எல்லையற்ற அன்பு கொள்வோம்

Thursday, March 01, 2007

நாங்கள்லாம் ஜெயில் பறவையாக்கும்....

இப்படித்தான் ஒரு படத்துல வடிவேலு ஒரு பீட்டர் விட்டு அடிவாங்குவாரு.
நானெல்லாம் ஜெயில்னு பாத்தது சினிமால மட்டும்தான்னு பொய்யெல்லாம் சொல்ல
மாட்டேன். ஆனா துபாய் ஜெயில பாக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. நம்ம ஊரு
ஜெயிலுக்கும் இங்க இருக்குற ஜெயிலுக்கும் என்ன வித்தியாசம்னு பாக்கத்தான்.
அதுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைச்சுது.

நம்ம பய ஒருத்தன் எக்குத்தப்பா வண்டிய ஓட்டி செவுத்துல விட்டுட்டான் என்னவோ
நாலு பேர மர்டர் பண்ணா மாதிரி தூக்கிட்டு போய் 26 நாள் ரெஸ்ட் எடுக்க
விட்டுட்டாங்க நாலு வெள்ளிக்கிழமை கணக்குல வராதாம் அதுனால 26 நாள்தான்.
சரி பய காய்ஞ்சி போய் கிடப்பானே ஒரு எட்டு போய் பாத்துட்டு வரலாம்ணு
முடிவு பண்ணினோம். உள்ள இருக்குற ஆள பாக்கணும்னா முன்னாடியே டோக்கன்
போடணுமாம். சனிக்கிழமைகள்ல காலை 7 மணி முதல் 11 மணி வரைக்கும்தான்
பாக்கமுடியுமாம் இது நாங்க கிளம்பறதுக்கு முன்னாடி தெரியல அங்க போய்தான்
தெரிஞ்சிகிட்டோம். இதுல காமெடி என்னான்னா ஒரு ஜெயில் இருக்கற எடத்த
தேடி கண்டுபுடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டோம்னு.

வழக்கம்போல எட்டு மணிக்கு கெளம்ப வேண்டியது 9 மணியாகிபோச்சு. முந்தின
நாளே எந்த இடம், எப்படி போகணும்னு விசாரிக்க சொன்னேன் காரோட்டி நண்பரை
ஞாபகமா அதை எதுவும் செய்யாமலே வந்துட்டார். சரி விசாரிச்சிகிட்டே போகலாம்னு
கெளம்பியாச்சு. சிறைச்சாலை இருக்குற இடம் அல் அவிர் அப்படிங்கறத தவிர அதுக்கு
எப்படி போகணும்னு ரெண்டு பேருக்குமே தெரியாது. அங்க ஒரு "அரபிதாத்தாகிட்ட
அவிர் ஜெயிலுக்கு எப்படி போகணும்னு" சீதா ஜாவ், ஆதா ஜாவ்னு சொல்ல
ஆரம்பிச்சிட்டாரு. எலேய் ட்ரைவரு நீயே வந்து கேட்டுக்க எனக்கு இந்தியில
பேசினாவே நமக்கு வெளங்காது. இதுல அரபி வேறயா(அவர் இங்க மூணு வருசமா கொட்டறாரு ஏதாச்சும் புரியும்னுதான்) சொன்னது புரிஞ்சா மாதிரியே மண்டைய
மண்டைய ஆட்டிட்டு வந்துட்டாரு.

இங்கருந்து நேரா போயி சோத்தாங்கை பக்கமா திரும்பினா ஜெயில்தான்னு
சொன்னாராம் அப்படி சொன்ன மாதிரி போனோம். போயிகிட்டே இருக்கு பாத்தா
ஒரு கிராமம் வந்துடுச்சி நாலு தலைமுறையா அங்க ஒட்டகம் மேய்க்கிற பாகிஸ்தானி
ஆளுங்க இருந்தாங்க இது என்ன இடம்னு விசாரிச்சா ஏதோ ஒரு கிராமம்னு
சொன்னாங்க. ஏதோ ஒட்டக சந்தை போலருக்கு நூத்துக்கணக்குல ஒட்டகம்
வந்துகிட்டும் போய்கிட்டும் இருந்துச்சி. இப்படிக்கா இன்னும் 50 கிலோமீட்டரு
போனிங்கன்னா மஸ்கட் வரும்னு சொன்னாங்க ஆக நம்மாளு சொன்னத சரியா
வெளங்கிக்கல. சரி வந்த வழியே திரும்பி போனோம். திரும்பவும் வழிகேட்ட
இடத்துக்கு வந்தோம்.

