எல்லையற்ற அன்பு கொள்வோம்

Sunday, May 18, 2008

மொக்கை ரிட்டர்ன்ஸ்

நீண்ட நாட்களுக்குப் பிறகு கதையுள்ள தமிழ்ப்படத்தை பார்த்த திருப்தி. வடிவேலு,
சில பாடல்கள், வசனங்கள் தவிர்த்திருந்தால் சிறந்த படமாக இருந்திருக்கும்.
சினிமாவுக்கென்றே பல இயக்குனர்கள் சவுகார்பேட்டை சேட்டுகளிடமிருந்து கடன்
வாங்கி வந்து வைத்துக்கொள்வார்கள். நா சுலுக்கெடுத்துக்கொள்ளும் வகையில்
பெயர்கள் இருக்கும் அவர்களைப் போல் அல்லாம் மாரிமுத்து என்ற தன் பெயருடன்
எதையும் சேர்க்காமல் தன் பெயரை வெளியிட்ட இயக்குனருக்கு என் வாழ்த்துக்கள்.

ஒரு கவிதையே படத்தின் மையக்கருவாக இருந்தது பலரை கவர்ந்திருக்கும். ஒரே
எழுத்துக்களுடன் ஒரே வார்த்தைகளில் இருவேறு நபர்கள் எழுதுவதென்பது சாத்தியம்
இல்லை எனினும் அதையும் மீறி கதைசொல்லி இருக்கிறார் மாரிமுத்து. படம்
முழுக்க பச்சையை அள்ளித் தெளித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். என்னைப் போன்ற
பாலைவன ஆசாமிகளுக்கு குளிர்ச்சியாக இருந்தது. நீண்ட காலமாக எனக்கு ஒரு
சந்தேகம் வந்துகொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டுப் பெண்களுக்கு தமிழ்சினிமாவில்
நடிக்கும் தகுதியே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறதா? இல்லை அழகான பெண்கள்
யாரும் இல்லையா? எல்லா படத்திலும் வெளிமாநில பெண்கள் நடித்துக்கொண்டேஏஏ
இருக்கிறார்கள். இது சலிப்பை ஏற்படுத்தும் விதமாக இல்லை என்றாலும் இங்கே
யாருமே இல்லையா என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டே இருக்கிறது.

உதாரணத்திற்கு இப்போது தயாரிப்பில் இருக்கும் பல படங்களை எடுத்துக்
கொள்ளுங்கள், மலபார் மால்களும், மும்பை மெகா மால்களுமாக இருக்கிறார்கள்.
தமிழில் ஒரு பெட்டிக்கடை கூட இல்லாமல் தவிக்கிறது கோலிவுட். கடைசியா
நான் பார்த்த தமிழ் நடிகை விஜயலட்சுமி என்று நினைக்கிறேன்.

கதாநாயகி அறிமுகப்பாடல் (அவரது தோற்றத்துக்கு சற்றும் பொருந்தாத வேக நடன
அமைப்புகள்)வடிவேலு நகைச்சுவை (யார்கிட்டயாச்சும் அடி வாங்கறமாதிரி காமெடிய
எவண்டா கண்டுபிடிச்சது?) நீங்களாக படம் அருமை.

படத்தின் இறுதியில் ஊர்மக்கள் திரண்டு அல்லது குடும்பமே திரண்டு காதலர்களை
ஒன்று சேர்ப்பதாக முடிக்காமல் விட்டது புதுமை.

குருவிகள் பருந்து வேகத்தில் பறக்கும் ஊரில் இவை ஓடாதது ஆச்சரியம்தான்.

