எல்லையற்ற அன்பு கொள்வோம்

Tuesday, March 13, 2007

Blood Diamond

கடைசியாக நான் பார்த்த இரண்டு ஆங்கிலப்படங்களின் கதைக்களன் ஆப்பிரிக்க
தேசத்தை பற்றியது. இதற்கு முன் ஆப்பிரிக்க தேசத்தை பற்றியோ, மக்களை
பற்றியோ கேள்விப்பட்டிராதவன். அதிகபட்சமாக விளையாட்டு போட்டிகளில் கண்டிருக்கிறேன்.மற்றபடி அது ஒரு நாடு நம்மைப்போல மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்றளவே எனது எண்ணங்கள் இருந்தன. இந்த இரண்டு திரைப்படங்களை
பார்த்த பின் இத்தனை ரத்த சேதம் அடைந்த ஒரு நாடு, அதன் கருப்பு பக்கங்கள், இனக்கலவரங்கள் போன்றவை நடந்தது என்பது படத்தை பார்த்த பின்புதான்
தெரிகிறது.

ஹோட்டல் ருவாண்டா, ப்ளட் டையமண்ட் இதுதான் அந்த இரண்டு படங்கள்
மிகவும் உணர்ச்சிகரமான

கதைகள் இரண்டுமே. முதலாவது இனக்கலவரத்தில் தனியாளாக மக்களை
காப்பாற்றும் ஒருவரின் கதை. ஆங்கிலப்படத்திற்கு உரிய எந்தவித ஜிகினாக்களும்
இல்லாத கதாநாயகன். இந்த கதையை பற்றி ஏற்கனவே அண்ணாச்சி எழுதிவிட்டார் என்பதால். அடுத்த படமான ரத்த வைரம் அதாங்க ப்ளட் டையமண்ட்
படத்தை பற்றிய என் பார்வை

உலகிலேயே அதிக வைரங்கள் கிடைக்கும் நாடுகளில் ஆப்பிரிக்க தேசம் முதலிடம்
வகிப்பது அனைவருக்கும் தெரியும். அந்த வைர வியாபாரத்தின் பிண்ணனியில்
இருக்கும் பயங்கரங்களை பற்றி சொல்வதே இப்படம். நாம் சர்வ சாதாரணமாக பார்க்கும்வைரத்தின் பின்னால் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா என்று
அதிர்ச்சி படம் பார்க்கும்போது வரும். இந்த வைரக்கடத்தலை தவிர ஒரு குடும்பம்
பிரிந்து இணைவது மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.

மீன்பிடிக்கும் தொழிலாளியாக சாலமன் வாண்டி (Solomon Vandy) உண்மையில்
கதை இவரை சுற்றிதான் நடக்கிறது. மனிதர் நன்றாக நடித்திருக்கிறார். மகனை
டாக்டராக்க வேண்டும் என்று சாலமன் தன் மகனை பள்ளிக்கு இட்டுச்செல்வதில்
ஆரம்பிக்கிறது படம் அங்கிருந்து துப்பாக்கி சத்தம் படம் நெடுகிலும் காணப்படும்.
ஏதோவொரு இயக்கத்தின் பெயர் சொல்லி மக்களை கண்மூடித்தனமாக சுடுகிறார்கள்.
கை காலை வெட்டுகிறார்கள் மனம் பதறுகிறது பார்க்கும்போது. அங்கிருக்கும் பெரும்பாலானாவர்களை சுட்டுவீழ்த்தி சிறுவர்ளையும், வாட்டசாட்டமாக இருக்கும்
சிலரையும் பிடித்து இழுத்து செல்கிறார்கள். சாலமனின் மனைவி மக்கள் கலவரத்தில்
பிரிந்து ஓடுகின்றனர். சாலமன் மட்டும் கூட்டத்திடம் சிக்கிக் கொள்கிறார்.

