எல்லையற்ற அன்பு கொள்வோம்

Sunday, January 28, 2007

சொன்னது யார்? - புதிர்

விக்கி, கப்பியை தொடர்ந்து இதுவும் ஒரு புதிர் போட்டி சுவாரசியமாக
இல்லாவிட்டாலும் சுமாராக இருக்கும் என்றே நம்புகிறேன். கீழே
கொடுக்கப்பட்டவைகள் பிரபலங்கள் சொன்னவை யார் அந்த பிரபலங்கள்
என்று கண்டுபிடிங்க! (சன் நியூஸ்ல வருமே அதுமாதிரி)

1."சண்டைக்குப் பின் நண்பராவது வாழ்க்கையில் சகஜம். அது முடிந்து போன விஷயம் இப்போது நாங்கள் நண்பர்கள்" (இப்போதுதான் மீண்டிருக்கிறார்)

கங்குலி, சாப்பல்

2. "அவளுக்கு முகத்தில் முடி வளர்ந்திருக்கிறது ஒரு ஆணைப்போல" அவள் வெள்ளைக்காரியாக விரும்புகிறாள்" (சர்ச்சை)

ஜேட் கூடி

3. இவர் விடுத்த கோரிக்கையின் பேரில் நூலகத்திற்கு வாங்கும் நூல்களின் எண்ணிக்கையய் 600லிருந்து ஆயிரமாக மாற்றினார் கலைஞர். (சட்டமன்ற உறுப்பினர்)

ரவிக்குமார்

4. இசை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. அது கடல் போன்றது. அதில் யாரும் மேதைகளாகி விட முடியாது (க்ளுவெ இல்லாம கண்டுபிடிக்கலாம்)

இசைஞானி இளையராஜா

5. "எனது ஒவ்வொரு வேற்றிகரமான ஓவியத்தின் பின்னும் ஒரு பெண், ஒரு அழகான பெண் இருக்கிறாள்" (முழுப்பெயரும் வேண்டும்)

மக்பூல் ஃபிதா உசேன்

6. "கிரிமினல்கள் சுதந்திரமாக உலவுகிறார்கள். அவர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நிலையில் இந்த அரசு இல்லை". (இவர் ஒரு பெண் அ.வாதி)

ராப்ரி தேவி

7. "கிரிக்கெட் மட்டுமே விளையாட்டு அல்ல. மற்ற விளையாட்டுகளிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்". (வைகைப்புயலின் ஊரில் வேகப்புயல் சொன்னது)

கபில்தேவ்

8. உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா?
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா?
(பாடலை எழுதியவர் ஒரு நடிகை)

நடிகை ரோகிணி

9. "வைகோ விழுந்துவிடக் கூடாது" (இவரும் ஒரு அ.வாதி)

நடிகர் விஜயகாந்த்

10. "தனது மகன்கள், பேரன், பேத்திகளின் நலனுக்காக பாபாவை வரவழைத்துப்பார்த்தது கருணாநிதிக்குக் காலம் ஏற்படுத்திய கட்டாயம்"
(இவர் ஒரு சீஸன் அ.வாதி)

இராமகோபாலன்


இது எல்லாமெ மிக சுலபமான கேள்விகளே.வார பத்திரிக்கைகள் படிக்கும்
பழக்கமிருந்தால் மிக மிக சுலபம்தான்.

ம்ம்ம் ஆரம்பிங்க....

63 comments:

கோவி.கண்ணன் said...

//."சண்டைக்குப் பின் நண்பராவது வாழ்க்கையில் சகஜம். அது முடிந்து போன விஷயம் இப்போது நாங்கள் நண்பர்கள்" (இப்போதுதான் மீண்டிருக்கிறார்)//

சிம்புவை வைத்து வம்பு

//
10. "தனது மகன்கள், பேரன், பேத்திகளின் நலனுக்காக பாபாவை வரவழைத்துப்பார்த்தது கருணாநிதிக்குக் காலம் ஏற்படுத்திய கட்டாயம்"
//

வெங்காய நாயுடு ?

கதிர் said...

வாங்க கோவி!

ரெண்டுமே தவறுங்க கோவி.கண்ணன்.

இன்னும் முயற்சி பண்ணுங்க!

ரவி said...

6, 9 - முறையே ஜெ மற்றும் வி.காந்து..

மற்றது எல்லாம் தலையை சுத்துது...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

9. விஜயகாந்த்.
3.விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார்.எம்.எல்.ஏ

கதிர் said...

வாங்க செந்தழல் ரவி!