----
சமீபத்தில் தாயகத்தில் இரூந்து திரும்பிய அபிஅப்பாவை போனில் பிடிப்பது மிகவும்
சிரமமாக இருந்தது. பிடித்தபோது ஏன் அழைப்பை ஏற்கவில்லை என்று காரணம்
கேட்டேன். தான் பயன்படுத்தும் மொபைல் உலகத்திலேயே ஒன்றுதான் தயாரிக்கப்
பட்டதாகவும் அதனை இயக்குவதில் உள்ள தொழில்நுட்ப கோளாறுதான் அழைப்பை
எடுக்க முடியாமல் போய்விட்டது என்றும் கூறினார். அந்த அதிசய மொபைலை
வாழ்நாள் முடிவிற்குள் நானும் காணவேண்டும். நோகியா தவிர்த்து வேறு போனை
உபயோகிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்ற என் எண்ணத்தை அவர் செயல்படுத்தி
வருகிறார் என்பதே சந்தோஷம்.

கடைசியாக அவர் பாவிக்கும் வகையை அறிந்துகொள்வதில் அதீத ஆர்வத்தில்
கேட்டே விட்டேன். ஓட்டூ என்றார். மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.
ராஸலீலா அவரிடம் உள்ளதே!
-----

ஆங்கிலத்திலும் மொக்கைப்படங்கள் வரத்தான் செய்கின்றன நாம்தான் பார்க்கவில்லை
போலா. அனானி தியாகு என்று அமீரக பதிவர்களால் அழைக்கப்படும் நண்பர் அபுதாபி
வந்திருந்தார். சினிமா போகலாம் என்று முடிவானது. குசேலன் பார்க்கும்முன் "கத
பறயும் போள்" பார்க்கவேண்டும் என்ற என் ஆசையை தீர்க்கலாம் என்றால் அதற்கு
முன் அந்த படத்தை தூக்கி விட்டு குருவியை ஓடவிட்டார்கள். அந்த படத்திற்கு
டிக்கெட் கிடைக்காது என்று தெரியும். கிடைத்தாலும் அதை ஏன் பார்க்கவேண்டும்.
பிறகு கப்பியை போல பதிவெழுத வேண்டும். எதற்கு வீண் நமைச்சல்.
எட்டு திரையரங்குகள் கொண்ட அந்த மாலில் சுற்றிக்கொண்டிருக்கும்போது பல
நாட்டு பிகர்களை தரிசிக்கும் வாய்ப்புகிட்டியது. நண்பர் அயர்ன்மேன் செல்லலாம்
என்று சொன்னார் "என்னங்க நீங்க அதெல்லாம் குழந்தைகளுக்காக எடுக்கற படம்.
நாமல்லாம் நல்ல தரமான படம் பாக்கணும் என்று அங்கே காட்சிக்கு இருந்த
போஸ்டர்களிலே நீளமான தலைப்புள்ள படமாக தேர்வு செய்து அதற்கு போலாம்
என்றேன். அரைமனதுடன் சென்றோம்.

Before the Devil Knows You're Dead

அண்ணன் தம்பிகள் தங்களது சொந்த அப்பாவின் தங்க வைர நகைகள் அடங்கிய
கடையை கொள்ளை அடிக்க திட்டம் போடுகிறார்கள். செயல்படுத்தும்போது
எதிர்பாராத விதமாக அம்மா கொல்லப்படுகிறாள். பிறகு உண்மை வெளிவந்து
அப்பா அவர்களை கொல்கிறார். படம் சுமாருக்கு படுபாதாளத்தின் அடியில்
இருந்தது. இந்த படத்திற்கு எதற்கு நிறைய மதிப்பெண்கள் கொடுத்திருக்கிறார்கள்
என்று தெரியவில்லை. குடும்பத்தை நடத்துவதற்கே சிரமப்படும் ஹாலிவுட்
கதாநாயகனை திரையில் காண்பித்ததை விட என்ன வித்தியாசம் உள்ளது
இந்த படத்தில்? பார்த்தவர்கள் விளக்கலாம்.
----

தொடர்ச்சியாக எனது பதிவுகளை வாசிக்கும் அவலநிலைக்கு உள்ளான ஒருவர்
என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். சந்தித்தேன்.