அனைவரையும் காட்டிற்கு அழைத்து சென்று குளம், குட்டைகளில் வைரம் தேட
விடுகிறார்கள். சிறுவர்களுக்கு துப்பாக்கி பயிற்சி கொடுத்து மக்களை கொல்லச்
சொல்லி கட்டளையிடுகின்றனர். இப்படி தேடிக் கிடைக்கும் வைரங்களை சொற்ப
விலைகொடுத்து அதிகவிலைக்கு விற்கின்றனர். பணத்துக்கு பதிலாக ஆயுதமாகவும்
சப்ளை நடக்கிறது. இது போன்ற வைரங்களை வாங்கி கடத்தும் வேலைக்கு வருகிறார்
நாயகன் லியனார்டோ டிகாப்ரியோ.

இதற்கிடையில் அளவில் பெரிய, அபூர்வமான பிங்க் நிற வைரம் ஒன்று சாலமன்
கைக்கு சிக்குகிறது அப்போது ராணுவப்படை ஒன்று புகுந்து அங்கிருந்த அடிமைகளை
காப்பாற்றி சிறைக்கு அழைத்து செல்கிறது. அவசரத்துக்கு அந்த வைரத்தை அங்கேயே புதைத்துவிட்டு வருகிறார். வில்லனுக்கு இது தெரியவர சிறையில்
சாலமனிடம் விசாரிக்கும்போது லியனார்டோ ஒட்டுக்கேட்க அந்த வைரத்தை
எப்படியாவதுமடக்கி எடுத்து லண்டனுக்கு அனுப்ப எடுக்கும் முயற்சிகளே படம்
முழுக்க சொல்லியிருக்கிறார்கள். இடையில் சாலமனின் குடும்பத்தை தேடுகிறார்கள்
இதுதான்கதை. ஒரு நொடி கூட கொட்டாவியை வரவழைக்கும் காட்சிகள் இல்லை.
மனம் பதறுகிறது இப்படியெல்லாம் மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்று
நினைக்கும்போது வைரத்தின் மீது வெறுப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை.

மேல்நாடுகள் பணமும் கொடுத்து ஆயுதங்களும் கொடுத்து மக்களை எப்படி மூளை
மழுங்கடித்து வேலை வாங்கியிருக்கிறார்கள் என்ற உண்மை படம் பார்த்து முடிக்கையில் தெளிவாக புரிகிறது.

என் குடும்பத்தை காப்பாற்ற உதவி செய்தால் மட்டுமே அந்த வைரத்தை உனக்கு
காட்டமுடியும் என்கிறார் சாலமன். ஆகவே அவர் குடும்பத்தை தேடும்பணியில்
ஈடுபடுகிறார் டிகாப்ரியோ. வைரக்கடத்தலை பற்றி பத்திரிக்கையில் கட்டுரை எழுத வரும் கதாநாயகி. அவரின் உதவியுடன் பல அகதி முகாம்களில் தேடுவதற்காக ஒரு
ஒப்பந்தத்துடன் கருப்பரான சாலமனை கேமராமேன் என்று சொல்லி அழைத்துச்
செல்கிறார்கள்.

அப்போது அருமையான காட்சி வரும்...

சாலையில் இவர்கள் கார் பயணித்துக் கொண்டிருக்கும் அப்போது எதிரே வரும்
ஒரு வாகனத்தில் குண்டு வெடிக்கும். இந்த வண்டியில் வரும் பத்திரிக்கையாளர்கள்
அனைவரும் உடனே போட்டோ எடுப்பார்கள். அப்போது சாலமன் மட்டும் துடித்துக்கொண்டிருக்கும் உயிர்களை காப்பாற்ற அவர்களை தூக்கி அவசர அவசரமாக
வண்டியில் ஏற்றுவார். அப்போது அங்கிருக்கும் பத்திரிக்கையாளர்கள் சாலமனை
திட்டுவார்கள். அந்த காட்சியில் மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
ஒரு அசாதாரண சம்பவம் நடக்கும்போது அதை பார்ப்பவrகளின் உணர்ச்சி
எப்படியிருக்கும் என்பதை அழுத்தமாக சொல்லும்.

