எல்லையற்ற அன்பு கொள்வோம்

Tuesday, August 05, 2008

குசேலன், நாஞ்சில், Two Women

படம் பாத்துக்கொண்டிருக்கும்போதே பக்கத்தில் இருந்தவர் சொன்னார். "எவ்வளவு
செலவானாலும் பரவாயில்ல பீவாசுவ போட்டுத்தள்ளிரணும்டா" என்று.
வேறு படத்தின் ஷோக்கள் திரையிட்டு நேரமானதாலும் குசேலன் மட்டும்தான் பார்க்க
முடியும் என்ற நிலை. கூட வந்திருந்த மலையாளத்து பையன் படம் முடிந்ததும்
காறி துப்பினாலும் துப்பி விடுவான் என்ற பயத்தினால் நான் அறைக்கே திரும்பிட
நினைத்திருந்தேன்.

பசுபதி வெயில் என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். இரண்டாவதாக
ஈ என்ற படத்தில் ஓரளவுக்கு நடித்திருப்பார் பிறகு மஜாவில் "ஸ்மார்ட் பாய்" என்று சொல்லும் இடங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் என்று சொல்ல முடியும். மற்ற
எல்லா படமும் குசேலன் மாதிரிதான்.

அரங்கில் நுழைந்தபோது எனக்கு முன்னரே நான்கு பேர் வந்துவிட்டிருந்தனர். பிறகு
எங்களைத்தவிர வேறு யாரும் வரவில்லை. இதற்கு முன்பு தொட்டி ஜெயா என்ற
படத்திற்கு நானும் என் நண்பனும் சென்றிருந்தபோது தியேட்டரில் ஒருவரும் இல்லை
எங்கள் இரண்டு பேருக்கு மட்டும் படத்தை ஓட்டினார்கள்.

வயதான காலத்தில் நயனின் இடைசுற்றி, உதடு வருடி, இடுப்பை ஆட்டி நடனம் ஆடும்
கோமாளித்தனமெல்லாம் சகிக்கவில்லை. பீவாசுவுக்கும் நடன இயக்குனருக்கும் மனித
வதை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை தருமளவுக்கு ரஜினியை கொடுமைபடுத்தி
இருக்கிறார்கள்.

இந்த வசனத்தை மம்முட்டி பேசுவதுபோல் படித்தால் அந்த கேரள நண்பன் சொன்னது
புரியும்.

"ரஜினின்ற மலைய நம்பி இந்த படத்த எடுக்கலடா நயந்தாராவோட ----- நம்பிதான்
எடுத்துருக்காங்க. ஏண்டா நல்ல நல்ல படத்த எல்லாம் இப்டி நாசம் பண்ணி வைக்கறிங்க"

எலேய் மொக்க படம்லாம் எப்படி எடுக்கறதுன்னு கத்து தர்றதும் ஒரு கலைதான் இத
போய் குத்தம் சொல்லக்கூடாது.

கேரள சினிமாலயே இப்பலாம் மொக்கைப்படம் நிறைய வர ஆரம்பிச்சுடுச்சி. அதிசயமா
வர்ற கதையுள்ள சினிமாவயும் நம்மாளுங்க கார்ப்பரேஷன் கக்கூஸ் மாதிரி ரீமேக்
பண்ணி கெடுத்துடறாங்க.

கத பறயும் போள் "மாம்புள்ளிக் காவில் மகரந்த" பாட்டில் அந்த ஹீரோயின் இடுப்பு
நளினமாக ஆடி அற்புதமான கலை வடிவில் உள்ள பாடலை இங்கே பான்பராக்
வாயுடன் நடனமாடி கெடுத்துள்ளனர். நயன், ரஜினி க்ளோசப் காட்சிகளில் யாருக்கு
லிப்ஸ்டிக் அதிகம் என்று கண்டுபிடிப்பதில் பெரிய போட்டியே நடந்தது. திரையில்
ராமராஜனுக்கு அடுத்தபடியாக ரஜினி லிப்ஸ்டிக் கம் க்ளோசப் காட்சிகளில் ரசிகர்களை
அதிகம் கொடுமைப்படுத்தியவர் சூப்பர் ஸ்டார்தான்.

பின்னிருக்கை நண்பர் சொன்னதுதான் எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல பீவாசுவ...
இங்க ஒருத்தர் சொல்லிருக்கறத பாருங்க.

சீனிவாசன் என்ற படைப்பாளிக்கு தமிழ்சினிமா செய்த மிகப்பெரும் அவமானம் குசேலன்.

