எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, October 29, 2007

ஜொள்ளுக்குண்டோ அடைக்குந்தாழ்?

ஒரு பூவே பூவை சுமந்து கொண்டு நிற்கிறதே!!!

Photo Sharing and Video Hosting at Photobucket

ரெண்டு புன்னகைல எந்த புன்னகை அழகுன்னு ஒரே குழப்பமா இருக்கு :)

Photo Sharing and Video Hosting at Photobucket

ஏய்... எங்கிட்டயே உன் வேலைய காமிக்கறியா?

Photo Sharing and Video Hosting at Photobucket

பொய் சொல்லாம சொல்லுடா...

Photo Sharing and Video Hosting at Photobucket

அடிங்ங்...

Photo Sharing and Video Hosting at Photobucket

இப்ப சொல்லு...

Photo Sharing and Video Hosting at Photobucket

நீ பொய்தான சொல்ற?

Photo Sharing and Video Hosting at Photobucket

எங்க ஆயா மேல சத்தியமா சொல்றேன் நீங்க ரொம்ப அழகுங்க!

Photo Sharing and Video Hosting at Photobucket

நன்றி:விகடன்

Friday, October 26, 2007

தந்திரபூமி - இந்திரா பார்த்தசாரதி

இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துக்களை இதற்கு முன்பு படித்ததில்லை
அவருக்கென்று எந்த பிம்பங்களும் எனக்குள் பதிந்திருக்கவில்லை அதனால்
வாசிப்பின் போது ஏமாற்றமோ பிரமிப்போ எதுவும் ஏற்படவில்லை. கதையின்
முக்கியமான பாத்திரமான கஸ்தூரி பிழைப்பிற்காக டெல்லி வருகிறான்
ஆரம்பத்தில் அய்யராத்து அம்மாஞ்சி டெல்லி வரைவந்து ஏதோ வேலையில்
ஒட்டி பிறகு இருபது வருடங்களுக்கு முன்பு செட்டிலான வடகலையோ
தென்கலையோ ஏதோவொரு கலையை கட்டி காத்துவரும் அரசாங்க
ஊழியரின் மகளை ஏதேச்சையாக சந்தித்து காதல்வயப்பட்டு கல்யாணத்தில்
முடியும் போலிக்கிறது என்று முதல் பத்து பக்கங்களை படித்து முடித்தபிறகு
அனுமானித்தேன். இதை எதற்கு கதையாக எழுதவேண்டும் சின்னத்திரை
தொடர்களிலே இதைத்தானே காட்டுகிறார்கள் என்று சலிப்பு மேலிட
தொடரலாமா வேண்டாமா என்று யோசித்து பிறகு வேறு எதுவும் புத்தகங்கள்
இல்லாததால் இதையே தொடர்ந்தேன்.

ஆரம்பத்திலேயே சுவாரசியமில்லாமல் போனதற்கு சுஜாதாவின் முன்னுரையும்
ஒரு காரணம். என் குழந்தைத்தனமான முன் அனுமானங்கள் தவறு என்று படித்து
முடித்த பிறகு உணர்ந்தேன். சுவாரசியமானதாக இல்லாவிட்டாலும் வாசிப்பினூடே
நம்மையும் கதையில் இணைத்துக்கொள்கிற உத்தியை ஆசிரியர் நன்றாக
கையாண்டிருக்கிறார். தன் மேதாவித்தனங்கள் எல்லாம் ஒருபெண் முன் தவிடு
பொடியாக்கப்படுவது விரும்பாமல் சுற்றியலையும் மனம் கொண்டவனாக கஸ்தூரி
கதையில் அவன் பாத்திரத்தின் அதிநவீனமான முற்போக்கு சிந்தனைகள் கண்டு
ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை.

அரசாங்கத்தின் அத்தனை நெளிவுசுளிவுகளையும் கதைக்குள் எப்படி கொண்டு
வந்தாரேன்று வியப்பாக உள்ளது. கதையின் ஒவ்வொரு வரியிலும் எள்ளல்
இருப்பது ஒரு புன்னகையுடன் வாசிக்க வைக்கிறது. இத்தனை நகைச்சுவையான
எழுத்தை முன்பு வாசித்ததில்லை. அதுவும் எலியை எக்ஸ்போர்ட் செய்ய்யும் தொழில்
பற்றி விவரிக்கும்போது வாய்விட்டு சிரிக்கமுடிந்தது. அதிபுத்திசாலித்தனமான
உரையாடகளும் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளும் அங்கங்கே தூவியிருப்பது
இனிமை.

எல்லா இடத்திலும் எதார்த்தத்தை அப்படியே படம் பிடித்திருக்கிறார். கல்யாணம்
என்ற வியாபாரத்தில் நம்பிக்கை இல்லாத ஒருவன் தன் பிடியில் இருந்து மெல்ல
மெல்ல தன்னையறியாமல் விலகும் பெண்ணை கண்டு அச்சமுறும் கஸ்தூரி. முதலில்
ஆணாதிக்க சிந்தனை உள்ளவனாக இருப்பானோ என்றெண்ணியிருந்தேன். சடார்
சடாரென அவன் எடுக்கும் முடிவுகள் நமக்குள் பதை பதைப்பை ஏற்படுத்துபவையாகவும்
அதுவே பின் அப்பாத்திரத்தின் மேல் காதல் கொள்ளவும் வைக்கின்றன.

