எல்லையற்ற அன்பு கொள்வோம்

Sunday, April 13, 2008

மொபைல் போன் தொலைந்து போனால்....

மொபைல் போன் தொலைந்து போவதால் உள்ள ஒரே நன்மை என்னவென்றால்
ஏண்டா மச்சான் போனே பண்ணலன்னு யாராச்சும் கேட்டால் மொபைல் தொலைஞ்சு
போய் நம்பர் காணாமா போச்சுடா மாப்ளன்னு சொல்லலாம். கடன்காரன், ஊர்க்காரன்
தூரத்து சொந்தம், தினமும் ஆபிஸ்லருந்து ஓசி போனில் ஒயிலாக பேசும் ஊழியர்கள்
இடமிருந்து கூட உபரியாக தப்பிக்கலாம்.

கடந்த வாரத்தில் ஒருநாள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது என் தலையணைக்கடியில்
இருந்த மொபைலை என் தூக்கம் கலையாமல் லவட்டிவிட்டார்கள். நான் கதவைப்
பூட்டாமல் தூங்கியதை எந்த உளவுத்துறையினர் அக்கொள்ளையர்களுக்கு தகவல்
கொடுத்தார்களோ தெரியவில்லை. விலைமதிப்புமிக்க பாவனா, நமீதா, இன்னபிற
திரை அழகிகளின் புகைப்படங்கள் தவறிவிட்டன. இளையராஜா பாடல்களும்
நானே பாடி பதிவு செய்த பாடல்களும் பொக்கிஷம் போல யாருக்கும் தெரியாமல்
பாதுகாத்து வைத்திருந்தேன் அத்தனையும் புஸ்.

காவல் நிலையத்தில் புகார் செய்ய போனபோது அங்கொரு கொடுமை சிங்கில் பீஸில்
ஆடியது. அங்கே இருந்த ஒரு போலீசுக்கு மருந்துகுப்பி அளவு கூட ஆங்கிலம்
தெரியவில்லை. எனக்கோ கட்டிப்போட்டு அடித்தால்கூட அரபி வராது. அக்கம்
பக்கத்தில் வார்த்தைகளை கடன் வாங்கி கூடவே சைகை நடனம் ஆடி அவர்களுக்கு
புரியவைத்தேன். போன் வாங்கியதற்கான ரசீது, சீரியல் எண், அடையாள அட்டை
எல்லாவற்றையும் கொடுக்க சொன்னார்கள். எதுவுமே இல்லாமல் வந்திருந்த எனக்கு
பேரதிர்ச்சி உடனே அறைக்குச் சென்று எடுத்து வருகிறேன் என்று வெளியே வந்தேன்.

என் நேரம் ஒரு டாக்சி கூட கிடைக்கவில்லை. மெதுவாக நடந்து செல்லும்போது
ஆப்பிரிக்கன் ஈஸ்டர்ன் தென்பட்டது. உள்ளே நுழைந்து இரண்டு புட்டிகள் வாங்கி
தொலைந்துபோனதை கொண்டாடிவிடலாம் என்று மனம் கணக்கு போட்ட நொடியில்
ஆவோ பாய் என்ற எனக்கு தெரிந்த இந்தி வார்த்தையில் ஒரு பாகிஸ்தானி டாக்சிகாரன்
அழைத்தான். போய் திரும்ப அழைத்து வர அவனுடன் இந்தியில் கதைத்து (ஆம் இந்தி)
அறை வந்தபோது ரசீது எங்கு வைத்தேன் என்பது மறந்துபோனது. கட்டிலையே புரட்டி
அடியில் இருந்த பேப்பரை எடுத்தால் ரசீதாக இருந்தது. மொபைலே கிடைத்த சந்தோஷம்
சீரியல் எண்ணும் அதிலேயே எழுதி இருந்தது.

மறுபடியும் அதே போலிஸ் ஸ்டேஷன். அவர்கள் கொடுத்த பாரத்தில் விடைகளை
நிரப்ப சொன்னார்கள். பேனா எடுத்து வரவில்லை. சூன்யமான முகத்துடன் அந்த
தாடி போலிசை பார்த்தேன். நம் ஊர்களிலாவது ஒருமீட்டர் செருப்பு தைக்கும் நூலில்
பேனாவை இறுக்கமாக கட்டி வைத்திருப்பார்கள். இங்கே அதுவும் இல்லை. பக்கத்தில்
நின்றிருந்த ஒரு சூடானியரிடம் கெஞ்சி வாங்கி நிரப்பி ரசீதின் நகல், அடையாள அட்டை நகல், எல்லாவற்றையும் இணைத்து கொடுத்தேன்.