ஒருவழியாக அகதிகள் முகாமில் தன் குடும்பத்தை சந்திக்கிறார் சாலமன். பின்னர்தான் டிகாப்ரியோவுடன் செல்ல ஒத்துழைக்கிறார். வைரத்தை தேடும் இடத்தில் தன்
மகனும் அந்த கொலைகார கூட்டத்துடன் இருப்பதை கண்டு பதறும் சாலமன் தன்
மகனை எப்படியாவது அங்கிருந்து மீட்டு வர முயற்சிக்க மகனோ இவர் என் அப்பா
இல்லையென்று சொல்லுகிறான். அவனின் மூளை சலவை செய்யப்பட்டுவிட்டது.

அந்த கூட்டத்தை அழித்து மகனை காப்பாற்றுகிறார் டிகாப்ரியோ. இறுதியில்
டிகாப்ரியோவை சிறுவன் சுட முயற்சிக்கும் காட்சியில் மூவரின் நடிப்பும் பிரமாதமான
ஒன்று குறிப்பாக தந்தைக்கும் மகனுக்கும் கடைசி ஐந்து நிமிட காட்சி
குறிப்பிடவேண்டிய ஒன்று. அந்த காட்சியிலேயே குண்டு ஒன்று துளைத்து விட
டிகாப்ரியோ வைரத்தை சாலமனிடம் கொடுத்து லண்டனுக்கு அனுப்புவதாக படம்
முடிகிறது.

மனதை தொடும் காட்சிகளும், கனக்கச்செய்யும் காட்சிகளும் நிறைந்த திரைப்படம்.

42 comments:

நாமக்கல் சிபி said...

நல்லதொரு திரைப்படத்தைப் பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி!

இப்படி யாராச்சும் விமர்சனம் எழுதி படிச்சிகிட்டாத்தான் உண்டு. நாம எல்லாம் எப்போ இங்கிலீஷ் படம் பார்த்து, அது நமக்கு புரிஞ்சி, விமர்சனமெல்லாம் எழுதப் போறோம்!

மஞ்சூர் ராசா said...

நல்லதொரு படத்தைப்பற்றிய நல்லதொரு விமர்சனம்.

வாழ்த்துக்கள்.

Chinna Ammini said...

My friends who have seen this movie have decided not to buy diamonds hereafter in thei life. The Movie had so much impact on them.

ஜி - Z said...

மிக சமீபத்தில்தான் (சென்ற வாரம்) இந்தப் படத்தைப் பார்த்தேன். ஆப்பிரிக்கப் படங்களைத் தேடிப் பிடித்துப் பார்க்க வைத்தப் படங்கள் ஹோட்டல் ருவாண்டா, மற்றும் ப்ளட் டையமண்ட்...

வடுவூர் குமார் said...

தமிழில் வந்தால்
"கல்லுக்காக கல்லான மனம்" என்று பெயர் வைத்திருக்கலாம்.

கப்பி பய said...

//மனதை தொடும் காட்சிகளும், கனக்கச்செய்யும் காட்சிகளும் நிறைந்த திரைப்படம்.
//

சரியா சொன்னீங்க தம்பி! இவங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தருக்கு ஆஸ்கர் கிடைக்கும்னு நினைச்சேன்...நாம நினைக்கறது என்னைக்கு நடந்துருக்கு :))))

.:: மை ஃபிரண்ட் ::. said...

நாங்க தமிழ் படம் பார்க்குறதுக்கே டைம் பத்தலை.. இதுல எங்கண்ணே இங்லீஷ் படம் பார்க்குறதுக்கு டைம் இருக்கு!!!

.:: மை ஃபிரண்ட் ::. said...

