எல்லையற்ற அன்பு கொள்வோம்

Thursday, May 01, 2008

மொக்கை

கமலின் தசாவதாரம் பாடல் வெளியீட்டு விழாவை சம்பளமில்லாத விடுமுறை போட்டு
பார்த்தேன் கலைஞர் தொலைக்காட்சியில். இதுவரை பார்க்காத கமலை மேடையில்
பார்க்க சகிக்கவில்லை. வருபவர் போவரெல்லாம் குடுத்த காசுக்கும் மேல் கூவிக்
கொண்டிருந்தனர். வைரமுத்து ஒருபடி மேலே போய் "உன்னை மிஞ்சிட உலகில்
யாரும் இல்லை" என்றே சொல்லிவிட்டார். "உலக சினிமாக்களுடன் போட்டி போடப்
போகும் இந்த படத்திற்கு ஆறு பாடல்கள் அவசியமா" அதற்காக இவ்வளவு செலவு
செய்து விழா எடுக்க வேண்டுமா என்று உள்மனம் கேட்கவில்லை.

கமல்ஹாசனுக்கு அவசியமில்லாத விளம்பரங்கள் எதற்கு என்று யோசித்துப் பார்த்தேன்
ஆஸ்கார் பிலிம்சின் வற்புறுத்தலாக இருக்கலாம். தலைமூழ்கும் அளவு புகழுக்கோ
விளம்பரத்துக்கோ ஏங்கும் மனிதரல்ல கமல்.இவ்வளவு ஆராவாரங்களுக்கு இடையே கமலுக்கு எதிராக மாபெரும் நடிப்பு சூராவலி
உருவாகி வருவதை கமலே அறிந்திருக்கமாட்டார். இந்த உலக நாயகனை மிஞ்சிட
யார் என்று கேட்ட வைரமுத்துவுக்கு பதில் அளிக்க வந்திருக்கிறார் "உலக நடிப்பு
சூராவலி" ஜே.கே. ரித்திஸ். தசாவதாரம் பாடல் வெளியீட்டு விழா நடந்த அன்றே
இவரின் "நாயகன்" படத்துக்கும் பாடல் வெளியிடும் விழா நடைபெற்றது. முன்பே
இவர் சபதம் செய்தது போல தசாவதாரத்தோடுதான் என் போட்டி சாதாரண காக்காய்
குருவிகளுடன் அல்ல என்று சொல்லியிருக்கிறார். அதே போல பாடலை வெளியிட்டு
விட்டார். கமல் கலைஞரை வைத்து வெளியிட்டால், ரித்திஸ் கலைஞரின்
துணைவியாரை வைத்து வெளியிட்டார். ஆகமொத்தம் சினிமாக்காரர்களுக்கும்,
அரசியல் தலைவர்களுக்கும், என்னைப்போன்றவர்களுக்கும் இதுதான் வேலை.
நல்லவேளை மல்லிகா "டைட் டவுசர்" போட்டு வந்தது கலாசாரத்துக்கு எதிரானது
என்று தமிழ் பண்பாட்டுக்காவலர்கள் ஜிங்சா அடிக்கவில்லை.தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் என நாயகன் படத்தின் இயக்குனர்
சரவணன் ஷக்தி பத்திரிக்கையாளர்களிடன் சூளுரைத்தார். இந்த நியூமராலஜிபடி
சக்தியை ஷக்தி என்றும், சங்கரை ஷங்கர் என்றும் மாற்றி வைத்துக்கொண்டு
திரியும் சவங்களை தனியாக கலாய்க்க வேண்டும் அதற்கு முன்னதாக "நமீதா"
புகழ் இயக்குனர் ஷக்தி சிதம்பரத்தின் முகத்தில் காறி துப்ப வேண்டும். ஏன் என்றால்
நேற்று அந்த சீக்காளி இயக்கியிருந்த "சண்ட"படத்தை பார்க்க நேர்ந்தது. அதிகமில்லை
பத்து நிமிசம் பாத்திருப்பேன். அதுக்கே இம்புட்டு கொலவெறி. இவனுங்க எல்லாம்
மக்கள கேணயனுங்கனு நினைக்கிறதாலதான் வரிசையா இதே மாதிரி "வெற்றி"
படமா எடுத்து தள்ள முடியுது. அய்யா சுந்தர்.சி நீங்க படம் இயக்குறதே பெரும்
கொடுமை. இதுல நடிச்சும் கெடுக்கனுமா?

