எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, March 14, 2007

டெவில் ஷோ - கவுண்டர் டீ.ஆர் - பகுதி இரண்டு.

முதல் பகுதி இங்கே சொடுக்கவும்

டெவில் ஷோவில் கவுண்டர் டீ.ஆருக்கு கேள்விக்கணைகளை கன்னா பின்னாவென்று வீசுகிறார்

கேண்டீன்ல விக்கிறாண்டா பஜ்ஜி
என் வீட்டு நாய்க்குட்டி பேரு புஜ்ஜி
லைட்டு எரியணும்னா போடணும் சுச்சி
கேள்விக்கணைகளை தொடுடா மச்சி

கவுண்டர்: எடுபட்ட பய கேப்புல நம்மளயே மச்சினு கலாய்க்கறானே, சரி விடு
கழுத போகட்டும் கிங் காங் னு ஒரு ஆங்கிலப்படத்துல ஒரு மனிதக்கொரங்கு
நடிச்சிருக்கும். அது ஹீரோயின லவ் பண்ணும் ஆனா கடைசில சேரமுடியாம இறந்து போயிடும், வீராச்சாமிலயும் அப்படிதான் வருது. அந்த படத்தோட அப்பட்டமான
தழுவல்தான் வீராசாமினு வெளில பேசிக்கறாங்களே.

டீ.ஆர்: என்னோட படத்தை பார்த்துதான் அந்த படத்தை எடுத்துட்டாங்கன்னு நான்
புகார் செஞ்சா ஆராச்சும் நம்புவாங்களா ஆனா அதுதான் உண்மை. தமிழனுக்கு
ரசனையே இல்லாம போச்சு. என் கதைய ஹாலிவுட்ல எடுக்கறான் கோலிவுட்ல
கெடுக்கறான்.

கவுண்டர்: டேய் அப்பிரிக்கா மண்டையா அந்த படம் எடுத்து ஆறு மாசம் ஆகுதுடா
கீரிபுள்ள தலையா. ஆனா ஒண்ணு அந்த படத்தை அவனுங்க க்ராபிக்ஸ், மேக்கப்
போட்டு கஷ்டப்பட்டு எடுத்தாங்க உனக்கு க்ராபிக்ஸ், மேக்கப்பு எல்லாம் போடாம
அம்சமா பொருந்துச்சே அதுதான் படத்தோட ஹைலைட்டு அந்த விஷயத்துல நீ
ஜெயிச்சிட்ட.

டீ.ஆர்: நல்லவேளை என்னோட அருமை பெருமையெல்லாம் யாருக்குமே தெரியாம போயிடும்னு பயந்துட்டேன் உங்களுக்கு தெரிஞ்சிடுச்சி. (சிரிக்கிறார்)

கவுண்டர்: உலகத்துலயே ஒரு ஆள வெச்சிகிட்டு கட்சி நடத்துற ஆள் நீயாத்தான்
இருப்ப, எதுக்கு உனக்கு கட்சி அதுவும் லட்சிய திராவிட முன்னேற்ற கழகம்
மத்தவன்லாம் லட்சியமே இல்லாம கட்சி நடத்திட்டு இருக்கானா. எதுக்கு மேன்
இந்த ஒன் மேன் ஆர்மி. உன் கொள்கைதான் என்ன.

டீ.ஆர்: கவுண்டரே என்னோட கட்சில பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள்
இருக்காங்க. அதுலயும் மூணு முதலமைச்சர்கள எதிர்த்து அரசியல் செஞ்சவன்
நான். எம்.ஜி.ஆர எதிர்த்து உண்ணா விரதம் இருந்தேன், கருணாநிதிய எதிர்த்து
ஊர்வலம் நடத்துனேன், அம்மாவை எதிர்த்து யாகம் செஞ்சேன். அவங்க பரிகாரம் பண்ணாங்க. "பண்ண வேண்டாம் பரிகாரம் உங்க கைக்கு கிடைக்காது அதிகாரம்"னு
அம்மாவுக்கு எச்சரிக்கை குடுத்தேன். ஈரோட்டுல கலைஞருக்கு ஆதரவா பேசினேன்
அதனாலதான் இந்த தேர்தல்ல அவர் ஜெயிச்சாரு.