9. சரி
6.தவறு (வி.காந்த் பெண் அரசியல்வாதி இல்லையே :)))
க்ளு: வடமாநிலத்தவர்

Anonymous said...

தம்பி,

My try

1. வம்பு புடிச்ச வல்லவர் ??
2. Fade ஆன ஜெ ??
4. சின்னத்தாய் தந்த ராசா???
7. ஹரியானா சிங்கம்???
9. கா விட்ட கணேசர்??
10.சு.சாமி (guess)

கதிர் said...

வாங்க லட்சுமி!

முதல் வருகைக்கு நன்றி!

இரண்டுமே சரியான விடைகள்.

மீதியும் முயற்சி பண்ணுங்க!

முத்துகுமரன் said...

3. எழுத்தாளர் ரவிக்குமார்
6. மாயாவதி
8. நடிகை ரோகிணி
9. விஜகாந்த்

கதிர் said...

வாங்க விக்கி!

எதிர்பார்த்தேன் உங்களை!

1. தவறு
2. சரி
3. சரி
7.தவறு
9.தவறு
10.தவறு

முயற்சி பண்ணுங்க விக்கி!

அபி அப்பா said...

1.சிம்பு 2. ஜெக்கூடி 3. ரவிகுமார் 4. ஜேசுதாஸ் 5. ஹுசைன் 6. மம்தா 7. வைக்கோ 8. ரோஹினி 9. விஜய்காந்த் 10. ராமகோபாலன்

கதிர் said...

நண்பர் முத்துக்குமரனே வருக வருக!

ஆறாவது பதில் மட்டும் தவறு. மீதி எல்லாம் சரியான விடைகள்!

மீண்டும் வருக!

கதிர் said...

வருக குமார்.தொல்காப்பியன்!

1.தவறு (க்ளு இவரை சிங்கம் என்பார்கள்)
2.சரி
3.சரி
4.தவறு.
5.பாதி சரி (முழுப்பெயர் சொல்லுங்க)
6.தவறு
7.தவறு
8,9,10 எல்லாமே சரியானவை

5 .1/2 சரியான விடைகள் :))

அபி அப்பா said...

1.கார்திக்
5.மக்பூல் பிடா ஹுசைன்
7.கார்த்திகேயன்

கதிர் said...

மீண்டும் வருக வருக குமார்.தொல்காப்பியன்!

5. மட்டும் முழுமையான விடை வந்துவிட்டது.

1,7 இரண்டுமே தவறு.

மொத்தம் ஆறு சரியான விடை சொல்லிட்டிங்க!

மிச்சம் நாலுதான் இருக்கு.

அபி அப்பா said...

4.சிம்பு
6.சோனியா

கதிர் said...

4, 6 இரண்டுமே தவறுங்க குமார்!

இராம்/Raam said...

7) கபில்தேவ்
8) ரோகிணி

இராம்/Raam said...

4) இசைஞானி இளையராஜா

கதிர் said...

வாங்க ராம் அண்ணா!

சொன்ன ரெண்டுமே சரி

மீதியும் முயற்சி பண்ணுங்க!

கதிர் said...

ராம்!

4. சரி :-)

அபி அப்பா said...

7.ஆன்ந்த்

இராம்/Raam said...

1) சவுரவ் கங்கூலி
2) ஜெட்கூடி (இவங்க இந்தியா வர்றங்களாப்பா)
3) ???

கதிர் said...

7. தவறுங்க தொல்.குமார்.

அவர் ஒரு வேகப்புயல், முன்னால் க்ரிக்கெட்டர்

கதிர் said...

ராம்!

1,2 சரியான விடைகள்.

3. ??? ஆங் கண்டு புடிங்க

அபி அப்பா said...

6. ரேனுகா சவுத்ரி
7. கபில் தேவ்

கதிர் said...

6. மட்டும் யாருமே சொல்லவில்லை!
க்ளு: அவரின் கணவர் ஒரு மத்திய அமைச்சர்

அபி அப்பா said...

6.ரப்ரி தேவி

அபி அப்பா said...

1. தனுஷ்
4. இளையராஜா

கதிர் said...

குமார்.தொல்!

முதலில் சொன்ன ஆறாவது கேள்விக்கான பதில் தவறு.

மீண்டும் சொன்ன 6,7 சரி

கதிர் said...

தொல்.குமார்

நீங்க சொன்ன 1.தவறு
4. சரி

முதல் கேள்விக்கும் சரியான பதில் சொல்லிட்டிங்கன்னா எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டிங்கன்னு அர்த்தம்.

Anonymous said...

2 மார்க் தானா ??

