எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, March 21, 2007

பஞ்ச தந்திரம்

weird மொதல்ல இந்த வார்த்தைக்கே அர்த்தம் தெரியல. ஓடிப்போய் அகராதிய
புரட்டினேன் (அகராதி படிச்சவன், பிடிச்சவன் இல்ல)very strange and unusual,
unexpected or not natural னு எழுதி இருந்துச்சி. அந்தளவுக்கு ஒண்ணும் விஷயம்
இல்லயே நம்மகிட்டன்னு விட்டுடலாம்னு பார்த்தேன். சரி பாசமா ரெண்டு பயலுவ
கூப்பிட்டு விட்டாங்க. அப்புறம் எழுதலன்னா அடுத்த பதிவுக்கு வந்து பின்னாடி
ஊட்ட மாட்டாங்கன்னு எழுத ஆரம்பிச்சிட்டேன்.

எப்படி யோசிச்சாலும் எனக்குன்னு எந்த ஒரு தனித்தன்மையே இல்லன்னு தெரிஞ்சு
போச்சு. இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் தூங்கிக்கலாம்னு அலாரத்தை ஆப் பண்ணுற
சாதாரண ஆளுதான். எந்த விஷயத்துலயும் எனக்குன்னு ஒரு தனித்தன்மையும் இல்ல.
தனித்தன்மையா இருந்தாத்தான் மனுசனா என்ன. அது இல்லாமலும் இருக்கலாம்.

புத்தகங்கள்: வயசுக்கு ஏத்த மாதிரி புத்தக வாசிப்பு மாறிகிட்டே
வருது. சின்ன வயசில காமிக்ஸ் படிச்சேன் இப்ப அதை படிக்க உக்காந்தா சலிப்பு
தட்டுது. நான் கதை படிக்க ஆரம்பிச்சேன்னா கண்ணு மண்ணு தெரியாம படிப்பேன்.
"சாப்பிட்டு படியேண்டா" அப்படி என்னதான் இருக்கோ அதுலன்னு தலைப்பாடா
அடிச்சிக்குவாங்க வீட்டுல. தட்டுல போட்டு பக்கத்துல வெச்சிடும்மான்னு சொல்லிட்டு
நான் பாட்டுக்கு படிச்சிட்டு இருப்பேன். கண்ணும் கருத்துமா படிச்சி இருந்ததுல
தட்டுல என்ன வெச்சாங்கன்னு பாக்காமலே வாய்ல எடுத்து வச்சா ஒரே நற நறங்குது
என்னன்னு பாத்தா தட்டுல சாம்பல் வெச்சிருக்காங்க. பாத்திரம் விளக்க வச்சிருந்த
சாம்பல் தட்டை பக்கத்துல வெச்சிருந்தது கூட தெரியாம எடுத்து சாப்பிட்டுருக்கேன்.
அந்த அளவுக்கு புத்தகம் மேல காதல்(?).

தனிமை தனிமை, மவுனம் இரண்டையும் ஒரே மாதிரி பொருள்
கொள்ளலாம்.இரண்டுமே அமைதியை குறிக்கிறது இந்த இரண்டுமே எனக்கு
பிடித்தமான ஒன்று. நீ பேசாமல் இருக்கும்போது உன்னையே அறிந்து கொள்ளலாம்.
அதிகமாக பேசாமல் ஒரு நாளைக்கு முடிந்தளவு குறைவாக பேசிப்பாருங்கள். அந்த
நாளின் அற்புதம் விளங்கும். உங்களுக்காகவே ஒரு நாளை முழுமையாக அனுபவித்தது
போல தோன்றும். காற்றுக்கு இலைகள் அசைகின்றன, மலர்கள் அசைகின்றன,
மரங்கள் அசைகின்றன ஆனால் மலைகள் அசைவதில்லை அமைதியாக இருக்கும்
அது அசையாது இருப்பது உறுதியை காட்டுகிறது. எங்கோ படித்தது இது எனக்கு
பிடித்ததும் இதுவே. யாருமே இல்லாத ரோட்டுல நான் மட்டும் தனியா நடந்து
போவேன் அது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் தனிமை தரும் சுகமே தனிதான்
ஆனால் அதுவே நிரந்தர சுகமாகிவிடாது. மாற்றத்துக்கு மட்டுமல்லாமல் கிடைக்கும்
நேரங்களில் தனிமைய அனுபவித்துக்கொள்வேன். கோவிலில் இருக்கின்ற சிலை
வருகின்ற பக்தனிடமெல்லாம் பேசத்தொடங்குமானால் பக்தனுக்கே அலுப்புத் தட்டி
விடும். மவுனமாக இருக்கவே அதற்கு அவ்வளவு மரியாதை.

