எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, January 06, 2007

ஓசியில சூனியம் வெச்சிக்கறது இப்படி!!!

கொஞ்ச நாளைக்கு முன்னாடி (மூணு மாசம் இருக்குங்க) வழக்கம்போல
ஒரு விடுமுறை நாளில் ஊர சுத்திட்டு தாமதமா வீட்டாண்ட போனேன்.
கதவை திறக்கறதுக்கு பாத்த வாசப்படில ஒரு அழகான நீலக்கலர் பை
இருக்கு எவனாவது தவற விட்டுட்டு போயிட்டானா, இல்ல வேற ஏதாவது
மேட்டரான்னு ஒண்ணும்புரியாம பிரிச்சிதான் பாத்துடுவோம்னு ஒரு ஆர்வத்துல
பிரிச்சி பாத்துட்டேன்.

அட ஆச்சரியம் எங்க கம்பெனி(DOVE) புதுசா ஒரு ஷாம்பு தயாரிச்சிருக்கு
இதை ஒரு முறை உபயோகிச்சி பாருங்க. முற்றிலும் இலவசம் பின் குறிப்பா
இதை விக்க கூடாதுன்னு போட்டுருந்துச்சி. தோ பார்றா இத்தனை பேரு
இந்த ரூம்ல தங்கி இருக்காங்க நம்ம கண்ணுல மாட்டிடுச்சு ஏதோ நம்க்கும்
லக்கு இருக்கு போலருக்குன்னு நினைச்சிகிட்டே மோந்து பாத்தேன்.
பரவால்ல நல்லாதான் இருக்கு. ஒரு மாசத்துக்கு ஷாம்பு பிரச்சினை இல்ல.
75 மில்லி ஓசில கிடைக்குதே. அதுவும் பிரபலமான கம்பெனி. நாம கீழ
குனிஞ்சி எடுக்கறத வேற எவனாவது பாத்தானான்னு ஒரு நோட்டம்
விட்டேன். எவனும் பாக்கல.

அட இதென்னடா ஆச்சரியமா இருக்குதுன்னு பாத்தா ஒவ்வொரு ப்ளாட்
வாசல்லயும் ஒரு நீலக்கலர் பை இருக்குது. விடிஞ்சி பாத்தா மக்களுக்கு
சர்ப்ரைசா இருக்கும்னு ஒவ்வொரு வீட்டு வாசல்லயும் வெச்சிட்டு
போயிருக்கான். அட கேணப்பசங்களா எவண்டா இந்த மாதிரியெல்லாம்
ஐடியா போடறது? அதுவும் நான் இருக்கற பில்டிங்ல. சரி வெளஞ்சது
வெள்ளாமைன்னு. ரெண்டு ப்ளோர் சுத்தி ஒரு இருவது பை தேறுச்சு.

எல்லாத்தையும் எடுத்திட்டு வந்து ரூம்ல வெச்சிட்டேன். அப்புறம் ஒரு
வாரமா கமகமக்கும் குளியலோட ஒரே சந்தோஷமாதான் போச்சு. அப்புறம்
தான் தெரிஞ்சது நம்மள கேணப் பசங்களாக்கிட்டங்கன்னு. அட அதை
ஏன் கேக்குறிங்க! தலைல கை வெச்சாவே கொத்து கொத்தா முடி
கொட்டுது. ஓசில கெடச்சதுன்னு கொஞ்சம் ஓவராதான் விளையாடிட்டோமோ?
அப்படின்னு ஒரு யோசனை. சரி இது வேலைக்காகாதுன்னு தூக்கி தூர
வெச்சிட்டேன். கொஞ்சநாள் உபயோகிக்காம இருந்ததுல கொஞ்சம்
முடி கொட்றது கொறஞ்சிடுச்சி. ஆஹா விளம்பரன்ற பேர்ல சொட்டையாக்க
பாத்தானுங்களே. நல்ல வேளை சுதாரிப்பா இருந்ததால தலைக்கு வந்தது
தலை முடில கொஞ்சம் தூக்கிடுச்சி.

என்ன மாதிரி வலை விறிக்கறானுங்க இந்த கம்பெனிகாரனுங்க. அன்னிக்கு நாம
எடுத்தது ரெண்டு ப்ளோர்ல மட்டும்தான் இன்னும் அஞ்சு ப்ளோர்ல எடுக்கலன்னா
அந்தந்த வீட்டுக்காரனுங்களேதான் எடுத்து யூஸ் பண்ணியிருப்பாங்க ஒருவேளை
அவங்களுக்கும் முடி கொட்டுதான்னு பாத்தேன் ஒண்ணும் புரிஞ்சிக்க முடியல.

