எல்லையற்ற அன்பு கொள்வோம்

Thursday, March 15, 2007

ரசிகர் மன்றங்கள்.

ரசிகர் மன்றங்கள்..

புதுசா வந்துருக்கும் புதுப்புயல் பூதகாந்தா இருந்தாலும் சரி, ரஜினிகாந்தா
இருந்தாலும் சரி எல்லாநடிகருக்கும் பாரபட்சம் பாக்காம ரசிகர் மன்றம்
தொறந்துடுவாங்க நம்ம ஆளுங்க. எங்க ஊர்லயும் அதே மாதிரி ரசிகர் மன்றதுக்கு
பஞ்சமில்ல அதை பத்தின ஒரு பதிவுதான் இது.

ரஜினி

ஊர்ல உள்ள பெரிய கைங்கதான் இந்த கோதாவுல இருக்கும் சண்டையே
போடமாட்டாங்க தலைவர் பிறந்தநாள் அன்னிக்கு ஸ்கூல் முன்னாடி நின்னுகிட்டு எல்லாருக்கும் புத்தகம், பேனா பென்சில்னு கொடுத்து அசத்துவாங்க. வயசான
விதவை பாட்டிமார்களுக்கு புடவை குடுப்பாங்க. ரொம்ப நல்ல நல்லவங்க.
ரஜினி படத்துக்கு பேரை அறிவிச்சாவே எங்க ஊர்ல டிஜிட்டல் பேனரெல்லாம்
போட்டு அசத்துவாங்க.

கமல்

பாதி படிச்ச பயலுவ இருக்கறது இங்கதான், லயன்ஸ் கிளப் கூட சேர்ந்து
நல்ல காரியம் நிறைய பண்ணுவாங்க ஆனா வெளில எதுவுமே தெரியாது. நானும்
இந்த மன்றத்துல இருந்தேன். குணா படத்தை வகை தொகையில்லாம பார்த்ததினால
ஊர்ல ஒருத்தருக்கு அரைக்கிறுக்கு பிடிச்சி போக கமல் ரசிகன்னாவே ஒரு டைப்பா பார்ப்பார்கள்.

விஜயகாந்த்

அதிகமான எண்ணிக்கையில் ரசிகர்கள் உள்ள மன்றம் இதுவாத்தான் இருக்கும்.
போர்டை பாத்தோம்ணா மக்கள் தொகை தகவல் அறிக்கை மாதிரி கொச கொசன்னு
நிறைய பேர்கள் எழுதியிருக்கும். சென்சஸ் எடுக்கற ஆளுங்க வந்தாங்கன்னா ஊர்ல
எத்தனை பேர் இருக்கானுங்க ஈசியா கண்டுபிடிக்கலாம். விஜயகாந்த் படம் ரிலீஸ்
ஆச்சின்னா ரசிகர் ஷோவுக்கு மூணு லாரில ஆளுங்க போவாங்க. இப்ப
கட்சியா மாறிட்டதுனால கட்டுக்கோப்பா இருக்கிறார்கள்.

ராமராஜன்

இவர் படம் ரிலீஸ் ஆனாலும் சரி ரிலீஸ் ஆகலன்னாலும் சரி மன்றத்து போர்டு
மட்டும் அடிக்கடி புதுப்பிக்கப்படும் ஏன்னா அவரோட வெறித்தனமான ஒரு பக்தரின்
மெயின் வேலையே அதுதான் கெட்டப்பும் அதே மாதிரிதான். ராமராஜன் படம்
செகண்ட் ரிலீஸ்னா போதும் வெத்தலை போட்டுகிட்டு இருக்கும் பாட்டிய
மொதகொண்டு தெருல இருக்கற எல்லாருக்கும் ஃப்ரீ டிக்கெட்தான். இந்த
மன்றத்துனால ஊர்ல பெரிய சேதாரம் ஒண்ணும் இருக்காது. (பின்ன ஆளுங்க இருந்தாத்தான)

