எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, September 20, 2006

வாலிப வயசு!!! - 1

ரெண்டாவது ஆட்டம் - வாலிப வயசு 2

கனவு இல்லம் வாலிப வயசு 3

குன்று முட்டிய குருவி - வாலிப வயசு 4

டேய் சிவா, காத கொண்டாடா இங்க!

எதுக்கு? நீ லொள்ளு புடிச்சவன் போன முறை
இதே மாதிரி சொல்லி எங்காதுல கத்தின.

"இல்லடா சீரியஸ் மேட்டர்"

எதுவா இருந்தாலும் க்ளாஸ் முடிஞ்சதும் பேசிக்கலாம்

அதுக்கு முன்னாடியே பேச வேண்டிய மேட்டர்டா.
காத கொண்டா இங்க!

நேத்து "உள்ளத்தை அள்ளித்தா" படம்
பார்த்தேண்டா மச்சி..

அடச்சீ இதுவாடா சீரியஸ் மேட்டர்.

இல்லடா அதில ரம்பாவ மடக்கறத்துக்கு
கார்த்திக் சூப்பர் ஐடியா போடுவாரு. கவுண்டமணிய
விட்டு ஹேண்ட்பேக் திருடிட்டு ஓடுற மாதிரியும்
கார்த்திக் அதை ஓடிப்போய் புடுங்கற மாதிரியும்
அதன் மூலமா ரம்பாவ காதல் வலையில
சிக்க வைக்கிறது. அதே மாதிரி நான் ஒரு ஐடியா
போட்டு வச்சிருக்கேன். அது மாட்டும் கரெக்டா
ஒர்கவுட் ஆச்சின்னா சாந்தி எனக்குதான்.

அதுக்கு நான் என்னடா பண்றது?

இன்னும் அரை மணி நேரத்தில க்ளாஸ் முடிஞ்சுரும்.
முடிஞ்ச உடனே என்னோட சைக்கிள எடுத்துகிட்டு
ஏரியை தாண்டி இருக்குற மொத அரசமரத்தடியில
நின்னுக்கோ!

நின்னு!

சொல்றத முழுசா கேளுடா..

சொல்லு..

சரியா பத்தாவது நிமிஷத்தில சாந்தி வருவா
அவகிட்ட நான் சொல்லிக்குடுக்கற "ரெண்டு
வரி "டயலாக்" சொல்ற அத சொன்னதும் அவ
அழுவாள் அது மூலமா அவள் என்னை லவ்
பண்றாளான்னு தெரிஞ்சிக்கலாம். அப்படியே
என்னை லவ் பண்ணலன்னாலும் அந்த
டயலாக் கேட்டதுக்கப்புறம் என்னை தான்
லவ் பண்ணுவா பாரேன்.

டேய் உனக்குதான் ராமாயி இருக்கால்ல, பின்ன
ஏண்டா சாந்தி பின்னாடி சுத்தற!

ராமாயி, பேராடா அது! ஆளும் அவ மூஞ்சியும்
மொகம்பூரா மஞ்சள் பூசிக்கிட்டு, நாலணா சைசுக்கு
சாந்து பொட்டு வச்சிக்கிட்டு ம்ஹீம் சகிக்கலைடா.

"பெயரில் என்ன இருக்கிறது நண்பா?"

அந்த கதைய நாங்க அஞ்சாவது படிக்கும்போதே
படிச்சுட்டேம். இப்போ மேட்டருக்கு வாங்க தொர!

அது என்ன 'டயலாக்' சொல்லித்தொலை..

அவகிட்ட போயி என்ன சொல்றன்னா, நான் உன்ன
ரொம்ப நாளா லவ் பண்ணிகிட்டு இருக்கேன், நீ
என்னடான்னா அந்த பாபுப்பயல பாத்துகிட்டு
இருக்கே (அதாவது என்னை) அப்படின்னு சொல்லு.
அதுக்கு அவ சொல்லுவா ஆமா அவனத்தான் லவ்
பண்ணுவேன் உனக்கென்ன அப்படின்னு. நாலு
வார்த்தை நீ கோவத்தில பேசணும் அத கேட்டதும்
அவ அழுவாள் அந்த நேரத்தில கரெக்டா நான்
வருவேன். அவ அழுதுகிட்டு இருக்கறத பாத்து
உன்னை நாலு அடி அடிச்சி விரட்டற மாதிரி நடிச்சு
அவளுக்கு ஆறுதல் சொல்லுவேன். இதான் மச்சி
ப்ளான்.