அங்க ஒரு போலிஸ்காரரு வண்டிய நிறுத்திட்டு தம் அடிச்சிட்டு இருந்தாரு அவர்கிட்ட
வழி கேட்டோம் அவர் சொன்ன மாதிரி போனோம் மறுபடியும் துபாய்க்கே வந்து
சேர்ந்துட்டோம். பாவிங்க ரூட்டு தெரியலன்னா தெரியலன்னு சொல்லவே
மாட்டேன்றானுங்க ஏதாவது ஒரு வழிய சொல்லி எங்கிட்டாசும் அனுப்புறானுங்க.
ஒரு ஜெயிலு இருக்குற எடம் தெரியல இவன்லாம் எப்படி போலிஸ்ல சேர்ந்தான்னே
தெரில. மறுபடியும் ஆரம்பிச்ச இடத்துக்கே வந்து குத்துமதிப்பா அந்த ஏரியாவில
சுத்த ஆரம்பிச்சோம். அங்க ஒரு பாகிஸ்தானிகிட்ட நான் ஜெயில் எங்க இருக்குன்னு
கேட்டேன் அவனும் என் பின்னாடியே வாடான்னு சொல்லவே.அவன் பின்னாடியே
போனோம் கடேசில அவன் கம்பெனிக்கு எங்கள கூட்டிட்டு போயிட்டான்.
இதான் எங்க கம்பெனி எப்படி இருக்குன்னு கேள்வி வேற. அடப்பாவி நீயும்
பழிவாங்கிட்டியான்னு நொந்துகிட்டேன். நாம ஒருவேளை இந்தியில தப்பா
கேட்டுட்டனான்னு எனக்கே புரியல.

ரோடு சுத்தம் பண்றவர கேட்டோம் அவரு கரெக்ட்டா ரூட்டு சொல்லி போனோம்
அல் அவிர்லருந்து ஹத்தா போற வழில சோத்தாங்ககை பக்கமா திரும்பினா
துபாய் ஜெயில் வரும்னு சொன்னாரு. 25 ஏக்கர்ல பயங்கர செக்யூரிட்டியோட ஒரு
ஜெயில். இத கண்டுபுடிக்கறதுக்குல்ல டவுசர் கிழிஞ்சிடுச்சி. எதெதுக்கோ போர்டு
வெக்கீறானுங்க இதுக்கு ஒண்ணும் வெக்கல. வெச்சிருந்த ஒரு போர்டும் அஞ்சுக்கு
மூணுல ஒரு சின்ன போர்டு. அதுல எவனோ ப்ராக்டிஸ் பண்ண மாதிரி ஒரு
கோணல் மாணல் எழுத்துல இருக்கு.வழி சொல்றாங்களாம். வெளிலருந்து
பாக்கும்போதே உள்ளுக்குள்ள ஏகபோகமா பொழுதை கழிக்கலாம் போலருக்குன்னு
நினைச்சேன். அதே மாதிரிதானாம்.

ஒருவழியா எல்லாமும் செஞ்சு உள்ள போய் பாத்தோம். ஏகப்பட்ட செக்யூரிட்டி
இவனென்ன தீவிரவாதியா. வெளில விட்டாவே வழி எங்கருக்குன்னு கண்டுபுடிச்சி
போக தெரியாத அப்பாவி இவனப்போயி நாப்பதடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள்ள
வெச்சிருக்கானுங்க. எப்படிலே மக்கா இருக்கு ஜெயிலு. காசு இருந்தா போன்கார்டு
வாங்கி எல்லாருக்கும் போன் பண்ணலாம். நான் சின்ன லெவல்ல தப்பு பண்ணதால
அதிகம் இம்சை பண்ணமாட்டாங்க.போர் அடிச்சா டீவி பாப்பேன் இல்லன்னா
குப்புற அடிச்சி தூங்குவேன். காலைல ஏழு மணிக்கே எழுப்பி விட்டு பிரியாணி
போடுறானுங்க. மூணு வேலையும் பிரியாணி சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கே செத்து
போச்சு.

ஒரு நாள் ரெண்டு நாள்னா பரவால்ல வந்த நாளா அதே கருமத்த சாப்பிடவேண்டியதா
இருக்கு. ரொம்ப அலுத்துக்கறாரு அவரு.

21 comments:

கைப்புள்ள said...

//அடப்பாவி நீயும்
பழிவாங்கிட்டியான்னு நொந்துகிட்டேன். நாம ஒருவேளை இந்தியில தப்பா
கேட்டுட்டனான்னு எனக்கே புரியல//

கஜா கா தோஸ்த்னு சொல்லிருந்தா சரியான வழி காட்டிருப்பாங்கல்ல? அட போப்பா...இத்தினி வருஷமா துபாய்ல இருக்கே இந்த சின்ன விஷயம் கூட உனக்கு புரியலியே?

