எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, May 26, 2008

அண்ணாச்சியும் மீனாவும் பின்ன சிலதும்

புற்றுநோய்க்கு எதிராக அபுதாபி தமிழ்ச்சங்கத்தின் மகளிர்பிரிவு மாபெரும் விழிப்புணர்ச்சி
விழாவினை அபுதாபியில் நடத்தினார்கள். விழிப்புணர்ச்சியை பரவலாக்கும் எண்ணத்தில்
நடிகை மீனாவினைக் கொண்டு புற்றுநோய் குறித்த புத்தகத்தையும் வெளியிட்டார்கள்.
சிறப்பு நிகழ்ச்சியாக கலந்துகொண்ட மீனாவுக்கு கலைத்தொழிலில் சிறப்பாக செயல்
பட்டமைக்காகவும் விருது வழங்கி கவுரவித்தார்கள்.

"டேய் ஒரு விழா இருக்கு வர்றியாடே" ன்னு அண்ணாச்சி போனவாரம் கேட்டார்.

வெள்ளிக்கிழமை கடவுளே பாலைவனத்துல வந்து வேலை செய்யுன்னு சொன்னாலும்
நம்ம செய்யறது கிடையாது. இருந்தாலும் பஸ், டாக்சி புடிச்சி ஒரு இடத்துலருந்து இன்னொரு இடத்துக்கு போறதும் ஒரு வேலைதானன்னு சோம்பேறித்தனம் மேலிட்டதால் "எத்தனை மணிக்கு விழா நடத்துறாங்க" என்றேன்.

சாயங்கலாம்தாண்டேன்னு சொன்னார். பெருசா வெட்டி முறிக்கற வேலை
இல்லன்னாலும் பில்டப் விடலன்னா நம்பவே மாட்டாங்கல்ல. விழாவுக்கு போக
முக்கியமான காரணியாக இருந்தது. அமீதா ஆண்ட்டி. (அரங்கத்தில் உள்ளவர்கள்
நமீதா என்றே அழைத்தனர்.)

ஒரு இடத்திற்கு தெளிவாக செல்லவேண்டும் என்றால் அண்ணாச்சியிடம் வழி
கேட்கவோ/சொல்லவோ கூடாது என்பதை எனக்கு இரண்டாவது முறையாக புரிய
வைத்தார்.

மறுபடியும் சரியான இடத்தை டாக்சி மூலம் அடைந்தேன். அரங்கின் வாயிலில்
காத்திருக்க அண்ணாச்சி வந்து உள்ளே கூட்டிப்போனார். நடிகைகள் ஒப்பனை இடும்
அறைக்கு நேராக அழைத்துப்போனார். அங்கே அமீதா வர்ணனை ஒத்திகை பார்த்துக்
கொண்டிருந்தார். இங்கே ஒன்றைக் குறிப்பிட்டே வேண்டும்.

அமீதாவும் அண்ணாச்சியும் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாக படித்ததுபோல
பேசிக்கொண்டிருந்தனர். நடுநடுவே மேஜர் கரகர சுந்தர்ராஜனின் புத்திரர் கரகர கவுதம்
வந்து போய்க்கொண்டிருந்தார். விழா ஏற்பாடுகளால் அண்ணாச்சி இரண்டு நாளாக
சாப்பிடவில்லை போலும். அதை அவர் வெளிப்படுத்தியபோது சரவணபவன் அளவு
சாப்பாடு ஒன்றை அமீதா எடுத்து நீட்ட அவர் ஐந்தே வினாடிகளில் அனைத்தையும்
காலிபண்ணினார். பக்கத்தில் உட்கார்ந்திருந்த என்னை அப்பளம் சாப்பிடக்கூட
சொல்லவில்லை.