விஜய்&அஜித்

முக்கால்வாசி எல்லாருமே இளைஞர்கள்தான் விதிவிலக்கா ஒரு பெரியவர் இருக்கார்
அவர் என் ப்ரெண்டோட அப்பாதான் அஜித் ரசிகர்மன்ற தலைவர் அவரு. அவரோட
பையனோ விஜய் ரசிகர் மன்றத்துல பொருளாலர். அஜித் படம் ரிலீஸ் ஆச்சின்னா
தன்னோட டிராக்டர் வண்டில அம்புட்டு பேத்தையும் அள்ளி போட்டுகிட்டு போவாரு. அப்பாவுக்கும் மகனுக்கும் பெரிய சண்டையே நடக்கும். இந்த ரெண்டு
மன்றத்துக்காரங்களும் அடிக்கடி சண்டை போட்டுக்குவாங்க. எல்லா பயல்களும்
மாமன் மச்சானா இருந்தாலும் அந்தந்த நடிகர்கள் எங்கயோ இருந்துகிட்டு இந்த உறவுகளுக்குள் சண்டையமூட்டிகிட்டு இருப்பாங்க அவங்க பொழப்புக்கு இவங்க
ஊறுகாய் மாதிரி. இதெல்லாம் அஞ்சு வருசத்துக்கு முன்னாடி இப்ப எதுவும் சண்டை போட்டுக்கறதில்லு.

சிம்பு & தனுஷ்

ஊர்ல உள்ள நண்டு சிண்டு பசங்க எல்லாம் இங்கதான் இருப்பானுங்க. யாருமே
இவன்கள கவனிக்கலன்னாலும் ஊரே இவங்களதான் கவனிக்கறமாதிரி ஒரு நினைப்பு.

நடிகர்களுக்கு இல்லாம தலைவர்களுக்கும் நற்பணி மன்றங்கள் இருக்கு. நேரு,
பகத்சிங், அம்பேத்கர். இவங்க எல்லாம் என்ன பண்றாங்கன்னே தெரியாது ஆனா
ஏதாச்சும் செஞ்சுகிட்டே இருப்பாங்க.ஆனா கண்டுக்கதான் ஆள் இல்ல.

எனக்கு பெரிய ஆசை என்னன்னா எப்படியாவது ஒரு ரசிகர் ஷோவுக்கு போயிடணும்.
(ரசிகர் ஷோன்னா ரசிகர்களுக்காக மட்டும் மன்றம் தனியா தியேட்டரின் மொத்த
டிக்கெட்டும் வாங்குவது)அப்படி இருக்கும்போதுதான் தலைவரின் பாபா படம்
வெளியானது. எனக்கு தெரிஞ்சி உலகத்துலயே (சூரிய விளம்பரம் மாதிரி இருக்கோ??) இல்லல்ல தமிழ்சினிமா வரலாற்றிலேயே அதிகாலை மூணு மணிக்கு படம் ரிலீஸ்
ஆனது அது மட்டும்தான். ராத்திரியே தியேட்டர் வாசல்ல நின்னு பொட்டி வர்ற
வரைக்கும் காத்திருந்து பார்த்தேன் ராமதாஸ் கட்சியினர் கொடுத்த டார்ச்சரின்
பேரால் அதிகாலைலயே ரிலீஸ் செய்திருந்தார்கல் தியேட்டர் முழுக்க போலீஸ்.
500 பேர் உக்காந்திருக்க வசதியுள்ள தியேட்டர்ல மூவாயிரம் பேர் பார்த்தோம்.
நிக்கிறதுக்கு கூட இடமில்ல வாசல்ல ஒரு ஓரமா நின்னு பாத்தா திரை கூட தெரில
இந்த லட்சணத்துல விசில் சத்தம், கைதட்டல், பேப்பர் கட்டிங் வீசுறது இதுக்கு
நடுவில ஒரு சீன் கூட ஒழுங்கா பார்க்க முடியல. தியேட்டர்ல இருந்து வரும்போது
சட்டை பூரா நனைஞ்சி போய் போங்கடா நீங்களும் உங்க ரசிகர் ஷோக்களும்னு
ரிலீஸ் ஆகி பத்து நாள் கழிச்சிதான் தியேட்டர் பக்கமே எட்டி பாக்கறது.

என்னை பொறுத்தவரை ரசிகர் மன்றங்கள் தேவையா இல்லையான்னு கேட்டா
கண்டிப்பா தேவையில்ல தேவைதான்னு ரெண்டையும் சொல்லமாட்டேன். அஞ்சாப்பு, ஆறாப்பு படிக்குற மாதிரி அது ஒரு ஜாலியான கட்டம். ஆனா அஞ்சாப்புலயே கப்பு வெச்சிகிட்டு உக்காந்துகிட்டு இருந்தா பொழப்பு நாறி போயிடும். இதெல்லாம்
பாக்குறதுக்கு முன்னாடி எங்க ஊருல மன்றம் வெச்சிகிட்டு அலம்பல் பண்ணது
செம ஜாலியான அனுபவம்.

