எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, March 14, 2007

துபாய் ரிட்டர்ன் மாப்ளடோய்!!

மாப்ள போறான் பாத்தியா துபாய் ரிட்டர்ன் போலருக்கு அதான் அங்க வரும்போதே
இங்க வாசனை ஆள அமுக்கி போடுது. இப்ப பாரு கோல்டு கலர் வாட்ச், ஒரு கைல
மூணு மோதிரம், ப்ரேஸ்லெட் எல்லாத்தையும் காமிக்கிற மாதிரி அவனோட செய்கை இருக்கும்பார். அடிக்கடி கை ஆட்டுவான், டைம் பார்ப்பான் காலரை இழுத்து லூஸ் விட்டுக்குவான்.

இன்னும் ரெண்டு மாசத்துக்கு இவன் அலப்பறை தாங்க முடியாது. கேட்டா கம்பேனில
ரெண்டு மாசம் லீவுன்னு கோட்டா அடிப்பான். பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு எல்லாம்
ஹீரோ பேனா, கோடாலி தைலம்னு பட்டாசு கெளப்புவான். பக்கத்து கடைல
டீக்குடிக்கணும்னா கூட பைக்லதான் போவான். முழுக்கை சட்டைய போட்டுகிட்டு
கீழ லுங்கி(மேட் இன் இந்தோனேசியா) கட்டிகினு போவான். ஆனா அந்த லுங்கி
நம்ம ஊர் உழவர் சந்தைல கூட கிடைக்கும்ன்றது வேற விசயம். இந்த மாதிரி
அலம்பல் எல்லாம் பண்ணிட்டு துபாய்க்கு போயிடுவான்.

ம்ம் ராஜ வாழ்க்கைடா மேலுக்கு, காலுக்கும் பவுனு போட்டு பதவிசா சுத்தினா
இப்படிதான் எங்க ஊருல நாங்க நக்கல் அடிப்போம். அதுவும் துபாய் ரிட்டர்ன்
அப்படின்னா கேக்கவே வேணாம். இந்த கூத்த பாக்குற என்னைய மாதிரி ஆளுங்க எப்படியாச்சும் துபாய், சவுதி, போய் நிறைய சம்பாதிச்சு இவன விட
நல்லா பிஸ்து காமிக்கணும்டான்னு தோணும்.

பொதுவா பார்த்தா எல்லாரும் இப்படிதான் நினைப்பாங்க. நானும் அப்படிதான்
நினைச்சேன். ஆனா அவங்கல்லாம் இங்க எப்படி கஷ்டபடறாங்க, எத்தனை மணி
நேரம் உழைக்கறாங்கன்னு பாத்தா அந்த எண்ணமெல்லாம் அப்படியே சிதறிப்போயிடும். அவங்க மனசு சந்தோஷமா இருக்கறதே தாயகம் வரும்போதுதான்
அதுனால அப்படி இப்படி அலம்பல் பண்றது சகஜம்தான் புதுசா பாக்கும்போது
நமக்கு கொஞ்சம் ஓவரா தெரியும்.

இங்க வர்றவங்க ரெண்டு விதமான விசா முறையில வராங்க. ஒண்ணு வரும்போதே எம்ப்ளாய்மெண்ட் விசால வர்றவங்க, இன்னொண்ணு விசிட் விசா (இது அதிக பட்சம்
மூணு மாசம் இங்க இருக்கலாம்) என்ற முறையில் வருவாங்க. எம்ப்ளாய்மெண்ட்
விசா ஏதாவது ஒரு ஏஜன்ட் மூலமாவோ அல்லது இங்க இருக்கற நண்பர்களோ,
உறவினர்களோ எடுத்து அனுப்புவது. இந்த முறையில வர்றவங்களுக்கு அதிக பிரச்சினை இல்லை. கம்பெனி நல்ல கம்பெனியா இருந்துட்டா போதும். ஒரு சிலர்
ஏஜன்ட் மூலமா இங்க வந்து ஏமாந்து போறவங்களும் இருக்காங்க. அல்லது
கம்பெனி பிடிக்கலன்னு ஓடறவங்களும் இருக்காங்க இவங்கள போலிஸ்லயோ,
அரசாங்கமோ பிடிச்சி அனுப்புனாதான் உண்டு. ஓடறவங்க 5 வருசம் பத்து வருசம்
கூட ஊருக்கு போகாம இருக்கும் ஆட்களையும் நான் பாத்துருக்கேன். சில பேர்
ஊருக்கு போகும்போது அவங்கள அடையாளம் தெரியாம போன சம்பவமும்
சொல்ல கேட்டிருக்கேன். சில பேர் வந்து இறங்கும்போது விசாவில்
குறிப்பிட்டிருக்கும் கம்பெனியே இல்லன்னு சொல்றதும் நடக்குது.