சரி நம்மள டெஸ்ட் பண்ணிகிட்ட மாதிரி நாம யாரயாச்சும் பண்ணிறனும். நம்ம
பில்டிங் வாட்ச்மேன் சுல்தான் அவர்மேல பாய்ச்சிற வேண்டியதுதான். ச்ச்சே
வேணாம் ஏற்கனவே பாதி வழுக்கை, மேல பாவம் சேக்க வேணாம். சரி
சோதனைன்னு வந்துட்ட பிறகு வேதனைக்கு இடமில்லன்னு முடிவெடுத்தேன்.
என்ன சுல்தான் பாய் தலையெல்லாம் சிக்கு புடிச்சா மாதிரி இருக்கே , ஷாம்பு
போட்டு குளிக்கறதில்லயான்னு ஒரு பிட்டை போட்டேன். இல்லிங்க தம்பி
எப்படி குளிச்சாலும் இப்படிதான் இருக்கு ஒண்ணும் பண்ணிக்க முடிலன்னாரு.

நம்மகிட்ட ஒரு ஷாம்பு கெடச்சிருக்கு சூப்பரா இருக்கும் போட்டு
பாருங்க சும்மா கலகலன்னு ஆயிடும்னேன். எங்க குடுங்க பாப்போம்னாரு
நானும் கொண்டு போய் குடுத்தேன். சிரிச்சிகிட்டே அட இதுவா தம்பி
இது என்கிட்ட ஏற்கனவே நிறைய இருக்கு அதோ அங்க பாருங்க அங்க
அடுக்கி வெச்சிருக்கேன்னாரு. "சூப்பர் மாட்கெட்ல" அடுக்கி வெச்ச மாதிரி
அடுக்கி வெச்சிருக்காரு. ஆஹ்ஹா மீதி மூணு ப்ளோர்ல இந்தாளுதான்
சுட்டுருக்கான் போலருக்கு. நல்லா இருசாமின்னு வாழ்த்தி வந்துட்டேன்.
ச்சே எஸ்கேப் ஆயிட்டாரே. சரி அடுத்த ஆள பாக்க வேண்டியதுதான்

இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலைலதான் நம்மள பாக்க நண்பர் ஒருத்தர்
வந்தாரு. வந்தவர வெறுங்கையோட அனுப்பக்கூடாதுன்னு ரெண்டு ஷாம்பு
டப்பா குடுத்தேன். அவரும் கொழப்பத்தோட வாங்கிட்டு போயிட்டாரு.

ரெண்டு வாரம் கழிச்சி போன் பண்ணாரு அருமை நண்பர்.

எலேய் நாதாறி! என்ன எழவு ஷாம்புடா அது? என் தலைல பாதி முடி
கொட்டிடுச்சி. நான் உனக்கு என்னடா பாவம் பண்ணேன். எனக்கு
இன்னும் கல்யாணம் கூட ஆகல இப்பதான் பொண்ணு போட்டொ
அனுப்பியிருக்காங்க. இப்படி பண்ணிட்டியேடான்னு.

Photobucket - Video and Image Hosting

அது இல்லிங்க நண்பா! க்ளைமேட் சேஞ்ச் ஆச்சில்ல அதான் முடி கொட்டுது
போலருக்குன்னேன்.

அந்த வெண்ணெ எங்களுக்கும் தெரியும்னு சொல்லிட்டு அடுத்து நான் பேச
வாயெடுக்ககும்போதே போன கட் பண்ணிட்டாரு.

நம்ம "தல"ய விட அவர் "தல" ரொம்ப வீக்கா இருக்குமோ!

எது எப்படியோ கெட்ட ஷாம்புன்னு உறுதியாகிடுச்சி! சுத்து வட்டத்து
மக்கள உஷார் பண்ணிறணும்.

இந்த சம்பவம் என்ன சொல்லுதுன்னா! கண்ட கண்ட ஷாம்பு போட்டு
முடிய கெடுத்துக்காதிங்க. மீரா சீகைக்காய் உபயொகப்படுத்துங்க.
பாதிக்கப்பட்டவன் நான் சொல்றேன்.

திஸ்கி : இன்னும் ரெண்டு மூணு ஷாம்பு மிச்சமிருக்கு வேணுன்றவங்க
பின்னூட்டதில் தெரிவிக்கலாம். :))))

55 comments:

சேதுக்கரசி said...

உங்க ஊர்ல எப்படியோ தெரியல.. அமெரிக்கால Dove ஷாம்பூ பத்தி இப்படியெல்லாம் கேள்விப்பட்டதில்லை. டுபாக்கூர் கம்பெனியா இருக்குமோ? இப்படித்தான் இந்தியால மேகி நூடுல்ஸ்னு சொல்லாம சொல்லி வீடு வீடாப் போய் நூடுல்ஸ் வித்துக்கிட்டிருந்தாங்க சமீபத்துல. சமைச்சுப் பார்த்தா வாய்க்கு விளங்கலையாம். அப்புறம் பார்த்தா, அது மேகி "மாதிரி"யாம். நான் வாங்கல. கேள்விப்பட்டது தான்.

