எல்லையற்ற அன்பு கொள்வோம்

Thursday, September 21, 2006

ரெண்டாவது ஆட்டம் - வாலிப வயசு!!! - 2

திஸ்கி

இந்த பதிவு கொஞ்சம் கவிச்சியாதான் இருக்கும்.
அதனால முன்னாடியே சொல்லிடறேன். பின்னாடி
யாரும் குத்தம் சொல்லக்கூடாது சொல்லிப்புட்டேன்.

பள்ளி தேர்வுகள் முடிந்தவுடன் நடந்த சம்பவம் இது.

அதான் பப்ளிக் எக்ஸாம் முடிஞ்சாச்சே அப்புறம்
ஏண்டா ரெண்டாவது ஆட்டம் சினிமாக்கு
வரமாட்டேனு சொல்றே?

அவ்ளோ தூரெமெல்லாம் ராத்திரில வெளில விட
மாட்டாங்கடா பாபு. வேணுமின்னா நம்ம ஊரு
கொட்டாயிக்கு போவோம்.

இங்க வெள்ளை படந்தாண்டா ஓடுது எந்நேரமும்
மூக்க சிந்திகிட்டு இருப்பானுங்க! அங்கிட்டு பேய்
படம் ஓடுதுடா பேரு கூட "வா அருகில் வா". சித்ரா
கூட வரன்னு சொல்லியிருக்காடா மச்சி!

அதான பாத்தேன், எலி ஏன் ஜீன்ஸ் போட்டுகிட்டு
குறுக்கும் நெடுக்கும் ஓடுதுன்னு! ஆனா ஒண்ணு
நீதான் போகையிலயும் வரையிலயும் சைக்கிள
மிதிக்கணும் சொல்லிட்டேன். காசு வச்சிருக்கியா?

அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் கெளம்புடா.

சரி சாப்பாடை முடிச்சுட்டு வீட்ல சொல்லிட்டு வரேன்
ரெடியா இரு. துரைசாமி கடையாண்ட வந்துரு

ம்ம்..

எத்தனை பில்டர் வாங்கின?

அரை பாக்கெட், போதுமா?

பத்தலன்னா கொட்டாயில வாங்கிக்கலாம்.

இவ்ளோ இருட்டா இருக்குதே பேய் படம் வேற
பாத்தபிறகு தனியா வீட்டுக்கு போயிடுவியா?

யாரபாத்து என்னா கேக்குற, சுடுகாட்டுக்கு பக்கத்தால
இருக்குற எங்க கொள்ளில நான் காவல் இருந்திருக்கேன்
தெரியும்ல.

சரி, சரி வந்து சைக்கிள மிதி.

சிவா இந்த அரச மரத்த தாண்டி தனியா போயிடுவியா?

அதெல்லாம் பாத்துக்கலாம் வா மச்சி!

நீ போயிட்டு சைக்கிள விட்டுட்டு டோக்கன் போடு
நான் சீட்டு வாங்கிட்டு நிக்கிறேன் வந்துடு.

ம்ம்

நல்ல வேள இன்னும் படம் போடல விளக்கும்
அணைக்கல. எங்க உக்காந்திருக்கா பாரு சிவா.

சித்ரா பொம்பளைங்க வரிசைல அவங்க அம்மா
கூட உக்காந்திருக்கா, ஒண்ணும் புடுங்க முடியாது
அப்படி ஆம்பளைங்க சீட்டுல உக்காருடா.

இடைவேளைலயாவது பேச முடியுமா?

இப்ப பேசி என்னத்த கிழிக்க போற நீ, ஒழுங்கா
படத்த பாருடா! வயசுக்கு வந்த பொண்ணு தனியா
ரெண்டாவது ஆட்டத்துக்கு வருவாளா? யோசிச்சு
பாத்துட்டு வரவேண்டியதுதான.

