எல்லையற்ற அன்பு கொள்வோம்

Thursday, September 28, 2006

Enything for நமீதா!!!

நமீதா கூட ஒரு தபா சோறு திங்க போட்டி
வச்சாங்களாம் ஒரு மீஜிக் சேனல்காரங்க.
அதாவது இந்த போட்டியில செயிக்கிறவங்க நமீதா
கூட உக்காந்து ஒரு நைட்டு புல்லா சோறு
திங்கலாமாம். இங்கிலிபீசுல இதுக்கு பேரு கூட
என்னவோ டேட்டிங்னு சொல்றாங்க. இந்த
போட்டிக்கு எத்தன பேர் கலந்துகிட்டு
இருப்பாங்கன்னு நினைக்கிறீங்க?

ஆறாயிரம் பேர் கலந்துகிட்டாங்களாம்!

Image Hosted by ImageShack.us

நம்ம ஊர்லதான் போலீசுக்கு ஆள் எடுக்கணும்னாலும்
குமிஞ்சிடுவானுங்க, சினிமாக்கு ஆள் எடுக்கணும்னாலும்
குமிஞ்சிடுவானுங்க. என்ன ஏதுன்னே தெரியாது ஆனா
வேடிக்க பாக்க கும்பலா நிப்பானுங்க. இந்த மாதிரி
சேவைய தொடர்ந்து செய்ய போறோம்னு S.S மீஜிக்
காரங்க சொல்றாங்க.

வெளங்கிரும்டோய்!

சரி போட்டில என்ன நடந்ததுன்னு பாக்கலாம்.

ஆறாயிரம் பேர வடிகட்டி ஆறாக்கினாங்க. அந்த
ஆறு பேர்ல சோறு பொங்க போற ஒரு அதிர்ஷ்டசாலிய
தேர்ந்தெடுக்கறதில சேனல்காரங்களே குழம்பிட்டதினால
அந்த பொறுப்ப நமீதா அம்மையார்கிட்டயே விட்டுட்டாங்க!

அந்த ஆறு பேரையும் டான்ஸ் ஆட விட்டு வேடிக்க
பாத்தாங்க அம்மையார். அந்த துடிப்பான இளைஞர்களும்
அம்மையார்கூட எப்படியாச்சும் சோறு பொங்கிடணும்னு
போட்டி போட்டுகிட்டு ஓரொண்ணும் ஒண்ணு, இம்மாம்
பெரிய பஞ்சு மிட்டாய், வருவீயா வரமாட்டியா போன்ற
கருத்தான பாடல்களுக்கு (உ)டான்ஸ் ஆடினாங்க.

யாரை பிக்கிக்கறதுன்னு அம்மையாருக்கே டவுட்டு
வந்திடுச்சாம் அந்த அளவுக்கு கலக்கிட்டாங்களாம்
நம்ம எளசுங்க. சரி பொது அறிவு போட்டி வச்சி
தேர்ந்தெடுக்கலாம்ணு அம்மணிக்கு தோணுச்சாம்!

எங்க வீட்ல எத்தினி நாய் இருக்கு?

இந்த பொ(றி)து அறிவு அடில கலங்கிப்போய்
வெடை தெரியாம பெக்கபெக்கன்னு முழிச்சானுங்க.
அட இதுகூட தெரியாதா? நாலு நாய்குட்டி வளக்கறேன்னு
சொல்லி கெக்கப்பிக்கேன்னு சிரிச்சுதாம் நமீதாகுட்டி
(உன்னையும் சேத்து ஒரு பன்னிகுட்டி)

சரி என்கிட்ட யாரு ஐ லவ் யூ னு வித்யாசமா
சொல்றீங்களோ அவங்கதான் அதிர்ஷ்டசாலிங்கோன்னு
சொல்லிபுடுச்சி, ஆறு பேர்ல ஒருத்தல் அவ கைல
கால்ல உழுந்து ரோசாப்பூவா காமிச்சி கெலிச்சிட்டான்.

இதில ஜகா வாங்கின அஞ்சு பேருக்கும் காதில பயங்கர
புகையாம். அடப்பாவிங்களா!

அப்புறம் என்ன??

அந்த ஒருத்தன் நமீதா கூட சோறு மட்டும்
பொங்கினானாம் ஐந்து நட்சத்திர விடுதியில்.

நாட்டின் சுதந்திரதின கொடியேத்தணும்னா
குமிவானுங்களா இவனுங்க.

17 comments:

ஆவி அம்மணி said...

//நாட்டின் சுதந்திரதின கொடியேத்தணும்னா
குமிவானுங்களா இவனுங்க//

கொடியேற்றும் விழாவிற்கு நம்ம நமி வராங்கன்னு அறிவிச்சுப் பாருங்க! எத்தினி பேரு குமிகிறார்கள் என்று!

