எல்லையற்ற அன்பு கொள்வோம்

Friday, March 16, 2007

இது ஒரு மொக்கை பதிவு.

டிஸ்கி: இது ஒரு மொக்கை பதிவு. ஆர்வத்துடன் படிக்கலாம்னு உள்ள வந்தவங்க
அப்படியே அப்பீட் ஆகிக்குங்க.

கல்லூரி வாழ்க்கைல அதுவும் விடுதியில நடந்த சம்பவங்களை வாழ்வின் எந்த நிலைக்கு போனாலும் மறக்கவே முடியாது. இப்போ நினைச்சாலும், ச்சே இவ்வளவு
மோசமாநடந்திருக்க கூடாதில்லன்னு தோணும் அப்படியொரு சம்பவம்தான் இது.
என் ரூம்ல அய்யன், கரடி, வாய்க்கா மண்டையன், ஊத்தவாயன், விமல
கோவிந்தானந்தா, டைரக்டர் என்னையும் சேர்த்தா ஏழு பேர். எல்லாருக்கும் சொந்த
பேர் இருந்தாலும் அதை யாரும் சீண்டறதே இல்ல.ராஜசேகர் உடம்பு பூரா முடி
இருக்கறதினால அவன் பேர் கரடி. எழுபதுகளில் வந்த படங்களின் வரும் கதாநாயகன்
மாதிரி நீளமா வகிடு எடுத்து தலை வாரியிருக்கறதினால அன்புவோட பேர் வாய்க்காமண்டையன்னு வச்சாச்சி. தோசைப்பிரியரா இருந்ததினால ஜெயக்குமார் பேர் ஊத்தவாயன். சாமியார் மாதிரி எந்நேரமும் அமைதியா, சாந்தமா இருக்கறதினாலயும் பொண்ணுங்ககிட்ட மட்டுமே பேசறதினாலயும் இவர் பேர் விமல்ராஜ் என்ற பெயரை
விமல கோவிந்தானந்தாவா மாத்தினோம். சினிமா சிந்தனையிலயே இருக்கறதினால
கார்த்திக் டைரக்டர். எனக்கு நிறைய பேரு இருக்கு, உயரமா இருக்கறதினால
நெட்டை, பனைமரம்னு செல்லமா கூப்பிடுவாங்க.

ஹாஸ்டல் நிர்வாகமே சரியில்லன்னு எல்லாரையும் தூக்கிட்டு புதுசா ஒரு வார்டனை போட்டாங்க. வரப்போறவரு பயங்கர கண்டிப்பு, அப்படி இப்படின்னு ஒரே பில்டப்பு
வேற. சரி யாரு வந்தா என்ன நம்மள ஒண்ணும் அசைக்க முடியாது அப்படின்னு
வீறாப்பா சுத்திகிட்டு இருந்தோம்.

புது வார்டன் வந்த அன்னிக்கே ஒரு மீட்டிங்க போட்டு ஏழரைக்கு சாப்பிடணும்
எட்டரை மணிக்குள்ள கேம்பஸ்ல இருக்கணும், ராத்திரி ஒம்பது மணிக்குள்ள
சாப்பிடணும். பத்துலருந்து பதினொரு மணி வரைக்கும் படிக்கணும். யாராச்சும் இதை
சரியா பாலோ பண்ணலன்னா 3 முறை வார்னிங் நாலாவது முறை ஹாஸ்டல விட்டு தூக்கிடுவோம்னு பயங்கர ஒவ்வாத கண்டிஷன்கள் குடுத்துட்டு இருந்தாரு.

மாப்ள இது கொஞ்சம் கூட சரியில்ல திடீர்னு "க்ளாஸ்ல போர் அடிச்சுதுன்னு
களைச்சி போயி" ரூம் வந்து படுத்துட்டு இருந்தேன். அந்த வாட்ச்மேன் பய
வார்டன்கிட்ட போட்டுகுடுத்துட்டான்.ரூமுக்கு வந்தவன் நேரா பிரின்சிபால் ரூமுக்கு
அனுப்பிட்டான்னு அங்க போனா காதுல கேக்க முடியாத அளவுக்கு திட்டறார் பிரின்சி.
இப்படி வாய்க்கா மண்டையன் கதறிட்டான்.