ரெண்டாவது முறையான விசிட் விசாவில வர்றவங்க இங்க வந்து அவங்களுக்கு பிடிச்ச, அனுபவமுள்ள துறையில வேலை தேடிக்குவாங்க. மூணுமாசத்துல வேலை
கிடைக்கலன்னா இந்தியாவுக்கோ அல்லது பக்கத்தில் இருக்கும் தீவுக்கோ போய்
மறுபடியும் வேறு விசிட் விசாவில் வரலாம். நான் இந்த முறையில் தான் துபாய்
வந்தேன் வந்து நல்ல வேலை கிடைக்காம நாய்படாத பாடுபட்டேன் இப்பவும்
பட்டுகிட்டு இருக்கேன். எல்லாரும் கஷ்டப்படறாங்கன்னு சொல்லமுடியாது. பலபேர்
வந்த சில நாளில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்து செட்டில் ஆனவங்களும்
இருக்காங்க. என்னை மாதிரி கொஞ்சம் சிரமப்பட்டவங்களும் இருக்காங்க ஆனால்
இங்க வருவதற்கு முன்னமே எல்லாத்துக்கும் தயாரா வரணும்.


நான் ஏன் கஷ்டப்பட்டேன்னா முதல் முறையா பாஷை தெரியாத ஊருக்கு வரேன்.
இந்தியும் தெரியாது ஆங்கிலமும் அவ்வளவா வராது. பஸ், டாக்சி எதிலயும் இந்தி
பேசும் நம் நாட்டு பிரஜைகளும்,பாகிஸ்தான் ஆளுங்களும் இருப்பாங்க. இந்தி மொழி எவ்வளவு முக்கியம்னு வெளிமாநிலத்துக்கோ, வெளிநாட்டுக்கோ போனாத்தான்
தெரியுது. இந்த நாட்டு பிரஜைகள விட மலையாளிகள்தான் அதிகம் தமிழ் பேசினா
ஓரளவுக்கு நாமளும் அவங்களும் புரிஞ்சிக்கற மாதிரி இருக்கறதுனால ஒண்ணும் பிரச்சினையில்லை. வந்த புதுசுல மூணு மாசம் வேலையே கிடைக்கலை, கிடைக்கற
வேலை மனசுக்கு பிடிக்கலை. அப்படி சும்மா இருந்த நாட்களில் எங்க அறையில்
இருந்த சில ஆளுங்க கூட லோடிங் அன்லோடிங் வேலைக்கு கூட போயிருக்கேன்.
மூணு மணி நேரத்துல இருநூறு திராம்ஸ் கிடைச்சுதுன்னா நாலு பேர் ஷேர்
பண்ணிக்குவோம் அந்த காசை என்னோட செலவுக்கு வெச்சிக்குவேன். வீட்டுல
செலவுக்கு காசு வேணும்னா அப்பா, அம்மா கிட்ட ஏமாத்தி வாங்கிடலாம். இங்க
என்னோட மாமாதான் இருந்தார் அவர்கிட்ட எப்படி கேக்கறதுன்னு கூச்சப்பட்டுகிட்டு
கேட்க மாட்டேன். கேட்டா குடுப்பாருன்னு எல்லாத்தையும் கேக்க கூடாதுல்ல.அவருக்கு தெரியாமலே இந்த மாதிரி வேலைக்கு போவேன். எல்லாமே ஒரு
அனுபவம்தாங்க இந்த மாதிரி கஷ்டப்படும்போதுதான் பணத்தின் அருமை
தெரியும் அப்படி பாத்தோம்ணா நான் நிறைய கத்துகிட்டேன்.

