எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, March 31, 2007

அழகுன்னு எதை சொல்றாங்க???

என்னோட டெஸ்க்டாப்ல பாவனா, ஸ்க்ரீன்சேவர்ல பாவனா, போல்டருக்கெல்லாம்
பாவனான்னு பேரு தொட்டு எங்க பாத்தாலும் ஒரே பாவனா மயம்தான். இத
பாத்துட்டு நம்ம பய ஒருத்தன் என்னடா ஒரு மார்க்கமா இருக்கன்னு
கேட்டுபுட்டான். ரொம்ப அழகா இருக்கா மாப்ள அதான் பக்கத்துலயே வெச்சி
பாத்துகிட்டுருக்கேன்.

ஏண்டா வீணா போனவனே பருவத்துல பன்னிகுட்டி கூட அழகா இருக்கும் அதுக்காக
மடில எடுத்து வச்சி கொஞ்சுவியா? இதெல்லாம் ஒரு மூஞ்சி வந்துட்டான் அழகுன்னு
சொல்லிகிட்டு தூக்குடா அதையெல்லாம்.

"இவனுக்கு தெரியுமா பாவனாவோட அருமை". இருந்தாலும் அவன் சொல்றதுல
அர்த்தம் இருக்கத்தான் செய்யிது.

ரொம்ப நாளா இந்த டவுட்டு இருக்குங்க எனக்கு. சின்ன வயசில பள்ளியில் எனக்கு
பக்கத்துல உக்காந்திருந்த கவிதா ரொம்ப அழகுன்னு நினைச்சேன். அவள விட சூப்பரா
அமுதான்னு ஒருத்தி புதுசா வந்த உடனே கவிதா காணாம போயிட்டா. அப்புறம்
கஸ்தூரி டீச்சர், குஷ்பு, சுகன்யா, பானுப்பிரியா, மனீஷா, நேத்து அசின் இன்னிக்கு
பாவனா (கடைசி பேர சொன்ன வுடனே புதுசா பொறந்தமாதிரி இருக்கு) இப்படி
மாறிகிட்டே இருக்குங்க. அழகை நடிகைகள் முகத்துல நிரந்தரமா பாக்க முடியாதுன்னு
ஆகிப்போச்சு. நிலையான அழகுன்னு ஒண்ணு கிடையவே கிடையாதான்னு
மனசு கேட்டுகிட்டே இருக்கு

Photo Sharing and Video Hosting at Photobucket

மேல சொன்னதெல்லாம் திடீர்னு ஒரு நாள் காணாமல் போயிடுது. தினமும் ஸ்கூல்
போகும்போது அம்மா தலை சீவி விட்டு பவுடர் அடிச்சி விடுவாங்க அப்பலாம்
அடிக்கடி அவங்க கூந்தலை முகர்ந்து பார்ப்பேன் லேசான மல்லிகை மணம் வரும்
அதை இப்ப நினைச்சாலும் அழகான ஒரு நினைவா இருக்கு. பள்ளி கூடத்துல
என் வகுப்பு பெண்களின் ரிப்பன் முடிச்சை பார்த்தா படக்குனு பிரிச்சி விட்டுடுவேன்
இதுவே ஒரு பழக்கமாகி ஒரு முறை பஸ்ல ஒரு பொண்ணு ரிப்பன என்னையறியாமல்
பிரிச்சி விட்டுட்டேன் ஒரே ரசாபாசமாகி போச்சு இப்ப அதை நினைச்சு பார்த்தா
சின்னதா ஒரு சிரிப்பு வருது இதை அழகுன்னு சொல்லமாமான்னு தெரில.
தனிமையில் இருக்கும்போது இந்த மாதிரி பழசை நினைச்சி பார்த்து சிரிப்பது ஒரு
வகை அழகா.

எது அழகுன்னு தெரிஞ்சி ஒண்ணும் பண்ண போறதில்ல நானு இருந்தாலும் டவுட்டு
வந்தா கிளியர் பண்ணிக்கனும்ல சரி பக்கத்துல யார்கிட்ட கேக்கலாம்னு பாத்தா
நம்மள கண்டாவே அவனவன் தெறிச்சி ஓடறான். ஆன்லைன்ல யாரு இருந்தாலும்
கேட்டு விடலாம்னு போய் கேட்டேன். முதல்ல சிக்கினது நம்ம ராயலு.