குருவி
சிவாஜி
அந்நியன் போன்ற படங்கள் வணிக படங்கள். அவற்றை ஏன் நல்ல படம் இல்லை
என்று வலையில் பரப்புகிறார்கள் என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அவையும் சிறந்த படங்கள் என்று ஆணித்தரமாக வாதாடினார். ஷங்கரைப்போல
விஷயஞானம் உள்ளவர் போல!

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எப்படி பத்மபூஷன் விருது வாங்குவது
என்று கேட்டார். திரு திருவென்று விழித்தேன். எதாவது அரசியல் கட்சிக்கு
கட்சி நிதின்ற பேர்ல சிலபல கோடிகள கொடுங்க என்று சொல்லி சமாளித்தேன்.
அவர் வேலை செய்யும் நிறுவனத்திற்கு சொந்தக்காரர் சமீபத்தில் வாங்கி இருந்தாராம்.
இவருக்கும் ஆவல் வந்துவிட்டது போல. தவறில்லை கடின உழைப்பு இருந்தால்
கண்டிப்பாக வாங்கிவிடலாம் நண்பரே!

அருமையான காப்பி கொடுத்தார். உடம்பில் பச்சைக்குத்துதல், பேஷன் டிசைன்
பத்மபூஷன், வணிகசினிமா பத்தியெல்லாம் நிறைய எழுதுங்க. சும்மா எல்லாரும்
எழுதற மாதிரி எழுதிகிட்டு இருக்காதிங்க என்று அறிவுரை கூறினார். இதற்காகத்தான்
இவ்வளவு காலம் காத்திருந்தேன். வெறுமனே புத்தகங்கள் பற்றியும், உலகசினிமா
பற்றியும், நாவல்கள் பற்றியும் எழுதாமல் உபயோகமாக எழுதச்சொன்னார்.
உள்ளூர் சினிமாவ மொதல்ல கவனிங்க அப்புறம் உலகசினிமா போகலாம் என்றார்.
அறிவுரைக்கு தன்யனானேன் நண்பரே!

13 comments:

வெட்டிப்பயல் said...

எலேய்,
முதல்ல படத்து பேரை சொல்லுப்பா...
படத்து பேரே சொல்லாம நல்ல படம்னு முடிச்சிட்ட...

கப்பி | Kappi said...

மொத படத்தோட பேரை கடைசி வரை சொல்லவேயில்லையே?? இல்ல எனக்குத்தான் கண்ணு சரியா தெரியலயா?

Anonymous said...

தம்பி, எனக்கு நோக்கியாவிலே கூட பச்சை பட்டனும் சிவப்பு பட்டனும் மட்டும் தான் பயன் படுத்த தெரியும் என்பது பில்கேட்ஸ் வரை தெரிந்த ரகசியம். அதிலும் இந்த O2 என்னை போட்டு தாக்குது என்பது தான் உண்மை. இதை நான் 3 வருஷம் முன்னமே வாங்கியிருந்தும் அதில் உள்ள குச்சியை வைத்து எங்கே எங்கே குத்துவது போன்ற விஷயங்கள் கொஞ்சமும் விளங்காத காரணத்தாலும், ஒரு நாளைக்கு சராசரியாக 200 போன் வந்து போவதில் அந்த போனுக்கு எங்கே உடம்புக்கு வந்துவிடுமோ என்கிற அச்சத்திலும் என் தங்க மச்சானுக்கு கொடுத்து விட்டேன்.

இந்த முறை போகும் போது "கழித்து"விட்ட அந்த வஸ்த்துவை "ஞாபகமாக" என் தலையில் கட்ட.....

இது தான் நடந்தது.... ஆஹ தம்பி, நீர் பதிவு போட இந்த விஷயம் உதவிய காரணத்தால் அதற்கு தண்டனையாக "அதை" நீயே வச்சுக்கோ! (உனக்கு இதை விட பெரிய தண்டனை இருக்கமுடியாது) :-))

இப்படிக்கு

அபிஅப்பா

பினாத்தல் சுரேஷ் said...

