதிவு போட்டிருக்கேன் :)) //

லிங்க் குடுங்க சார்! தேடி தாவு தீர்ந்துடுச்சி!

//அடக்கொலகார பாவிகளா..கத்தி கபடாவையெல்லாம் ரசிச்சு வாங்குறாய்ங்களா!//

அழகுப்பொருட்கள் மாதிரிப்பா அதெல்லாம்! நீ எதுக்கு தப்பாவே நினைக்குற?

அந்த காலத்து கத்தி, உறையுடன் வாள், எல்லாம் மியூசியத்துல மட்டுமே நாம பார்க்க முடியும். அதே மாதிரி நம்ம வீட்டு சுவற்றிலயும் மாட்டி வைக்கணும்னு வசதி வாய்ப்பு உள்ளவங்க நினைப்பாங்களா இல்லையா!

கப்பி | Kappi said...

//லிங்க் குடுங்க சார்! தேடி தாவு தீர்ந்துடுச்சி!//

அப்புறம் நாங்க எப்படி ஹிட் ஏத்தறது? :))))

சாக்ரடீஸும் நானும்

கதிர் said...

//ஆ ஆஹா துபாய் திருவிழாவுக்கு கூட்டிப் போகணும்னு எங்க வீட்லெ அடம் பிடிச்சப்பவே நினெச்சேன் ஏதோ வில்லங்கம் இருக்கும்னு. ஏதோ என் அதிர்ஸ்டம் போகும் கெட்ட வாய்ப்பு தவறிவிட்டது.//

விக்காத துணி, பொருளெல்லாம் விக்குறதுக்கு ஒரு விழாவாம். நம்ம ஊரு துணிங்களே பரவாயில்லியோன்னு தோணுது!

கதிர் said...

மஞ்சூர் ராசா said...

இப்பத்தான் தெரியுது இதுக்குத்தானான்னு. தம்பி பெரிய ஆபத்திலிருந்து காப்பாத்திட்டெயே....

நீ நீடூழி வாழ்க. என் சார்பா இருட்டுக்கடை அல்வா வாங்கி அனுப்பறேன். //

கடேசில எனக்கே அல்வா குடுக்கணும்னு நினைக்கறீங்களே!

நன்றிங்க மஞ்சூர் ராசா!

கதிர் said...

//நோட் திஸ் பாயிண்ட் யுவரானர்//

நோட் பண்ணாதிங்க யுவரானர்!

//ஊர் பக்கம் இதெல்லாம் கட்டிட்டு வந்துடாத... //

துபாய் ரிட்டர்ன் எப்படி இருக்கணுமோ அப்படி இருக்கணும் இல்லாட்டி நீ துபாய்ல வேலை செய்யல, வேற எங்கயோ குப்ப கொட்டிட்டு பீலா விடறன்னு சொல்வாணுங்க!

//அது கார்த்திக்...
ரமேஷ் கண்ணா மேல தூக்கி போடற காசுல உனக்கு வேண்டியதெல்லாம் எடுத்துட்டு மிச்சத்தை மட்டும் எனக்கு கீழ அனுப்புனு சொல்லிவாரு ;) //

ஸ்மார்ட் பாய் :)))

மிஸ்டேக் ஆகிப்போச்சு மன்னிச்சிரு வெட்டி!

கதிர் said...

//தம்பி, "அக்காவே" கட்டிவிட்ட நூலுக்கு எவ்வளவு குடுத்தீக? ஊருக்கு போனா உங்க அம்மா கேட்டா பன்னிரண்டரையால பெருக்கி, சொல்லுங்க, அப்ப என்ன நடந்துன்னு இன்னொரு பதிவு போடுங்க :-)//

உஷாக்கா,
அதிகமில்லிங்க அஞ்சே அஞ்சுதான்!
இதவேற வீட்டுல சொல்லணுமா, அப்படியே சொல்லிட்டு பதிவு வேறயா!

//ஆமாம், அண்ணன் கட்டியிருந்தா அந்த கயிறை வாங்கியிருப்பீரா? சுண்டு விரல் சைஸ் குப்பி இருநூறு திராம்ஸ் என்று அழைக்கும் தங்கச்சிகள், பாசத்துடம் அழைப்பதே உங்களைப் போன்ற அண்ணாச்சிகளைத்தானே, அதை எல்லாம் எழுத மாட்டீங்களே!//

அந்த கொடுமையத்தான் எழுதறேன்! என்னை மாதிரி ஏழை பாழைங்க வாங்கற மாதிரி ஏதாவது வெச்சிருந்தா பரவாயில்லயே
அண்ணன் கட்டினா அந்த ஏரியா பக்கம் போவாங்களா? :))

// வர வர பதிவுல ஆணீயம் அதிகமாயிட்டே போகுது.//

ஒருக்காலும் இதை ஒத்துக்க முடியாது!

