எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, March 17, 2007

வறட்டி தட்டுவது எப்படி??

டிஸ்கி: இந்த பதிவு ஒரு கடுமையான உவ்வ்வே பதிவு. கிராமத்தில பிறந்து
வளர்ந்தவங்களுக்கு இது சாதாரணமா தெரிந்தாலும். நகரத்தில் பிறந்து வளர்ந்து
வந்தவங்களுக்கு பயங்கர அதிர்ச்சியா இருக்கும். அதனால டிஸ்கி படிச்சிட்டு
டிமிக்கி கொடுத்துட்டு ஓடி விடவும். மீறி எதையும் தாங்கும் இதயம்னு படிக்க
ஆரம்பிச்சிங்கன்னா நீங்க மகா தெகிரியசாலி.

இப்ப நாம வறட்டி தட்டுவது எப்படின்னு பார்க்கலாம்.

கேஸ், மின்சார அடுப்பு இதெல்லாம் வந்துட்ட காலத்துலயும் எதுக்குடா வறட்டிய
தூக்கிட்டு திரியறிங்கன்னு நீங்க கேக்கலாம். எல்லா வசதியும் இருக்கற இந்த்
காலத்துலயும் வறட்டியின் தேவை இருந்துகிட்டுதான் இருக்கு. அதனால அதை
எப்படி செய்யிறது என்று இந்த "எப்படி" பதிவில் பார்ப்போம்.

அதிகாலையில் எழுந்து மாட்டு கொட்டாயிக்கு போய் அங்க இருக்குற சாணி
எல்லாம் பொறுக்கி வீட்டு காம்பவுண்ட் சுவரு கிட்ட கொட்டணும். இது உங்கள்
உடலுக்கு நல்ல உடற்பயிற்சியும் கூட.

கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துகிட்டு ஓரு 8 மணி வாக்குல வைக்கோல் கொஞ்சம்
எடுத்துகிட்டு போய் அந்த சாணியுடன் கலக்கணும். கலக்கும்போது ஈசியா
இருக்கணும்னா சாணியுடன் கொஞ்சம் தண்ணி மிக்ஸ் பண்ணிக்கணும். இந்த
வேலை ஒரு பதினஞ்சி நிமிடம் எடுக்கும்.

கலந்ததுக்கு அப்புரம், அந்த கலவைய நல்லா ரெண்டு கைல பத்தற மாதிரி
உருண்டை உருண்டையா செஞ்சி அந்த காம்பவுண்ட் சுவருல தட்டணும்.
ஒவ்வொரு வறட்டியும் ஆறு இஞ்ச்க்கும் மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இல்லன்னா ஒடச்சி யூஸ் பண்ண வேண்டியதா இருக்கும். செவுத்தலயே ரெண்டு
நாளைக்கு காயட்டும்னு விட்டிங்கன்னா அருமையான வறட்டி ரெடி. இதை
நீங்க அடுப்பெரிக்க யூஸ் பண்ணிக்கலாம்.

வேலையெல்லாம் முடிச்சிட்ட பிறகு உங்களுக்கு டயர்டா இருக்கும். போய்
டீ, டிபன் சாப்பிட்டு விட்டு அடுத்த மேட்சுக்கு தயாராகணும்.

மேலதிக தகவல்களுக்கு தலைவரின் "அதிசய பிறவி" மற்றும் "முத்து"
திரைப்படத்தை பார்க்கவும்

மேலும் சில உபயோகமான குறிப்புகள்.

1.அந்த கலவையுடன் சிறிது நெல்லின் உமியோ, பதரோ கலந்து கொண்டால்
வறட்டி க்ரிஸ்பியாக இருக்கும்

2.வறட்டி தட்டும்போது, பக்கத்துல ஒரு ஹீரோயின் அல்லது செகண்ட் ஹீரோயின்
இருந்தா ஈசியா தட்ட முடியும் ( ஐ மீன் வறட்டிய) அது பொண்டாட்டியாதான்
இருக்கனும்னு அவசியம் இல்லை.. அவங்க இல்லாம (வேற யாராவது) இருந்தா
இன்னும் பெட்டரா தட்ட வரும்..

3.எருமைச் சாணிய விட பசுவின் சாணத்துல தட்டினா, வறட்டி நல்ல வரும்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்லி இருக்கங்க

4.கொஞ்சம் செலவு பண்ணா கோபர் ப்ளாண்ட் இன்ஸ்டால் பண்ணிட்டா கேஸ்
பிரச்சினை தீர்ந்துடும், அரசு மானியம் கூட கிடைக்குதாம்!.

5.உங்க வீட்ல மாட்டு கொட்டாய் இல்லை என்றால் காலைல ரோட் ரோடா
போய் சாணி தேட வெண்டாம். ஏன் என்றால், ஒன்று சாணி கொஞ்சம
காய்ந்து போய் இருக்கும், இரண்டு தேடும் ஏரியா மிக பெருசாக இருக்கும்
சாணி கண்டிப்பாக கிடைக்கும் என்று தீர்மானமாக சொல்ல இயலாது!

6.இந்த பிரச்சினைக்கு தீர்வு ஒரு வாளி எடுத்துட்டு(குறிப்பு: அந்தா வாளியில்
பாதி தண்ணி நிரப்பி வையுங்க்ள் ), எதாவது ஒரு மாட்டை டார்கெட் செய்து,
அது பின்னாலயே ஓடணும். அது சாணி போடும் போது வாளியில் பிடிச்சுக்கணும்
பிடிச்ச பிறகு, கொஞ்சம் சாணி எடுத்து அது இடுப்பில் ஒரு பெரிய X போட்டு.
விட்டு(அடையாளம் தெரியணுமில்ல) அடுத்த மாட்டை தேடணும். அடுத்த மாடு
அன்றைக்கு சாணி போட்டு விட்டதா என்பது, சிலர் வாசம் வைத்து சொல்லி
விடுவார்கள்.

