எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, August 23, 2008

இது எங்க ஏரியா.... யாவரும் வரலாம்

கேமரா மாடல் என்ன? எத்தன லென்ஸ் யூஸ் பண்ணிங்க? சப்ஜெக்ட், சூம், ஆங்கிள்
அப்பச்சர்னு ரப்ச்சர் பண்ண கூடாது. இந்த போட்டோ எல்லாமே என்னோட காணாம
போன மொபைலில் எடுத்தது. ஜனவரியில் ஊருக்கு சென்றபோது எடுத்த படங்கள் இவையெல்லாம். ஒவ்வொரு புகைப்படம் பார்க்கும்போதும் ஒரு கவிதை, அல்லது
கதைக்கான "ஒளி" தெரியுதுன்னு ஒருத்தர் உசுப்பேத்தி விட்டதுனால இத எல்லாம்
பார்க்க வேண்டிய கட்டாயம் ஆயிடுச்சு.



என் நண்பன் ஒருத்தனுக்கு ரெண்டாவது கல்யாணம். அதுக்காக நிச்சயதார்த்ததுக்கு போகும்போது அவங்க வீட்டு வாசல்ல எடுத்தது. ரோஜாப்பூ நல்லா இருந்ததுனால
டபால்னு கிளிக்கியாச்சு.



இது எங்க வீட்டுப்பூனை. ரொம்ப நேரம் யோசிச்சபிறகு இதுக்கு பூனைன்னே பேர்
வெச்சிட்டென். இந்த பேர் பக்கத்துவீட்டு ஜனனியும் நானும் ரொம்ப நேரம் ஆலோசனை
செஞ்சு வெச்சது. அவ "பூன.. பூன.. எங்க இருக்க நீ" ன்னு கேக்குற அழகே தனி.
வீட்டுல காலைலயே எல்லாரையும் எழுப்பிவிடும். அசந்து தூங்குற நேரம்
தலையணைக்கு பக்கத்துல வந்து படுத்துக்கும். அதனிடம் இருந்து கிளம்பி
வரும் சூடான காற்றுடன் சுவாசத்தின் க்ர்ர்ர் சத்தம் கேட்கும்போது லேசாக உணர
ஆரம்பிப்பேன். கண்களை மூடிக்கொண்டே அதனிடமிருந்து இணக்கமான ஒரு சப்தம்
வரும் அந்த சப்தம்தான் என்னை துயிலெழுப்பும் சப்தம். வீடுன்னா ஒரு பூனை இருந்தே
ஆகணும்னு தோன்ற எண்ணத்தை உருவாக்கிய பூனை இது.



எங்க ஊர்லருந்து மூணு கிலோமீட்டர் தள்ளி இந்த அணை இருக்கு இந்த மலைமேல
ஏரி மேல்பரிகத்துலருந்து பாத்தா சுத்துப்பட்டுல எல்லாமும் தெரியும். இந்த இருக்கற
அணைக்குப் பேரு கோமுகி அணை. (பேரே வித்தியாசமா இருக்குல்ல) இந்த
அணைக்கு கொஞ்சம் தள்ளி மூங்கில் மரத்தால் சூழ்ந்த நிறைய புற்றுக்கள் கொண்ட
ஒரு அம்மன் கோயில் இருக்கு. இங்கதான் கெடாவெட்டுலாம் நடக்கும். பச்சை
பசேல்னு சுத்திலும் மூங்கில் மரம் நடுவில ஒரு அம்மன் கோயில் அங்க தனியா
சாமி கும்பிட்டோம்னா ஏகாந்தமா இருக்கும். நான் பள்ளிக்கு பங்க் அடிச்சா இந்த
அணைக்குதான் போவோம். அப்படி போனா இந்த கோயிலுக்கு மறக்காம போவேன்.



மேகம் அருவிக்கு போறவழில ரோட்டுலருந்து எடுத்த புகைப்படம் இது. இந்த அருவில
உற்பத்தி ஆகுற தண்ணீரெல்லாம் சின்ன சின்ன ஓடையா மாறி ஒரு இடத்துல
சேர்ந்து ஆறா ஓடி கோமுகி அணையில சேரும். குறிப்பா ஆகஸ்ட் முதல் டிசம்பர்
வரை அணை முழுக்க தண்ணி இருக்கும். புகைப்படம் எடுக்கும்போது தண்ணி
குறைவாதான் இருந்தது.