வயசுப்பையனோ, இல்ல வயசான ஆளோ ஏதாவது ஒரு நடிகனுக்கு ரசிகனா இருந்தே ஆகணும் அப்படி இல்லன்னா அவன மனுசனாவே மதிக்க மாட்டானுங்க எங்க ஊர்ல. அவனுங்களாவே வந்து மன்றத்துல சேத்துக்குவாங்க. இதுல தலைவர், செயளாலர், பொருளாலர். உபதலைவர்,உபதலைவருக்கு ஒரு உதவி தலைவர்னு மன்றத்துல எல்லாருக்கும் ஒரு போஸ்ட் கண்டிப்பா உண்டு. உங்கள மன்றத்துக்கு இழுக்கும்போதே
ஒரு பதவியோட இழுப்பாங்க அதான் அவங்க ஸ்பெசாலிட்டியே.

தட்டி வைக்கறதுல இருந்து பேர பெருசா போடலன்றது வரை ஒரே சண்டையும்
சச்சரவுமா இருக்கும் ஆன ஒரு படம் ரிலீசாச்சுன்னு வைங்க அத்தன பேரும் ஒண்ணாயிடுவாங்க. பொண்ணுங்க படிக்கற ஸ்கூல், டியூஷன், பிடிச்ச பிகர்
வீட்டுப்பக்கம் இந்த மாதிரி இடங்கள்ல இருக்கற சுவர்களில் விளம்பரம் அதிகமா
பார்க்கலாம் அங்க சுவர் பிடிக்கற விஷயத்தில் கரை வேட்டிகள விட அதிகம் பாலிடிக்ஸ் பண்ணுவாங்க. ஹார்டின் படம் வரைஞ்சு அதுக்குள்ள அம்புகள குறுக்கும்
நெடுக்கும் விடறது, தன் பேர மட்டும் கண்ணும் கருத்துமா பக்கத்துலயே இருந்து
கலர்ல போட சொல்றது செவுத்துல பேர் வந்துடுச்சின்னா ஒரு கெத்துதான்.
"ஏய் அங்க பாருடி உன் ஆள் பேரு" அங்க இருக்கு அப்படின்னு ஒரு பொண்ணு சொல்லுச்சின்னு வைங்க அன்னிக்கு ஒரே பார்ட்டிதான்.

பஸ்ஸுக்காக பொண்ணுங்க நிக்கும்போது எதிர்த்தாப்புல எல்லாரும் பாக்கற வகைல
எந்த மன்றத்து போர்டு இருக்குதோ அதுதான் பசங்க ஜாஸ்தி இருக்கற மன்றம்.
நடிகர்களுக்கு பட்டம் இருக்கற மாதிரி இவனுங்களும் ஆளுக்கு ஒரு பட்டம் குடுத்துக்குவானுங்க செம காமெடியா இருக்கும் "தெற்குத்தெரு புயல் சுகுமார்"
"மின்னல் ராஜா" இப்படின்னு இதெல்லாம் பத்தாதுன்னு காதலர் தினம் வந்துச்சின்னா
வீட்டுல கிடக்குற பழைய வேட்டிய எடுத்திகிட்டு வந்து ரெண்டு பக்கமும் ஹார்ட்டின்
போட்டு நடுவில நாலஞ்சு ஜோடிப்புறா பறக்கும் அதுக்கு கீழ அழகான எழுத்துக்களில்

"காதலர் தினத்தை முன்னிட்டு காதல் சிட்டுக்களை வாழ்த்தும் இளம் நெஞ்சம்"
இவண்
சுப்பிரமணி.
"இணைந்து வாழ்த்தும் இதயங்கள்னு"
இன்னும் நாலு வெளங்காதவனுங்க பேரு.

அப்படின்னு வேட்டியோட ரெண்டு பக்கமும் குச்சி கட்டி இழுத்து கரண்டு கம்பத்துல கட்டிருவானுங்க. ஆனா இவன் சொந்தக்கார பொண்ணு வேற யாரையாச்சும் லவ் பண்ணுச்சின்னா ரணகளமாக்குவாரு. எல்லாமே பிஸ்து காமிக்கிறதுதான். ஒரு
வயசுக்கு மேல நினைச்சு பாத்தானுங்கன்னா கேவலமா இருக்கும்.

என்ன எழுதறதுன்னே விளங்கவில்லை அதனால்தான் இந்த மொக்கைப்பதிவு.

