எல்லையற்ற அன்பு கொள்வோம்

Thursday, December 21, 2006

வெயில் திரைப்படவிமர்சனம்

வெயில் படத்தின் பாடல்களை கேட்டபொழுதே படம் பார்க்க வேண்டும்
என்ற ஆர்வம் தோன்றியது. இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் அவரது
சீடர் வசந்தபாலன் எடுத்திருக்கும் படம் இவர் முன்னரே ஆல்பம் என்ற
படம் எடுத்திருந்த போதும் அது கவனிக்கபடாமலேயே போய்விட்டது.
அந்த குறையை இந்த வெயில் கண்டிப்பாக தீர்க்கும். நிச்சயம் பார்க்கவேண்டிய
படம்தான் என்று பார்த்தவுடனே மனதிலும் தோன்றியது.

Photobucket - Video and Image Hosting

வாழ்க்கையின் சகலபரிமாணங்களிலும் தோற்ற ஒருவனின் கதையை
படமாக்க முயன்றிருக்கிறார்கள். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
இதுவரை இந்த முயற்சி தமிழ் சினிமாவில் இல்லை. சினிமா
கதாநாயகனுக்கான எந்த அடையாளமும் இல்லாமல் கதைக்கான,
கதைக்களத்துக்கான இரு கதாநாயகன்களாக பசுபதி (முருகேசன்).
அவரின் தம்பியாக பரத் (கதிர்).

Photobucket - Video and Image Hosting

முதல் பாடல்காட்சியிலேயே தெரிந்து விடுகிறது இது வழக்கமான சினிமா
இல்லையென்பது. வெயிலோடு விளையாடி பாடலில் வரும் அத்தனை
விஷயங்களும் சிறுவயதில் நாம் செய்த ரசிக்கும்படியான குறும்புகள்.

பள்ளி கட் அடித்து விட்டு தியேட்டரில் திருட்டு தம் அடிக்கும் மகனை
பூதாகரமாக கண்டிக்கிறார் தந்தை. அவமானம் பொறுக்க முடியாமல்
பணத்தை திருடிக்கொண்டு வீட்டை விட்டு ஓடி விடுகிறார் பசுபதி.
இருக்கும் பணத்தையும் தொலைத்து விட்டு தியேட்டரில் வளர்கிறார்.
அங்கிருந்து காதல், சமூகம், எல்லாம் விளையாடுகையில் கண் முன்னே
காதலியின் தற்கொலை, தியேட்டர் இடித்த பிறகு வேலையும் போய்
ஏன் வாழ்கிறோம் என்று வேதனையில் இருக்கும்போது வீட்டுக்கு
போக முடிவெடுக்கிறார். இருபது வருடம் கழித்து வரும் மகனை
கண்டதும் பாசத்தில் தாய், இன்னும் அதே கோபத்தில் தந்தை இந்த
இடத்தில் அந்த தந்தை கதாபாத்திரத்தை குறிப்பிட்டே ஆகவேண்டும்.
மிக அற்புதமாக செய்திருக்கிறார்.

Photobucket - Video and Image Hosting

வீட்டிலும் தான் எதிர்பார்க்கும் பாசம், அன்பு கிடைக்கவில்லை
தங்கைகள் தன்னை அண்ணனாக ஏற்கவில்லை, திரும்பவும் திருட்டு
பட்டம் என்று காட்சிக்கு காட்சி தோல்விகள் கண்முன்னே தோன்றும்
போது பிரமிப்பு மீளவில்லை. பசுபதி நடிப்பின் உச்சத்தை தொட
முயன்றிருக்கிறார் அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். என்
முகத்திலே முழிக்காதே என்று சொன்ன அதே அப்பா மகன் காலடியில்
வீழ்ந்து மன்னிப்பு கேட்கிறார்.

சிறப்பான ஒளிப்பதிவு, தரமான இசை படத்துக்கு கூடுதல் பலம் கிடைக்கிறது.
முத்துக்குமாரின் வரிகளில் "உருகுதே மருகுதே" பாடல் மிக அழகாக படமாக்க
பட்டிருக்கிறது. அழகான வரிகளும் கூட. "வெயிலோடு விளையாடி" பாடல்
உங்கள் உதட்டில் குறுநகையயும் ஆச்சரியத்தையும் கொடுக்கும். "காதல்
நெருப்பின் நடனம்" உயிரே பாடலை நினைவுபடுத்துகிறது. அருவா பாடலும்
ஊராந்தோட்டத்தில பாடலும் தாளம் போட வைக்கிறது. "இறைவனை உணர்கிற"
காதுக்கு இனிமை.

