எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, March 12, 2007

கந்துமணி, பென்ஸ் மாமா - க.க.க.போ

அன்று ஞாயிற்றுக்கிழமை________

வழக்கம்போல பென்ஸ் மாமா மற்ற உ.பா பிரியர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி ஏற்பாடுகளை தடபுடலாக கவனித்துக்கொண்டார். லண்டனில் செட்டில் ஆகிவிட்ட சென்னைத்தமிழரை சந்திப்பதாக ஏற்பாடு. தெரியாத்தனமாக பென்ஸ் மாமாவுக்கு
அவர் வரப்போகும் விஷயத்தை முன் கூட்டியே உளறி விட்டேன். அவரும் ட்யூட்டி
ப்ரீ ஷாப்பில் உ.பா வாங்கி வருமாரு நண்பருக்குஅன்புக் கட்டளையிட்டுவிட்டார்.
நண்பரும் சிரித்தபடியே வாங்கி வருவதாக உறுதியளித்து விட்டார். அந்த
சரக்குகளுக்கு உற்சவம்தான் இன்று.

மகாபலிபுரம் கடற்கரை சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் சந்திப்பதாக
ஏற்கனவே முடிவு செய்திருந்தார்கள். பெரும்பாலும் இது போன்ற குடிமகன்களுக்கு
மத்தியில் கும்மி அடித்து பழகி விட்டதால் தவிர்க்க முடியவில்லை. பென்ஸ்
மாமா காலையிலேயே குளித்து முடித்து பட்டையடித்து வந்திருந்தார். இது
போன்ற மேட்டர்களுக்கு ஒரு அதீதமான ஆர்வம் காட்டுவது இவரின் வழக்கம். அதுவுமில்லாமல் வந்திருப்பது வெளிநாட்டு சரக்கல்லவா அதுதான் ,மனிதர்
நிகழ்ச்சி அமைப்பாளர் ரேஞ்சுக்கு அளப்பறை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

பூஜைக்கு காண்டிராக்டர் சுப்பிரமணியம், போலீஸ் உயரதிகாரி பெயர்
குரிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் (கண்ணியமாம்),
வெளிநாட்டுக்கார் டீலரான சண்முகம், இன்கம்டாக்ஸ் அதிகாரி குலசேகரன்
ஆகியோர் வருவதாக பென்ஸ் மாமா முன்பே சொல்லியிருந்தார்.

சரியாக பத்து மணிக்கு கிளம்புவதாக ஏற்பாடு. என்னை ஏகத்திற்கும்
விரட்டிக் கொண்டிருந்தார் இதற்கிடையில் பங்சுவாலிட்டி அட்வைஸ்
வேறு. படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடிவைத்துவிட்டு கிளம்பினேன்.
கண்ணியமான அந்த அதிகாரி பிக்கப் செய்து கொள்வதாக சொல்லி இருந்தார்
அதற்காக காத்திருக்கொம்போது எங்களை கடந்து இரு இளம்பெண்கள்
கடந்து சென்றனர்.

ஏம்பா கந்துமணி இப்போ போனாங்களே ரெண்டு பேரு, அவங்கள பாத்தியா?
பென்ஸ் மாமா கேட்டார்.

"பாத்தேனே"

எப்படி தோணுது?

எப்படி தோணுதுன்னு ஏன் எங்கிட்ட கேக்கறிங்க?

"அட, சும்மா சொல்லுப்பா"

"சரியா கவனிக்கலயே"

நம்மள கடந்து போன அந்த ரெண்டு செகண்ட்ல நான் கவனிச்ச
விஷயத்த சொல்றேன் கேளு.

போனவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சி ஆனா தாலியை
மறைச்சிருக்காங்க. இடப்பக்கம் போனாளே அவளுக்கு வயது 29 இருக்கலாம்
அவள் அணிந்திருந்த ஜீன்ஸ் இந்திய தயாரிப்பல்ல. தங்க நிறத்துல கேசம்
இருக்கறத பாத்தா மாதத்துக்கு இருமுறையாச்சும் அழகு நிலையத்துக்கு
போய் கலரிங் பண்ணிக்குவாங்க போலருக்கு. உனக்கு தெரியுமா? இரண்டு
வாரங்களுக்கு ஒருமுறை நகத்தை அழகுபடுத்தறதுக்கு மட்டுமே 200 ரூபாய்
செலவு பண்றாங்களாம் பொண்ணுங்க. அந்த மாதிரி அவள் நகத்தை ஒழுங்கு
படுத்தி நளினமா வெச்சிருக்கா. கல்யாணமாகி சுமார் ரெண்டு மூணு வருசம்
ஆகியிருக்கலாம். ஆனா இன்னும் குழந்தை பெத்துக்கல. ஏதாவது பன்னாட்டு
கம்பெனில வேலை செய்றவளா இருக்கலாம். அவள் போட்டிருக்கற செண்ட்
டெர்ரிக் உமன் அமெரிக்கதயாரிப்பு....

சொல்லிக்கொண்டே போனவரை கையமர்த்தினேன்.

எப்படிங்க இவ்வளவு நுணுக்கமா கவனிச்சிங்க?

"அதான் பென்ஸ் _______"

இரண்டு நொடிகள் கடந்து போனதுக்கே இவ்வளவு சொல்றாரு. அஞ்சு நிமிஷம்
பேசினா ஜாதகத்தையே புட்டு புட்டு வெச்சிடுவாரு போல. மனிதரின் கண்,
புத்திக்கூர்மையை நினைத்து வியந்து போனேன்.

இல்லையா பின்ன!

சொன்னவர்கள் சொன்ன நேரத்திற்கு வந்தார்கள் இது போன்ற விஷயங்களில்
நேரத்திற்கு வருவதில் வெள்ளையகளுக்கு சவால் விடுவார்கள் இவர்கள்.

ரிசப்ஷனிஸ்ட் பெண்ணிடம் வழிந்து கொண்டிருந்த மாமாவை இழுந்து வராத
குறையாக இழுத்து வந்தார் லண்டன் நண்பர். மிஸ்டர் கண்ணியம்
பிரிய மனமில்லாம திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வந்தார்.

வீட்டில் மனைவி கைப்பட செய்த தூள் பக்கோடா, முந்திரிபருப்பு (நெய்யில்
வறுத்தது), மிளகு வடை, மசாலா பொரி ஆகியவற்றை கடைபரப்பி வைத்தார்
இது போன்ற சமயங்களில் கடைகளில் கிடைக்கும் கண்ட கண்ட சைட்
டிஷ்களில் டேஸ்ட் இருக்காது என்று வீட்டிலிருந்து எடுத்து வரும் பழக்கம்
உடையவர் திருவாளர் கண்ணியம். அவருடை மனைவிக்கும் வெளியில்
சாப்பிடுவது பிடிக்காதாம்.

பூஜையை ஆரம்பித்திருந்தனர். ஒயிட் ரம், ஸ்காட்ச் விஸ்கி, ப்ளாக் லேபிள்
ஸ்வியோன் ப்ளோங்க் போன்ற மதுவகைகளை உ.பா பிரியர்களுக்கு
"பரிசளிக்க" வாங்கி வந்திருந்தார்.

பென்ஸ் மாமாக்கு நாக்கில் எச்சில் ஊறியது போலும் பூஜையை உடனே
துவக்குமாறு காளைகளை முடுக்கி விட்டார். அவரவர் தத்தமது கோப்பைகளில் ஊற்றிக்கொண்டு உற்சாக உலகத்திற்கு செல்ல ஆயத்தமாயினர்.

நண்பரிடம் லண்டன் அனுபவங்களை சொல்லுமாறு வேண்டினேன்.
பொருளாதாரம், தமிழ்மக்களின் விருந்தோம்பல், என்று பேச்சு போனது
இடையில் பென்ஸ் மாமா தன் துறை சார்ந்த கேள்வியொன்றை வழக்கம்
போல வீசினார்.

