எல்லையற்ற அன்பு கொள்வோம்

Friday, January 26, 2007

அமீரக தமிழ் பண்பாட்டு கழக பொங்கல் விழா

பொங்கலை முன்னிட்டு அமீரகத்தில் நேற்று ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
செய்திருந்தார்கள் தமிழ் பண்பாட்டு குழுவினர். காலையில் கபடியுடன்
தொடங்கிய தொடங்கிய இந்நிகழ்ச்சிகள் மாலை 10 மணிக்கு தூதரக
அலுவலகத்தில் நிறைவுப்பெற்றது. அதிகாலை ஏழு மணிக்கு கபடியுடன்
ஆரம்பித்தனர் அங்கே வீரர்கள் அதீத உற்சாகத்துடன் பங்கெடுத்துக் கொண்டதால் போட்டிகள் நடத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டு முடிவுகள் தெரிவிக்க முடியாமல் போனது. அடுத்து தமிழர்களின் வீர விளையாட்டான காளை பிடித்தல் ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்தார்கள் காளை கிடைக்காத காரணத்தால் அடுத்த வருடத்திற்கு கண்டிப்பாக நிறைவேற்றுவதாக விழா
குழுவினர் அறிவித்தார்கள்.

இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடப்பதை அண்ணன், கவிஜைகளின் காதலன்
ஆசிப் அண்ணாச்சி உலாபேசியில் சொன்னபோது நிகழ்ச்சிகளில்
பங்கெடுத்துக் கொ(ல்லா)ள்ளாவிட்டாலும் பரவாயில்லை. எம் தமிழ் மக்களை
கண்டாலே போதும் என்று சென்றேன். எலேய் சரியா 2.30 மணிக்கு வந்துடுலே அப்பால நின்னுகிட்டுதான் பாக்கணும் சொல்லிபுட்டேன்னு
சொன்னார். நானும் வழக்கம்போல ஒரு மணிநேரம் தாமதமா போனேன்.
அவங்களும் வழக்கமா இரண்டு மணிநேரம் தாமதமாக நிகழ்ச்சிகளை
தொடங்கினார்கள். தூதரக அதிகாரி திரு. அசோகன், மற்றும் பலர்
குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா என்ற அற்புதமான பாடலுடன்
கலைநிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. (வர்ணனையாளர் இப்படிதாங்க சொன்னாரு. அவரு குரல் கூட ஷாகுல் ஹமீது குரலை போலவே இருந்தது)ஆண்களே ஆடியதை பார்க்க வேதனையாக இருந்தது. அடுத்ததாக பட்டிமன்றம் ஆரம்பமானது மகிழ்ச்சியான வாழ்வுக்கு ஏற்றது கிராமத்து வாழ்க்கையா? நகரத்து வாழ்க்கையா? என்ற தலைப்பில் அணிக்கு நான்கு பேர் வாதிட அஷ்ரப் அலி அவர்கள் நடுவராக சிறப்பாக பேசினார். தொலைக்காட்சியில் பார்த்து சலித்து போன பட்டிமன்றங்கள் பாணியில் அனைவரும் பேசினர். நம்ம
அண்ணாச்சி களத்துல இறங்கி அதிரடியா பேசி கிரமாத்து பக்கம் தீர்ப்ப
அடிச்சே வாங்கிடுவாருன்னு எதிர்பார்ப்போடு கூட வந்த நண்பரிடம் பிட்டுகளை அள்ளி விட்டேன். ஏம்பா நீயும்தான் ஏதோ தமிழ்ல ஏதேதோ எழுதற பட்டி மன்றத்துல கலந்துக்கிடலாம்ல னு கேட்டெ வெச்சிட்டாரு. இந்தமாதிரி நிகழ்ச்சி இருக்கறதே நேத்துதாங்க தெரியும். குறிப்பு இல்லாம எப்படி பேச முடியும். (நம்மளுக்கு சன் டி.வி மலரும் மொட்டும் நிகழ்ச்சில கூட பேச முடியாதுங்கறது வேற விஷயம்)ஆனால் அண்ணாச்சி இந்த மாதிரி சிறிய தலைப்புக்கெல்லாம் வாதிட கூடாது.