நீங்க பறக்க நாங்க பஞ்சராகனுமா?

டேய் மச்சி ரெண்டாவது அரச மரத்தடியில
அவங்கப்பன் கள்ளுக்கடை வச்சிருக்கான்
தெரியும்ல..

தெரியும்டா, அந்த மரத்துக்கும், இந்த மரத்துக்கும்
ரொம்ப தூரம், யாரும் இருக்க மாட்டாங்க மச்சி
தைரியமா இரு.

எனக்காக இதக்கூட செய்ய மாட்டியா மச்சி?

உடனே பாசக்கயிறு வீசிறிவிங்களே..

டேய் உனக்கு கணக்கு சரியா வரலன்னு உங்க
அப்பா நினைச்சிகிட்டு இருக்காரு.ஆனா நீ போடற
கணக்கு உங்கப்பனுக்கும் தெரியாது, அதோ அங்க
போர்டுல கிறுக்கிட்டு இருக்கானே அவனுக்கும்
புரியாது!

ஏய் அங்க யாருடா ரெண்டு பேர் குசுகுசுன்னு
பேசிகிட்டு இருக்கறது?, அப்படியே ரெண்டு
பேரும் எந்திரிச்சி வெளிய போயிடுங்க. என்னோட
க்ளாசுக்கே வராதிங்கடா.

வசதியா போச்சு, சிவா எந்திரிடா போலாம்.

இந்தா சாவிய புடி. சீக்கிரம் போ. நான் பல்லு
சைக்கிள வாங்கினு வரேன்.

இவன் வேற தைரியமா சொல்லுடான்னு சொல்லிட்டான்
நம்ம நேரம் அவ செருப்பாலே அடிச்சிட்டான்னா
நாளப்பின்ன பள்ளிக்கூடம் பக்கமே தலை காட்ட
முடியாதே. ச்சே அப்படியெல்லாம் அடிக்க மாட்டா,
அப்படியே அடிச்சாலும் நாளைக்கு ஸ்கூலுபக்கம்
வந்துற முடியுமா? வயித்தக் கலக்குதுடான்னு
அவ வர்ற நேரமா பாத்து எஸ்கேப் ஆயிறலாமா?
அய்யயோ அவ வேற வராளே, என்ன செய்யிறது
எப்படியாவது சொல்லிற வேண்டியதுதான்.

வேகமா சைக்கிள்ல வந்து எதிர்ல சரக்குன்னு
நிறுத்தினதும் பயந்துதான் போனா அவ.

ஏ புள்ள, சாந்தி கொஞ்சம் நில்லு உங்கிட்ட
கொஞ்சம் பேசணும்.

என்ன பேசணும்?

நான் உன்ன எவ்வளவு நாளா பாத்துகிட்டும் லவ்
பண்ணிகிட்டும் இருக்கேன். நீ என்னடான்னா
அந்த பாபுப்பயல லவ் பண்ணிகிட்டு இருக்கியாமே.
அவன் கொஞ்சம் கூட நல்லவன் இல்ல.

ஏய், ஏய் ஏன் அழுவற யாராவது பாத்தா தப்பா
நினைப்பாங்க. எஸ்கேப் ஆயிடலாமா?

அழுகைய நிறுத்து சாந்தி!!

எந்த நாயி சொல்லுச்சி பாபுவ நான் லவ் பண்றேன்னு?
நான் உங்களத்தான் லவ் பண்றேன் சிவா...

அடிப்பாவி, இப்படியா குண்ட தூக்கிப்போடுவ,
அவனுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்.
அவன் வேற அதோ வந்துகிட்டு இருக்கானே.

சரி நீ கெளம்பு! அவன் வந்துகிட்டு இருக்கான்.