படம் பயங்கரமாவே இருந்துச்சி, நடுவில பாபு
கத்தினதில பின்னாடி இருந்தவன் முன்னாடி வந்து
திட்டிட்டு போனான்.

சிவா, படம் இவ்வளவு பயங்கரமா இருக்கும்னு
நினைச்சே பாக்கலடா! இப்போ எப்படி வீட்டுக்கு
போறதுன்னே தெரியலை வயித்த வேற கலக்குதுடா!

வா, வந்து சைக்கிள மிதி. இந்த சாக்கு சொல்ற
வேலை எல்லாம் இங்க வேணாம்.

எல்லாரும் படம் விட்டு போயிட்டாங்க இன்னும்
என்னடா பண்ணிகிட்டு இருக்க, வா போகலாம்.

ஒம்மொகத்திலயே தெரியுதுடா நீ பயந்துட்டேன்னு
இதுல இவரு காவல் இருந்தாராம், எவன்கிட்ட
கதை விடற நீ.

மச்சி சிவா ஒரு அஞ்சு நிமிஷம் இருடா அவசரமா
எம்.ஜி.ஆர பாக்க போகணும்டா!

கருமம் புடிச்சவனே அத தியேட்டருக்குள்ளவே
முடிக்க வேண்டியதுதான. போய் வா நான்
இங்கயே நிக்கிறேன்.

முடிச்சுட்டியா?

ம்ம் ஆனா தண்ணி இல்லடா,

அதுக்கு எங்க போறது நானு. இதெல்லாம் முன்னாடியே
யோசிக்கணும். இப்ப வந்து கேட்டா?

அப்படியே நடந்து வா வீட்டுக்கு போயிறலாம்!

இல்லடா சிவா தியேட்டர் இன்னும் மூடி இருக்க
மாட்டான் அங்க போகலாம்.

சரி, மூஞ்ச ஏன் அப்படி வச்சிருக்க! இயல்பா இரு.

அய்யயோ தியேட்டர் மூடிட்டாண்டா பாபு!

நல்லவேளை பாய் இன்னும் கடை மூடல அங்க
போலாம்.

பாய் ரெண்டு வாட்டர் பாக்கெட் குடுங்க.

தண்ணி பாக்கெட் காலி தம்பி, ரஸ்னா இருக்கு
தரட்டுமா?

ரஸ்னாவா?

பாபு ரஸ்னாதான் இருக்காம், அட்ஜஸ்ட்
பண்ணிக்கறியா?

என்னது, அட்ஜஸ்ட் பண்ணிக்கறதா...

என்ன யோசிக்கிற....

வேற வழியே இல்ல மச்சி...

சரி நான் அங்கிட்டு நிக்கிறேன் வாங்கிட்டு வந்திரு.

இந்தாடா..

முடிச்சுட்டியா?

ம்ம்

சைக்கிளை நானே எடுத்தேன். ரொம்ப நேரம்
எதுவுமே பேசலை.

சிவா, ஒரு விஷயம் சொல்லட்டுமா!

சொல்லு.

இங்க நடந்த விஷயத்தை தயவு செஞ்சி யார்கிட்டயும்
சொல்லாத மச்சி.

ச்ச்சே இத போய் யாராவது சொல்வாங்களா! அப்படி
எல்லாம் செய்ய மாட்டேன் கவலைப்படாதடா!!

**********************************************************

இந்த மேட்டருக்கப்புறம் ரஸ்னா விளம்பரம் வந்தாவே
எங்க வீட்டுல நான் மட்டும் விழுந்து விழுந்து சிரிப்பேன்
எல்லாரும் ஆச்சரியமா பாப்பாங்க!

26 comments:

Santhosh said...

:))

நாமக்கல் சிபி said...

தம்பி,
கலக்கட்டப்போ!!!

ஆனால் இதுக்கு மேல ரஸ்னாவ பாத்தா நமக்கும் சிரிப்பு வர போகுது!!!

கப்பி | Kappi said...