"நிறைய கேள் குறைவாக பேசு"

பயம் எல்லாரும் பயப்படற ஒரு விஷயத்துக்கு நாம பயப்படாம இருக்கணும்னு முயற்சி செய்வேன். உதாரணத்துக்கு பாம்புக்கு எல்லாரும் பயந்துகிட்டு
நின்னாங்கன்னா நான் தைரியமா முன்னால போய் அதை அடிச்சி சாகடிப்பேன். சின்ன
வயசில கிணத்துக்கு பசங்க எல்லாம் ஒண்ணு கூடி போய் குளிப்போம். டேய் இந்த
கிணத்துல பாம்புங்க இருக்கு வேற கிணத்துக்கும் போகலாம்னு கூட பசங்க
பயமுறுத்துவாங்க ஆனா நான் மொத ஆளா குதிப்பேன். கிணத்துல குதிச்ச உடனே
பொந்துல இருக்கற பாம்புங்க எல்லாம் வெளில தலை நீட்டி பார்க்கும்.(தண்ணி
பாம்பு கடிச்சாலும் ஒண்ணும் ஆகாதுன்ற தைரியம்தான்) ஒரு முறை கடிச்சிவச்சிடுச்சி.
எங்க வீட்டு பக்கத்துல நிறைய கரும்புதோட்டம் இருக்கறதினால பாம்புங்க குறுக்கும்
மறுக்கும் போறது சகஜமாயிடுச்சி. முடிஞ்ச வரைக்கும் எந்த விஷயத்துக்கும்
பயமில்லாம இருக்கணும் ஒருமுறை சவாலுக்காகவேண்டி விடியற வரை சுடுகாட்டுல
ஒரு கல்லறை மேல உக்காந்திருந்தேன். பயந்தா எதுவுமே நடக்காது. பயத்தை
காட்டிக்காம இருக்கறது பெரிய விஷயம்னு
உக்காந்திருக்கும்போதுதான் தெரியும்.

பயணம் சின்ன வயசில வருசத்துக்கு ஒருமுறை லீவுல பாட்டி
வீட்டுக்கு போவேன் அதுதான் அந்த வயசில நீண்ட பயணம் மூணு மணிநேரமாச்சும்
ஆகும் அதுக்காக வருஷம் முழுக்க காத்திருப்பேன். பயணத்துல அதுவும் பஸ்ல
ஜன்னல் சீட்டுன்னு இல்ல எதாச்சும் ஒரு மூலைல இருந்தா கூட போதும். வயசு
ஆக ஆக பஸ் பயணத்தை விட பைக் பயணம் ரொம்ப பிடிச்சி போச்சு. எங்க
போகணுமின்னாலும் வரணும்னாலும் பைக்தான். என் பின்னாடி உக்காந்து வர்றவங்க
என்னை திட்டிகிட்டே இறங்குவாங்க, என் அம்மா கூட "இவன்பின்னாடி உக்காந்து
போகறதுக்கு நடந்தே போகலாம்னு". ரொம்ப ஸ்லோவா போவேன். அதிகபட்சம்
நாப்பதுதான். வேகமா போய் என்னத்த சாதிக்க போறோம்?

சினிமா எந்த படமா இருந்தாலும் எங்க ஊரு தியேட்டருக்கு வந்த
பிறகு பாக்கறதுல ஒரு சுகம். இருவது முறை பாத்திருந்தாலும் மழை, கீறல் விழுந்த,
திரையில் கோடு கோடா ஆன பிறகு படத்தை பாக்கறதுல ஒரு சொர்க்கமே இருக்கு.
எந்த விதமான நவீன வசதியும் கிடையாது அந்த தியேட்டர்ல ஆன எனக்கு விவரம்
தெரிஞ்சி சினிமான்னு பார்த்தது அந்த தியேட்டர்லதான்(க்ரசண்ட் தியேட்டர்) அதனால
ஒரு பாசம். சீட்டு ஒழுங்கா இருக்காது, மூட்டைப்பூச்சி தொல்லை, சவுண்டு ஒழுங்கா
கேக்காது. படம் ஓடிட்டே இருக்கும்போது கரண்டு கட்டாகிடும் நம்ம விசில் அடிக்க
வைக்க அவங்க வேணும்னே ஆஃப் பண்றாங்கன்னு நினைப்பேன் அப்போது.
ஜெனரேட்டர போடுடா மச்சின்னு ஒரு சவுண்டு விட்டவுடனே கரண்டு வந்துடும்
கப்சிப்னு அடங்கிடுவேன்.