உதவி..
உதவி..
அரை ப்ளேடு சீக்கிரம் ஓடி வாங்க!

கோபிநாத் said...

வணக்கம் தம்பி
இந்த பதிவ கொஞ்சம் முன்னாடி போட்டுயிருக்க கூடாத.
ஆசை...யாரையும் விட்டுவைக்குது.
நீங்கலச்சும் நல்ல சுத்தி பார்த்திருக்கிங்க. என் நிலைமை வேற
போன இடமும் சரியில்லை,
வழியும் சரியில்லை,
கூட வந்தவனும் சரியில்லை.
புதிய வருடத்தை கொண்ட போன.. வேறும் அறிவிப்பு பலகையை மட்டும் பார்த்துட்டு வந்தேன்.

Anonymous said...

தம்பி, 15 வருஷமா இருக்கேன்...1தடை கோட போனதில்லை.ஏன்னா அந்த டிராபிக் தொல்லை தான்...என்சாய்ய்ய்ய்ய்ய்..

Anonymous said...

//நன்றி ராம்! ரொம்ப சிக்கனமா இருக்கீங்களே!//

சிக்கனமும் இல்லே முக்கோணமும் இல்லை...

நேத்திக்கு நம்ம பிளாக்கரை புச்சா மாத்தியாச்சு... அதினாலேதான் சின்னதா ஒரு கருத்து சொல்லுணுமேன்னு சிரிப்பானை போட்டேன்..... ;)

கதிர் said...

//கோபிநாத் said...
வணக்கம் தம்பி
இந்த பதிவ கொஞ்சம் முன்னாடி போட்டுயிருக்க கூடாத.
ஆசை...யாரையும் விட்டுவைக்குது.
நீங்கலச்சும் நல்ல சுத்தி பார்த்திருக்கிங்க. என் நிலைமை வேற
போன இடமும் சரியில்லை,
வழியும் சரியில்லை,
கூட வந்தவனும் சரியில்லை.
புதிய வருடத்தை கொண்ட போன.. வேறும் அறிவிப்பு பலகையை மட்டும் பார்த்துட்டு வந்தேன். //

வணக்கம் கோபி அண்ணன்!! (கோபி அன்னன் இல்லிங்கோ) :)))

போகாமல் இருந்ததே நல்லதுங்க! போயிட்டு வருத்தப்படறத விட போகாம கொஞ்ஞூண்டு பீல் பண்றது பரவால்லிங்க! இன்னும் அவகாசம் நிறைய இருக்கு பாக்கணும்னா என்னை மாதிரியே போய் வேடிக்கை பார்த்துட்டு வந்துடுங்க!

வருகைக்கு நன்றி! எண் கொடுங்க பேசலாம்!

கதிர் said...

//தம்பி, 15 வருஷமா இருக்கேன்...1தடை கோட போனதில்லை.ஏன்னா அந்த டிராபிக் தொல்லை தான்...என்சாய்ய்ய்ய்ய்ய்..//

வாங்க குமார்!

இந்த திருவிழா கடந்த 11 வருஷமாகத்தான் நடக்குதுன்னு நினைக்கிறேன்!

வாய்ப்பு கிடைத்தால் பாருங்க! விசித்திரமான அனுபவமா இருக்கும். அதே சமயம் காமெடியாவும் இருக்கும்.

நன்றி!

Anonymous said...

என்ன தம்பி... துபாய்ல இருக்கீங்க... 200 திரகம்லாம் உங்களுக்கு ஒரு காசா....

நானா இருந்தா... சரி தற்பெரும கூடாதுன்னு சொல்வாங்க.. அதுனால ஃப்ரீயா விடு....

//வெட்டிப்பயல் said
அது கார்த்திக்...
ரமேஷ் கண்ணா மேல தூக்கி போடற காசுல உனக்கு வேண்டியதெல்லாம் எடுத்துட்டு மிச்சத்தை மட்டும் எனக்கு கீழ அனுப்புனு சொல்லிவாரு ;)//

அப்டீயே மாத்தி சொல்றியே வெட்டி... எப்பவுமே ஹீரோவத்தான் அறிவாளியாக் காட்டுவாங்க... இதுதான் தமிழ் பட லாஜிக்...

[நாந்தான் தப்பா சொல்றேனோ?]

கைப்புள்ள said...

