எல்லையற்ற அன்பு கொள்வோம்

Sunday, September 24, 2006

மாயக்கண்ணாடி

Image Hosted by ImageShack.us

சேரன்: இது எப்படி இருக்கு?

ரசிகர்கள் : கொஞ்சம் பயமாத்தான் இருக்கு! நீங்க
நீங்க ஒருத்தர்தான் வெட்டிபந்தா இல்லாம
படம் எடுத்துகிட்டு இருந்தீங்க இப்ப அதுவும்
இல்லையா...?

சேரன் : படம் வந்தபிறகு பார்த்து சொல்லுங்கண்ணே
இப்பவே இழுத்தா எப்படி!

ரசிகர்கள் : பாக்கத்தானே போறோம்!

உங்களுக்கு என்ன தோணுது நண்பர்களே?

படம் உதவி : கூகிள் மற்றும் www.nowrunning.com

25 comments:

Amar said...

//உங்களுக்கு என்ன தோணுது நண்பர்களே?//

யாருங்க படத்துல இருக்குற பொன்னு? :)

கதிர் said...

//யாருங்க படத்துல இருக்குற பொன்னு? :)//

நல்லா தோணியிருக்கு உங்களுக்கு :-)

அந்த பொண்ணு பேரு அழகிய தீ நவ்யா நாயர்

Vaa.Manikandan said...

என்ன தோணுதா?

சரி...சேரனுக்கும் முத்தி போச்சோன்னு தோணுது

கதிர் said...

//சரி...சேரனுக்கும் முத்தி போச்சோன்னு தோணுது//

போட்டோ பாத்தா அப்படித்தான் தோணுது! ஆனால் முத்தி போனவங்கள திருத்தற மாதிரிதான் படம் வரும்ங்கிறது என்னோட
நினைப்பு!

aaradhana said...

எனக்கு அவர் ஏதோ நடித்துக்காண்பிப்பதுபோல் தெரிகிறது.

aaradhana said...

எனக்கு அவர் ஏதோ நடித்துக்காண்பிப்பதுபோல் தெரிகிறது.

நாமக்கல் சிபி said...

எனக்கு என்னுமோ அவர் சினிமா நடிகர்களை பற்றி படம் எடுப்பதாக தோனுது!!!

Mugundan | முகுந்தன் said...

நல்ல படங்களைத் தரும் தமிழ் இயக்குநர்களில்
முதன்மையானவர்.
பார்ப்போம்.,கண்ணாடியில் அவர்
முகம் தெரிகிறதா என?
-முகு,கடலூர்-

கதிர் said...

//எனக்கு அவர் ஏதோ நடித்துக்காண்பிப்பதுபோல் தெரிகிறது.//

எப்படி இருந்தாலும் இந்த புகைப்படம் படத்தின் பெயருக்கு பொருத்தமா இருக்கு!

கதிர் said...

//எனக்கு என்னுமோ அவர் சினிமா நடிகர்களை பற்றி படம் எடுப்பதாக தோனுது!!!//

சினிமா நடிகர்கள பத்தி இல்ல வெட்டி, சினிமா மோகத்தை பத்தி எடுக்கறார்னு கேள்விப்பட்டேன்.

கைப்புள்ள said...

//எப்படி இருந்தாலும் இந்த புகைப்படம் படத்தின் பெயருக்கு பொருத்தமா இருக்கு!//

அதே...அதே...

கதிர் said...

//நல்ல படங்களைத் தரும் தமிழ் இயக்குநர்களில்
முதன்மையானவர்.
பார்ப்போம்.,கண்ணாடியில் அவர்
முகம் தெரிகிறதா என?
-முகு,கடலூர்- //

வாங்க முகு! முதல் வருகைன்னு நினைக்கிறேன்! நன்றி.

நல்ல படங்களை தருவதில் இவரும் முதன்மையானவர் என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்து இல்லை.

நீங்களும் துபாய்தானா?

கதிர் said...

//அதே...அதே... //

அடடே கைப்புள்ளயா வாங்க வாங்க!

சேம் ப்ளட்! :-)))

Leo Suresh said...

//உங்களுக்கு என்ன தோணுது நண்பர்களே?//ம் ம் என்ன.. கலி முத்திடுத்து.

லியோ சுரேஷ்
துபாய்

லொடுக்கு said...

எனக்கென்னமோ நீங்க சேரன் ரசிக சிகாமணினு தோனுது. :)

கதிர் said...

வாங்க லியோ சுரேஷ்!

//கலி முத்திடுத்து//

ஒண்ணுமே தெரியாத கதாநாயகர்களெல்லாம் சவால் விடும்போது இவர் கொஞ்சம் விஷயம் உள்ளவரு. என்ன சொல்றாருன்னு பொருத்திரூந்து பார்ப்போம் சுரேஷ்.

//எனக்கென்னமோ நீங்க சேரன் ரசிக சிகாமணினு தோனுது. :) //

வியாபாரநோக்கம் மட்டுமே முக்கியமாக கொள்ளாமல் கதையுள்ள படங்களை தயாரிப்பவரும் இயக்குபவருமான சேரனை ரசிக்காதவர்களே இருக்க முடியாது.

லொடுக்கு said...