Photobucket - Video and Image Hosting

தென்மாவட்டமான விருதுநகரில் கதை நடக்கிறது. அந்த மண்ணுக்குரிய
வெக்கைதான் படத்துக்கு பெயராக வைத்திருக்கிறார்கள். வெயிலின்
குறியாக கோபம், தவிப்பு, வெறுப்பு, மற்றொன்றாக பசுபதியயும் சொல்ல
வைக்கிறது. படத்தின் முழுக்கதையும் இவரை சுற்றியே வருகிறது இவரை
சுற்றி பலரும் அருமையாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

பரத்துக்கு ஜோடியாக பாவனா. இவர் தனது பங்களிப்பை செய்து விட்டு
கடைசியில் காணாமல் போகிறார். பசுபதிக்கு ஜோடியாக இருவர் இருந்தாலும்
இதிலும் தோல்விதான். படத்தில ஸ்ரேயான்னு ஒரு அம்மணி இருக்காங்க
சவுண்டையெல்லாம் தூக்கி வெச்சிட்டு பாந்தமான நடிப்பை தந்து நம்மளை
நிம்மதி பெருமூச்சு விட வைக்கிறார்.

Photobucket - Video and Image Hosting

மொத்தத்தில படம் பார்த்துவிட்டு வெளிவரும்போது ஏதோ ஒரு கிராமத்து
வீட்டின் உள்நுழைந்து ஒருவர் வாழ்க்கையை பார்த்து வந்தது போன்ற
உணர்வு. சண்டைக்காட்சிகள் மிக தத்ரூபமாக இருந்தாலும் ரத்தம் அதிகம்
நன்றாக அமைத்திருக்கிறார்கள் சபாஷ்.

பஞ்ச் டயலாக், குலுக்ஸ் நடனங்கலை எதிர்பார்த்து சென்றால் ஏமாற்றமே
மிஞ்சும். வித்தியாசமான படங்களை விரும்பி பார்ப்பவர்களுக்கு ஒரு
விருந்து இந்த படம்.

இதை தயாரித்ததற்காக ஷங்கருக்கு ஒரு நன்றி.

இதை எழுதி இயக்கிய வசந்த பாலனுக்கும் வாழ்த்துக்கள்

42 comments:

கதிர் said...

கயமை

Anonymous said...

நல்லா இருக்குங்க தம்பி விமர்சனம்

மஞ்சூர் ராசா said...

அன்பு கதிர்

வெயில் படத்திற்கான உனது நுணுக்கமான விமர்சனம் படத்தை பார்க்க தூண்டுகிறது. நல்லதொரு விமர்சனம்.

இசையில் மிகவும் லயித்திருப்பது, உங்களது இசை ஆர்வத்தை காட்டுகிறது.

வாழ்த்துக்கள்.

கதிர் said...

நன்றிங்க அனானி!

மஞ்சூர் அய்யா உங்கள் கருத்துக்கு நன்றி!

இசையமைத்தது 18 வயது பையனாம்
நம்பவே முடியலை.
நல்லா இசை அமைச்சிருக்கார்.

நன்மனம் said...

நல்ல விமர்சனம்

பார்க்கணுமா வேண்டாமானு இருந்த ஒரு சமயத்துல வந்த விமர்சனம் பார்க்கும் ஆசையை தூண்டிவிட்டது.

Anonymous said...

i am aasath

The criticism of a cinema is very important. But you hadn't try to it yet.

We have not gone under a roof while summers high. VNR or village is not a matter.

Story describe two things. One is that Service to Family only will become move to paradise (through Basubathy), not for Society.

Second is the question What is theft? Basubathy's theft? Then, the what is meaning of the theft of US MNCc, SEZ, Kargil Co., etc.

I will criticise exactly through this argument

-aasath

Anonymous said...