தம்பி: ஏம்பா ராயலு அழகுன்னு எதை நீ நினைக்கற?

ராயல்: என்னோட புரொபைல் போய் பாரு அங்க ஒரு போட்டோ இருக்கு அதுதான்
அழகுன்னு நான் நினைக்கறேன்.

அங்க போய் பாத்தா அந்தாளு போட்டோவ போட்டு வச்சிருக்காரு. ரொம்ப
தலக்கனம் பிடிச்ச ஆளா இருப்பாரு போல இருக்கு. கோபியையும் வெட்டியையும்
கேட்டா என்னைய நம்பி பதில சொல்ல மாட்டேங்கறாங்க மாறா நாம ஒரு கேள்வி
கேட்டதுக்கு திருப்பி ஒம்பது கேள்வி கேட்டு நம்மள சாகடிக்கறாங்க.சரி நிறைய
அனுபவம் இருக்கற பெரியவர கேட்டா சரியா சொல்லுவாருன்னு நம்ம கொத்தனாரை
அணுகினேன்.

தம்பி: கொத்ஸ் ஒரு டவுட்டு

கொத்ஸ்: சொல்லுப்பா...

தம்பி: அழகுன்னு எதை சொல்றாங்க?

கொத்ஸ்: எது நம்ம எதிரில் இல்லாத போதும், அதை நினைக்கையில் நம் முகத்தில்
ஒரு புன்முறுவல் வருகிறதோ அதே அழகு. அது ஒரு முகமாய் இருக்கலாம். ஒரு
படமாய் இருக்கலாம். ஒரு வசனமாய் இருக்கலாம். ஒரு பதிவாய் இருக்கலாம் ஒரு பின்னூட்டமாய் இருக்கலாம் அந்தந்த வகையில் அது அழகு.

தம்பி: இதுவூம் நல்லாதான் இருக்கு. ரெண்டு நாளா பாவனாதான் அழகுன்னு
தோணுதுங்க பாஸ், இத பத்தி என்ன நினைக்கறிங்க?

கொத்ஸ்: மன்னிக்கவும் யாரு பாவனா?

தம்பி: என்ன கொத்ஸ் இப்படி சொல்லிட்டிங்க. பாவனாவை தெரிலன்னு சொன்னா
இளைஞர்கள் கொந்தளிச்சி போயிடுவாங்க.

கொத்ஸ்: யப்பா தெரியாத விஷயத்தைத் தெரியலைன்னு சொன்னா அது தப்புன்னு நீங்க நினைச்சீங்கன்னா நீங்க நினைக்கறது தப்புன்னு தெரியாமலேயே நினைக்கறதுதான் தப்பு
வாழ்க விசு! அவரோட சில வசனங்களும் அழகு.

தம்பி:(புரிலன்னு சொன்னா இன்னும் விளக்குவாரோ!!) அழகுக்கு நீங்க சொன்ன
விளக்கம் அழகு, நாளைக்கும் இதே மாதிரி அழகான கேள்வியோடு இந்த
அழகுதம்பி வருவான்.

கொத்ஸ்: தம்பி தம்பி நில்லுப்பா, ஒரு சந்தேகம்

தம்பி: சொல்லுங்க கொத்ஸ். :)

கொத்ஸ்: என்னிய வெச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணலையே!!

தம்பி: இல்லிங்க எசமான் அப்படிலாம் செய்வேணா திடீர்னு ஒரு டவுட்டு
வந்துச்சி நான் மட்டும்தான் பாவனா அழகா இருகான்னு நினைக்கறேனா இல்ல
எல்லாருமான்னு அதான் கேட்டேன். தப்பா நினைக்காதிங்க!