//வியாபாரநோக்கம் மட்டுமே முக்கியமாக கொள்ளாமல் கதையுள்ள படங்களை தயாரிப்பவரும் //

இதுல எனக்கு முழுமையான உடன்பாடு இல்லை. இவர் படங்கள் வெண்டுமானால் நன்றாகவும் இயல்பாகவும் இருக்கலாம். ஆனால் அதில் வியாபார நோக்கம் இல்லை என்பதில் எனக்கு உடன்பாடில்லை. பின்பு ஏன் இவர் படங்களில் பாடல் காட்சிகளை அனுமதிக்கிறார். கருப்புத் தான் எனக்கு புடிச்ச கலரு. ஞாபகம் இருக்குல்ல மாளவிகா ஆட்டம்??

நாடோடி said...

//
மாயக்கண்ணாடி
//

என்ன தம்பி படம் பேரே மாயாக்கண்ணாடி.


அதான் கண்ணாடியில ரஜினி தெரியுராரு....

கதிர் said...

//இதுல எனக்கு முழுமையான உடன்பாடு இல்லை. இவர் படங்கள் வெண்டுமானால் நன்றாகவும் இயல்பாகவும் இருக்கலாம். ஆனால் அதில் வியாபார நோக்கம் இல்லை என்பதில் எனக்கு உடன்பாடில்லை. பின்பு ஏன் இவர் படங்களில் பாடல் காட்சிகளை அனுமதிக்கிறார். கருப்புத் தான் எனக்கு புடிச்ச கலரு. ஞாபகம் இருக்குல்ல மாளவிகா ஆட்டம்??//

ஆஹ்ஹா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா....

நான் எழுதியிருப்பதை நல்லா கவனிங்க லொடுக்கு! வியாபாரநோக்கம் மட்டுமே முக்கியமாக கொள்ளாமல் பாடல் காட்சிகள் இல்லாமல் வந்தால் நீங்களும் நானும்தான் தியேட்டரில் இருப்போம். இப்போலாம் பாடல்கள வச்சிதான் தியேட்டருக்கே மக்கள் வராங்க! அப்படியே அந்த பாடல்ல என்ன குறை எந்த ஆபாசமும் இல்லாம கருப்பு கலர்ல இருக்கவங்க தாழ்வுணர்ச்சி கூடாது அதுவும் ஒரு நிறம்தான்னு அடற்கு உள்ள சிறப்புகளை எடுத்ட்து சொல்ற ஒரு பாடல் அதில எந்த ஜனரஞ்சக அம்சமும் இருப்பதாக என்னக்கு தெரியவில்லயே! மத்தபடி வியாபரநோக்கமே இல்லாம யாரும் பாடமெடுக்க முடியாது அப்படியே எடுக்கணும்னா குருவம்மா மாதிரி படங்கள்தான் எடுக்கணும். உங்க யாருக்காவது தேரியுமா அந்த படத்தை. முன்னணி கதாநாயகி நடிச்சிருந்தும் ஓடலை!

கொசுறு: மாளவிகா ஆட்டம் இப்போதாங்க நாறிப்போச்சு. முன்னாடி ஒழுங்காதான் நடிச்சுகிட்டுருந்தாங்க!

லொடுக்கு said...

அந்த பாடல் வரிகளை குற்றம் சொல்லவில்லை நான். மாளவிகாவின் ஆடை மற்றும் ஆடல். அந்த பாடல் அந்த படத்தின் கதையோட்டத்திற்கு தேவையானது என்று கூறுகிறீரா?

//ஆஹ்ஹா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா....
//
இந்த மாதிரி எதாவது கெளப்புனாத்தாய்யா பதிவு சூடு பிடிக்கும்.

கார்த்திக் பிரபு said...

cheran ippadilam panna maatarnu nambuvom.adhu sari greaphics(morphing) yaru pannudhu neengala?

ராசுக்குட்டி said...

எனக்கு என்ன தோணுதுன்னா, கண்ணாடில இருக்ற சூப்பர் ஸ்டார் இன்னும் கொஞ்சம் சூப்பரா இருந்திருக்கலாம்... பரிசளிப்பு விழாவுல ஒரு hair ஸ்டைல் இருந்ததே அதுதான் பயமுறுத்துது மத்தபடி ஓகே.

கதிர் said...

//எனக்கு என்ன தோணுதுன்னா, கண்ணாடில இருக்ற சூப்பர் ஸ்டார் இன்னும் கொஞ்சம் சூப்பரா இருந்திருக்கலாம்... பரிசளிப்பு விழாவுல ஒரு hair ஸ்டைல் இருந்ததே அதுதான் பயமுறுத்துது மத்தபடி ஓகே. //

தலைவர் ஹேர் இல்லாம இருந்தாலும் ஸ்டைல்தான்!!

ராசுக்குட்டி said...

தம்பி நான் தலைவர் ஸ்டைல சொல்லல சேரன் ஸ்டைல சொன்னேன் கோலிவுட் பரிசளிப்பு விழா எதோ நடந்ததே சமீபத்தில்

கதிர் said...

ஓ! அதுவா!

கொஞ்சம் பயமாத்தான் இருந்தது அந்த ஸ்டைல். :))