இதெல்லாம் தேடிப்பிடிச்சி எழுதறதுக்கே நாக்கு தள்ளிடுச்சி. என்ன இருந்தாலும்
நம்மள பத்தி நாமளே அளந்து விடறது ரொம்ப ஓவர்னு நினைக்கிறேன்.
என்ன பண்றது கேட்டுட்டாங்க சொல்றது கடமை. அடுத்ததா அஞ்சு பேர
சொல்லணுமில்ல அதுதான் பயங்கர கஷ்டமா இருக்கு (யாரு கண்டு பிடிச்சது
இந்த விளையாட்ட?)

லியோ சுரேஷ் (இப்பவாச்சும் பதிவெழுத ஆரம்பிங்க தலைவா!)
முத்துக்குமரன்
ஆசிப்மீரான் அண்ணாச்சி
அய்யனார் விஸ்வநாத்
பெனாத்தல் சுரேஷ்

17 comments:

Unknown said...

தம்பி: பஞ்ச மொக்கை பதிவு...

இராம்/Raam said...

//புத்தகங்கள்: வயசுக்கு ஏத்த மாதிரி புத்தக வாசிப்பு மாறிகிட்டே
வருது. சின்ன வயசில காமிக்ஸ் படிச்சேன் இப்ப அதை படிக்க உக்காந்தா சலிப்பு
தட்டுது. நான் கதை படிக்க ஆரம்பிச்சேன்னா கண்ணு மண்ணு தெரியாம படிப்பேன்.
"சாப்பிட்டு படியேண்டா" அப்படி என்னதான் இருக்கோ அதுலன்னு தலைப்பாடா
அடிச்சிக்குவாங்க வீட்டுல. தட்டுல போட்டு பக்கத்துல வெச்சிடும்மான்னு சொல்லிட்டு
நான் பாட்டுக்கு படிச்சிட்டு இருப்பேன். கண்ணும் கருத்துமா படிச்சி இருந்ததுல
தட்டுல என்ன வெச்சாங்கன்னு பாக்காமலே வாய்ல எடுத்து வச்சா ஒரே நற நறங்குது
என்னன்னு பாத்தா தட்டுல சாம்பல் வெச்சிருக்காங்க. பாத்திரம் விளக்க வச்சிருந்த
சாம்பல் தட்டை பக்கத்துல வெச்சிருந்தது கூட தெரியாம எடுத்து சாப்பிட்டுருக்கேன்.
அந்த அளவுக்கு புத்தகம் மேல காதல்(?).
//

அடபாவி, நான் எழுதனுமின்னு நினைச்சுட்டு இருந்ததே எப்பிடிய்யா நீ எழுதினே??? :)

ஜி said...

தம்பி.... நீங்க கைப்புள்ள மாதிரி தைரியசாலின்னு எங்களுக்கும் தெரியும்... ஆனாலும் பாம்ப புடிச்சு பாக்கட்ல விட்டுக்கிட்டு திரிவோம்னு ரொம்ப ஓவரா பீலா விடக்கூடாது...

;)))))) (பெரிய கண்ணடி சிரிப்பாண்)

இலவசக்கொத்தனார் said...

ரொம்ப வயசானவங்க எழுதுன மாதிரி ஒரு ஃபீலிங். உண்மையில் நீங்கதான் எழுதினீங்கன்னா இனி தம்பிக்குப் பதிலா அண்ணன் அவர்களேன்னுதான் கூப்பிடப் போறேன்.

அப்புறம் ஜி-z, கண்ணடி சிரிப்பான் அப்படின்னு எல்லாம் கஷ்டப்படாதீங்க. அது கண்ணடிப்பான்.

கோபிநாத் said...

\\எந்த விஷயத்துலயும் எனக்குன்னு ஒரு தனித்தன்மையும் இல்ல.
தனித்தன்மையா இருந்தாத்தான் மனுசனா என்ன. அது இல்லாமலும் இருக்கலாம்.\\

ஆகா....இப்ப என்ன நாங்க கேட்டுப்புட்டோம்ன்னு இப்படி பீல் பண்றா!!!!!!

கோபிநாத் said...

\இதெல்லாம் தேடிப்பிடிச்சி எழுதறதுக்கே நாக்கு தள்ளிடுச்சி\\

என்னமோ 5 எல்லாம் பத்தாது எனக்கு 500 தான் வேணும் அப்படி இப்படின்னு சவுண்டுவிட்ட..... இப்ப இந்த 5க்கே நாக்கு தள்ளுதா ;-)))

கதிர் said...

//தம்பி: பஞ்ச மொக்கை பதிவு...//

பஞ்ச மொக்கை, அட டைட்டில் நல்லாதாங்க இருக்கு. முன்னாடியே சொல்லக்கூடாதா...