எந்தவிதமான இலக்கும் இல்லாமல் பயணிக்கும் வாழ்க்கை கஸ்தூரிக்கு எதிர்ப்படும்
எவரையும் தன் வலைக்குள் வீழ்த்தும் தொழில்நேர்த்தி வியாபாரத்தில் மட்டுமல்ல
பெண்கள் விஷயத்திலும். தன் சுயமரியாதைக்கு சிறிது கலங்கம் ஏற்பட்டாலும் அந்த
கணத்திலேயே வேலையை தூக்கியெறியும் அவனுக்கு ஒருசமயத்தில் போக்கிடம்
இல்லாமல் போகும்போது ஒருபெண்ணின் தயவால் முன்பு செய்த வேலையை விட்ட
அடுத்த நொடியிலேயே அடுத்த வேலை கிடைக்கிறது. அப்போது அவன் தனக்குள்
கேட்டுக்கொள்ளும் கேள்விகள் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் சுய அலசலாக
இருக்கலாம்.

கதையில் ஏராளமான கதாபாத்திரங்கள் வந்து போகின்றன அவைகளுக்குள் நடக்கும்
உரையாடல்கள் ஒரு திரைப்படத்தைப் போல நமக்குள் விரிவது அலுப்பில்லாமல்
வாசிக்க முடிகிறது. ஒவ்வொரு இடத்தில் கதாபாத்திரத்தின் முகபாவனை இப்படிதான்
இருந்திருக்குமோ என்று கூட எண்ணவைக்கும் அளவுக்கு உள்ளது. முக்கியமானது
இதன் நகைச்சுவை மிகவும் நுட்பமான இரண்டாவது வாசிப்பில்தான் புரிந்துகொள்ள
முடியும் என்பது போல அமைந்திருப்பது சிறப்பம்சம். எழுத்தாளருக்கு நிச்சயமாக
நகைச்சுவை உணர்வு இயல்பிலேயே இருக்கிறது.

கதையின் ஆரம்பம் அழகாகவும் பிறகு கஷ்டபட்டு முடிவில் சுபமாக முடிக்கும்
கதையாக இருக்கும் கதையின் பாத்திரங்கள் எல்லாம் மிகவும் நல்லவர்களாக
இருப்பார்கள் என்று எண்ணுவீர்களானால் எல்லாமே தவறாக இருக்கும் இதை
வாசித்தபிறகு. எவர் நல்லவர் எவர் கெட்டவர் என்றே தீர்மானமாக
எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. அவரவர் அவரவர் சந்தர்ப்பத்திற்கு
காத்திருக்கிறார்கள். மனிதன் எவ்வளவுதான் நவீனங்களுக்குள் புகுந்து நாகரீக
வேஷம் போட்டாலும் அவனின் ஆதிகுணம் என்பது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில்
வெளிப்பட்டே ஆகவேண்டும். அந்த வெளிப்பாடு வெற்றியிலா தோல்வியிலா
இயலாமையிலா எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதுதான் கதையின்
சாராம்சம். இத்தனை முற்போக்குவாதியாக காட்டப்பட்டிருக்கும் கஸ்தூரியின்
கதாபாத்திரம் மீனாவினால் தனக்கு ஏற்பட்ட அவ்வாறு கஸ்தூரியால் எண்ணப்படும்
தோல்வியை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவளை தன்வசமாக்கி
தன் தோல்வியை வெல்ல மீனாவின் கணவனை ராஜஸ்தானுக்கு அனுப்பும்போது
கஸ்தூரியின் மேல் வைத்திருந்த அத்தனை ஆச்சரியங்களும் காணாமல் போகின்றன.
அடுத்தவனின் மனைவியை அடைய துடிக்கும் அந்த நொடியில் அத்தனையும்
காணாமல் போகின்றன.

கஸ்தூரிக்கு அடுத்தபடியாக கதாநாயகி போன்ற பாத்திரமான மீனாவை எப்படி
புரிந்துகொள்வதென்றே தெரியவில்லை. கதையின் ஆரம்பத்தில் மேலிடத்து
அதிகாரியை வளைத்துபோடும் செகரட்டரி என்ற அளவில் அறிமுகமாகி பின்
நம்ப முடியாத அளவுக்கு முதிர்ச்சியை வெளிப்படுத்தும் அந்த பாத்திரத்தை
புரிந்துகொள்வது கடினம் அதனால்தான் கஸ்தூரி அவளிடம் தன் ஆணவத்தை
கைவிட்டு சரணடைகிறான். பெண் என்பவள் பெண்ணாலேயே புரிந்து கொள்ள
முடியாதவள் என்பது போல அமைந்த பாத்திரம். நல்லவளா, கெட்டவளா என்ற
இருவார்த்தைகளுக்கு அடக்க முடியவில்லை. அதையும் தாண்டி கஸ்தூரிக்கு
தான் எந்த விதத்திலும் சளைத்தவள் அல்ல என எண்ண வைக்கும் அளவுக்கு
அவளின் போக்கு இருக்கிறது. அதுவும் உண்மைதான்.