Anonymous said...

இங்க ரெண்டு மூனு பேர் ஃபுல் மண்டையோடு சுத்திட்டு திரியரானுங்க... அப்படி திரிஞ்சாலும் பரவாயில்ல.. நம்ம முன்னால, முடிய தூக்கிவிட்டு நம்மள சீண்டுறானுங்க.

அதுனால, எனக்கு 5 பாக்கெட் பார்ர்ர்சல்...

கோபிநாத் said...

ஆஹா...

இதுக்கு தான் வீட்டுக்கு வா..வான்னு கூப்பிட்டியா..:))

கைப்புள்ள said...

அடப்பாவி! அழகிய நெடிய கருங்கூந்தல் உள்ள ஆண்களை எல்லாம் சொட்டையாக்குவேன்னு ஒரு குரூப் கெளம்பியிருக்கே...அந்த குரூப்போட தலைவன தானா நீயு? துபாய்ல சும்மா சுத்திட்டிருக்கேன், என்னை பத்தி சொல்றதுக்கு ஒன்னுமில்லைன்னு சொல்லும் போதே நெனச்சேன் எலி ஏன் அம்மணமா போவுதுன்னு?

//அட ஆச்சரியம் எங்க கம்பெனி(DOVE) புதுசா ஒரு ஷாம்பு தயாரிச்சிருக்கு
//

Dove கம்பெனியில தான் வேலை செய்யறியா நீயு? ஆஹா...பாத்துக்கங்க மகாஜனங்களே சும்மா சுத்திட்டிருக்கேன்னு பொய் சொன்னவரு டவ் கம்பெனியோட துபாய் வட்டத் தலைவரு...

//திஸ்கி : இன்னும் ரெண்டு மூணு ஷாம்பு மிச்சமிருக்கு வேணுன்றவங்க
பின்னூட்டதில் தெரிவிக்கலாம். :))))//

எல்லாத்தையும் செஞ்சிப்புட்டு ஒனக்குச் சிரிப்பு வேற? ஒன்னையெல்லாம் துபாய் மாமா கிட்ட போட்டுக் குடுத்து லாடம் கட்டுனா தான் சரிப்படுவே!

Karthikeyan said...

:))))))

dondu(#11168674346665545885) said...

"மீரா சீகைக்காய் உபயோகப்படுத்துங்க."

அது கிடைக்கவில்லையென்றால்?

(விவேக் குரலில்) குளிக்காதே!!!!!

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

மீரா சீக்கக்காயை ப்ரோமோட் பண இதுவும் ஒரு வழியா தம்பி??

Machi said...

:-))))

இலவசக்கொத்தனார் said...

இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி பதிவு போடறீங்க. ம-- போச்சுன்னு விட்டுட்டு போவீங்களா....

(அப்பத்தானே நம்மள மாதிரி ஆளுக்கு கொஞ்சம் கூட்டம் சேர்க்க முடியும்.)

Anonymous said...

/அட கேணப்பசங்களா எவண்டா இந்த மாதிரியெல்லாம்
ஐடியா போடறது? அதுவும் நான் இருக்கற பில்டிங்ல. சரி வெளஞ்சது
வெள்ளாமைன்னு. ரெண்டு ப்ளோர் சுத்தி ஒரு இருவது பை தேறுச்சு./

வெள்ளாமை எங்க வெளஞ்சது? அறுவடையில்ல நடந்திருக்கு??? :))

ஒரு விளம்பரம் :

உடல் ஆரோக்கியத்திற்கும், கேசப் பராமரிப்புக்கும் உபயோகப்படுத்துவீர் மெடிமிக்ஸ்!!!

லொடுக்கு said...

இதைத் தான் தெரியாத்தனமா நம்ம ஷேவாக் தேய்ச்சிருப்பானோ!!

//இந்த சம்பவம் என்ன சொல்லுதுன்னா! கண்ட கண்ட ஷாம்பு போட்டு
முடிய கெடுத்துக்காதிங்க. மீரா சீகைக்காய் உபயொகப்படுத்துங்க.
பாதிக்கப்பட்டவன் நான் சொல்றேன்.
//

ஆஹா! சந்தடி சாக்குல மீராவுக்கு விளம்பரமா??

நல்ல நகைச்சுவைப் பதிவு தம்பி.

Anonymous said...

தம்பி, சாரி..நாந்தான் காரணம்.உங்ககிட்ட மறச்சிட்டேன். உங்க கராமா ஏரியா குங்குமம் எஜன்ட் நான் தான்....சரி நான் தான் பர்ஷ்டு...

Anonymous said...

நான் ஒரு ட்யூப்லைட்...இது இலவச விளம்பர இடமா? தெரியாம போச்சே....சரி.."ரமணா's சத்து மாவு" சாப்டுங்க..சரியாயிடும்.(மாவான்னு கேக்கப்டாது)

கதிர் said...

