எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, March 28, 2007

அய்யனாரின் ஐந்து குணங்கள்

என்னடா இவன் இப்பதான் வியர்டுன்னு ஒரு பதிவு போட்டுட்டு மறுபடியும் வியர்டு
போட வந்துட்டான்னு நினைக்க வேணாம். இது என்னோட ஐந்து குணங்கள் இல்ல
நம்ம நண்பர் அய்யனாரின் ஐந்து குணங்கள். அவரோட ப்லாக்ல தமிழ்மண கருவி
பட்டைய இணைக்கறதுல சிறு பிரச்சினை இருந்துச்சி. சரி பண்ணி இணைத்த பிறகு
காத்திருப்போர் பட்டியல்ல ஒரு வாரமா உக்காத்தி வெச்சிருக்காங்க. சரி நம்மளயும்
மதிச்சி ஐந்து குணங்கள எழுத சொன்ன நல்லவரு (நாந்தாங்க) மனசு
கஷ்டபடக்கூடாது அப்படின்ற நல்ல எண்ணத்துல எழுதி என்கிட்ட அனுப்பி நீயே
உன்னோட பதிவில போட்டுடு எனக்கும் கொஞ்சம் விளம்பரம் கிடைச்ச மாதிரி
இருக்கும்னு சொன்னாரு.

தோ பார்றா நம்ம பக்கத்துக்கு வந்து போறதே பத்து பதினஞ்சி பேர்தான் இருப்பாங்க.
நம்மள போயி பெரிய ஆளுன்னு நினைச்சிட்டு இருக்காருப்பா ரொம்ப நல்லவருப்பா
இந்த அய்யனாரு.

இனிமேல் அவர் ஐந்து குணங்கள படிங்க.

வினோத ஐந்து ஜந்து குணங்கள்

தம்பி நீங்க என்ன இதுல மாட்டிவிட்டதும் இதுவர எழுதன எல்லாரயும் ஒரு
ரவுண்ட் பாத்தேன்..பூ யாருமே சரியா எழுதல ..சில பேர் தலைப்பை கூட
சரியா புரிஞ்சிக்காம அவங்களை பத்தின நல்ல குண்ங்களை தேடி பிடிச்சு பட்டியல் போட்டிருக்காங்க..ஹி..ஹி..இதான் என்னோட முதல் குணம் அடுத்தவங்களை
ரொம்ப ஏளனமா பார்ப்பது .சந்தர்ப்பம் கெடைச்சா புரியாத நாலு வார்த்தைகளை
சொல்லி அப்பாவிகளை கலங்கடிப்பது.உதாரணத்துக்கு எங்க ஊர்( திருவண்ணாமலை) விஜயகாந்த் ரசிகர் மன்ற துணை தலவர் கிட்ட போய் பை சைக்கிள் தீவ்ஸ் படம் பார்த்திருக்கிங்களா ன்னு கேக்குறது.

படிக்கும் இடங்கள் மற்றும் முறை

படிப்பது எல்லாரும் பண்ற வேலதான் னாலும் இந்த லொகேசன் தான் எனக்கு
பிரச்சினையே.

டாய்லெட்
எனக்கு உலகத்திலேயே ரொம்ப புடிச்ச விசயம் டாய்லெட்ல படிக்கிரதுதான்.
கிட்டதட்ட 17 வருஷமா இந்த பழக்கம் எங்கிட்ட இருக்கு. ஆனந்த
விகடன், தீராநதி, குமுதம் இதெல்லாம் இல்லாம எனக்கு..ஹி..ஹி..

குளியலறை

மத்தியான வெயில்ல குளியலறைல ஒரு சேர் போட்டு உட்கார்ந்து கால் ரெண்டயும்
சுவத்துல முட்டு கொடுத்து படிக்கிற சொகம்..அட அட ..

உயரமான இடங்கள்
இந்த பழக்கம் எனக்கு எப்படி வந்ததுன்னா சின்ன வயசுல கதை புத்தகம்
படிக்கும்போது என்னோட அம்மா சொல்ற வேலைகள்ல இருந்து எஸ்கேப்
ஆகறதுக்காக என்னோட வீட்டுத் தோட்டத்துல இருக்கிற வேப்ப மரத்துமேல ஏறி
உட்கார்ந்து படிப்பேன்.அது அப்படியே பழக்கமாகி மலைமேல இருக்கிற பாறாங்கல்
உச்சில உட்கார்ந்து படிக்கிறது கட்ட சுவத்துமேல உட்கார்ந்து படிக்கிறதுன்னு
காலத்துக்கு ஏத்த மாதிரி மாறிடிச்சி.