ஹூம்ம்ம் இன்னும் ஒரு try

1. திருவிளையாடியவரா??
5. மாதுரி தீட்சித்தின் ரசிகர் ??
6. அரே பாப்ரி ??
8. மகளிர் மட்டும் மூவருள் ஒருவர்??
10. முகமது பின் ..??

எல்லாமே guess work தான். நல்ல ஜாலியான போட்டிக்கு Thanks பா :)

Unknown said...

8.Rohini

Anonymous said...

முடியல, வுட்டுடுங்க தம்பி, நெசமாவே இன்னிக்கு 10 பை ஆணி பாக்கி இருக்கு. போதும். நா ஆட்டைக்கு வல்ல. - அபி அப்பா

கதிர் said...

விக்கி,

நீங்க பதில் சொல்ற விதம் ரசிக்கிறமாதிரி இருக்கு! :))

1, 10 ம் தவறு மீதி எல்லாம் சரி!

மார்க்கு முக்கியமா என்ன?

சும்மா இது ஒரு விளையாட்டுதாங்க..

கதிர் said...

வாங்க தேவ்!

ஒண்ணு சொன்னாலும் சரியா சொன்னிங்க!

மீண்டும் முயற்சி செய்யலாமே!

கதிர் said...

மொத்தம் 9 கேள்விகளுக்கு சரியான விடை தந்திருக்கிறார். அபி அப்பா (குமார் தொல்காப்பியன்)

இராம்/Raam said...

கதிர்,

நான் சரியா சொன்ன பதில் எத்தனைப்பா ??

இராம்/Raam said...

சரியா சொன்ன பதில்கெல்லாம் ஒன்னோட பேரை சொல்லி ஆயாக்கடையிலே இட்லி சாப்பிட்டுக்கலாமா??? :)

கார்த்திக் பிரபு said...

answers post potavudaney enaku sollunga thambi ean enil andha patchai kili muthu srama apdthil varum padalai eludhiya andh anadikai yar enru ariya aavalaod airukirane

கதிர் said...

அஞ்சு கேள்விக்குதான் பதில் சொன்னிங்க ராம், அஞ்சுமே சரியானதுதான்.

//சரியா சொன்ன பதில்கெல்லாம் ஒன்னோட பேரை சொல்லி ஆயாக்கடையிலே இட்லி சாப்பிட்டுக்கலாமா??? :)//

பெங்கலூரில் ஆயாக்கடை இல்லையே என்ன செய்வது?

ஆயாக்கடையில இட்லிய தவிர எதுவுமே இல்லலியா, இல்ல ஆயான்னாவே இட்லிக்கடைதான் வைப்பாங்களா?

ஆயாக்களுக்கு இழைக்கப்பட்ட கொடும இது!

இராம்/Raam said...

//பெங்கலூரில் ஆயாக்கடை இல்லையே என்ன செய்வது?//

இந்த ஊரிலே இடலிகடையே கிடையாது, அப்பிடியே இருந்தாலும் அதிலே வெல்லசாம்பாரை ஊத்தி குடுத்து தின்னுன்னு சொல்லுவாய்ங்கே :(

//ஆயாக்கடையில இட்லிய தவிர எதுவுமே இல்லலியா, இல்ல ஆயான்னாவே இட்லிக்கடைதான் வைப்பாங்களா?//

ஓ சாரிப்பா புட்டு, ஆப்பம் அதெல்லாம் இருக்கு, ஆனா நான் கேட்டது இட்லிதானே ??

//ஆயாக்களுக்கு இழைக்கப்பட்ட கொடும இது! //

ஆஹா :)

Boston Bala said...

போட்டி நன்றாக இருக்கிறது. மேற்கோள்கலும் சுவை. விடைதான் தெரியலை :-((

5. எம்.எஃப் ஹூசேன்
6. ஜெ.ஜெ.

கதிர் said...

கார்த்திக் பிரபு!

இப்போதைக்கு தேவ் சொல்லிருக்க பதில படிச்சிக்கோங்க அதுதான் சரியான பதில்.

வாங்க பாபா!

நன்றி! நன்றி!!

உங்க பதிலில் ஆறாவது மட்டும் தவறு.

Unknown said...

மொத ரவுண்டு :)

1. அஜித்?
3. விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார்
6. மம்தா பானர்ஜி?
7. கபில் தேவ்
9. விஜயகாந்த்

Unknown said...

8 விட்டுட்டனே...நடிகை ரோகினி

Unknown said...

//இவர் ஒரு சீஸன் அ.வாதி//

இது ஒரு க்ளூவா? இல்ல தெரியாமத்தான் கேட்கறேன்..இது ஒரு க்ளூவா??