லண்டனில் வளரும் தமிழ்ப்பெண்களின் கலாச்சாரம் எப்படிப்போகிறது?
உடை, நடை, எல்லாவற்றிலும் இந்தியத்தன்மை இருக்கிறதா
அல்லது அங்கேயே பிறந்து வளர்ந்ததால் மேற்கத்திய பாணி இருக்கிறதா?

லண்டனில் இருவகையான பெண்களை காணமுடியும், ஈழத்து தமிழ்ப் பெண்கள்,
தமிழ்நாட்டு தமிழ்ப்பெண்கள் அனைவருமே அங்கத்திய நாகரீகத்தில்தான் வாழவிரும்புகிறார்கள். சாதாரணமாக பெண்களை பப்களிலும், பார்களிலும்
காணலாம். சென்னையில் கூட பார்த்திருக்கிறேன்.

"எனக்குள் தோன்றியது சென்னையில் கூட வளர்ந்து விட்டதா"

என்னங்க ஒரே குழப்பமா இருக்கா?

"மேலே உள்ளது நான் எழுதினதுதான்"
ஆனால் நம்மிள் பலரும் பல வருடங்களாக இது போன்ற கட்டுரையினை
படித்திருக்கலாம். நான் கூட சிறுவயதில் இருந்தே படித்து வந்தேன்.

எங்கப்பா சொல்வாரு. டேய் உனக்கு படிப்புதான் ஏறமாட்டேங்குது அதனால
தினசரிகள படிக்குற பழக்கத்தை வளர்த்துக்கோ. அட்லீஸ்ட் நாட்டு நடப்பாச்சும்
தெரிஞ்சுக்க வசதியா இருக்கும்னு. அப்போதான் ஆரம்பிச்சது இத படிக்கும் பழக்கம். ஞாயிற்றுக்கிழமை இலவச இணைப்பாக வரும் அதில் நான் விரும்பி பார்ப்பது
குறுக்கெழுத்து போட்டிதான். நிரப்புவதில் இருக்கும் ஆர்வம் அனுப்புவதில்
இருந்ததில்லை.


இவங்க எங்கிட்டாச்சும் போய் கும்மாளம் அடிச்சுட்டு வருவாங்களாம் அதை
அப்படியே தைரியமா பத்திரிக்கையில வேற எழுதுவாங்களாம். இதுல பெரிய
பெரிய அதிகாரிங்களும், காவல்துறையை சேர்ந்தவங்களும், ரவுடிகளும் அருகருகே
அமர்ந்து அருந்துவாங்களாம்.

அட நாட்டுல எவந்தான் ஜாலியா இல்ல எல்லா உரிமையும் இருக்குதான். ஆனா
அதை ஏன் நாலு பேரு படிக்குற எடத்தில ஏன் எழுதறாங்கன்னு தெரில. வயதில்
சிறியவர்கள் படிச்சாங்கன்னா இது போனற செயல்கள் தவறே இல்லன்னு
முடிவுக்கு வந்துடுவாங்க.

பெரிய காமெடியே கேள்வி பதில்தான், அங்குட்டு கேக்குற கேள்வி
எதுவுமே விளங்குற கேள்வியா தெரியாது. படிக்க படு காமெடியா இருக்கும்.
"அந்த" மாதிரி சர்வே ஒண்ணு சொல்லுங்க சார்னு ஒரு கேள்வி கண்டிப்பா
இருக்கும். (எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு இந்த மாதிரி கேள்விய இவங்களே
கேட்டுக்கறாங்கன்னு)


சரி இப்ப எதுக்குடா இந்த மாதிரி கொசுவர்த்தி சுத்திட்டு இருக்கேன்னு கேக்கறிங்களா

ஏதோ தோணுச்சு எழுதறேன்.

காமெடி காமெடி காமெடி மட்டுமே!!

42 comments:

நாமக்கல் சிபி said...

