எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, February 28, 2007

அணுகுண்டா இருக்குமோ???

Photobucket - Video and Image Hosting

நான்கூட இதை ஸ்க்ரோல் பண்ணாம பாக்கும்போது அணுகுண்டாதான் இருக்கும்னு நினைச்சேன். நாம என்னிக்கு உள்ளத உள்ளபடி நினைச்சிருக்கோம் இதைமட்டும்
கரெக்டா கண்டுபுடிக்கறதுக்கு. சரி என்னதான் இருக்குன்னு எலிக்குட்டிய சறுக்கி விட்டு
பாத்தா "அட" போடவெச்சிடுச்சி இந்த படம். இப்பலாம் நாம எவ்வளவு சொகுசா
இருக்குறோம்னும் புரிஞ்சுது. மக்கள்ஸ் முடிஞ்சா நீங்களும் கண்டுபுடிங்க.

காணாம போயிட்டதா யாரும் சொல்லக்கூடாதுல்ல அதான் இந்த மாதிரி
மொக்கை பதிவெல்லாம் போட வேண்டியதா போச்சு.

Friday, February 16, 2007

நமீதா, கவுண்டமணி பங்குபெறும் டெவில்ஷோநானும் பலமுறை கேட்டுப்பாத்துட்டேன். வெட்டிப்பயல் டெவில்ஷோ என்ற பெயரில்
எழுதிய பதிவுகளில் ஆணாதிக்கமே தலைதூக்கி இருந்தது. நடிகைகள் பங்குபெறுவது
போல ஒரு பதிவு போடவேண்டும் என்று நான், கோபி, ஜி மற்றும் பலர் கோரிக்கை
வைத்தும் செவி சாய்க்கவில்லை. அதனால் நாமளே இந்த அநீதியை எதிர்த்து
போராடுவோம் என்று களத்தில் குதித்து இதோ முதல் நிகழ்ச்சியில் கவர்ச்சிக் கன்னி
நமீதா பங்கு பெறுகிறார்

இன்று நடைபெறும் ஷோவில் முதல்முறையாக நமீதா பங்கு பெறுவதால் கவுண்டர்
சிறப்பு உடையில் வருகிறார். லே லக்கு லே லக்கு லே என்ற புகழ்பெற்ற பாடலில் அவர் நக்மாவுடன் இணைந்து நடனம்(??) ஆடியது உங்களுக்கு
மறந்திருக்காது என்று நினைக்கிறேன் அந்த பாடலில் பேண்டு வாத்தியக்குழவினர்
அணிந்து வருவது போன்ற உடையில் முகம் முழுக்க பவுடர் அடித்துக்கொண்டு
ஸ்பெசல் விக்குடன் பைப் புகைத்தபடி வருகிறார்.

வழக்கத்திற்கு மாறாக அரங்கமே நிறைந்திருக்க காண்கிறார்.

நமீதான்ன உடனே பல்லுகூட வெளக்காம காலைலயே கெளம்பி வந்துட்டானுங்க
போலருக்கு. உட்கார இடமில்லாம ஒரு கண்ணாடித் தாத்தா தடியூன்றியபடி நின்றிருக்க
அவரை அருகில் அழைத்து.

வழுக்கைத்தலையில் ஒரு தட்டு தட்டுகிறார்.

டேய் எங்க வந்த?

"நமீதாக்காவ பாத்துட்டு போலமின்னு வந்தேன்."

"யாரு அவ உனக்கு அக்காவா? சங்கூதற வயசுல சண்டித்தனம் பண்ணிகிட்டு திரியற
நீ? இந்த தடி இல்லாட்டினா உன்னால எழுந்து நிக்கவே முடியாது உனக்கு நமீதா
கேக்குதா? அப்படியெ எட்டி குறூக்குல மிதிச்சிடுவேன் ஓடி போயிரு. அடுத்த தடவ
உன்ன பாத்தண்ணா பல்லு பகட எல்லாம் பேர்ந்துடும் அப்புறம் பாத்த இடமே
உனக்கு கண்ணம்மா பேட்டைதாண்டி.

கவுண்டர்ஜி என்னோட ரசிகர்கள திட்டாதிங்க என்று சிணுங்கியபடி அவருக்கு எதிரில்
சிக்கென சிறிய காஸ்ட்யூமில நமீதா அரை டவுசருடன் வந்து கவுண்டருக்கு எதிரில்
அமர்கிறார்.

"ஹய்யோ நாராயணா!! இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடா"

கவுண்: ஹாய் நமீ!

நமீதா: ஹாய் அங்கிள்!

கவுண்: "ஹேய் என்னாது அங்கிளா"? எந்த மொன்னநாயி அப்படி கூப்பிட சொன்னது
ஸ்டில் ஐ ஆம் யங்க். காலிங்னு கூப்பிடு அப்படிதான் என்ன நக்மா கூப்பிடுவா.

நமீதா: ஆங் ஜீ! நக்மா ஜீய தெரியுமா?

கவுண்: "என்ன நீ இப்படி கேட்டுபுட்ட நானும் அவளும் கோவா பீச்சுல உருண்டு
பொறண்டத உலகமே பாத்துச்சே".

நமீதா: மே பி அப்போ நான் சின்னக்கொழந்தையா இருந்திருப்பேன். அப்போ
உங்களுக்கு என்ன வயசு காலிங்?

கவுண்: (இப்ப மட்டும் என்ன அதே சின்ன வயசு ட்ரஸ்சதான் போட்டுகிட்டு
வந்திருக்கே) என்ன நீ என்னயே கொஸ்டின் கேக்குற?, நாந்தான் உன்னய கொஸ்டின்
கேப்பேன் புரிஞ்சுதா?

நமீதா: சரிங்க காலிங் கேளுங்க!