தம்பிண்ணே, நீங்க என்னை ஏமாத்திட்டீங்க.. நான் தூங்கி எழுந்துருச்சி வர்ரதுக்குள்ளே கமேண்ட் மோடரேஷன் என்பல் பண்ணிட்டீங்களே..

[இந்த பின்னூட்டத்தையும் காக்கா தூக்கிட்டு போச்சுன்னு சொல்ல கூடாது! ஓகே?]

தம்பியின் தற்க்கொலை படை said...

தம்பி! அங்க வெட்டி உன்னய இழுத்து வச்சி இஸ்திரி போட்டுகிட்டு இருக்காரு, உனக்கு தூக்கம் ஒரு கேடா, எந்திரிச்சி வாய்யா..ஆட்டொ ரெடி..வாய்யா..

நாகை சிவா said...

//உனக்கு தூக்கம் ஒரு கேடா, எந்திரிச்சி வாய்யா..ஆட்டொ ரெடி..வாய்யா.. //

எதுக்கு போய் அடி வாங்கவா... நல்லா தான்ய்ய கிளம்புறீங்க....

நாகை சிவா said...

உன்னைய ஏதும் சொல்லக் கூடாதுனு தான் இங்கன வந்தேன், ஆனா சொல்லுற மாதிரி பதிவு போட்டு இருப்பது நீ....... அப்பால என்னைய என்ன பண்ண சொல்லுற...

நேரா மேட்டருக்கு வரேன்...

நாகை சிவா said...

//நாங்க தமிழ் படம் பார்க்குறதுக்கே டைம் பத்தலை.. இதுல எங்கண்ணே இங்லீஷ் படம் பார்க்குறதுக்கு டைம் இருக்கு!!! //

மை பிரண்ட், எங்களுக்கு படம் பாக்குறதுக்கு டைம் எல்லாம் இருக்கு. ஆனா மொழி பெயர்த்து சொல்லுறத்துக்கு ஆள் இருக்க மாட்டேங்குறாங்க.... :-(

.:: மை ஃபிரண்ட் ::. said...

//எங்களுக்கு படம் பாக்குறதுக்கு டைம் எல்லாம் இருக்கு. ஆனா மொழி பெயர்த்து சொல்லுறத்துக்கு ஆள் இருக்க மாட்டேங்குறாங்க....//

அதுக்குதான் நம்ப தம்பிண்ணே இருக்காரே!!! அவர் கிட்ட ஒரு லிஸ்ட்டு போட்டு கொடுத்துடலாம்.. இந்த வாரம் முழுதும் நமக்கு மொழி பெயர்த்து கொடுத்துட்டே இருப்பார்..

[தம்பிண்ணே, உங்களுக்கு எழுத மேட்டர் தந்திருக்கேன். எஞ்சாய்..;-)]

.:: மை ஃபிரண்ட் ::. said...

//எங்களுக்கு படம் பாக்குறதுக்கு டைம் எல்லாம் இருக்கு. ஆனா மொழி பெயர்த்து சொல்லுறத்துக்கு ஆள் இருக்க மாட்டேங்குறாங்க....//

அதுக்குதான் நம்ப தம்பிண்ணே இருக்காரே!!! அவர் கிட்ட ஒரு லிஸ்ட்டு போட்டு கொடுத்துடலாம்.. இந்த வாரம் முழுதும் நமக்கு மொழி பெயர்த்து கொடுத்துட்டே இருப்பார்..

[தம்பிண்ணே, உங்களுக்கு எழுத மேட்டர் தந்திருக்கேன். எஞ்சாய்..;-)]

நாகை சிவா said...

//ஆப்பிரிக்க
தேசத்தை பற்றியது.//

ஆப்பிரிக்கா என்பது ஒரு கண்டம், அதில பல ஆப்பிரிக்க தேசங்கள் இருக்கு. ஒவ்வொரு தேசமும் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் பிரச்சனைகளை சந்தித்து உள்ளது. மிக சொற்ப நாடுகளை தவிர மற்ற நாடுகள் அந்த பிரச்சனையில் இருந்து வெளி வர முடியாமல் இன்னும் துன்பத்தில் தான் உழன்று கொண்டு இருக்கின்றது.

