எல்லையற்ற அன்பு கொள்வோம்

Sunday, January 21, 2007

தாங்குமா தமிழ்சினிமா? சர்வே

காத்து வாக்குல நம்ம பய ஒருத்தன் ஒரு சேதிய சொன்னான்.ரன்னிங் டயலாக்
ஸ்பெஷல் பேரரசுவும், லிட்டில் சூப்பர் ஸ்டாரும் சேர்ந்து ஒரு படம் பண்ண
போறாங்கன்னு. செய்திய கேட்டதும் பகீர்னு ஆகிப்போச்சி. அடப்பாவிகளா
ஏண்டா இந்த மாதிரி தொடர்ச்சியா போட்டு தாக்குறிங்க? ஏற்கனவே தர்மபுரி,
வல்லவன் படம் பார்த்த பீதியே இன்னும் போகல. அதுக்குள்ள இப்படி ஒரு
அணுகுண்ட தூக்கி போட்டிங்கன்னா என்னா ஆவுறது தமிழ்சினிமா?

தாவாங்கொட்டைய புடிச்சி யோசிச்சதுல சர்வே போட்டு மக்கள்கிட்டயே
கேட்டுருவோம்னு தோணுச்சி. ஏண்டா உன் ப்லாக்குக்கு வர்ற ஆளுங்களே
மொத்தம் பத்தோ, இருவதோதான் இதுல சர்வே போட்டேன்னா என்னா
தீர்வு கெடைக்கும்னு கேக்கறது?. என்னா பண்றது நமக்கும் ஒரு ஆசைதாங்க.
ஓட்டு போடறதுக்கு முன்னாடி பேரரசு புல் மேக்கப்போட ரன்னிங் வசனம்
பேசிகிட்டு உங்க முன்னாடி நிக்கிற மாதிரி கற்பனை பண்ணிக்கோங்க, அப்படியே
சிம்பு ஷட்டர விரலாலயே கிழிச்சிகிட்டு வெளில வர்ற மாதிரி கற்பனை
பண்ணிக்கோங்க.

பண்ணியாச்சா??

இப்ப ஓட்டை குத்துங்க.

13 comments:

Anonymous said...

சென்னைக்கு இப்போத் தான் மல்டி பிளக்ஸ் எல்லாம் வந்துக்கிட்டு இருக்கு.. இந்த மாதிரி செஉதியைக் கேள்விப்பட்டா கட்டிக் கிட்டு இருக்கும் போதே அதெல்லாம் வெடிச்சு சிதறிடதா? அய்யோ சாமீ

தேவ்

Anonymous said...

ஒரே மாதத்தில் உலக தொலைக்காட்சியில் முதன் முதலாக உங்கள் சன் டீவியில் ...

என்று ஒரு ஆப்சனும் கொடுத்திருக்கலாம்
:))

கதிர் said...

வாங்க தேவ்!

பயமாத்தான் இருக்குங்க நீங்க சொல்ற விஷயத்துலயும் நியாயம் இருக்கு!

வருக கோவி.கண்ணன்

//ஒரே மாதத்தில் உலக தொலைக்காட்சியில் முதன் முதலாக உங்கள் சன் டீவியில் ...//

அதுக்கெல்லாம் அவசியமே இல்ல. அந்த படத்தை டீ.வில கூட பாக்கமுடியாது.

ஆப்ஷன் நல்லாவே இருக்கு. :))

கோபிநாத் said...

ரொம்ப நல்ல பதிவு கதிரு....கலக்குற

கோபிநாத் said...

ஆனா இதெல்லாம் தடுக்க முடியாது...

Anonymous said...

இப்பதிவு ஒரு தனிமனித தாக்குதல்

கதிர் said...

//ரொம்ப நல்ல பதிவு கதிரு....கலக்குற //

கோபி இடம் மாறி வந்து கமெண்ட் போட்டுட்டிங்களா?

நல்ல பதிவுன்னு வேற சொல்லுறிங்க!

என்னவோ போ!

//ஆனா இதெல்லாம் தடுக்க முடியாது...//

ஆமா தர்மபுரி படத்துக்கு கூட பெரிய அளவில பயம் வரல. ஆனா இந்த செய்திய கேள்விப்பட்ட வுடனே பதறிட்டேன். நம்ம கைல என்ன ஒண்ணுமே இல்ல.

கதிர் said...

//இப்பதிவு ஒரு தனிமனித தாக்குதல் //

அடடே ரொம்ப நன்றிங்க! இந்த பதிவே பொதுநலன் கருதி போட்டதுதான். அத்தனை பேருக்காக ஒருத்தன தாக்குறது தப்பே இல்ல இராம் அண்ணே!

கோபிநாத் said...

\\கோபி இடம் மாறி வந்து கமெண்ட் போட்டுட்டிங்களா?

நல்ல பதிவுன்னு வேற சொல்லுறிங்க!

என்னவோ போ!\\

எல்லாருக்கும் எச்சரிக்கை கொடுத்தல்ல...அதான் நல்ல பதிவுன்னு சொன்னேன்...

Leo Suresh said...

கதிர்,
படம் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்றுதான் பதில் அனுப்பினேன், அதான் ஊருல உன்னய மாதிரி ஆட்கள் நெற்யப்பேரு இருக்கீங்களே.
லியோ சுரேஷ்.

லொடுக்கு said...

//இராம் சொன்னது...…

இப்பதிவு ஒரு தனிமனித தாக்குதல்
//
ஒரு சின்ன திருத்தமுங்கோ...

இப்பதிவு ஒரு தனிமனிதர்கள் தாக்குதல்.
சிம்புவை யாரும் மனுஷனாவே மதிக்கிறது இல்லையோ...

Anonymous said...

தம்பி, தன்னைத்தானே பிளேடா கீரிக்கொண்டும், நெருப்பால் சுட்டுக்கொண்டும்,வருத்திக்கொள்ளும் வியாதிக்கு என்னவோ பேர் சொல்லுவாங்க மருத்துவதுறையில். அந்த வியாதியஸ்தர்கள் தமிழ் நாட்டில் 1 ஷோவுக்குதான் தேறுவார்கள் மொத்தமாக. அதனால் பயப்பட தேவையில்லை தம்பி.நாம அடுத்த பதிவ பத்தி யோசிப்போம்.

மு.கார்த்திகேயன் said...

ஏனப்பா இப்படி எல்லாம் பீதியை கிளப்புறீங்க நாட்டுல