கதிர் said...

//அடபாவி, நான் எழுதனுமின்னு நினைச்சுட்டு இருந்ததே எப்பிடிய்யா நீ எழுதினே??? :)//

இந்த வியாதி எல்லாருக்குமே இருககா?

கதிர் said...

//தம்பி.... நீங்க கைப்புள்ள மாதிரி தைரியசாலின்னு எங்களுக்கும் தெரியும்... ஆனாலும் பாம்ப புடிச்சு பாக்கட்ல விட்டுக்கிட்டு திரிவோம்னு ரொம்ப ஓவரா பீலா விடக்கூடாது...//

ஜியா

நாங்கல்லாம் கைப்ஸோட சிஷ்யகேடிங்க, அந்த அளவுக்கு எங்களுக்கு தெகிரியம் பத்தாது. ஏதோ தூரத்துல இருந்தா பாத்து ரசிப்போம். அம்புட்டுதேன்

கதிர் said...

//ரொம்ப வயசானவங்க எழுதுன மாதிரி ஒரு ஃபீலிங். உண்மையில் நீங்கதான் எழுதினீங்கன்னா இனி தம்பிக்குப் பதிலா அண்ணன் அவர்களேன்னுதான் கூப்பிடப் போறேன்.//

அப்போ இத நான் எழுதலங்கறிங்க அதான...

அம்புட்டு வயசாகலங்க கொத்ஸ், அண்ணேன்னு கூப்பிடறதுக்கு இப்படி ஒரு சால்ஜாப்பு சொல்றிங்களா?

//அப்புறம் ஜி-z, கண்ணடி சிரிப்பான் அப்படின்னு எல்லாம் கஷ்டப்படாதீங்க. அது கண்ணடிப்பான்.//

இதுக்கெல்லாம் அசந்துட மாட்டேன் கொத்ஸ், நாமல்லாம் யாரு...

அபி அப்பா said...

தம்பியண்ணே! ப்பிராம்பா, உங்கள கடிச்சுதா? சுடுகாடா? அய்யோ..திகில் படம் பாத்த மாதிரி ஒரே பீலிங்பா:-)

Anonymous said...

ithil enakku pidithavai -3 points

1. Thanimai miga suhamaaaaanathu - yes anupavithvarkalukku mattumea theriyum athan inimai -
2. Courage - every one should have this quality - no doubt - iruttil thanimai padumpothu - just you image that you a hermit living in a deep forest - payam- that will hesitate to rush you -
3. Vegama poyee ethai saathika poram - really good version - you will have long life - puthisalithanamana nithaanm - it is good in all aspects
-bask

Leo Suresh said...

தம்பி,
இந்த வாரம் ஊருக்கு போறேன் திரும்பி வந்து ஜோதில கலந்துக்கிறேன்.
லியோ சுரேஷ்

கதிர் said...

//ஆகா....இப்ப என்ன நாங்க கேட்டுப்புட்டோம்ன்னு இப்படி பீல் பண்றா!!!!!! //

நான் எங்கய்யா பீல் ஆனேன். தினமும் புதுசு புதுசா ஒரு விளையாட்டு கண்டுபிடிக்கறிங்க அந்த பீதில இருக்கேன்.

கதிர் said...

//என்னமோ 5 எல்லாம் பத்தாது எனக்கு 500 தான் வேணும் அப்படி இப்படின்னு சவுண்டுவிட்ட..... இப்ப இந்த 5க்கே நாக்கு தள்ளுதா ;-))) //

அது வேறு, இது வேறு நண்பா.

கதிர் said...

//ithil enakku pidithavai -3 points

1. Thanimai miga suhamaaaaanathu - yes anupavithvarkalukku mattumea theriyum athan inimai -
2. Courage - every one should have this quality - no doubt - iruttil thanimai padumpothu - just you image that you a hermit living in a deep forest - payam- that will hesitate to rush you -
3. Vegama poyee ethai saathika poram - really good version - you will have long life - puthisalithanamana nithaanm - it is good in all aspects
-bask //

வாங்க பாஸ்கர் அண்ணே!

அது என்னங்க எனக்கு பிடிச்சதெல்லாம் உங்களுக்கும் பிடிக்குது? நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே அலைவரிசையா இருக்குமோ?

எதுவா இருந்தாலும் நல்லதுக்கே!

நன்றி

கதிர் said...

//தம்பி,
இந்த வாரம் ஊருக்கு போறேன் திரும்பி வந்து ஜோதில கலந்துக்கிறேன்.
லியோ சுரேஷ் //

நல்லபடியா போயிட்டு வாங்க.
வந்து கூட்டத்துல ஐக்கியமாகுங்க!