எல்லையற்ற அன்பு கொள்வோம்

Tuesday, March 27, 2007

ஆச்சரியங்கள்

ஆச்சரியப்பட வைக்கும் அழகு
என்றார்கள்!

ஆச்சரியத்தை தேக்கி வைக்கும்
முகமல்ல எனது.

கடந்து போகும்
ஜீவராசிகளில்
ஒருத்தி நீயெனவே
ஆச்சரியங்கள் கொள்ள
அவசியமில்லை.

நூல்கள் சில சொன்னது
அன்றாடங்களை மாற்றும்
வல்லமை காதலுக்குண்டென்று
எனக்குள் அந்த மாற்றங்கள்
எதுவும் நிகழவில்லை.
சலனமில்லாத குளம்
கல்லெறிந்தால் கண நேரத்தில்
சுயம் மீள்வேன்.

21 comments:

கண்மணி said...

அதனால்தான் ஆர்குட்,யாகூ,பிராப்பர்னு அலையிறீங்களா தம்பி.யாரும் நம்மளக் கண்டுக்கலையேன்னு இப்படி பீலா விடலாமா?

அபி அப்பா said...

தம்பி! திடீர்ன்னு கவுஜ போட்டு தாக்குதல் எதுக்கு. கண்மணியக்கா சொன்னாங்களே "எங்க தம்பியோ, அபிஅப்பாவோ கவித எழுத்ட்டும்"ன்னு. அதுக்காகவா:-))

அப்டியே நமக்கும் ஒன்னு பார்சல் பண்ணா நானும் என் பேர்ல போட்டு பேர் வாங்கிப்பனே:-))

Anonymous said...

எலே தம்பி,

நேத்து பேசும்போது கூட நல்லாத்தாண்டே இருந்தே? திடீர்னு என்னடே ஆச்சு உனக்கு?

சாத்தான்குளத்தான்

அபி அப்பா said...

தம்பி நல்லாயிருப்பா:-)

லொடுக்கு said...

என்ன தம்பி,
துபையில சம்மர் தொடங்கியாச்சு போல இருக்கு!!!!

ஹி ஹி

Nandha said...

//சலனமில்லாத குளம்
கல்லெறிந்தால் கண நேரத்தில்
சுயம் மீள்வேன். //

//கடந்து போகும்
ஜீவராசிகளில்
ஒருத்தி நீயெனவே
ஆச்சரியங்கள் கொள்ள
அவசியமில்லை.//

அருமையான வார்த்தைப் பிரயோகம். ரொம்ப நல்லா இருக்கு கவிதை.

சுந்தர் / Sundar said...

இவன் காதல் வசம் !

இராம் said...

காதல் கவிஞர் தம்பியண்ணன் கதிரவன் வாழ்க :)

மு.கார்த்திகேயன் said...

அட அட! காதல் கல்லெறிதலில் இருந்து மீள்வது கொஞ்சம் கடினம் தான்.. ஆனால், மீள முடியும் என்கிறீர்கள் தம்பி!

இன்னும் காதலில் விழவில்லையோ :-)

மு.கார்த்திகேயன் said...

கவிதை அழகு!

யாரை பார்த்து இப்படியொரு சுய விளக்கம் தம்பி! கடந்து போகும் போது உங்களை கொத்தி எடுத்து செல்ல முயன்றது யார்?

கோபிநாத் said...

கவிதை நல்லாயிருக்கு ;-))

ஆனா...இதை யாருக்கு எழுதுனா?

தம்பி said...

//அதனால்தான் ஆர்குட்,யாகூ,பிராப்பர்னு அலையிறீங்களா தம்பி.யாரும் நம்மளக் கண்டுக்கலையேன்னு இப்படி பீலா விடலாமா? //

யெக்கா அது நான் இல்லிங்கக்கா!
எனக்குள்ள தூங்கிட்டு இருக்கற கவிப்பகைவன் எழுதினது.

அப்பப்போ எனக்கும் அவனுக்கும்ம் சண்டையாகும் அப்ப இந்த மாதிரி கவிதை எழுதி சமாளிச்சிடுவேன்.

தம்பி said...