ராத்திரியில கத்தறது..

ஆமாங்க ..சில நாட்கள் தூங்கவே முடியாது அப்படிங்கிறா மாதிரி ஏகப்பட்ட
சாத்தான்கள் மண்டைக்குள்ள ஓடும் அப்ப என்ன பன்னுவேன்னா மொட்டை
மாடிக்கு வந்து ஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ ன்னு கத்துவேன்.. ஆனால் இதுல பல
சிக்கல்கள் வந்ததால சில மாடிபிகேசன் பண்னிக்கிட்டேன். இது ஓஷோ சொல்லிக்கொடுத்தது..ஜிப்ரிஷ்..

கூட்டம் பாத்தா தலை சுத்தறது

இது ஏதாவது மேனி யாவா இருக்குமோன்னு ஆரம்பத்தில எனக்கு ஒரு சந்தேகம்
இருந்தது. கோயில்,சினிமா,பஸ்,ரயில் ன்னு எங்க போனாலும் எனக்கு கூட்டம்
பிடிக்காது. கூட்டம் இருந்தா திரும்பி வந்துடுவேன் இந்த குணத்தால நிறய முறை
பஸ் ஸ்டாண்ட் போய் திரும்பவந்திருக்கேன்.

கதை சொல்வது

நான் ந.து.பள்ளி தேனிமலை,திருவண்ணாமலை ல 3 ங் கிளாஸ் படிக்கும்போது
ஓரு தெனாலிராமன் கதைகள் புத்தகத்தை என்னோட வாத்தியார் எங்கிட்ட கொடுத்து
இத படிச்சிட்டு நாளைக்கு கத சொல்றான் னு இந்த பழக்கத்துக்கு ஒரு பிள்ளையார்
சுழி போட்டு வச்சார் இதோ இன்னிக்கு வரைக்கும் சொல்லிக்கிட்டு இருக்கேன். இந்த
பழக்கத்தால எல்லா சின்ன குழந்தைகளும் என்ன பார்த்து பயப்பட ஆரம்பிச்சாங்க
என் பக்கத்துல படுக்கவே மாட்டே ன்னு எங்க அக்கா பையன் அழுதுகிட்டே
ஓடுவான் இருந்தாலும் அத ஒரு பொருட்டா மதிச்சதே இல்ல.இதனால அதிகம் பாதிக்கப்பட்டவங்க என்னோட நண்பர்கள் தான் சமீப காலமா புரியாத படங்களா
பாத்து தள்ளி அதனோட கதைகள ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு சொல்லுவேன் பசங்க
பரிதாபமா கேட்டு தொலைவானுங்க (என்ன பன்றது பீரு க்கு காசு கொறையுதே)..

தம்பி என்னோட ஒட்டு மொத்த குணங்களும் ஜந்து மதிரிதான் இருக்கும். இதெல்லாம் சும்மா சாம்பிள்தான்.

அடுத்த ஐந்து பேர்

மஞ்சூர் ராசா
சித்தார்த்
ஜெஸிலா
இன்னும் ரெண்டு பேருக்கு ஒபன் இன்விடேஷன் எனக்கு தெரிஞ்சி எல்லாருமே
எழுதிட்டாங்க. எழுதாதவங்க இதையே ஒரு அழைப்பா எடுத்துகிட்டு வியர்டுதனத்த
காமிங்க.

16 comments:

காட்டாறு said...

என்னங்க தம்பி. வந்த வேகத்துல அடிச்சி தள்ளிட்டு..... இதோ 5 பேருன்னு 3 பேர எழுதிட்டு எஸ்க்கேப் ஆகிட்டீக

கதிர் said...

ஒரு சின்ன டெக்கினிக்கல் பால்ட் ஆகிப்போச்சிங்க. அவரோட மெயில்லருந்து ஒழுங்க கட் காப்பி பேஸ்ட் பண்ணல.

இப்ப சரி பண்ணிட்டேன்.

மு.கார்த்திகேயன் said...

இன்னும் இந்த டேக் முடியலையா.. சுத்தி சுத்தி அடிக்குதேப்பா, தம்பி

மு.கார்த்திகேயன் said...

//உன்னோட பதிவில போட்டுடு எனக்கும் கொஞ்சம் விளம்பரம் கிடைச்ச மாதிரி
இருக்கும்னு சொன்னாரு.//

நானும் இப்படி ஏதாவது எழுதி அனுப்பட்டுமா, தம்பி..

மு.கார்த்திகேயன் said...