ஆரம்பமும் இல்லாத, முடிவும் இல்லாத கதை இது. வாழ்க்கையை அதன்போக்கில்
வாழவிரும்பும் ஒருவனின் வாழ்க்கையில் எதிர்படும் சவால்கள், தோல்விகள்,வெற்றிகள்
சந்தோஷங்கள் எல்லாம்தான் தந்திரபூமி. கதையின் முடிவாக எழுத்தாளர் என்ன
சொல்ல வருகிறார் என்பது வாழ்க்கை பெரியோர்கள் கட்டமைத்தபடி வாழ்ந்தால்தான்
இனிமையாக இருக்கும் என்பது போல எனக்கு பட்டது.

எல்லாம் வாசித்து முடித்தபிறகு சுஜாதாவின் முன்னரையை மறுபடியும் வாசித்தேன்.
முன்பே சொன்னது போல முன் அனுமானங்களுடன் ஒரு விஷயத்தை அலட்சியமாக
எண்ணினால் அது தவறாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. முதல் கோணல் முற்றிலும்
கோணல் என்பது தவறான பழமொழி என்பதை உணர்ந்தேன்.

வாசிக்க கொடுத்த அய்யனாருக்கு நன்றி.
அய்யனாருக்கு வாசிக்க கொடுத்தவருக்கும் நன்றி.

Wednesday, October 24, 2007

கிழிச்சதும்... கிழிச்சதும்...

போத்தீஸ்
சென்னை சில்க்ஸ் ஜிவல்லரி மார்ட்
ரீகன் ஹேர் வெர்டிலைசர்
just one bottle will do the magic
க்ரிஸ்டல் ஜட்டிகள்
விஜய் டீவி திறந்திடு சீசெம்
மந்திரத்தை சொல்லு பரிசுகளை அள்ளு
மிலானோ பைப் பிட்டிங்குகள், பாத்திங் லக்சரீஸ்
சாசெல் மல்டிமீடியா பாடமுறை
ராதா இண்டெர்நேஷனல் பைப் பிட்டிங்குகள்
கோட்டா ஜிவல்லர்ஸ்
பில்ராத் மருத்துவமனை
யெரா க்ளாசஸ்
பெண்களை கவர கடி ஜோக்ஸ் உதவாது
அடுத்த வார ஸ்பெசல் பெண்களை கவுக்க பல ஐடியாக்கள்
வாங்க மறந்து விடாதீர்கள்.
அஞ்சால் அலுப்பு மருந்து(இன்னுமாடா இருக்கு!!!)
வைகிங் ஜட்டி, வேட்டிகள், பாலியஸ்டர் சட்டைகள்
ட்யூரோப்ளக்ஸ் மெத்தைகள்.
ஜான்சன்ஸ் சட்டைகள்.
குமரன் ஸ்டோர்ஸ்
தீபாவளி ஸ்பெசலாக ஒரு புடவைக்கு பல முந்தானைகள் ஜிப் மேட்ச்.
க்ரீன் டீ உலக மக்களால் அதிகம் அருந்தப்படும் டீ.
(உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக மாதிரி போலருக்கு)
லோட்டஸ் நவீன லேப்பராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மையம்
சைக்கிள் ப்யூர் அகர்பத்திகள்.
ஹண்டே ஹாஸ்பிட்டல்
டீர்ம்லைன் கிச்சன்ஸ் & பெட்ரூம்ஸ்.
ஆல்ப்ரான் wheat flakes
ஆண்டுமுழுவதும் பயம் அறிய குருபெயர்ச்சி புத்தகத்தை வாங்குங்கள்
(புனித கங்கை நீர் சாஷே அன்பளிப்பு :)))))
ரிதம் வாட்சஸ்
ஜூனியர் ஹார்லிக்ஸ் 123
நாயுடு ஹால்தீபாவளி ஸ்பெசல்னு ரெண்டு புத்தகமா கொடுக்கறாங்களேன்னு ஆறு திராம்ஸ்
கொடுத்து இந்த எழவ வாங்கிட்டு வந்தேன். வாங்கி பாத்தா ரெண்டு புத்தகமும்
முத்தாரம் சைஸ்ல இருக்குது. இப்பயே தீபாவளி எப்படிடா வந்துச்சுன்னு இந்த
சின்ன புத்தில உரைக்கல. நல்லவேளை 8 திராம்ஸ் கொடுத்து ஆவிய
வாங்கி பாவியாகாம விட்டேனே.

எல்லாமே முழுப்பக்க அல்லது இரண்டு பக்க விளம்பரங்கள். இவ்ளோ
விளம்பரம் சும்மாவா போடறாங்க. காசுவாங்கிகிட்டுதான போடறாங்க
அதுக்கு 9 ரூபாய் விக்கிறத அஞ்சுரூவாயா வித்தாதான் என்ன?
எல்லா விளம்பரமும் வழுவழுன்னு கண்ணை பறிக்கற மாதிரி இருக்கு
இந்த மாதிரி போட்டா எக்கச்சக்கமா செலவாகும் அந்த செலவை
வாங்கற மடையனுங்க தலையில கட்டிடலாம். விளம்பரத்துக்கு விளம்பரமும்
ஆச்சு, வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு.