அதுவுமில்லா விவாதத்துக்கே இடமில்ல கிராமத்து வாழ்க்கைதான் மகிழ்ச்சிக்கு உகந்ததுன்னு நம்மளுக்கு தெரியாதா என்ன. வழக்கம்போல
மணியடித்த பிறகும் பேச்சாளர்கள் தத்தம் ஆணித்தரமான கருத்துக்களால்
மக்களை விரட்டி அடித்துக்கொண்டிருந்தனர். அதிலயும் ஒருத்தர் மணி அடிக்கர நேரமெல்லாம் பார்த்து உரத்த குரலில் பேசி மணி சத்தம் ஒலிக்க முடியாத மாதிரி மிக சத்தமா பேசினார். (இது என்ன கயமைங்க?)அனைவரும் நன்றாக பேசினார்கள்.

அடுத்ததாக கவுஜை அரங்கம். நிகழ்ச்சிகளின் ஹைலைட்டே இதுதான் கவிப்பேரரசு வைரமுத்து பாணியில் ஆறு பேர் வெள்ளுடை அணிந்து
வெண்புகைகளின் பிண்ணனியில் இரு குழந்தைகள் கையில் விளக்கு
வைத்து இங்கும் அங்கும் நடமாட இவர்கள் அறுவரும் இடையில்
நடந்து நடந்து கவிதை பாடினார்கள். மொத்தம் நாப்பது நிமிடங்கள் கவிதைக்கு மட்டும் நான் ரசிச்சேன்னு சொன்னாலும் பக்கத்துல இருந்த
ஆளுங்க முணுமுணுக்க ஆரம்பிச்சிட்டாங்க. அனேகமா கவுஜைகளுக்கு
புது உருவமே கொடுத்து சிறப்பித்தார்கள் என்று சொன்னால் மிகையாகாது.
கவிதை யார் எழுதினாங்கன்னு தெரில ஆனா நல்லா இருந்தது.

அடுத்ததாக பாட்டு மன்றம். அண்ணாச்சி பாடப்போவதாக அறிவித்தார்கள்
முன்னரே போன் பண்ணி பிச்சிக்கிட்டியாலேன்னு கேட்டு நான் அரங்கத்தில்
இருப்பதை உறுதி செய்து கொண்டார் அண்ணாச்சி. யாரும் வேளியேற முடியாதபடி பாதுகாப்பு வேளிகள் அமைத்து தடுத்துவிட்டார்கள். பாடல் பாடுவதற்கு முன் அண்ணாச்சி அவர்கள் இடையிடையே நகைச்சுவையாக வர்ணனை கொடுத்து அசத்தினார். அதிலிருந்து ஒரு துணுக்கு வேட்டையாரு விளையாடு பாடல் ஒன்றிற்கு ஒரு கதை சொன்னார். ஒரு ஊர்ல அப்பா மவனுக்கு வேட்டையாடறது எப்படின்னு சொல்லிக்குடுத்தாராம். மவனே அந்த கொக்க நான் எப்படி சுடுறேன்னு மட்டும் பாருன்னு சொல்லிட்டு
கொக்க சுட்டாரு கொக்கு பறந்துடுச்சி. மவன் கேவலமா ஒரு லுக்கு விடறான்
எலே நீ அதிர்ஷ்டக்காரன்லே செத்த கொக்கு பறக்குது பாருன்னு சமாளிச்சாராம்
தூங்கிக்கொண்டிருந்த அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது. :-))

அருமையான ஒரு பாடலை இருகுரலில் பாடி அசத்தினார் ஆசிப் அண்ணன்.
வசூல் ராஜா படத்திலிருந்து கலக்கப் போவது யாரு என்ற பாடலை அவர் பாடினார். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தியதற்காகவும், நிகழ்ச்சி நடக்க போவதை ஏசியா ஏசியா நெட் மூலம்அனைவரும் அறிய செய்தமைக்காக அண்ணாச்சிக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். அண்ணாச்சி வல்லவரு, நல்லவரு, பாடகரு, பதிவரு, கவுஜைமன்னன், கவிமடத்தலைவன்
(அண்ணே போதுமாண்ணே???)

கலை நிகழ்ச்சிகள் முடிந்து அனைவரும் வெளியேறும் போது ஸ்பான்சர்கள்
ஒரு கிலோ பாசுமதி அரிசி, ஐஸ்க்ரீம், பரிசுப்பொருட்கள் கொடுத்து அசத்தினார்கள்.

வீட்டுக்கு வந்தவுடனே நண்பர்கள் கேட்டார்கள்.

எலேய் நீ ஏதோ பட்டிமன்றத்துக்கு போயிட்டு வர்றதா பேசிக்கிட்டாங்க, நீ என்னடான்னா அரிசிப்பையோட வந்து நிக்கற? னு கேட்டுப்புட்டாங்க!