//உங்க ஊர்ல எப்படியோ தெரியல.. அமெரிக்கால Dove ஷாம்பூ பத்தி இப்படியெல்லாம் கேள்விப்பட்டதில்லை. டுபாக்கூர் கம்பெனியா இருக்குமோ? இப்படித்தான் இந்தியால மேகி நூடுல்ஸ்னு சொல்லாம சொல்லி வீடு வீடாப் போய் நூடுல்ஸ் வித்துக்கிட்டிருந்தாங்க சமீபத்துல. சமைச்சுப் பார்த்தா வாய்க்கு விளங்கலையாம். அப்புறம் பார்த்தா, அது மேகி "மாதிரி"யாம். நான் வாங்கல. கேள்விப்பட்டது தான். //

அவங்க கம்பெனி விளம்பரத்துக்கு பொது மக்களை எலி மாதிரி உபயோகப்படுத்துவது சரியில்லன்னு சொல்ல வரேங்க!

பொத்தாம்பொதுவா இந்த மாதிரி ஷாம்புவே போடக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். அதுவும் ஓசில கிடைக்குதேன்னு தவ்விபோய் எடுக்கறது இத்தோட நிப்பாட்டிக்கணும்.

மொத போணி பண்ணியிருக்கிங்க சேதுக்கரசி அவர்களே.

வருகைக்கு நன்றி!!

கதிர் said...

//ஆஹா...

இதுக்கு தான் வீட்டுக்கு வா..வான்னு கூப்பிட்டியா..:))//

வாங்க அண்ணாத்த!

உங்களுக்கு வேற மேட்டர் வச்சிருக்கேன். துபாய்க்கு வரும்போது சொல்றேன்.

கதிர் said...

//அடப்பாவி! அழகிய நெடிய கருங்கூந்தல் உள்ள ஆண்களை எல்லாம் சொட்டையாக்குவேன்னு ஒரு குரூப் கெளம்பியிருக்கே...அந்த குரூப்போட தலைவன தானா நீயு? துபாய்ல சும்மா சுத்திட்டிருக்கேன், என்னை பத்தி சொல்றதுக்கு ஒன்னுமில்லைன்னு சொல்லும் போதே நெனச்சேன் எலி ஏன் அம்மணமா போவுதுன்னு? //

தல அந்த மாதிரி புண்ணிய காரியெமெல்லாம் மல்டிநேஷனல் கம்பெனிகாரனுங்க பாத்துகிடுவாங்க.
தொண்டர் ரேஞ்சி இல்லாத என்னை தலைவன் அளவுக்கு பீல் பண்ண நீங்க மெய்யாவே தலதான்.

அதுசரி எந்த ஊர்ல எலி ஜீன்ஸ் பேண்ட் போட்டுட்டு போயிருக்கு?
எலி வித்தவுட்டாதான் போவும்.

//Dove கம்பெனியில தான் வேலை செய்யறியா நீயு? ஆஹா...பாத்துக்கங்க மகாஜனங்களே சும்மா சுத்திட்டிருக்கேன்னு பொய் சொன்னவரு டவ் கம்பெனியோட துபாய் வட்டத் தலைவரு...//

தல மிஸ்டேக் ஆகிப்போச்சு எங்க பில்டிங்னு போடறதுக்கு எங்க கம்பெனின்னு வந்துருச்சி. சாரி தல.
வயசானாலும் கண்ணு தெளிவா தெரியுதே!!! :)))

துபாய் மாமாவுக்கெல்லாம் நிறைய வேலை இருக்கு. இதுல என்னையெல்லாம் பிடிப்பாங்களா?
இருந்தாலும் எம்மேல இம்புட்டு பாசம் வைக்க கூடாது!

கதிர் said...

நன்றி கார்த்திக்!


//மீரா சீகைக்காய் உபயோகப்படுத்துங்க."

அது கிடைக்கவில்லையென்றால்?

(விவேக் குரலில்) குளிக்காதே!!!!!

அன்புடன்,
டோண்டு ராகவன் //

இது கூட நல்ல ஐடியாவா இருக்கே! :))

வருகைக்கு நன்றி டோண்டு அய்யா!

கதிர் said...

//மீரா சீக்கக்காயை ப்ரோமோட் பண இதுவும் ஒரு வழியா தம்பி??//

வாங்க மை ப்ரெண்ட்!

நிறைய பேர் சொல்லியிருக்காங்க! அதுதான் கேசத்துக்கு ஆரோக்கியமானதுன்னு. இனிமேல எதையும் போடறதா இல்ல!

கதிர் said...

நன்றி குறும்பன்! நம்ம பொழப்பு சிரிப்பா சிரிக்குது!!

//இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி பதிவு போடறீங்க. ம-- போச்சுன்னு விட்டுட்டு போவீங்களா....//

விட முடியலிங்க கொத்ஸ்! கண்ணாடி பாக்கும்போதெல்லாம் கண்ணுல தண்ணி வருது!

நம்ம மக்கள எச்சரிக்கை பண்ணலாம்னு ஒரு நல்லெண்ணம் மத்தபடி பதிவு கயமைன்னு நினைக்க மாட்டிங்கல்ல!!!

//(அப்பத்தானே நம்மள மாதிரி ஆளுக்கு கொஞ்சம் கூட்டம் சேர்க்க முடியும்.)//

இன்னும் அந்த கேட்டகிரிக்கு வரலங்க! :)))

கதிர் said...

//(அப்பத்தானே நம்மள மாதிரி ஆளுக்கு கொஞ்சம் கூட்டம் சேர்க்க முடியும்.)//

உங்களுக்கு குசும்பு ஜாஸ்திங்க அருள்!
:))

மெடிமிக்ஸ் கூட நல்லதுதான். அந்த சோப் போட்டு குளிச்சாங்கன்னா வியாதி புடிச்சவன்னு நம்ம மக்கள் சொல்லுவாங்க!

கதிர் said...

//இதைத் தான் தெரியாத்தனமா நம்ம ஷேவாக் தேய்ச்சிருப்பானோ!!//

வாங்க லொடுக்கு!

வாய்ப்பிருக்கு! சமீபத்துல அந்த விளம்பரத்துல நடிச்சிருக்கலாம் யாரு கண்டா?

//ஆஹா! சந்தடி சாக்குல மீராவுக்கு விளம்பரமா??//

வேதனைங்க :((

//நல்ல நகைச்சுவைப் பதிவு தம்பி.//

மிக்க நன்றி!

கதிர் said...

//தம்பி, சாரி..நாந்தான் காரணம்.உங்ககிட்ட மறச்சிட்டேன். உங்க கராமா ஏரியா குங்குமம் எஜன்ட் நான் தான்....சரி நான் தான் பர்ஷ்டு...//

நீங்கதானா அது??
நல்லா இருங்க சாமி! அடுத்த தபா உஷார் பண்ணிருங்க! எஸ்கேப் ஆயிடறேன்!

நீங்க 1 இல்ல 11 (டபுள்ஸ்)

கதிர் said...

//நான் ஒரு ட்யூப்லைட்...இது இலவச விளம்பர இடமா? தெரியாம போச்சே....சரி.."ரமணா's சத்து மாவு" சாப்டுங்க..சரியாயிடும்.(மாவான்னு கேக்கப்டாது)//

அது என்னாது ரமணா சத்து மாவு! கேள்விப்பட்டதே இல்லயே! அது சாப்பிட்டா புள்ளிவிவரமா கணக்கு சொல்லலாமா? இல்ல செவுத்துல கால வெச்சி உதைக்கலாமா? :)))

Unknown said...

ஜபல் அலியில சாப்பிட போகும்போது குட்டியா ஒரு Dove சோப்பு குடுத்தாங்க தம்பி.
வாங்கி வச்சிட்டு மறந்துட்டேன். இப்போ என்ன செய்யலாம்? பயமா இருக்கு!
உங்களுக்கு அனுப்பவா? ட்ரை பண்ணிட்டு சொல்றியளா?

சேதுக்கரசி said...

//பொத்தாம்பொதுவா இந்த மாதிரி ஷாம்புவே போடக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்.//

ஆமா, தலைல முடி இருந்தா தானே ;-)

கதிர் said...

வாங்க சுல்தான்!

நீங்க வேற பீதிய கெளப்பறிங்களே!

சேதுக்கரசி!
ரொம்ப சந்தோஷபடாதிங்க!
அந்தளவுக்கு இன்னும் ஆகலை! சுதாரிப்பா இருப்போம்ல!

Anonymous said...

//அது என்னாது ரமணா சத்து மாவு! கேள்விப்பட்டதே இல்லயே! அது சாப்பிட்டா புள்ளிவிவரமா கணக்கு சொல்லலாமா? இல்ல செவுத்துல கால வெச்சி உதைக்கலாமா? :))) //

அது தெரியாது..ஆனா என் குடும்பமும்+78 குடும்பங்களும் இன்னும் செழிப்பா இருக்கும்...

ரவி said...

கலக்கல் போஸ்ட்...!!!!!!

கதிர் said...

தொல்.குமார்

ஒண்ணுமே பிரில!

நன்றி செந்தழல் ரவி!

Anonymous said...

naan muntha naal potta comment inge prasuramaahaathathaal naan intha postai purakkanikiren...

Anonymous said...

கதிர்,

என்னாப்பா உனக்கு அதுக்குள்ளே தலைமுடி கொட்டிருச்சா???