இங்க உக்காந்திருக்கும் ஒருவரை பார்த்தால் எதோ ஒரு கிராமத்தான் பஸ்சுக்கு வெயிட்
பண்றான்னு நினைப்பிங்கதானே... ஆனா அது இல்ல. இவர் உட்கார்ந்திருக்கும் இடம்
வெள்ளிமலைக்கு செல்லும் பாதையில் இருக்கும் குண்டியாநத்தம் என்ற பேருந்து நிறுத்தம்.
கடந்த ஒருவாரமா இவர் இங்க காத்திருக்கார். எதுக்குன்னு கேக்கறிங்கள்ல... பெரிய
விஷயம் ஒன்றுமல்ல. நியாயவிலைக்கடையில் போடும் அரிசிக்காக காத்திருக்கிறார்.
அந்த லாரியானது எப்போது எப்படி கடந்துபோகும் என்றே தெரியாது. இப்படி
காத்திருந்து பார்த்தால்தான் அரிசி வாங்கமுடியும். வண்டி போவதை கவனிக்காவிட்டால்
அரிசி வாங்க முடியாது. இவர் கவனிச்சு அங்க இருக்கற சில வீடுகள்ல சொல்லி
பிறகு நாலஞ்சு கிலோமீட்டர் தள்ளி இருக்கற இன்னொரு ஊருக்கு போய் வாங்கிட்டு
வரணும். இவர்கிட்டகொஞ்சநேரம் உக்காந்து பேசினதுல தெரிஞ்சது இது. ரொம்ப
அழகா சிரிச்சு பேசினார். என்னோட போட்டோ எடுக்கும் திறமையினால
"சேது எபெக்ட்" தெரியுது மத்தபடி நல்லா பேசினார்.



புளியம்பூ பாக்க அழகா இருக்கும். பறிச்சு தின்னா அதவிட நல்லா இருக்கும். அதையே
பூவிட்டபிறகு கொஞ்சநாள்ல பொறந்த கொழந்தையோட வெரல் மாதிரி சின்ன பிஞ்சா
இருக்கும் அதுல லேசா உப்பு கொஞ்ச பட்ட மொளகா வெச்சு அடிச்சோம்னா கும்முனு
இருக்கும். பொண்ணுங்க நெல்லிக்காவுக்கு அடுத்ததா புளியங்காதான் ரொம்ப புடிக்கும்
இப்பவும் நடராஜா ஜாமெண்ட்ரி பாக்ஸ் உள்ள பொண்ணுங்க ஒளிச்சு வைக்கிற சீசன்
காய் இது. டீச்சருங்க கூட இதை ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. போட்டோவில
இருக்கற மரத்துல இலைகளவிட காய் அதிகமா இருந்துச்சு. சின்னவயசுல கலெடுத்து
அடிச்சா காயம்பட்ட காய் விழும். இப்பலாம் நின்னுகிட்டே பறிச்சுடறமாதிரி இருக்கு
காலத்தின் வளர்ச்சி!



மூணு பைக்குல இந்த அருவிக்கு நான் என்னோட தம்பி அப்புறம் அவனோட கூட்டாளி
சிலபேர் போனோம். முதல்முதலா இந்த அருவிக்கு +1 படிக்கும்போது கட் அடிச்சுட்டு
வந்தது எல்லாம் ஞாபகம் வந்தது. அப்ப கட் அடிச்சபோது கூட வந்தவன் இப்பவும்
என்கூட அருவிக்கு வந்தது பலவிஷயங்கள ஞாபகப்படுத்த உதவியது. இந்த அருவிக்கு
போக பத்து வருசத்துக்கு முன்னாடி வழிகாட்டியா வந்த ஒரு சிறுவனை என் கண்கள்
தேடியது ஆனா அவன் பேர் தெரியாததுனால கிடைக்கலை. என்னோட முதல் பீடி
அங்குதான் புகைக்கப்பட்டது அதுவும் வழிகாட்டியா வந்த அந்த சின்ன பையன்கிட்ட
இருந்து ஆட்டை போட்டது. இந்த அருவிக்கு போகணும்னா குண்டியாநத்தத்தில்
இறங்கி இரண்டு மலைமுகடுகளை ஏறி இறங்கணும். கண்டிப்பா வழிகாட்டி ஒருத்தர்
இருக்கணும். இல்லாட்டி "மந்தையிலிருந்து பிரிந்த ஆடுதான்" கதி. ஆனாலும்
இங்க போகணும்னு முடிவெடுத்து திரும்பி வரும்போது வாயில் நுரை தள்ளிடுச்சி.
இருந்தாலும் அற்புதமான ஒரு சாகசப்பயணம் செய்த திருப்தி இருந்தது. அருவியை
பார்க்கும்போதே எனக்குப் பிடிச்ச ஒரு கவிதையையும் போடறேன்.

