எல்லையற்ற அன்பு கொள்வோம்

Showing posts with label பிரிவு உபசார விழா. Show all posts
Showing posts with label பிரிவு உபசார விழா. Show all posts

Tuesday, February 06, 2007

தாயகத்தை முத்தமிடப் போகும் தமிழன்!!!

எங்கள் அருமை நண்பர் கப்பிநிலவர் வரும் 11ம் தேதி மாண்டிவிடியோ
மண்ணிலிருந்து பொட்டி கட்டுகிறார். அவரை வாழ்த்தி வழியனுப்பவே
இந்த பதிவு. அவரோடு பழகிய நாட்களை நினைத்து பார்த்தால் பரவசமாக
இருக்கிறது. ஆங்கிலபுத்தகம் படித்து விமர்சனம் எழுதுவதிலாகட்டும்,
பின்நவீனத்துவ கனவு காண்பதிலாகட்டும், பயணகட்டுரை எழுதுவதிலாகட்டும்
இவரின் தனிமுத்திரை பதிக்கும் பதிவுகள் ஏராளம். சினிமா உலகம் குறித்த
பதிவுகளில் இவரின் நண்பர்களின் அனுபவங்களை மிக சுவாரசியமாக
எழுதினார். இவரின் சிறுகதைகளை படிக்கும்போது ஆச்சரியமா இருக்கும்
என்னடா இந்தாளு ஒருபக்கம் நம்ம கூட கும்மி அடிச்சிட்டே இன்னொரு
பக்கம் அருமையான சிறுகதைகளை எழுதிட்டு இருக்காறேன்னு. இவரின்
கயல்விழி அருமையான ஒரு சிறுகதை அடுத்ததாக நரகாசுரனை சொல்லலாம்.
எல்லா சிறுகதைகளும் முத்துக்கள்தான்.

ஒருமுறை பதிவு போட மேட்டர் கிடைக்கவில்லையே என புலம்பும்போது
மிக அருமையான யோசனை சொன்னார். யாரும் பார்த்திராத ஏதாவது ஒரு
ஆங்கில படத்தை பார்த்து ஆஹா ஓஹோ என்று விமர்சனம் எழுதினால்
பதிவுக்கு பதிவும் ஆச்சு, பேருக்கு பேரும் ஆச்சு. மேலோட்டமாக பார்த்தால்
இது ஒரு சாதாரணமாக தெரியலாம் ஆனா இதுக்குள்ள எம்புட்டு மேட்டர்
இருக்குன்னு அனுபவிச்சி பாத்தாதான் புரியும்.

இப்படியெல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா பழகிட்டு இப்ப திடீர்னு இந்தியா
போறன்னு சொன்னதும் தாங்க முடியாத துயரம் வந்துடுச்சி. அதுக்காக
ப்ளாக்குவதை விட்டு விட மாட்டார் என்று நம்புவோமாக.

ஹேய் யாருப்பா அது?

என்னது?

காதலர் தினத்தை கொண்டாடத்தான் இந்தியா போறாருன்னு புரளிய கிளப்பறது??

அப்படிலாம் இல்ல.

நம்ம சங்கத்துல ஆயுள்சந்தா உறுப்பினர் அவரு அந்த மாதிரி தப்பெல்லாம்
பண்ண மாட்டாரு.

ஆகக்கூடி சொல்லவருவது என்னவென்றால்!

கடந்த எட்டரை மாதங்களாக மாண்டிவிடியோவில் அயராது பணிசெய்து
கொண்டிருக்கும் எங்கள் அஞ்சா நெஞ்சன் கப்பிபயல் இந்தவாரத்தில் தாயகம்
திரும்புகிறார். அவரது பயணம் இனிதே அமைய நண்பனாக என் மனமார்ந்த
நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

நண்பர்களே நீங்களும் வாருங்கள்!
ஒரு கைதட்டினால் ஓசை வராது!