கவுண்: "எந்த கஞ்ச கபோதிக்கு பொறந்தவன் உனக்கு காஸ்ட்யூம் டிசைன் பண்றான்"
இத்துணூண்டு துணிய மாட்டிகிட்டு டங்கு புங்குனு ஆடறியே தமிழ்நாட்டு பசங்களுக்கு
பாசம் ஜாஸ்தி தெரியுமல்ல?

நமீதா: "எங்க டாடிதான் எனக்கு காஸ்ட்யூம் டிசைன் பண்ணுது". எங்க டாடி சொந்தமா
துணி பிசினஸ் பண்ணுது அப்படியே எனக்கும் பண்ணுது.

கவுண்: அட கொள்ளையில போனவனே உங்கொப்பனா உனக்கு டிசைன் பண்றான்
அவன் இத மட்டும்தான் பண்றானா இல்ல வேற எதுனா பிசினஸ் பண்றானா?
நீ போடற தம்மாத்துண்டு துணிக்கு உங்கொப்பன் கடை வேற வெச்சி நடத்துறானா?
நாலு டெய்லர்கடை பக்கமா போய் அங்க கெடக்குற பீஸ் துணிய எடுத்துட்டு
போட்டுகிட்டா அதுக்கு பேரு பிசினசா? என்னாங்கடி ரீல் உடறிங்க?

நமீதா: நான் போடற ட்ரஸ்ல லிமிட் கவிர்ச்சி இருக்கும், ஆபாசம் இருக்காது.
பாக்குற கண்ணுக்கு நல்லா பாக்கணும். நான் நல்ல புண்ணு ஆமாம்(உதடு குவித்து
கொஞ்சலாக சொல்கிறார்)

கவுண்: ஏது கவிர்ச்சியா? நீ பண்றது கவுச்சி தெரியும்ல. என்னா புண்ணு
செரங்குன்னு சொல்லிட்டு இருக்கே. அழகா பொண்ணுன்னு சொல்லு.

நமீதா: சரிங்க ஜி!

கவுண்: ஆமா அது என்ன தருவீயா தரமாட்டீயான்னு ஒரு பாட்டுக்கு ஸ்கூல்
பசங்க போட்டுருக்க டவுசர போட்டுகிட்டு சரத்குமார் கூட டங்கு புங்குனு ஆடியிருக்க?

நமீதா : அந்த சாங் படத்துக்கு ரொம்ப அவசியம்னு டைரக்டர் சார் சொல்லுச்சி.
அதுவுமில்லாம அந்த பாட்டு சூப்பர் ஹிட்டு.

கவுண்: ஆமா பெரிய மண்ணாங்கட்டி பாட்டு ஒன்றையணா துணிய போட்டு
கும்மாளம் போட்டுருக்க இதுல அந்த பாட்டு இருந்தா என்ன இல்லாட்டி என்ன
நீ நடிக்குற படங்கள் சூப்பரா ஓடிடுமா

நமீதா: நீங்கள் நல்லா தமாசு பண்ணுது. :))

கவுண்: ஏய் ஒன்னதான் அசிங்கமா திட்டிகிட்டு இருக்கேன் கெக்கே பிக்கேன்னு
பல்ல காமிச்சிகிட்டு இருக்க! ஆமா நீ சூட்டிங் வரும்போது கூடவே டாபர்மேன்
மாதிரி ஆறடி ஒசரத்துக்கு ஒரு ஆள கூட்டிகிட்டு வர்றியாமே? அது நெசமா?

நமீதா: ஆமாம் காலிங். அவரு என்னோட பாய் ப்ரெண்டுகள்ல ஒருத்தர், மும்பைல
தொழிலதிபரா இருக்கார்.

கவுண்: "நாட்டுல தொழிலதிபருங்க இம்சை தாங்க முடியலடா புண்ணாக்கு விக்கறவன்
குண்டூசி விக்கிறவனெல்லாம் தொழிலதிபராம்". ஆமா நான் தெரியாமதான் கேக்குறேன்
நாட்டுல தொழிலதிபருங்க, ஏற்கனவே கல்யாணம் ஆனவனுங்க இவனுங்கள தவிர வேற
ஆளே இல்லையா? நடிகைன்னா இவனுங்களதான் கல்யாணம் பண்ணிக்குவிங்களா?

நமீதா: கவுண்டர் ஜி நிங்கள் தப்பா புரிஞ்சிக்குது! எனக்கு இருக்குற பல பாய்
ப்ரெண்டுகள்ல அவரும் ஒருத்தர்.

கவுண்: அம்மா மாரியாத்தா இவள நீதான் காப்பாத்தணும். என்னவோ எங்கிட்ட
இருவது பட்டுபுடவை இருக்குதுன்னு சொல்றமாதிரி சொல்றாளே!. ஏய் ஒரே நேரத்துல
அப்பனுக்கும் மகனுக்கும் ஜோடியா நடிச்சியே அத பத்தி என்ன சொல்ற?

நமீதா: இப்ப நென்ச்சாலும் சூப்பரா இருக்கு.அவருக்கு உடம்பு பூரா முடி கரு
கருன்னு இருக்கு. ஆக்சுவலி சத்யராஜ் ஜிக்கு இருக்குற அளவு திறமை சிபிக்கு
இல்ல.

கவுண்: பின்ன முடி கரு கருன்னு இல்லாம முறுக்கு மாதிரி மொரு மொருன்னா
இருக்கும்? தோ பாரு எனக்கு கூட ஒடம்பு பூரா இருக்கு என சட்டையை கழட்ட
எழுந்திரிக்கிறார்.

நமீதா: கலவரமாகி அய்யோ கவுண்டர் ஜி வயசான காலத்துல உணர்ச்சி
வசப்படக்கூடாது அமைதியா உக்காருங்க ஜி.