நெஞ்சு படபடக்கிறது
நீர்வீழ்ச்சியென்று
அருவியை
யாராவது
சொல்லிவிட்டால்…
- விக்ரமாதித்யன்


அருவியை நேர்ல பார்க்கும்போது இந்த கவிதை கண்டிப்பா உங்களுக்கு நினைவுக்கு
வரும்.



சிரிச்சமுகமா கைலி கட்டிட்டு உக்காந்திருப்பவர் அருவிக்குப் போக வழிகாட்டினார்.
இரண்டு மலை ஏறி இறங்கியும் சோர்வடையாம போட்டோவுக்கு சூப்பரா போஸ்
குடுக்கறார். நாங்கதான் ஓய்ஞ்ச வாழைப்பழம் மாதிரி ஆகிட்டோம். திரும்பற வழில
ஆட்டுப்பட்டில ஒரு ஆடு குட்டி போட்டுகிட்டு இருந்துச்சு. பிறந்து சிலமணி நேரம்
ஆனதும் அது தத்தி தத்தி எழுந்து நிக்க முயற்சி செஞ்ச காட்சி இருக்கே...
சாயந்திர வெயில் தங்க நிறத்துல தக.. தகன்னு மின்ன அந்த ஒளி புது ஆட்டுக்குட்டி
இளம் தோல்மேல பட்டுத்தெறிக்கும்போது ஒரு புதுவிதமான வண்ணம் தெரிஞ்சது
செம சூப்பரா இருந்துச்சு. ஒருத்தங்க வீட்டுல தண்ணி வாங்கி குடிச்சோம் அந்த வீட்டுல
ஒரு பன்னிக்குட்டி ரொம்ப அழகா இருந்தது. தூக்கி கொஞ்சலாம் போல...
பருவத்துல பன்னிக்குட்டி கூட அழகாதாண்டா இருக்கும்னு சும்மாவா சொன்னாங்க.



பொதுவா எனக்கு வயசான ஆளுங்க கூட உக்காந்து பேசறதுன்னா ரொம்ப பிடிக்கும்.
(அதனாலதான் ஆசிப் அண்ணாச்சிகூட உக்காந்து நிறைய பேசுவேன்)
இந்த போட்டோல இருக்க தாத்தாகூட என்னோட கடி தாங்காம அந்தப்பக்கம் திரும்பிக்
கொண்டார். ஒரு கெடாவெட்டு போகும்போது எடுத்த போட்டோ இது. அங்க உறுமி
மேளம் அடிக்க வந்தவர் இவர். அடி அடியென்று அடித்து ஓய்ந்தபோது நான் அவரிடம்
மொக்கை போட ஆரம்பித்தேன். கெடாவெட்டும் முன்பு அச்சாரமாக இரண்டு பேருக்கு
ஒரு மெக்டொவல் ஆஃப் பாட்டில் வீதம் வழங்கப்பட்டது. இதை உள்ளுக்கு இறக்கி
விட்டால் கறிவிருந்து அருமையாக இருக்கும். இல்லாவிட்டால் சுமாராக இருக்கும்.



இங்க சாமி கும்பிடறாரே அவருடைய பேரனுக்குதான் காதுகுத்து. எங்கப்பா போக
வேண்டிய நிகழ்ச்சி இது. அவரை தள்ளிவிட்டு நான் போனேன். இந்தமாதிரி
தனியா காட்டுக்குள்ள காதுகுத்து, பொங்கல், கிடாவெட்டுன்னா நான் போகணும்னு
சின்ன வயசுல அடிம்பிடிப்பேன். இப்பவரைக்கும் அது மாறல. காதுகுத்துக்கு வந்த
ஒரே ஒரு சுடிதார் போட்ட பொண்ணு. நானும் என்னென்னமோ சேட்டை செஞ்சும்
அதுகூட திரும்பி பாக்கல. எதாவது ஏடாகூடமா ஆயிருந்தா ஆட்டு கழுத்துல
போடறதை என் கழுத்துல போட்டுருவாங்க பாசக்காரங்க.