இவ்வளவு சிரமத்துக்கு இடையில் கொடுத்தபோது அதை இடக்கையால் வாங்கி பிரித்து
கூட பார்க்காமல் ஓரமாக வைத்துவிட்டார் அந்த கனவான் இப்படியாகும் என்று தெரிந்து
இருந்தால் நானே புலனாய்வில் இறங்கி திருடனுக்கு வலை விரித்திருப்பேன். வெளியே
வந்து காவல் நிலையத்திற்கு பின்னால் இருந்த ஆப்பிரிக்கன் ஈஸ்டர்ன் கிளையினுள்
நுழையப்போனேன். அப்போதுதான் வேலை நேரம் முடிந்து கதவை அடைத்தார்கள்.
"ஐயா கருணையாக ஐந்து நிமிடத்தை தாருங்கள்" என்று என்று ஏலம் விட்டு படிப்படியாக
நான்கு, மூன்று, இரண்டு என்று கடைசியாக ஒருநிமிடம் கூட திறக்க முடியாது என்று
சொல்லி கதவை அடைத்து விட்டார் அந்த கறார் ஊழியர்.

தொலைந்து போனது கிடைக்கும் வரை தற்காலிகமாவது ஒரு சிம்கார்டு இருந்தால்
நல்லது என்று அதை வாங்க சென்றேன். அந்த மெகாமாலில் இதுவரை ஆங்கிலத்தில்
வந்திராத ஆங்கிலப் படங்கள் எல்லாம் விலைக்கு இருந்தன. அய்யா இது எல்லாம்
எந்த நூற்றாண்டில் வெளிவந்த படங்கள் என்று கேட்கலாம் போல இருந்தது.
இந்த பிலிப்பைன் தேசத்து பிகர்கள் பணம் எண்ணி கல்லாபெட்டியில் போடுவதற்கும்,
தொலைபேசிக்கு பதில் சொல்லவும் மட்டும் பிறந்தவர்களா என்ற சந்தேகம் அடிக்கடி
எனக்கு ஏற்படுவதுண்டு. கல்லாக்களில் நீக்கமற வெள்ளை நிற பிலிப்பினி பிகர்கள்
பொம்மைகள் போல அமர்ந்திருந்தன.

வயிறு பசித்தது. எங்காவது காரமாக உள்ளே தள்ளவேண்டும் போல இருந்தது. நேராக
தென்னிந்திய உணவு விடுதி நோக்கி சென்றேன். "இப்பதான் ரெடியாகிட்டு இருக்குங்க"
இட்லி தோசை வேணா சூடா கிடைக்கும் என்றார்கள். சரி எதாச்சும் கொடு என்றேன்.
போனில் பேசியபடியே ஒருவன் என் அருகில் உட்கார்ந்தான். புதிதாக வந்தவன் போல
ஊருக்கு போன் பண்ணி பிஸ்து காமித்துக் கொண்டிருந்தான் நடு நடுவே "ஆமா...
இல்லயா பின்ன.." என்று வேறு இந்தநேரத்தில் என் கையில் டுபாக்கி இருந்தால்
ரோட்டில் போன் பேசி செல்லும் அனைவர் வாயிலும் குறிபார்த்து சுடுவேன்.

போனை ஒரு வினாடி நிறுத்திவிட்டு "அண்ணே எனக்கு ஒரு ஆவூ" என்றான் அந்த
அண்ணாரும் "ஒண்ணே ஒன்னு போதுமா கண்ணு" என்று திருப்பி கேட்டார். இவன்
சைகையாலே பதில் அளித்தான். (இல்லயா பின்ன IST லைன் இல்லா) என்னால்
ஆர்வத்தை அடக்க முடியவில்லை போன் பேசிக்கொண்டிருந்தவனிடம் "ஏங்க ஆவூ"
என்றால் என்ன என்று கேட்டேன். ஆவூன்னா ஆனியன் ஊத்தாப்பம் என்ற தன் அரிய
சுருக்கு சொல்லை சொன்னார்.