பின்பு பாட்டுக்குப் பாட்டு புகழ் B.H.அப்துல் ஹமீத் அறைக்கு அழைத்துச்சென்றார்.
மைக்கில் பேசுவதை விட என்ன அழகான குரல்வளம் அவருக்கு. அவரிடம்
வழக்கம்போல என்னைக்காட்டி இவர்தான் கவிஞர் கம் எழுத்தாளர் தம்பிகதிர்
என்று அறிமுக்கப்படுத்தி கொலைவெறியை தீர்த்துக்கொண்டார்.

"கவிதையெல்லாம் இயற்றுவீர்களா கதிர்"? என்று B.H.அப்துல் ஹமீத் என்னைப்பார்த்து கேட்டதும் "ங்கே" என்று முழித்து இல்லிங்க சார் என்று பதில் அளித்தேன்.
பிறகு வாயைத் திறக்கவேயில்லை.

சிறப்பு விருந்தினர்கள் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் ஒவ்வொருவராக மேடை ஏறி
அமர்ந்தனர். மீனாவின் அருகில் ஒரு அரபி உட்கார்ந்தவுடன் அரங்கமே அதிரும்படி
ஓ போட்டனர். மீனா புத்தகம் வெளியிட ஒரு ஒரு அரபி பெற்றுக்கொண்டார்.

அதற்கு முன்னதாக ஒருநூறு குழந்தைகள் பல்வேறு வேடங்களில் பல்வேறு பாடல்கள்
ஒன்றன்பின் ஒன்றாக ஒலிக்க நடனமாடினார்கள்.

பின்னர் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் நடுவராக அண்ணாச்சி அமர
மேலும் இருபெண்மணிகள் அமர்ந்தனர்.

சுவாரசியமாகவே இருந்தது. மார்கழி மாத கச்சேரிகளில் முன் வரிசை ரிட்டையர்டு
பெருசுகளுக்கு இணையாக தாளம்போட்டபடி பாடல்களை ரசித்தார் அண்ணாச்சி.
பழைய படத்தின் பாடல் பாடி முடிக்கும்போதெல்லாம் பாடல் இடம்பெற்ற படத்தின்
பெயர் மற்றும் இசையமைப்பாளர், பாடியவர் என்று அனைத்து தகவல்களையும்
திரு.அப்துல் கூறும்போது ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. மேம்ப்பட்ட
தரவுத்தள சில்லுகளை மூளையில் பதித்திருப்பார் என்று நினைக்கிறேன்.

சிறப்பாக பாடிய பெண்ணுக்கு முதல் பரிசளித்தனர். சிறந்த பாடல்களை தேர்வுசெய்த
அவர் சிறந்த குரலையும் வெளிப்படுத்தினார். மறக்காமல் அவரை சந்தித்து
பாராட்டினோம்.

நடுவராக பங்கேற்ற அண்ணாச்சிக்கு மீனா நினைவுக்கோப்பை வழங்கினார். அதை
பெறும்போது "உங்களுக்கு இனிமையான குரல் இயற்கையாகவே உள்ளது" என்று
மீனா சொன்னாராம். எங்கள் காதுகள்தான் அதைக்கேட்க கொடுத்து வைக்கவில்லை.

பிறகு ராஜ், விஜய், சன், கலைஞர் தொலைக்காட்சிகளில் பெண்களை பிழிந்து
நடிக்கும் நடிக நடிகையர் நடனம் ஆரம்பித்தது. இங்கு ஒன்றைக் குறிப்பிட்டே
ஆகவேண்டும். பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியின்போது அற்புதமான வரிகளைக்
கொண்ட பாடல்களை பாடும்போதெல்லாம் மகிழ்ந்து பாராட்டிய அப்துல் அவர்கள்
தற்போது வெளிவரும் பாடல்களின் வார்த்தைகளையும் ஒரு பிடி பிடித்தார்.
வாடி, வாடா, நாயே, பிசாசு, போன்ற வார்த்தைகள் இடம்பெறும் பாடல்தான்
ரசிக்கப்படுவது வேதனையளிக்கிறது என்றார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும்

ஏ ஆத்தா ரீமிக்ஸ், வாடி கப்பக்கெழங்கு, லூசுப்பொண்ணு, போன்ற புகழ்பெற்ற
பாடல்களுக்கு சின்னத்திரை சீக்காளிகள் நடனம் ஆடினார்கள்.ஆடி முடிந்ததும் ரசிகர்கள்
ஓடோடி வந்து ராஜ்காந்த், டவுசர்காந்த், விருச்சகாந்த் முதலான ஆட்களிடம்
ஆட்டோகிராப், போட்டோகிராப் என்று அவர்களை மகிழ்வித்தனர். பிறகு அப்துல்
அவர்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.