நாகை சிவா said...

//அதுக்குதான் நம்ப தம்பிண்ணே இருக்காரே!!! அவர் கிட்ட ஒரு லிஸ்ட்டு போட்டு கொடுத்துடலாம்.. இந்த வாரம் முழுதும் நமக்கு மொழி பெயர்த்து கொடுத்துட்டே இருப்பார்..//

என்ன தம்பி, ரெடியா, லிஸ்ட அனுப்பட்டா. ;-)

நாகை சிவா said...

//உலகிலேயே அதிக வைரங்கள் கிடைக்கும் நாடுகளில் ஆப்பிரிக்க தேசம் முதலிடம்
வகிப்பது அனைவருக்கும் தெரியும்.//

ஏம்ப்பா மறுக்கா மறுக்கா ஆப்பிரிக்க தேசம் மொட்டையா சொன்னா என்னப்பா அர்த்தம், ஆப்பிரிக்க கண்டத்தின் எல்லா நாடுகளிலும் வைரம் கிடைக்காது. இந்த படம் Sierra Leone என்ற நாட்டின் பிரச்சனைகளை ஒரமாக தொட்டு செல்லும் ஒரு படம்.

ஏன் ஒரமாக என்று சொல்கின்றேன் என்றால், வைரம் தான் கரு என்றாலும், ஒரு தந்தையின் பாசப் போரட்டத்தை மையப்படுத்தியும், வைரத்தை அடைவதற்கு முயற்சிக்கும் ஒரு கும்பலை சுற்றி தான் படம் ஒடுகின்றது. போற போக்கில் மற்ற அனைத்து விசயத்தையும் அப்படியே தொட்டு விட்டு சென்று உள்ளார்கள்.

நாகை சிவா said...

//வில்லனுக்கு இது தெரியவர சிறையில்
சாலமனிடம் விசாரிக்கும்போது லியனார்டோ ஒட்டுக்கேட்க அந்த வைரத்தை//

யோவ் பொய் சொல்லுற பாத்தியா, எல்லாரும் இருக்கும் போது தானே அந்த கமாண்டர் கேட்பான். அப்புறம் என்ன ஒட்டு கேட்க எழுதி இருக்க....

நாகை சிவா said...

//டிகாப்ரியோ வைரத்தை சாலமனிடம் கொடுத்து லண்டனுக்கு அனுப்புவதாக படம் முடிகிறது.//

அவ்வளவு தானா? படத்தை நீ ஒழுங்கா பாத்தியா... இதுக்கு நீ பதில் சொல்லு. அப்பால வந்து நான் தொடர்கின்றேன்...

தம்பி said...

//நல்லதொரு திரைப்படத்தைப் பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி!

இப்படி யாராச்சும் விமர்சனம் எழுதி படிச்சிகிட்டாத்தான் உண்டு. நாம எல்லாம் எப்போ இங்கிலீஷ் படம் பார்த்து, அது நமக்கு புரிஞ்சி, விமர்சனமெல்லாம் எழுதப் போறோம்!//

சிபியாரே எங்களுக்கு மட்டு புரியுதா என்ன ஏதோ குத்து மதிப்பா எழுதுறதுதான்.

நன்றி சிபி.

தம்பி said...

//நல்லதொரு படத்தைப்பற்றிய நல்லதொரு விமர்சனம்.

வாழ்த்துக்கள்.//

நன்றிங்க மஞ்சூர் ராசா!

அடிக்கடி வருகை தாருங்கள்.

தம்பி said...

//My friends who have seen this movie have decided not to buy diamonds hereafter in thei life. The Movie had so much impact on them. //

கரெக்டா சொன்னிங்க. சின்ன அம்மிணி

வருகைக்கு நன்றி.