//கிட்டத்தட்ட அரை டன் வெங்காயம் வெட்டி அவன் கண்ணே விஜயகாந்து
கண்ணு மாதிரி ஆகிப்போச்சி.//

//நல்ல வாசனையா இருக்கவே எம்புட்டு புள்ளன்னு விசாரிச்சா 200 திராம்ஸ்
சொலிச்சி. தினமும் குளிப்பதே சாலச்சிறந்ததுன்னு எஸ்கேப் ஆயிட்டேன்.//

//பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிடலாம் இல்லாதவன் பாயாசம்
குடிக்கலாம் என்ற பழமொழிக்கேற்ப எல்லாத்தையும் வேடிக்கை
மட்டும் பார்த்துட்டு வந்துட்டேன்//

படிச்சிட்டு நல்லாச் சிரிச்சேன்பா. கப்பி சொன்ன அதே 'கலக்கல்'. ஆனா கப்பியைத் திட்டுன மாதிரி என்னைய திட்டிடாதே...ஏன்னா என் இதயம் கொஞ்சம் வீக். வர்ணனை நல்லாருந்துச்சு. ராட்டினத்துல சுத்தும் போது மேலேருந்து ஒரு படம் புடிச்சு போட்டுருக்கலாம்ல?
:)

கோபிநாத் said...

\\ வணக்கம் கோபி அண்ணன்!! (கோபி அன்னன் இல்லிங்கோ) :)))

ஆஹா இது வேறயா.... :))

\\போகாமல் இருந்ததே நல்லதுங்க! போயிட்டு வருத்தப்படறத விட போகாம கொஞ்ஞூண்டு பீல் பண்றது பரவால்லிங்க! இன்னும் அவகாசம் நிறைய இருக்கு பாக்கணும்னா என்னை மாதிரியே போய் வேடிக்கை பார்த்துட்டு வந்துடுங்க!

வருகைக்கு நன்றி! எண் கொடுங்க பேசலாம்!\\


அய்யோ..தம்பி..நான் போயிட்டு வேறும் அறிவிப்பு பலகையை மட்டும் தான் பார்த்தேன்....எல்லாம் டிராபிக் தொல்லை...அதுவும் 31ம் தேதி இரவு...மற்றவை உங்கள் மின்னஞ்சலில்...

கதிர் said...

//என்ன தம்பி... துபாய்ல இருக்கீங்க... 200 திரகம்லாம் உங்களுக்கு ஒரு காசா....//

விட்டா டாலரே காசான்னு கேப்பிங்க போலருக்கு!! மேன்மக்கள் மேன்மக்கள்தான்! ரைட்ட்டேய்

//நானா இருந்தா... சரி தற்பெரும கூடாதுன்னு சொல்வாங்க.. அதுனால ஃப்ரீயா விடு....//

ப்ரீயா விடலிங்க! உள்ள நுழைய கட்டணமா அஞ்சு திராம்ஸ் புடுங்கிட்டாங்க :((

[நாந்தான் தப்பா சொல்றேனோ?]

எதுவும் சொல்றதுக்கில்ல! படம் பார்த்துட்டு சொல்றேன்.

கதிர் said...

//படிச்சிட்டு நல்லாச் சிரிச்சேன்பா. கப்பி சொன்ன அதே 'கலக்கல்'. ஆனா கப்பியைத் திட்டுன மாதிரி என்னைய திட்டிடாதே...ஏன்னா என் இதயம் கொஞ்சம் வீக். வர்ணனை நல்லாருந்துச்சு. ராட்டினத்துல சுத்தும் போது மேலேருந்து ஒரு படம் புடிச்சு போட்டுருக்கலாம்ல?
:) //

நன்றி தல!

தல வழக்கமா உங்களுக்குதான் ஆப்பு வைப்பாங்க, இங்க கப்பிதங்கத்த யாருமே திட்டல, திட்டுனேன்னு அள்ளி விடறிங்களே! அப்படியே திட்டினாலும் உங்கள ஏதாச்சும் சொல்ல முடியுமா? சொன்னாத்தான் சும்மா விட்டுருவாங்களா?

3310ல போட்டா புடிக்கிற வசதி இல்லிங்க தல. அதுகாண்டியும் இருந்த்துச்சி ஒரு எக்ஸிபிஷனே போட்டுருப்பேன்.

மறுக்கா ஒரு டேங்கீஸ் தல!

லொடுக்கு said...

நடுங்க வைக்குற குளிர்ல இதுலாம் தேவையா தம்பி? கலர் கலரா பாக்க ஓடுனியாக்கும்?

2 ஆண்டுக்கு முன்பு போனப்ப போக்குவரத்து நெரிசல்ல மாட்டி நசுங்கி போய் சேர்ந்தா குளிரு அப்படிப் போட்டுத் தாக்கிருச்சு. நான் வேறெ வறட்டு கௌரவத்துல இந்த குளிருக்கெல்லாம் லெதர் ஜாக்கெட் போடுராய்ங்களேன்னு எகத்தாளம் பேசிட்டு போனேனா, அங்கே போனப்பத்தான் தெரிஞ்சது ஏன் இவய்ங்கல்லாம் இந்த கோலத்துல சுத்துராய்ங்கன்னு. இந்த முறை இன்னும் போகல. போனாலும் பர்சை மறந்து வீட்டுல வச்சுட்டு போறதாத்தான் உத்தேசம். என்ன சொல்றே தம்பி.