நூத்து அம்பது பக்க விளம்பரத்துல ச்சி சாரி புத்தகத்த்துல பாதிக்கு பாதி
விளம்பரம் அடைச்சிகிட்டு இருக்கு மீதில சினிமா சின்னத்திரைன்னு இருக்கு
இதுல தமிழ்நாட்டுலயே அதிகம் விற்பனையாகும் நம்பர் ஒன் இதழாம்!!!
சிறப்பம்சம் டூபீஸ்ல நாயுடுஹால், சிங்கிள் பீஸ்ல வைகிங், ஜான்சன் விளம்பரம்
வேற. கொடுமடா சாமி.

ஒரு விஷயம்கூட நல்லவிஷயமே போடலியா புத்தகம் முழுக்க சினிமாவும்
விளம்பரமும்தான் இருந்துச்சான்னு நீங்க என்னை கேக்கலாம். என்னோட பதில்
கண்டிப்பா இருந்துச்சி. வெற்றி பெற்றவர்களின் கதை, தன்னம்பிக்கை கட்டுரை
இதெல்லாம் இருந்ததுதான் மறுப்பதற்கில்லை ஆனால் தமிழ்நாடு மக்கள்
கொடுக்கற 9 ரூபாயும் இங்க இருக்கற மக்கள் கொடுக்கற 6 திராம்ஸ் பணமும்
அதற்கு ஈடானது அல்ல. விழலுக்கு இறைத்த நீர்மாதிரி ஆகுதேன்னு என்
கவலை இதுல தமிழ்லயே அதிகம் விற்பனையாகும் ஒரே இதழ்னு டேக் வேற.

எதைஎதையோ படிச்சி கிழிக்கிற பாமரன் அய்யாவும் இதே பத்திரிக்கைலதான்
என்னத்தையோ கிழிச்சிகிட்டு இருக்காரு. இவரு கண்ணுக்கு எப்படி இதெல்லாம்
தெரியாம போகுதுன்னு தெரில.

இதை ஏண்டா படிச்சிட்டு எங்க உயிரை வாங்கிட்டு இருக்கன்னு கேக்கறிங்களா?
அதையும் சொல்றேன் கேளுங்க.

நம்ம நண்பர் ஒருத்தருக்கு அம்மை போட்டுருச்சி அதே இலங்கை நண்பர்தான்.
ஆங்கிலம் இந்தியும் தெரியாததினால நான் கூட போனேன். சரியா எட்டரைக்கு
மருத்துவமனைக்குள்ள போயிட்டோம். ஆனா டாக்டர பாக்கறதுக்கு இரவு ஒன்றரை
மணி ஆச்சு. அவ்ளோ கூட்டமெல்லாம் இல்லிங்க மொத்தமா இருவது பேர் இருப்போம்.
அதுக்கே அம்புட்டு நேரம். ரெஸ்டாரெண்ட்ல இருந்து பார்சல் கொடுக்க வந்தவங்கிட்ட
கூட முகத்த பாக்காம ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்டுக்கு உண்டான பேப்பரை கொடுத்து
லெப்ட்ல போயி ரைட்டுல போ அங்கதான் டெஸ்ட் பண்ற இடம் இருக்குன்னு
சொல்ற அரபி ரிசப்ஷனிஸ்ட்.

உடம்புக்கு முடியாம இங்க வந்தா இவளுங்க பண்ற அட்டகாசம் தாங்க முடில.
பிஸ்கட் திங்கும்போது லிப்ஸ்டிக் அழிஞ்சி போச்சான்னு நிமிசத்துக்கொருமுறை
கண்ணாடிய பாத்துகிட்டு இருக்கறது. வாடிக்கையாளர்கள் எதாச்சும் தகவல்
கேட்டா மூடிகிட்டு உக்காருடா வெண்ணேங்காரா மாதிரி பதில் சொல்றது.

ஹெல்த் கார்டு, இன்சூரன்சு மயிறு மண்ணாங்கட்டின்னு எடுத்தது என்னத்துக்குன்னு
தெரில. ஒரே ஒரு டாக்டர்தான் இருக்காரு நாங்க என்ன பண்றதுன்னு சத்தம்
போட்டவுடனே சொல்றா அந்த ரிசப்ஷனிஸ்ட். எங்க ஊர் கிராமத்துலகூட
எந்தநேரம் போனாலும் டாக்டரபாக்கலாம். அங்கல்லாம் டாக்டர பாக்கணும்னா
அரைமணி நேரத்துல பாக்கலாம். பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடு
உலகத்து பெரிய பெரிய கட்டிடங்கள் உள்ள நாடுன்னு இங்க வந்தா உசுர மட்டும்
எடுத்துகிட்டு உடம்ப ஊருக்கு அனுப்பிடுவானுங்க போலருக்கு.

ஒரு டாக்டர பாக்கவே அஞ்சு மணிநேரம் ஆகுதுன்றத என்னால பொறுத்துக்கவே
முடில அதனால கீழ போனேன் அங்க சேட்டன் கடையில குமுதம் தீபாவளி
ஸ்பெசல்னு ஒன்னுக்கு ரெண்டா தர்றானுங்களேன்னு வங்கிட்டு வந்து படிக்க
ஆரம்பிச்சேன் எரியற கொள்ளில எண்ணெய ஊத்துற மாதிரி இருந்துச்சு அத
படிக்கும்போது.

பேசாம அங்க தேமேன்னு திரிஞ்சிகிட்டு இருந்த மலையாள சேச்சிகளையாச்சும்
ரிசப்ஷன்ல உக்காத்தி வெச்சிருந்தானுங்கன்னா ஒழுங்கான பதிலும் கொஞ்சம்
பொழுதுபோக்காவும் போயிருக்கும். :(

அதனாலதான் இந்த மர்டர்வெறி.