இந்த முக்கு சந்துக்கு பேரு பேங்க் ஸ்டாப். இங்கன நாலு படிக்கட்டு இருக்கு அங்க
உக்காந்து டீ சாப்பிட்டுகிட்டே வெட்டிக்கதை பேசியிருக்கேன். அங்க ஒருநாள்
உக்காந்து பேசிட்டு இருக்கும்போது ஊர்மக்கள் எல்லாரும் ஆத்தோரமா இருக்கற
அம்மன் கோயிலுக்கு பொங்கல் வைக்கப்போனாங்க. அங்க முன்னாடி ரெண்டு
பசங்க செம ஆட்டம் போட்டாங்க. கூடவே ஆடணும்போல அந்த தவுலுகாரரும்
செம பின்னு பின்னிட்டார். so funny people னு நானும் விவேக் மாதிரி சொல்லி
போட்டோ எடுத்துட்டேன்.



கள்ளக்குறிச்சிலருந்து வேப்பூர் போறவழில விருகாவூர்ல இறங்கி அசகளத்தூர் என்ற
ஊருக்குப் பின்னாடி போகற ஒத்தயடிப்பாதையில் ஒருகிலோமீட்டர் தள்ளி போனோம்னா
இந்தக்கோயில் இருக்கு. இதுதான் எங்க குலதெய்வமாம். வேடப்பார்னு பேர். முன்னர்
இங்க வந்தபோது வெறும் பாறைய அடிக்கி வெச்சு நாலு வேல் குத்தி இருந்தாங்க.
இப்ப சின்னதா கோயில் கட்டி அய்யனார் சிலை, குதிரை, யானைன்னு கலர்புஃல்லா
மாத்திருக்காங்க. இன்னும் கண் வரையாத அய்யனார் சிலைய போட்டோ எடுக்க கூடாது
என்று பூசாரி சொன்னார். இந்த பூசாரி கோட்டர் பாட்டில் இல்லாம படையலே வைக்க
முடியாதுன்னு சொன்னவர்.

இப்படிலாம் கலர் கலரா போட்டோ எடுத்து அருமை பெருமையா வெச்சிருந்த ஒரு
போன் காணாம போச்சு. காணாம போன அன்னிக்கு இந்த கருங்காலி பூனையதான்
கடைசியா எடுத்தேன்.



குறிப்பு: நாள் குறிப்பிடாத இரண்டு புகைப்படங்கள் வேற ஒரு கேமரால எடுத்தது. அது
பேர் கூட என்னவோ canon lumix FX10 னு நினைக்கிறேன்.

18 comments:

இராம்/Raam said...

//கேமரா மாடல் என்ன? எத்தன லென்ஸ் யூஸ் பண்ணிங்க? சப்ஜெக்ட், சூம், ஆங்கிள்
அப்பச்சர்னு ரப்ச்சர் பண்ண கூடாது.//


:))

1st photo:-

இன்னும் கொஞ்சம் சைட்'லே போயி எடுத்துருந்தா சூப்பரா வந்திருக்கும்... :)

2nd photo:-

Top'லே இன்னும் ஸ்பேஸ் விட்டிருந்தா நல்லா இருக்கும்... :)

3rd photo:-

இன்னும் PP பண்ணிருக்கனும்... :)

பொறகு வாறேன்... :)

Anonymous said...

//இது எங்க வீட்டுப்பூனை. ரொம்ப நேரம் யோசிச்சபிறகு இதுக்கு பூனைன்னே பேர்
வெச்சிட்டென்//

:-)

Kathir

Anonymous said...

//பொதுவா எனக்கு வயசான ஆளுங்க கூட உக்காந்து பேசறதுன்னா ரொம்ப பிடிக்கும்.
(அதனாலதான் ஆசிப் அண்ணாச்சிகூட உக்காந்து நிறைய பேசுவேன்)//


குசும்பன் மாமாவை விட்டுட்டீங்களே


Kathir.