ஏண்டா நான் வர்றதுக்குள்ள அவள அனுப்பின?

அவ கெடக்கறா விடுறா, இவ இல்லன்னா வேற
ஆளே இல்லியா?

சிவா அவ என்ன சொன்னான்னு சொல்டா
மொத்தல்ல!

அவள மறந்துடு மச்சி!

ஏன்?

அவளுக்கு நிச்சயம் ஆகிடுச்சாம், அவ மாமங்கூட.
பரிட்சை முடிஞ்ச உடனே கல்யாணமாம்.

அப்புறம் எதுக்கு ஸ்கூலுக்கு வர்றாளாம். ச்சே
என்னடா இது, இந்த ஓல சந்தில எட்டி பாத்தவன்
தட்டி கட்டினவன் எல்லாம் அடிச்சி விரட்டணும்
மச்சி.

உனக்கு ராமாயிதான்!!

51 comments:

இராம்/Raam said...

கதிரு கலக்கிட்டே போ.... பார்த்திலே இப்பிடிதான் அரைடவுசரு காலத்திலே இருந்து நம்ம செட் பய ஒருத்தன் காதலிச்சு திரிச்சான்......

கடைசியா அந்தப் பொண்ணேயே கட்டி வச்சிடானுவே....

Sivabalan said...

// எந்த நாயி சொல்லுச்சி பாபுவ நான் லவ் பண்றேன்னு?
நான் உங்களத்தான் லவ் பண்றேன் சிவா... //

நல்லா எழுதியிருக்கீங்க..

இரசித்தேன்

நன்றி.

கப்பி | Kappi said...

:))
கலக்கல் தம்பி...

நாமக்கல் சிபி said...

தம்பி,
கலக்கிட்ட போ!!!

நான் கடைசியா உள்ளத்தை அள்ளித்தா மாதிரி யார்டயாவது அடி வாங்குவன்னு நெனைச்சேன்...

நீ ஆளையே கவுத்தட்ட ;)

எலிவால்ராஜா said...

ரொம்ப நல்லயிருக்கு தம்பி....

இது மாதிரி நல்ல நல்ல படைப்பாதர வேண்டும்... please

Santhosh said...

தம்பீஈஈஈஈஈஈஈஈஈ சூப்பாரூஊஊ.. :)) ஹிஹி ஒரு ஜாலிக்காக நல்லா இருந்தது.

கதிர் said...

வாங்க சி.பா,

ரசித்ததற்கு நன்றி!

இதெல்லாம் சின்ன வயசில பண்ண குறும்புகள். இப்ப பதிவு போட மேட்டர் கிடைக்கலியா அதனால அப்படியே எடுத்து விட்டுகிட்டு இருக்கேன்.

கதிர் said...

//கடைசியா அந்தப் பொண்ணேயே கட்டி வச்சிடானுவே.... //

உசாரா இல்லன்னா இப்படிதான் நடக்கும்!!

கதிர் said...

எலிவால்ராஜா சொன்னது,

//இது மாதிரி நல்ல நல்ல படைப்பாதர வேண்டும்... please //

அப்ப இதுக்கு முன்னாடி எல்லாமே மொக்கையா? please வேற போட்டு கொல்றிங்களே!

//நீ ஆளையே கவுத்தட்ட ;) //

அது நான் இல்லீங்கணா!

//கலக்கல் தம்பி...//

நன்றி கப்பி! உங்கிட்ட இருந்து இவ்வளவுதானா! நான் இன்னும் எதிர்பார்த்தேன்

கதிர் said...

//தம்பீஈஈஈஈஈஈஈஈஈ சூப்பாரூஊஊ.. :)) ஹிஹி ஒரு ஜாலிக்காக நல்லா இருந்தது. //

நன்றி சந்தோஷ்! உங்க பதிவில நான் ரொம்ப ரசிச்சது வெட்டியாய் பொழுதை கழிப்பது எப்படிங்கற பதிவைத்தான். ரொம்ப அருமையாய் எழுதி இருந்தீங்க.

கப்பி | Kappi said...