/மத்தியான வெயில்ல குளியலறைல ஒரு சேர் போட்டு உட்கார்ந்து கால் ரெண்டயும்
சுவத்துல முட்டு கொடுத்து படிக்கிற சொகம்..அட அட /


ஆஹா.. படிக்கிற இடத்தை தவிர்த்து மத்த எல்லா இடத்திலையும் படிப்பாரு போல அய்யனாரு

-L-L-D-a-s-u said...

//மொட்டை
மாடிக்கு வந்து ஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ ன்னு கத்துவேன்.. //

//மத்தியான வெயில்ல குளியலறைல ஒரு சேர் போட்டு உட்கார்ந்து கால் ரெண்டயும்
சுவத்துல முட்டு கொடுத்து படிக்கிற சொகம்.//

weird . :).. இங்கே இணைக்கப்படுகிறது

கோபிநாத் said...

\\உன்னோட பதிவில போட்டுடு எனக்கும் கொஞ்சம் விளம்பரம் கிடைச்ச மாதிரி
இருக்கும்னு சொன்னாரு.\\

தம்பி எப்பத்திலிருந்து இந்த விளம்பார பிசினசை ஆரம்பிச்ச....நானும் கொஞ்சம் அனுப்பட்டுமா ;-))

கோபிநாத் said...

அய்யனாரு ஐயாவுக்கு வணக்கம்

உங்க சாம்பிள் 5 வியரடுகள் எல்லாம் தூள் ;-))

அது எப்படி இந்த திருவண்ணமலை, கள்ளக்குறிச்சி பயலுக எல்லாத்துக்கும் கூட்டத்தை கண்டா புடிக்காதா?? எல்லாரும் இதையே சொல்றிங்க ;-))

கூடிய சீக்கிரம் மீட் பண்ணுவோம் கிடேசன் பார்க்குல ;-)))

பொன்ஸ்~~Poorna said...

என்ன இருந்தாலும் எங்க கேப்டன் ரசிகர் மன்றத்துல போய் பை சைக்கிள் தீவ்ஸ் பத்தி கேட்கிறது ரொம்ப ஓவருங்கண்ணா...

தம்பி, இந்த இடுகையை அவர் பதிவுலும் போடச் சொல்லுங்க.. அப்பத் தானே ஒரு நாலு பேர் வர போக இருப்பாக?! :)

அபி அப்பா said...

தம்பி! இந்த பின்னூட்டம் யார் கணக்கில வரும்? உம்ம கணக்கா அய்யனார் கணக்கா?:-)

அபி அப்பா said...

அய்யனார்! இந்த டாய்லெட்டுல படிக்கிற பழக்கம் இருக்கே சூப்பர், நானும் அப்டிதான்:-))

கதிர் said...

//இன்னும் இந்த டேக் முடியலையா.. சுத்தி சுத்தி அடிக்குதேப்பா, தம்பி //

வாங்க கார்த்திக்!

வியர்டே முடியல அதுக்குள்ள இன்னொண்ணு வலம் வரப்போகுதாம்

//நானும் இப்படி ஏதாவது எழுதி அனுப்பட்டுமா, தம்பி.. //

தாரளமா அனுப்புங்க கார்த்திக்.

கதிர் said...

//ஆஹா.. படிக்கிற இடத்தை தவிர்த்து மத்த எல்லா இடத்திலையும் படிப்பாரு போல அய்யனாரு//

அவரு கன்னா பின்னான்னு படிக்கிற பார்ட்டிங்க.

Ayyanar Viswanath said...

"ஆஹா.. படிக்கிற இடத்தை தவிர்த்து மத்த எல்லா இடத்திலையும் படிப்பாரு போல அய்யனாரு "

:))) ஆமாங்க கார்த்தி..சில இடங்கள் சென்சார் பன்னிட்டேன்..ஹி..ஹி..

கூடிய சீக்கிரம் மீட் பண்ணுவோம் கிடேசன் பார்க்குல ;-)))

தாரளமா கோபி..

அப்பத் தானே ஒரு நாலு பேர் வர போக இருப்பாக?! :)

அப்படியே

அய்யனார்! இந்த டாய்லெட்டுல படிக்கிற பழக்கம் இருக்கே சூப்பர், நானும் அப்டிதான்:-))

அபி அப்பா நீங்களுமா ..ஒரு கட்சி ஆரம்பிப்போமா..

Unknown said...

அட நம்ம ஆளு :-)

களவாணி said...

ஏங்க உங்களுக்கும் குமுதம் ஆ.வி. இல்லன்னா ஹிஹி.. ஹிஹி..தானா,..?!!!

என்னய மாதிரி எத்தினி பேருங்கோவ் இருக்கீங்க வாங்க "வெளி"யே புதருக்குள்ளேருந்து...