//அப்டியே நமக்கும் ஒன்னு பார்சல் பண்ணா நானும் என் பேர்ல போட்டு பேர் வாங்கிப்பனே:-)) //

என்ன மேன் இது கவிதைய கூட கடனா கேட்டுகிட்டு. இத்தன வயசுக்கு மேல உங்களுக்கு எதுக்கு காதல் கடிதம்? அபிக்கு போன போடட்டுமா..

தம்பி said...

//எலே தம்பி,

நேத்து பேசும்போது கூட நல்லாத்தாண்டே இருந்தே? திடீர்னு என்னடே ஆச்சு உனக்கு?

சாத்தான்குளத்தான் //

உங்ககூட பேசுனோம்ல அதான் கவிதை கொட்டிடுச்சி.

தம்பி said...

//தம்பி நல்லாயிருப்பா:-) //

பஞ்சாயத்துராஜ், நாங்க நல்லாவே இருப்பம்.

//ன தம்பி,
துபையில சம்மர் தொடங்கியாச்சு போல இருக்கு!!!!

ஹி ஹி//

இன்னிக்கு கூட மழை பேய்ஞ்சதுங்களே பாத்தீங்களா...
ஒண்ணுமே புரிஞ்சிக்க முடியல.

தம்பி said...

//அருமையான வார்த்தைப் பிரயோகம். ரொம்ப நல்லா இருக்கு கவிதை. //

நன்றி நந்தா!

//இவன் காதல் வசம் ! //

இல்லிங்ணா!

//காதல் கவிஞர் தம்பியண்ணன் கதிரவன் வாழ்க :) //

அந்த பாவத்துக்கெல்லாம் நான் ஆளாவ மாட்டேன்.

தம்பி said...

//அட அட! காதல் கல்லெறிதலில் இருந்து மீள்வது கொஞ்சம் கடினம் தான்.. ஆனால், மீள முடியும் என்கிறீர்கள் தம்பி!

இன்னும் காதலில் விழவில்லையோ :-) //

இதெல்லாம் கவிஞனின் கற்பனைங்க கார்த்திக். எனக்கும் அவனுக்கும் சண்டை வரும்ல அப்ப எழுதறது. :)

தம்பி said...

//அட அட! காதல் கல்லெறிதலில் இருந்து மீள்வது கொஞ்சம் கடினம் தான்.. ஆனால், மீள முடியும் என்கிறீர்கள் தம்பி!

இன்னும் காதலில் விழவில்லையோ :-) //

அதெல்லாம் ஒண்ணுமில்லிங்க கார்த்திக். சும்மா எழுதினது.

//கவிதை நல்லாயிருக்கு ;-))

ஆனா...இதை யாருக்கு எழுதுனா? //

எலேய் கோபி அம்புட்டு நக்கலாடே உனக்கு. அதிகம் பேசினா திருமகன் சீடி பார்சல் வரும் சொல்லிபுட்டேன்.

Nandha said...

//பகுத்தறிவு பேசித் திரிந்தாலும், வாழ்வின் பல விஷயங்களை உணர்வுப்பூர்வமாகவும், மனிதம் எனும் கண்ணாடி வழியாகவும் பார்ப்பவன்.//

அப்போ பகுத்தறிவுவாதிகள் உணர்வுபூர்வமாக விஷயத்தை அணுக மாட்டார்களா?
இல்ல மனிதம் என்னும் கண்ணாடியத்தான் கழட்டி வெச்சிடுவாங்களா?

இதுதான் உங்க வியர்டு குணம்னு நினைக்கிறேன். :)

This was typed by you. Please see the answer for this in : http://nandhakumaran.blogspot.com/2007/03/blog-post_26.html

I could not find your mail id from your blog. Thats why I am sending you as comment.

நாகை சிவா said...

கவுஜு..... சூ....சூ...

தம்பி நீயுமா......

நாகை சிவா said...

ஏலேய் தம்பி.

அன்னைக்கு என்னய நீ உனக்குள்ள ஒரு கவிஞன் இருக்கான், அவனை எழுப்பி விடுனு சொன்னப்பவே சந்தேகப்பட்டேன்... மவனே இனிமே என்னைய சாட்ல தொந்திரவு பண்ணின.....