ஒனக்குன்னு ஊருக்குள்ளே அப்புத்தா பொண்ணு பார்த்து வைச்சிருக்கேன்னு எனக்கு இமெயிலு போட்டு விட்டுச்சுப்பா....

ஐயோ அந்த பொண்ணோட கதி....??????

கதிர் said...

//இங்க ரெண்டு மூனு பேர் ஃபுல் மண்டையோடு சுத்திட்டு திரியரானுங்க... அப்படி திரிஞ்சாலும் பரவாயில்ல.. நம்ம முன்னால, முடிய தூக்கிவிட்டு நம்மள சீண்டுறானுங்க.

அதுனால, எனக்கு 5 பாக்கெட் பார்ர்ர்சல்...//

அதனாலென்ன அனுப்பிட்டா போச்சு!
குறுக்கு சந்துக்கு பின்னால வாங்க அங்க வந்து சிகப்பு சட்டை போட்டவங்கிட்ட இன்னிக்கு ரோஜா பூக்குமான்னு கேளுங்க!

அப்பால தெரியும் சேதி!!!!!

//naan muntha naal potta comment inge prasuramaahaathathaal naan intha postai purakkanikiren...//

அய்யயோ ஜி கோவிச்சிக்காதிங்க ஜி

வழக்கமா நமக்கு நாலஞ்சு பின்னூட்டம்தான் வரும். இந்த பதிவுக்கு ஒரு மெயில்ல பத்து கமெண்ட் வந்துச்சி பப்ளிஸ் பண்றது கண்பிஸ் ஆச்சி ஜி!

கதிர் said...

//ஒனக்குன்னு ஊருக்குள்ளே அப்புத்தா பொண்ணு பார்த்து வைச்சிருக்கேன்னு எனக்கு இமெயிலு போட்டு விட்டுச்சுப்பா....//

எங்க அப்பத்தா மயிலே பாத்ததில்ல உங்களுக்கு மெயில் அனுப்புச்சாக்கும்!

கடேசி வரைக்கும் நானெல்லாம் சுயேச்சை எம்.எல்.ஆ தான்

Anonymous said...

//கடேசி வரைக்கும் நானெல்லாம் சுயேச்சை எம்.எல்.ஆ தான் //

ஏலே, கிழவி உம்மேலே எம்புட்டு ஆசையா, பாசமா இருக்குன்னு சொன்னாக்கே திரும்ப நக்கலா பண்ணுறே???

எல்லாம் சீமைலே தனியாளா திரியுறோமின்னு மமதை.....

Santhosh said...

//சரி வெளஞ்சது
வெள்ளாமைன்னு. ரெண்டு ப்ளோர் சுத்தி ஒரு இருவது பை தேறுச்சு.//

எலேய் தம்பி ஆனாலும் இது ஓவருலே.. சுத்தி சுத்தி இல்ல எடுத்து இருக்கீங்க. என்னமோபோ நம்ம கொத்தனாரு சொன்னது மாதிரி போனா போகட்டும் அப்படின்னு விட்டுடவேண்டியது தான்.

நாமக்கல் சிபி said...

அடப்பாவீஈஈஈஈஈஈஈஈஈஈஈ..............

ஏன் உனக்கு இந்த கொல வெறி??? அடுத்தவன் நல்லா இருக்கறதுல அப்படி என்ன பொறாமை உனக்கு???

இப்படி பண்ணா அந்த பாவத்துலயே உனக்கு சீக்கிரம் எல்லா முடியும் கொட்டிடும்...

இப்படி எல்லாம் சொல்லலாம்னு பார்த்தா தெரிஞ்ச பையனா போயிட்டயேனு போனா போகுதுனு விட்டுடலாம்னு பார்த்தேன். இருந்தாலும் ஒரு கன்னி பையனோட சாபத்தை நீ சம்பாதிச்சிக்கிட்ட. அதனால நிச்சயம் உனக்கு சீக்கிரமே எல்லா முடியும் கொட்ட போகுது பாரு...

நாகை சிவா said...

ப்ரீயா கிடைச்சா பினாயில் ஒரே மொடக்குல குடிக்குற ஆளு என்பது சரியா தான் அப்பு இருக்கு......

நாகை சிவா said...

ஏனய்யா, எங்க கம்பெனி என்று தவறா டைப் பண்ணி அதை தல பார்த்து சொல்லியும் திருத்தாம வச்சு இருக்கியே, அதுக்கு என்ன அர்த்தம். பயம் விட்டு போச்சுனு தானே அர்த்தம். ரத்தம் காட்டினா தான் நீ சரியா வருவ போல இருக்கு... சீக்கிரம் ஆவண செய்துட வேண்டியது தான்.......

நாகை சிவா said...

//இருந்தாலும் ஒரு கன்னி, பையனோட சாபத்தை நீ சம்பாதிச்சிக்கிட்ட. //

வெட்டி இதுல அந்த பையன் யாரா இருந்தாலும் பரவாயில்லை. அந்த கன்னி யாருனு கொஞ்சம் சொல்லேன்....