கிட்டத்தட்ட கோவம்னா என்னன்னு மறந்து போயிருந்த நேரத்துல கொலவெறிய
கொண்டு வந்து சேத்துட்டானுங்க.

Wednesday, October 17, 2007

அவைகளை அப்படியே விட்டு விடுங்கள்அதனால் யாருக்கொன்றும் தீங்கில்லை
அந்த "மற்றவர்"களால் ஒரு பயனுமில்லை
அப்பொழுதே விட்டிருக்கலாம்
நாளையும் விடப்போகலாம்
விடாமலும் போகலாம்
அவளோடு சேர்ந்திருந்திருக்கலாம்
வேறொருத்தியும் நயமாக கிடைக்கலாம்
நயமில்லாமலும் போகலாம்.
எதுவுமற்றும் யாராலும் இருக்க
முடியலாம்.
நம்பகத்தன்மை என்றுமே உங்களைச்
சார்ந்தே இருக்கலாம்.
இல்லாமல் போகும்போது
நீங்கள் இல்லாமலிருக்கலாம்
வாழ்க்கையில் ஏராளமான
"லாம்"கள் இருக்கின்றன.


வை

ளை


ப்

டி
யே

வி
ட்
டு

வி
டு
ங்

ள்.


நன்றி: முடியலத்துவம்.

Monday, October 15, 2007

சதுரங்க குதிரை


பிரம்மச்சரியம் என்பது பிரச்சினையில்லாத வாழ்க்கை என்று மேலோட்டமாக
பார்த்தால் தெரிவது ஆனால் இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாத ஒரு
பெண்ணுக்கு என்னென்ன சோதனைகளை இச்சமூகம் தருமோ அத்தனையும்
ஆணுக்கும் உண்டு. திருமணமே ஆணையும் பெண்ணையும் முழுமையாக்குகிறது
என்பது நம் சமூக கட்டமைப்பின் விதிகளை தளர்த்தும் இருபாலருக்கும் ஒரே
பொதுவாகும். ஏனோ பெண்ணிற்கு மட்டும் இழைக்கப்படுவது போல
மாயை உண்டாக்கியிருக்கிறார்கள்.

தந்தையில்லாத ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து படித்து சுயமாக சம்பாதித்து
திருமணம் என்ற பந்தத்தில் நுழைய சமயம் பார்க்கும்போது அரைக்கிழவனாக
மாறியிருக்கும் அதற்கு மேலும் திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டுமா
என்ற நினைப்பில் விட்டுவிட்டவர்களை எண்பதுகளில் அனேகம் பேரை காணலாம்.
இன்றையை வாழ்க்கைக்கும் சற்றேறக்குறைய இது பொருந்தும்.

இந்நாவலில் வரும் நாராயணனின் கதையும் இதுதான். கிராமத்து குடும்ப
பிண்ணனியில் வளர்ந்து பம்பாய்க்கு வேலைக்கு செல்லும் நாராயணனின் கதையும்
இதுதான். வாழ்வின் அனேக நேரங்களில் தனக்குள் மட்டும் உரையாடிக் கொண்ட
மனிதனின் கதை."எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல
வேள்வி அல்ல, பிரசவ வேதனை அல்ல
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ
அல்ல. பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல
பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல.
வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி
என் சுயத்தை தேடும் முயற்சி."


இக்கதையை படித்து முடித்ததும் மனித மனங்களை ஓரளவு புரிந்துகொள்ளும்
அனுபவத்தை நீங்கள் பெறுவீர்கள். ஏராளமான கதைகளும் திரைப்படங்களையும்
நாம் பார்த்திருக்கலாம் ஒரே கதாபாத்திரத்தை மட்டும் வைத்துக் கொண்டு
கதையை சுவாரசியமாக்கும் முயற்சியை அனைத்திலும் பிரதானமாக காணலாம்.
ஆனால் இந்நாவலில் ஒரே கதாபாத்திரமான நாராயணனை சுற்றி மட்டும்
கதை செல்கிறது சுழித்து செல்லும் நதியை போல அதன் போக்கில் செல்கிறது
எத்தனை தடைகளை, எத்தனை சோதனைகளை அனைத்தும் தாண்டி திருமணம்
என்ற பந்தத்தில் சேராமலே அதன் பயணம் முடிகிறது.

"கரும்பு வண்டியின் மேல் அமர்ந்து, கரும்பைக் கடித்து துப்பிக் கொண்டே போன
பதினான்கு வயது பெண், கால் முட்டில் வைத்து ஒடித்த மறுபாதிக் கரும்பை அவனை
நோக்கி வீசி எறிந்த கணம் வாழ்க்கையை சுவாரசியமுள்ளதாக்கி விட்டுப்போனது."