நல்ல தமாஷ்!

ஜி said...

என்னப்பா தம்பி... உன்னோட பதிவையே ரெண்டு தடவ படிக்க வச்சிட்ட....

கொசுவத்தியையும், தற்கால எழுத்தையும் கொஞ்சம் பிரிச்சு எழுதியிருக்கக் கூடாதா???? கன்ஃபியூஸ் ஆகிப் போச்சு...

கோபிநாத் said...

தம்பிண்ணா...

அருமையான விஷயத்தை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கீங்க...

இ.சி.ஆர் said...

வணக்கங்ணா!

நட்சத்திரமானதுக்கு வாழ்த்துக்கள்!

இப்படித்தான் படிக்கிற பழக்கம் வளரும்னு எங்க அப்பாவும் இந்த பத்திரிக்கையை வாங்கினாரு.
மொதல்ல தினமும், அப்புறம் ஞாயிறு மட்டும்னு ஆகி இப்ப அந்த பத்திரிக்கை வாங்கறதையே நிறுத்திட்டோம். வெளியே சொல்ல வெக்கமாயிருக்கு, ஆனால் தமிழ் தினசரிகள் வாங்கவே பயமாயிருக்கு. கொலை, கற்பழிப்பு, கள்ளக்காதல், விபசாரம், இதப்பத்தியெல்லாம் இவற்றில் எழுதப்படுவதை படிக்கவே முடியலை.

கண்ணியமான, நடுநிலையான தினசரி தமிழில் இருக்கா?

நாகை சிவா said...

யோவ், எனக்கு ஒரு டவுட்,

இந்த போஸ்ட் நீ யார மனசுல வச்சுக்கிட்டு எழுதின, நம்ம ராயல் ராமை தானே.....

ராயல், ராயல், யோவ் ராயல் ராம் எங்க இருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்.

இந்த பஞ்சாயத்த முடிச்சுட்டு தான் அடுத்த வேலைய...........

நாகை சிவா said...

அந்த பஞ்சாயத்தை தீர்த்து வைக்க நம்ம செந்தழல் ரவியையும் அழைக்கின்றேன்.

பொன்ஸ் நடுவராக இருப்பார்.

நாகை சிவா said...

எனக்கு போன பதிவில் கொஞ்சம் வேலை இருக்கு. அத முடிச்சுட்டு இங்க வரேன். அதுக்குள்ள நான் கூப்பிட்டவங்க எல்லாம் வந்துடுவாங்கனு நினைக்குறேன்.

சந்தோஷ் aka Santhosh said...

தம்பி,
கலக்கிப்பூட்டே போப்பூ..

மணிகண்டன் said...

don't publish this comment..

watch world cup opening ceremony at

http://wcup2007.blogspot.com/2007/03/blog-post_12.html

வெட்டிப்பயல் said...

நானும் முதல்ல எல்லாம் இந்த மாதிரி படிச்சிட்டு என்னடா இதுல அப்படி என்ன இருக்கு இத போயி எழுதிருக்கானுங்களேனு யோசிப்பேன்...

ஆனா உன்னைய மாதிரி ஆராய்ச்சி பண்ற அளவுக்கு படிச்சதில்லை ;)

கப்பி பய said...

//லண்டனில் செட்டில் ஆகிவிட்ட சென்னைத்தமிழரை //

ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிப்போச்சே...சென்னை தமிழச்சியில்ல? :))

நாகை சிவா said...

//ஆனா உன்னைய மாதிரி ஆராய்ச்சி பண்ற அளவுக்கு படிச்சதில்லை ;) //

வெட்டித்தனமா அத படிச்சுப்புட்டு அத வச்சு வெட்டித்தனமா ஒரு பதிவு போட்டுட்டு, வெட்டியவே படிக்க வச்சு இருக்கீயே இது நியாயமா?

நாகை சிவா said...