6. மாட்டை செலக்ட் பண்ணும்போது குண்டா இருக்கற மாட்டை செலக்ட்
பண்ணனும் அதுதான் நிறைய புல் தின்னும். அதுக்கேத்தமாதிரி அவுட்புட்
கிடைக்க வாய்ப்பிருக்கிறது.


மேலும் தகவல்கள் வேண்டுமெனில் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

44 comments:

பினாத்தல் சுரேஷ் said...

மாற்று எரிபொருள் துறையின் முக்கியமான (மொக்கையமான?) பதிவு இது.

அவசியமான தகவல்கள், உமி கூடக்குட மொறுமொறுப்பு அதிகமாகும் என்று மங்கையர் மலர் போன்ற குறிப்புகள், மூலப்பொருளை அதிகரிக்கச் செய்யவேண்டிய வழிவகைகள் என்று முழுமையானதொரு கட்டுரை.

பாருங்க, ஸ்மைலி போடலை.

உங்கள் நண்பன்(சரா) said...

எங்கள் ஊரில் அதற்குப் பெயர் "எருக்குழி"(வறட்டிக்கு எரு என்ற இன்னொரு பெயரும் உண்டு), காலையில் பல நாட்கள் என் அம்மாவை எருகுழியில் தான் பார்ப்பேன்(இப்பொழுதெல்லாம் கேஸ்)

முழங்கால் அளவிற்க்கு குழி இருக்கும் அதில் மாட்டுச் சாணத்தை போட்டு தாங்கள் சொன்னதை போல் கொஞ்சம் தண்ணீர் வீட்டு பின் நெல்லின் உமியோ, பதரோ கலந்து இரண்டு கால்களாலும் மிதிப்பார்கள், அது ஒரு விதபக்குவ நிலைக்கு வந்ததும் முதலில் உருண்டை பிடிப்பார்கள், அப்படியே ஒரு 20 அல்லது 30 உருண்டை வந்ததும் எருக்குழியை ஒரு பழைய சாக்கு இல்லையெனில் பனையோலை வைத்து மூடிவிடுவார்கள், தாங்கள் சொன்னது போல் சுவற்றில் அடிப்பதை சில நகரங்களிலும் , திரைப் படங்களிலும் மட்டுமே பார்த்திருக்கின்றேன், நமக்கு எப்பொழுதும் தரை தான், முதலில் தரையில் பதரை போடுவார்கள்( எரு காய்ந்ததும் எடுப்பதற்க்கு இலகுவாக இருக்க!) பின் ஒவ்வொரு உருண்டையாக எடுத்து சரியான இடத்தில் வைத்து கையால் தட்டுவார்கள் அது ஒரு வட்ட நிலையை அடைந்ததும், அடுத்த உருண்டை சரியான இடைவெளியில் தட்டப் படும் , இரண்டு நாள் காய்ந்ததும் அது "எருகுந்தத்தில்" (எருக்கள் சேமித்து வைக்கப் படும் இடம்)வைக்கப் படும், பின் தேவையான பொழுது பயன்படுத்தப் படும்( விரிவாக இதைப் பற்றி நிச்சயம் ஒரு பதிவு போட வேண்டும்.)


அன்புடன்...
சரவணன்.

கதிர் said...

மாற்று எரிபொருள் துறையின் முக்கியமான (மொக்கையமான?) பதிவு இது.

//அவசியமான தகவல்கள், உமி கூடக்குட மொறுமொறுப்பு அதிகமாகும் என்று மங்கையர் மலர் போன்ற குறிப்புகள், மூலப்பொருளை அதிகரிக்கச் செய்யவேண்டிய வழிவகைகள் என்று முழுமையானதொரு கட்டுரை.

பாருங்க, ஸ்மைலி போடலை.//

இது முழுமையான பதிவு என்று இப்பொழுதே முடிவு கட்ட பார்க்கிறீர்கள்.இதன் தொடர்ச்சியாக பல பதிவுகளும் பின்னூட்டங்களும் வரும். மங்கையர் மலர்ல வேற என்னத்தங்க எதிர்பார்க்க முடியும்???

ஸ்மைலி போடவில்லை என்றால் நாங்கள் உள்குத்து விடும் கமெண்ட் என்றே எடுத்துக்கொள்வோம்.

நானும் ஸ்மைலி போடலை

கதிர் said...

//எங்கள் ஊரில் அதற்குப் பெயர் "எருக்குழி"(வறட்டிக்கு எரு என்ற இன்னொரு பெயரும் உண்டு), காலையில் பல நாட்கள் என் அம்மாவை எருகுழியில் தான் பார்ப்பேன்(இப்பொழுதெல்லாம் கேஸ்)//

வாங்க சரா!

எங்கள் ஊரில் அதை "எருமட்டை" என்று சொல்வார்கள். எங்கள் வீட்லயும் ஒரு மாடு இருந்துச்சு ஆனா வாசல் தெளிக்கவும், வீடு மெழுகவும்தான் தேவையான சாணத்தை மட்டுமே நிறைவேற்றுவதாக இருந்தது. ஆனா பக்கத்து வீட்டுல ஒரு கெழவி பத்து பதினஞ்சி எருமை மாடு வெச்சிருந்தது.
அவங்களோட புல்டைம் ஜாப் இதுதான். 16 பட்டில இருந்து வண்டி கட்டிகிட்டு பாட்டிகிட்ட வாங்க வருவாங்கன்னா பாத்துக்கங்க பாட்டியின் கைவண்ணத்தை.

Mugundan | முகுந்தன் said...

மிக்க அருமையான பதிவு,கதிர்.

