எல்லையற்ற அன்பு கொள்வோம்

Friday, August 15, 2008

கருணையற்ற கோடை

நீளமான இந்த கோடையில்
குறைந்தபட்சமான குளிர்ந்த காற்று போதும்
உனக்காக ஒரு கவிதையினை எழுதிவிடுவேன்.
கொஞ்சம் நீர்த்துளிகள் வானத்திலிருந்து.
அல்லது
பாசாங்குகள் அற்ற மழலையின் சிரிப்பு.
அல்லது
பழுத்த இலை ஒன்று மென்காற்றை கிழித்துக்
கீழிறங்கும் காட்சி.
அல்லது
கண்கள் மூடிய சவத்தின் மவுனம்.
அல்லது
எதிர் வீட்டுப் பூனையின் ஆச்சர்யமான தலையுயர்த்தல்.
அல்லது
தென்னையோலையின் கடைசித்துளி மழைநீர்
குளத்தில் வீழ்ந்தெழும் அந்நொடி.
அல்லது
முதல் முட்டை இட்ட கோழியின் ஆசுவாசமான
கெக் கெக் கெகே... சப்தம்.
அல்லது
விணையின் நரம்பில் நகங்கீறி குருதி
தெறிக்கும் உச்சம்
இக்கடும் கோடையினை மதியிலகற்றவும்
முகமறியா உனக்காக அபூர்வான சொற்களை
கோர்க்கவும் சிலவற்றை நினைவுகொள்கிறேன்
தோழி.

8 comments:

anujanya said...

கதிர்,

அழகாக இருக்கிறது. அனைத்துமே துல்லிய தருணங்கள். வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

ஆடுமாடு said...

நல்லாயிருக்கு தம்பி.
இது தோழிக்கா... காதலிக்கா?

கதிர் said...

நன்றி அனுஜன்யா.

கதிர் said...

வாங்க ஆடுமாடு,

நான் எழுதுனவரைக்கும் தோழிக்கு எழுதறதா நினைச்சுதான் எழுதினேன்.

Anonymous said...

நல்லா இருக்கு கதிர்.

இன்னும் ஒரு மாசத்துல வானிலை சரி ஆயிடும்.கவலைப்படாதீங்க.


கதிர்.

Unknown said...

//பழுத்த இலை ஒன்று மென்காற்றை கிழித்துக்
கீழிறங்கும் காட்சி.
அல்லது
கண்கள் மூடிய சவத்தின் மவுனம்.//

நல்லாருக்குங்க.

கப்பி | Kappi said...

அருமை!

ஜியா said...

Vaaippe illa... kalakkuthu