கொத்ஸ்: என்ன சந்தேகம் வந்தாலும் தயங்காம கேளுங்க. எதையாவது சொல்லி
குழப்பி விட நான் தயாரா இருக்கேன். குழப்பினாதான் தெளிவு பிறக்கும். இந்த
அழகு மேட்டரில் இன்னும் ஒண்ணு சொல்லறேன் சில அழகு வந்து நிரந்தர
அழகு, சில அழகு சீசனல் அழகு சீசனல் அழகை வந்து நிரந்திர அழகா நினைச்சு
ஏமாறக் கூடாது புரியுதா?ஆனா இந்த இந்தி ரேகா இருக்கங்க பாருங்க அவங்களுக்கு
எம்புட்டு வயசு பாருங்க ஆனாலும் அவங்க அழகு நிரந்திர அழகு.

தம்பி: அழகை நடிகைகள் முகத்தில தேடக்கூடாதோனு தோணுது.

கொத்ஸ்: அங்கயும் இருக்கு அதை மிஸ் பண்ணக் கூடாது ஆனா அங்க நிரந்திர
அழகு கம்மி. அழகோட மெயின் விதியே அதான் It is a very personal thing.

தம்பி: இயற்கை எல்லார் கண்ணுக்கும் அழகா தெரியும்தானே?

கொத்ஸ்: எனக்கு பீச் பிடிக்கும், உங்களுக்கு மலை பிடிக்கும், இன்னொருத்ருக்குப்
பனி மிடிக்கும் இன்னும் ஒருத்தருக்கு மழை பிடிக்கும் ஆனா எல்லாருக்கும்
எல்லாமும் பிடிக்கணுமுன்னு ரூல் இருக்கா என்ன?

தம்பி: இதை ஒரு பதிவா போட போறேன், ஆன் தி ரெக்கார்டா எடுத்துக்கலாமா?

கொத்ஸ்: ஆகா! பெருசு செஞ்சா மாதிரி செய்யறீங்களே.சரி போடுங்க போடுங்க.

இதான் பிரச்சினை மக்களே. நிரந்தரமான அழகுன்னு ஒண்ணு இருக்கா? இல்ல
பழைய நினைவுகள நினைச்சி பாக்கும்போது ஒரு புன்னகை வருமே அது அழகா,
நடிகைகள் அழகா, இயற்கை அழகா, காதலி அழகா, ராத்திரிகள் அழகா, குழ்ந்தையின்
சிரிப்பு அழகா, இல்ல அழகுன்றது நாம் பார்க்கும் பார்வையில்தான் இருக்கா?
இப்படின்னு குழம்பி போயிருக்கேன். உங்க கருத்தை சொல்லி தெளிவு படுத்துங்க.

தனிமைல இருக்கும்போது நாம பண்ணின ஏதோவொரு குறும்பை நினைச்சி சின்னதா
ஒரு சிரிப்பு வருமே அந்த மாதிரி இருந்தா பின்னூட்டத்துல சொல்லுங்க சொல்லுங்க.

46 comments:

நாமக்கல் சிபி said...

//ஒரு முறை பஸ்ல ஒரு பொண்ணு ரிப்பன என்னையறியாமல்
பிரிச்சி விட்டுட்டேன் ஒரே ரசாபாசமாகி போச்சு இப்ப அதை நினைச்சு பார்த்தா
சின்னதா ஒரு சிரிப்பு வருது இதை அழகுன்னு சொல்லமாமான்னு தெரில//

நீங்க அடிவாங்கும் காட்சியை அப்படியே கற்பனை செஞ்சி பார்க்குறேன்!

ஆஹா! அழகே அழகு!

:))

இராம்/Raam said...

//அங்க போய் பாத்தா அந்தாளு போட்டோவ போட்டு வச்சிருக்காரு. ரொம்ப
தலக்கனம் பிடிச்ச ஆளா இருப்பாரு போல இருக்கு///

ஏலேய் கதிரு,

நான் ஏற்கெனவே என்னோட போட்டோ போட்டுதான் நல்லா வாங்கி கட்டிக்கிட்டேன்.... இன்னும் என்ன வேணும் ஒனக்கு???

இராம்/Raam said...

அப்புறம் அழகுன்னா பார்க்கிற எல்லாமே அழகுதாப்பா:)

இப்போ ஒன்னோட இந்த நகைச்சுவை உணர்வே அழகுதான் :)

Anonymous said...