நாங்களும் மாடு வளர்த்திருந்ததால் ,வறட்டியின் அருமை
தெரியும்.எங்களின் உணவு பெரும்பாலும்,வறட்டி-யால் எரி
யூட்டப்பட்டவையே.

இப்பொது மாடு இல்லை.....சாணம் இல்லை.....சமுதாய
மாற்றத்தினால்....

எங்கள் ஊரில் ஒரு ஆயா வறட்டி தட்டியே ,வறட்டி வியாபாரம் செய்தே
தன் குடும்பத்தினை உயர்த்தினார்.

மலரும் நினைவுகளைப் பிசைந்ததிற்கு ,மீண்டும் நன்றி கதிர்.

-கடலூர் முகு-

கதிர் said...

//முழங்கால் அளவிற்க்கு குழி இருக்கும் அதில் மாட்டுச் சாணத்தை போட்டு தாங்கள் சொன்னதை போல் கொஞ்சம் தண்ணீர் வீட்டு பின் நெல்லின் உமியோ, பதரோ கலந்து இரண்டு கால்களாலும் மிதிப்பார்கள், அது ஒரு விதபக்குவ நிலைக்கு வந்ததும் முதலில் உருண்டை பிடிப்பார்கள், அப்படியே ஒரு 20 அல்லது 30 உருண்டை வந்ததும் எருக்குழியை ஒரு பழைய சாக்கு இல்லையெனில் பனையோலை வைத்து மூடிவிடுவார்கள், தாங்கள் சொன்னது போல் சுவற்றில் அடிப்பதை சில நகரங்களிலும் , திரைப் படங்களிலும் மட்டுமே பார்த்திருக்கின்றேன், நமக்கு எப்பொழுதும் தரை தான், முதலில் தரையில் பதரை போடுவார்கள்( எரு காய்ந்ததும் எடுப்பதற்க்கு இலகுவாக இருக்க!) பின் ஒவ்வொரு உருண்டையாக எடுத்து சரியான இடத்தில் வைத்து கையால் தட்டுவார்கள் அது ஒரு வட்ட நிலையை அடைந்ததும், அடுத்த உருண்டை சரியான இடைவெளியில் தட்டப் படும் , இரண்டு நாள் காய்ந்ததும் அது "எருகுந்தத்தில்" (எருக்கள் சேமித்து வைக்கப் படும் இடம்)வைக்கப் படும், பின் தேவையான பொழுது பயன்படுத்தப் படும்( விரிவாக இதைப் பற்றி நிச்சயம் ஒரு பதிவு போட வேண்டும்.)//

சரா!

அருமையான பின்னூட்டம் போட்டு இருக்கிங்க. நான் விளையாட்டாக சொன்னத நீங்க விருப்பத்தோட சொல்லிட்டிங்க. பதிவிலேயே இதை பற்றி எழுதலாம்னு நினைச்சேன் நகைச்சுவையா இருக்காதோன்னு எழுதல. நாங்க கிரிக்கெட் விளையாடுற இடத்துக்கு பக்கத்துலதான் உள்ள கவர்மெண்ட் ஆஸ்பத்திரி செவுத்துலதான் அந்த பாட்டி எருமட்டை தட்டுவாங்க. நாங்க அடிக்கற பந்து ஈரமான எருமட்டைல பட்டு செதறிடுச்சின்னா ஊர்க்கூட்டி ஒப்பாரி வைப்பாங்க. :))

பந்தை எடுத்து சாணி தொட்டிகுள்ள போட்டுடுவாங்க. செம காமெடியா இருக்கும். அவங்க வீட்டு பின்னாடி இருக்கற செவுத்துல தட்ட மாட்டாங்க ஆனா கவருமெண்ட் செவுத்துல தட்டுவாங்க என்ன கிழவி நியாயம்னு கேட்டா போதும் விளக்குமாத்த தூக்கிட்டு கெளம்பி வரும்.


ஆனா அதுகிட்டயே கிரிக்கெட் டோர்னமெண்ட் நடத்த காசு மொல்லை போட்டிருக்கோம். :))

மலரும் நினைவுகள கிளப்பி விட்டது உண்மைலயே நீங்கதான்.

நன்றி சரா!

கதிர் said...

வாங்க முகு!

//மிக்க அருமையான பதிவு,கதிர்.//

நன்றிங்க!

//நாங்களும் மாடு வளர்த்திருந்ததால் ,வறட்டியின் அருமை
தெரியும்.எங்களின் உணவு பெரும்பாலும்,வறட்டி-யால் எரி
யூட்டப்பட்டவையே.//

எங்கள் வீட்டிலயும் (கேஸ் வருவதற்கு முன்) எருமட்டைதான் அடுப்பை சீக்கிரம் எரிய வைக்க பயன்படுத்தினாங்க. (ஸ்டார்ட்டர்). காலைல பள்ளிக்கூடம் கிளம்பும்போது எங்களுக்கு சாப்பாடு ரெடி பண்றது அடுப்படில ஊதாங்க்கோலால போராட்டம் நடத்திட்டு இருப்பாங்க.

//இப்பொது மாடு இல்லை.....சாணம் இல்லை.....சமுதாய
மாற்றத்தினால்....//

இன்னும் சிலர் உபயோகிச்சிட்டுதான் இருக்காங்க.

//எங்கள் ஊரில் ஒரு ஆயா வறட்டி தட்டியே ,வறட்டி வியாபாரம் செய்தே
தன் குடும்பத்தினை உயர்த்தினார்//

அதுவும் ஒரு வியாபாரம்தாங்க. எங்க ஏரியாவில போட்டி வியாபரமே செய்யிற பாட்டிமார்கள் இருக்காங்க, :))

//மலரும் நினைவுகளைப் பிசைந்ததிற்கு ,மீண்டும் நன்றி கதிர்.//

இந்த நன்றி உங்கள் நண்பன் சரவணாவுக்குதான் சேரணும். :)
அவர்தான் என்னைவிட நல்லா எழுதி இருந்தாரு.