சொந்த கதைய சொல்லி போரடிக்கிற மாதிரி இருக்கு...

மீதி நாளைக்கு..

36 comments:

Ram Ravishankar said...

நல்லா எழுதறீங்க.. தொடர்ந்து எழுதுங்க. வேல கிடைக்க படற கஷ்டம், வாழ்க்கை முறை கஷ்டம் பகிர்ந்துக்கர்து ரொம்ப முக்கியம்!
..ராம்

Anonymous said...

I enjoyed reading your post. I felt sad when I read your earlier experience in job hunting,etc. Everything is life experience I guess. Please keep posting.

Selvi

ஜி said...

தம்பி....

உங்கள் வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி...

துளசி கோபால் said...

தம்பி,

நாம பட்ட கஷ்டத்தைச் சொல்லிக்கிறதுக்கும் பெரிய மனசு வேணும்.

நம்மாளுங்க துபாய் ( எல்லா அராபிய நாடுகளும் அப்ப துபாய்தான்) போய்வந்து
அலட்டுறதைப் பார்த்துருக்கோம். மூணாவது வீட்டுப்பையன் இப்படித்தான்
பயங்கர அலட்டல் காமிச்சான். அங்கே பெரிய வேலையில் இருக்கறதாவும்
சொன்னான். அப்புறம் அண்ணன் ஒரு முறை ஆபீஸ் விஷயமா அந்த ஊருக்குப்
போனப்ப, அவர் தங்குன ஹோட்டலில் அந்தப் பையனைப் பார்த்தாராம். பெல் பாய்.

நல்ல எழுதறீங்க.

வாழ்த்து(க்)கள்.

வடுவூர் குமார் said...

என்னோட சித்தப்பா பையன் "வாடா வாடா " என்று கூப்பிட்டுக்கொண்டிருக்கான்.போகத்தான் சமயம் கிடைக்கவில்லை.
வந்தால் தம்பியையும் பார்த்துவிட்டு வரலாம்? பார்ப்போம்.

Santhosh said...

கதிரு நீ சொல்றது ரொம்ப சரி அங்க நாயா பேயா உழைச்சிட்டு ஊருக்கு வந்து இருக்குற கொஞ்ச நாள் தான் அவங்களுக்க்கு சந்தோசமே. யோசிச்சி பாத்தா அவங்க அப்படி இருந்துட்டு போகட்டுமேன்னு தான் தோணும், ஆனா அதுல இருக்குற ஒரே பிரச்சனை அவங்களை பாக்குற மத்தவங்களுக்கும் சொந்த ஊரில் ஏதாவது செய்ய வேண்டும் அப்படின்னு தோணாமா வெளிநாட்டுக்கு போனால் சந்தோசமாக இருக்கலாம் அப்படின்னு தோணுது. :((..

Anonymous said...

Thampi very good.

keep writing these facts. mee too an gulf tamil

MyFriend said...

இந்த கதை நல்லா இருக்கே!!!!

தொடர்ந்து எழுதுங்க.. ;-)

Anonymous said...

so far i met no one - i never heard anybody's story - expcept some movee jokes. more over, generally people don't like to expose their other side. but you are sharing everythin frankly.
Ungal Vazhkai melum valara vazhthukal - baskar

முத்துலெட்சுமி/muthuletchumi said...

படிக்கும் போது வருத்தமாக இருக்கிறது. நண்பரொருவர் குடும்பம்
இங்க இருக்க தனியா கஷ்டப்படறார் அங்க. வந்தா அந்த ரெண்டுமாசமும்
சந்தோஷமா சுத்திட்டு போலாம் .
ஆனா திரும்பி அங்க போய் குடுக்கற
காசுக்கு அதிகப்படியா ஒழைச்சாகனுமாம்.நேரம் காலம் எதுவும் கிடையாதாம்.
கஷ்டம் தான்.

அபி அப்பா said...

தம்பி! கண்டிப்பா தொடர வேண்டிய தொடர். இதுக்கு மேல சொல்ல ஒன்னுமில்ல!

நாகை சிவா said...

//இந்த கதை நல்லா இருக்கே!!!!