தம்பி said...

//தமிழில் வந்தால்
"கல்லுக்காக கல்லான மனம்" என்று பெயர் வைத்திருக்கலாம்.//

:)) நல்லாதான் இருக்கு இதுவும்.

தம்பி said...

//சரியா சொன்னீங்க தம்பி! இவங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தருக்கு ஆஸ்கர் கிடைக்கும்னு நினைச்சேன்...நாம நினைக்கறது என்னைக்கு நடந்துருக்கு :)))) //

வாங்க கப்பிநிலவரே!

ஆங்கிலப்படம் பார்த்துட்டு பீட்டர் விடறதுல எங்களுக்கெல்லாம் குரு நீங்க. எனக்கு சாலமனின் நடிப்புதான் பிடிச்சிருக்கு அவருக்கு கண்டிப்பா கிடைச்சிருக்கலாம்.

தம்பி said...

//நாங்க தமிழ் படம் பார்க்குறதுக்கே டைம் பத்தலை.. இதுல எங்கண்ணே இங்லீஷ் படம் பார்க்குறதுக்கு டைம் இருக்கு!!! //

நாங்கல்லாம் தமிழ் படமே பாக்குறதில்ல
ஏன்னா கொல கட்டி அடிக்கறானுங்க.
சிவாஜி, தசாவதாரம் இதுதான் நம்ம அடுத்த தமிழ் டார்கெட்.

செந்தழல் ரவி said...

////டிகாப்ரியோ வைரத்தை சாலமனிடம் கொடுத்து லண்டனுக்கு அனுப்புவதாக படம்
முடிகிறது.////

இல்லையே...சாலமன் வாண்டி லண்டனில் உரிமைக்கூட்டமைப்பு முன்பு உயிர்சாட்சியாக நடந்த சம்பவங்களை எடுத்துக்கூறும் கடைசி காட்சி பார்க்கவில்லையா..

வைரத்தை விற்று பெரும் பணம் பெற்ற சாலமன், கோட்டு சூட்டு எல்லாம் மாட்டிக்கொண்டு உரையாற்ற உள்ளே நுழையும் காட்சி சிலிர்ப்பை ஏற்ப்படுத்தியது....

லொடுக்கு said...

இன்னும் படம் பாக்கல. பாத்துட்டு வந்து பதிவை படிக்கிறேன். :)

கோபிநாத் said...

தம்பி நல்லா எழுதியிருக்கீங்க ;)))

அடுத்த முறை வரும் போது அந்த CDஐ கொஞ்சம் தரவும்.

கோபிநாத் said...

\நாகை சிவா said...
//உலகிலேயே அதிக வைரங்கள் கிடைக்கும் நாடுகளில் ஆப்பிரிக்க தேசம் முதலிடம்
வகிப்பது அனைவருக்கும் தெரியும்.//

ஏம்ப்பா மறுக்கா மறுக்கா ஆப்பிரிக்க தேசம் மொட்டையா சொன்னா என்னப்பா அர்த்தம், ஆப்பிரிக்க கண்டத்தின் எல்லா நாடுகளிலும் வைரம் கிடைக்காது. இந்த படம் Sierra Leone என்ற நாட்டின் பிரச்சனைகளை ஒரமாக தொட்டு செல்லும் ஒரு படம்.

ஏன் ஒரமாக என்று சொல்கின்றேன் என்றால், வைரம் தான் கரு என்றாலும், ஒரு தந்தையின் பாசப் போரட்டத்தை மையப்படுத்தியும், வைரத்தை அடைவதற்கு முயற்சிக்கும் ஒரு கும்பலை சுற்றி தான் படம் ஒடுகின்றது. போற போக்கில் மற்ற அனைத்து விசயத்தையும் அப்படியே தொட்டு விட்டு சென்று உள்ளார்கள்.\\

சிவா.... தம்பியை விட நீங்கள் நிறைய சொல்லிறீங்க. தம்பிக்கு அனுப்ப வேண்டிய லிஸ்ட்டை உங்களுக்கு அனுப்பட்டுமா???