எப்படியோ பழச நினைச்சு பார்த்தா சரிதாங்க முகு.

நன்றி.

இராம்/Raam said...

//டிஸ்கி: இந்த பதிவு ஒரு கடுமையான உவ்வ்வே பதிவு. கிராமத்தில பிறந்து
வளர்ந்தவங்களுக்கு இது சாதாரணமா தெரிந்தாலும். நகரத்தில் பிறந்து வளர்ந்து
வந்தவங்களுக்கு பயங்கர அதிர்ச்சியா இருக்கும். அதனால டிஸ்கி படிச்சிட்டு
டிமிக்கி கொடுத்துட்டு ஓடி விடவும். மீறி எதையும் தாங்கும் இதயம்னு படிக்க
ஆரம்பிச்சிங்கன்னா நீங்க மகா தெகிரியசாலி.//

இந்த ஸ்டேட்மெண்ட்'க்கு என்னோட கடுமையான கண்டனங்கள் :)

//கேஸ், மின்சார அடுப்பு இதெல்லாம் வந்துட்ட காலத்துலயும் எதுக்குடா வறட்டிய
தூக்கிட்டு திரியறிங்கன்னு நீங்க கேக்கலாம். எல்லா வசதியும் இருக்கற இந்த்
காலத்துலயும் வறட்டியின் தேவை இருந்துகிட்டுதான் இருக்கு. //

உண்மைதான், இன்னமும் சுடுகாட்டிலே தேவைப்படுது. :)

இராம்/Raam said...

கதிரு,

நான் சின்னப்புள்ள'யா இருக்கிப்போ எங்க வீட்டிலே விறகு அடுப்புதான் அதுக்கு பேரு கூட கொடிஅடுப்பு''ன்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன், சனிஞாயித்து கிழமைகளிலே விறகு ரெண்டு தூக்கு சைக்கிளிலே கட்டி எடுத்துட்டு வருவேன், விறகோட சேர்த்து எரிக்க எருவாட்டி வாங்க எங்க அம்மாயி வீட்டிலே போயி எடுத்துட்டு வர்றது!!!.

அம்மாயி எருவாட்டி தட்டிறதே பார்க்கவே ரொம்ப சுவராசியமா இருக்கும், மாட்டுசாணி,வைக்கோல்,நெல் உமி, எல்லாத்தையும் சேர்த்து கையிலே உருண்டையா உருட்டி அப்புறம் மறுபடியும் உமியிலே தொட்டு அதை சுவத்திலே நொச்சுன்னு தட்டுவாங்க... அது அப்பிடியே ஒட்டுனதும் அதிலே அஞ்சுவிரலில் ரேகை பதிப்பாங்க :)

நானும் அதேமாதிரி பண்ணிப்பார்க்கணுமின்னு செஞ்சு பார்த்து அந்தமாதிரி என்னாலே உருண்டக்கட்டியே பிடிக்கமுடியலை, அப்பிடியே கையிலே எடுத்து சுவத்திலே அடிச்சாலும் சரியா அவங்களே மாதிரி ரவுண்டா வரலே..... :)

அதுக்கெல்லாம் அனுபவம் வேணுமின்னு விட்டுட்டேன் :)))

கதிர் said...

//இந்த ஸ்டேட்மெண்ட்'க்கு என்னோட கடுமையான கண்டனங்கள் :)//

இல்லிங்க ராம். சில பேர் வந்து சொல்வாங்க ஏண்டா வறட்டி தட்டறதுக்கெல்லாம் ஒரு பதிவா, இப்ப வறட்டி தட்டி என்னா பண்ண போறன்னு கேள்வி கேப்பாங்க. அதுக்குதான் டிஸ்கிய போடறது.

//உண்மைதான், இன்னமும் சுடுகாட்டிலே தேவைப்படுது. :)//

சாராயம் காய்ச்சுற எடத்துக்கு போயிருகிங்களா, இப்பவும் எங்க பாட்டி ஊர்பக்கம் அடுப்பெரிக்க யூஸ் பண்றாங்க, சில கிழவிங்க சாம்பலை தினமும் தின்னுவாங்க.

கதிர் said...

கதிரு,

நான் சின்னப்புள்ள'யா இருக்கிப்போ எங்க வீட்டிலே விறகு அடுப்புதான் அதுக்கு பேரு கூட கொடிஅடுப்பு''ன்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன், சனிஞாயித்து கிழமைகளிலே விறகு ரெண்டு தூக்கு சைக்கிளிலே கட்டி எடுத்துட்டு வருவேன், விறகோட சேர்த்து எரிக்க எருவாட்டி வாங்க எங்க அம்மாயி வீட்டிலே போயி எடுத்துட்டு வர்றது!!!.//

கண்டிப்பா சின்ன பிள்ளையாதான் இருந்திருப்பிங்க. :))
கொடி இடுப்புன்னு கேள்வி பட்டிருக்கேன். கொடி அடுப்புன்னு இப்பதான் கேள்விபடறேன். இப்பவும் விறகடுப்பு சுடுதண்ணில இருக்கற சுகம் ஹீட்டர்ல வர்றதில்ல.

பழசெல்லாம் ஞாபகம் வந்துடுச்சி போலருக்கு...

//அம்மாயி எருவாட்டி தட்டிறதே பார்க்கவே ரொம்ப சுவராசியமா இருக்கும், மாட்டுசாணி,வைக்கோல்,நெல் உமி, எல்லாத்தையும் சேர்த்து கையிலே உருண்டையா உருட்டி அப்புறம் மறுபடியும் உமியிலே தொட்டு அதை சுவத்திலே நொச்சுன்னு தட்டுவாங்க... அது அப்பிடியே ஒட்டுனதும் அதிலே அஞ்சுவிரலில் ரேகை பதிப்பாங்க :)//

நான் தட்டினது கிடையாது. ஆனா தட்டினத ஒரு சட்டியில போட்டு வீட்டுக்கு கொண்டு வந்து அடுக்கி வைப்பேன்.