நான் தான் சொன்னென் இல்ல ... படம் நல்லா இருக்குனு ....
விமர்சனம் அருமை..

Anonymous said...

நல்ல விமர்சனம் தம்பி. ஒரு மனிதனின் புறகணிப்பும், புறகணிப்பின் வலியும் மிகச்சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. பல படங்கள் தொடாத இடங்களை, மிக மெல்லிய உணர்வுகளை படம் தொட்டு செல்கிறது. பசுபதியின் நடிப்பு இதில் சிறப்பு, யாரும் ஏற்கத்தயங்கும் கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார்.

வாழ்கையில் தோல்வியை சந்தித்த ஸ்ரியா மற்றும் பசுபதியின் பகிர்தல் கவணமாக கையாளப்பட்டுள்ளது.

இன்னும் நிறைய சிறப்புகள். மிகச்சிறப்பாக படமாக்கிய வசந்தபாலனுக்கும், ஷங்கரின் துணிச்சலுக்கும் வாழ்த்துக்கள் அல்ல நன்றிகள்.

ariyavan said...

நல்ல விமர்சனம் தம்பி. ஒரு மனிதனின் புறகணிப்பும், புறகணிப்பின் வலியும் மிகச்சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. பல படங்கள் தொடாத இடங்களை, மிக மெல்லிய உணர்வுகளை படம் தொட்டு செல்கிறது. பசுபதியின் நடிப்பு இதில் சிறப்பு, யாரும் ஏற்கத்தயங்கும் கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார்.

வாழ்கையில் தோல்வியை சந்தித்த ஸ்ரியா மற்றும் பசுபதியின் பகிர்தல் கவணமாக கையாளப்பட்டுள்ளது.

இன்னும் நிறைய சிறப்புகள். மிகச்சிறப்பாக படமாக்கிய வசந்தபாலனுக்கும், ஷங்கரின் துணிச்சலுக்கும் வாழ்த்துக்கள் அல்ல நன்றிகள்.

Anonymous said...

இசையமைச்சது ஏ.ஆர்.ரகுமானோட அக்கா பையன்.
சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாட்டு ஞாபகம் இருக்கா?
அதில வாற சின்னப்பையனோட குரலுக்குச் சொந்தக்காரன்தான் இந்த இசையமைப்பாளன்.

கப்பி | Kappi said...

நல்ல விமர்சனம் தம்பி!

'வெயிலோடு விளையாடி' பாட்டை மட்டும் பார்த்தேன்...வெகுவாக ரசித்தேன்...

படத்தை இந்த வார இறுதியில் பார்த்துடுவேன்..பார்த்துட்டு வரேன்.. :)

Boston Bala said...

எப்பொழுது வட்டில் வரப்போகிறதோ! அர்வத்தைத் தூண்டும் நேர்த்தியான எளிய விமர்சனம்

சாத்வீகன் said...

நல்ல படங்கள் அருகி வரும் நிலையில் இதுபோன்ற படங்கள் நம்பிக்கை தருகின்றன.

நல்ல விமர்சனம். நன்றிகள்.

த.அகிலன் said...

நானும் படம் பார்த்தேன் ஸ்ரேயா அல்ல ஸ்ரேயா ரெட்டி என்று நினைக்கிறேன் அவர் தனக்கு கொடுத்த பாத்திரத்தை அற்புதமாக நிரப்பியிருக்கிறார்.இதில் படத்தின் குறைபாடுகள் ஏதேனும் சொல்லப்பட்டிருக்கலாம்.

கதிர் said...

வாங்க நன்மனம்!

கதை செல்லும் விதம் உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும்.

அன்பின் ஆசாத்!

படம் சொல்ல வருவது சமூகம் காதலுக்கு தரும் எதிர்ப்புகள், நகரத்து குழந்தைகள் மறந்துவிட்ட கிராமத்து சிறு விளையாட்டுக்கள். வாழ்க்கையில் தோல்களை மட்டுமே சந்திக்கும் ஒரு இளைஞன். குடும்பத்திலும் அவன் சந்திக்கும் பிரச்சினைகள் இதை தொட்டு செல்கிறது.

ஒவ்வொரு தனிமனிதனும் இணைந்ததுதானே அய்யா சமூகம் என்பது.