கவுண்டர்: தெரு முக்குல நின்னு சத்தம் போட்டா அதுக்கு பேர் எதிர்ப்பா இதுல
மூணு முதலமைச்சர்கள எதிர்த்து நின்னேன்னு கப்சா அடிக்குதுபாரு. ஏண்டா ஜனங்க மூடநம்பிக்கைய போக்குறதுல திராவிட கட்சிக்கு பெரிய பங்கு உண்டு. அந்த வகைல
உன் கட்சியும் திராவிட கழகத்துல சேர்ந்ததுதான் அப்படி இருக்க உன் பேருக்கு
முன்னாடி விஜய நகர பேரரசர் மாதிரி "விஜய"ன்ற வார்த்தைய சேத்துகிட்டா என்ன
அர்த்தம் பாடையில போகறதுக்கு பத்து வருசந்தான் இருக்கு இந்த பேர மாத்துனா
இருவது வருசமா மாறிட போகுதா. ஏண்டா கல்லு விக்கறவன், கடப்பாறைய வச்சி
வீட்ட நோண்டறவன் கிளி, எலி ஜோசியம் பாக்கறவன், இவனுக்கு உனக்கும் என்ன வித்தியாசம்??

டீ.ஆர்: கடந்த மக்களவை தேர்தல் நடந்தப்ப பிரதமரா வாஜ்பாயி வருவாரா இல்ல
சோனியா வருவாங்களான்னு எல்லாரும் மண்டைய பிச்சிகிட்டாங்க அப்ப நான்
சொன்னேன் ரெண்டு பேருமே வர மாட்டாங்கன்னு, எதிர்பார்க்காத யாரோ ஒரு
மன்மோகன்சிங் பிரதமரா வந்தாரா இல்லையா அது மாதிரி டீ.ராஜேந்தர்னு இருந்த
என் பேர்ல "விஜய" வார்த்தைய சேத்துகிட்டா தமிழ்நாட்டு முதலமைச்சர்
ஆயிடுவேன்னு மனசுக்குள்ள கவுளி கத்துச்சி. யாருக்கு தெரியும் அந்த வெண்தாடி
வந்த மாதிரி இந்த கருந்தாடி நாளைக்கு முதலமைச்சராக கூட வர வாய்ப்பிருக்கு.

கவுண்டர்: அது கனவுல கூட நடக்காது மேன். தமிழ்நாட்டு ஜனங்க ஒண்ணும்
முட்டாள் இல்ல. அது இருக்கட்டும் உன் பையனுக்கு யார்றா லிட்டில் சூப்பர் ஸ்டார்னு
பட்டம் குடுத்தது?

டீ.ஆர்: அது நாந்தாங்க குடுத்தேன். சின்ன வயசில கை கால விசுக்கு விசுக்குனு
ஆட்டுவானா அதுனால நானே அவனுக்கு பேர் வெச்சிட்டங்க. ஆனா பாருங்க
அவன் தமிழ்நாட்டையே கலக்கிடு இருக்கான். அடுத்த என் பையனுக்கு டுங்கிள்
டுங்கிள் சூப்பர் ஸ்டார்னு வெச்சிருக்கேனுங்னா அவனும் பெரிய ஆளா வருவான்.

கவுண்டர்: என்னமோ நாடார் கடையில முட்டாய் வாங்கி குடுத்த மாதிரி
சொல்றயேடா பட்டம்ங்றது மக்களா பாத்து குடுக்கறது. நீங்களா வச்சிக்கறதுக்கு
பேரு முடிச்சவிக்கத்தனம். ஏண்டா புல்டோசர் தலையா உங்குடும்பத்துல இத்தன
பேரு நடிக்கறது பத்தாதா? இன்னும் ஒரு பையன இட்டாந்து என்ன பண்ண போற.
மக்கள் பாவம் இல்ல. ஒண்ணாம் நம்பர் பொறுக்கி உன் பையன். இன்னொருத்தன்
எப்படி வரப்போறானோ தெரில.