---

விகடனில் எழுதும் எழுத்தாளர்களின் கட்டுரைத்தொடரினை ஒவ்வொருவாரமும் எதிர்
பார்த்து கிடக்கவே கூடாது. எப்போது அதை தூக்குவார்கள் என்றே தெரியாது. அதேபோல
குமுதமும். உதாரணத்திற்கு ஓ பக்கங்கள், அகம் புறம் போன்ற கட்டுரைத்தொடர்.
கடந்த மூன்று வாரங்களான நாஞ்சிலாரின் தீதும் நன்றும் என்ற தொடர் வந்துகொண்டு
இருக்கிறது. சமூகத்தின் மீது கோபம் கொள்ளவைக்கும் கட்டுரைகள் நாஞ்சிலுடையவை.
பின்வரும் வாரங்கள் பல தளங்களில் வாசகர்களை இட்டுச்செல்வார் என்று நம்பலாம்.
குறிப்பாக நாஞ்சில் நாட்டு சமையல் முறை. ஏற்கனவே வஞ்சகமில்லாமல் சாப்பிடும்
பழக்கம் உள்ளவனாக இருந்தபோதும் நாஞ்சிலின் எழுத்துக்கள் உணவின்மீது காதலை
ஏற்படுத்திவிட்டது. இதைப் படித்தால் உங்களுக்கே புரியும்

---


உலகிலேயே அழகிய பெண்கள் உள்ள நாடு ஈரான் என்று எவரோ/எங்கோ சொல்லி
கேட்டதாக ஞாபகம். அழகிய பெண்களைக் கண்டால் மட்டுமே இந்த வாக்கியங்கள்
நினைவில் வந்துபோகும். நானும் இரானில் உள்ள தீவிற்கு நான்கைந்து முறை
சென்றிருந்தும் ஒருமுறைகூட பேரழகுடைய பெண்களை காணமுடியவில்லை. ஆனால்
ஒருமுறை ஷாப்பிங் மால் சென்றபோது நிறைய பெண்கள் அணி அணியாக வந்து
இருந்தனர். முக்கால்வாசிபேர் முகத்தை மூடி இருந்தனர். மிகச்சிலர் திறந்து விட்ட
முகத்துடன் வந்தனர். ஓரளவுக்கு உண்மையாகவே அழகானவர்கள்தான். குறிப்பாக
சிவப்புமல்லாத/மாநிறமும் அல்லாத ஒருவகை பால் நிறமேனி அவர்களுக்கு. கடும்
வெயில் அடித்த அந்த பருவத்தில் ஒருவருக்கு கூட வியர்க்கவில்லை. எனக்கோ
வியர்த்துக் கொட்டியது.

படத்தின் முதல் காட்சியாக தன் தோழி ரோயாவுக்கு தொலைபேசி மருத்துவமனைக்கு
வரவைத்து ஃப்ரெஸ்தா தன் கதையை சொல்ல ஆரம்பிக்கிறாள். நீண்டாநாள் பிரிந்த
தன் தோழியிடம் கதையை சொல்லிமுடிக்கும் கடைசி நிமிடத்தில் அவள் கணவன்
இறக்கிறான். பதினைந்து வருடங்கள் பிரிந்திருந்த தன் தோழியிடன் கதையை
சொல்வதுதான் two women படம்.

கடந்த வாரத்தில் two Women என்ற இரானியப் படம் பார்க்கையில் இந்த நினைவுகள்
மீண்டு வந்து நிழலாடியது. வகுப்பில் எத்தனைபேர் இருந்தாலும் நன்றாக படிக்கும்
மாணவர் ஒருவர் மட்டுமே இருக்கமுடியும். அப்படிப்பட்ட மாணவி ஃபெரஸ்தா
அவளுக்கு ஒரு தோழி பெயர் ரோயா. இருவரும் இணைபிரியா தோழிகள்.
எல்லா திறமையிலும் நிகரற்றவள் ஃபெரஸ்தா அவளை ஒருவன் காதலிக்கிறான்.
நன்றாக படித்து வேலைக்குச் சென்று தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற
லட்சியத்தில் டெஹ்ரானில் உள்ள தன் மாமாவின் வீட்டில் தங்கி படிக்கும் அவள்
அவனின் காதலை நிராகரிக்கிறாள். உலகத்தில் எந்த மூலைக்கு சென்றாலும் நானே
உன் கணவன் என்று சொல்லும் அவனை ஒரு சந்தர்ப்பத்தில் அவமானப்படுத்தி
பொதுமாத்து வாங்க வைக்கிறாள்.