//கண்ணியமான, நடுநிலையான தினசரி தமிழில் இருக்கா? //

நடுநிலைனு எல்லாம் சொல்ல முடியாது, கொஞ்சம் கண்ணியமான பத்திரிக்கை என்றால் திணமணியை சொல்லாம்.

நாகை சிவா said...

//அருமையான விஷயத்தை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கீங்க... //

கோபி, ஏதுய்யா அருமையான விசயம். தண்ணி அடிப்பதா....

நாகை சிவா said...

//காமெடி காமெடி காமெடி மட்டுமே!! //

இதுல காமெடி எங்க இருக்குனு சொல்லிட்டு போயிடு, உனக்கு புண்ணியமா போகும். எங்களால் கண்டுப்பிடிக்க முடியல....

தம்பி said...

//நல்ல தமாஷ்! //

இதுல தமாஷ் எங்க இருக்குன்னு ஒரு கும்பல் வந்து கேக்கும் அதனால அப்படியே நியூட்ரல்ல விடறேன்.

நன்றி தள!

தம்பி said...

//என்னப்பா தம்பி... உன்னோட பதிவையே ரெண்டு தடவ படிக்க வச்சிட்ட....

கொசுவத்தியையும், தற்கால எழுத்தையும் கொஞ்சம் பிரிச்சு எழுதியிருக்கக் கூடாதா???? கன்ஃபியூஸ் ஆகிப் போச்சு//

ஒரு சின்ன மிஸ்டேக் ஆகிப்போச்சிங்க ஜி. மன்னிக்கணும்.

தம்பி said...

வணக்கங்ணா!

நட்சத்திரமானதுக்கு வாழ்த்துக்கள்!

நன்றிங்க ஈ.சி.ஆர்

//இப்படித்தான் படிக்கிற பழக்கம் வளரும்னு எங்க அப்பாவும் இந்த பத்திரிக்கையை வாங்கினாரு.
மொதல்ல தினமும், அப்புறம் ஞாயிறு மட்டும்னு ஆகி இப்ப அந்த பத்திரிக்கை வாங்கறதையே நிறுத்திட்டோம். வெளியே சொல்ல வெக்கமாயிருக்கு, ஆனால் தமிழ் தினசரிகள் வாங்கவே பயமாயிருக்கு. கொலை, கற்பழிப்பு, கள்ளக்காதல், விபசாரம், இதப்பத்தியெல்லாம் இவற்றில் எழுதப்படுவதை படிக்கவே முடியலை. //

கரக்டா சொன்னிங்க.!

நடுநிலை நாளேடுன்னு ஒண்ணு இல்லவே இல்ல. அப்படியே இருந்தாலும் அதுக்குவேற மாதிரி சாயம் பூசிடுவாங்க.

தம்பி said...

//யோவ், எனக்கு ஒரு டவுட்,

இந்த போஸ்ட் நீ யார மனசுல வச்சுக்கிட்டு எழுதின, நம்ம ராயல் ராமை தானே.....

ராயல், ராயல், யோவ் ராயல் ராம் எங்க இருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்.

இந்த பஞ்சாயத்த முடிச்சுட்டு தான் அடுத்த வேலைய........... //

எது செய்யிறயோ இல்லையோ நல்லா பிடில் போடுறய்யா நீ!

தம்பி said...

//எனக்கு போன பதிவில் கொஞ்சம் வேலை இருக்கு. அத முடிச்சுட்டு இங்க வரேன். அதுக்குள்ள நான் கூப்பிட்டவங்க எல்லாம் வந்துடுவாங்கனு நினைக்குறேன்.//

இதமட்டும் நல்லா பாரு.

தம்பி said...

//தம்பி,
கலக்கிப்பூட்டே போப்பூ..//

தேங்கீஸ் சந்தோஷ்!

Anonymous said...

//காமெடி காமெடி காமெடி மட்டுமே!! //

இதுல காமெடி எங்க இருக்குனு சொல்லிட்டு போயிடு, உனக்கு புண்ணியமா போகும். எங்களால் கண்டுப்பிடிக்க முடியல....