உங்கள் கருத்துக்கம் வருகைக்கும் நன்றி

கதிர் said...

வருக சுந்தர்.
நீங்க சொல்லிட்டிங்க நல்லா இருக்குன்னு
நாங்க பார்க்க வேணாமா!
அதான் பார்த்தாச்சி, கிறுக்கியாச்சி!

//வாழ்கையில் தோல்வியை சந்தித்த ஸ்ரியா மற்றும் பசுபதியின் பகிர்தல் கவணமாக கையாளப்பட்டுள்ளது.//

வாங்க அரியவன்,

இந்த பகுதியை சொல்ல வேண்டும் என்று நினைத்து மறந்தே போனேன்.
நன்றி!

கதிர் said...

// Boston Bala said...
எப்பொழுது வட்டில் வரப்போகிறதோ! அர்வத்தைத் தூண்டும் நேர்த்தியான எளிய விமர்சனம் //

மிக்க நன்றி!

//நல்ல படங்கள் அருகி வரும் நிலையில் இதுபோன்ற படங்கள் நம்பிக்கை தருகின்றன.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சாத்வீகன்!

கதிர் said...

//நானும் படம் பார்த்தேன் ஸ்ரேயா அல்ல ஸ்ரேயா ரெட்டி என்று நினைக்கிறேன் அவர் தனக்கு கொடுத்த பாத்திரத்தை அற்புதமாக நிரப்பியிருக்கிறார்.இதில் படத்தின் குறைபாடுகள் ஏதேனும் சொல்லப்பட்டிருக்கலாம்.//

ஆச்சரியத்தை அளித்த கதாபாத்திரங்களில் ஸ்ரேயாவின் கதாபாத்திரமும் ஒன்று.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அகிலன்.

Anonymous said...

i am aasath:

Love hasn't accept by any parents without any their disturbance.
Do you see the movee "azhaki" it tells about the village life. Civilized society can't respect this sentiment. We want hurt this sentiment to pull forward this society.
Who got victory in his youth today? Software peoples and civil service passed out peoples only. But they are minorities only.
Many youths without proper job have lived today hopefully in Chennai Slums also.
But they have good humanities values also.
I know Virudhunagar and its culture also. Don't extragrate anything.

-aasath

கதிர் said...

Hi Aasath,

Whatever I have written is what I felt after seeing the movie.

if u have any concerns u can give ur review and we will be extremely happy to read ur expert comments abt that movie.

Anonymous said...

படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆர்வத்தை உங்கள் விமர்சனம் தருகின்றது....

கதிர் said...

வாங்க தூயா!

வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள். நல்ல சினிமாதான்.

வருகைக்கு நன்றி.

Sridhar V said...

தம்பி அவர்களே,

எனக்குத் தெரிந்த சில தகவல்கள் -

//அந்த தந்தை கதாபாத்திரத்தை குறிப்பிட்டே ஆகவேண்டும்.
மிக அற்புதமாக செய்திருக்கிறார்.
//

அவர்தான் ஜி.எம். குமார் என்னும் முன்னாள் இயக்குநர். அறுவடைநாள் என்னும் படத்தை இயக்கி அதில் அறிமுகமான பல்லவி என்ற நாயகியையே திருமணம் செய்து கொண்டார். ரொம்ப நாளாக காணாமல் இப்பொழுது வெயிலில் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார்.

//ஸ்ரேயான்னு ஒரு அம்மணி இருக்காங்க
சவுண்டையெல்லாம் தூக்கி வெச்சிட்டு பாந்தமான நடிப்பை தந்து நம்மளை
நிம்மதி பெருமூச்சு விட வைக்கிறார்//

இவர் SS Music DJ ஸ்ரியா ரெட்டி (அப்படித்தான் அவர் ஒரு பேட்டியில் சொன்னார்).

நல்ல விமர்சனம் தந்திருக்கிறீர்கள்.

Cursed one (சபிக்கப்பட்ட பசுபதி பாத்திரம்) and Blessed one (ஆசிர்வதிக்கப்பட்ட பரத் பாத்திரம்) என்ற இரு சகோதரர்களின் வாழ்க்கையை சொல்லும் படம்.