வன்மம் கொண்ட அவன் பழிதீர்க்க சந்தர்ப்பம் தேடுகிறான். தன் மாமாவின் மகனுடன்
தெருவில் நடந்து செல்கையில் அவள் முகத்தில் ஆசிட் வீசுகிறான் அது அவள் மேல்
படாமல் அத்தை மகன்மீது படுகிறது. கோபம் கொண்ட உறவினர் படித்தது போதும்
நீ கிளம்பு என்று சொல்ல தன் மீது எந்த தவறுமில்லாமல் தன் படிப்பு வீணாகிப்போவதை
எண்ணி கண்ணீருடன் தன் ஊருக்கு பயணமாகிறாள் ஃப்ரெஸ்தா. அங்கும் வருகிறான்
அந்த ஒருதலைக்காதலன். அவளைத் துரத்தும்போது இருவரும் ஒரு விபத்தில் சிக்கி
காவல் நிலையம் செல்ல நேர்கிறது. அஹ்மத் என்பவரின் உதவியிடன் ஃப்ரெஸ்தா
மீது குற்றமில்லை எனவும் விபத்துக்கு காரணமான அந்த ஒருதலைக்காதலன் முகம்மத்
பதினான்கு வருடம் சிறை செல்கிறான். திரும்பி வந்து உனைக்கொல்வேன் என்று சொல்கிறான்.

பண உதவி செய்த அஹ்மத் அவளை திருமணம் செய்ய முன்வருகிறான் அவளுக்கோ
இஷ்டமில்லை. இருவீட்டாரும் இணைந்து பேசி அவளின் ஒப்புதல் இல்லாமல் மணம்
நடைபெறுகிறது. திருமணமான முதல் நாளில் இருந்து அவளின் மேல் சந்தேகம் தினம்
தினம் நரகவேதனை. பேசினால், நடந்தால், பார்த்தால் கூட குற்றம் என்கிறான்.

இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. அப்பொழுதும் தினம் சந்தேகம் பேச்சுகள் என்று
போகிறது. ஒருகட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். சிறைக்குச் சென்ற
முஹம்மத் அதே சமயத்தில் வெளிவருகிறான்.

கொலைசெய்ய துரத்தும் முகம்மதுவிடம் இருந்து தப்பி ஓடுகிறாள். ஒரு முட்டுசந்தில்
மாட்டி இனிமேல் ஓடமுடியாது என்று சொல்லி அங்கேயே திரும்பி உட்காருகிறாள்.
அவன் கொல்லவருகிறான்.

கடைசிவரை நான் எனக்காக வாழவில்லை. வாழவிடவுமில்லை. என் லட்சியங்கள்
இரண்டு ஆண்களின் முன்னால் அர்த்தமற்றுவிட்டது. இனிமேல் வாழ்வதில் எனக்கு
ஆசையில்லை என்னைக்கொன்றுவிடு என்று அழுகிறாள் ப்ரெஸ்தா. அதேசமயம்
பின்னால் வரும் ப்ரெஸ்தாவின் கணவன் முகம்மதுவுடன் தன் மனைவி கள்ள
உறவு வைத்துள்ளதான தன் சந்தேகம் உறுதிபட்ட்டது என நம்பி முகம்மதை கொல்ல
முயற்சிக்க அங்கே மாறாக ப்ரெஸ்தாவின் கணவனுக்கு கத்திக்குத்து விழுகிறது.

பெண்ணின் கனவுகள், உணர்வுகள் எப்படி சமூக நிர்பந்தங்களால் அழிக்கப்படுகின்றன
என்பதை ஓவியம்போல சொல்லியிருக்கிறார் இயக்குனர். முக்கியமாக பெண்களின்
உணர்வுகள் தெளிவாக பதிவாக்கியிருக்கிறார் ஏனென்றால் இயக்குனரும் பெண்தான்.
எழுத்தாளரான தஹ்மின் மிலனியின் நாவலை அவரே இயக்கிய இந்தப்படம் இஸ்லாம்
சமூக பெண்களுக்கு நேரும் பிரச்சினைகளை பெண்களுக்கே உண்டான மென்மையுடன்
சொல்லியிருக்கிறது.

10 comments:

இராம்/Raam said...

/
"ரஜினின்ற மலைய நம்பி இந்த படத்த எடுக்கலடா நயந்தாராவோட ----- நம்பிதான்
எடுத்துருக்காங்க. //

எனக்கும் அப்பிடிதான் தோணுச்சு...