நீ நடந்தால் நடை அழகு!
நெருங்கி வரும் இடை அழகு!
நீ பேசும் பேச்சழகு!
நீ சிரிக்கும் சிரிப்பழகு!

அழகு! தம்பி அழகு!

இராம்/Raam said...

பாவனா'வோட தெத்து பல் அழகுப்பா :)

Anonymous said...

அழகு! அழகு! தேவதை! அப்படின்னு என்னைப் பத்தி கண் இல்லாம கமலஹாசனே பாடி இருக்காரு!

ஆவி அம்மணி said...

எனக்கென்னவோ புரொஃபைல்ல இருக்குற தம்பி படம்தான் அழகா தோணுது!

தம்பி 65 க்கு தம்பிதான் அழகு!

Anonymous said...

வாக்கெடுப்பில் நாங்களும் கலந்து கொல்லலாமா?

நேர் வாக்கா, சைடு வாக்கா? எப்படி எடுக்கணும் வாக்கு?

Anonymous said...

beauty lies in the eyes of beholder :)

துளசி கோபால் said...

ரொம்ப அழகாத்தான் இருக்கு தம்பி:-)))))

எனக்கு என் பூனைதான் அழகு.

கோபிநாத் said...

தம்பி அழகு
கதிரு அழகு
கதிரவன் அழகு
ரிப்பன் இழுத்த தம்பியும் அழகு
பாவனா அழகு
முதலில் மாட்டிய ராயல் ராமுவும் அழகு
பெரியவர் கொத்தனார் அழகு

உன் ஆப்புக்கு அகப்படாமல் எஸ்கேப் ஆகிய நானும், வெட்டியும் அழகோ...அழகு ;-)))

கோபிநாத் said...

\\ பெரியவர கேட்டா சரியா சொல்லுவாருன்னு நம்ம கொத்தனாரை அணுகினேன்.\\

இன்னாது பெரியவரா???
சிங்கத்தை சாச்சிப்புட்டியே....இந்த விஷயத்தை அவரு காதுல கேட்காம பார்த்துக்கனும்.....பாவம் தல ;((

கோபிநாத் said...

\\கொத்ஸ்: எது நம்ம எதிரில் இல்லாத போதும், அதை நினைக்கையில் நம் முகத்தில்
ஒரு புன்முறுவல் வருகிறதோ அதே அழகு. அது ஒரு முகமாய் இருக்கலாம். ஒரு
படமாய் இருக்கலாம். ஒரு வசனமாய் இருக்கலாம். ஒரு பதிவாய் இருக்கலாம் ஒரு பின்னூட்டமாய் இருக்கலாம் அந்தந்த வகையில் அது அழகு.\\\

தல பின்னிட்டிங்க.....கலக்கல் பதில் ;-)))

கோபிநாத் said...

ஆமா கரைக்டா ஏப்ரல் 1ம் தேதி இந்த பதிவை போட்டிருக்க....இதுல ஏதவாது உள்குத்து இருக்கா????

Udhayakumar said...

அழகுங்கறது அவங்கவங்க பார்வைலதான் இருக்குங்க. மொழி படம் பார்த்துட்டு ஒரு நண்பர்கிட்ட படம் நல்லாயிருக்கு பாருங்கன்னு சொன்னா அதுக்கு அவரு ஆமா நானும் பாக்கணும்னு நினைச்சேன். சொர்ணமால்யா பாத்து ரொம்ப நாள் ஆச்சுனு சொல்றாரு. இப்ப‍டி ரசிக்கறவங்களும் இருக்கறாங்க என்ன பண்றது. :)

MyFriend said...

சித்தார்த்தான் அழகு.. ;-)

MyFriend said...

//அங்க போய் பாத்தா அந்தாளு போட்டோவ போட்டு வச்சிருக்காரு. ரொம்ப
தலக்கனம் பிடிச்ச ஆளா இருப்பாரு போல இருக்கு.//

அவரை வற்புறுத்தி அவரோட போட்டோவை போடச் சொன்னா, நீங்களெல்லாம் அவரை இப்படி கலாய்க்குறீங்க!!! :-(

MyFriend said...

இன்றைய உங்களுடைய சிந்தனை சூப்பர்.. நல்ல கேள்விதான்.. ;-)

ஜி said...