டீ.ஆர்: அவனும் என்னை மாதிரியே எல்லா திறமையும் இருக்கற ஆளா
சினிமாவில ஜொளிப்பானுங்னா அது நிச்சயம்.

கவுண்டர்: கிழிப்பான் சரி, நீ மனுதாக்கல் பண்ண போகும்போது உங்கிட்டருந்து
பத்தாயிரம் ரூபாயை எவனோ களவாடிட்டு போயிட்டானாமே, சினிமாலதான் உன் வீரமெல்லாம். நிஜத்துல பாத்தியா ஒரு ப்ளடி பிக்பாக்கெட் உன்னை ஏமாத்திட்டான்.
இதுக்கு என்ன மேன் சொல்ற நீ?

டீ.ஆர்: அண்ணே அது எதிர்க்கட்சியோட சதி. நான் நின்னா ஜெயிச்சிடுவேன்னு
அப்படி பண்ணிட்டாங்க.

கவுண்டர்: நின்னா டெபாசிட்டே கிடைக்காதுன்னா பேச்சு மட்டும் டன் கணக்குல
பேசு. இன்னும் உன் குடும்பத்துல இண்டு இடுக்கு, சந்து பொந்துலருந்து எல்லாரையும்
கூட்டி சினிமால விட்டு தமிழ் மக்கள சாகடி. நான் என்ன சொன்னாலும் திருந்த
போறதில்ல. ஆனா இன்னொரு படம் மட்டும் நீ நடிச்சேன்னு தெரிஞ்சுது மகனே
அடுப்புக்குள்ள உன் தலைய விடு கருக்கிபுடுவேன் ஜாக்கிரதை.

பேட்டி முடிஞ்சி போச்சு அப்படியே திரும்பி பாக்காம ஓடிப்போயிடு.

31 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

me the first-uu??

ஆதவன் said...

இத மட்டும் டி.ர் பாத்தாருன்னா பேசாம டீ ஆத்தவே போயிடுவாரு

அபி அப்பா said...

//உலகத்துலயே ஒரு ஆள வெச்சிகிட்டு கட்சி நடத்துற ஆள் நீயாத்தான்
இருப்ப, //

இதை வண்மையா கண்டிக்கிறேன். சிம்புவும் அந்த கட்சிதான். முழுசா படிச்சுட்டு அப்பால வர்ரேன்:-))

.:: மை ஃபிரண்ட் ::. said...

வெட்டிக்கிட்ட இது காட்டுனா, அவருக்கே சந்தேகம் வந்துடும்.. இதை யார் எழுதுனார் என்று!!! வெட்டி எழுதுற மாதிரியே டெவில் ஷோவை கலக்கிட்டீங்க.. ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அந்த படத்தை அவனுங்க க்ராபிக்ஸ், மேக்கப்
போட்டு கஷ்டப்பட்டு எடுத்தாங்க உனக்கு க்ராபிக்ஸ், மேக்கப்பு எல்லாம் போடாம
அம்சமா பொருந்துச்சே //

ROTFL... :-))))))

//எதுக்கு மேன்
இந்த ஒன் மேன் ஆர்மி.//
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. இது கேப்டனுடைய பட்டம்.. ஹிஹி.. சரி, வெட்டி கிட்ட அனுமதி வாங்கி கேப்டனை இண்டர்வியூ பண்ணுங்க.. :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//என் பேர்ல "விஜய" வார்த்தைய சேத்துகிட்டா தமிழ்நாட்டு முதலமைச்சர்
ஆயிடுவேன்னு மனசுக்குள்ள கவுளி கத்துச்சி. //

ம்ம்.. நினைப்புதான் பொழப்பை கெடுக்கும்..

நாகை சிவா said...