//உங்கிட்ட இருந்து இவ்வளவுதானா! நான் இன்னும் எதிர்பார்த்தேன்
//

எதிர்பார்த்தது என்னன்னு தெரிஞ்சா நிறைவேத்திடலாம் ;)

கதிர் said...

//எதிர்பார்த்தது என்னன்னு தெரிஞ்சா நிறைவேத்திடலாம் ;)//

இது போல ஏகப்பட்ட சம்பவங்கள் என் மனசில எரிமலையா குமுறிகிட்டு இருக்கு அதையெல்லாம் ஒரு தொடர் மாதிரி இந்த வாலிப வயசுன்ற பெயர்ல எழுதலாமான்னு யோசிக்கிறேன். மாண்டிவிடியோ சமூகத்திலருந்து ஆதரவு கிடைக்குமா?

நாமக்கல் சிபி said...

தம்பி,
நீ எழுது உனக்கு எல்லா இடத்துல இருந்தும் ஆதரவு இருக்கும் ;)

கப்பி | Kappi said...

//இது போல ஏகப்பட்ட சம்பவங்கள் என் மனசில எரிமலையா குமுறிகிட்டு இருக்கு அதையெல்லாம் ஒரு தொடர் மாதிரி இந்த வாலிப வயசுன்ற பெயர்ல எழுதலாமான்னு யோசிக்கிறேன். மாண்டிவிடியோ சமூகத்திலருந்து ஆதரவு கிடைக்குமா?
//

என்ன தம்பி இப்படி கேட்டுப்பிட்ட..மாண்டிவிடியோ பஞ்சாயத்தை பீச்ல கூட்டி(பித்தளை சொம்பு கிடைக்காததால அன்-அபிஷியலா) முடிவெடுத்தாச்சு...வாலிப வயசுல இது மாதிரி குமுறல்களுக்கு எப்பவும் ஆதரவு உண்டு :))

கப்பி | Kappi said...

//என் மனசில எரிமலையா குமுறிகிட்டு இருக்கு //

பார்த்து பக்குவமா குமுறட்டும்..மக்கள் வந்து கும்மு கும்முன்னு கும்மிடபோறாங்க

Mohan Madwachar said...

:-) :-)

பாரதிய நவீன இளவரசன் said...

படித்தேன், ரசித்தேன்....best of luck உங்கள் வருங்கால அனுபவங்களுக்கும், எங்களுடனான பகிர்தலுக்கும்...

ILA (a) இளா said...

கதையை கொண்டு போன விதம் அருமைங்க கதிர். கதையோட முடிவு சீக்கிரம் யூகிக்க முடிஞ்சுருச்சு.

கதிர் said...

//என்ன தம்பி இப்படி கேட்டுப்பிட்ட..மாண்டிவிடியோ பஞ்சாயத்தை பீச்ல கூட்டி(பித்தளை சொம்பு கிடைக்காததால அன்-அபிஷியலா) முடிவெடுத்தாச்சு...வாலிப வயசுல இது மாதிரி குமுறல்களுக்கு எப்பவும் ஆதரவு உண்டு :))//

அங்க யாருப்பா நமக்கு எதிரா பிராது குடுத்தது?

கதிர் said...

//பார்த்து பக்குவமா குமுறட்டும்..மக்கள் வந்து கும்மு கும்முன்னு கும்மிடபோறாங்க//

வாங்க மக்களே கும்முங்க, கும்முங்க!

மனதின் ஓசை said...

பாபு..சீ..சீ...தம்பி... கதை நல்லா இருந்தது..:-)

கதிர் said...

லியோ மோகன்,

என்ன வெறும் சிரிப்பான மட்டும் போட்டு எஸ்கேப் ஆகிட்டிங்க!

//படித்தேன், ரசித்தேன்....best of luck உங்கள் வருங்கால அனுபவங்களுக்கும், எங்களுடனான பகிர்தலுக்கும்...//

வாங்க வெங்கடேஷ்,

மிக்க நன்றி உங்கள் வாழ்த்துகளுக்கு! இதெல்லாம் இல்லாம யாருமே வாலிபத்தை கடந்திருக்கவே முடியாதுல்ல, அதான் அதையெல்லாம் அப்படியே எழுதிரணும்னு ஒரு எண்ணம்!