:))

6 கிளாஸ் ரஸ்னா எப்படியெல்லாம் பயன்படுதுடா சாமி ;)

//பின்னாடி
யாரும் குத்தம் சொல்லக்கூடாது சொல்லிப்புட்டேன்//

அப்பவே மைல்டா ஒரு டவுட் வந்துச்சு :D

பி.வே: பின்னூட்டம் pop-up விண்டோ-ல இருந்து மாத்திடுங்களேன்...

கதிர் said...

நல்ல வேளை யாரும் திட்டல!!அதுவரைக்கும் சந்தோஷம்!

என்ன சந்தோஷ் வெறுமனே சிரிச்சுட்டு போயிட்டிங்க!

//ஆனால் இதுக்கு மேல ரஸ்னாவ பாத்தா நமக்கும் சிரிப்பு வர போகுது!!! //

இவ்வளவு நாள் நான் சிரிச்சுகிட்டு இருந்தேன். இனிமேல் இத படிக்கற எல்லாரும் சிரிப்பாங்க :))

//6 கிளாஸ் ரஸ்னா எப்படியெல்லாம் பயன்படுதுடா சாமி ;)//

ஆபத்துக்கு பாவமில்ல சாமி!

//அப்பவே மைல்டா ஒரு டவுட் வந்துச்சு :D//

பெரிய ஆளுப்பா கப்பி நீயி!

கப்பி | Kappi said...

கேட்டதும் மாற்றியவரே தம்பி..
துபாயின் நாயகரே தம்பி...
:))

கதிர் said...

//கேட்டதும் மாற்றியவரே தம்பி..
துபாயின் நாயகரே தம்பி...
:))//

கூச்சமா இருக்கு!!!

துளசி கோபால் said...

அய்யோ, ரஸ்னாவுக்கு இப்படி எல்லாம்கூட 'பயன்' இருக்கா? :-))))))

கதிர் said...

//அய்யோ, ரஸ்னாவுக்கு இப்படி எல்லாம்கூட 'பயன்' இருக்கா? :))))))//

இப்படியும் இருந்திச்சு, அதுக்கப்புறம் அவன் எங்க பாத்தாலும் ரஸ்னா ன்னே கூப்பிடுவோம்!

கதிர் said...

என் நண்பன் மட்டும் இந்த பதிவை பாத்தாண்ணா மன்சொடைஞ்சி போயிடுவான். நல்லவேளை அவனுக்கு இந்த ஈமெயில், இன்டர்நெட் எல்லாம் தெரியாது.

கார்த்திக் பிரபு said...

thambi nan vera ennamo ninaichane..nalla thmaasu

கதிர் said...

//thambi nan vera ennamo ninaichane..nalla thmaasu //

வேற என்ன நினைச்சிங்க? சொல்லுங்க கார்த்திக்!

Anonymous said...

என் தயாரிப்புகளை இழிவுபடுத்தும் செயலை செய்ததால் உங்கள் மீது நஷ்ட ஈடு வழக்கு போடப்படும்!

கதிர் said...

மன்னிச்சுடுங்க மொதலாளி ஏதோ தப்பு நடந்து போச்சு!

இராம்/Raam said...

தம்பி,

சரியான தமாஷ்ப்பா...ஆனா இனிமே ரஸ்னா பார்த்தாலே சிரிப்பு வரப்போகுதுப்பா உன்னோட இந்த பதிவே படிச்சிட்டு....... :-)

கதிர் said...

//சரியான தமாஷ்ப்பா...ஆனா இனிமே ரஸ்னா பார்த்தாலே சிரிப்பு வரப்போகுதுப்பா உன்னோட இந்த பதிவே படிச்சிட்டு....... :-) //

நன்றி ராம்!

கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு காமெடி பண்றோம்னு நினைச்சுகிட்டு கவிச்சி பண்ணிட்டமோன்னு!

அப்படி இருந்தா சொல்லிடுங்க மக்களே அடுத்த முறை திருத்திக்கிறேன்.