அண்ணாச்சி காரில் (சொந்தக்கார்) நான், B.H, ஜீவராஜ் என்ற இசையமைப்பாளர்
(கின்னஸ் என்ற படத்துக்கு இசையமைக்கிறாராம்) வந்தோம்.

மகாராஜாவின் ரயில்வண்டி, மரப்பசு, நாளை மற்றும் ஒரு நாளே, யூமா வாசுகியின்
ரத்த உறவு போன்ற புத்தகங்களை பரிசளித்தார்.

இனிமையாக சென்றது வெள்ளிக்கிழமையின் மாலை.

***

குருவியின் மகத்துவம் அறிய குறுந்தகடு சொல்லி பலநாள் கழித்து கிடைத்தது.
பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு அன்பர் அறைக்குள் வந்தார். தான் குருவி
படம் நேற்று திரையரங்கில் பார்த்ததாகவும் அருமையான படம் என்றார்.
அப்படியா என்று ஆச்சரியப்பட்டு குருவியை பார்த்துக்கொண்டிருந்தேன். அவரும்
பார்த்துக்கொண்டிருந்தார். பத்துநிமிடம் கழித்து இது என்ன புதுபடமா என்று கேட்டு
என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தார்.

***

எலக்கிய பில்டப் கொடுக்க எவ்வளவு சிரமப்பட்டும் எவரும் என்னை எலக்கியவாதி
என்று ஒத்துக்கொள்ளவில்லை. கட்டக்கடைசியாக அபிஅப்பா மட்டும் என்னை
எலக்கியவாதி என்று சொல்லி எலக்கிய கலாய்ச்சல் பதிவுபோட்டார். அந்த பதிவு
எழுத கழிவரையில் அரைமணிக்கும் மேலாக உட்கார்ந்துகொண்டு யோசித்ததாக
கூறினார். ஏன் கழிவறையில் உட்கார்ந்துகொண்டு எழுதவேண்டும் என்று கேட்டபோது
அதிஉன்னதமான, அவருக்கே உரிய அதிபுத்திசாலித்தனத்துடான் பதிலளித்தார்.
அதாவது புனைவு எழுத உலகில் கழிவறையை விட சிறந்த இடம் வேறு எதுவும்
இல்லை என்று சொன்னார்.

ஏன் அய்யா இப்படி சொல்கிறீர் என்று கேட்டால். அது அப்படித்தான் எலக்கியவாதின்னா
டாஸ்மாக்ல சரக்கடித்துவிட்டு சண்டை போடணும், எவனையாச்சும் திட்டனும்
கெட்ட வார்த்தைல நாவல் எழுதணும் என்று அடுக்கிக்கொண்டே சென்றார். எனக்கு
டவுசர் கிழிந்தது, தாவூ தீர்ந்தது. இவ்வளவு சிறப்பான அறிவைக்கொண்டே அவர்
கழிவறையிலேயே குடியிருந்து மேலும் மேலும் புனைவு எழுத என்னாலான உதவியை
செய்யவேண்டும். அவருடைய தாகத்தை தீர்க்கவேண்டும்.

***

பை த பை ப்ளைட்டை மிஸ் பண்ணாமல் அய்யனார் அமீரக கரையோரம் வந்து
சேர்ந்துவிட்டார் என்பதை அதிர்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

ட்ரீட்டு எப்பய்யா?

*விழா தொடர்பான புகைப்படங்கள் நாளை வெளியிடப்படும்.