ஒரு சிறுகதை மேட்டரை எடுத்துகிட்டு 3 மணி நேரம் முறுக்கு பிழிஞ்சா நல்ல படமா? அடுத்த சீன் எப்ப வரும்ன்ற ஆர்வத்துலேயே படம் பாத்து பப்படம் ஆனேன்! அதுவும் முக்கியமானதுன்னு சொல்லப்படற அந்தக் கவுஜ! யப்பா!

இந்த மாதிரி படத்துக்கு ட்ரெண்டு ஒண்ணு 90களொட ஆரம்பத்துல இருந்தது.. லாலலா எஸ் ஏ ராஜ்குமார் இசை, மச்சி காதல்ங்கறதுன்ற டயலாக், கதாநாயகன் தியாகம் பண்ணிட்டு ட்ரெயின் ஏறும்போது அழும் பொதுமக்கள்..

தம்பி.. இந்தப்படம் நல்ல படம்னு சொன்னதுக்காக உம்பேச்சு கா!
---
அபி அப்பா - ராஸலீலா.. எங்கேயோ இடிக்குதே!
---
இங்கிலீஷ்லே மொக்கை இல்லியா? யார் சொன்னது? யாரோ சொன்னாங்கன்னு 3 * 5 படம் டிவிடி வாங்கிட்டு ஒண்ணையும் பாக்க முடியாம பாடுபட்டுகிட்டு இருக்கேன்.
---
:-)

கதிர் said...

அவ்வ்வ்
ஆர்வக்கோளாறுல படம் பேரையே சொல்ல மறந்துட்டேன் பாருங்க.

அது கண்ணும் கண்ணும் அப்படின்ற ஒரு படம். பிரசன்னா, உதயதாரா நடித்தது.

கப்பி,
கண்ணு எனக்குதான் சரியா தெரியல. ஆனா படத்தோட ஹீரோயின் சுமார்.

அபிஅப்பா

அந்த குச்சியை வைத்து பக்கத்தில் இருப்பவனை குத்தாமல் இருந்தால் சரிதான்.
ஒருநாளைக்கு 200 போனா? காலா?

கதிர் said...

சுரேஷ்,

ஒருவரி கதையை எடுத்துகிட்டு படம் எடுக்கறவங்க முன்னாடி ஒரு சிறுகதையை எடுத்துகிட்டு படம் எடுத்திருக்கார்ல. அதுவே பெரிய விஷயம்தான!

//இந்த மாதிரி படத்துக்கு ட்ரெண்டு ஒண்ணு 90களொட ஆரம்பத்துல இருந்தது.. லாலலா எஸ் ஏ ராஜ்குமார் இசை, மச்சி காதல்ங்கறதுன்ற டயலாக், கதாநாயகன் தியாகம் பண்ணிட்டு ட்ரெயின் ஏறும்போது அழும் பொதுமக்கள்..//

கதாநாயகன் வீட்டை விட்டு போகும்போது நொந்தலாலா போடவில்லை, குடும்பமே சேர்ந்து வழியனுப்பவுமில்லை. ரயிலில் செல்வது மாதிரிதான் அடுத்த காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

நல்ல படம் இல்லன்னாலும் இந்த சுமார் படத்தை நல்ல படம் இல்லைன்னு சொன்னதுக்காக 3*5 படம் டிவிடி அஞ்சு வருது பார்சல்ல உங்களுக்கு.

Before the Devil Knows You're Dead இந்த படத்தையே கூட என் அறையில எந்த தொந்தரவுமில்லாம படுத்தவாக்குல பாத்திருந்தேன்னா நல்ல படமா இருந்திருக்கும். ஆனா தியேட்டர்ல நாப்பது திராம் கொடுத்து உக்காந்து பாத்ததுதான் எரிச்சல கிளப்பிடுச்சு. நாப்பதுக்கு பிரமிப்ப கிளப்ப வேணாமா...