கவுண்: அடியேய் வயச பத்தி பேசினின்னா கண்ண நோண்டி பிச்சையெடுக்க
விட்டுடுவேன். உனுக்கு ட்ரஸ் தைக்க அளவெடுக்கணும்னா டெய்லர்கிட்ட போ
அதவிட்டுபுட்டு வியாபாரி படத்துல சூர்யாகிட்ட ஏன் போற?

நமீதா: ஆக்சுவலா அன்னிக்கு என்ன நடந்ததுன்னா அந்த படத்துக்கு ட்ரஸ் தைக்கிற
டைலர் வரல. அதனால என்ன நான் அளவெடுக்குறன்னு சொல்லி அவரே
வாலண்டியரா வந்து அளவெடுத்தாரு. எவ்ளோ பெரிய நடிகரா இருந்தாலும்
கூச்சப்படாம வந்து அளவெடுத்தாரு. உண்மையிலே பெரிய மனுசன் அவரு.

கவுண்: "ஆமா பெரிய பொதுசேவை செஞ்சிட்டாரு அவரு". இந்த மாதிரி
மொள்ளமாரித்தனம் பண்றதுக்கு பேரு பெரிய மனுசத்தனமா ஏன் அந்த பெரிய
மனுசத்தனத்த நாங்க செய்ய மாட்டோமா?. நாங்கல்லாம் டேப்பே இல்லாம அளவு
எடுப்போம் தெரியுமில்ல? டேய் அந்த டேப்ப எடுத்துட்டு வாங்கடா?

நமீதா: காலிங்ஜி! "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பான்னு" அரசியல தமிழ்
மக்களுக்கு கத்துக்கொடுத்தது நீங்கதானாமே?

கவுண்: ஹேய் லாங் லேடி இந்த க்ராஸ் கொஸ்டினெல்லாம் வேற யார்கிட்டயாவது
வெச்சிக்க. இங்க நாந்தான் தருமி. புரிஞ்சிதா! இதுக்கு மேல ஏதாச்சும் கேள்வி கேட்டின்னா
பல்லு மொகரை எல்லாத்தையும் பேத்துடுவேன்.
அதெப்படி கபடி விளாடறதுக்கு மெட்ராசில ஸ்ரீகாந்த், வடிவேலு விட்டா வேற யாருமே
இல்லயா? அதுவும் பைனலா நீங்க ரெண்டு பேரும் ஒத்தைக்கு ஒத்தையா மோதுற மாதிரி
ஏன் எடுத்திங்க?

நமீதா: காலிங்ஜி! அன்னிக்கு மேட்ச் உண்மையாவே செம இன்ரஸ்டிங்கா இருந்துச்சி.
கபடி வெளாடுறதுல நான் எக்ஸ்பர்ட் ஜி. அன்னிக்கு படத்தோட சீனுக்கோசரம்தான்
தோத்துட்டேன் இல்லன்னா மொத்தக்கூட்டத்தயும் தோக்கடிச்சிருப்பேன்.

கவுண்: இல்லயா பின்ன உங்கூட கபடி விளையாடறதுன்னா சும்மாவா? இலவசமா
கட்டிப்புடி வைத்தியம் கிடைக்குமல்ல. நான் ரொம்ப நாளா கேக்கணும்னு நினைச்சுட்டு
இருந்த தமிழ்ல சத்யராஜ், சரத்குமார விட்டா வேற ஹீரோ இல்லியா? ஏன் அவங்க
கூட மட்டும் தொடர்ந்து நடிக்குறீங்க அதுக்கு என்ன காரணம்?

நமீதா: நான் எந்த படத்துல நடிக்கறதா இருந்தாலும் கதை கேட்டுதான் நடிக்குது.
சின்னவங்க பெரியவங்க யார் கூட வேணாலும் நான் சூட் ஆகுது அதான் என்னோட
நடிப்பு ரகசியம்!

கவுண்: நீ நடிக்கறதே பெரிய கொடுமை, இதுல நீ கதை கேட்டு வேற நடிக்குற?
நான் தெரியாமத்தான் கேக்குறேன் நீ எந்த கதையுள்ள படத்துல நடிச்ச? கொஞ்சம்
கூட மனசாட்சியே இல்லாம பீலா விடற! நீ ஏதோ ஒரு படத்துல ஓட்டப்பந்தய
வீராங்கனையா நடிச்சே அதுல நீ ஓடும்போது உனக்கு மூச்சு வாங்குச்சோ இல்லயோ
தமிழ்நாட்டுல இருக்கற எல்லாருக்கும் மூச்சு வாங்கிடுச்சி.

நமீதா: போத் படா தேங்க்ஸ் காலிங்ஜி. நம்ம நடிப்ப நல்லா சொன்ன ஒரே ஆள்
நீங்கதான். ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.

கவுண் : சனியம்புடிச்சவ திட்டுனாலும் சிரிக்கிறா, வாழ்த்தினாலும் சிரிக்கிறா. என்னத்த
செய்யிறது. உங்கிட்டலாம் கேள்வி கேக்க சொன்னானுங்களே அவனுங்கள சொல்லணும்.

பேட்டி நடந்துகொண்டிருக்கும்போது ஆரம்பத்தில் அடி வாங்கிய பெருசு எந்திரிச்சி
கவுண்டமணியண்ணே நான் ஒரு கேள்வி கேட்டுகிடட்டுங்களா என்று கெஞ்சுகிறார்.

"இந்த அண்ணே நொண்ணேன்னு கூப்பிடுற வேலல்லாம் வெச்சிக்காதடா சட்னிக்கு
பொறந்தவனே". வாயில அரை பல்லு கூட இல்ல கேக்க வந்துட்டான் கேள்வி.
மொதல்ல பல்லுசெட்ட மாட்டுடா பிராந்தி மண்டையா.

காலிங்ஜி விடுங்க ஒரே ஒரு கேள்விதான் கேட்டுட்டு போகட்டும் நீங்க கேளுங்க சார்!