தினமும் இந்திய நேரப்படி கலைஞர், தொலைக்காட்சியிலும், இசையருவியிலும்
சிரிப்பு நிகழ்ச்சி போடுகிறார்கள். அதில் வரும் விளம்பரத்தில் தமிழ் சினிமாவின்
நகைச்சுவை நடிகர்களின்(கவுண்டமணி, செந்தில், விவேக, கோவை சரளா,
ஜனகராஜ்...) ஆகியோர்களின் போட்டோ அனிமேஷன்களுக்கிடையில் சிம்புவின்
படமும் அனிமேஷனில் போடுகிறார்கள். குறிப்பிட்ட தொலைக்காட்சி நிறுவனத்துக்கு
சொம்புவின் மேல் அப்படி என்ன காண்டு என்று தெரியவில்லை. மிஸ்டர் சொம்பு
எந்த படத்தில் காமெடியாக நடித்திருக்கிறார் என்றும் தெரியவில்லை. தெரிந்தால்
எனக்கு தெரியப்படுத்துங்கள்.

மலையாளத்தில் இப்போது ஜட்ஜுகளுக்கு பயங்கர பஞ்சம். சமீபத்தில் ஏசியாநெட்
நாப்பது லட்சம் பரிசுத்தொகை போட்டியினை ஒரு வருடமாக இழுத்தடித்து
முடித்திருந்தார்கள். இப்போது இரண்டு கோடி என்ற அறிவிப்புடன் அதே மாதிரி
நிகழ்ச்சியை தயாரிக்கிறார்கள். இது 2011 ல் முடியும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
மலையாளிகளின் தொலைக்காட்சியில் ஆடல் பாடல் மட்டுமே மாலை நேரங்களில்
ஒளிபரப்புகிறார்கள். இங்கு ஜட்ஜுகளை பற்றி சொல்லியே ஆகவேண்டும். வாய்ப்பு
இல்லாத பிரபலமான பாடகராக இருந்தால் சிறப்பு. கையெழுத்து ஒன்றை இட்டு
குறைந்தது இரண்டு வருடம் நடக்கும் போட்டியில் ஜட்ஜாக வேலைக்கு செர்ந்து
விடலாம். கலைஞர் தொலைக்காட்சியின் மானாட மசுராட நிகழ்ச்சியின் ஜட்ஜுகளை
பார்த்தபோது தனியாக ரூம்போட்டு சிரிக்க வேண்டும் போல இருந்தது.

அது என்ன எழவு கான்செப்ட்னு தெரியல. ஆனா ஊன்னா "கான்செப்ட் சூப்பரா
இருந்துச்சு" "கான்செப்ட் சொதப்பிடுச்சி" "அருமையா இருந்துச்சு" ன்னு ஒரே மாதிரி
சொல்லிகிட்டு. சூர்ய தொலைக்காட்சி ஆரம்பிச்ச காலத்துலருந்து இந்த நடுவர்கள்
பங்குபெறும் நிகழ்ச்சிகள் இருந்துவந்தாலும் எனக்கு என்னமோ இப்பதான் சூடு பிடிச்ச
மாதிரி தெரியுது. வரிசையா மூணு ஜட்ஜுங்க அப்புறம் "நான் ஆடினது/பாடின
புட்ச்சிருந்தா எனக்கு எஸ்.எம்.எஸ் வோட்டு போடுங்கன்னு. இந்த SMS தொகையே
பல லட்சங்கள் தேறும். ஆனா வெற்றி பெற்றவங்களுக்கு கொடுக்கறது என்னவோ
மூணு லட்சம். இதுல ஏசியாநெட் பரவால்ல. நாப்பது லட்சம் தராங்க.
அவுங்க காசு வாங்கி அவுங்களுக்கே கொடுக்கறதுக்கு எதுக்குடா நிகழ்ச்சின்னு
கேக்கலாம்தான்.