இவ்ளோ ஸ்ட்ரிக்டா இருக்கற ஆளு நேத்து ஜூனியர் பையன் ஒருத்தனுக்கு
ராத்திரி காக்கா வலிப்பு வந்துடுச்சி. ஹாஸ்டல் ஜீப்பு ட்ரைவர போய் எழுப்பினா
வார்டன சொல்ல சொல்லு நான் வரேன்றான். அந்தாள போய் எழுப்பினா
எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்னு கதவ திறக்காமலே பதில் சொல்லி
அனுப்பிட்டாரு. இது ஊத்தவாயன்

மச்சி மேட்டர் தெரியாதா? அந்தாளுக்கு மூலம்டா ராத்திரி பத்து மணிக்கு மேல
மருந்தை தடவிட்டு படுத்தான்னா கடவுளே வந்து எழுப்பினாலும். எந்திரிக்க
மாட்டாரு. விடிஞ்சாதான் படுக்கைய விட்டு எந்திரிப்பாரு. விமல கோவிந்தானந்தாவுக்கு
இந்த மாதிரி மேட்டர்லாம் எப்படி தெரியுதுன்னே தெரியல.

"ஏண்டா சாமியாரே. இவ்ளோ விஷயம் உனக்கெப்படிடா தெரியும். ஒருவேளை
அந்தாளுக்கு நீதான் ஒற்றனா"?

இல்லடா நம்ம வாட்ச்மேன் இருக்கானே அவனுக்கு ஒரு கட்டு பீடி வாங்கி
குடுத்தேன். அவன்கிட்ட வார்டன பத்தி மேட்டர எல்லாம் கறந்துட்டேன்.

மெஸ்ல கரெக்ட் டயத்துக்கு போய் சாப்பிடல்லன்னா குத்தம். அப்படியே
சாப்பிட்டு ரோட்டு பக்கம் காலாற நடந்து போலாம்னு பாத்தா கேட்டை
மூடிட்டான். கிரிக்கெட் விளாடலாம்னு பாத்தா பந்து, பேட் எல்லாம் அவர்
ரூமுக்கு கொண்டு போய் வெச்சிகிட்டாரு.

ஒரு அளவுக்குதாண்டா இருக்கணும் எல்லாமெ. இப்ப பாரு பொழுது போகவே
மாட்டேங்குது ஏதாச்சும் பண்ணனும். இபப்டியே விட்டா வேலைக்கு ஆகாது.

சரி ஒண்ணு செய்யி நாளைக்கு காலேஜ் பஸ்ல போய் லட்சுமி வெடி அப்புறம்
அந்த பச்சை கலர்ல ஒரு பாம் இருக்குமே அது ரெண்டையும் வாங்கிட்டு வந்துடு.

சரியா பன்னெண்டு மணிக்கு ரெண்டு பக்க ஜன்னல்லயும், ஆளுக்கு ஒருத்தன்
நான் வாசல் கதவை தாழ்ப்பாள் போட்டுட்டு கதவிடுக்குல ஒரு பாம் வெக்கிறேன்
சரியா அடுத்த பத்தாவது நிமிஷத்துல மூணு பக்கமும் வெடிக்கணும். வெடிக்கற
சத்தத்துல கட்டுல்ல இருக்கறவன் படார்னு கீழ விழணும். இங்க இருந்தா
உசுருக்கே ஆபத்துன்னு நாளைக்கு வார்டன் பொறுப்புல இருந்து விலகணும்.
இதான் ப்ளான். இத செய்யிறதுக்கு முன்னாடி அந்த வாட்ச்மேன் கிழவன்
ரூமுக்கும் தாழ்ப்பாள் போட மறந்துடாத. அந்த கிழம் போட்டு குடுத்துடும்.

டன்.

மறுநாள் ராத்திரி. சரியா பன்னெண்டு மணிக்கு ஏற்கனவே போட்ட திட்டத்தின்
படி கச்சிதமா முடிச்சாச்சு. நாலு பக்க சுவருக்குள்ள கைதட்டினாவே பயங்கரமா
எதிரொலிக்கு. இதுவே பாம் போட்டோம்னா காது கிழிஞ்சிடும். எங்க வார்டனுக்கு
வேற எதுவோ கிழிஞ்சிடுச்சி. வெடிச்ச சத்தத்துல எல்லா பசங்களும். அடிச்சி
பிடிச்சி வந்து வார்டன் ரூம் முன்னாடி வந்துட்டானுங்க. எவனுக்கும் கதவை திறக்க
பயம். நாங்க நாலு பேரும் இப்பதான் தூங்கி எந்திரிச்ச மாதிரி கண்ண கசக்கிகிட்டே
வார்டன் ரூமை நானே திறந்தேன்.

வார்டன் மூஞ்சுல எள்ளும் கொள்ளும் வெடிக்குது, பீதில வேர்த்து வழியுது
ஏத்தி கட்டின லுங்கி எந்த நேரத்துலயும் அவிழ்ந்து விழுந்துடுமோன்னு கைல
புடிச்சிகிட்டே வெளில வராரு பொது மாத்து வாங்கின வடிவேலு மாதிரி.