ம்ஹீம் எல்லாம் என் நேரம், நான் அந்த பக்கம் திரும்பிக்கறேன் அப்புறமா கேள்டா
மீதிக்கு பொறந்தவனே!

பெருசு: நீங்க மந்திரகுமாரி, வஞ்சிக்கோட்டை வாலிபன், மாதிரி ஒரு படத்துல
நடிக்கணும் அதுவும் சீதை கேரக்டர் அம்சமா பொருந்தும், அந்த மாதிரி கேரக்டர்ல
நீங்க நடிக்கணும் நான் கண்குளிர பாக்கணும் இதான் என் கடேசி ஆசை.

"அதுவரைக்கும் நீ உசுரோட இருப்பியாடா மீன்பாடி வண்டிக்கு பொறந்தவனே" எட்டணா குடுத்து படம் பாக்க வசதியில்லன்னாலும் எகத்தாளமா பேசகத்துகிட்ட நீ. இங்க வா
தலைய காமி.. நாய் நக்குனாவே செத்துபோயிடுவே உனக்கு கடைசி ஆசை ஒரு
கேடா? இங்க ஒரு மர்டர் நடக்குறதுக்கு முன்னாடி நீயா செத்து போயிடு.

ஓட்றா... ஓட்றா ன்னு கொலைவெறியோடு கவுண்டர் தூரத்துகிறார்.

Thursday, February 15, 2007

போகாதே... போகாதே... - தீபாவளி

யுவன் இசையில் சோகமான சோலோ பாடலை பெரும்பாலும் அவரே பாடிவிடுவார்
மொட்டையின் குரல் அளவுக்கு சோகத்தை வரவழைக்க முடியாவிட்டாலும்
ஓரளவுக்கு அருகில் வருகிறார் மோசமில்லை. படத்தின் கதை மூன்றாம்பிறையின்
ஒன்றுவிட்ட சித்தப்பா கதைதான். கதாநாயகிக்கு நடந்த ஒரு விபத்தில் கடந்த
மூன்று வருடங்களாக நடந்த சம்பவங்கள் யாவையும் மறந்து விடுகிறார்.
மாறுதலுக்காக சென்னை வருபவர் (பில்லுவை)ஜெயம் ரவி காதலிக்கிறார். பின்னர்
ஒரு அதிர்ச்சியான சம்பவத்தில் கடந்த மூன்று வருடங்களாக நடந்தது எல்லாம்
ஞாபகத்திற்கு வர பில்லுவை மறந்துவிடுகிறார். (இதுக்கு பேரு வியாதியாம்)
சமீபத்தில் விகடன் கட்டுரையில் ஒரு பெண் இதுமாதிரி பாதிக்கப்பட்டதாக படித்த
ஞாபகம். மறுபடி அவரை கைபிடிக்கிறாரா அவருக்கு நினைவு திரும்புகிறதா
என்பது மீதி கதை. ரவிக்கு சோக காட்சிகள் சுத்தமாக வரவில்லை. ஆள் மட்டும்
பாக்குறதுக்கு HULK படத்துல வர்ற ஹீரோ மாதிரி உடம்பு அளவுக்கு மீறிய
ஆஜானுபாகு என்று சொல்ல முடியாது கை கால் எல்லாம் ரொம்ப ஓவரா
வளர்ந்துடுச்சி மூன்றாம் பிறை படத்தில் ஸ்ரீதேவிக்கு ஞாபகம் வர கமல் செய்யும்
நடிப்பு ஏனோ கண் முன் வந்து போனது. தமிழ்சினிமா ரசிகர்கள் யாரும் இன்னும்
மறந்திருக்க மாட்டார்கள் அந்த ரயில் காட்சியை.

சொன்ன விதத்தில் சுவாரசியமாக இருக்கும்படி சொல்லி இருக்கிறார்கள். படம்
முழுக்க காமெடி தூவி அழகாக இருக்கிறது. இந்த தமிழ்சினிமாவில ஹீரோவ என்ன
ஏதுன்னே தெரியாம ஊரே கொண்டாடும் அதே மாதிரி இந்த படத்துலயும் இருக்கு.
படத்துல பெரிய ப்ளஸ் பாயிண்ட் பாவனாவும் அவரின் நடிப்பும். ச்சே இந்த மாதிரி
ஒரு காதலி நமக்கு கிடக்க மாட்டாளான்னு ஏங்க வைக்கும் அழகு. என்னதான் அழகா
இருந்தாலும் கோலிவுட்டுல சொல்லிக்கற மாதிரி ஒரு தமிழச்சி கூட இல்லயேன்னு
பொறாமையா இருக்கு.

சில பாடல்கள் கேட்டவுடன் நச்சென்று மனதில் பதியும். சில பாடல்களை பலமுறை
கேட்டால்தான் மனதில் பதியும். முதலில் சொன்ன வகையை சேர்ந்து இந்த பாடல்.
வரிகள் சாதாரணமான வார்த்தைகளாக இருந்தாலும் பாடலின் இசை பலமுறை
கேட்க வைக்கிறது. பாடலின் நடு நடுவே வீணையோ, மேண்டலினோ தெரியவில்லை
(தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) இனிமையாக உள்ளது. இன்னும் கொஞ்ச நாள்
இளைஞர்களின் உதடுகளில் குடியிருக்க போகும் பாடலாக அமையும் போல இருக்கு.
பாடலை கண்ண மூடிகிட்டு மனசுக்குள்ள பாவனாவை கொண்டு வந்தீங்கன்னா
பாடலை முழுமையாக ரசிக்கலாம். அதுக்கு வசதியா ஒரு போட்டோ கீழ ஒரு
போட்டோ இருக்கு பாத்து ரசிக்கலாம்.