"அப்ப சாதா வூத்தப்பத்த என்னன்னு சொல்விங்க? சாவூன்னா? என்று கேட்டேன். வேறு
இடம் பார்த்து உட்கார்ந்து கொண்டு ஆவூவை அவசரமாக சாப்பிட்டுவிட்டு வெளியேறினான்.

அறைக்கும் திரும்பும் வழியில் டாக்சியில் என் பக்கத்தில் இருந்தவர். என் மொபைல்
மாடல் போலவே வைத்திருந்தார். (Sony ericson k800i) அப்படியே புடுங்கிகிட்டு
கார்லருந்து குதிச்சிறலாமான்னு தோன்றியது. போனையே வெறித்து பார்க்க அவர்
பேண்டின் உள்பாக்கெட்டில் போட்டு பத்திரப்படுத்திவிட்டார்.

கடந்த ஒருவாரமாக எண்களை மொபைல் போனில் சேமிக்காமல் மனதில் மனனம்
செய்வது என்று முடிவுசெய்து சேமிக்காமல் விட்டுவிடுகிறேன். ஆனால் ஒன்றிரண்டு
தவிர மனனம் ஆக மாட்டேன் என்கிறது. தூங்கும்போது நிறைய எண்கள் கனவில்
வருகிறது, கார் நம்பர்கள் குறுக்கே வந்து குழப்பமளிக்கிறது, திடிரென்று என்
டெலிபோன் எக்ஸ்டென்சன் மறந்து போனது, உச்சகட்டமாக புதிதாக வாங்கிய எண்
என்னவென்று தெரியவில்லை. அலுவலக போனில் இருந்து 100 மைல் தள்ளி
இருந்த ஒருவருக்கு அழைத்து எண் உலாபேசி எண் என்னவென்று சொல்ல முடியுமா?
என்று கேட்டேன்.

"அண்ணே என்னண்ணே ஆச்சு? கவலபடாதிங்க எல்லாம் சரியாயிரும்..." நம்பர்
சொல்றேன் குறிச்சுக்கங்க என்று சொல்லி நம்பர் சொன்னார்.

சிறுவயதில் உறவுக்காரர்கள் வீட்டு டெலிபோன் எண் எல்லாம் டாண் டாண் என்று
சொல்வேன். மொபைல் வந்ததிலிருந்து மூளை என்ற வஸ்துவை உபயோகபடுத்தாமல்
விட்டதினால் துருப்பிடித்து விட்டது.என்
எதிரே
எண்களின்
குவியலாக உள்ளது
எந்த எண்ணிலும் என்
எண்கள் இல்லை எதிரில்
உள்ள கார் எண்ணின் கூட்டுத்தொகை
என் காதலி வீட்டு எண்ணை ஒத்திருக்கிறது.
எங்கெங்கு காணினும் எண்களடா தம்பி எண்களடா
எத்தனை கோடி எண்கள் வைத்தாய் எங்கள் இறைவா..??

இதுக்கு பேர்தான் படிக்கட்டு கவுஜை.

22 comments:

ஆயில்யன். said...

"தம்பி அண்ணே என்னண்ணே ஆச்சு? கவலபடாதிங்க எல்லாம் சரியாயிரும்

தம்பி said...

தலைப்பை வைத்து தொழில்நுட்ப குறிப்பாக இருக்கும் என்று நம்பி வந்து பல்பு வாங்கியவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.

ஆயில்யன். said...

படிக்கட்டு கவுஜ நல்லா இருக்கு :))

TBCD said...

ஏனுங்க தம்பிங்கண்ணா,

அந்த ஊர்லே கைப்பேசி காணாமப் போனா, அதே எண் சிம் அட்டை தரமாட்டாங்களா..

குறைந்தபட்சம் உங்க புது எண் மனப்பாடம் செய்யும் தொல்லை இல்லாமல் இருந்திருக்கும்மே.

நானும் சமீபத்தில் என் கைப்பேசியயை தொலைத்துவிட்டேன். அதனால உங்கள் துக்கத்தில் பங்கெடுத்துக்கிறேன். :(

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தம்பி said...