//நானும் அதேமாதிரி பண்ணிப்பார்க்கணுமின்னு செஞ்சு பார்த்து அந்தமாதிரி என்னாலே உருண்டக்கட்டியே பிடிக்கமுடியலை, அப்பிடியே கையிலே எடுத்து சுவத்திலே அடிச்சாலும் சரியா அவங்களே மாதிரி ரவுண்டா வரலே..... :)//

ரவுண்டா அழகா வரணும்னா பதிவில் உள்ள உபயோகமான குறிப்புகளில் இரண்டாவதை ட்ரை பண்ணி பாருங்க.
கச்சிதமா வரும் :)

கப்பி | Kappi said...

:)))

மாடு மேய்ப்பது எப்படி? :))

இராம்/Raam said...

//கொடி இடுப்புன்னு கேள்வி பட்டிருக்கேன். கொடி அடுப்புன்னு இப்பதான் கேள்விபடறேன்.//

நிறையவே கேள்விஞானம் போலே :))

//ரவுண்டா அழகா வரணும்னா பதிவில் உள்ள உபயோகமான குறிப்புகளில் இரண்டாவதை ட்ரை பண்ணி பாருங்க.
கச்சிதமா வரும் :) //

ஏலே ஒன்னையே என்ன சொல்லுறது.... :(

ஷைலஜா said...

2.//வறட்டி தட்டும்போது, பக்கத்துல ஒரு ஹீரோயின் அல்லது செகண்ட் ஹீரோயின்
இருந்தா ஈசியா தட்ட முடியும் ( ஐ மீன் வறட்டிய) அது பொண்டாட்டியாதான்
இருக்கனும்னு அவசியம் இல்லை.. அவங்க இல்லாம (வேற யாராவது) இருந்தா
இன்னும் பெட்டரா தட்ட வரும்..//

தம்பி வீட்டுக்கு நான் இப்போதான் முதன்முறையா வரேன்னு நினைக்கறேன்! வறட்டி தான் இழுத்தது அதிலும் மேல இட்டிருக்கிற உங்க குறும்பு வரிகள்!
நல்லாத்தான் விவரமா எழுதி இருக்கீங்க.
நான் சின்ன வயசுல பாட்டி வீட்டுக்கு கிராமம் போன நாட்களில் வறட்டி பார்த்திருக்கேன்.பள்ளீ நாளில் என் தோழி ஒருத்தி தினமும் லேட்டா ஸ்கூலுக்கு வருவா..டீச்சர்கிட்ட ஸ்கேல்ல அடி வாங்குவா.நான் ஒருநாள் அவகிட்ட ஏன் இப்டி அடி வாங்கணும் சீக்கிரமாததான் வாயேன் குமுதான்னு சொன்னேன்.அதுக்கு அவ.'இல்லடி..வீட்டுல வறட்டி தட்டிமுடிச்சி கிளம்பணும்..இல்லேன்னா திட்டுவாங்க..படிக்கவே அனுப்பமாட்டாங்க..நான் நாலெழுத்து படிச்சாதானே வெளியூர்ல இருக்கற என் மாமனுக்கு கடுதாசி போடமுடியும்
அவரைத்தான் கட்டிக்கணும்னு ஆசை..அதுக்கு காசும் சேக்கணும்..அதான்.." என்றாள் ..

வாழ்ந்து கொண்டிருக்கும்
வறட்டியில் பதிந்த கைவிரல் அடையாளமாய்,
காதல் நினைவு.'
என்று பின்னாளில் கவிதை ஒண்ணு எழுத குமுதாவும் காரணம்!
பெங்களூர்ல ஒருமுறை என்மாமனார் தனது திடீர் விசிட்டில் திடுக்கிடும் செய்தி சொன்னார்."நாளை இங்க என் அப்பாக்கு திதி செய்யப்போறேன் வறட்டி முக்கியமா அதுக்கு வேணும்..ஹோமத்தில் சேர்க்க" என்றார்

வறட்டிக்கு எங்கு போவது?வறட்டிக்கு கன்னடத்தில் என்ன என்றுவேறு தெரியவில்லை. கன்னடத்தோழியிடம் அதை ஆங்கிலத்தில் விவரித்து அவள் அது கிடைக்கும் பால்காரர் வீட்டு முகவரி சொல்லி, அதைத்தேடிக்கண்டுபிடிக்க ஒருநாள் கொட்டும் மழையில் போகவேண்டி இருந்தது. மழைநாளில் கிடைக்குமா? ஏற்கனவே பெங்களூரில் வெய்யில் முனகிக்கொண்டுதான் வரும். உலர்ந்த வறட்டி கிடைக்காவிடில் என் மாமனாரோ நெற்றிக்கண்ணைத் திறந்துவிடுவார். பயந்தபடி அங்கே வறட்டி கேட்க வாய் எடுக்கும்போது கன்னடத்தில் அதன் பெயர் சட்டென மறந்து போய்விட்டது.
பால்காரரிடம்,மாட்டுக்கொட்டிலுக்குப்போய், அங்கே சாணியைக்காட்டி,'இதல்லி ட்ரையாகிஒந்து ரவுண்ட் பீஸ் பருத்தே அது பேக்கு" என்றேன்.அதாவது சாணில உலர்ந்து வட்டமா வருமே அது வேணும் என்று.
அவர் முழித்தார்.
பிறகு,வீட்டு உள்பக்கம் திரும்பி,"லட்சுமி.இங்க ஒரு கன்னடக்கார பொண்ணு வந்து ஏதோ சாணியக்காட்டிஎன்னவோ கேக்குது என்னன்னு பாரு ஒண்ணும் புரில்ல எனக்கு" என்றாரே பாக்கணும்.
"ஐய்யா! வறாட்டீ" என்று வீறிட்டேன் குஷியில்!