அடப்பாவிகளா, முடிவே பண்ணிட்டிங்களா? இதெல்லாம் அங்க இலவசமா கொடுத்தது வாங்கிட்டு வந்தேன். இப்படி கேப்பிங்கன்னு தெரிஞ்சா வர்ற வழிலயே தானம் பண்ணீட்டு வந்துருப்பேன்.

என்ன பண்றது நல்லதுக்கு செஞ்சாலும் எடக்கா கேள்வி கேக்குறதான் பொழப்பு என்னைய மாதிரி.

ஆயிரம் குறை சொல்ல காரணங்கள் இருந்தாலும் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்துவது என்பது எளிதான காரியமில்லை. வெற்றிகரமாக நடத்தினார்கள். நீண்ட நாள்களுக்கு பின்னர் நிறைய தமிழ் முகங்கள் சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்ததை காணும் போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

55 comments:

கதிர் said...

சோதனை மேல் சோதனை!

Anonymous said...

Please try to post few photographs

கதிர் said...

அனானி,
நான் வெச்சிருக்க 3310 ல போட்டோ எடுக்கற வசதி இல்லிங்க! யார்கிட்டயாவது வாங்கி போடுறனுங்ணா!

அபி அப்பா said...

ஆக கூடிய சீக்கிரம் துபாயில் இன்னுமொறு தமிழ் சங்கம் உருவாகப்போகிறது. அப்படித்தானே தம்பி!!

கதிர் said...

//ஆக கூடிய சீக்கிரம் துபாயில் இன்னுமொறு தமிழ் சங்கம் உருவாகப்போகிறது. அப்படித்தானே தம்பி!!//

அய்யய்யோ அப்படி இல்லிங்க குமார்!
அமீரகத்துல இருக்கற அத்தனை தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்படுமாறு திரு. அசோகன் தூதரக அதிகாரி உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். அவர் பணி மாற்றல் செய்து போவதை அடுத்து இதைக் கேட்டார்.

செய்வார்கள் என்று நம்புவோம்!

அபி அப்பா said...

//அமீரகத்துல இருக்கற அத்தனை தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்படுமாறு திரு. அசோகன் தூதரக அதிகாரி உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். அவர் பணி மாற்றல் செய்து போவதை அடுத்து இதைக் கேட்டார்.//

ஏற்கனவே திரு. பொன்னுசாமி என்ற தூதரக அதிகாரியும் இப்டிதான் கதறினாறு.கூட்டத்துல எல்லாறும் சேந்து கதறிட்டு போகும் போது இன்னொறு "தமிழ் சங்க" குட்டிய போட்டுட்டு போய்ட்டாய்ங்க. ஆனா அபுதாபி சங்கம் சிங்கம்யா. புது சங்கம் பொறக்கும் போதெ தாய் சங்கத்த போட்டுதள்ளிட்டுதான் பொறக்கும்.

அபி அப்பா said...

எங்கப்பா எல்லாரும். உண்ட கலைப்பா. கண் அசந்துட்டீங்களா? எந்திரிங்கப்பூ. உத்தப்பா 50 அடிக்கப்போறாவ..நம்ம தம்பியயும் சர்ர்ர்ர்ன்னு 50க்கு தள்ளிட்டு போவும்.

இராம்/Raam said...

//அனானி,
நான் வெச்சிருக்க 3310 ல போட்டோ எடுக்கற வசதி இல்லிங்க! யார்கிட்டயாவது வாங்கி போடுறனுங்ணா!//

அட பாவி இன்னுமய்யா அந்த செங்கல்லை தூக்கிட்டு அலையிறே???? :)

லொடுக்கு said...

புதிய ப்ளாக்கர் அருமை. :)

அப்புறம் பதிவைப்பற்றி: என்கிட்ட சொல்லவே இல்லை. அண்ணாச்சி பாடப்போறாரு சொல்லியிருக்க வேணாம். சே! என்ன தம்பி கவுத்திப் புட்டீயளே? ஹூம். நான் கொடுத்து வச்சது அம்புட்டுத்தேன்... என்ன செய்றது???

கதிர் said...