கோபிநாத் said...

புச்சா எதுவும் இல்லையா ? ;))

@ பினாத்தல் சுரேஷ்
\\தம்பி.. இந்தப்படம் நல்ல படம்னு சொன்னதுக்காக உம்பேச்சு கா!\\

தல

காக்கா, குருவிக்கு இது எவ்வளவே மேல் ;))

வல்லிசிம்ஹன் said...

நாப்பது கொடுத்து சினிமா பார்க்கணுமா உங்க ஊரில அடப்பாவமே:))

குருவில ஸ்ரேயா நடிக்கல?? ஓ அது போக்கிரியோ!!
குழப்பமாப் போகுது தம்பி;)

TBCD said...

தமிழ்ப் பெண்களை திரையில் தேடும் குழு ஒன்று ஆரம்பிக்கலாம் என்று இருக்கேன்...

தமிழ் பெண்களை நடிக்க வைக்கும் வரை தம்பி தினமும் 10 மொக்கை பதிவிடுவார் என்று சவாலோட...

என்ன சொல்லுறீங்க..

///
நீண்ட காலமாக எனக்கு ஒரு
சந்தேகம் வந்துகொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டுப் பெண்களுக்கு தமிழ்சினிமாவில்
நடிக்கும் தகுதியே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறதா? இல்லை அழகான பெண்கள்
யாரும் இல்லையா? எல்லா படத்திலும் வெளிமாநில பெண்கள் நடித்துக்கொண்டேஏஏ
இருக்கிறார்கள். இது சலிப்பை ஏற்படுத்தும் விதமாக இல்லை என்றாலும் இங்கே
யாருமே இல்லையா என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டே இருக்கிறது
///

கதிர் said...

//காக்கா, குருவிக்கு இது எவ்வளவே மேல் ;))//

ரிப்பீட்டேய்

---

///குருவில ஸ்ரேயா நடிக்கல?? ஓ அது போக்கிரியோ!!//

வல்லியம்மா அது குருவியும் இல்ல போக்கிரியும் இல்ல. அழகிய தமிழ் மகன்.

//தமிழ்ப் பெண்களை திரையில் தேடும் குழு ஒன்று ஆரம்பிக்கலாம் என்று இருக்கேன்...//

இது ஒண்ணுதான்யா கொறச்சலு அப்படின்னு எல்லாரும் கிளம்பி வந்துட்டாங்கன்னா?

//தமிழ் பெண்களை நடிக்க வைக்கும் வரை தம்பி தினமும் 10 மொக்கை பதிவிடுவார் என்று சவாலோட...//

மாசத்துக்கு நாலுதான் நமக்கு கட்டுபடியாகும். பத்து போட நான் என்ன டிபிசிடியா? :))))

ஜி said...

:))

enakku ennamo Kannum Kannum padam pudikkave illa..

Sridhar V said...

//கடைசியா
நான் பார்த்த தமிழ் நடிகை விஜயலட்சுமி என்று நினைக்கிறேன்.
//

சினேகாவை பார்த்ததில்லையா நீங்கள்? அவர் சுத்த தமிழ் பெண்தான். பண்ருட்டிதான் ஊர்.

மலையாள சேச்சிங்களும் தமிழ்தானே ---- ஒரு காலத்தில.

சுரேகா.. said...

படத்தை
நிதானமா பாத்திருக்கீங்க!
வாழ்த்துக்கள்!

கற்றதும்,பெற்றதும் லெவல்ல இல்ல போயிக்கிட்டிருக்கு!

கலக்குங்க!

O2 வை கைப்பத்த போட்ட ப்ளான் ஒர்க் அவுட் ஆகிடுச்சு போல!! :)