மறந்த வறட்டி நினைவுகளை வருடி விட்டுடீங்க தம்பீ!
ஷைலஜா

Thamizhan said...

அந்த சாணியை உருண்டையா சின்னதா உருட்டி ஒரு குங்கமப் பொட்டு வைத்து விட்டால் அது சாமி.பொங்கல் எல்லாம் கொண்டாடலாம்.
ராட்டி நல்லா வெந்துட்டா அருமையான விபூதி.நீரில்லா நெற்றி பாழ்!
காலில் பட்டால் சாணி!நெற்றியில் பட்டால் பட்டை!

ஜி said...

யய்யா கதிரு.. எப்படி இப்படியெல்லாம் ஆராய்ச்சி பண்றீரு..

ஹீரோயின், உப-ஹீரோயினிக்கெல்லாம் எங்க போவீரு நீரு...

இலவசக்கொத்தனார் said...

இதுல உவ்வ்வ்வே எனப்படும் படியா என்ன இருக்கு? அப்படி இருக்குன்னு சொன்னவங்க எல்லாம் திராவிடப் பரம்பரையில் வந்தவங்க இல்லைன்னு ஒரு பகிரங்க எச்சரிக்கைப் பதிவு போடலாமுன்னு பார்க்கறேன். :))

இலவசக்கொத்தனார் said...

//தாங்கள் சொன்னது போல் சுவற்றில் அடிப்பதை சில நகரங்களிலும் , திரைப் படங்களிலும் மட்டுமே பார்த்திருக்கின்றேன்,//

எங்க ஊர் பக்கம் எல்லாமும் சுவர்தான். அதிலேயும் நம்மாள் சொல்லற மாதிரி பொதுச்சுவர்களுக்கு டிமாண்ட் ஜாஸ்தி!

துளசி கோபால் said...

அந்த சாணியிலே கொஞ்சம் கரித்தூளைக் கலந்து சின்னச் சின்ன உருண்டையா உருட்டி வெயிலில் காய வச்சுருவோம்.
குளிக்க வெந்நீருக்கு பாய்லர் போடும் போது, அதை பத்தவைக்க இந்த உருண்டைகள்தான் நல்லா பிடிச்சு எரியும்.

Anonymous said...

வறட்டி தட்டுவதில் கதிர் pHD ஆ?

Anonymous said...

நான் மாட்டு சாணியே பார்த்தது இல்லை.அதுக்கு என்று கூட்டிக் கிட்டு போய் காட்ட எல்லாம் வேண்டாம்.அந்த பக்கமே நான் போக மாட்டேன்.

லொடுக்கு said...

ஆகா! இதுல இவ்வளவு மேட்டர் இருக்கா????

Prabakar said...

Its really Super....

கதிர் said...

//நிறையவே கேள்விஞானம் போலே :))//

நிறைய கேள்விதான். ஞானம் ஊர்ல இருக்கான்.

//ஏலே ஒன்னையே என்ன சொல்லுறது.... :( //

தம்பினு சொல்லுங்கோண்ணா!

கதிர் said...

//தம்பி வீட்டுக்கு நான் இப்போதான் முதன்முறையா வரேன்னு நினைக்கறேன்! வறட்டி தான் இழுத்தது அதிலும் மேல இட்டிருக்கிற உங்க குறும்பு வரிகள்!
நல்லாத்தான் விவரமா எழுதி இருக்கீங்க.//

வாங்க ஷைலஜா அக்கா!

நன்றி

உங்க அனுபவத்தை பகிர்ந்து கொண்டதுக்கு மிக்க நன்றிங்க!

நல்ல நகைச்சுவையா சொல்லியிருக்கிங்க! பாஷை தெரியாத ஊர்ல அதுவும் வறட்டிக்கு என்ன பேர்னு தெரியாம அலைஞ்சது நல்ல சுவாரஸ்யம். :))

//மறந்த வறட்டி நினைவுகளை வருடி விட்டுடீங்க தம்பீ!
ஷைலஜா //

வறட்டி பதிவு போடணுமான்னு யோசிச்சேன். இந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும்னு நினைக்கவே இல்ல.

நன்றிங்க ஷைலஜா அக்கா!

கதிர் said...

//அந்த சாணியை உருண்டையா சின்னதா உருட்டி ஒரு குங்கமப் பொட்டு வைத்து விட்டால் அது சாமி.பொங்கல் எல்லாம் கொண்டாடலாம்.
ராட்டி நல்லா வெந்துட்டா அருமையான விபூதி.நீரில்லா நெற்றி பாழ்!
காலில் பட்டால் சாணி!நெற்றியில் பட்டால் பட்டை! //

அடடா இவ்வளவு விளக்கம் கொடுத்துருக்கிங்களே.

நன்றி தமிழன்!

கதிர் said...

//யய்யா கதிரு.. எப்படி இப்படியெல்லாம் ஆராய்ச்சி பண்றீரு..//

நான் எங்க ஆராய்ச்சி பண்ணேன். இதை ஒரு forumla பேசிட்டு இருந்தாங்க நல்ல ஐடியாவா இருக்கேன்னு நானும் கொஞ்சம் அப்பிடி இப்பிடி சேர்த்து ஒரு பதிவு போட்டுட்டேன்.

//ஹீரோயின், உப-ஹீரோயினிக்கெல்லாம் எங்க போவீரு நீரு...//

அட கிராமத்துல அதுக்காங்க பஞ்சம் ஊருக்குள்ள இருக்கற முக்காவாசி குமரிகள் அத்தை பெண்ணோ, சொந்தமோவாதான் இருக்கும். அப்படியே இல்லன்னா என்ன சுயேச்சை எம்.எல்.ஏ மாதிரி தானா தட்ட வேண்டியதுதான்.