ஐய்யய்யோ, இந்தப் பதிவு சிவாஜி பாட்டு மாதிரி நேத்தே லீக்-அவுட் ஆயிடிச்சி. யார் லீக்-அவுட் பண்ணாங்கனு நான் சொல்ல மாட்டேன்.. :)))

ஜி said...

அமெரிக்கால இவ்வளவு நாள் இருந்துட்டு, இங்க வந்தா எல்லா இந்திய ஃபிகர்களும் அழகா தெரியிறாங்க. :)))

அதே மாதிரி இந்தியா மொத்தமும் அழகா தெரியுது. எங்க அம்மா சமையல், நண்பர்களோடு அறட்டை, இப்படி யெல்லாமே...
ஒரு வேளை நாம சில விசயங்கள ரொம்ப நாள் கழிச்சு திரும்பவும் பாத்தா, ரொம்ப அழகா தெரியும் போலிருக்குது....

கண்மணி/kanmani said...

//கொத்ஸ்: எது நம்ம எதிரில் இல்லாத போதும், அதை நினைக்கையில் நம் முகத்தில்
ஒரு புன்முறுவல் வருகிறதோ அதே அழகு. அது ஒரு முகமாய் இருக்கலாம். ஒரு
படமாய் இருக்கலாம். ஒரு வசனமாய் இருக்கலாம். ஒரு பதிவாய் இருக்கலாம் ஒரு பின்னூட்டமாய் இருக்கலாம் அந்தந்த வகையில் அது அழகு.//
கொத்ஸ்வின் பதில் அழகு.ஒரு சீரியஸான கருப்பொருளை அழகா சோன்ன உங்க பதிவு அழகு...மொத்தத்தில எது மனதைக் கவருகிறதோ அதுதான் அழகு.பார்க்கிறவங்க கண்ணோட்டம் மனநிலை பொறுத்தது.
என்னைக்கேட்டா என்னோடு ச்சுப்பிரமணிதான் அழகு.

Ayyanar Viswanath said...

தம்பி சிந்திக்க வேண்டிய மேட்டர்

எப்பவோ படிச்ச ஒரு சிறுகதை ஞாபகத்துக்கு வருது

இருட்டுலகூட அழகா தோனுவதுதான் அழகு..நம்ம நடிகைகளை மேக்கப் இல்லாம நெனச்சாவே பயம் இதுல இருட்டெல்லாம் நெனச்சே பாக்கமுடியாது...

இருட்டுல பளிச் சுனு படுற விஷயங்கள் என்னென்னெவோ அதெல்லாம் தான் நெஜமான அழகு..

╬அதி. அழகு╬ said...

வெவரம் புரியாம ஆளாளுக்குப் பேசிக்கிட்டே இருந்தா எப்டி?

என்னிய வச்சுத்தான் தம்பி பதிவே போட்டிருக்கு.

இங்கின ஒரே அழகு நாந்தேன்.

அபி அப்பா said...

//சித்தார்த்தான் அழகு.. ;-) //

மைஃபிரண்ட்! நெனச்சேன்:-))

கதிர் said...

//நீங்க அடிவாங்கும் காட்சியை அப்படியே கற்பனை செஞ்சி பார்க்குறேன்!

ஆஹா! அழகே அழகு!

:)) //


நக்கல் நாயகரே!

நீங்க எதிர்பாக்கற மாதிரி ஒண்ணும் ஆகல, லைட்டா ஒரு கோபபார்வை வீசுனா அந்த பொண்ணு, இந்த அப்பாவி முகத்துல அசடு வழிஞ்சத பாத்ததும் சிரிச்சிட்டா அவ்ளோதான். பக்கத்துல இருந்தவங்கதான் ரொம்ப கத்துனானுங்க.

கதிர் said...

//ஏலேய் கதிரு,

நான் ஏற்கெனவே என்னோட போட்டோ போட்டுதான் நல்லா வாங்கி கட்டிக்கிட்டேன்.... இன்னும் என்ன வேணும் ஒனக்கு???//

உங்க போட்டோவுக்கு என்ன கொறச்சல், சிங்கம்னே நீங்க :))

//இப்போ ஒன்னோட இந்த நகைச்சுவை உணர்வே அழகுதான் :) //

ரொம்ப தேங்க்ஸ் ராயலு!