//வெட்டிக்கிட்ட இது காட்டுனா, அவருக்கே சந்தேகம் வந்துடும்.. இதை யார் எழுதுனார் என்று!!! வெட்டி எழுதுற மாதிரியே டெவில் ஷோவை கலக்கிட்டீங்க.. ;-) //

எனக்கு என்னமோ டவுட்டா இருக்கு. வெட்டி எழுதி வச்சு இருந்த்தை திருடிட்டு வந்து இங்க போட்டானோ என்று....

நம்பமுடியல இந்த பயல, ஏன்னா இவன் சின்ன வயசுல புத்தகத்தை திருடி பய புள்ள தானா!

நாகை சிவா said...

//ஈரோட்டுல கலைஞருக்கு ஆதரவா பேசினேன்
அதனாலதான் இந்த தேர்தல்ல அவர் ஜெயிச்சாரு.//

அப்ப மாயவரத்துல நீர் தனியா நின்னது என்ன கணக்கு மேன்....

Hariharan # 03985177737685368452 said...

//ஏண்டா ஜனங்க மூடநம்பிக்கைய போக்குறதுல திராவிட கட்சிக்கு பெரிய பங்கு உண்டு.//

பகுத்தற்வு மஞ்சள் துண்டு மேட்டரை சரியா காமெடிக்குள்ள வச்சி எக்ஸ்ட்ரா எபெக்டு தந்திருக்கீங்க! :-))

கலக்கலா வந்திருக்கு ரெண்டு பதிவும்!

வாழ்த்துக்கள்!
டி.ஆர் கலாய்ப்பு பதிவுகளுக்கும், நட்சத்திரமா ஜொலிக்கிறதுக்கும்!

தேவ் | Dev said...

FIRST CLASS SHOW maapu !!!!

லொடுக்கு said...

மின்னும் விண்மீனுக்கு பாராட்டுக்கள். நல்ல இருக்குய்யா பதிவு...

அபி அப்பா said...

//அப்ப மாயவரத்துல நீர் தனியா நின்னது என்ன கணக்கு மேன்....
//

புலியாரே! நாங்க மனிதர்களுக்கு மட்டுமே ஓட்டு போடுவோம்.

இலவசக்கொத்தனார் said...

முதல் பகுதி அளவுக்கு இல்லைங்க. கொஞ்சம் அவசரத்துல எழுதின மாதிரி இருக்கு. அப்படித்தானா?

G.Ragavan said...

தம்பி...சூப்பரு. இனிமேலாவது விஜய டி.ஆர் படம் எடுக்காம இருந்தாச் சரிதான்.

நட்சத்திர வாரத்தில் கலக்க என் வாழ்த்துகள்.

ஜி said...

//எனக்கு என்னமோ டவுட்டா இருக்கு. வெட்டி எழுதி வச்சு இருந்த்தை திருடிட்டு வந்து இங்க போட்டானோ என்று....//

இருக்கும்... இருக்கும்...

ஜி said...

அடுத்தது குடும்ப குத்துவிளக்கு மும்தாஜையும் பேட்டி எடுக்க அன்புடன் வேண்டி கொள்கிறேன்....

கோபிநாத் said...

\\உலகத்துலயே ஒரு ஆள வெச்சிகிட்டு கட்சி நடத்துற ஆள் நீயாத்தான் இருப்ப, \\

ஆகா தூள்கிளப்புரிங்க போல..;-)))

கோபிநாத் said...

\\ஜி - Z said...
அடுத்தது குடும்ப குத்துவிளக்கு மும்தாஜையும் பேட்டி எடுக்க அன்புடன் வேண்டி கொள்கிறேன்....\\

ரிப்பீட்டேய்...

வெட்டிப்பயல் said...

கலக்கல் தம்பி,
நான் எழுதிருந்தாக்கூட இவ்வளவு கலக்கலா எழுதி இருக்க முடியாது...

நட்சத்திர வாரத்துல கலக்கல்...

சந்தோஷ் aka Santhosh said...