கதிர் said...

//இதுல உவ்வ்வ்வே எனப்படும் படியா என்ன இருக்கு? அப்படி இருக்குன்னு சொன்னவங்க எல்லாம் திராவிடப் பரம்பரையில் வந்தவங்க இல்லைன்னு ஒரு பகிரங்க எச்சரிக்கைப் பதிவு போடலாமுன்னு பார்க்கறேன். :)) //

வாங்க கொத்ஸ்,

சிலருக்கு சாணின்னா அலர்ஜிங்க அதனால அப்படி போட்டேன். இப்ப பார்த்தா எல்லாரும் மலரும் நினைவுகள கிளப்பி விட்டுட்டிங்கன்னு சொல்றாங்க!

ஒண்ணுமே புரியல!

எச்சரிக்கை பதிவுக்கு அவசியமில்லன்னாலும் (யாரும் உவ்வே சொல்லல) நீங்க உங்களோட வறட்டி அனுபவத்தை எழுதுங்க கொத்ஸ்.

கதிர் said...

//எங்க ஊர் பக்கம் எல்லாமும் சுவர்தான். அதிலேயும் நம்மாள் சொல்லற மாதிரி பொதுச்சுவர்களுக்கு டிமாண்ட் ஜாஸ்தி! //

எல்லா ஊர்லயும் பொதுச்சுவர்தான் கொத்ஸ், நம்ம மக்கள் ரொம்ப விவரமானவங்க. :))

கதிர் said...

//அந்த சாணியிலே கொஞ்சம் கரித்தூளைக் கலந்து சின்னச் சின்ன உருண்டையா உருட்டி வெயிலில் காய வச்சுருவோம்.
குளிக்க வெந்நீருக்கு பாய்லர் போடும் போது, அதை பத்தவைக்க இந்த உருண்டைகள்தான் நல்லா பிடிச்சு எரியும்.//

வாங்க துளசி டீச்சர்!

உருண்டை மேட்டர சொல்லாம விட்டுட்டேனே. பரவால்ல, நீங்கதான் சொல்லிட்டிங்களே :)

நன்றி

கதிர் said...

//வறட்டி தட்டுவதில் கதிர் pHD ஆ? //

தந்தாங்கன்னா வாங்கிக்கலாம் :))

அப்பிடியாச்சும் பேருக்கு முன்னாக DR போட்டுக்கலாம்ல

கதிர் said...

//நான் மாட்டு சாணியே பார்த்தது இல்லை.அதுக்கு என்று கூட்டிக் கிட்டு போய் காட்ட எல்லாம் வேண்டாம்.அந்த பக்கமே நான் போக மாட்டேன். //

காலைல எந்திரிச்சி வாசதெளிச்சி கொலம்போட்டு நடுவில ஒரு கை அளவில சாணி வெச்சி
அதுல ஒரு பூசணிப்பூ வைக்கணும் எங்கூர்ல எல்லா பொண்ணுங்களும் இத செய்வாங்க. வெளிநாட்டுல பிறந்து வளர்ந்ததால தப்பிச்சிட்டிங்க ஒருவேளை கிராமத்துல வாக்கப்பட்டிங்கன்னா என்ன பண்ணுவிங்க??

சீரியசா எடுத்துக்காதிங்க. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.

கதிர் said...

//ஆகா! இதுல இவ்வளவு மேட்டர் இருக்கா???? //

மேட்டரே இல்லன்னாலும் நாங்க இப்படித்தான் எழுதுவோம்.

ஜே கே | J K said...

இப்போது உள்ள எரிவாயு பிரச்சனைக்கு ஏற்ப தக்க சமய்த்தில் வறட்டியை நினைவிகூர்ந்தமைக்கு தம்பிக்கு நன்றிகள் பல...

எங்க ஊரில் கூட இதெல்லாம் தட்டுவாங்க...

ஆனா நா இதெல்லாம் தட்டுனதில்ல, அடுத்த மெற ஊருக்கு போகும் போது டிரை பண்ணி பாக்கலாம்

Anonymous said...

இவ்வ்ளோ கஸ்டமா தம்பிஸ்.. நான் இங்கு பசுவை மிருககாட்சி சாலையில் தான் பார்த்திருக்கேன்..

கதிர் said...

//இப்போது உள்ள எரிவாயு பிரச்சனைக்கு ஏற்ப தக்க சமய்த்தில் வறட்டியை நினைவிகூர்ந்தமைக்கு தம்பிக்கு நன்றிகள் பல...//

வாங்க சாரல். கிராமத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியம், ஏன்னா கோபர் ப்ளாண்ட் செய்யணுமின்னா கொஞ்சம் இடம் வேணும், அதுவுமில்லாம சாணி வேணும், சாணி வேணுமின்னா மாடு வேணும், மாடு வேணுமின்னா அதை கட்ட கொஞ்சம் இடம் வேணும். குந்தவே இடமில்லாத இடத்துல கோபர் பளாண்ட் எங்கருந்து கட்டறது.

வருகைக்கு நன்றி. நன்றி..

//எங்க ஊரில் கூட இதெல்லாம் தட்டுவாங்க...//

கிராமத்துல தட்டாத கையே கிடையாதுன்னு நான் சொல்லுவேன். :)

//ஆனா நா இதெல்லாம் தட்டுனதில்ல, அடுத்த மெற ஊருக்கு போகும் போது டிரை பண்ணி பாக்கலாம் //

இதத்தான் நம்ப முடியல. சரி ட்ரை பண்ணி பாருங்க, முக்கியமா உபயோகமுள்ள குறிப்புகள்ல ரெண்டாவதா இருக்கறத ட்ரை பண்ணிங்கன்னா நல்லா தட்ட வரும் (ஐ மீன் வறட்டிய) :))

கதிர் said...