என்னளவில், நான் மிகவும் எதிர்பார்ப்போடு முதல் நாள் பார்க்க சென்ற படம். ஆரம்பக் காட்சிகள் கவிதையாகத்தான் இருந்தது. பிறகு ஏமாற்றமே!

நீளமான Climax, அதிக ரத்தம், gory scenes போன்றவைகளை குறைத்து, இன்னும் கொஞ்சம் யதார்த்தத்தை கூட்டியிருந்தால் மிகவும் ரசிக்க வைத்திருக்கும்.

கதிர் said...

வருக Sridhar Venkat,

நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி!

//அவர்தான் ஜி.எம். குமார் என்னும் முன்னாள் இயக்குநர்//

தகவலுக்கு நன்றி!

//நல்ல விமர்சனம் தந்திருக்கிறீர்கள். //

நன்றி!

//என்னளவில், நான் மிகவும் எதிர்பார்ப்போடு முதல் நாள் பார்க்க சென்ற படம். ஆரம்பக் காட்சிகள் கவிதையாகத்தான் இருந்தது. பிறகு ஏமாற்றமே!

நீளமான Climax, அதிக ரத்தம், gory scenes போன்றவைகளை குறைத்து, இன்னும் கொஞ்சம் யதார்த்தத்தை கூட்டியிருந்தால் மிகவும் ரசிக்க வைத்திருக்கும்.//

படத்தின் பாடல்களை ஏற்கனவே கேட்டிருந்ததால் எனக்கு படம் பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டது.

இடைவேளைக்கு பிறகு இழுத்துவிட்டது என்னவோ உண்மைதான். சண்டைக்காட்சிகளில் தத்ரூபம் வேண்டுமென்பதற்காக ரத்தம் அதிகமாக தெளித்துவிட்டார்கள். உண்மைக்கு அருகில் சென்று விட்டாலேஎன்றும் தொல்லைதான்.

Anonymous said...

Another information. Ms.Shreya Reddy is the daughter of the famous cricketer Mr.Bharath Reddy who was representing Tamil Nadu team in many tests..

கப்பி | Kappi said...

என் பின்னூட்டம் எங்கே??????????

கதிர் said...

//Another information. Ms.Shreya Reddy is the daughter of the famous cricketer Mr.Bharath Reddy who was representing Tamil Nadu team in many tests..//

அனானி அன்பரே ஸ்ரியா மீது உங்களுக்கு இருக்கும் அன்பு வியப்பளிக்கிறது. இதுவரை தெரியாத தகவல்!!! நாட்டுக்காக விளையாடிய வீரரின் புதல்வி நம் இதயங்களுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார் :))

கதிர் said...

//என் பின்னூட்டம் எங்கே??????????//

கப்பி கண்மணியே இதை கயமை என்று தவறாக நினைக மாட்டாய் என்று நினைக்கிறேன் :))

தெரியாமல் நடந்து விட்ட தவறு, தெரிய வந்த போது நெஞ்சம் பதறுகிறது. தாஆஆஆஆமததிற்கு மன்னிக்கவும்.

லொடுக்கு said...

தம்பி,
என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்.

இன்னும் இந்த படத்தை பார்க்காததுனால இந்த பதிவை இன்னும் படிக்கல. பார்த்துட்டு வந்து வச்சுக்கிறேன்.

கதிர் said...

//தம்பி,
என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம். //

சிக்குன் குனியா!

கார்த்திக் பிரபு said...

periya aalla agiteerey..busy a..

yov nalla eluhi irukeeeru..nan edir partha vimarsanam..pdathila jeevan iruppa..padam nalla odanum

கதிர் said...

வாங்க புது மாப்ளேய்ய்!

நான் ரொம்ப பெரிய ஆள்தான், உசரத்துல சொல்றேன், 6.2 :))

நல்ல படம் தானாவே ஓடும், அதே மாதிரி இந்த படமும் நல்லா ஓடுமென்பதில் சந்தேகமே இல்லை.

நன்றிங்க மாப்ள!

Anonymous said...

i am aasath

if a film get marvelous receipt from audience, that film hasn't such enough elements to achieve itself or on Society.

"Veyyil" also have included these values. It appreciate the individulals' Sacrifice for HIS FAMILY ONLY.