கதிர் said...

//கதையை கொண்டு போன விதம் அருமைங்க கதிர். கதையோட முடிவு சீக்கிரம் யூகிக்க முடிஞ்சுருச்சு.//

வாங்க விவசாயி அண்ணா!

வருகைக்கு நன்றி!

யூகிச்சிட்டிங்களா?, அப்போ உங்களுக்கும் இதே மாதிரி.... ஓஹோ
அப்ப சரி...

மெளலி (மதுரையம்பதி) said...

நல்லா இருக்குங்க.....வாழ்த்துக்கள்....
சின்ன வயதில் எல்லோருக்கும் இது மாதிரியான அனுபவங்கள் இருக்கும், ஆனால் அதனை அழகாக சொல்வது கடினம்.

கதிர் said...

//பாபு..சீ..சீ...தம்பி... கதை நல்லா இருந்தது..:-)//

வணக்கம் மனதின் ஓசை!

நான் பாபு இல்லீங்க! அதெல்லாம் வெறும் கற்பனைன்னு சொன்னா நம்பவா போறீங்க?

வெற்றி said...

தம்பி,
அருமை. நல்ல அழகாகவும் விறுவிறுப்பாகவும் கதையைச் சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

கதிர் said...

//நல்லா இருக்குங்க.....வாழ்த்துக்கள்....
சின்ன வயதில் எல்லோருக்கும் இது மாதிரியான அனுபவங்கள் இருக்கும், ஆனால் அதனை அழகாக சொல்வது கடினம்.//

மெய்யாவே நான் அழகா சொல்லி இருக்கேனா!! நெம்ப டேங்ஸ்!

மியூஸ்ம் நீங்களும் ஒரே ஆளா? இல்ல வேற வேறயா?. குழப்பறிங்களே.

//அருமை. நல்ல அழகாகவும் விறுவிறுப்பாகவும் கதையைச் சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.//

வாங்க வெற்றி!

உங்களின் வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்றி வெற்றி!

Anu said...

wow
I expected her to tell that
but the real twist was..in the end
Great Friendship
Great Story

Unknown said...

சிறுகதை வாசித்தேன், அருமையாக இருந்தது. நன்றி தம்பி

கதிர் said...

வருகைக்கு நன்றி அனிதாபவன்குமார்!

கிட்டத்தட்ட இதே கதையை "மௌனம் பேசியதே" படத்தில பாக்கலாம். நீங்களே யூகிக்க முடியாதபடி எழுத நான் என்ன எழுத்தாளனா என்ன!

நன்றி இலக்கியா, அது சிறுகதை மாதிரி இருந்ததா! அதற்கும் ஒரு நன்றி!

Anonymous said...

இதுக்குத்தான் லவ்க்கெல்லாம் தூது விடக்கூடாதுங்கிறது!

லொடுக்கு said...

உள்ளேன் ஐயா!

கதிர் said...

//உள்ளேன் ஐயா!//

என்ன லொடுக்கு..? கருத்துக்களை அள்ளி வீசவேணாமா..?

இப்படி வெறுமனே உள்ளேன் ஐயா போட்டுட்டு போனா நாங்க என்ன நினக்கறது!

G.Ragavan said...

:-))))))))))))))

வாய் விட்டுச் சிரிக்க முடிந்தது...சூப்பரப்பு. நான் கூட அவன் அடி வாங்கப் போறான்...மிதி வாங்கப் போறான்னு நெனச்சேன்...கடைசியில... :-)))))))))

கதிர் said...

//வாய் விட்டுச் சிரிக்க முடிந்தது...சூப்பரப்பு. நான் கூட அவன் அடி வாங்கப் போறான்...மிதி வாங்கப் போறான்னு நெனச்சேன்...கடைசியில... :-))))))))) //

அதுக்குத்தானே எழுதறது! இதெல்லாம் மறக்கவே முடியாத நிகழ்வுகள் எனக்கு. வருகைக்கு நன்றி ஜீ.ரா

கார்த்திக் பிரபு said...

hi thambi padithane..rasithane..ippalam eludh time kidaika matikku..annal ungal ..vettipayal blogai marakaml padikirane..idhu madhiri niraya leudhungal ..valthukkal..