கதிரு,
கலக்கிட்டேமா, நீங்க ஒரு டெவில் ஷோ காட்டிகிட்டு இருக்கே உனக்கு அங்க வெட்டி ஒரு டெவில் ஷோ காட்டிகிட்டு இருக்காரு என்னவோபோ.
//

//எனக்கு என்னமோ டவுட்டா இருக்கு. வெட்டி எழுதி வச்சு இருந்த்தை திருடிட்டு வந்து இங்க போட்டானோ என்று....//

இருக்கும்... இருக்கும்...//


ஆமாம் இருக்கும் இருக்கும். ஒரு பத்து மணி நேரம் ஆளை காணோம் என்ன பண்ணினான்னு தெரியலை.
//ஜி - Z said...

அடுத்தது குடும்ப குத்துவிளக்கு மும்தாஜையும் பேட்டி எடுக்க அன்புடன் வேண்டி கொள்கிறேன்....
//

யாரோட குடும்ப குத்து விளக்கு T.Rஆ நல்லா இருக்குற குடும்பத்துல குழப்பத்தை பண்ணாதய்யா ஜீ.

Anonymous said...

Sooperappu..

Nayagan.

தம்பி said...

//me the first-uu?? //

ஆமாங்க தங்கச்சிக்கா.

//இத மட்டும் டி.ர் பாத்தாருன்னா பேசாம டீ ஆத்தவே போயிடுவாரு //

முன்னாடி டீதான் ஆத்திகிட்டு இருந்தாரா?

//இதை வண்மையா கண்டிக்கிறேன். சிம்புவும் அந்த கட்சிதான். முழுசா படிச்சுட்டு அப்பால வர்ரேன்:-))//

அவனுக்கு ஓட்டு போடற வயசே வரலன்னு டீ.ஆர் கற்பூரத்த அணைச்சு சத்தியம் பண்ணுவாரு.

//வெட்டிக்கிட்ட இது காட்டுனா, அவருக்கே சந்தேகம் வந்துடும்.. இதை யார் எழுதுனார் என்று!!! வெட்டி எழுதுற மாதிரியே டெவில் ஷோவை கலக்கிட்டீங்க.. ;-)//

அவரோட பங்கும் இதுல இருக்குங்க தங்கச்சிக்கா.

தம்பி said...

//ம்ம்.. நினைப்புதான் பொழப்பை கெடுக்கும்..//

ஒரு பேட்டில அவரே இதை சொல்லியிருக்காரு.

தம்பி said...

//எனக்கு என்னமோ டவுட்டா இருக்கு. வெட்டி எழுதி வச்சு இருந்த்தை திருடிட்டு வந்து இங்க போட்டானோ என்று....

நம்பமுடியல இந்த பயல, ஏன்னா இவன் சின்ன வயசுல புத்தகத்தை திருடி பய புள்ள தானா!//

உண்மை அதுதான் புலி. கணக்கு போட்டது கரெக்டுதான், பின்ன புலியாச்சே

//அப்ப மாயவரத்துல நீர் தனியா நின்னது என்ன கணக்கு மேன்....//

தனியா நின்னேன்னுதான் கணக்கு. :))

தம்பி said...

//ஏண்டா ஜனங்க மூடநம்பிக்கைய போக்குறதுல திராவிட கட்சிக்கு பெரிய பங்கு உண்டு.//

//பகுத்தற்வு மஞ்சள் துண்டு மேட்டரை சரியா காமெடிக்குள்ள வச்சி எக்ஸ்ட்ரா எபெக்டு தந்திருக்கீங்க! :-))//

பாருங்கய்யா எனக்கே தெரியாத காமெடிய இவரு கண்டுபிடிச்சி சொல்றாரு. :))
அய்யா உங்க லொள்ளு இங்க காமிக்க வேணாம் சாமி.
என்னை வெச்சி காமெடி பண்ணுங்க வேற எதையும் வெச்சி காமெடி பண்ண வேணாம்.

//கலக்கலா வந்திருக்கு ரெண்டு பதிவும்!//

மிக்க நன்றி.

