எல்லையற்ற அன்பு கொள்வோம்

Thursday, March 29, 2007

சென்னை வாழ் வலைப்பதிவு மக்களே.

சென்னையில் வலைப்பதிவு சந்திப்புகளை வெற்றிகரமான முறையில் நடத்திய
டோண்டு, லக்கிலுக், மற்றும் பா.க.ச என்ற பாசக்கூட்டத்தின் "தல" தலைவர்
பாலபாரதி அவர்களே உங்களுக்கெல்லாம் ஒரு நற்செய்தி.

இந்தமுறை தமிழ்வலைப்பதிவு மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் சென்னை
நோக்கி ஒரு அமீரக அன்பர் விரைந்து கொண்டிருக்கிறார். சென்னையில் அனைத்து
பதிவர்களையும் சந்திக்க ஆர்வமாக இருப்பதாக இன்று காலை தொலைபேசி
என்னிடம் கூறினார்.முக்கியமாக வலைப்பதிவர் சந்திப்பு நடக்கும் இடத்துக்கான
செலவு, சாப்பாடுன் போக்குவரத்து ஆகியவற்றிற்கான செலவையும் அவரே
ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்திருக்கிறார். (எவ்வளவு நல்ல மனசு பாருங்க,
இதுக்காச்சும் அட்லீஸ்ட் 10 சந்திப்பு நடக்கணும்) நாளை மாலை சென்னை வருகிறார்
அடுத்த வாரத்தில் சந்திப்பு நடத்தினால் நன்று.

அந்த நல்ல உள்ளம் யாருன்னு தெரிய ஆவலா இருக்குல்ல!

அவர்தாங்க லியோ சுரேஷ்

பின்னூட்டத்தில் மட்டும் வலைப்பதிவுகளில் உலாவர முடியும் என்று வலைப்பதிவு
உலகத்துக்கு உணரச்செய்த லியோசுரேஷ் என்பவர்தான் அந்த தியாகச்செம்மல்.
அவருக்கென்று தனியாக வலைப்பூ இல்லாததால் அன்புடன் என்னை கேட்டுக்
கொண்டார். வலைப்பதிய இல்லை என்றாலும் அமீரகத்தில் நடக்கும் அனைத்து
சந்திப்புகளுக்கும் தவறாமல் வருபவர். அருமையான சிந்தனையாளர். ஊருக்கு
போய் திரும்பியதும் வலைப்பூ தொடங்கி தன்னுடைய அனுபவங்களை எழுதுவேன்
என்று உறுதியளித்திருக்கிறார் நம்புவோம்.

சந்திப்பு நடந்தால் நண்பரை அழைக்க அவரது அலைபேசி கூட கொடுத்திருக்கிறார்.
+9941457283 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். அருமையான சந்திப்பு
நிகழ எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

பின்குறிப்பு: அ.மு.க தொண்டர் ஒருவரையாவது சந்திக்க வேண்டும் என்பது அவரின்
நீண்ட நாள் ஆசை. அ.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் லக்கிலுக் மற்றும் செந்தழல் ரவி
மனது வைப்பாராக!

அ.மு.க தொண்டர்களே அலைகடலென திரண்டு வாரீர்!

வர வர நம்மகிட்ட விளம்பரம் தேடி வர்றவங்க ஜாஸ்தி ஆயிட்டாங்கப்பா...

21 comments:

Naufal MQ said...

அடுத்தவங்க பேரைச்சொல்லி போடும் ரெண்டாவது பதிவு இது.
:)

அபி அப்பா said...

ஏஜன்ட் சார்! என் பிளாக்கர் 2 நாளா கடிக்குது. என் பதிவு ஒன்னு குத்தவச்சுருக்கு. ஏதாவது செய்யுங்க சார்! :-))

அபி அப்பா said...

ஐயா லியோ, வந்த உடனே பதிவ போட்டு தாக்கிடனும் சரியா?:-)

கதிர் said...

//அடுத்தவங்க பேரைச்சொல்லி போடும் ரெண்டாவது பதிவு இது.
:) //

என்னங்க பண்றது பாஸ்ட். அன்பா கேக்கறாங்க முடியாதுன்னு சொல்லகூடாதுல்ல.


//ஏஜன்ட் சார்! என் பிளாக்கர் 2 நாளா கடிக்குது. என் பதிவு ஒன்னு குத்தவச்சுருக்கு. ஏதாவது செய்யுங்க சார்! :-)) //

என்னது ஏஜன்டா இதெல்லாம் ஓவர் ஆமா...

குத்த வச்சிருக்குன்னா குனிய வச்சி மஞ்சதண்ணி ஊத்துங்க :))

Anonymous said...

அ.மு.க சார்பாக அவருக்கு சிறப்பான வரவேற்(ஆ)ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்...

என்னுடைய போன் நெம்பர் புதுசு மற்றும் பழசு அவரிடம் கொடுத்திருங்க.

அவரை ஈகிள் பாரில் சந்திக்க ஏற்பாடு செய்கிறோம்.

கண்மணி/kanmani said...

ஆஹா தம்பி எனக்கு இந்தவாரம் நேரம் நல்லாருக்குன்னு ஜோசியர் சொன்னது சரிதான்.அபிஅப்பா பதிவக் காணோம்.சரி பண்ண ஐடியாக் குடுக்காதீங்க.

Anonymous said...

thambi kitta ellam vilaiyadathinkappa - pathinka illa pathila eppadi narukkunnu

கதிர் said...