21 comments:

Anonymous said...

//எலக்கிய பில்டப் கொடுக்க எவ்வளவு சிரமப்பட்டும் எவரும் என்னை எலக்கியவாதி
என்று ஒத்துக்கொள்ளவில்லை.//

பில்டப்பு கொடுக்குறது நல்லாவே தெரியுது தம்பி. நீர் மட்டுமில்லே, இன்னும் சிலரும் இதுமாதிரி இயல்பை விட்டு எலக்கியவாதி பாவனையில் அலைஞ்சிக்கிட்டு இருக்காங்க.

பாவனையெல்லாம் ரொம்ப நாளைக்கு பண்ணமுடியாது தம்பி. ஒரிஜினல் தான் என்னிக்கே நிக்கும்.

கதிர் said...

//பாவனையெல்லாம் ரொம்ப நாளைக்கு பண்ணமுடியாது தம்பி. ஒரிஜினல் தான் என்னிக்கே நிக்கும்.//

அனானி தீர்க்கதரிசிக்கு நன்றி.

Ayyanar Viswanath said...

மீனா அண்ணாச்சி புகைப்படம் இடாமைக்கு வன்மையான எனது கண்டனங்கள்,அனானி தீர்க்கதரிசிகளை எதிர்காலத்திலாவது டென்சனாக்காமல் இருக்க முயற்சிக்கவும்..

Anonymous said...

சவத்து மூதி

உலகமே தனது மதுரக்குரலால் அறிந்துவைத்திருக்கும் BHஅப்துல் ஹமீது
அவரக்ளை ஷாகுல் ஹமீது என்று அரைகுறையாக எழுதியிருப்பதிலிருந்தே தெரியவில்லையா உன் எளக்கியவாதித்தனம் - அதான்யா அரைலூசுத்தனம்னு சொல்ல வந்தேன்

கதிர் said...

அண்ணாச்சி

அவ்வ்வ்வ்... மன்னிக்கணும்.
கண்ணு தெரியாம நடந்துடுச்சு இந்த தப்பு. அதுக்காக எலக்கியவாதி இல்லன்னு சொன்னா எப்படி?முன்னாடி வந்த தீர்க்கதரிசியோ, அய்யனாரோ இத கண்டுபிடிச்சு சொல்லிருந்தா திட்டாவது மிச்சமாயிருக்கும்.

இராம்/Raam said...

:))

Anonymous said...

லே தம்பி,

நாளை மற்றொரு நாளாக இருக்க வேண்டுமென்றால் நமக்கிடையே ரத்த உறவு தொடர வேண்டுமென்றால் வாங்கிய் புத்தகங்களை மரப்பசு மாதிரி வாசித்துவிட்டு திருப்பித் தரணும். இல்லேன்னா மகனே, மகராஜா ரயில் வண்டி ஏத்தியே உன்னைக் காலி பண்ணிடுவாங்க. தெரிஞ்சுதா? பரிசு கொடுக்குறாங்களாம்லா பரிசு?

Anonymous said...

ithu abudhabi nigazhchi aagipponathal wara mudiyamal poi wittathai enni warutham.ungal pathivukku nanri!//பை த பை ப்ளைட்டை மிஸ் பண்ணாமல் அய்யனார் அமீரக கரையோரம் வந்து
சேர்ந்துவிட்டார் என்பதை அதிர்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்//:)

கதிர் said...

அண்ணாச்சி.
மானே தேனே போட்டு என்னைய வாழ்த்தி பதிவு போடுறான்னு சொல்லிட்டு பின்னாடியே வந்து திட்டுனா என்ன அர்த்தம்???

ராம்!
என்னய்யா வெற்றிச்சிரிப்பு மாதிரி இருக்கு??

கோபிநாத் said...

எல்லோரும் நல்லாயிருக்கனும் சாமி...;)))

குசும்பன் said...