//இவ்வ்ளோ கஸ்டமா தம்பிஸ்.. நான் இங்கு பசுவை மிருககாட்சி சாலையில் தான் பார்த்திருக்கேன்.. //

என்னங்க தூயா!

எவ்வளவு எளிமையா சொல்லி குடுத்துருக்கேன். இதப்போயி கஷ்டம்னு சொல்றிங்களே. நீங்க சமையல் சொல்லிக்குடுத்து அதை செய்யிறதுதான் கஷ்டம் இது ரொம்ப ஈசி.

ஊருக்கு போனா ட்ரை பண்ணி பாருங்க.

நன்றி தூயா!

ஜொள்ளுப்பாண்டி said...

ஆஹா என்ன ஒரு உபயோகமான பதிவு. நெசமாதேன் சொல்லுதேன்!! :)))) ஈரோயினோட வறாட்டி தட்டுற சொகமே தனிதாம்லே !! ;))))))))

Unknown said...

பதிவு மொக்கையா/முக்கியமான்னு தெரியல...;-)))))

நல்ல பசுஞ்சாணில வைக்கோல் / பதர் / காஞ்ச புல்லு கலந்து வறட்டி தட்டின அனுபவமும் உண்டு. மார்கழித் திங்கள் சாணி குமிச்சு பூசணிப்பூ வச்ச அனுபவமும் உண்டு.

மலரும் நினைவுகளுக்கு நன்றி:-))
கெ.பி.

காட்டாறு said...

பழைய நினைவுகள கெளறி விட்டதுக்கு நன்றி. ஒவ்வொரு விடுமுறைக்கும் பாட்டி வீட்டுக்கு போகும் போது என்னோட வேல இது தான். எங்க தாத்தா ஆர்வமா சொல்லிக் குடுப்பாங்க. உங்க அப்பன் வந்தா கொல பண்ணிருவான் அப்படின்னு சொல்லிட்டே சாணிய உருண்ட பிடிக்க சொல்லுவாங்க. அதனால எனக்கு பயங்கர திரில் இதுல. அப்பாவ ஏமாத்தின மாதிரி ஆச்சில்ல. இன்னமும் அந்த பிடிப்பு இருப்பதாலோ என்னவோ எனக்கு ஊருக்கு திரும்பியதும் மாட்டுப் பண்ண வைக்கனும்ன்னு சின்ன ஆச இருக்குது.

கதிர் said...

//ஆஹா என்ன ஒரு உபயோகமான பதிவு. நெசமாதேன் சொல்லுதேன்!! :)))) ஈரோயினோட வறாட்டி தட்டுற சொகமே தனிதாம்லே !! ;))))))))//

ஜொள்ளேய்..

ஏகப்பட்ட அனுபவம் இருக்கு போல...
நீ உண்மைல்யே வறட்டிதான் தட்டுனியான்னு டவுட்டா இருக்கப்பா. :)

கதிர் said...

//பதிவு மொக்கையா/முக்கியமான்னு தெரியல...;-)))))

நல்ல பசுஞ்சாணில வைக்கோல் / பதர் / காஞ்ச புல்லு கலந்து வறட்டி தட்டின அனுபவமும் உண்டு. மார்கழித் திங்கள் சாணி குமிச்சு பூசணிப்பூ வச்ச அனுபவமும் உண்டு.

மலரும் நினைவுகளுக்கு நன்றி:-))
கெ.பி.//

வாங்க கெக்கே பிக்குனி..

முதல் வருகைக்கு நன்றி.

நான் கூட நினைக்கலிங்க இந்த பதிவு இவ்வளவு வரவேற்பை பெறும்னு ஏதோ காமெடியா எழுத போய் அதுவே எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சதா மாறிப்போச்சு.

உங்களோட அனுபவத்தை பகிர்ந்துகிட்டதுக்கு நன்றிங்க.

கதிர் said...

//பழைய நினைவுகள கெளறி விட்டதுக்கு நன்றி. ஒவ்வொரு விடுமுறைக்கும் பாட்டி வீட்டுக்கு போகும் போது என்னோட வேல இது தான். எங்க தாத்தா ஆர்வமா சொல்லிக் குடுப்பாங்க. உங்க அப்பன் வந்தா கொல பண்ணிருவான் அப்படின்னு சொல்லிட்டே சாணிய உருண்ட பிடிக்க சொல்லுவாங்க. அதனால எனக்கு பயங்கர திரில் இதுல. அப்பாவ ஏமாத்தின மாதிரி ஆச்சில்ல. இன்னமும் அந்த பிடிப்பு இருப்பதாலோ என்னவோ எனக்கு ஊருக்கு திரும்பியதும் மாட்டுப் பண்ண வைக்கனும்ன்னு சின்ன ஆச இருக்குது. //

வாங்க காட்டாறு சார்!

மாட்டுப்பண்ணை வைத்து அண்ணாமலை ரஜினி மாதிரி பெரிய ஆளா மாறுங்க!

வருகைக்கு நன்றி

ரௌத்ரன் said...

கிட்டத்தட்ட ஒன்னறை வருஷத்துக்கு முன்ன எழுதியிருக்கீங்க...பதிவு சுவாரஸ்யமா இருக்கவே பின்னூட்டம் போனா அதுவும் சுவாரஸ்யமா இருக்கு..சைக்கிளில் சவுக்கு விறகு வாங்கி வந்தது,தலையில் றாட்டி(எங்கூர்ல இப்பிடித்தான் சொல்வாங்க)சுமந்து வந்தது,நெல் அவிச்சு கொட்டுனதுன்னு நமக்குள்ளயும் பல flashback ஓட வெச்சதுங்க உங்க பதிவு..