Photobucket - Video and Image Hosting

போகாதே... போகாதே...
நீயிருந்தால் நான் இருப்பேன்
போகாதே... போகாதே...
நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும்
கனவாய் என்னை மூடுதடி
யாரென்று நீயும் எனைப் பார்கும்போது
உயிரே உயி போகுதடி
கல்லறையில் கூட ஜன்னல் ஒணு வைத்து
உந்தன் முகம் பார்ப்பேனடி...

போகாதே... போகாதே...
நீயிருந்தால் நான் இருப்பேன்
போகாதே... போகாதே...
நீ பிரிந்தால் நான் இறப்பேன்

கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்
அது போலதானே உந்தன் காதல் எனக்கும்
நடைபாதை விளக்கா காதல்
விடிந்தவுடன் அணைப்பதற்கு
நெருப்பாலும் முடியாதம்மா
நினைவுகளை அழிப்பதற்கு
உனக்காக காத்திருப்பேன் ஓ.. ஓ
உயிரோடு பார்த்திருப்பேன் ஓ..ஓ

போகாதே... போகாதே...
நீயிருந்தால் நான் இருப்பேன்
போகாதே... போகாதே...
நீ பிரிந்தால் நான் இறப்பேன்

அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்
கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தேவானாய் ஏமாற்றம் தாங்கலையே
பெண்ணே நீ இல்லாமல்...
பூலோகம் இருட்டிடுதே...

போகாதே... போகாதே...
நீயிருந்தால் நான் இருப்பேன்
போகாதே... போகாதே...
நீ பிரிந்தால் நான் இறப்பேன்


பாடல் தரவிறக்கம் செய்ய ஏராளமான தளங்கள் உள்ளது.
www.123musiq.com
www.indiamoviezone.com
www.tamilmp3world.com

ராகாவில இன்னும் போடவில்லை.

பாட்டை மட்டும் எழுதலாம்னு நினைச்சி எழுதினேன் படத்தோட விமர்சனமும்
எழுதற மாதிரி ஆயிடுச்சி. இந்த கலப்பைய கைல புடிச்சாவே இப்படிதான் சுலபத்துல
கீழ வைக்க முடியல. போன சென்மத்துல வெவசாயியா பொறந்துருப்பனா தெரில.

காதலர் தின கவுஜை

பொல்லாத காதலர் தினமாம் எவன் கண்டுபுடிச்சான்னு தெரியல. சேப்பு கலர்
சட்டை போட்டா என்னண்ணே புட்டுகிச்சான்னு கேக்குறான். சரி பச்சை கலர்
சட்டை போடலாம்னு பாத்தா ஏழு கழுதை வ்யசாகுது இன்னும் எதுவும்
செட் ஆகலாயாடா முத்துன கத்திரிக்கான்னு கேக்குறானுங்க. டீ.வி ய
திறந்தா கவுஜையா வாசிக்கறானுங்க சரின்னு எப்.எம் போட்டோம்னா அப்படியே
காதல் கவிதையா உருகறானுங்க. என்னடா இது எங்கிட்டு போனாலும் ரோசாப்பூவ
கைல வெச்சிகினு முரளிகளா சுத்தறானுங்களேன்னு ஒரே பேஜாரா போச்சு.ஆனா
ஒரு நம்ம பசங்க மட்டும் ஏன் இப்படி சுத்தறாங்கன்னே தெரிலப்பா.

எங்க ஏரியா அஞ்சப்பர் தொறந்து நேத்தோட 5 வருசம் ஆகப்போகுதாம். காதலர்
தினத்தன்னிக்கு செட்டிநாட்டு உணவகத்த திறந்து புரட்சி பண்ணியிருக்காங்க.
சரி அங்கிட்டாச்சும் போகலாம்னு பாத்தா ஒரே கூட்டம். முண்டியடிச்சி ஒரு எடத்த
புடிச்சி உக்காந்தா சோறு கொண்டுவர நாப்பந்தச்சி நிமிசம் ஆச்சி. அந்த நேரத்துல
இந்த காதலிக்கறவங்களுக்காக நாமளும் ஒரு கவுஜை எழுதி வெறிய தீத்துக்கலாம்னு
ஒரு ஐடியா வந்துச்சி. அதனால அங்கிட்டே ஒரு டிஷ்யூ பேப்பர உருவி எழுதி
எடுத்துட்டு வந்துட்டேன். கவுஜை எழுதறதுக்கு அந்த பேப்பர்தான் சரியான தேர்வு
எழுதினதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது.


ஒழுங்காக உருட்டப்படாத போண்டா
தொண்டைக்குழிக்கும் இறங்குவதை
போல உன் நினைவுகள் என்னை
நித்தமும் இம்சிக்கிறது.

உன்னோடு இருந்த கணங்களில்
எண்ணைச்சட்டிக்குள் இட்ட
வடையை போல பூரிப்பாக
இருந்தேன்.

நீ என்னை பிரிந்த கணம் முதல்
எலிப்பொறிக்குள் சிக்கிய வடையை
எலி கூட தீண்டாமல் இருப்பது
போல உணர்கிறேன்.

குழந்தை கையில் சிக்கிய அப்பளம்
போல சுக்கு நூறாக இருக்கிறது என்
இதயம். நீயோ ஆயாசமாக
உட்கார்ந்து கொண்டு பாயாசம்
குடித்துக்கொண்டா இருக்கிறாய்.

இப்போதெல்லாம் கண்ணாடி முன்
நிற்கையில் பாகற்காயை சுவைத்த
குழந்தையின் முகம் போல என்
முகமும் கோணலாகிவிட்டது.

குளிர்காலத்துப் பூனை மூட்டப்படாத
அடுப்பில் சுருண்டிருப்பதை போல
உன் திறக்கப்படாத இதயக் கதவுகள்
திறக்குமா என்று காத்திருக்கிறேன்.

திறக்காத கதவுகளுக்காக காத்திருக்கும் கண்ணீர் காதலர்களுக்கு இந்த கவிதை
சமர்ப்பணம்.