குமார் !
ஒரு முடிவோடதான் கிளம்பியிருக்கிங்க போலருக்கு! :))


//எங்கப்பா எல்லாரும். உண்ட கலைப்பா. கண் அசந்துட்டீங்களா? எந்திரிங்கப்பூ. உத்தப்பா 50 அடிக்கப்போறாவ..நம்ம தம்பியயும் சர்ர்ர்ர்ன்னு 50க்கு தள்ளிட்டு போவும்.//

சனி, ஞாயிறு ல பதிவு போட்டா இழுத்துகிட்டுதான் இருக்கும். நம்ம பதிவு திங்கள் கிழமை போட்டாலும் இப்படிதான் இழுக்கும் அது வேற விசயம். அட நாமெல்லாம் பின்னூட்டத்துக்கா பதிவு போடறோம்! ஏதோ நம்மளால முடிஞ்ச பொது தொண்டு!

லொடுக்கு said...

//Abi Appa said...
எங்கப்பா எல்லாரும். உண்ட கலைப்பா. கண் அசந்துட்டீங்களா? எந்திரிங்கப்பூ. உத்தப்பா 50 அடிக்கப்போறாவ..நம்ம தம்பியயும் சர்ர்ர்ர்ன்னு 50க்கு தள்ளிட்டு போவும்.
//
ஊத்தப்பா 50 அடிச்சு 50 நிமிடம் ஆச்சு. தம்பி தான் தடுமாறுராரு ரெய்னா மாதிரி.

தம்பி எனி ஹெல்ப்?

லொடுக்கு said...

//சனி, ஞாயிறு ல பதிவு போட்டா இழுத்துகிட்டுதான் இருக்கும். நம்ம பதிவு திங்கள் கிழமை போட்டாலும் இப்படிதான் இழுக்கும் அது வேற விசயம். அட நாமெல்லாம் பின்னூட்டத்துக்கா பதிவு போடறோம்! ஏதோ நம்மளால முடிஞ்ச பொது தொண்டு!
//
சொன்னது நீதானா... சொல்... சொல்...

கதிர் said...

//அப்புறம் பதிவைப்பற்றி: என்கிட்ட சொல்லவே இல்லை. அண்ணாச்சி பாடப்போறாரு சொல்லியிருக்க வேணாம். சே! என்ன தம்பி கவுத்திப் புட்டீயளே? ஹூம். நான் கொடுத்து வச்சது அம்புட்டுத்தேன்... என்ன செய்றது??? //

சந்தோஷபடுங்க லொடுக்கு!
அடுத்த முறை சரியா மாட்டி விட்டுடறேன்! :))

கதிர் said...

//அட பாவி இன்னுமய்யா அந்த செங்கல்லை தூக்கிட்டு அலையிறே???? :)//

ஏழக்கேத்த எள்ளுருண்டை
இந்த கதிருக்கேத்த கடல உருண்டை 3310

நேத்து போக்கிரி படம்பார்த்த எபெக்ட்! அதான் பஞ்ச் டயலாக்கா வருது!

கதிர் said...

//ஊத்தப்பா 50 அடிச்சு 50 நிமிடம் ஆச்சு. தம்பி தான் தடுமாறுராரு ரெய்னா மாதிரி.

தம்பி எனி ஹெல்ப்? //

ரெய்னாவே ஜாஸ்தி நம்மளுக்கு :))

கதிர் said...

//சொன்னது நீதானா... சொல்... சொல்... //

நானேதான் நானேதான்...

போலிகள் உருண்டு விளையாடுற அளவுக்கு பெரிய ஆள் இல்லையே நம்ம!

Anonymous said...

நன்றாக எழுதி இருக்கிறீர்!

கதிர் said...

//நன்றாக எழுதி இருக்கிறீர்! //

இது போலி அ.மு.க னு நினைக்கிறேன்! இந்த மாதிரி வாழ்த்தி எல்லாம் கமெண்ட் போட தெரியுமாய்யா?

அவுஸ்திரேலியா கிளையா நீங்க?

லொடுக்கு said...

அங்கே சேப்பாக்கத்துல, நம்ம பசங்க (பேட்ஸ்மென்) குடியரசு தின அணி வகுப்பு நடத்திக்கிட்டு இருக்காய்ங்க. இங்க என்ன பண்ணுதிய தம்பி?

லொடுக்கு said...

இத்தனை அறுமையான பதிவுக்கு இத்தனை குறைவான பின்னூட்டங்களா?

லொடுக்கு said...

இத்தனை அறுமையான பதிவுக்கு இத்தனை குறைவான பின்னூட்டங்களா?

லொடுக்கு said...

இத்தனை அறுமையான பதிவுக்கு இத்தனை குறைவான பின்னூட்டங்களா?

லொடுக்கு said...