//காலைல ஏழு மணிக்கே எழுப்பி விட்டு பிரியாணி
போடுறானுங்க. மூணு வேலையும் பிரியாணி சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கே செத்து
போச்சு.//
ஜெயில்ல களி திம்பாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன். மூனு வேளையும் பிரியாணி தின்னறதைப் பத்தி இப்பத் தான் கேள்வி படறேன். அதுவே அலுத்துப் போச்சாம் ஒருத்தருக்கு. பாரேன்யா கூத்தை?
:)

மணிகண்டன் said...

கஷ்டப்பட்டு, வேதனைப்பட்டு, திண்டாடி
சிறை கண்ட சிங்கம், அஞ்சா நெஞ்சன் அருமைத் தம்பி வாழ்க!!

SurveySan said...

தப்பு பண்ணிட்டியேய்யா தப்பு பண்ணிட்டியே!

பேசாம கார கொண்டு போய் நீயும் சொவுத்துல இடிச்சிருந்தா, ப்ரெண்டுக்கு கம்பெனி குடுக்க, அவாளே, உன்ன தூக்கி உள்ள போட்டிருப்பாளே :)

பிரியாணி சாப்டு, ஜாம் ஜாம்னு ஒரு மாசம் ஓடியிருக்குமே.

யோசிக்கலயோ?

கோபிநாத் said...

\\நம்ம ஊரு
ஜெயிலுக்கும் இங்க இருக்குற ஜெயிலுக்கும் என்ன வித்தியாசம்னு பாக்கத்தான்.
அதுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைச்சுது.\\\

ஆஹா...அப்ப காலையில போன் பண்ணும் போது ஜெயில்ல தான் இருந்தியா!!!!!!!

சொல்லவே இல்ல...

அபி அப்பா said...

பத்த வச்சுட்டியே பரட்டை!! அவரு எவ்ளோவ் கெஞ்சி கேட்டிகிட்டரு... ஜெயில்ல இருக்கிறத வெளிய சொல்லாதன்னு....

இராம் said...

என்னாய்யா ஜெயிலிலே பிரியாணியெல்லாம் போடுவாங்களா?? :)

சீனு said...

ரெக்கை எங்கே? அதையும் ஜெயில்லயே எடுத்துட்டாங்களா?

ஜி said...

அடப்பாவிகளா.... பதிவெழுத மேட்டர் இல்லாததுனால, இப்படி ஜெயிலுக்குப் போன அந்த நல்ல மனுசன ஒலகத்துக்கு டார்ச் லைட் போட்டு காட்டிட்டியே தம்பி.. இது நியாயமா????

சந்தோஷ் aka Santhosh said...

கதிரு,
நம்ம சர்வே சொல்லி இருக்குற மாதிரி செஞ்சி இருக்கலாம்பா, என்ன நீயி சும்மா காரை கம்பி மேல இடிச்சிட்டு எல்லாம் ஜெயிலு பக்கம் போயிட்டுவரே இது சரியில்லை வீரம் வெளஞ்ச மண்ணுல இருந்து வந்து இருக்கே ஒரு பத்து பேரை தலை சீவிட்டு இல்லா போயி இருக்கணும்.

தம்பி said...

//கஜா கா தோஸ்த்னு சொல்லிருந்தா சரியான வழி காட்டிருப்பாங்கல்ல? அட போப்பா...இத்தினி வருஷமா துபாய்ல இருக்கே இந்த சின்ன விஷயம் கூட உனக்கு புரியலியே?//

அப்படி சொல்லியிருந்தா அவன் பாகிஸ்தானுக்கே கூட்டிட்டு போயிருப்பானாக்கும். :))

//ஜெயில்ல களி திம்பாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன். மூனு வேளையும் பிரியாணி தின்னறதைப் பத்தி இப்பத் தான் கேள்வி படறேன். அதுவே அலுத்துப் போச்சாம் ஒருத்தருக்கு. பாரேன்யா கூத்தை?//

இதுக்காகவாச்சும் நீங்க ஒரு வாட்டி இங்க வரணும் தல. நான் உங்களுக்கு கவெர்மெண்ட் செலவுல சுத்திக்காமிக்குறேன். பெரிய பெரிய வி.ஐ.பி ங்களுக்கு அடுத்த படியா அரசு மரியாதையோட ஓய்வை கழிக்கலாம். என்னா சொல்றிங்க?

தம்பி said...

//கஷ்டப்பட்டு, வேதனைப்பட்டு, திண்டாடி
சிறை கண்ட சிங்கம், அஞ்சா நெஞ்சன் அருமைத் தம்பி வாழ்க!! //

வாங்க மணிகண்டன்..

இந்தியன் படத்துல போஸ்ட் பாக்ஸ் பக்கத்துல நின்னுட்டு இருந்ததா சொல்லுவாரே ஒருத்தர் அந்த மாதிரி கேசுதான் இது. :))

நல்ல ஐடியாவா இருக்கே நீங்க சொன்னது.