எனக்குட்டும் சீக்கிரமா சோறு போட்டுருந்தாங்கன்னா இந்த கவுஜைய படிக்கவேண்டிய
அவலம் வந்திருக்காது. என்ன செய்யிறது எங்குத்தம் இல்ல. என்னை சுத்தி சுத்தி
அடிச்சதால வந்த வேதனை.

வடிவான கற்களை வீசினால் வீடுகட்ட உதவியாக இருக்கும்.

அனைவருக்கும் தாமதமான காதலர் தின வாழ்த்துக்கள்.

கவுஜையாக வாழ்வோம்.

Tuesday, February 06, 2007

தாயகத்தை முத்தமிடப் போகும் தமிழன்!!!

எங்கள் அருமை நண்பர் கப்பிநிலவர் வரும் 11ம் தேதி மாண்டிவிடியோ
மண்ணிலிருந்து பொட்டி கட்டுகிறார். அவரை வாழ்த்தி வழியனுப்பவே
இந்த பதிவு. அவரோடு பழகிய நாட்களை நினைத்து பார்த்தால் பரவசமாக
இருக்கிறது. ஆங்கிலபுத்தகம் படித்து விமர்சனம் எழுதுவதிலாகட்டும்,
பின்நவீனத்துவ கனவு காண்பதிலாகட்டும், பயணகட்டுரை எழுதுவதிலாகட்டும்
இவரின் தனிமுத்திரை பதிக்கும் பதிவுகள் ஏராளம். சினிமா உலகம் குறித்த
பதிவுகளில் இவரின் நண்பர்களின் அனுபவங்களை மிக சுவாரசியமாக
எழுதினார். இவரின் சிறுகதைகளை படிக்கும்போது ஆச்சரியமா இருக்கும்
என்னடா இந்தாளு ஒருபக்கம் நம்ம கூட கும்மி அடிச்சிட்டே இன்னொரு
பக்கம் அருமையான சிறுகதைகளை எழுதிட்டு இருக்காறேன்னு. இவரின்
கயல்விழி அருமையான ஒரு சிறுகதை அடுத்ததாக நரகாசுரனை சொல்லலாம்.
எல்லா சிறுகதைகளும் முத்துக்கள்தான்.

ஒருமுறை பதிவு போட மேட்டர் கிடைக்கவில்லையே என புலம்பும்போது
மிக அருமையான யோசனை சொன்னார். யாரும் பார்த்திராத ஏதாவது ஒரு
ஆங்கில படத்தை பார்த்து ஆஹா ஓஹோ என்று விமர்சனம் எழுதினால்
பதிவுக்கு பதிவும் ஆச்சு, பேருக்கு பேரும் ஆச்சு. மேலோட்டமாக பார்த்தால்
இது ஒரு சாதாரணமாக தெரியலாம் ஆனா இதுக்குள்ள எம்புட்டு மேட்டர்
இருக்குன்னு அனுபவிச்சி பாத்தாதான் புரியும்.

இப்படியெல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா பழகிட்டு இப்ப திடீர்னு இந்தியா
போறன்னு சொன்னதும் தாங்க முடியாத துயரம் வந்துடுச்சி. அதுக்காக
ப்ளாக்குவதை விட்டு விட மாட்டார் என்று நம்புவோமாக.

ஹேய் யாருப்பா அது?

என்னது?

காதலர் தினத்தை கொண்டாடத்தான் இந்தியா போறாருன்னு புரளிய கிளப்பறது??

அப்படிலாம் இல்ல.

நம்ம சங்கத்துல ஆயுள்சந்தா உறுப்பினர் அவரு அந்த மாதிரி தப்பெல்லாம்
பண்ண மாட்டாரு.

ஆகக்கூடி சொல்லவருவது என்னவென்றால்!

கடந்த எட்டரை மாதங்களாக மாண்டிவிடியோவில் அயராது பணிசெய்து
கொண்டிருக்கும் எங்கள் அஞ்சா நெஞ்சன் கப்பிபயல் இந்தவாரத்தில் தாயகம்
திரும்புகிறார். அவரது பயணம் இனிதே அமைய நண்பனாக என் மனமார்ந்த
நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

நண்பர்களே நீங்களும் வாருங்கள்!
ஒரு கைதட்டினால் ஓசை வராது!

Sunday, February 04, 2007

சொன்னது யாரு? - 2

நண்பர்களே உங்களுக்காக இந்த ஜாலியான விளையாட்டு. உங்கள் ஆர்வமான பதில்கள் மீண்டும் இதை பதிவிடுகிறேன். வழக்கம்போல
இந்த சொன்னது எல்லாமே இந்த வார இதழ்களில் இருந்து எடுத்ததுதான். கடினமா இருக்கற மாதிரி இருந்ததுன்னா பின்னூட்டத்துல கேளுங்க க்ளு கொடுக்கப்படும். ம்ம்ம் பூந்து விளாடுங்க!1."ஈழத்தமிழர்கள் விஷயத்தில் வைகோ காட்டிய தீவிரத்தை தமிழகத்தில் வேறு எந்தக் கட்சித் தலைவரும் காட்டியிருக்க முடியாது. ஆனால் அது ஒரு புனிதமான உணர்வு இல்லை"

L.கணேசன்

2."நான் இதற்கு முன் நிறைய விருதுகள் வாங்கியிருக்கிறேன். ஆனால் நான் அறிந்த வரையில் இப்போது வாங்கும் கலைஞர் விருது நான் வாங்கியதிலேயெ மிகச் சிறந்த விருது."