கதிர் said...

//நீ நடந்தால் நடை அழகு!
நெருங்கி வரும் இடை அழகு!
நீ பேசும் பேச்சழகு!
நீ சிரிக்கும் சிரிப்பழகு!

அழகு! தம்பி அழகு! //

ஜோதிலட்சுமி பாட்டி!
நேத்து வந்த அசினைய அள்ளி ஓரம் வச்சிட்டேன். எப்பவோ ரெண்டு பாட்டுக்கு கும்தலக்கா ஆட்டம் போட்ட உன் முகம் மறந்து போயிடுச்சி. அழகு லிஸ்ட்ல உன் பேர் இல்லிங்க ஆயா. அப்படி ஓரமா குந்திகிட்டு வேடிக்கை பாருங்க.

அப்புறம் நம்மள புகழ்ந்து பாடினதுக்கு மிக்க நன்றி. அடிக்கடி இந்த மாதிரி பாடுனிங்கன்னா லிஸ்ட்ல சேக்க ஆவன செய்யலாம்.

//பாவனா'வோட தெத்து பல் அழகுப்பா :) //

கரெக்டா சொன்னிங்க ராயலு. அங்கதான் நான் விழுந்து கிடக்கேன்.

Anonymous said...

என்னைப் பத்தி ஏதோ பதிவு போட்டிருப்பதாச் சொன்னாங்களே!

ரொம்ப நன்றி தம்பி!

Anonymous said...

//ஜோதிலட்சுமி பாட்டி!
நேத்து வந்த அசினைய அள்ளி ஓரம் வச்சிட்டேன். எப்பவோ ரெண்டு பாட்டுக்கு கும்தலக்கா ஆட்டம் போட்ட உன் முகம் மறந்து போயிடுச்சி. அழகு லிஸ்ட்ல உன் பேர் இல்லிங்க ஆயா. அப்படி ஓரமா குந்திகிட்டு வேடிக்கை பாருங்க
//

அப்போ நானாவது அந்த லிஸ்ட்ல உண்டா?

Anonymous said...

அபிராமிதான் அழகு!
அபிராமி அபிராமி!

அபிராமி தவிர மத்தது எல்லாமே அசிங்கம்! இந்த பதிவுலகம் அசிங்கம்! பதிவுகள் அசிங்கம். பின்னூடங்கள் அசிங்கம்!
சேட்டிங்க் அசிங்கம்! டேட்டிங் அசிங்கம்! வாக்கிங்க் அசிங்கம்! ஜாக்கிங்க் அசிங்கம்!


அபிராமி அபிராமி! எனக்கு
அபிராமிதான் அழகு!


தம்பி! அன்போட கமல ஹாசன் எழுதுற கமெண்ட்! இல்லை பின்னூட்டம்! இல்லை கமெண்டே போட்டுக்கோ!

Anonymous said...

பியூட்டிங்குறது உன்னோட டியூட்டிலதான் இருக்கு! அதை சரியா செஞ்சா பியூட்டி! இல்லாட்டி நீ ஒரு நாட்டி!

புரியுதா! புரியலைன்னாலும் சொல்ல மாட்டேன்! ஏன்னா நான் ஒரு தடவைதான் சொல்வேன்!

வர்ர்ர்ட்ட்ட்ட்ட்டா!

Anonymous said...

அழகுன்னாலே அது என் அப்பன் எம்பெருகன் முருகன்தான்! அவனோட அழகுக்கு அவனேதான் நிகர்!

இன்னிக்கு பங்குனி உத்திரம் வேற!

எல்லோரும் என் கூட சேர்ந்து சொல்லுங்க!

அழகென்ற சொல்லுக்கு முருகா!
உந்தன் அருளின்றி உலகிலே பொருளேது முருகா!
அழகென்ற சொல்லுக்கு முருகா!

Anonymous said...

அமாவாசை இரவினிலே நிலவது உதிப்பதில்லை!
அழகற்ற என் முகத்தை அன்றொருத்தி ஏற்கவில்லை!