தொடர்ந்து எழுதுங்க.. ;-) //

ஹலோ, மை பிரண்ட்....இது நல்லா இல்ல சொல்லிட்டேன்....

தம்பி என்னமா பீல் பண்ணிக்கிட்டு இருக்கான். அத பார்த்து நீங்களும் எங்கள மாதிரி பீல் ஆகாட்டியும் பரவாயில்ல, இப்படி கதை நல்லா இருக்கே நக்கல் விட்டுட்டு போறது நல்லா இல்ல...

அந்த பிஞ்சு மனசு என்ன பாடுபடும் சொல்லுங்க...

தம்பிண்ணன், இதுக்கு எல்லாம் நீ தளர்ந்து விடாத....நான் இருக்கேன், வெட்டி இருக்காரு,கப்பி, ஜி, அபிஅப்பா, கோபி அப்படினு ஒரு பெரிய படையே உன் கூட இருக்கு....

நாகை சிவா said...

//என்னை மாதிரி கொஞ்சம் சிரமப்பட்டவங்களும் இருக்காங்க ஆனால்
இங்க வருவதற்கு முன்னமே எல்லாத்துக்கும் தயாரா வரணும்.//

விடு கதிரு, கஷ்டப்பட்டு கிடைக்குற வெற்றி தான் நிலைக்கும். முயன்று கொண்ட்டே இரு, நல்ல வேலை நீ எதிர்பாத்தை விட சூப்பரா விரைவில் கிடைக்கும்.

நாகை சிவா said...

//இந்த மாதிரி கஷ்டப்படும்போதுதான் பணத்தின் அருமை தெரியும் அப்படி பாத்தோம்ணா நான் நிறைய கத்துகிட்டேன். //

சத்தியமான உண்மை.

MyFriend said...

//தம்பி என்னமா பீல் பண்ணிக்கிட்டு இருக்கான். அத பார்த்து நீங்களும் எங்கள மாதிரி பீல் ஆகாட்டியும் பரவாயில்ல, இப்படி கதை நல்லா இருக்கே நக்கல் விட்டுட்டு போறது நல்லா இல்ல...//

எனக்கு இதை படிக்கும்போது வெற்றி கொடி கட்டு வடிவேலு ஞாபகம்தான் வருது!!! அதான் சிரிச்சேன்.. அடுத்த அனுபவம் சொன்னாலும்.. வடிவேலுவை நினைச்சா சிரிப்புதான் வரும்.. ;-)

//தம்பிண்ணன், இதுக்கு எல்லாம் நீ தளர்ந்து விடாத....நான் இருக்கேன், வெட்டி இருக்காரு,கப்பி, ஜி, அபிஅப்பா, கோபி அப்படினு ஒரு பெரிய படையே உன் கூட இருக்கு....//

எதுக்கு? தம்பிண்ணாவை கலாய்க்கவா? ஏற்கனவே கலங்கியிருக்காரு உங்களால... :-P

நாகை சிவா said...

//"துபாய் ரிட்டர்ன் மாப்ளடோய்!!" //

துபாய் தம்பி எப்ப துபாய் ரிட்டர்ன் "மாப்பிள்ளை" ஆக போறார்

Mugundan | முகுந்தன் said...

தம்பி,

அரபு நாடுகளிக்கு வந்த எல்லோருக்குமே வித்தியாசமான
அனுபவம் கிடைத்திருக்கும்.

நிறைய நண்பர்களின் கதை-யை கேட்டால்,மனதே நொந்து போகும்.
என்ன செய்ய,அந்த கடுமையான
சோகங்கள் தானே ,பின்னர் அவர் தம் குடும்ப
முன்னேற்றத்திற்கு பயன் தருகிறது.

ஏகப்பட்ட நம் ஆட்கள், தனக்கு நடந்த சோதனைகளை
வீட்டினரிடம் கூட சொல்லமாட்டார்கள்.ஆனால் விடுமுறையில்
வீட்டுக்கு வரும் போது கழுத்தும் மைனர் செயின் மாட்டியிருக்கும்,
கை குருமாத்து போட்டிருக்கும்,கை தங்க கடிகாரம் கட்டி இருக்கும்.

என்ன சொல்ல இது, தான் பாலைவன வாழ்க்கை.