கோபிநாத் said...

\\நாகை சிவா said...
//டிகாப்ரியோ வைரத்தை சாலமனிடம் கொடுத்து லண்டனுக்கு அனுப்புவதாக படம் முடிகிறது.//

அவ்வளவு தானா? படத்தை நீ ஒழுங்கா பாத்தியா... இதுக்கு நீ பதில் சொல்லு. அப்பால வந்து நான் தொடர்கின்றேன்...\\

தம்பி அப்ப நீ படத்தை ஒழுங்கா பார்காவில்லையா??? பின்னூட்டத்துல சிவாவும், நம்ம தல ரவியும் மீதி கதையை சொல்லறாங்க.....

கோபிநாத் said...

\\//உனக்கு தூக்கம் ஒரு கேடா, எந்திரிச்சி வாய்யா..ஆட்டொ ரெடி..வாய்யா.. //

எதுக்கு போய் அடி வாங்கவா... நல்லா தான்ய்ய கிளம்புறீங்க..\\

அப்படின்னா தம்பி அந்த பக்கம் வரமாட்டாருன்னு சொல்லிறீங்க...அப்படிதானே புலி ?!?!?!

சீனு said...

//சிறுவர்களுக்கு துப்பாக்கி பயிற்சி கொடுத்து மக்களை கொல்லச் சொல்லி கட்டளையிடுகின்றனர்.//

அப்பப்பா! அந்த சிறுவர்களை அவர்களுக்கு தெரியாமலேயே முதல் கொலை செய்ய வைக்கும் காட்சி...பயங்கரம்.

கடைசியில் டிடா அவன் தந்தையை நோக்கி துப்பாக்கி நீட்டும் காட்சியும்...பலே.

நாகை சிவா said...

//அப்படின்னா தம்பி அந்த பக்கம் வரமாட்டாருன்னு சொல்லிறீங்க...அப்படிதானே புலி ?!?!?! //

எப்படி வருவான். எப்படி வருவான் கேட்குறேன்.... அப்படி மீறி வந்தா நம்ம வெட்டி சும்மா விட்டுவானா என்ன?

நாகை சிவா said...

//தம்பி அப்ப நீ படத்தை ஒழுங்கா பார்காவில்லையா??? பின்னூட்டத்துல சிவாவும், நம்ம தல ரவியும் மீதி கதையை சொல்லறாங்க..... //

பாதில தூங்கி இருப்பானோ, இல்ல லண்டன் போனவுடன் அவ்வளவு தான் படம் சிடிய நிறுத்தி இருப்பான்....

நாகை சிவா said...

/சிவா.... தம்பியை விட நீங்கள் நிறைய சொல்லிறீங்க. தம்பிக்கு அனுப்ப வேண்டிய லிஸ்ட்டை உங்களுக்கு அனுப்பட்டுமா??? //

வேணாம் ஏதா இருந்தாலும் நீங்க தம்பிண்ணா க்கிட்ட கேட்டே தெரிஞ்சுக்கோங்க.

அவரு ரொம்ப நல்லவர், விளக்கமா சொல்லுவார்.

தம்பி said...

//இல்லையே...சாலமன் வாண்டி லண்டனில் உரிமைக்கூட்டமைப்பு முன்பு உயிர்சாட்சியாக நடந்த சம்பவங்களை எடுத்துக்கூறும் கடைசி காட்சி பார்க்கவில்லையா..

வைரத்தை விற்று பெரும் பணம் பெற்ற சாலமன், கோட்டு சூட்டு எல்லாம் மாட்டிக்கொண்டு உரையாற்ற உள்ளே நுழையும் காட்சி சிலிர்ப்பை ஏற்ப்படுத்தியது....//

கடைசியா அந்த கூட்டத்தில சாலமன் உரையாற்றுவது நல்ல காட்சிதான் என்னையறியாமல் கண்கலங்கிடுச்சி. ஆனா படத்துக்கு இடைச்செருகல் மாதிரி இருந்தது அந்த காட்சி.

