மொட்டையின் குரல் அளவுக்கு சோகத்தை வரவழைக்க முடியாவிட்டாலும்
ஓரளவுக்கு அருகில் வருகிறார் மோசமில்லை. படத்தின் கதை மூன்றாம்பிறையின்
ஒன்றுவிட்ட சித்தப்பா கதைதான். கதாநாயகிக்கு நடந்த ஒரு விபத்தில் கடந்த
மூன்று வருடங்களாக நடந்த சம்பவங்கள் யாவையும் மறந்து விடுகிறார்.
மாறுதலுக்காக சென்னை வருபவர் (பில்லுவை)ஜெயம் ரவி காதலிக்கிறார். பின்னர்
ஒரு அதிர்ச்சியான சம்பவத்தில் கடந்த மூன்று வருடங்களாக நடந்தது எல்லாம்
ஞாபகத்திற்கு வர பில்லுவை மறந்துவிடுகிறார். (இதுக்கு பேரு வியாதியாம்)
சமீபத்தில் விகடன் கட்டுரையில் ஒரு பெண் இதுமாதிரி பாதிக்கப்பட்டதாக படித்த
ஞாபகம். மறுபடி அவரை கைபிடிக்கிறாரா அவருக்கு நினைவு திரும்புகிறதா
என்பது மீதி கதை. ரவிக்கு சோக காட்சிகள் சுத்தமாக வரவில்லை. ஆள் மட்டும்
பாக்குறதுக்கு HULK படத்துல வர்ற ஹீரோ மாதிரி உடம்பு அளவுக்கு மீறிய
ஆஜானுபாகு என்று சொல்ல முடியாது கை கால் எல்லாம் ரொம்ப ஓவரா
வளர்ந்துடுச்சி மூன்றாம் பிறை படத்தில் ஸ்ரீதேவிக்கு ஞாபகம் வர கமல் செய்யும்
நடிப்பு ஏனோ கண் முன் வந்து போனது. தமிழ்சினிமா ரசிகர்கள் யாரும் இன்னும்
மறந்திருக்க மாட்டார்கள் அந்த ரயில் காட்சியை.
சொன்ன விதத்தில் சுவாரசியமாக இருக்கும்படி சொல்லி இருக்கிறார்கள். படம்
முழுக்க காமெடி தூவி அழகாக இருக்கிறது. இந்த தமிழ்சினிமாவில ஹீரோவ என்ன
ஏதுன்னே தெரியாம ஊரே கொண்டாடும் அதே மாதிரி இந்த படத்துலயும் இருக்கு.
படத்துல பெரிய ப்ளஸ் பாயிண்ட் பாவனாவும் அவரின் நடிப்பும். ச்சே இந்த மாதிரி
ஒரு காதலி நமக்கு கிடக்க மாட்டாளான்னு ஏங்க வைக்கும் அழகு. என்னதான் அழகா
இருந்தாலும் கோலிவுட்டுல சொல்லிக்கற மாதிரி ஒரு தமிழச்சி கூட இல்லயேன்னு
பொறாமையா இருக்கு.
சில பாடல்கள் கேட்டவுடன் நச்சென்று மனதில் பதியும். சில பாடல்களை பலமுறை
கேட்டால்தான் மனதில் பதியும். முதலில் சொன்ன வகையை சேர்ந்து இந்த பாடல்.
வரிகள் சாதாரணமான வார்த்தைகளாக இருந்தாலும் பாடலின் இசை பலமுறை
கேட்க வைக்கிறது. பாடலின் நடு நடுவே வீணையோ, மேண்டலினோ தெரியவில்லை
(தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) இனிமையாக உள்ளது. இன்னும் கொஞ்ச நாள்
இளைஞர்களின் உதடுகளில் குடியிருக்க போகும் பாடலாக அமையும் போல இருக்கு.
பாடலை கண்ண மூடிகிட்டு மனசுக்குள்ள பாவனாவை கொண்டு வந்தீங்கன்னா
பாடலை முழுமையாக ரசிக்கலாம். அதுக்கு வசதியா ஒரு போட்டோ கீழ ஒரு
போட்டோ இருக்கு பாத்து ரசிக்கலாம்.
போகாதே... போகாதே...
நீயிருந்தால் நான் இருப்பேன்
போகாதே... போகாதே...
நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும்
கனவாய் என்னை மூடுதடி
யாரென்று நீயும் எனைப் பார்கும்போது
உயிரே உயி போகுதடி
கல்லறையில் கூட ஜன்னல் ஒணு வைத்து
உந்தன் முகம் பார்ப்பேனடி...
போகாதே... போகாதே...
நீயிருந்தால் நான் இருப்பேன்
போகாதே... போகாதே...
நீ பிரிந்தால் நான் இறப்பேன்
கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்
அது போலதானே உந்தன் காதல் எனக்கும்
நடைபாதை விளக்கா காதல்
விடிந்தவுடன் அணைப்பதற்கு
நெருப்பாலும் முடியாதம்மா
நினைவுகளை அழிப்பதற்கு
உனக்காக காத்திருப்பேன் ஓ.. ஓ
உயிரோடு பார்த்திருப்பேன் ஓ..ஓ
போகாதே... போகாதே...
நீயிருந்தால் நான் இருப்பேன்
போகாதே... போகாதே...
நீ பிரிந்தால் நான் இறப்பேன்
அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்
கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தேவானாய் ஏமாற்றம் தாங்கலையே
பெண்ணே நீ இல்லாமல்...
பூலோகம் இருட்டிடுதே...
போகாதே... போகாதே...
நீயிருந்தால் நான் இருப்பேன்
போகாதே... போகாதே...
நீ பிரிந்தால் நான் இறப்பேன்
பாடல் தரவிறக்கம் செய்ய ஏராளமான தளங்கள் உள்ளது.
www.123musiq.com
www.indiamoviezone.com
www.tamilmp3world.com
ராகாவில இன்னும் போடவில்லை.
பாட்டை மட்டும் எழுதலாம்னு நினைச்சி எழுதினேன் படத்தோட விமர்சனமும்
எழுதற மாதிரி ஆயிடுச்சி. இந்த கலப்பைய கைல புடிச்சாவே இப்படிதான் சுலபத்துல
கீழ வைக்க முடியல. போன சென்மத்துல வெவசாயியா பொறந்துருப்பனா தெரில.