அன்புடன்,
முகு

அபி அப்பா said...

//விடு கதிரு, கஷ்டப்பட்டு கிடைக்குற வெற்றி தான் நிலைக்கும். முயன்று கொண்ட்டே இரு, நல்ல வேலை நீ எதிர்பாத்தை விட சூப்பரா விரைவில் கிடைக்கும்.//

ஆமாம். கூடிய சீக்கிரம் அது நடக்கும். மிக கூடிய சீக்கிரம். தம்பி சந்தாஷமா ஒரு பதிவு போடப்போகிறார்!

கோபிநாத் said...

நல்ல பதிவு தம்பி...

உண்மையிலேயே பல நண்பர்களுக்கு தேவையான பதிவு.
அப்ப தான் நாளைக்கு வேற யாராவது வரும் போது தெளிவா வருவாங்க.

வெளிநாட்டில் வேலை செய்றது எவ்வளவு கஷ்டம்ன்னு பார்க்குறவங்களுக்கு தெரியாது. இங்க வந்து இங்க இருக்குற பிரச்சனைகளை எல்லாம் பார்த்தா தான் நம்ம நிலைமை புரியும்.

கோபிநாத் said...

\\ சிலர் ஏஜன்ட் மூலமா இங்க வந்து ஏமாந்து போறவங்களும் இருக்காங்க. \\

அதுவும் அவுங்க கதை எல்லாம் கோட்ட கண்ணுல தண்ணிவரும்...

கதிர் said...

//நல்லா எழுதறீங்க.. தொடர்ந்து எழுதுங்க. வேல கிடைக்க படற கஷ்டம், வாழ்க்கை முறை கஷ்டம் பகிர்ந்துக்கர்து ரொம்ப முக்கியம்!
..ராம்//

நன்றிங்க ராம் ரவிஷங்கர்.
நேரம் கிடைக்கும்போது கண்டிப்பா பகிர்ந்துக்கலாம் ராம்.

//I enjoyed reading your post. I felt sad when I read your earlier experience in job hunting,etc. Everything is life experience I guess. Please keep posting.

Selvi//

வாங்க செல்வி!

உங்க கருத்துக்கு நன்றி!

யாருதாங்க வாழ்க்கைல கஷ்டப்படல எல்லாரும் ஒரு வகைல இந்த மாதிரி அனுபவிச்சிருப்பாங்க. ஆனா நிரந்தரமா அனுபவிங்கறவங்க யாருமில்லை. அது ஒரு அத்தியாயம்னு நினைச்சுக்க வேண்டியதுதான்.

வருகைக்கு நன்றி.

//தம்பி....

உங்கள் வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி...//

நன்றி ஜியா, என்ன பெரிய வாழ்க்கை வாழ்ந்துட்டேன் :)) இனிமேல்தான் இருக்கு எல்லாமே.

கதிர் said...

//துளசி கோபால் said...

தம்பி,

நாம பட்ட கஷ்டத்தைச் சொல்லிக்கிறதுக்கும் பெரிய மனசு வேணும்.//

அப்படிலாம் இல்லிங்க எதோ எழுதினேன். அது கடைசில செண்டியா முடிஞ்சிடுச்சி.

// நம்மாளுங்க துபாய் ( எல்லா அராபிய நாடுகளும் அப்ப துபாய்தான்) போய்வந்து
அலட்டுறதைப் பார்த்துருக்கோம். மூணாவது வீட்டுப்பையன் இப்படித்தான்
பயங்கர அலட்டல் காமிச்சான். அங்கே பெரிய வேலையில் இருக்கறதாவும்
சொன்னான். அப்புறம் அண்ணன் ஒரு முறை ஆபீஸ் விஷயமா அந்த ஊருக்குப்
போனப்ப, அவர் தங்குன ஹோட்டலில் அந்தப் பையனைப் பார்த்தாராம். பெல் பாய்.

நல்ல எழுதறீங்க.

வாழ்த்து(க்)கள். //

அதெல்லாம் சகஜம்ங்க துளசிம்மா
சந்தோஷமா இருக்கட்டும்னு நாமதான் பெரிய மனசு பண்ணி விட்டுடணும். :))

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி

கப்பி | Kappi said...