எழுத்தாளர் ஜெயகாந்தன்

3."முதலில் ஆந்திரா மெட்ராஸிலிருந்து பிரிக்கப்பட்டது. இப்போது தனி தெலுங்கானா கோரிக்கை. மாநிலத்தை பிரிப்பதென்பது மகா பாவம்"

புட்டபர்த்தி சாய்பாபா

4."கடவுளை நான் ஏற்றுக்கொள்கிறேனா என்பது பிரச்சினை அல்ல. கடவுள் என்னை ஏற்றுக்கொள்கின்ற அளவுக்கு நான் நடக்கிறேனா இல்லையா என்பதுதான் பிரச்சினை"

கலைஞர் கருணாநிதி

5."எனக்கு சச்சினைப்போல உலக அளவில் சாதிப்பதுதான் குறிக்கோள். அதற்காக கடுமையாக பயிற்சி செய்கிறேன்" (சொன்னது சென்னைப்பெண்)

திருஷ்.காமினி

6."மனிதனை விண்வெளிக்கு அனுப்புவது என்ற விஷயத்தை தவிர, மற்றவைகளில் நாம் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இருக்கிறோம்"

திரு.மாதவன் நாயர்

7."எல்லாருக்கும் எப்படியாவது ஜெயிக்கணும்னு வெறி இருக்கும், எனக்கு மட்டும் ஏன் ஜெயிச்சோம்னு இருக்கு" இன்னும் நான் தொலைக்காம இருக்கறது என் நம்பிக்கையை
மட்டும்தான்.

வெள்ளித்தாரகை சாந்தி

8."ஐம்பது வயதைக் கடந்த பின் நாமெல்லாம் வானத்தில் எறிந்த கல் திரும்பி வரும் பாதையில் இருக்கிறோம், விழும்போது நல்ல நெஞ்சங்களில் விழ வேண்டும்"

கவிப்பேரரசு வைரமுத்து

9. "உலகத்திலேயே முதன் முதலாக எழுதப்பட்ட மெகா க்ரைம் நாவல் மகாபாரதம்தான் அதில் இல்லாத சூழ்ச்சிகள் கிடையாது, கொலைகள் கிடையாது, சதிகள் கிடையாது, முதன் முதலாக ஒரு பெண் மானபங்கப்படுத்தப்பட்டதும் அதில்தான்"

க்ரைம் நாவல் ஸ்பெஷல் ராஜேஷ்குமார்

10."கமர்ஷியல் சினிமாவின் வெற்றி அந்தந்த காலகட்டத்துக்குலதான் இருக்கும்,ஆழமான கதைகளின் வெற்றி காலங்காலமா நிற்கும்". "என்னுடைய படங்கள் எப்பவும் பேசப் படணும்னு விருப்பறேன். என் பயணம் நான் தீர்மானிச்சது"

இயக்குனர் சேரன்

Thursday, February 01, 2007

சமீபத்தில் ரசித்த காமெடி!

இப்பல்லாம் வடிவேலு காமெடி கூட வயித்தெரிச்சல கிளப்புற மாதிரி இருக்கு.
விவேக் ஆட்டத்துலயே இல்ல அதுக்கு சமீபத்திய உதாரணம் ஆழ்வார்.
அப்பப்போ கருணாஸ், சந்தானம் போன்றவர்கள் வந்தாலும் தொடர்ந்ததுபோல
யாரும் நிலைக்க மாட்டேங்கறாங்க.

சமீபத்தில் தகப்பன்சாமி படத்தில் ஒரு காமெடி நல்லா ரசிச்சி சிரிக்கற மாதிரி
இருந்தது. கருணாஸ் டீ குடிக்கலாம்ணு கடைப்பக்கம் போவாரு.

காலைல டீ அடிக்கலாம்னு பாத்தா ஒரு கோவிந்தன் கூட கிடைக்க
மாட்டேங்கறானே சரி நம்ம காசுலயே இன்னிக்கு டீ குடிக்கணும்னு
எழுதி இருக்கு போல தலையெழுத்து என்ன பண்றது.

"டீக்கடையில எவனும் இல்ல சுருக்கா டீய குடிச்சிட்டு கெளம்பிடணும்"

"கோவிந்தா ஒரு சூடா ஒரு டீய போடுப்பா"

"ம்ம் சூடா நெருப்பதான் போடணும்" கடைக்காரார்

"ஹேய் நாங்கல்லாம் தீக்கோழிடா எதக்குடுத்தாலும் முழுங்குவோம்"
காசு குடுக்கறோம்டா காசு

இப்படி பேசிட்டு இருக்கும்போதே ஒரு கோவிந்தன் மரத்துக்கு பின்னாடி
தலையில துண்டு போட்ட ஒரு ஆளு ஒளிஞ்சிருந்து பாத்துட்டு கருணாஸ்கிட்ட
டீய மொக்க போடலாம்னு வருவாரு.

"அடடே வா கோவிந்தா டீ சாப்புடறியா"? ஏய் தம்பிக்கு ஒரு டீய போடுப்பா
நமக்கு யோகம்டா இன்னிக்கு இவன் தலையில மொளகா அரைச்சிட
வேண்டியதுதான்னு கருணாஸ் முணுமுணுக்கறாரு.

"ரெண்டு பேருக்கும் டீ வருது"

"ஏன் கோவிந்தா டீ ரொம்ப சூடா இருக்குல்ல" கருணாஸ்

"ஆமா கோவிந்தா"

"என்னப்பா இவ்ளோ சூடா போட்டுருக்க"

எவன் முதலில் டீய குடிச்சி முடிக்கறானோ அவந்தான் காசு குடுக்கணும்னு
ரெண்டு பேரும் டீய ஆத்திகிட்டே இருப்பாங்க.

சாயந்திரம் ஆயிடும்

"கோவிந்தா டீ சூடா இருக்கா? ஆமாப்பா!

""கெட்டபய சூடாவே போட்டு பழகிட்டான்"

ஏண்டா காலையில ஒரு டீய வாங்கிட்டு ராத்திரி வரைக்கும் ஆத்தி ஆத்தி
பாத்துட்டு இன்னும் சூடாவே இருக்குன்னு சொல்றிங்களே இது நியாயமாய்யா
இந்த எடுபட்ட பய மூஞ்ச பாத்துட்டு இந்த ஊர்க்காரன் எவனும் கடைபக்கம்
ஒதுங்கல!