கதிர் said...

//ஏலே, கிழவி உம்மேலே எம்புட்டு ஆசையா, பாசமா இருக்குன்னு சொன்னாக்கே திரும்ப நக்கலா பண்ணுறே???

எல்லாம் சீமைலே தனியாளா திரியுறோமின்னு மமதை..... //

எங்கிழவி என்ன என்னென்ன இம்சை பண்ணுச்சின்னு ஒரு தனி பதிவே போடலாம். பொது நலன் கருதி வேனாம்னு விடறேன்!

சீமையில இருக்கறவன் என்னான்ன லோல்படறான்னு தெரியாது உங்களுக்கு அதான் இப்படி அப்பாவித்தனமா கேக்கறிங்க!

சரி போனா போகுது, தெரியாம பேசிட்டிங்க! :))

நாமக்கல் சிபி said...

//வெட்டி இதுல அந்த பையன் யாரா இருந்தாலும் பரவாயில்லை. அந்த கன்னி யாருனு கொஞ்சம் சொல்லேன்....//

புலி,
தம்பியே இதுக்கு பதில் சொல்லுவார் :-)

கதிர் said...

//எலேய் தம்பி ஆனாலும் இது ஓவருலே.. சுத்தி சுத்தி இல்ல எடுத்து இருக்கீங்க. என்னமோபோ நம்ம கொத்தனாரு சொன்னது மாதிரி போனா போகட்டும் அப்படின்னு விட்டுடவேண்டியது தான்.//

அதான் ஓவரா போச்சின்னு சொல்றேன்ல! நீங்களும் அதையே சொல்லுறிங்களே!
சுத்தி சுத்தி எடுத்ததுதான் இப்ப வினையா போச்சி!

கண்கெட்ட பிறகு சூரிய....

நாமக்கல் சிபி said...

//நாகை சிவா said...

ஏனய்யா, எங்க கம்பெனி என்று தவறா டைப் பண்ணி அதை தல பார்த்து சொல்லியும் திருத்தாம வச்சு இருக்கியே, அதுக்கு என்ன அர்த்தம். பயம் விட்டு போச்சுனு தானே அர்த்தம். ரத்தம் காட்டினா தான் நீ சரியா வருவ போல இருக்கு... சீக்கிரம் ஆவண செய்துட வேண்டியது தான்....... //

ரிப்பீட்டு...

மக்கா எல்லாரும் சீக்கிரம் இங்க வாங்க... ஒருத்தன் நம்ம தலயையே அவமானப்படுத்திட்டான்...

கதிர் said...

//அடப்பாவீஈஈஈஈஈஈஈஈஈஈஈ..............

ஏன் உனக்கு இந்த கொல வெறி??? அடுத்தவன் நல்லா இருக்கறதுல அப்படி என்ன பொறாமை உனக்கு???

இப்படி பண்ணா அந்த பாவத்துலயே உனக்கு சீக்கிரம் எல்லா முடியும் கொட்டிடும்...

இப்படி எல்லாம் சொல்லலாம்னு பார்த்தா தெரிஞ்ச பையனா போயிட்டயேனு போனா போகுதுனு விட்டுடலாம்னு பார்த்தேன். இருந்தாலும் ஒரு கன்னி பையனோட சாபத்தை நீ சம்பாதிச்சிக்கிட்ட. அதனால நிச்சயம் உனக்கு சீக்கிரமே எல்லா முடியும் கொட்ட போகுது பாரு... //

எம்மேல எம்பூட்டு பாசம் வெச்சிருக்கேன்னு இப்பதாம்ல தெரியுது!

வந்த பின்னாடியும் காப்போம்னு ச்சொல்ற மாதிரி இப்ப நான் ஆயுர்வேதிக் சமாசாரத்துக்கு மாறிட்டோம்ல!

தலைக்கு தண்ணி கூட காட்டறதில்லன்னு சபதம் எடுத்துருக்கோம்ல!

கதிர் said...

//ப்ரீயா கிடைச்சா பினாயில் ஒரே மொடக்குல குடிக்குற ஆளு என்பது சரியா தான் அப்பு இருக்கு......//

தேங்க்ஸ் தலைவா! இந்த பட்டத்தை எனக்களித்த தானைதலைவன் தன்னிகரில்லாத புலி சிவாவிற்கு இந்த பதிவு சமர்ப்பணம் :)))!

அண்ணாத்த போன தபா பாக்கசொல்ல உங்க தலைல தோணி லெவல்ல முடி இருந்துச்சி பாத்தேன். அடுத்த தபா பாக்கசொல்லோ சேவாக் மாதிரி வளர்ச்சி இருக்கணும் ஆமா சொல்லிபுட்டேன்.!

கதிர் said...