வாங்க ரெட்பயர்!

உங்க பழைய நம்பர் என்னன்னு தெரியாது ஆனா புது நம்பர் இருக்கு அதை தந்துடறேன்.

ஈகிள் பாரா! எஞ்சாய் மக்காஸ்

கதிர் said...

//ஆஹா தம்பி எனக்கு இந்தவாரம் நேரம் நல்லாருக்குன்னு ஜோசியர் சொன்னது சரிதான்.அபிஅப்பா பதிவக் காணோம்.சரி பண்ண ஐடியாக் குடுக்காதீங்க.//

அசராம அடிக்கற ஆளுங்க அவரு. இதெல்லாம் ஜுஜிபி ஆபிஸ்ல வலைப்பதிய முடியலன்னா வேலையே வேணாம்னு ஊருக்கு போயிடுவாரு அவ்ளோ பெரிய மானஸ்தன் அவரு.

லக்கிலுக் said...

amuka sarbil avarai thodarbu kolgirom

மு.கார்த்திகேயன் said...

இப்படியும் ஒரு நல்ல மனுஷனா.. லியோ சுரேஷ், நீங்க வாழ்க! உங்க குலம் வாழ்க!

தம்பி! என்ன தூர்தர்ஷன் மாதிரி ஒரே விளம்பரப் பதிவால்ல இருக்கு :-)

dondu(#11168674346665545885) said...

நான் நாளை காலை கிளம்பி திங்கள் இரவுதான் சென்னை திரும்புகிறேன். சந்திப்பு வரும் திங்களுக்கு பிறகு எப்போது வைத்தாலும் வருவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Jazeela said...

ஆமா போக்குவரத்து செலவும் தருவதா சொல்லியிருக்கீங்க, எனக்கு கொஞ்சம் ஏற்பாடு பண்ணுங்களேன் ப்ளீஸ். எந்த விமானமானாலும் பரவாயில்லை. சென்னை சந்திப்புக்காகவே விடுமுறை எடுத்து கலந்துக் கொள்கிறேன் தாரளமாக. சுரேஷ்கிட்ட கேட்டு சொல்றீங்களா?

Santhosh said...

தம்பி போக்குவரத்து செலவு குடுப்பாங்கன்னா எனக்கும் குடுக்க சொல்லு நானும் கலந்துக்குறேன்.

Santhosh said...

////ஏஜன்ட் சார்! என் பிளாக்கர் 2 நாளா கடிக்குது. என் பதிவு ஒன்னு குத்தவச்சுருக்கு. ஏதாவது செய்யுங்க சார்! :-)) ////
ஆகா நீதானா அந்த ஏஜண்டு. எனக்கும் பிளாக்கர்ல கொஞ்சம் பிரச்சனை இருக்கு, எப்ப ஏஜண்டு சரி பண்ண போற. தம்பியண்ணாவை விட ஏஜண்டு அண்ணா நல்லா இருக்கே :))

மணிகண்டன் said...

அனைத்து பதிவர்களின் பதிவுகளையும் தன் பதிவில் இட்டு சேவை புரியும் இரண்டாம் தமிழ்மணம் தம்பியை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் :)

Leo Suresh said...

thambi,
thanks for lucky look and other friend who have calle me, before i arrived here in chennai.I spoke to thala bala bhai and confirmed a meet on 23 Mar along wyith Cyril and Boston Bala.
warm regards
Leo Suresh

கதிர் said...

//amuka sarbil avarai thodarbu kolgirom //

தேங்க்ஸ் லக்கி

சிறப்பான வரவேற்பு அளித்ததற்கு நன்றி, பாலா பாய்க்கும் நன்றியை சொல்லிவிடுங்கள்.

கதிர் said...

//இப்படியும் ஒரு நல்ல மனுஷனா.. லியோ சுரேஷ், நீங்க வாழ்க! உங்க குலம் வாழ்க!//

ஆமாங்க எனக்கே நெனச்சி நெனச்சு பூரிச்சி போச்சுது.

//தம்பி! என்ன தூர்தர்ஷன் மாதிரி ஒரே விளம்பரப் பதிவால்ல இருக்கு :-) //

அய்யே என்னங்க இப்டி சொல்லிட்டிங்க. தூர்தர்ஷன்னு சொன்னதுக்கு ரெண்டுஅடி அடிச்சிருக்கலாம்.

கதிர் said...

//நான் நாளை காலை கிளம்பி திங்கள் இரவுதான் சென்னை திரும்புகிறேன். சந்திப்பு வரும் திங்களுக்கு பிறகு எப்போது வைத்தாலும் வருவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன் //

அங்கிருக்கும் ஒரு மாதத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளுங்கள்

நன்றி டோண்டு சார்.

கதிர் said...

//ஆமா போக்குவரத்து செலவும் தருவதா சொல்லியிருக்கீங்க, எனக்கு கொஞ்சம் ஏற்பாடு பண்ணுங்களேன் ப்ளீஸ். எந்த விமானமானாலும் பரவாயில்லை. சென்னை சந்திப்புக்காகவே விடுமுறை எடுத்து கலந்துக் கொள்கிறேன் தாரளமாக. சுரேஷ்கிட்ட கேட்டு சொல்றீங்களா? //

சுரேஷ் ஏற்கனவே கிளம்பி போயிட்டாருங்களே! அடுத்த தபா பாத்துக்கலாம்.

சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா கிளம்பிடுவீங்க போலருக்கே :)