இத்தனை அறுமையான பதிவுக்கு இத்தனை குறைவான பின்னூட்டங்களா?

லொடுக்கு said...

இத்தனை அறுமையான பதிவுக்கு இத்தனை குறைவான பின்னூட்டங்களா?

லொடுக்கு said...

தம்பி,
அடித்து ஆடி அணியில் இடம் பிடிக்கும் எண்ணம் ஏதும் உண்டா?

Anonymous said...

//பேரன்பும் மிகப்பேரன்பும் மட்டுமே கொண்டவன்!
//

மெய்யாலுமா?

Anonymous said...

என்ன கேள்வி இது? வலைப்பூவில் பொய் சொல்லும் அளவிற்கு தம்பி இன்னும் வளரவில்லை.

Anonymous said...

என்ன நடக்குது இங்க?

Anonymous said...

அண்ணாச்சியின் வலக்கை தம்பி!
வாழ்க வாழ்க!!

Anonymous said...

தம்பி,
என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலயே!!

Anonymous said...

ஆட வந்துட்டானுங்க ஆட. இதுக்கு எங்க மும்தாஜ் ஆட்டமே பெட்டர்.

Anonymous said...

32---abi appa

Anonymous said...

33 abi appa

Anonymous said...

34

கதிர் said...

//அங்கே சேப்பாக்கத்துல, நம்ம பசங்க (பேட்ஸ்மென்) குடியரசு தின அணி வகுப்பு நடத்திக்கிட்டு இருக்காய்ங்க. இங்க என்ன பண்ணுதிய தம்பி?//

வரிசையா அவுட் ஆகிட்டு போறத இவ்வளவு நகைச்சுவையா சொல்லமுடியுமா?

சூப்பரப்பு!

கதிர் said...

//இத்தனை அறுமையான பதிவுக்கு இத்தனை குறைவான பின்னூட்டங்களா?//

லொடுக்காரே எனக்கு காது கேக்கும்! எதுக்கு இத்தன எக்கோஓஓஒ? :))

கதிர் said...

கேட்பவரே, சொல்பவரே, தெரியாதவரே, முதலாளியே, ரசிகரே,

எல்லாரும் எங்கருந்துய்யா வரிங்க?
ஒரு முடிவோடதான் கெளம்பியிருக்கிங்க போலருக்கு!
:))

கதிர் said...

//அறுமையான//

அருமையான

இன்னும் இந்த ரு, று பிரச்சினை போகலயா உங்களுக்கு?

ஒருவேள இதிலயும் உள்குத்து வெச்சிருக்காங்களோ????

அறு மையான பதிவு :)))

கோபிநாத் said...

அன்பு தம்பி....

கபடி ஆடியிருக்க...

காளையை பார்க்கமால் இருந்திருக்க...

தாமதமா போயிருக்க...

பட்டிமன்றம் பேச்சை கேட்டிருக்க...

கவிதையை ரசிச்சிருக்க...

அண்ணாச்சி பாட்டுக்கு ஆடியிருக்க...

அவுங்க கொடுத்த அரிசியை வாங்கிருக்க...

நண்பர்களிடம் மாட்டியிருக்க..

மொத்தத்துல எல்லாத்தையும் நல்லா அனுபவிச்சிருக்க...

நிறைய தமிழ் உள்ளங்களை பார்த்திருக்க...

அருமையா எழுதியிருக்க...

நிகழ்ச்சியை நடத்திய அண்ணாச்சிக்கும் பதிவு இட்ட உனக்கும் வாழ்த்துக்கள்

கோபிநாத் said...

\\சனி, ஞாயிறு ல பதிவு போட்டா இழுத்துகிட்டுதான் இருக்கும். நம்ம பதிவு திங்கள் கிழமை போட்டாலும் இப்படிதான் இழுக்கும் அது வேற விசயம். அட நாமெல்லாம் பின்னூட்டத்துக்கா பதிவு போடறோம்! ஏதோ நம்மளால முடிஞ்ச பொது தொண்டு!\\

இன்னாது....தொண்ட யாரும் பார்க்கல கலக்குடா சூனா..பானா..

கதிர் said...
This comment has been removed by the author.
╬அதி. அழகு╬ said...

தம்பி,

ரீல் சுத்துறத்துல அண்ணனுக்கு அண்ணனா இருப்பே போலருக்கே!

அங்கே ஆசிப் அண்ணாச்சி பொலம்பித் தீர்க்குறாரு. நீ என்னடான்னா திருவிழா பெருவெற்றின்னு ரீல் சுத்துறே?