அதே நம்பர் கிடைக்கும் டிபிசிடி ஐயா
ஆனா சிம்கார்டு ஓனரோட ஒப்புதல் மற்றும் பாஸ்போர்ட் காப்பியுடன் தொலைந்து போனதற்கான அத்தாட்சியாக காவல்நிலையத்தின் புகார் படிவ நகலும் தரவேண்டும்.

வேற ஒருத்தர் பேர்ல இருக்கற சிம்மையே நான் சில வருஷங்களா உபயோகிக்கறதுனால இவ்வளவு சிக்கல். இதுக்கு நான் புதுசாவே வாங்கிறலாம். பழைய எண்ணை போலிசாரே தடை செய்துவிட்டதாக செய்தி மட்டும் வந்தது.

கோபிநாத் said...

:)))

சுல்தான் said...

என் தொந்தரவு தாங்காம போனை எனக்கு மட்டும் கட் பண்ணிட்டீங்களோவென்று நினைத்தேன். :))

ஐயா என்னுடைய 'அழைப்பு' பக்கத்தை சரி பண்ணச் சொல்லி கேட்டதற்கு, உங்கள் மூலம் டீச்சர் சரி செய்து தந்த, நல்லாயிருந்த 'சுல்தான்' பக்கத்தில் விளையாடிட்டீங்களேய்யா? :(((

கப்பி பய said...

:))

உமக்கும் வீடு புகுந்து ஆட்டைய போட்டுட்டாங்களா? இதெல்லாம் நமக்கெதிரா நடக்கற வெளிநாட்டு சதி!!

ILA(a)இளா said...

நானும் தான் எல்லா எண்ணையும் மனனம் செஞ்சு வெச்சு இருந்தேன், இந்த டப்பா கைக்கு வரும்வரைக்கும். இப்போ அதை நம்பியே பொழப்ப ஓட்ட வேண்டி இருக்கு :)

தம்பி said...

ஆறுதல்
அளித்த
ஆயில்யனுக்கு
ஆயிரம்
நன்றிகள் ரைமிங்கா வருது. :)

தம்பி said...

கோபி
அதிகம் சிரிக்காதே நண்பா உனக்கும் இது நேரலாம்.

சுல்தான்,
என்ன சொல்றிங்க... எல்லாமே நல்லாத்தான இருக்குது.

தம்பி said...

நண்பா கப்பி

உமக்கும் இதே சம்பவம் நடந்தை அறிந்து வருத்தமடைகிறேன். நீ சொல்வது போலவே இதில் சர்வதேச சதி அடங்கியிருப்பது ஐயந்திரிபற புலனாகிறது. இது போன்ற சம்பவங்கள்தான் சர்வதேச போலிசாரின் இருப்பையே சந்தேகத்துக்குள்ளாக்குகிறது. டிமிக்கி கொடுக்கும் கொள்ளையர்களை கிடுக்கிப் பிடி போட்டு பிடிக்க அனைத்து சர்வதேச புலனாய்வாளர்களும் நம் கேப்டனிடம் பயிற்சி எடுக்க வைக்கவேண்டும். அப்போதாவது தொடர்கொள்ளைகளுக்கு முற்றுப்புள்ளி ஏற்படுமா என்று பார்க்கலாம். இதுபற்றி ஐநா மாஜி தலைவர் ஷார்ஜா புகழ் கோபி அன்னனிடம் ஒரு புகாரை சமர்ப்பித்து விடவும்.

ஸ்ஸ்ஸப்பா கண்ண கட்டுது.

இளா...

மொட்டை மாடியை காலி பண்ணாமலே அது காலியாகிவிட்டது. அதை மீண்டும் திறம்பட வேலை செய்ய வைக்கவேண்டும்.

சிங். செயகுமார். said...

தொலைந்தது மொபைல் மட்டுமல்ல
கலைந்த தூக்கக்கத்தில்
இடக்கையால் எடுத்து அப்புறம் பேசுரேன்
அலப்பரை கொட்டும் அன்பர்களின்
அன்பும் சேர்ந்து

சிம் கார்டில் மட்டும்
சேர்த்து வைக்காமல்
சில நொடிகள் செலவழித்து
வெள்ளை நோட்டில் எழுதி வைத்தால்
காலம் உள்ளவரை நமீதாவும்
நயந்தாராவும் நம்மோடு
நிச்சயம்......