25 comments:

தம்பி said...

எச்சூஸ் மீ

மொத சீட்டு நானே போட்டுக்கறேனே.

தென்றல் said...

//
என்ன எழுதறதுன்னே விளங்கவில்லை அதனால்தான் இந்த மொக்கைப்பதிவு.
//

ஏனுங்க... இத மொதலயே போட்டு இருக்கிலாம்-ல ங்க...

என்னமோ போங்க...;)

gulf-tamilan said...

என்ன எழுதறதுன்னே விளங்கவில்லை அதனால்தான் இந்த மொக்கைப்பதிவு!!!??
sarakku illaiyaa!!!:)))

இராம் said...

கதிரு,

நானும் ஒரு ரசிகர் ஷோ பார்க்க போயிருந்தேன்... ஐயோ சாமி அதை நினைச்சாலும் இன்னும் காய்ச்சல் வந்துருமோன்னு பயமா இருக்கு?????


அந்த படம் பேரு இளையதளபதி நடிச்ச "புதிய கீதை"
:(((((((((((((((((

மணிகண்டன் said...

துபாய்ல உங்களுக்கு ஒரு ரசிகர் மன்றம் இருக்குனு கேள்விப்பட்டேன். உண்மையா??

மணிகண்டன் said...

//
அந்த படம் பேரு இளையதளபதி நடிச்ச "புதிய கீதை"
:(((((((((((((((((
//

ஆகா இப்படி ஒரே நேரத்துல ரெண்டு கொடுமைய அனுபவிக்க ரொம்ப பொறுமை வேணும் இராம். நீங்க பெரிய ஆள்தான் :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

தம்பி,

வாழ்த்து:
மொதல்ல நட்சத்திர வாழ்த்துக்கள்!
இப்ப தான் தாயகத்தில் இருந்து பிரியா வடைபெற்று சாரி விடைபெற்று...ஊர் வந்து சேர்ந்தேன். வந்து பாத்தா நம்ம அன்புத் தம்பி நட்சத்திரமா ஜொலிக்கறாரு! வாழ்த்துக்கள்!!

கண்டனம்:
//புதுப்புயல் பூதகாந்தா இருந்தாலும் சரி, ரஜினிகாந்தா இருந்தாலும் சரி//
இதெல்லாம் ரொம்ப ஓவர். தலைவர் பேரை இப்படி எல்லாம் கிண்டல் செய்வது மன்னிக்க முடியாத குற்றம்! யார் அங்கே....?

ரசிகையர் மன்றம்-ம்னு தலைப்பை மாத்தி வையுங்க; மன்னிச்சு விட்டுடறோம் :-)

தம்பி said...

//ஏனுங்க... இத மொதலயே போட்டு இருக்கிலாம்-ல ங்க...

என்னமோ போங்க...;)//

மொதல்ல போட்டா வரமாட்டிங்கல்ல அதான் கடேசில போடறது. :)

//என்ன எழுதறதுன்னே விளங்கவில்லை அதனால்தான் இந்த மொக்கைப்பதிவு!!!??
sarakku illaiyaa!!!:)))//

இந்த கேள்வியை டாஸ்மாக் கடைக்கு திருப்புகிறேன் :))

என்கிட்ட சரக்கு இல்லிங்கோ

கல்ஃப் தமிழன்
நேரம் இருந்தால் தொடர்புகொள்ளுங்கள்
பேசுவோம்.

தம்பி said...

//கதிரு,

நானும் ஒரு ரசிகர் ஷோ பார்க்க போயிருந்தேன்... ஐயோ சாமி அதை நினைச்சாலும் இன்னும் காய்ச்சல் வந்துருமோன்னு பயமா இருக்கு?????


//அந்த படம் பேரு இளையதளபதி நடிச்ச "புதிய கீதை"
:(((((((((((((((((//

அய்யோ பாவம்.

//துபாய்ல உங்களுக்கு ஒரு ரசிகர் மன்றம் இருக்குனு கேள்விப்பட்டேன். உண்மையா??//

ரசிகர் மன்றங்கள் இருக்குங்கா ஆனா எனக்கு இல்லிங்க. :)

தம்பி said...