//துபாய் தம்பி எப்ப துபாய் ரிட்டர்ன் "மாப்பிள்ளை" ஆக போறார்
//

அட்ரா அட்ரா அட்ரா :))

கப்பி | Kappi said...

நெக்ஸ்ட் பார்ட் சீக்கிரம் போடுங்க துரை

கதிர் said...

//என்னோட சித்தப்பா பையன் "வாடா வாடா " என்று கூப்பிட்டுக்கொண்டிருக்கான்.போகத்தான் சமயம் கிடைக்கவில்லை.
வந்தால் தம்பியையும் பார்த்துவிட்டு வரலாம்? பார்ப்போம்.//

வாங்க குமார் வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா வாங்க சந்திக்கலாம்.

//கதிரு நீ சொல்றது ரொம்ப சரி அங்க நாயா பேயா உழைச்சிட்டு ஊருக்கு வந்து இருக்குற கொஞ்ச நாள் தான் அவங்களுக்க்கு சந்தோசமே. யோசிச்சி பாத்தா அவங்க அப்படி இருந்துட்டு போகட்டுமேன்னு தான் தோணும், ஆனா அதுல இருக்குற ஒரே பிரச்சனை அவங்களை பாக்குற மத்தவங்களுக்கும் சொந்த ஊரில் ஏதாவது செய்ய வேண்டும் அப்படின்னு தோணாமா வெளிநாட்டுக்கு போனால் சந்தோசமாக இருக்கலாம் அப்படின்னு தோணுது. :((..//

சரியா சொன்னிங்க சந்தோஷ். உதாரத்துக்கு என்னையே சொல்லலாம். :))

//Thampi very good.

keep writing these facts. mee too an gulf tamil//

நன்றிங்க ஜான். கண்டிப்பா எழுதறேன்.

//இந்த கதை நல்லா இருக்கே!!!!

தொடர்ந்து எழுதுங்க.. ;-)//

தங்கச்சிக்கா இது கதையல்ல நிஜம்.
:))

கதிர் said...

//படிக்கும் போது வருத்தமாக இருக்கிறது. நண்பரொருவர் குடும்பம்
இங்க இருக்க தனியா கஷ்டப்படறார் அங்க. வந்தா அந்த ரெண்டுமாசமும்
சந்தோஷமா சுத்திட்டு போலாம் .
ஆனா திரும்பி அங்க போய் குடுக்கற
காசுக்கு அதிகப்படியா ஒழைச்சாகனுமாம்.நேரம் காலம் எதுவும் கிடையாதாம்.
கஷ்டம் தான்.//

ஆமாங்க ஒப்பந்தத்தின் அடைப்படையில் வரும் பலருக்கும் சரியான ஊதியம் கிடைப்பதில்ல. விடுமுறை கிடப்பதில்லை இந்த மாதிரி ரொம்ப நொந்து போய் வர்றவங்க நிறைய பேர். ஒயிட் காலர் ஜாப் காரங்களுக்கு அதிகம் பிரச்சினையில்லை. கஷ்டப்படறது தொழிலாளர்கள்தான்.

கதிர் said...

//இந்த கதை நல்லா இருக்கே!!!!

தொடர்ந்து எழுதுங்க.. ;-) //

ஹலோ, மை பிரண்ட்....இது நல்லா இல்ல சொல்லிட்டேன்....

தம்பி என்னமா பீல் பண்ணிக்கிட்டு இருக்கான். அத பார்த்து நீங்களும் எங்கள மாதிரி பீல் ஆகாட்டியும் பரவாயில்ல, இப்படி கதை நல்லா இருக்கே நக்கல் விட்டுட்டு போறது நல்லா இல்ல...

அந்த பிஞ்சு மனசு என்ன பாடுபடும் சொல்லுங்க...

தம்பிண்ணன், இதுக்கு எல்லாம் நீ தளர்ந்து விடாத....நான் இருக்கேன், வெட்டி இருக்காரு,கப்பி, ஜி, அபிஅப்பா, கோபி அப்படினு ஒரு பெரிய படையே உன் கூட இருக்கு....//

யாருய்யா பீல் பண்ணது, நானெல்லாம் எதுக்கும் பீல் பண்ண மாட்டேன் உதாரணத்த்துக்கு உன் கூடலாம் பழகிட்டு இருக்கேனா இது போதாதா!! :)))

பினாத்தல் சுரேஷ் said...