இங்க சொன்னதுக்கும் நன்றி ரவி.

தம்பி said...

//என்ன தம்பி, ரெடியா, லிஸ்ட அனுப்பட்டா. ;-) //

லிஸ்ட் அனுப்பு கூடவே DVD அனுப்பு.

தம்பி said...

//ஏம்ப்பா மறுக்கா மறுக்கா ஆப்பிரிக்க தேசம் மொட்டையா சொன்னா என்னப்பா அர்த்தம், ஆப்பிரிக்க கண்டத்தின் எல்லா நாடுகளிலும் வைரம் கிடைக்காது. இந்த படம் Sierra Leone என்ற நாட்டின் பிரச்சனைகளை ஒரமாக தொட்டு செல்லும் ஒரு படம்.//

யோவ் தெரிஞ்சா சொல்ல மாட்டாங்களா? சொன்னதுக்கு நன்றி.


//ஏன் ஒரமாக என்று சொல்கின்றேன் என்றால், வைரம் தான் கரு என்றாலும், ஒரு தந்தையின் பாசப் போரட்டத்தை மையப்படுத்தியும், வைரத்தை அடைவதற்கு முயற்சிக்கும் ஒரு கும்பலை சுற்றி தான் படம் ஒடுகின்றது. போற போக்கில் மற்ற அனைத்து விசயத்தையும் அப்படியே தொட்டு விட்டு சென்று உள்ளார்கள்.//

நீ ஓரமா சொன்னாலும் சரி பாரமா சொன்னாலும் சரி படம் ரொம்ப நல்லா இருந்துச்சி. எனக்கு புரிஞ்சத வெச்சி எழுதினேன். உனக்கு என்னை விட நல்லாவே புரிஞ்சிருக்கும் ஏன்னா நீ அங்க ஆணி புடுங்கிட்டு இருக்க.

சரி இன்னும் ஏதாச்சும் மேட்டர் சொல்லிடு...

தம்பி said...

//இன்னும் படம் பாக்கல. பாத்துட்டு வந்து பதிவை படிக்கிறேன். :)//

பாருங்க லொடுக்கு நல்ல படம்.

ஜி said...

நான் உருகி உருகி போட்ட பின்னூட்டத்தை காணவில்லை....

இதேபோல் முன்பொருமுறையும் எனது பின்னூட்டத்தை தடுத்து வைத்திருந்த தம்பிக்கு எனது கண்டனங்கள்...

பினாத்தல் சுரேஷ் said...

படம் முதல் பாதி நெகிழ்ச்சியா இருந்தது வாஸ்தவம்தான். நல்லாவே நடிச்சிருந்தாங்க, எவ்ரிதிங் வாஸ் பெர்பக்ட்..

ஆனா செகண்ட் ஹாப்லே சொதப்போ சொதப்புன்னு சொதப்பிட்டாங்களே.. டிகாப்ரியோ இன் அண்ட் ஆஸ் ரஜினிககந்த் மாதிரி.. அழுவாச்சி கட்டம் வேற.. எனக்கு பிடிக்கலை!

பனிமலர் said...

அப்படியே இந்த படத்தையும் பார்க்கவும் Constant Gardener, ஆப்ரிக்க மக்களின் அறியாமையையும் பஞ்சத்தையும் பயன் படுத்தி எப்படி மற்ற நாடுகள் மனிதாபிமானமோ மன சாட்சியோ இல்லமல் எப்படி பணம் பன்னுகிறது என்ற ஒரு படம். தமிழில் வந்திருக்கும் ஈ பட்த்திற்கும் அப்படியே காட்சிக்கு காட்சி ஒற்றுமை இருப்பதையும் பார்க்கலாம்.