//தம்பி,

வாழ்த்து:
மொதல்ல நட்சத்திர வாழ்த்துக்கள்!
இப்ப தான் தாயகத்தில் இருந்து பிரியா வடைபெற்று சாரி விடைபெற்று...ஊர் வந்து சேர்ந்தேன். வந்து பாத்தா நம்ம அன்புத் தம்பி நட்சத்திரமா ஜொலிக்கறாரு! வாழ்த்துக்கள்!!//

அடடே கண்ணபிரான்

அதான் ரொம்ப நாளா ஆளை காணுமா? மீண்டும் வலையுலகத்துக்கு வருக வருக என தட்டி வைத்து வரவேற்கிறான் தம்பி :))

வழக்கமான உங்கள் ஆன்மீக பதிவுகள போடுங்க. எல்லாரும் காத்திருக்காங்க.

வாழ்த்துகளுக்கு நன்றி

கண்டனம்:
//புதுப்புயல் பூதகாந்தா இருந்தாலும் சரி, ரஜினிகாந்தா இருந்தாலும் சரி//
இதெல்லாம் ரொம்ப ஓவர். தலைவர் பேரை இப்படி எல்லாம் கிண்டல் செய்வது மன்னிக்க முடியாத குற்றம்! யார் அங்கே....?

ரசிகையர் மன்றம்-ம்னு தலைப்பை மாத்தி வையுங்க; மன்னிச்சு விட்டுடறோம் :-)//

நல்லா பாருங்க நான் தலைவர கிண்டல் பண்ணவே இல்லிங்க. ஊர்ல இருந்து வந்த உடனே ஆரம்பிச்சிட்டிங்களா??

பேசிக்கலி ஐ ஆம் அ ரஜினி FAN.

ரசிகையர் மன்றம். பாவனாவுக்கு வைக்கலாம்னு ஒரு ஐடியா இருக்கு :))

ஜி said...

தமிழ்மணம்ல தம்பிக்கு ஒரு ரசிகர் மன்றம் இருக்குதாம் தம்பி. அதுல முக்கிய உறுப்பினர்கள் கீழ்வருமாறு...

கொல்டி புகழ் வெட்டி
சூடான புலி சிவா
துபாய் நடராசா கோபி
அடிச்சு ஆடும் அபிஅப்பா
சர்வரை டவுண் செய்யும் சந்தோஷ்
அப்புறம் நானும்...

மேல்கூறிய எல்லாரும் வருமாறு ஒரு அழைப்பு விடுக்கிறேன்..

ஜோ / Joe said...

தம்பி,
உங்களுக்கும் எனக்கும் என்னவோ தெரியல்ல ..ஒரே குழப்ப கேள்வியாவே கேட்க வேண்டியதா போச்சு.

அதென்னங்க கமல் மன்றத்துல இருந்ததாவும் சொல்லுறீங்க .ரஜினியை தலைவர்-ன்னு வேற சொல்லுறீங்க .இப்படி காய விடுறீங்களே!

இலவசக்கொத்தனார் said...

தமிழ்மணத்தில் இருக்கும் ரசிகர் மன்றங்களைப் பத்திச் சொல்லாமலேயே விட்டுட்டீங்களே!!!

தம்பி said...

//தமிழ்மணம்ல தம்பிக்கு ஒரு ரசிகர் மன்றம் இருக்குதாம் தம்பி. அதுல முக்கிய உறுப்பினர்கள் கீழ்வருமாறு...

கொல்டி புகழ் வெட்டி
சூடான புலி சிவா
துபாய் நடராசா கோபி
அடிச்சு ஆடும் அபிஅப்பா
சர்வரை டவுண் செய்யும் சந்தோஷ்
அப்புறம் நானும்...

மேல்கூறிய எல்லாரும் வருமாறு ஒரு அழைப்பு விடுக்கிறேன்..//

ஜியா,
இவங்களுக்கெல்லாம் நாந்தா ரசிகர் அதுவுமில்லாம நம்ம தொடர்கதை சுனாமி இருக்காரே அவரோட வெறித்தனமான ரசிகர் நானு.

தமிழ்மணத்தின் சர்வரை ஸ்லோவ் செய்வது சந்தோஷ்தானா??

அடபாவாமே!

தம்பி said...

//தம்பி,
உங்களுக்கும் எனக்கும் என்னவோ தெரியல்ல ..ஒரே குழப்ப கேள்வியாவே கேட்க வேண்டியதா போச்சு.//

அதனாலென்னங்க தாராளமா கேளுங்க.