//வாழ்த்துக்கள்!
டி.ஆர் கலாய்ப்பு பதிவுகளுக்கும், நட்சத்திரமா ஜொலிக்கிறதுக்கும்!//

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஹரிஹரன்.

தம்பி said...

//FIRST CLASS SHOW maapu !!!! //

வாங்க போர்வாள்!

மிக்க நன்றி மாப்பு!

//மின்னும் விண்மீனுக்கு பாராட்டுக்கள். நல்ல இருக்குய்யா பதிவு... //

மிக்க நன்றி லொடுக்கு.

//புலியாரே! நாங்க மனிதர்களுக்கு மட்டுமே ஓட்டு போடுவோம்.//

அப்ப புலிய என்னன்னு சொல்ல வரிங்க அபி அப்பா?

//முதல் பகுதி அளவுக்கு இல்லைங்க. கொஞ்சம் அவசரத்துல எழுதின மாதிரி இருக்கு. அப்படித்தானா?//

கொத்ஸ் அந்த அளவுக்கு இல்லன்னாலும் சுமாரா இருந்துச்சா
அது போதும் அடுத்த முறை சிறப்பா செஞ்சிடலாம்.

கப்பி பய said...

:))))))

Kovai Mani - கோவை மணி said...

நல்லா இருக்குங்க..

//கீரிபுள்ள தலையா. ஆனா ஒண்ணு அந்த படத்தை அவனுங்க க்ராபிக்ஸ், மேக்கப்
போட்டு கஷ்டப்பட்டு எடுத்தாங்க உனக்கு க்ராபிக்ஸ், மேக்கப்பு எல்லாம் போடாம
அம்சமா பொருந்துச்சே அதுதான் படத்தோட ஹைலைட்டு அந்த விஷயத்துல நீ
ஜெயிச்சிட்ட. //

விழுந்து விழுந்து சிரிச்சேன் :))

தம்பி said...

//தம்பி...சூப்பரு. இனிமேலாவது விஜய டி.ஆர் படம் எடுக்காம இருந்தாச் சரிதான்.

நட்சத்திர வாரத்தில் கலக்க என் வாழ்த்துகள்.//

வாங்க ஜீரா.

அவர் படம் எடுக்காம இருக்கணும்னா இந்த பதிவ படிக்கணும். :))

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

தம்பி said...

//எனக்கு என்னமோ டவுட்டா இருக்கு. வெட்டி எழுதி வச்சு இருந்த்தை திருடிட்டு வந்து இங்க போட்டானோ என்று....//

இருக்கும்... இருக்கும்...//

இருக்கும்டி இருக்கும்.

//அடுத்தது குடும்ப குத்துவிளக்கு மும்தாஜையும் பேட்டி எடுக்க அன்புடன் வேண்டி கொள்கிறேன்....//

மும்தாஜ் மேல அப்படி என்ன பாசம் ஜீயா உமக்கு.

//ஆகா தூள்கிளப்புரிங்க போல..;-)))//

யாரு நானா? இல்ல டீ.ஆரா?

தம்பி said...

//ரிப்பீட்டேய்...//

அன்பு கோபி.

இதே கமெண்ட் உன் பேர்ல எல்லா ப்ளாக்லயும் பாக்குறேன்.

இதுதான் உனக்கு கடைசி எச்சரிக்கை எங்கயாச்சும் இனிமேல் ரிப்பீட்டேய்னு கமெண்ட் பாத்தேன் உனக்கு ரிவிட்டுதாண்டி.

//கலக்கல் தம்பி,
நான் எழுதிருந்தாக்கூட இவ்வளவு கலக்கலா எழுதி இருக்க முடியாது...

நட்சத்திர வாரத்துல கலக்கல்...//

வாய்யா வெட்டி!

நீயே சொல்லிட்டன்னா சரியாதான் இருக்கும்.

என்னைய கலாய்ச்சவன் தான நீ இருடி உன்ன பாத்துக்கரேன்.