என்ன சார் யாரோ உங்க ரூமுக்கு பாம் வெச்சிட்டாங்க போலருக்கு. என் காது
கிழிஞ்சி போச்சு சார். உங்களுக்கு வேண்டாதவங்க யாரோதான் இந்த மாதிரி
செஞ்சிருக்காங்க. ரொம்ப நாள் கழிச்சி "ஊழல் பண்ணாத, பசங்களுக்கு நல்லது
செய்யிற வார்டன்" வந்துட்டாருன்னு சந்தோசமா இருந்தோம். அதுக்குள்ள
இப்படி பண்ணிட்டானுங்களே.

"நீங்க ஒண்ணும் கவலைபடாதிங்க சார் நாளைக்கே அவன் யாருன்னு கண்டுபுடிச்சி
உங்க முன்னாடி நிறுத்தறேன்". நீங்க போய் தூங்குங்க சார்னு அவரை
தைரியபடுத்தினோம். எங்க மேல சந்தேகம் வந்திடக்கூடாதுல்ல அதான்.

ரெண்டு நாள் கழிச்சி எங்கள் அறையில இருந்த எல்லாரையும் ஹாஸ்டல விட்டு
தூக்கிட்டாங்க. எவனோ ஒரு நாதாறி ஸ்பை நாயி எல்லாத்தையும் போட்டு
குடுத்துடுச்சி.

அப்புறமென்ன ஹாஸ்டல விட்டு கூண்டோட தூக்கிட்டாங்க எங்க குரூப்பை.

8 comments:

Anonymous said...

better to keep a distance from you
paavam antha vadan - mathavar kalukkellam asingamana sakikatha peru ungalukku mattum - parava illai ragam - eppa intha madhiriellama pannuvanka - aanalum parunka oru blacksheep kattikoduthuvittathu - avanukku enna per vachi irunthingalo - pottu vittutan - suvarsyamaga irukkuthe - then where you stayed - how you completed your course.
innum irrukiratha - bask

கோபிநாத் said...

\\அப்புறமென்ன ஹாஸ்டல விட்டு கூண்டோட தூக்கிட்டாங்க எங்க குரூப்பை.\\

பல பேத்தோட வாழ்க்கையில விளையாடிட்டு தான் இங்க வந்துருக்க போல...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாதி படிக்கும் போது என்னடா
நடந்ததெல்லாம் இப்படி எழுதி
இருக்காரே தம்பி விஷயம்
இப்ப எல்லாருக்கும் தெரிஞ்சுருமேன்னு
நினைச்சேன். அப்பவே
மாட்டிக்கிட்ட விஷயம் பின்னால எழுதி இருக்கவும் அதானேன்னு பார்த்தேன்.

Santhosh said...

//உயரமா இருக்கறதினால
நெட்டை, பனைமரம்னு செல்லமா கூப்பிடுவாங்க.//
இது எல்லாம் நல்ல பேரு உண்மையான பேரை சொல்லு தலை, இல்லாட்டி சார்ஜாவுல இருக்குற ரசிகர்கள் எல்லாம் உங்க செலவுல டீ குடிக்க தயார் ஆயிட்டு இருக்காங்க.

பினாத்தல் சுரேஷ் said...

இது ஒரு மொக்கை பதிவு

-- இப்படி டிஸ்கி எல்லாம் ஒரே ஒரு பதிவுக்கு மட்டும் போட்டா கட்டுப்படியாகுமா தம்பி..

நம்முதைப்பாரு -- டீபால்ட் மொக்கை, எப்பவாவது உருப்படியா போடும்போது மட்டும் டிஸ்கி. இப்படித்தான் வாழ்ந்து காட்டிகிட்டிருக்கேன்:-))

கப்பி | Kappi said...

//அப்புறமென்ன ஹாஸ்டல விட்டு கூண்டோட தூக்கிட்டாங்க எங்க குரூப்பை.
//


கூண்டுல என்ன வளர்த்துட்டிருந்தீங்க?? குயிலா கிளியா புலியா???

லொடுக்கு said...

ஓவர் லூட்டி. :) ஞாபகம் வருதே....

Anonymous said...

நீங்க எல்லாம் நிஜமாவே காலேஜ் பசங்களா?தீவிரவாதி ரேஞ்சுக்கு யோசிச்சு இருக்கீங்க.என்னமா துப்பு துலக்குகின்றீர்கள் உங்கள் warden பற்றி :))
நல்ல பதிவு கதிர்.நல்ல ரசித்து படித்தேன்