//அதென்னங்க கமல் மன்றத்துல இருந்ததாவும் சொல்லுறீங்க .ரஜினியை தலைவர்-ன்னு வேற சொல்லுறீங்க .இப்படி காய விடுறீங்களே! //

சொல்லக்கூடாதா என்ன. நடிப்புகு கமல்னா ஸ்டைலுக்கு ரஜினி அந்த வகைல ரஜினிய எனக்கு ரொம்ப பிடிக்கும்.

ஒரு நடிகருக்கு ரசிகனா இருந்தாவே பிரச்சினைதாங்க. பொதுவா நல்லா யார் நடிச்சாலும் ரசிப்பேன்.

தம்பி said...

//தமிழ்மணத்தில் இருக்கும் ரசிகர் மன்றங்களைப் பத்திச் சொல்லாமலேயே விட்டுட்டீங்களே!!! //

தமிழ்மணத்துல எல்லாருமே கொத்ஸ் ரசிகர்தான். :))

இராம் said...

//தமிழ்மணம்ல தம்பிக்கு ஒரு ரசிகர் மன்றம் இருக்குதாம் தம்பி. அதுல முக்கிய உறுப்பினர்கள் கீழ்வருமாறு...

கொல்டி புகழ் வெட்டி
சூடான புலி சிவா
துபாய் நடராசா கோபி
அடிச்சு ஆடும் அபிஅப்பா
சர்வரை டவுண் செய்யும் சந்தோஷ்
அப்புறம் நானும்...

மேல்கூறிய எல்லாரும் வருமாறு ஒரு அழைப்பு விடுக்கிறேன்.. //

ஏலே ஜீயீ, எங்க என்னோட பேருலே... இது தெரிஞ்சே செஞ்சதா???

Anonymous said...

mokkkai potadhu podhum serios a edhuvum eludhunga

kapi

கோபிநாத் said...

ஊருல இருக்குற அனைத்து ரசிகர் மன்றங்களிலும் உன் பெயர் இருக்குன்னு இப்ப தான் உங்க ஊருகார பய ஒருத்தன் சொன்னான்...chatல

கோபிநாத் said...

\\எனக்கு பெரிய ஆசை என்னன்னா எப்படியாவது ஒரு ரசிகர் ஷோவுக்கு போயிடணும்.\\

எனக்கும் இந்த கொடுமை நடந்துச்சு...படம் அருணாசலம்...கடைசி வரைக்கும் ரஜினி லிப்சு மட்டும் தான் அசையுது ஒரு வசனத்தை கூட ஒழுங்கா கேட்க முடியவில்லை...

கோபிநாத் said...

\\என்னை பொறுத்தவரை ரசிகர் மன்றங்கள் தேவையா இல்லையான்னு கேட்டா
கண்டிப்பா தேவையில்ல தேவைதான்னு ரெண்டையும் சொல்லமாட்டேன். அஞ்சாப்பு, ஆறாப்பு படிக்குற மாதிரி அது ஒரு ஜாலியான கட்டம். ஆனா அஞ்சாப்புலயே கப்பு வெச்சிகிட்டு உக்காந்துகிட்டு இருந்தா பொழப்பு நாறி போயிடும்.\\

எல...என்னத்தா சொல்லவர...ரசிகர் மன்றத்துக்கும் அஞ்சாப்புக்கும், ஆறாப்புக்கும் என்ன சம்மந்தம்...

கோபிநாத் said...

\\
ஜி - Z said...
தமிழ்மணம்ல தம்பிக்கு ஒரு ரசிகர் மன்றம் இருக்குதாம் தம்பி. அதுல முக்கிய உறுப்பினர்கள் கீழ்வருமாறு...

கொல்டி புகழ் வெட்டி
சூடான புலி சிவா
துபாய் நடராசா கோபி
அடிச்சு ஆடும் அபிஅப்பா
சர்வரை டவுண் செய்யும் சந்தோஷ்
அப்புறம் நானும்...

மேல்கூறிய எல்லாரும் வருமாறு ஒரு அழைப்பு விடுக்கிறேன்\\

எங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்த

"பாஸ்டன் புயல் ஜில் ஜில் ஜி"
அவர்களுக்கு மன்றத்தின் சார்ப்பாக என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இப்படிக்கு
அகில உலக தம்பி (கதிர்) ரசிகர் மன்றம்.

தம்பி ரசிகர் மன்றம், துபை said...

தல,
நம்ம ரசிகர் மன்றத்தை விமர்சிக்காம இருந்ததுக்கு நன்றி.

Boston Bala said...

பதிவு நன்று. ரசித்துப் படித்தேன் :D

தம்பி said...

நன்றி பாலா!