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கடைசி இரண்டு வரிகளை வெட்டி விட்டால், கவிதை நல்லாயிருக்கு :)

தம்பி said...

சிங் ஜெயக்குமார்

நன்றி

சுந்தர்,

அந்த ரெண்டு வரி இல்லன்னா படிக்கட்டு பாதில நிக்குமே! :)

ஆ.கோகுலன் said...

அடப்பாவமே! இது உங்களுக்கு பிரயோசனப்படுமா பாருங்கள்..

How to disable a STOLEN mobile phone?

To check your Mobile phone's serial number, key in the following digits on your phone:
* # 0 6 #
A 15 digit code will appear on the screen. This number is unique to your
handset. Write it down and keep it somewhere safe. when your phone get
stolen, you can phone your service provider and give them this code. They
will then be able to block your handset so even if the thief changes the
SIM card, your phone will be totally useless.
You probably won't get your phone back, but at least you know that whoever stole it can't use/sell it either.
If everybody does this, there would be no point in people stealing mobile phones.

ரசிகன் said...

//தம்பி said...

தலைப்பை வைத்து தொழில்நுட்ப குறிப்பாக இருக்கும் என்று நம்பி வந்து பல்பு வாங்கியவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.//

கஷட்டத்திலும் கலக்கலா போஸ்ட் போட்டிருக்குற தம்பிக்கு நன்றிகள்.

ஐய்யோ இந்த கஷ்டத்துக்கு சோக சிம்பல் போடனும்ல்ல..
உங்க மொபைல் தொலைஞ்சதுக்கு,அதில இருக்குற பாவனா போட்டோக்கள் தொலைஞ்சதுக்கு வருத்தங்கள்:(

களவாணி said...

ஒன்னுமே பிரியலீங்க, மூனு நாளா போன் தொலைஞ்ச கதையா கேட்டுகிட்டு இருக்கென், இதுவே ஒரு வியாதி மாதிரி தோணுது... :(

டுப்பாக்கியை எடுத்து அவிங்க வாயில மட்டும் இல்ல தல!!!, காதுலயும் போடணும் போல தோணும்... அப்படி என்னத்தான் கடலை வறுப்பானுவளோ??? (வயித்தெரிச்சலா இருக்கு "தனி ஒரு மனிதனுக்கு பிகர் இல்லையெனில், பிகர் வைத்திருப்பவனின் வாயில் சுட்டிடுவோம்")

களவாணி said...

நானும் ஒரு தடவை மொபைல தொலைச்சிருக்கேன், ஒரு ஆட்டோ-ல.

அந்த ஆட்டோ ட்ரைவரு ரொம்ப நல்லவரு, கொண்டு போய் போலிஸ் ஸ்டேஷன்ல கொடுத்திட்டு என் ஆப்பிஸ்-கு (மொபைல்ல பார்த்து) சொல்லிட்டாரு...

நான் வச்சிருந்தது (திருட மட்டும் இல்ல) கீழே கிடந்தா கூட எடுக்கத் தகுதி இல்லாத மொபைல் போல... ;)

வல்லிசிம்ஹன் said...

தம்பி,

கவிதையெல்லாம் ஜோர்தான். புது மொபைல் வாங்கியாச்சு இல்ல.
கொஞ்சம் புதசெவி.

இன்னொருத்தர் சொல்றபடி அந்தப் பதினைந்து எண்ணை எழுதிவைக்கவும்.
அதெப்படி ரூமுக்குள்ள வந்து திருடுவாங்க!!அநியாயமா இருக்கே.

இளைய கவி said...

//இனிமே உங்களூக்கு ஜென்மத்தில் போன் அமையாதுய்யா //

சுரேகா.. said...

அடடே..த்ஸ்ஸு..த்ஸ்ஸு..!

ஒண்ணு நீங்களா தொலைக்கிறீங்க!
இல்லன்னா
உங்களை தேடிவந்து தூக்கிக்கிட்டு போறாங்க!
உங்க ஜாதகக்கட்டத்தை பாருங்க!
எல்லா கட்டத்து கதவும் தொறந்து கிடக்கப்போவுது! இழுத்து மூடுங்க!

:)

மற்றபடி மொபைல் தொலைந்ததற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!