கதிர் said...

ரஸ்னா கம்பெனி ஓனரெல்லாம் நம்ம வீட்டுப்பக்கம் வந்தது சந்தோஷமா இருக்கு! அப்படியே கோக், பெப்ஸி, கம்பெனி ஓனரெல்லாம் வரிசையா வந்து வாழ்த்து சொல்லிட்டு போயிடுங்க!

Anonymous said...

இது உங்க சொந்த அனுபவம்தானே?...
அது நீதானா...
ஆமா எறும்பு மொச்சிருக்குமே?. என்ன பண்ணிங்க நீங்க.

மேக்ரேமண்டையன்.

கதிர் said...

வாய்யா மேக்ரோ!

//இது உங்க சொந்த அனுபவம்தானே?...
அது நீதானா...//

இது சொந்த அனுபவம் இல்ல, ஆனால் நான் நேர்ல பார்த்த அனுபவம்.

//ஆமா எறும்பு மொச்சிருக்குமே?. என்ன பண்ணிங்க நீங்க.//

அந்த நேரத்தில எறும்புலாம் தூங்க போயிருச்சி அதனால கடிக்கல. ஆனால் பிசு பிசுன்னு இருக்குன்னு சொன்னான்!

Anonymous said...

உள்ளேன் ஐயா!

கைப்புள்ள said...

//இந்த மேட்டருக்கப்புறம் ரஸ்னா விளம்பரம் வந்தாவே
எங்க வீட்டுல நான் மட்டும் விழுந்து விழுந்து சிரிப்பேன்
எல்லாரும் ஆச்சரியமா பாப்பாங்க!//

இனிமே நானும் தான்.

படிச்சிட்டு கண்ணுல தண்ணி கொட்டுற அளவுக்கு சிரிச்சேன். சூப்பர் தம்பி. கலக்கல்ஸ் ஆஃப் துபாய்.
:))

கதிர் said...

//இனிமே நானும் தான்.

படிச்சிட்டு கண்ணுல தண்ணி கொட்டுற அளவுக்கு சிரிச்சேன். சூப்பர் தம்பி. கலக்கல்ஸ் ஆஃப் துபாய்.
:)) //

ஆஹா நீங்களே சிரிக்கறிங்கன்னா இது நல்ல காமெடி பதிவுதான்.

மிக்க நன்றீ கைப்புள்ள!

Anonymous said...

I love you rasna--->siva

சினேகிதி said...

ரஸ்னா???? is it a drink? yarkidaum solamadan endidu ipa ellaridaum solidenga enna hmmm.

கதிர் said...

//ரஸ்னா???? is it a drink? yarkidaum solamadan endidu ipa ellaridaum solidenga enna hmmm. //


வாங்க சினேகிதி,

ஆமாங்க ரஸ்னான்றது ஒரு குளிர்பானம் வெயில்காலத்துல எல்லா பொட்டிகடையிலயும் கிடைக்கும். 2 ரெண்டு ரூபாதான், வாட்டர்பாக்கெட் சைஸ்ல இருக்கும். குடிக்கவும் நல்லா டேஸ்டா இருக்கும்.

ஆனா நான் ரஸ்னா குடிக்கறத நிறுத்திட்டேன். ஒன்லி நன்னாரி சர்பத் தான்.

Santhosh said...

தம்பி,
ரெண்டாவது முறையும் படிச்சி ரசிச்சி சிரிச்சேன். ஆனா ரஸ்னா எனக்கு புடிச்ச டிரிங்க் இப்படி பண்ணிட்டியேபா :(.

அபி அப்பா said...

நான் ரஸ்னா குடிப்பதை இத்துடன் நிறுத்திகொள்கிறேன் என்பதை மிக தாழ்மையுடன்.... போங்கப்பா நா விரும்பி குடிக்கும் ரஸ்னாவுக்கு ஆப்பு வச்சுட்டியே தம்பி:-)))