ஆயில்யன் said...

எல்லா படங்களும் யதர்த்த உலகினை காட்டிக்கொண்டு கிராமத்து வாழ்க்கையினை ஒரு ரவுண்டு போய்வர வைச்சுடுச்சி!

ஆயில்யன் said...

ரொம்ப மாசத்துக்கு முன்னே இந்த கடைசி படத்தை உங்க புரொபைல்ல பார்த்து பார்த்து சரியா புரிபடாமலே இருந்தேன்! அது பூனையா?

மங்களூர் சிவா said...

//இது எங்க வீட்டுப்பூனை. ரொம்ப நேரம் யோசிச்சபிறகு இதுக்கு பூனைன்னே பேர்
வெச்சிட்டென்//

balli னு வெச்சிருந்தா சூப்பரா இருந்திருக்கும்

:))))))))

கோபிநாத் said...

:-))

கோபிநாத் said...

:-))

கப்பி | Kappi said...

:))

//அருவியை நேர்ல பார்க்கும்போது இந்த கவிதை கண்டிப்பா உங்களுக்கு நினைவுக்கு
வரும். //

ஒரு ரெண்டு வாரம் முன்ன பார்த்தபோது ஸ்டேடஸ் மெசேஜ்ல நீங்க போட்டு வச்சிருந்த இந்த கவிதை நினைவுக்கு வந்தது :))

கதிர் said...

உங்க அளவுக்கு எல்லாம் படமெடுக்க தெரியாது ராம். :)

குசும்பன் இப்பதான் கல்யாணமாகி இருக்கிறார். கொஞ்சம் விட்டு அடிப்போம்.
நன்றி Kathir

வாங்க ஆயில்யன்

எதார்த்தமா இருக்க மாதிரி தோணினதுனால பதிவுல போட்டேன்.
ரொம்ப மாசத்துக்கு முன்னாடி ப்ரொபைல்ல இருந்த போட்டோவ ஞாபகப்படுத்த முடியுதா உங்களால?
ஆச்சரியமா இருக்கு.

கதிர் said...

//balli னு வெச்சிருந்தா சூப்பரா இருந்திருக்கும்

:))))))))//

வெச்சிருக்கலாம் சூப்பராவும் இருந்திருக்கலாம் ஆனா அது ஜனனிக்கு பிடிக்குமான்னு தெரில.

கோபி அண்ணன். :))


//ஒரு ரெண்டு வாரம் முன்ன பார்த்தபோது ஸ்டேடஸ் மெசேஜ்ல நீங்க போட்டு வச்சிருந்த இந்த கவிதை நினைவுக்கு வந்தது :))//

சந்தோஷமா இருக்கு.

http://urupudaathathu.blogspot.com/ said...

:-))))))))))

Unknown said...

//கேமரா மாடல் என்ன? எத்தன லென்ஸ் யூஸ் பண்ணிங்க? சப்ஜெக்ட், சூம், ஆங்கிள்
அப்பச்சர்னு ரப்ச்சர் பண்ண கூடாது//

ம்ஹீம் பண்ணமாட்டேன் அண்ணா..!! ;))

Unknown said...

//இந்த போட்டோ எல்லாமே என்னோட காணாம
போன மொபைலில் எடுத்தது.//

Same sweet...!! என் மொபைலும் காணாம போச்சு ..!! :(

Unknown said...

//இது எங்க வீட்டுப்பூனை. ரொம்ப நேரம் யோசிச்சபிறகு இதுக்கு பூனைன்னே பேர்
வெச்சிட்டென்.//

:)))))))))))))

எங்க வீட்லயும் பூனை இருக்கே..!! :)) ஆனா அது பேரு 'மியூ':)

Unknown said...

//என்னோட போட்டோ எடுக்கும் திறமையினால
"சேது எபெக்ட்" தெரியுது மத்தபடி நல்லா பேசினார்.//

:)))))))

Unknown said...

//பொண்ணுங்க நெல்லிக்கா//

அப்படினா என்ன அண்ணா??

Unknown said...

அண்ணா மொத்தத்துல பதிவு சூப்பர்..!! :)) ரொம்ப ரசிச்சு படிச்சேன்..!! :))