18 comments:

கப்பி | Kappi said...

இந்த பதிவோட கான்செப்ட் நல்லாயிருந்தது. கெமிஸ்ட்ரி சூப்பர்!! ஒரு வேகம் இருந்தது. பாடி லேங்குவேஜ் நல்லாயிருந்தது!! கொரியோகிராபி(????!!!!) இன்னும் நல்லா பண்ணியிருக்கலாம்!! :)))

கப்பி | Kappi said...

இக்கட்டுரை ஆசிரியர் உலக்கை நாயகன் சாம் ஆண்டர்சனை உள்நோக்கத்தோடு இருட்டடிப்பு செய்ததை கண்மூடித்தனமாக கன்னாபின்னாவென தாறுமாறாக கண்டிக்கிறோம்!!

இவண்
உலக்கை நாயகன் சாம் ஆண்டர்சன் ரசிகர் மன்றம்,
டல்லாசுப்பட்டி
டெக்ஸாஸு ஜில்லா
அமெரிக்கா.

ஆயில்யன் said...

பதிவுக்கு சம்பந்தமில்லா கமெண்ட்:-
இந்த வார பிகர் போட்டோவில கொஞ்சம் நல்ல போட்டோவா போட்டிருக்கலாம்ங்கறது என்னோட யோசனை :))))))))))

சென்ஷி said...

:))

Sridhar V said...

ரொம்ப கோவமா இருக்கீங்க போல... எதுக்கு 'சம்பளம் இல்லாத விடுமுறை' எல்லாம் போட்டுகிட்டு? :-))

நான் டிவி பாக்கிறத நிப்பாட்டி பல மாதங்களாச்சு. இணையத்தில கிடைக்கிற clippings மட்டும்தான் பாக்கிறது.

கோபிநாத் said...

;)))

ரசிகன் said...

ஹா..ஹா...

நகைச்சுவையா எழுதியிருந்தாலும் நெறய விசயங்களை அள்ளி குவிச்சிருக்கிங்க:)

நல்லாயிருக்கு மக்கா...

சுரேகா.. said...

கடுமையான கோவத்தில் இருக்கீங்க போல...அடுத்த சூப்பர் ஸ்டார் ரித்திஸை போட்டு வாருறீங்க!

அந்த ஆளை சினிமாத்துறையின் சுப்ரமணிய சாமியா பாத்து சிலாகிச்சுக்கிட்டிருக்காங்க! நீங்க வேற!~

அப்புறம்..

நலமா?

நிஜமா நல்லவன் said...

தம்பி அண்ணே சும்மா போட்டு தாக்கி இருக்கீங்க!

நிஜமா நல்லவன் said...

உங்க பதிவுல ரிப்பீட்டு போட அனுமதி உண்டா? சென்ஷி ரிப்பீட்டு போடாம பொய் இருக்கார் அதான் கேக்குறேன். நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நானா ஒரு முடிவுக்கு வந்து எனக்கு பிடிச்ச கமெண்ட ரிப்பீட்டிக்கிறேன்.

நிஜமா நல்லவன் said...

///கப்பி பய said...
இந்த பதிவோட கான்செப்ட் நல்லாயிருந்தது. கெமிஸ்ட்ரி சூப்பர்!! ஒரு வேகம் இருந்தது. பாடி லேங்குவேஜ் நல்லாயிருந்தது!! கொரியோகிராபி(????!!!!) இன்னும் நல்லா பண்ணியிருக்கலாம்!! :)))///


ரிப்பீட்டேய்...

நிஜமா நல்லவன் said...