//மீனாவின் அருகில் ஒரு அரபி உட்கார்ந்தவுடன் அரங்கமே அதிரும்படி
ஓ போட்டனர்.//

அண்ணாச்சி இதுக்குதான் அரபி டிரஸ் எங்கயாவது வாடகைக்கு கிடைக்குமா என்று என்னிடம் கேட்டீங்களா?

குசும்பன் said...

//பின்னர் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் நடுவராக அண்ணாச்சி அமர
மேலும் இருபெண்மணிகள் அமர்ந்தனர்//

அண்ணாச்சி எங்க போனாலும் உங்களுக்கு மச்சம் தான் போல!

குசும்பன் said...

//பின்னர் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் நடுவராக அண்ணாச்சி அமர
மேலும் இருபெண்மணிகள் அமர்ந்தனர்//

அண்ணாச்சி எங்க போனாலும் உங்களுக்கு மச்சம் தான் போல!நடுவராக அமர்ந்ததுக்கு சொன்னேன்!!!

குசும்பன் said...

///ஒரு இடத்திற்கு தெளிவாக செல்லவேண்டும் என்றால் அண்ணாச்சியிடம் வழி
கேட்கவோ/சொல்லவோ கூடாது என்பதை எனக்கு இரண்டாவது முறையாக புரிய
வைத்தார்.///

வெள்ளி கிழமை என்பதால் நீ ”தெளிஞ்சு” வரவேண்டும் என்பதற்காக நாலு இடம் உன்னை அலையவிட்டு இருப்பார்டே!!!

குசும்பன் said...

//"உங்களுக்கு இனிமையான குரல் இயற்கையாகவே உள்ளது" என்று
மீனா சொன்னாராம். //

அண்ணாசி காதில் மீனா சொன்ன கிசு கிசு கிசுவா? ஒருத்தரை புகழ்ந்தா உங்களுக்கு புடிக்காதே!!! உன்னை போய் அழைச்சுக்கிட்டு போனார் பாரு அவரை சொல்லனும்

குசும்பன் said...

//அய்யனார் said...
மீனா அண்ணாச்சி புகைப்படம் இடாமைக்கு வன்மையான எனது கண்டனங்கள்//

மீனா அண்ணாச்சி என்று சொல்லி அண்ணாச்சியை மீனாவுக்கு அண்ணன் ஆக்கிய தெய்வகுழந்தை அய்யனார் வாழ்க வாழ்க

குசும்பன் said...

//வெள்ளிக்கிழமை கடவுளே பாலைவனத்துல வந்து வேலை செய்யுன்னு சொன்னாலும்
நம்ம செய்யறது கிடையாது.///


மத்த நாள்களில் அப்படியே செஞ்சுட்டாலும்...அடங்கு அடங்கு.

குசும்பன் said...

//அமீதா எடுத்து நீட்ட அவர் ஐந்தே வினாடிகளில் அனைத்தையும்
காலிபண்ணினார். பக்கத்தில் உட்கார்ந்திருந்த என்னை அப்பளம் சாப்பிடக்கூட சொல்லவில்லை.//

அமீதா பக்கத்தில் இருக்கும் பொழுது உன் நினைப்பு எப்படிய்யா வரும்?

M.Rishan Shareef said...

ஏனுங்..விழா பத்தி எழுதீருக்கீங்..அந்த மீனாப் பொண்ணு,நம்ம அண்ணாச்சி போட்டோவும் போடலாமுங்களே?ஏன் போடலைங்?

மீனாப் பொண்ணுக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ப நாளா கண்ணாலத்துக்கு மாப்ள பார்க்குறகள்ல..அந்த பி.எச்.ஸாருக்கு பக்கத்துல நிக்குறவர் பொருத்தமா இருப்பார்ல..ஆராவது எடுத்துச் சொல்லலாமுல்ல..

ஜி said...

//மேம்ப்பட்ட
தரவுத்தள சில்லுகளை//

apdiina???

innum photos varalaiye???

M0HAM3D said...

அருமை
http://tamilitwep.blogspot.com/