தம்பி said...

//பேசாம கார கொண்டு போய் நீயும் சொவுத்துல இடிச்சிருந்தா, ப்ரெண்டுக்கு கம்பெனி குடுக்க, அவாளே, உன்ன தூக்கி உள்ள போட்டிருப்பாளே :)//

சர்வ்ஸ்

அவனுக்காச்சும் லைசென்ஸ் இருந்தது ஒரு மாசம், எனக்கெல்லாம் இந்தியன் லைசென்ஸ் கூட இல்ல ஒரு வருஷம் + ஊட்டுக்கு பார்சல் பண்ணி அனுப்பிடுவானுங்க.

இந்த மாதிரி ஐடியாலாம் பஞ்சமே இல்லாம குடுப்பிங்களே

தம்பி said...

//ஆஹா...அப்ப காலையில போன் பண்ணும் போது ஜெயில்ல தான் இருந்தியா!!!!!!!

சொல்லவே இல்ல.//

சொன்னேன்னு சொல்லிட்டு சொல்லலியேன்னா என்ன அர்த்தம்?
இல்ல என்ன அர்த்தம்னு கேக்குறேன்.

தம்பி said...

//பத்த வச்சுட்டியே பரட்டை!! அவரு எவ்ளோவ் கெஞ்சி கேட்டிகிட்டரு... ஜெயில்ல இருக்கிறத வெளிய சொல்லாதன்னு.... //

என்ன இப்படி சொல்லிட்டிங்க, நம்மள வெச்சி காமெடி பண்ணும்போது இதெல்லாம் தெரியாதே.

அவருக்கு தமிழ்னாவே அலர்ஜி பாஸ், அவரெல்லாம் வந்து படிக்கமாட்டாருன்ற தைரியம்தான். :))

தம்பி said...

//என்னாய்யா ஜெயிலிலே பிரியாணியெல்லாம் போடுவாங்களா?? :)//

ஆச்சரியமா இருக்குல்ல..
வாங்க ராயலு வந்து ஓய்வெடுத்துகிட்டு உடம்ப தேத்திட்டு போகலாம்.

தம்பி said...

//ரெக்கை எங்கே? அதையும் ஜெயில்லயே எடுத்துட்டாங்களா? //

வாங்க சீனு
றெக்கை இருந்தாத்தானே எடுக்கறதுக்கு.ஆனா சேது கட்டிங் அடிச்சிடுவாங்க :))

தம்பி said...

//அடப்பாவிகளா.... பதிவெழுத மேட்டர் இல்லாததுனால, இப்படி ஜெயிலுக்குப் போன அந்த நல்ல மனுசன ஒலகத்துக்கு டார்ச் லைட் போட்டு காட்டிட்டியே தம்பி.. இது நியாயமா???? //

மிக்க நன்றி. இந்த பதிவு மூலமா உங்களுக்கு எவ்வளவு பயனுள்ள தகவல்கள் கிடைச்சிருக்கு அந்த பெருமைகூட அவருக்குதான் சேரும். :))

தம்பி said...

//கதிரு,
நம்ம சர்வே சொல்லி இருக்குற மாதிரி செஞ்சி இருக்கலாம்பா, என்ன நீயி சும்மா காரை கம்பி மேல இடிச்சிட்டு எல்லாம் ஜெயிலு பக்கம் போயிட்டுவரே இது சரியில்லை வீரம் வெளஞ்ச மண்ணுல இருந்து வந்து இருக்கே ஒரு பத்து பேரை தலை சீவிட்டு இல்லா போயி இருக்கணும்.//

தல அது நான் இல்லிங்க தல. நம்ம லெவலுக்கு இடிச்சிட்டு உள்ள போகுறது இழுக்கு நாலு பேர போட்டு தள்ளிட்டு போகணும். :))

அதுக்குதான் நான் பதிவுலகத்துக்கே வந்தனாக்கும்.

ஜெயிலில் இருந்தவன் said...

யோவ் கதிரு,
மானத்தை கூறு போட்டு நெட்டுல வித்துட்டீயே??

தம்பி said...

//ஜெயிலில் இருந்தவன் said...
யோவ் கதிரு,
மானத்தை கூறு போட்டு நெட்டுல வித்துட்டீயே?? //

வாங்க ஜெ.இ
லாபத்துல பாதி உனக்குதான் பாஸ்.

கண்மணி said...

அந்த ஜெயில்ல இருந்தவரு பேரு 'உமா கதிரு'ன்னு சொல்லிக்கிறகா அப்படியா தம்பீ.ஜெயிலுக்குப் போன பபேரு இப்படித்தான் சுயசரிதை எழுதக் கெளம்பிடறங்களம்.