மூன்று செட் பனியன், ஜட்டி, கர்ச்சிப், சாக்ஸ், ஒரு லுங்கி, ஒரு துண்டு, விரிப்பு
போர்வை, தலையணை உறையுடன் பேண்டும் சர்ட்டும் ஆறேழு ஜோடிகள்
இருக்கும். மாற்றி மாற்றிப் போட்டுக்கொள்ள. எல்லாம் பாலியஸ்டர் விவகாரங்கள்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் எடுத்தது முதல் போன மாதம் எடுத்தது வரை.
பழையவை தையல் விடும். நிறம் மங்கி வெளிறும். கிழிவது கிடையாது. மிகவும்
சலித்து போனால் யாருக்காவது கொடுத்து விடுவது. சேர்த்து வைக்க இடம் பற்றாது.
உள்ளாடைகள் ஒன்றூ கிழிந்தால் மட்டுமே மாற்றூ வாங்குவது.

இதை தவிர ஆஸ்தி என்ன?

பேனா, பைஃபோகல் கண்ணாடி, பெல்ட், ஒரு ஜோடி ஷூ ஒரு ஜோடி தோல்செருப்பு.
ஒருஜோடி மழைக்கால ரப்பர் சாண்டக், மடக்கு குடை, அட்ரஸ்-டெலிபோன் எண்கள்
கொண்ட டயரி, கல்விச்சான்றிதழ்கள், வேலை செய்த கம்பெனிகளின் அனுபவ
சான்றிதழ்கள்,பாஸ்போர்ட், வங்கிக்கணக்கு புத்தகம்.

மூன்று மணி நேர முன்னறிவிப்பில் இடம்பெயர முடியும் எனும் தயார்நிலை வாழ்க்கை.
எல்லைப் போர்வீரனை போல கடிதங்களுக்கு பதில் எழுதிப்போட்டதும் கிழித்துப்
போட்டுவிடுவது. "நலமாக இருக்கிறேன், எல்லாரும் சுகமாக இருக்கிறீர்களா?
உங்கள் கடிதம் கிடைத்தது. என்பவற்றுக்கு மேல் நான்காவது வார்த்தைக்கு போராட
வேண்டியிருந்தது. சிலசமயம் தேதி போடாமல் அஞ்சலட்டைகளை அச்சிட்டு
வைத்துக்கொள்ளலாமா என்று கூடத் தோன்றும்

இதுபோன்ற எத்தனையோ அர்த்தமுள்ள நிகழ்வுகளை கதை நெடுக காணலாம்.
பிரம்மச்சரியத்தை விரும்பி ஏற்றுக் கொண்டவனல்ல, வாழ்க்கையின் பாதையில்
தானாக வந்து ஒட்டிக்கொண்டது ஒருவகையில் அவனுக்கு சந்தோஷத்தையே
தந்தது. வாழ்வின் அடுத்தநொடி தரும் ஆச்சரியங்கள் ஏராளம். நாராயணனின்
வாழ்க்கையில் இதுபோன்ற அடுத்தநொடி ஆச்சரியங்களே அதிகமிருந்தன.
அவையில்லாத அடுத்த நொடிகள் யுகங்களாக.

கல்யாணமாகாதவன் என்றால் ஆயிரம் இளக்காரம். சமூகம் பல பெயர்களை நமக்கு
கொடுக்கும். நாராயணனுக்கு அவனைப்போன்றே கடைசி வரை திருமணம் செய்து
கொள்ளாத ஒருவன் நண்பன் குட்டினோ இக்கதையில் வரும் முக்கியமான பாத்திரம்.
ஆனால் அறுபதாவது வயதில் துணையை தேடிக்கொள்ளும் அதுவும் ஆதரவற்ற
பிள்ளைகளால் கைவிடப்பட்டவள்.

"கட்டிலில் வந்து விழுந்தாலும் கவனம் பக்கத்து அறையின் சப்தங்களில் சென்று
நிலை கொண்டவவாறு இருந்தது. சற்று நேரத்தில் கதவு திறந்து அடைபடும் ஓசை.
மூன்றாவது ஆள் வெளியேறுகிறான் போலும். உரத்த சத்தம் நின்று விட்டது.
மறுபடியும் எழுந்து கதவிடுக்கின் வழியாக உற்றுப்பார்த்தான் நாராயணன்.
தனக்கு நாற்பத்தைந்து வயதாகிறது என்பது ஞாபகம் வந்தது. நெருக்கடியான
பஸ்களில் ஸ்தனம் இடிப்பதையும் விட இது ஒன்றும் கௌரவமான செயலில்லை.
இருபத்தைந்து வயதுக்கு உட்பட்ட வாலிபன் எடுத்துக்கொள்ளும் அற்பத்தனமான
சுதந்திரங்களை தானும் எடுத்துக்கொள்வது ஈனமானது என்று எண்ணினான்.
ஆனால் மனித மனம் எந்த வயதிலும் கேவலமானதாக இருக்க முடியும் போலும்.
போர்த்துக்கொண்டுள்ள கௌரவ சட்டைகள் ஈனங்களை மறைத்தும் நாற்றங்களை
மூடியும் வைத்து விடும்."

இதேபோன்றுதான் கதையின் மற்ற கதாபாத்திரங்களுடன் உரையாடுவதை
காட்டிலும் தனக்குள், தன் மனவிகாரங்கள், பண்புகள், கோபங்கள், துயரங்கள்
என அனைத்தையும் தனக்குள் மட்டும் பேசிக்கொள்ளும் ஒரு பாத்திரம்.
ஒருவகையில் இந்த புத்தகம் சுயபரிசோதனையாக கூட வாசிப்பவருக்கு
அமையலாம். தனியனின் பயணம்தான் சதுரங்க குதிரை ராணியை நெருங்க
முடியாத குதிரை.

ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு கணத்தில் தனித்து விடப்படலாம் அப்போது
அத்தனிமையின் பயணத்தில் யாருடைய வருகையும் இல்லாமல் கூட போகலாம்
தென்றலோ புயலோ எதுவுமே தீண்டாத சூன்யப்பெருவெளியின் இறுதி வரை
நிகழலாம். அப்பயணத்தின் இறுதியாக நீங்கள் கண்டவை எதுவாக இருக்கும்?
மற்றவருக்கு அவ்வாழ்க்கை எப்படியான புரிதலாக இருக்கும். நினைத்துப் பார்க்க
இயலாத கொடுமையாக இருக்குமென்றால் பிறந்ததின் அடையாளம் என்னவாக
இருக்கும்?

கதையை படித்து முடித்ததும் உங்களை அதுவே ஆக்கிரமித்திருக்கும். புயலிலே
ஒரு தோணி நாவலுக்கு அடுத்ததாக என்னை உளவியல் ரீதியாக பரிசோதிக்க
உதவிய புத்தகமாக இதைக் காணுகிறேன்.

நூல் பெயர்: சதுரங்க குதிரை
ஆசிரியர் பெயர்: நாஞ்சில் நாடன்.
விஜயா பதிப்பகம்
விலை ரூபாய் 70.00

*வண்ண எழுத்துக்களில் உள்ளவை புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

**புத்தகத்தை வாசிக்க கொடுத்த அய்யனாருக்கு நன்றி!
அய்யனாருக்கு கொடுத்த அண்ணாச்சிக்கு நன்றி! நன்றி!!

***நன்றி anyindian.com

புத்தகம் படிச்சின்னா அதபத்தி எழுது அப்பதான் உன்னோட அருமை பெருமைய
எல்லாரும் தெரிஞ்சிக்க முடியும்னு என்னை ஊக்குவித்த(??) அண்ணாச்சியை
இப்போது பெருமையோடு பார்க்கிறேன்.

சேகர், உமா, சாலமன், அனு

ஒருபோட்டிக்கு ஒருத்தர் அதிகபட்சமா எத்தனை முறை நடுவரா வரலாம்னு தெரியல
ஆனா விஜய் டீவில வர்ற கலக்க போவது யாரு நிகழ்ச்சிய நான் பார்க்க ஆரம்பிச்ச
நாள்ல இருந்து சேகர் தம்பியும் உமா பாப்பாவும்தான் நடுவரா இருக்காங்க. ஒருவருச
காண்ட்ராக்ட் போட்டுட்டாங்களோ என்னவோ???

ஆனா அந்த உமா பாப்பா சிரிக்கிற ஸ்டைல் இருக்கே அடட்டா காதுல கடப்பாரைய
விட்டு நோண்டற மாதிரி இருக்குன்னு சொன்னோம்னா ஏன் பெண்கள சிரிக்க கூட
விடமாட்டிங்களான்னு பெண்ணிய குரல்கள் எழும்ப வாய்ப்பிருப்பதால் அதைப்பற்றி
என் கருத்து "சிரிக்கறதே பெரிய விஷயம் அதுவும் பெருஞ்சிரிப்பு சிரிக்கறதுன்றது
வாங்கி வந்த வரம்" அதனால நோ கமெண்ட்ஸ்.

நல்ல நல்ல நகைச்சுவை துணுக்குகள் சொல்லி நம்மளை சிரிக்க வைக்கும் தென்கச்சி
சுவாமிநாதன் மாதிரி நம்ம சேகர் தம்பியும் மாறிட்டாருன்னு தோணுது. மனுசன்
கிச்சு கிச்சு மூட்டுனா கூட சிரிக்க மாட்டேங்கறாரு.

எனக்கு தெரிஞ்சி இந்த மாதிரி நிகழ்ச்சிகள்ல மிமிக்ரி பண்ணனும்னா நடிகர்கள்
குரலை விட்டா ஆளே இல்லியா. அதுவும் விஜயகாந்த ஏன் குறிவச்சு எல்லா
மிமிக்ரி ஆர்டிஸ்டும் வெளுக்கறாங்கன்னு புரியல. அவர் குரல வச்சுதான் எல்லாரும்
பயிற்சி எடுப்பாங்க போலருக்கு.

டீ.ஆர் வகையறாவுக்கும் தொலைக்காட்சி பேட்டிக்கும் அப்படியொரு ராசி. என்ன
ராசின்னு கேக்கறிங்களா இந்த ரெண்டு மண்டையனுங்ககிட்ட மைக்க கொடுத்தொம்னு
வைங்க கண்ணுல தண்ணி காட்டாம கீழ வைக்கவே மாட்டானுங்க. மொக்கையான
மேட்டருக்கெல்லாம் எப்படி அழுவறதுன்னு இவங்க ரெண்டு பேர கேட்டாவே
போதும்.

சர்ச்சைக்குரிய, இதுல எனக்கு பெரிய டவுட்டே இருக்கு விஜய் டீவியே ப்ளான்
பண்ணி அடிச்சிருப்பாங்களோன்னு ஏன்னா என்னமோ பொங்கள் நிகழ்ச்சி நிரல
பத்து நிமிசத்துக்கு ஒரு முறை போடற மாதிரி ஓவரா போட்டாங்க.