//ஏனய்யா, எங்க கம்பெனி என்று தவறா டைப் பண்ணி அதை தல பார்த்து சொல்லியும் திருத்தாம வச்சு இருக்கியே, அதுக்கு என்ன அர்த்தம். பயம் விட்டு போச்சுனு தானே அர்த்தம். ரத்தம் காட்டினா தான் நீ சரியா வருவ போல இருக்கு... சீக்கிரம் ஆவண செய்துட வேண்டியது தான்....... //

அட ஆச்சரியம் எங்க கம்பெனி(DOVE) புதுசா ஒரு ஷாம்பு தயாரிச்சிருக்கு
இதை ஒரு முறை உபயோகிச்சி பாருங்க. முற்றிலும் இலவசம் பின் குறிப்பா
இதை விக்க கூடாதுன்னு போட்டுருந்துச்சி.

அந்த கம்பெனியே சொல்ற மாதிரி படிச்சி பாருய்யா புரியும்!

நல்லா கெளப்புராங்கய்யா பீதிய!

கதிர் said...

//வெட்டி இதுல அந்த பையன் யாரா இருந்தாலும் பரவாயில்லை. அந்த கன்னி யாருனு கொஞ்சம் சொல்லேன்.... //

ஏன் ஜொள்ள மாட்ட, நீ இதுவும் ஜொள்ளுவே இதுக்கு மேலயும் ஜொள்ளுவே! ஏன்னா நீ இப்ப இருக்கற இடம் அப்படி!

நல்லா இருலே!

நாமக்கல் சிபி said...

//அட ஆச்சரியம் எங்க கம்பெனி(DOVE) புதுசா ஒரு ஷாம்பு தயாரிச்சிருக்கு
இதை ஒரு முறை உபயோகிச்சி பாருங்க.//

எலேய் தம்பி,
எந்த கம்பெனியிலையாவது அவுங்க கம்பெனி ஒரு பொருள் தயாரிக்கிறது ஆச்சரியம்னு போடுவாங்களா???

இது எப்படி அவுங்க போட்ட மாதிரி படிச்சி பாக்கறது???

கதிர் said...

//புலி,
தம்பியே இதுக்கு பதில் சொல்லுவார் :-) //

உன்னோட பெருந்தன்மையே பெருந்தன்மைதான்!

//ரிப்பீட்டு...

மக்கா எல்லாரும் சீக்கிரம் இங்க வாங்க... ஒருத்தன் நம்ம தலயையே அவமானப்படுத்திட்டான்... //

எப்படா.. எப்படான்னு காத்துகிட்டு இருப்பாய்ங்க போலருக்கு!

நாமக்கல் சிபி said...

50 :-)

கதிர் said...

//50 :-) //

51 :-))

கப்பி | Kappi said...

:))

'தலை' மகனே கலங்காதே... வழுக்கை கண்டு மயங்காதே!!
உன் மண்டை சொட்டை தானடா..உன் மண்டை சொட்டை தானடா!! :))

அரை பிளேடு said...

சும்மா கிடச்சிச்சி ஒரு ஷாம்பு.
யூஸ் பண்ணா வச்சது ஆப்பு.
காலியாச்சி பாரு நம்ம டாப்பு.
தலையில அங்கங்க இப்ப கேப்பு.

நீதி:
ஃப்ரியா கடிக்கிற எதுவும் ஃப்ரீ கடியாது.

:))

Anonymous said...

ஒஓ நோ..
பாவங்க நீங்க..
ஆனாலும் புத்திசாலி...முழுதாக மொட்டையாகாமல் தப்பிட்டிங்க...ஹி ஹி ஹி

கதிர் said...

//'தலை' மகனே கலங்காதே... வழுக்கை கண்டு மயங்காதே!!
உன் மண்டை சொட்டை தானடா..உன் மண்டை சொட்டை தானடா!! :)) //

ஸ்மைலி போட்டாலும் எனக்கு புரியுது!
எலேய் இது ஆரம்ப நிலைலதான் இருக்கு அதுக்கு முன்னாடி நீயே முடிவு பண்ணிடாத!

//சும்மா கிடச்சிச்சி ஒரு ஷாம்பு.
யூஸ் பண்ணா வச்சது ஆப்பு.
காலியாச்சி பாரு நம்ம டாப்பு.
தலையில அங்கங்க இப்ப கேப்பு.

நீதி:
ஃப்ரியா கடிக்கிற எதுவும் ஃப்ரீ கடியாது.//

அ.பி
வர வர காதல் கவுஜ எல்லாம் எழுதறிங்களாம். ஆணீயம், வாதம்னெல்லாம் பேசிக்கறாங்களே!
அவங்களுக்கு இந்த மாதிரி ஆகியிருந்தா என்ன பண்ணியிருப்பாங்க!


ரெம்ப தேங்கீஸ் தூயா! :))
:))