Unknown said...

//இவர் ஒரு சீஸன் அ.வாதி//

ஊர்ல எல்லாரும் அப்படித்தானே இருக்காங்க! இதை க்ளூவா வச்சு எப்படி கண்டுபிடிக்கறது?

கதிர் said...

//இது ஒரு க்ளூவா? இல்ல தெரியாமத்தான் கேட்கறேன்..இது ஒரு க்ளூவா?? //

இதான்யா க்ளூவே!

கதிர் said...

1ம்,6ம் தவறு

மீதி எல்லாம் சரி.

முயற்சி த.ம வில் என்னை மேல் நிறுத்தும். :))

கப்பி | Kappi said...

//இப்போதுதான் மீண்டிருக்கிறார்//
1. கங்குலி?? யார் கூட பழம் விட்டிருக்கார்?

5. பெண்..ஓவியம்..அப்ப எம்.எப்.ஹுசைன் தானே? :)

எனக்கு தெரிஞ்ச அவர் முழுப்பெயரே அதான் :))

10. இராமகோபாலன்?

கதிர் said...

//யார் கூட பழம் விட்டிருக்கார்?//

சாப்பல் கூட விட்டுருக்கார்!

கப்பி | Kappi said...

2. எழுத்தாளரா?

கப்பி | Kappi said...

2. Jade Goody

Anonymous said...

1.Ganguly
4.illayaraaja
5.m.f.hussain
6.rabri devi
7.kapil dev
8. rohini
9.vijaykanth
10.rama.gopalan

கதிர் said...

சின்னத்தம்பி,

நீங்க சொன்ன எல்லாமே சரி!

கதிர் said...

ஆர்வத்துடன் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி!

பங்கேற்ற அனைவருக்கும் தனித்தனியாக பின்னூட்டமிட்டு கயமை செய்ய ஆசைதான், என்ன செய்வது நேரமில்லை. :))

நாளை போடுகிறேன். :))

கோபிநாத் said...

அருமை தம்பி சார்...அருமை
கலக்குறிங்க சார்..வாழ்த்துக்கள்

ஏமாற்றத்துடன்...
ஏமாந்தவான் :(((

Anonymous said...

நான் வந்து பதில் சொல்ல முன்னரே போட்டியை முடித்த தம்பியை வன்மையாக கண்டிக்கிறேன். தண்டனையாக நான் சமைத்த உணவு அனுப்பப்படும், அதை சாப்பிட்டே ஆக வேண்டும் ;)

கதிர் said...

//ஏமாற்றத்துடன்...
ஏமாந்தவான் :((( //

யோவ் கலப்பைய ஒழுங்கா புடிச்சி உழுய்யா...

எத்தினி தபா சொல்றேன்.

நன்றி! இந்த மாதிரி மொக்க கேள்வி கேட்டுபிட்டு பதிலுக்காக எம்புட்டு நேரம் காக்க வைப்பேன்னு ஒருத்தர் கேட்டாரு அதனாலதான் பதில போட்டுவிட்டேன். அடுத்த தபா நீ வர்ற வரிக்கும் விட்டு வைக்கறேன்.
கோச்சிக்காதபா!

கதிர் said...

//நான் வந்து பதில் சொல்ல முன்னரே போட்டியை முடித்த தம்பியை வன்மையாக கண்டிக்கிறேன். தண்டனையாக நான் சமைத்த உணவு அனுப்பப்படும், அதை சாப்பிட்டே ஆக வேண்டும் ;)//

ஆஹா நல்ல ஐடியாவா இருக்கே! இனிமே நீங்க வர்றதுக்கு முன்னாடியே விளையாட்ட முடிச்சிடணும். அப்பதான் சாப்பாடு கிடைக்கும். :))

நன்றி தூயா!

Anonymous said...

//ஆஹா நல்ல ஐடியாவா இருக்கே! இனிமே நீங்க வர்றதுக்கு முன்னாடியே விளையாட்ட முடிச்சிடணும். அப்பதான் சாப்பாடு கிடைக்கும். :))

நன்றி தூயா!//

என்றாலும் நொந்து நூலாக போவதற்கு இத்தனை ஆர்வம் கூடாது ;)

சினேகிதி said...

\\உனக்குள் நானே உருகும் இரவில்\\ euthiyavr Rogini a?? Thamarai ilaya?

கதிர் said...

\\உனக்குள் நானே உருகும் இரவில்\\ euthiyavr Rogini a?? Thamarai ilaya? //

நடிகை ரோகிணியேதான் சந்தேகமே இல்ல. அருமையான வரிகள்.