Anonymous said...

அழகுன்னா அது என் ஃபிரண்ட் தாமரைதான்!

இதை ஜீஜே, மாயா, ஆண்டவர் லிங்கம் யாரு வந்து கேட்டாலும் சொல்லுவேன்!

ஏன்னா எங்களுக்குள்ள இருக்குற ஃபிரண்ட்ஷிப் அப்படி!

Anonymous said...

அழகுன்னா அது என் கடைசித் தங்கை ஆர்த்திதான் அழகுன்னு சொல்லுவேன்!

Anonymous said...

தம்பி!

நான் பார்த்தவுடனே சொல்லிடுவேன்! அவங்க அழகா இல்லையான்னு!

இப்படித்தான் என் மாப்பிள்ளை ரொம்ப நல்லவர்னு சொன்னேன்!

ஆனா நான் சொன்னது என் ரெண்டாவது மாப்பிள்ளையை!

நான் உடனே கண்டுபிடிச்சிருவேனாக்கும்! ஆமா!

Anonymous said...

அழகு ஒரு ஆபத்தான கிணறு!

விழுந்துட்டா எழுந்திருக்க முடியாது!

ஆமாம் தம்பி! நீயும் விழுந்திடாதே!

(ஆமா! இங்கே ஹரிணி நடிச்ச படம் எங்கே ஓடுது? ஹரிணிதான் அழகு)

Anonymous said...

நம்ம சைக்கிள் கடை போர்டை பாருங்கப்பா! எவ்வளவு அழகா ஆல் இன் ஆல் அழகு ராஜான்னு எழுதி வெச்சிருக்கேன்!

SAHARA “ சஹாரா “ said...

அருமை!!!

Anonymous said...

ரிபன் பிரிச்சு அடிவாங்கினிங்களாக்கும்?? ஹிஹிஹி

Santhosh said...

கொத்ஸ் பதில் அருமை, இந்த பதிவு கூட அழகு தான் தம்பி.

Anonymous said...

see, how many people are there to read your article keenly and making comments - how lucky you are - how it is possible - how can you attract all of them and keep them sustainably -
because some incomparable beauty is in your writings - you are gifted person -
THIS IS BEAUTY.b. -

இராம்/Raam said...

//உங்க போட்டோவுக்கு என்ன கொறச்சல், சிங்கம்னே நீங்க :))//

ஐயோ தமாசு தமாசு..... :)

மவனே சிங்கத்துக்கு எழுத படிக்க தெரிஞ்சுன்னு வையி? அது இதை படிச்சிட்டு ஒன்னையே கடிச்சு குதறமா விடாது :)

சிங்கமாம் சிங்கம், நீ அதுக்கு முன்னாடி 'அ'ன்னு போட்டுருந்தா சரியா இருந்துருக்கும் :)

இராம்/Raam said...

/அவரை வற்புறுத்தி அவரோட போட்டோவை போடச் சொன்னா, நீங்களெல்லாம் அவரை இப்படி கலாய்க்குறீங்க!!! :-(//

தங்கச்சிக்கா,

ஒங்க பாசத்தை நினைச்சி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இலவசக்கொத்தனார் said...

தம்பி, நீங்க கேட்ட கேள்வி என்னை சும்மா இருக்கவே விடலை. பதிவு ஒண்ணு போட்டாச்சு. அழகுகள் ஆறு - இதில் நீங்கதான் அடுத்தது!!

து.மது said...

hi,

அழகு enpathu manasu அழகு...manasu alaha iruntha avankala enaku parkum pothu rompa al(zh)aha therivaanka....

Evalavuthan physically alaha irunthu manasu kuppaya iruntha avanka rompa ugly aa therivaanka...

another thing ....silarin teaching style enna adikadi kavarum....so avanka rompa alaha therivaanka...

Any dout???? Physical aa kavaraamal & chemistry aa alaha iruka paarunka....

see, how many people are there to read your article keenly and making comments - how lucky you are - how it is possible - how can you attract all of them and keep them sustainably -
because some incomparable beauty is in your writings - you are gifted person -
THIS IS BEAUTY.b. - This is true yaaaaaaa

keep it up...