Hariharan # 03985177737685368452 said...

குளோபல் வில்லேஜ் அனுபவமே கலக்கல்! இங்கே எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும்.

இன்னொருவாட்டி இதை துபாய்ன்னு சொல்லாதீங்க அபுதாபிக்கும் துபாய்க்கும் இடையில் நோ மேன்ஸ் ஸோனில் ஆல் ஹ்யூமன்களுக்குமான இண்டர்நேஷனல் மதுரை தமுக்கம் மைதான சித்திரைப் பொருட்காட்சின்னு தமுக்கடிச்சு சொல்லலாம்.

டெல்லி அப்பளத்துக்கு பதிலா சிம்ரன் ஆப்பக்கடை ஆப்பம், அப்புறமா அங்கே நிக்கிற நடக்குறதுகளைப் பாப்போம்னு திரிய நல்ல இடம்.

ஜேசிபி, கேட்-ன்னு புல்டோசர் ரங்கராட்டினம்னு எல்லாத்தையும் விலை தந்து விளாயாடும் விளையாட்டாக பெரிய ஜிகினா ஊர்தாங்க :-)))

பராக்கு பார்க்கும் பார்வையாளனை மகிழ்விக்கிறார்கள் அமீரக ஆட்கள்!

கதிர் said...

//நடுங்க வைக்குற குளிர்ல இதுலாம் தேவையா தம்பி? கலர் கலரா பாக்க ஓடுனியாக்கும்?//

ஆமாங்கணா! :))))

//2 ஆண்டுக்கு முன்பு போனப்ப போக்குவரத்து நெரிசல்ல மாட்டி நசுங்கி போய் சேர்ந்தா குளிரு அப்படிப் போட்டுத் தாக்கிருச்சு. நான் வேறெ வறட்டு கௌரவத்துல இந்த குளிருக்கெல்லாம் லெதர் ஜாக்கெட் போடுராய்ங்களேன்னு எகத்தாளம் பேசிட்டு போனேனா, அங்கே போனப்பத்தான் தெரிஞ்சது ஏன் இவய்ங்கல்லாம் இந்த கோலத்துல சுத்துராய்ங்கன்னு. இந்த முறை இன்னும் போகல. போனாலும் பர்சை மறந்து வீட்டுல வச்சுட்டு போறதாத்தான் உத்தேசம். என்ன சொல்றே தம்பி.//

நானும் ஒரு வீறாப்புல அதையெல்லாம் மாட்டாம போயிட்டேன். ஆடிட்டோரியமா இருக்கும்னு நினைச்சு போனேன். வெட்டவெளில வெச்சிருக்கானுங்க! நானும் குளிராத மாதிரி எவ்ளோ நேரந்தான் நடிக்கறது!
போயிட்டு வாங்க. அப்புறம் முந்தைய அனுபவத்துக்கும் இப்ப பாக்கறதுக்கும் வித்தியாசத்த பதிவா போடுங்க!

இதெல்லாம் சொல்லியா தரணும்! பதிவு கயமை செய்வது எப்படின்னு!!

கதிர் said...

//குளோபல் வில்லேஜ் அனுபவமே கலக்கல்! இங்கே எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும்.

இன்னொருவாட்டி இதை துபாய்ன்னு சொல்லாதீங்க அபுதாபிக்கும் துபாய்க்கும் இடையில் நோ மேன்ஸ் ஸோனில் ஆல் ஹ்யூமன்களுக்குமான இண்டர்நேஷனல் மதுரை தமுக்கம் மைதான சித்திரைப் பொருட்காட்சின்னு தமுக்கடிச்சு சொல்லலாம்.//

வருக ஹரி!

பழுத்த அனுபவம் இருக்கு போல!!

அஞ்சப்பர், சிம்ரன் ஆப்பக்கடை எல்லாமெ இருந்துச்சி!

வித்தியாசமான அனுபவம் இங்கயே இருக்கறவங்களுக்கு! நாம் ஏற்கனவே இந்த மாதிரி சந்தைகள பாத்ததினால சலிப்பா இருக்கு :((

நன்றி ஹரி!

கார்த்திக் பிரபு said...

nalla uvamai ..varannanai
appdiye namm apakkam varradhu

Anonymous said...

தம்பி, கென்யா பெண்களுடன் அப்படி என்ன சிநேகிதம்..அம்மாக்கு போன் போடவா?;)