இதை.. இதை.. இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் தம்பி. ரொம்ப அவசியமான, அழகான பதிவு.

ரெண்டென்ன, மூணு நாலு ஆனாலும் பரவாயில்லை, எதையும் விட்டுடாம எழுதுங்க!

கால்கரி சிவா said...

// ஒயிட் காலர் ஜாப் காரங்களுக்கு அதிகம் பிரச்சினையில்லை. கஷ்டப்படறது தொழிலாளர்கள்தான்.//

உண்மை தம்பி, அந்த புளூ காலர் தொழிலாளர்களின் பாடு பரிதாபம்.

அவர்களின் துயரம் பற்றியும் அதற்கு காரணம் யார் என்பதையும் எழுதுங்கள்

கதிர் said...

//தம்பி! கண்டிப்பா தொடர வேண்டிய தொடர். இதுக்கு மேல சொல்ல ஒன்னுமில்ல!//

தொடர்ந்துட்டா போச்சு.

இராம்/Raam said...

கதிரு,

நல்ல பதிவுப்பா...

வெளிநாட்டிலே வேலை பார்க்கிறவங்க கஷ்டங்களை சொல்லி கேட்டுருக்கேன்...

ஒனக்கு சீக்கிரமே நல்ல வேலை கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன்..

வெட்டிப்பயல் said...

//ஆமாம். கூடிய சீக்கிரம் அது நடக்கும். மிக கூடிய சீக்கிரம். தம்பி சந்தாஷமா ஒரு பதிவு போடப்போகிறார்!//

உங்கள் வார்த்தை நிஜமாக இறைவனை பிரார்த்திக்கிறேன்...

தம்பி,
கஷ்டப்படாம ஜெயிச்சா அதுல ஒரு த்ரில்லே இருக்காது. நாளைக்கு வரலாறு சொல்லனும் நம்ம கதிரு கூட ஒரு காலத்துல லோடிங் வேலை எல்லாம் பண்ணாறாம்னு...

லொடுக்கு said...

தம்பி,

இந்த கிரிக்கெட் ரகளையில உங்களோட பதிவை கவனிக்க தவறிட்டேன். மன்னிக்கவும்.

இந்த பதிவுல எதார்தத்தை அழகா சொல்லியிருக்கீங்க.

கதிர் said...

கதிரு,

//நல்ல பதிவுப்பா...

வெளிநாட்டிலே வேலை பார்க்கிறவங்க கஷ்டங்களை சொல்லி கேட்டுருக்கேன்...

ஒனக்கு சீக்கிரமே நல்ல வேலை கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.. //

நன்றி ராம் அண்ணே!

கதிர் said...

//உங்கள் வார்த்தை நிஜமாக இறைவனை பிரார்த்திக்கிறேன்...

தம்பி,
கஷ்டப்படாம ஜெயிச்சா அதுல ஒரு த்ரில்லே இருக்காது. நாளைக்கு வரலாறு சொல்லனும் நம்ம கதிரு கூட ஒரு காலத்துல லோடிங் வேலை எல்லாம் பண்ணாறாம்னு... //

நன்றி வெட்டி!

அந்த வேலை செஞ்சிட்டாமுன்ன்னு ஒரு நாளும் வருத்தப்பட்டதில்ல வெட்டி. ஆனா முதுகொடிக்கற அந்த வேலை இன்னமும் எவ்வளவோ கஷ்டத்துக்கு இடையில செஞ்சுட்டு இருக்காங்க நம்ம சகோதரர்கள். அவர்களுக்கும் சேர்த்து நான் வேண்டுகிறேன். அவர்களது எதிர்காலம் இன்னும் சிறப்பா அமையணுமின்னு.

நன்றிப்பா

கதிர் said...

//இந்த கிரிக்கெட் ரகளையில உங்களோட பதிவை கவனிக்க தவறிட்டேன். மன்னிக்கவும்.

இந்த பதிவுல எதார்தத்தை அழகா சொல்லியிருக்கீங்க. //

நன்றி லொடுக்கு.