படம் பார்த்தப்போ 'ngongththaa' இந்த படத்துக்கு வந்ததுக்கு காலுலே கெடக்குற செருப்பை எடுத்து அடிச்சுக்கனுமின்னு தோணுச்சு... :(

ரஜினி ரசிகனா ரொம்பவே வருத்தவைச்ச படம் இது... :(

என்னத்த சொல்ல பீ.வாசு'வே..

ஜியா said...

நான் ஜிடாக்லையே எத்தன தடவ படிச்சு படிச்சு சொன்னேன்??? எங்க கேக்குறிய??

கோவை விஜய் said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

வெண்ணை(VENNAI) said...

உங்க வலைப்பக்கம் வருவது இதுதான் முதல் முறை ..........நன்னா சொன்னேல் போங்கோ ,,,,,,,,,,,,

உங்கள் நண்பன்(சரா) said...

கதிர்!
நான் இன்னும் இந்தப் படம் பார்க்கவில்லை! பதிவுகளைப் படித்ததால் படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் இல்லை!


//ரஜினி ரசிகனா ரொம்பவே வருத்தவைச்ச படம் இது... :(//

ஏலே! ராமு உனக்கு இது தேவைதான்...:)

//பெண்ணின் கனவுகள், உணர்வுகள் எப்படி சமூக நிர்பந்தங்களால் அழிக்கப்படுகின்றன
என்பதை ஓவியம்போல சொல்லியிருக்கிறார் இயக்குனர். //

படம் பற்றி நீங்களும் சிறப்பாக எழுதியுள்ளீர்கள்!


அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

கதிர்,welcome to the club. குசேலனால் விரக்தியடைந்த குழாத்துக்கு வருக! ஈரானிய திரைப்பட அறிமுகம் மிக அருமை. பார்க்க ஆவலாயிருக்கிறேன்.

கதிர் said...

ராம்

வயதுக்கு பொருந்தும் பாத்திரங்கள் நடிச்சா பரவால்ல. இன்னமும் ஜிகினா ட்ரஸ்சும், லிப்ஸ்டிக் உதடுமா நடிச்சிகிட்டு இருந்தா படம் ஊத்திகிட்டுதான் போகும்.

ஜியா
எவ்ளோ சொன்னாலும் கேக்கமாட்டங்கறாங்களே கூட வர்றவனுங்க.

கோவை விஜய்
கண்டிப்பா செய்வோம்.
உங்க ஆர்வத்துக்கு என் வணக்கம்.

வெண்ணை, :)
நல்ல பேரு. தொடர்ச்சியா படிச்சிங்கன்னா நல்லது.

சரா, சிவராமன்

நன்றி. வாய்ப்பு கிடைத்தால் படத்தினை பாருங்கள்.

ராஜ நடராஜன் said...

இன்றைக்கோ நாளைக்கோ படம் பார்க்கலாமா என யோசனை செய்வதற்குள் இங்கே படத்தை தூக்கிட்டாங்க:) அல்லது :( போடவான்னு சொல்லுங்க.

கொஞ்ச நாட்களாகவே ஈரானிய மொழியின் திரைப்படங்கள் பற்றி ஊடகங்கள் கூட விமர்சனம் செய்கிறது.ஆனால் பார்ப்பதற்குத்தான் சந்தர்ப்பம் இல்லை.இதெல்லாம் உங்களைப்போல் "எலைட்" களின் பார்வையில் மட்டுமே விழுகிறது.

இங்கே வாழும் ஈரானியர்கள் காசேதான் கடவுளப்பான்னு எல்லாருமே பொட்டிக்கடை வச்சு பீடி,சிகரெட்டுதான் விற்கிறார்கள்.கொஞ்சம் தரத்திற்கு ஈரானிய விரிப்புக்களான கார்பெட்கள் மட்டுமே.

என்னைப்பொறுத்தவரையில் சினிமா என்ற ஊடகம் ஈரானியர்களுக்கு இன்னும் தொலைதூரம் எனவே நினைக்கிறேன்.தன்னைத்தானே விலங்கிட்டுக் கொண்டு சாவியையும் தனது பாக்கெட்டுக்குள் மூடிவைத்துக் கொண்டால் என்ன செய்வது?

Unknown said...

two women நல்ல விமர்சனம்.

Gopi said...

குசேலன் பட விமர்சனம் படித்து விட்டு பி வாசு திருந்தப்போவது இல்லை. அதனால மற்றவர்களுக்கு தான் விண்ணப்பம் வைக்க முடியும் அவர் படம் எடுக்காம இருக்க.

விண்ணப்பங்களை இங்கே பார்கவும்
http://tamilkirukal.blogspot.com/2008/08/blog-post.html