"பாருங்கடா பால பாருங்கடா காய்ஞ்சி கருகிப்போச்சி" காலையிலயே
பட்டைய போட்டு ஆட்டைய போட வந்துட்டீங்களேடான்னுசோடா
பாட்டிலாலயே அடிச்சி விரட்டுவாரு கடைக்காரர்.

இனிமேல் நம்ம கொசுவர்த்தி!

இதுமாதிரி ஆளுங்கள ஊருக்கு ஒரு ஆளு பாக்கலாம் எங்க ஊருலயும் ஒரு
ஆளு இருக்காரு. அவர பாத்தாவே டீக்கடையில இருக்குற ஆளுங்க தெறிச்சி
ஓடுவாங்க. மனுசன் காசுகுடுத்து டீ குடிச்சதே இல்ல.

தூரத்துல அந்த ஆள் வர்றான்னு தெரிஞ்சாவே கூட்டத்துல கண்ணிவெடி போட்ட
மாதிரி ஆளுங்க கலைஞ்சி போயிடுவாங்க. கடைக்காரர் முகம் கலவரத்த பாத்த
மாதிரி இருக்கும்.

அண்ணே நான் டீக்கடை ஆரம்பிச்சி இருவது வருசம் ஆகுது உங்கிட்ட இருந்து
ஒத்தப்பைசா கூட என் கல்லாவுல போட்டதில்லண்ணே நான் கண்ண மூடறதுக்குள்ள
அதுமாதிரி நடக்குமான்னு சந்தேகமா இருக்குன்னு கடைக்காரரு விளையாட்டா
சொல்லுவாரு நம்மாளும் வழக்கம்போலவே அதையும் விளையாட்டா
எடுத்துக்குவாரு.

யாரு ஆரம்பிக்கறதுன்னும் போட்டி இருக்கும், யாரு முதல்ல முடிக்கறதுன்னும்
போட்டி இருக்கும். ஹாஸ்டல்ல பக்கத்து ரூம் பையன் மொதமுறையா மொபைல்
வாங்கினான். ராத்திரி முழுக்க பேசிட்டே இருப்பான். (அந்த நேரத்துல இரவு
11 மணிக்கு மேல இலவசம்) என்னடா பையன் பிகர் தேத்திட்டானான்னு
சந்தேகம் வரவே வாட்சிங் பண்ணி பாத்தா பையன் குருட்டாம்போக்குல எதுனா
நம்பர் அழுத்தி தூக்கத்துல இருக்கற ஆளுங்கள எழுப்பி வம்பிழுத்துட்டு
இருப்பான். இதுவும் ஏதாவது போபியாவோ, மேனியாவோ, குனியாவோ இருக்கும்
போலருக்கு.

ஒரு நாள் இவனுக்கு அல்வா குடுத்த பொண்ணு வீட்டுக்கு போன் பண்ணினான்
எப்ப போன் பண்ணாலும் அவங்க அப்பந்தாண்டா போன் எடுக்கறான். அவனுக்கு
வெக்கிறேன் ஆப்புன்னு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாம் பில்கேட்ஸ்
பத்தியெல்லாம் பேசி கடுப்பேத்துனான். அந்த ஆளு வெறுப்பாகி கண்டமேனிக்கு
பேச பொருமையா கேட்டுட்டு ஒரு வார்த்தை சொன்னான் பாருங்க.

"மொதல்ல போன் கீழ வைக்கறவன் பன்னிக்கு பொறந்தவன்" இன்னும் சங்கத்தமிழ்
வார்த்தைகள் பல மானே, தேனே போட்டு சொல்லிட்டான்.

சண்டை நடக்குது நடக்குது நடந்துகிட்டே இருக்கு...

ஒருத்தனும் போன கீழ வைக்க மாட்டேங்குறாங்க. இவன் வைப்பான்னு அவனும்
அவன் வைப்பான்னு இவனும் விடிய விடிய திட்டிங்கறாங்க!

இவனாவது பிகர கரெக்ட் பண்றதாவது ஒரு பாட்டிய கூட இவனால தேத்த
முடியாதுன்னு கிளம்பிட்டோம்.

இப்ப என்னத்துக்குடா இப்படி அளக்குற நீயின்னு கேக்குறிங்களா?

என்னத்த சொல்றது! எனக்கு இது அம்பதாவது பதிவு. :((

என்னத்துக்கு எழுத ஆரம்பிச்சேன்னும் தெரில, என்னத்துக்கு எழுதாறோம்னும்
தெரில அப்படியே ஒரு மாதிரியா போயிட்டு இருக்கு. ஒரு ஓரமா நம்ம ஜல்லி
கொட்டிட்டு உக்காந்து வேடிக்கை பாக்க வேண்டியதுதான். ஆனா ஒண்ணு
இது எழுதறதுனால பல அற்புதமான நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. குறிப்பா
சொல்லணும்னா வெட்டிபயல், கப்பி பய, ராயல் ராம், கோபிநாத், பெனாத்தல்
சுரேஷ்
, ஆசிப் அண்ணாச்சி, ராசுக்குட்டி, கைப்ஸ், தொல்.குமார், முத்துக்குமரன்,
லியோசுரேஷ், செந்தழல்,சந்தோஷ், பரத், பாஸ்டன் பாலா, சிறில் அலெக்ஸ்
இன்னும் சொல்லிகிட்டே போகலாம், அப்படி சொன்னா நீண்டுகிட்டே போகும்.

குறிப்பிட்டு சொன்னவங்கள விட குறிப்பிடாம விட்டவங்கள ரெம்ப பிடிக்கும். :))