கதிர் said...

//ரீல் சுத்துறத்துல அண்ணனுக்கு அண்ணனா இருப்பே போலருக்கே!//

அழகு அண்ணா,

அது ரீல் இல்லிங்ணா, ரியலுங்ணா! எல்லாருக்கும் தம்பிதான் அண்ணன் இல்ல.

//அங்கே ஆசிப் அண்ணாச்சி பொலம்பித் தீர்க்குறாரு. நீ என்னடான்னா திருவிழா பெருவெற்றின்னு ரீல் சுத்துறே?//

கை நனைச்சவனுக்கு எப்படிங்க தெரியும் கல்யாணத்தின் வலி?
நான் சும்மா போய் ஓரமா நின்னு பாத்துட்டு வந்தவன். அவங்க நிகழச்சிய வடிவமைச்சி நடந்தினவங்க! எத்தனை உள்குத்துகளோ, எத்தனை நடுக்குத்துகளோ.

அதான் புலம்பி தீர்த்துட்டாரு.

இது என்னோட பார்வைதான் அதனாலதான் உங்களுக்கு அப்படி தெரியுது.

வருகைக்கு நன்றீங்க அழகு.

என்ன அழகான பெயர்,
ஜமீல் மூன்றெழுத்து
அழகு மூன்றெழுத்து.
தம்பி மூன்றெழுத்து

கதிர் said...

//அன்பு தம்பி....

கபடி ஆடியிருக்க...

காளையை பார்க்கமால் இருந்திருக்க...

தாமதமா போயிருக்க...

பட்டிமன்றம் பேச்சை கேட்டிருக்க...

கவிதையை ரசிச்சிருக்க...

அண்ணாச்சி பாட்டுக்கு ஆடியிருக்க...

அவுங்க கொடுத்த அரிசியை வாங்கிருக்க...

நண்பர்களிடம் மாட்டியிருக்க..

மொத்தத்துல எல்லாத்தையும் நல்லா அனுபவிச்சிருக்க...

நிறைய தமிழ் உள்ளங்களை பார்த்திருக்க...

அருமையா எழுதியிருக்க...

நிகழ்ச்சியை நடத்திய அண்ணாச்சிக்கும் பதிவு இட்ட உனக்கும் வாழ்த்துக்கள் //

எலேய்,
என்னலே குடுத்த காசுக்கு மேல கூவிட்ட?

யாராச்சும் பாத்தா என்ன நினைப்பாங்க?

நான் என்னவோ உனக்கு போன் பண்ணி கமெண்ட் போட சொன்னதா நினைக்க மாட்டாங்க?

சின்ன புள்ளத்தனமால்ல இருக்கு!

கொஞ்சமா கூவனும் புரிதா!

ம்ம்

அது

கதிர் said...

//இன்னாது....தொண்ட யாரும் பார்க்கல கலக்குடா சூனா..பானா.. //

ஒரு வகையில எல்லாருமே சூனா பானா தான்!

நன்றி சூனா, பானா

அபி அப்பா said...

வருங்கால "புதிய துபாய் தமிழ் சங்க" தலைவர் "தம்பி" வாழ்க...வாழ்க.

தம்பி, நா சொல்லி வாய மூடல, அதுக்குள்ள நம்ம ஆசிப் அவர்கள் நொந்து நூலானதை பார்த்தீங்களா? பதிவை படிச்சீங்களா?

அபி அப்பா said...

47ஆ?

அபி அப்பா said...

48ன்னு நெனக்கிறேன்

அபி அப்பா said...

ஒரு வேளை 49ஆ இருக்குமோ?

அபி அப்பா said...

50 தானே!!!!! வாழ்த்துக்கள் தலைவரே

Anonymous said...

போக்கிரி பொங்கலா???

லொடுக்கு said...

whats happening here??

லொடுக்கு said...

இதுதான் பின்னூட்ட போக்கிரித்தனமா?

கதிர் said...

//இதுதான் பின்னூட்ட போக்கிரித்தனமா?//

லொடுக்கு,

ஏன் இந்த ஆவேசம்,
அளவுக்கு அதிகமா பின்னூட்டம் வந்ததில நானே கலங்கி போயிருக்கேன்.
மறுமொழி நிலவரம் வேற தமிழ்மணத்தில தெரியாத கலவரமா இருக்கேன்.

கதிர் said...

அம்பது போட வைத்த குமார் தொல்காப்பியன் வாழ்க!