"ஆடவே இல்ல" இந்த ஒரு வார்த்தைய சொன்னதுக்காக மட்டும் பிரிதிவிராஜ்
வெளிநடப்பு செஞ்சாருன்னு சொல்றது தப்பு. கூட ஆடின உமா பாப்பாவை
எக்சலண்ட் பர்பாமென்ஸ், சூப்பர், பிரமாதம்னு சொல்லிபுட்டு இந்தாள பாத்து
நீ ஆடவேல்லன்னு சொன்னதத்தான் அவரால தாங்கிக்க முடில.

ஒண்ணுமில்லாத இந்த மொக்கை பிரச்சினைல விஜய் டீவிக்கு டீஆர்பி ரேட்டிங்
அதிகமா வந்ததுதான் லாபம்.

பிரிதிவிராஜும் லூசுத்தனமாதான் பேசி இருக்கறாரு, இல்லயா பின்ன?? இத்தன
வயசாகியும் உலகத்த புரிஞ்சிக்கலயே... இந்த உலகம் யாருக்கு சாதகமா பேசும்னு
கூடவா தெரியாது.

இதுவே சிம்பு உமா பாப்பாவ பாத்து நீ "ஆடவேல்ல, நீ ஆடறதுக்கு சும்மாவே
இருக்கலாம்"னு சொல்லியிருந்தார்னு வைங்க, ஓசை செல்லா சிம்புவோட குறிய
அறுத்து காக்காய்க்கு போட்டுருப்பாரு. நான் சீரியசாதாங்க சொல்றேன்.

அட இந்த கொடுமைய விடுவோம்.

இந்த தீபாவளி, பொங்கல் பட்டி மன்ற வியாபாரியான நம்ம சாலமன் பாப்பையா
அய்யாவ அசத்த போவது யாரு நிகழ்ச்சிக்கு கூப்பிட்டு இருந்தாங்க. அசத்தறதுக்கு
இல்லிங்க நடுவரா இருக்கறதுக்குதான். விஜய் டீவிலயாச்சும் பங்கேற்கற ஆளுகள
வாராவாரம் மாத்தி போடறாங்க ஆனா சன் டீவில "அரைச்ச மாவ அரைப்போமா"
டைப்புதான்.

அதுவும் அந்த பொம்பள வேஷம் போட்டு ஒருத்தன் வாராவாரம் தவறாம
கலந்துக்குவான் அவன் அங்க அசைவுகள பார்த்ததும் கோவம் வராத எனக்கே
கோவம் வருது. ங்கொய்யால அவன நேரல பாத்தன்னா ஒரு எத்து விடணும்
போலருக்கு.

படுபயங்கரமான ஆபத்துகளுக்கு இடையிலயும் இந்த டீவி புரொக்ராம்கள இறக்கி
பாத்ததுல கடுப்பு வந்ததுதான் மிச்சம். ஆனா ஒண்ணு காப்பி வித் அனு மட்டும்
என்னால குறை சொல்லவே முடில. சின்ன வயசுல நடந்த நிகழ்ச்சிகள சொல்லி
பேட்டிய கலகலப்பா கொண்டு போகறதிலகாட்டும், கேள்வி கேட்கும்போது
அவங்க முகபாவமாகட்டும் கைகோர்த்து நடக்கும் தோழியை போன்ற தோழமை.

பர்சனலி ஐ லைக் அனு... ஆனா கமலுக்கு அம்மாவா நடிச்சதுதான் என்னால
தாங்கிக்க முடில.

Tuesday, October 02, 2007

சுழற்சியின் உச்சங்கள்


வாரத்தின் ஆறுநாட்களும் ஏழாவது நாளை நோக்கியே
நகர்ந்து கொண்டிருக்கின்றன. அன்று செய்வதற்கென்று
நிறைய இருந்தாலும் மனம் யாருடன் சேர்ந்து பீர்
குடிக்கலாம் யாரைப்பற்றி புறம் பேசலாம், பார்த்த
படத்தை பீற்றிக்கொள்ளலாம் என்றே சிந்திருக்கிறது.
அந்த ஒருநாளை வாழ்ந்து தீர்ப்பதற்குள் என்னை
கடத்திக் கொண்டு போய் சுழற்சிக்கான முதல் நாளில்
உட்கார வைத்துவிடுகிறது இந்த சுழற்சியின் உச்சத்தில்
ஓர்நாள் என் மனமும் பிறழ வாய்ப்பிருப்பதாக
தோன்றுகிறது. ஒற்றை வாழ்க்கைக்கு மாற்றாக இருந்திருந்தால்
சுவாரசியமாக இருந்திருக்குமா என்று தெரியவில்லை.
எந்த கணத்தில் வாழ்க்கை சுவாரசியமாககூடும்
என்ற எதிர்பார்ப்பு சலிப்படைந்து வருகின்ற
நாட்கள் இவை வரும்காலத்தில் நம்பிக்கையற்றும்
போகலாம் யாருக்கு தெரியும்.!
குடிக்க யாரும் முன்வராத வாரயிறுதியின் அடுத்த
நாளாவது ஆயிரம்காலத்து பயிரை மேய மனம்
பாயலாம் இதுவும் யாருக்கு தெரியும்.!