கதிர் said...

ஆவி,

அதுக்கும் நமீதானா? அப்படியே அறிவிச்சிட்டா ஆயிரக்கணக்கான் லட்டுக்க்கும், முட்டாய்க்கும் எங்க போறது??

Anonymous said...

இதப்பத்தி நம்ம தானை தலைவர் திருமாவுக்கு தெரியுமா

கதிர் said...

//இதப்பத்தி நம்ம தானை தலைவர் திருமாவுக்கு தெரியுமா//

எந்த கட்சிக்கு தாவலாம்னு யோசிச்சிட்டுருந்த யோசனைல பிசியா இருந்துட்டாரு.

ஜொள்ளுப்பாண்டி said...

என் தானையதலைவி நமிதாவைப்பற்றி எழுதிவிட்டு தேவையில்லாமல் கொடியேற்றத்தை பற்றி போட்டு ஏன் தம்பி தடுமாறுறீங்க ? கமான்! எல்லாம் பஞ்சுமிட்டாய் செய்யும் மாயம் :)))

ஆவி அம்மணி said...

//அப்படியே அறிவிச்சிட்டா ஆயிரக்கணக்கான் லட்டுக்க்கும், முட்டாய்க்கும் எங்க போறது??
//

தம்பி,

நம்ம நமி இருக்கும்போது யாராச்சும் லட்டு, முட்டாயெல்லாம் அல்பத்தனமா கேப்பாங்களா? அவங்களைப் பார்த்தா போதாதா? உங்க ஜென்மம் சாபல்யம் அடைஞ்சிடாதா?

கதிர் said...

//என் தானையதலைவி நமிதாவைப்பற்றி எழுதிவிட்டு தேவையில்லாமல் கொடியேற்றத்தை பற்றி போட்டு ஏன் தம்பி தடுமாறுறீங்க ? கமான்! எல்லாம் பஞ்சுமிட்டாய் செய்யும் மாயம் :)))//


நான் தடுமாறல ஜொள்ளு. மத்தவங்க தடுமாறிட்டங்களேன்னு வருத்தப்படறேன்!

முதல் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வருகை தரவும்

கதிர் said...

//நம்ம நமி இருக்கும்போது யாராச்சும் லட்டு, முட்டாயெல்லாம் அல்பத்தனமா கேப்பாங்களா? அவங்களைப் பார்த்தா போதாதா? உங்க ஜென்மம் சாபல்யம் அடைஞ்சிடாதா? //

நான் கேக்கறனே. அதான் பிரச்சினையே.

நாமக்கல் சிபி said...

ஆமாம்... இத உக்காந்து ஆராய்ச்சி பண்ணிருக்கயே... உன்ன என்னா பண்றது ;)

லொடுக்கு said...

நல்ல ஆராய்ச்சி!! தொடர வாழ்த்துக்கள்!

கதிர் said...

//ஆமாம்... இத உக்காந்து ஆராய்ச்சி பண்ணிருக்கயே... உன்ன என்னா பண்றது ;)//

என்னா பண்றது நீயே சொல்லு வெட்டி!

//நல்ல ஆராய்ச்சி!! தொடர வாழ்த்துக்கள்! //

இது நல்ல ஆராய்ச்சியா?, இதுல வேற தொடரணுமா??

நல்லா இருக்கே லொடுக்கு, இத எழுதின பாவத்துக்கு வழக்கமா வர்றவங்களே இனிமே வரவேணாம்னனு முடிவு பண்ணி இருப்பாங்க.

ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல!!

U.P.Tharsan said...

தமிழா புல்லரிக்குது. என்னும் சில வருடங்களில் முருகனும் பிள்ளையாரும் அம்போ என இருக்க சனம் எல்லாம் நமிதா கோயிலுக்கும் / குஸ்பூ கோயிலுக்கும் போகபோறாங்கள்.

MyFriend said...

நீங்க என்ன எழுதியிருக்கீங்கன்னே தெரியலை தம்பிண்ணே!! இது என்ன மொழி???

காயத்ரி சித்தார்த் said...

என்ன ஒரு பொறுப்புணர்ச்சி! ஆனா எவனும் திருந்த போறதில்ல தம்பி. நீங்க டென்ஷன் ஆய்க்காதீங்க!

அபி அப்பா said...

தம்பி வரவர நிறைய வெரைட்டி கொடுக்கறீங்க அசத்துங்க போங்க!

ALIF AHAMED said...

:)

Anonymous said...

தம்பி

பதிவு முழுக்க 'நான் அவனில்லாமல்' போன சோகம் பொங்கி வழியுது. நல்லா இருடே!! :-)

சாத்தான்குளத்தான்