//நல்ல தமாஷ்! //

இதுல தமாஷ் எங்க இருக்குன்னு ஒரு கும்பல் வந்து கேக்கும் அதனால அப்படியே நியூட்ரல்ல விடறேன்.//

இது நல்ல காமெடி.உங்களை ஒரு வழி பன்னாம விடமாட்டங்க போல.

தம்பி said...

//ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிப்போச்சே...சென்னை தமிழச்சியில்ல? :)) //

வா கப்பி,

உன்னதான் எதிர்பாத்துட்டே இருந்தேன். இங்க நடக்குற அக்கிரமத்த நீயாச்சும் கேளு,

அது ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லப்பா கரெக்டாதான் போட்டுருக்கேன்.

தம்பி said...

//வெட்டித்தனமா அத படிச்சுப்புட்டு அத வச்சு வெட்டித்தனமா ஒரு பதிவு போட்டுட்டு, வெட்டியவே படிக்க வச்சு இருக்கீயே இது நியாயமா? //

வெட்டி மேல இருக்கற கோவத்த என்மேல ஏன்லே காமிக்கற நீயி!

தம்பி said...

//நடுநிலைனு எல்லாம் சொல்ல முடியாது, கொஞ்சம் கண்ணியமான பத்திரிக்கை என்றால் திணமணியை சொல்லாம். //

என்ன செய்யிறது அந்த பத்திரிக்கைய யாருமே வாங்குறது இல்ல. அது கொஞ்சம் நல்ல பத்திரிக்கைதான்,

தம்பி said...

//கோபி, ஏதுய்யா அருமையான விசயம். தண்ணி அடிப்பதா.... //

ஆமா அது என்னவோ சாதனை பண்ணிட்டா மாதிரி பத்திரிக்கைல எழுதறானுங்க. காமெடிப்பா :))

வெட்டிப்பயல் said...

//வெட்டிப்பயல் said...

நானும் முதல்ல எல்லாம் இந்த மாதிரி படிச்சிட்டு என்னடா இதுல அப்படி என்ன இருக்கு இத போயி எழுதிருக்கானுங்களேனு யோசிப்பேன்...

ஆனா உன்னைய மாதிரி ஆராய்ச்சி பண்ற அளவுக்கு படிச்சதில்லை ;) //

என் பின்னூட்டத்திற்கு பதில் சொல்லாமல் ஜம்ப் பண்ணி அடுத்த பின்னூட்டத்திற்கு பதில் சொல்லிய தம்பிக்கு இனி இந்த வெட்டியின் பின்னூட்டங்கள் கிடையாது...

என் பின்னூட்டத்திற்கு எல்லாம் பதில் சொல்லிய பிறகு தான் அடுத்த பின்னூட்டம் :-)

இராம் said...

//யோவ், எனக்கு ஒரு டவுட்,

இந்த போஸ்ட் நீ யார மனசுல வச்சுக்கிட்டு எழுதின, நம்ம ராயல் ராமை தானே.....

ராயல், ராயல், யோவ் ராயல் ராம் எங்க இருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்.

இந்த பஞ்சாயத்த முடிச்சுட்டு தான் அடுத்த வேலைய...........//

ஏலே புலி நல்லாதாய்யா வேலை பார்க்கிறே... :(

துளசி கோபால் said...

என் சந்தேகத்தையும் சொல்லவா?

அந்த அந்துமணி(யே) நீர்தானா?

இலவசக்கொத்தனார் said...

//அந்த பஞ்சாயத்தை தீர்த்து வைக்க நம்ம செந்தழல் ரவியையும் அழைக்கின்றேன்.

பொன்ஸ் நடுவராக இருப்பார்.//

நடக்கும் பஞ்சாயத்தை வேடிக்கை பார்க்க நானும் இருப்பேன் என்பதை பெரு மழிச்சியுடம் தெரிவித்துக் கொள்கிறேன்.

தம்பி said...

//என் சந்தேகத்தையும் சொல்லவா?