கதிர் said...

நன்றி கார்த்திக்!

லொடுக்கு said...

//என்ன லொடுக்கு..? கருத்துக்களை அள்ளி வீசவேணாமா..?
//

நான் என்னத்த புதுசா சொல்றது. அதான் மக்கள் அள்ளி வீசிருச்சே. மொத்தத்துல நல்லா இருந்துச்சு. சிலாகித்து வாசித்தேன். :)

போதுமாவோய்??

Unknown said...

தம்பி படிச்சுப்புட்டு சிப்பு சிப்பா வருதுப்போ

கதிர் said...

//தம்பி படிச்சுப்புட்டு சிப்பு சிப்பா வருதுப்போ//

சிரிக்கறது நல்லதுதாங்க! உங்களுக்கே சிரிப்பு வருதா!

அப்போ சந்தோஷம்!

கசி said...

ரொம்ப நல்லா இருந்துது.

கதிர் said...

//ரொம்ப நல்லா இருந்துது. //

வாங்க ராதாராகவன்! வருகைக்கு நன்றி!
தொடர்ந்து வாருங்கள்!

கைப்புள்ள said...

தம்பி,
உங்க ப்ளாக்குக்கு வந்தா நல்லா சிரிக்க வச்சிடறீங்க. இந்தப் பதிவும் நல்ல காமெடியா இருந்துச்சு.அத அப்படியே தூக்கி மேலே வைங்க. Keep it upனு சொன்னேன்.

:))


//டேய் சிவா, காத கொண்டாடா இங்க!

எதுக்கு? நீ லொள்ளு புடிச்சவன் போன முறை
இதே மாதிரி சொல்லி எங்காதுல கத்தின//
ஆரம்பமே சூப்பர்

கதிர் said...

//கைப்புள்ள said...
தம்பி,
உங்க ப்ளாக்குக்கு வந்தா நல்லா சிரிக்க வச்சிடறீங்க. இந்தப் பதிவும் நல்ல காமெடியா இருந்துச்சு.அத அப்படியே தூக்கி மேலே வைங்க. Keep it upனு சொன்னேன்.

:))//

ரொம்ப நன்றீ கைப்புள்ள, என்ன இருந்தாலும் உங்க லெவல்ல எழுத முடியாது, உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, அடிக்கடி வாங்க!

Anonymous said...

சூரியனுக்குட் டார்ச்சைப் பிடிச்சிகிட்டு வந்தேன்.. நல்லார்ந்துச்சு... அடுத்ததுக்கு லிங்கு?

கதிர் said...

டேங்கீஸ் பொன்ஸக்கா!!

லிங்கு போட்டுகிட்டே இருக்கேன்!

Anonymous said...

story nalla irukku....nalla comedya kooda

கதிர் said...

வாங்க கலா! உங்க கருத்துக்கு நன்றிங்க. அது கதை இல்ல நிஜம்!

என்னோட அனுபவமா சொன்னா படிக்கறதுல ஒரு சுவாரசியம் இருக்காதென்னு கதை மாதிரி எழுதினேன்.

வருகைக்கு நன்றி.

Anonymous said...

namba mudiyalppa - ethukuthan school kku poninganu theriyala

innum evlo vachi irukinga

nalla ilamai paruvathai anupavithu
irukinga - ippa ninacha vedikkai yay irrukum illa -

eliya pudikka poyee pillaiyar piditha kathai yai - kinaru thonda pootham kilampiya kathai yai -irrukulla - is it correct -
eppadi irunthathu ungal ennangal - eppa neenga periya aluthan ponga
always you were the centre of attraction -isn't it
bask

சுரேகா.. said...

சூப்பர் தம்பி!

கதைன்னா இப்படித்தான்
சொல்லணும்!

வாலிப வயசு
நறுக்குன்னு இருக்கு!

வாழ்த்துக்கள்!

சுரேகா.. said...

அப்ப இது
கதை இல்லையா?


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

:)