///ஆயில்யன். said...
பதிவுக்கு சம்பந்தமில்லா கமெண்ட்:-
இந்த வார பிகர் போட்டோவில கொஞ்சம் நல்ல போட்டோவா போட்டிருக்கலாம்ங்கறது என்னோட யோசனை :))))))))))///ரிப்பீட்டேய்...

Anonymous said...

//மிஸ்டர் சொம்பு
எந்த படத்தில் காமெடியாக நடித்திருக்கிறார் என்றும் தெரியவில்லை. தெரிந்தால்எனக்கு தெரியப்படுத்துங்கள்.//

அவர் நடிக்குறதே காமெடின்னு நெனச்சுட்டாங்களோ என்னமோ? அது என்ன மொக்கைன்னு புதுசா தலைப்பு? இதெல்லாம் நீ சொல்லாம நாங்களே புரிஞ்சுக்க மாட்டோமா? என்னமோ நீ எழுதுறதெல்லாம் எளக்கியம்ன்னு ஜெமோ மாதிரி உனக்கும் புத்தி தடுமாற ஆரம்பிச்சுடுச்ச்ன்னு நினைக்கிறேன். பை த வே, ஹவ் இஸ் யுவர் ஹெல்த்? :-)

பினாத்தல் சுரேஷ் said...

//மிஸ்டர் சொம்பு
எந்த படத்தில் காமெடியாக நடித்திருக்கிறார் என்றும் தெரியவில்லை. // எல்லாப் படத்திலும்.

கான்சப்ட்னா என்ன தெரியாதா? நான் உப்புமான்னு சொல்றதத்தான், அண்ணாச்சி மொக்கைன்னு சொல்றதைத்தான் அவங்க கான்சப்ட்னு சொல்றாங்க!

அடுத்த சம்பளமில்லாத லீவில் குருவியும், அதுக்கடுத்த சம்பளமில்லாத லீவில் நாயகனும் பார்த்து, கேப்பில் சாம் ஆண்டர்சனின் "ராசாத்தி என் ஆசை ராசாத்தி"யும் பார்த்து ரசித்து பதிவு போடுவாயாக!

தமிழன்-கறுப்பி... said...

தம்பி-அண்ணே (உங்களை எப்படி அழைப்புது.. ஏன்னா நான் சின்னப்பையன்...
அதால நிஜமா நல்லவன் றூட்டுதான் கரெக்டு... ) நிறைய விசயங்களை ஒரே பதிவில அதுவும் மொக்கைன்ற தலைப்புல எப்பிடிண்ணே...

தமிழன்-கறுப்பி... said...

நிஜமா நல்லவன்...

///ஆயில்யன். said...
பதிவுக்கு சம்பந்தமில்லா கமெண்ட்:-
இந்த வார பிகர் போட்டோவில கொஞ்சம் நல்ல போட்டோவா போட்டிருக்கலாம்ங்கறது என்னோட யோசனை :))))))))))///

ஹே இந்த பிகர் இன்னுமும் லட்சணமாத்தன்யா இருக்கு சண்டை படத்த பாத்தாலே தெரியலையா.. நமீதாவ பாக்கவே முடியல ஏன் அந்த ஹீரோயின கூட பாத்தாலும் இவங்க நல்லாதான் இருக்காங்க

:):)ரிப்பீட்டேய்...

தமிழன்-கறுப்பி... said...

///இந்த பதிவோட கான்செப்ட் நல்லாயிருந்தது. கெமிஸ்ட்ரி சூப்பர்!! ஒரு வேகம் இருந்தது. பாடி லேங்குவேஜ் நல்லாயிருந்தது!! கொரியோகிராபி(????!!!!) இன்னும் நல்லா பண்ணியிருக்கலாம்!! :)))///

ரிப்பீட்டு...

கதிர் said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. விரைவில் உங்கள் வீடு தேடி நாயகன் படத்துக்கான சிறப்பு திரையிடல் அழைப்பு வரும்.

கண்டு"கழியுங்கள்"