அந்த அந்துமணி(யே) நீர்தானா?//

என்ன டீச்சர் இப்படி சொல்லிட்டிங்க..

தம்பி said...

//இலவசக்கொத்தனார் said...
//அந்த பஞ்சாயத்தை தீர்த்து வைக்க நம்ம செந்தழல் ரவியையும் அழைக்கின்றேன்.

பொன்ஸ் நடுவராக இருப்பார்.//

நடக்கும் பஞ்சாயத்தை வேடிக்கை பார்க்க நானும் இருப்பேன் என்பதை பெரு மகிழ்ச்சியுடம் தெரிவித்துக் கொள்கிறேன்//

கொத்தனார் நீங்களும் அந்த குரூப்பு கூட சேந்துட்டிங்களா??

ஜி said...

//கொத்தனார் நீங்களும் அந்த குரூப்பு கூட சேந்துட்டிங்களா?? //

இது என்னது?? 'அந்த' குரூப் என்று குரூப்பிஸம் செய்யும் தம்பியை வன்மையாகக் கண்டிக்கிறேன்....

ஜி said...

ராமண்ணனுக்குப் பிறகு அந்துமணியை ஆராய்ச்சி செய்த அந்துமணியின் அயராத ரசிகன் தம்பி வாழ்க...

.:: மை ஃபிரண்ட் ::. said...

நான் வர்ரதுக்குள்ளே 31 தாண்டிருச்சா??

அபி அப்பா said...

நான் வரும் முன்னே 34 ஆயிடுச்சே!! தம்பி, கலக்கிட்டீங்க. :-)))

Anonymous said...

எலே தம்பி,

கந்துமணி பேருல எழுதுனாலும் இதெல்லாம் அஜ்மான் கடற்கரையில் உபாவோட நீயும் உன் கூட்டாளியும் பேசுனதுதான்னு ஊருக்குள்ள் ஒரே பேச்சா கிடக்கு மக்கா.

சாத்தான்குளத்தான்

கோபிநாத் said...

\\ நாகை சிவா said...
//அருமையான விஷயத்தை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கீங்க... //

கோபி, ஏதுய்யா அருமையான விசயம். தண்ணி அடிப்பதா....\\\

புலி எசமா....தம்பி கடைசியா சொன்னா விஷயத்தை பத்தி தான் அருமைன்னு சொன்னேனுங்க எசமான்...

தம்பி said...

//நானும் முதல்ல எல்லாம் இந்த மாதிரி படிச்சிட்டு என்னடா இதுல அப்படி என்ன இருக்கு இத போயி எழுதிருக்கானுங்களேனு யோசிப்பேன்...

ஆனா உன்னைய மாதிரி ஆராய்ச்சி பண்ற அளவுக்கு படிச்சதில்லை ;)//

அதுல ஆராய்ச்சி பண்றதுக்கு ஒண்ணுமே இல்ல, எல்லாமே மொக்கைதான் ஆனாலும் அதை பிடிச்சி ஒரு மொக்கை பதிவு போட்டேன் பாத்தியா அங்கதான் நிக்குறான் கதிரு. :)

அருட்பெருங்கோ said...

சிரிப்புதான் போங்க….

வாழ்த்துக்கள் வலையுலக அந்துமணி!!!

கண்மணி said...

வாழ்த்துக்கள் தம்பி[ங்க]...நட்சத்திரமா மிளிர்வதற்கு.
ஆமா இந்த பதிவு நமக்கொன்னும் பிரிய மாட்டேங்குதே[எதாச்சும் வெவகாரமானதா?]

பொன்ஸ்~~Poorna said...

//பொன்ஸ் நடுவராக இருப்பார்//
சிவா, கொத்ஸ்,
இந்தப் பதிவை இப்போ தான் படிச்சேன். சாரி...

என்ன பஞ்சாயத்து? இந்த இடுகையில் உள்ள நகைச்சுவை எத்தனை பேருக்குப் புரிந்தது, என்ன புரிந்தது என்பது தானே? ;)