But we need the ethics of Bagath Singh to our Young generation ... Is this film develop this etics on your brain ... It develop centiments only. What is the use like Urine.


Demolization of Turing Theaters: Who is the Acquist. GATT or the owner of theatre .... tell

If this film will take after 50 years, you will see with centiments.

Remember Tippu sultan on 2nd Mysore War. Tiger of Mysore (his father Hyder ali) died at Sithoor ground of battle. From Malabar he had taken the leads against Company without sorrow and got a good won ...


-aasath
HSRA

கதிர் said...

இனிய ஆசாத்,

இப்போது வரும் மட்டமான படங்களுக்கு இடையில் இதுபோன்ற முயற்சிகள் பாராட்டப்படவேண்டும் என்பது என் கருத்து.

//"Veyyil" also have included these values. It appreciate the individulals' Sacrifice for HIS FAMILY ONLY.//

ஒரு தனிமனிதன், அவனது குடும்பத்தை சுற்றி நடக்கும் கதை. இதிலே நீங்கள் எதிர்பார்ப்பது என்னவென்றே புரியவில்லை.

நீங்கள் சொல்வது போல திப்பு சுல்தான் வரலாறும் போற்றத்தக்கதே அது தெரியாமலில்லை. அதற்கான முயற்சிகளை ஆதரிக்கும் தயாரிப்பாளர்கள் இல்லை. ஏற்கனவே ஹேராம் என்ற படம் அடைந்த தோல்வி தெரியும்தானே. மருதநாயகத்தை எடுக்கவே முடியவில்லை.

உங்கள் எதிர்பார்ப்புகளை இந்த படம் பூர்த்தி செய்யவில்லை என்பது தெரிகிறது. அதற்காக மற்ற படங்களை காட்டி அதுபோல எடுக்கவேண்டும் என்பது நியாயமில்லை.

தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் அனைவரும் செண்டிமெண்டல் ஆளுங்கதான். ஹாலிவுட் படங்களில் கூட செண்டிமெண்ட் இல்லாமல் படங்கள் வருவதில்லை.

நீங்கள் சொல்லும் முயற்சிகள் நடந்தாலும் சந்தோஷமே. வரலாற்று நாயகர்களை அடுத்த தலைமுறைக்கு சொல்ல சினிமாவே சிறந்த வழி. ஏடுகளில் படிக்கும் பொறுமை இருக்குமா என்பது சந்தேகமே.

உங்கள் கருத்துக்களை தொடர்ந்து இடலாம்.

மிக்க நன்றி ஆசாத்.

கார்த்திக் பிரபு said...

avvalavu uyaramaa neenga

Anonymous said...

From AASATH:

This is not my expectation. It is essential work to the society.

"Ha-Ram" is also tell the Story of a man not that day scenerio. If you want to show the history of partition, read some good lit. like short stories and novels, poems... Real history is another version.

Marudhanayagam has not a hero in our freedom struggle. His opportunitism is shown at many cases like Puulithevar.


For centimentalism, dont use the scale of Hollywood

1aasath

மு.கார்த்திகேயன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..

இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.

இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்

கதிர் said...

ஹி ஹி ஆமா கார்த்திக்!

அன்பின் ஆசாத்!

இனிய பக்ரீத் வாழ்த்துக்கள் மற்றும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கார்த்திகேயன்!

உண்மை வலையுலகம் அருமையான பல நண்பர்களை பெற்றுத் தந்துள்ளது.
உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

நல்லபடமும், நல்ல விமரிசனமும்.

கதிர் said...

//நல்லபடமும், நல்ல விமரிசனமும்//

நன்றிங்க டீச்சர்!

நாப்பது நாள் பதிவையும் வரிசையா பாக்குறீங்க போலருக்கு!

ம்ம் பாருங்க பாருங்க!

சினேகிதி said...

நான் இன்னும் படம் பார்க்கேல்ல ஆனால் உருகுதே உருகுதே பாட்டும் வெயிலோடி விளையாடி பாட்டும் பிடிக்கும்.பம்பரம் விடுவினமே கையில எல்லாம் பார்க்க நல்லா இருக்கும்.

Anonymous said...

good points and the details are more specific than elsewhere, thanks.

- Murk