எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, March 16, 2009

நாட்குறிப்பு போன்றவை 1

சென்ற வார இறுதியில் வாசுதேவநல்லூர் செல்வதற்காக அரசு விரைவுப்பேருந்தில்
ஏறி அமர்ந்திருந்தேன். மிகப்பெரும்பாலும் அது ஓட்டை ஒடிசலாக இருந்தாலும்
தொல்லைக்காட்சி பொட்டி இல்லையென்றால் அரசுப்பேருந்தில் மட்டுமே பயணம்
செய்யும் கெட்ட பழக்கம் எனக்கு உண்டு. இப்படி செல்லும்போதெல்லாம் எனக்கு
ஒரு சந்தேகம் வருவதுண்டு அது வீட்டிலிருந்து கிளம்பும்போதே இரண்டு தூக்க
மாத்திரையை வாயில் போட்டு சப்பிக்கொண்டே வருவார்களா என்பதுதான்.
இருக்கையில் அமர்ந்த மறுவினாடியில் குறட்டையை கெளப்புகிறார்கள். பலவருடங்களாக
ஒரு வியாதி என்னை பாடாய் படுத்துகிறது பேருந்து, விமானம், ரயில், இன்னபிற
எந்த வாகனங்களில் சென்றாலும் அது எத்தனை மணி நேரம் என்றாலும் இம்மி
அளவு தூக்கம் வராது. என்றாவது ஒருநாள் வந்தால் அது பேரதிசயம்.

எனக்கு பக்கத்து இருக்கை முன்பதிவு செய்தவர் தாம்பரத்தில்தான் ஏறுவார் என்றார்கள்
கோயம்பேட்டிலிருந்து தாம்பரத்துக்கு வர அந்த விரைவுப்பேருந்து எடுத்துக்கொண்டது
120 நிமிடங்கள். அதற்குள் குளிர்சாதனம் வேலை செய்யல, துண்டு குடுக்கல, சீட்டு
நாறுதுன்னு ஏகப்பட்ட புகார்கள். எனக்கு ஒரு புகாரும் இல்லை ஆனால் ஒரு வேண்டுதல்
இருந்தது. முன்பதிவு இருக்கையில் எதாவது ஒரு அகண்ட உருவமில்லாத ஆசாமி
மேலதிகமாக ஒரு சுமாரான பிகர் அமர்ந்தால் பயணம் சுகப்படுமே என்று வேடப்பாரிடம்
மனுப்போட்டபடி அமர்ந்திருந்தென். வேடப்பாருக்கு முந்தின வேண்டுதல்களே மூன்று
குவார்ட்டர்கள் பாக்கி உள்ளது. இதுவும் சேர்ந்ததென்றால் ஒரு ஃபுல்லாக வைத்து
விடலாம் என்று எண்ணத்தில் இருந்தபோது ஒரு சிவப்பான ஆள் வந்து உட்கார்ந்தார்.
குமாஸ்தா முகம். மண்ண போட்டுட்டியே நீயெல்லாம் ஒரு குலதெய்வமா என்று
மனதுக்குள் சபித்துக்கொண்டேன்.

வடகலையா தென்கலையா என்று பிரித்தரிவதில் நான் இன்னும் தேர்ச்சி பெறவில்லை.
பக்கத்தில் உட்கார்ந்த நபர் மேலே கைபட்டதும் அசூயையாக உணர்ந்தாரா என்னவோ
ஏளனமாக என்னைப்பார்த்தார். திரும்பி ஒருக்களித்துப்படுத்துக்கொண்டு குறட்டை விட
ஆரம்பித்தார். ஒருகட்டத்திற்குமேல் ஒன்று இரண்டாகி இரண்டு இருபதாகிப்போனது.
எனக்குப்பொறுக்கவில்லை. என் தொண்டையிலிருந்து அதிகபட்ச ஒலியினால் குறட்டை
விட ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட அது ஊளையினைப்போல இருந்திருக்கும்போல
அடித்து பிடித்து எழுந்துவிட்டனர் நான் ஒன்றுமே அறியாதவன் போல கண்ணை மூடி
அமர்ந்திருந்தேன்.

போகவர 24 மணி நேரப்பயணத்தில் நான் பேசிய வார்த்தைகள் என்னவென்று
யோசித்துப்பார்த்தேன். செல்பேசியில் பேசிய ஓரிருவார்த்தைகள் தவிர ஒருவார்த்தைகூட
பேசவில்லை.


கடந்த இரண்டு நாள் மழையில் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது
என்றார்கள். குற்றாலத்திற்கு நான் சென்றதே இல்லை போய்ப்பார்த்தேன். விக்ரமாதித்யன்
கவிதை நினைவுக்கு வந்தது. ஆசை தீர குளித்துமுடித்து வெளியேவந்தேன். சாலையில்
ஒருவர் டிவிஎஸ் அம்பதில் பதனி விற்றுக்கொண்டிருந்தார். குடிக்கலாம் என்று அருகில்
சென்றால் கள் இருக்குது குடிச்சி பாக்கறிங்களானே என்றார். தெய்வமே குடுங்க என்றேன்.
குடுத்தார் சர்க்கரைக் கரைசல் அது. எதுவும் சொல்லாமல் காசைக்கொடுத்துவிட்டு
"அண்ணே கள்ளுக்காரன காலைல எழுப்பி கூட்டிகிட்டே போய் கள்ளு குடிச்ச ஆளுங்க
நாங்க" என்றேன். காசுகுடுத்தாச்சில்ல எடத்த காலிபண்ணுடே என்கிறார்.


மனிதர்களுடன் சேர்ந்து குரங்குகளும் சிக்கன் சாப்பிட ஆரம்பித்துவிட்டன. அதுவும்
எலும்பை மரத்தின் மேலே எடுத்துபோய் கடித்து நம் தலையிலேயே குறிபார்த்து
எறியவும் தெரிகிறது அதற்கு. முத்துலிங்கத்தின் கட்டுரை ஒன்றுல் மேஜரது வளர்ப்பு
குரங்கு குறிப்பிட்ட நேரத்தில் பைப்பை திறந்து குளித்துவிட்டுப்போகும் என்று படித்த
ஞாபகம். வாசுதேவநல்லூர் அடுத்த தலையணை என்ற ஓடைக்கு நண்பர்களுடன்
சென்று அருவியில் குளித்துவிட்டு அங்கேயே சமையல் செய்து காட்டின் நடுவில்
உணவருந்தினோம். வழியில் சற்றுமுன்னர் யானை வந்துவிட்டுப்போன தடயங்கள்
இருந்தன. சூடான யானைச்சாணத்தை ஒருவர் பார்சல் கட்டி எடுத்துப்போனார்.
வாசுதேவநல்லூரில் பார்க்கும் வயல்களில் எல்லாம் மயில்களாக உள்ளது. ஒன்று
கூட தோகைவிரித்து ஆடவில்லை.

காதல் வைபோகமே பாடல் பார்த்தேன். நமீதா இல்லாவிட்டால் சரக்குகுமார், சுந்தர் சி
போன்றவர்கள் சினிமா அனாதைகள் ஆகிவிடுவார்கள் போல.

கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் கிட்டத்தட்ட வாசித்து முடித்தாயிற்று.
வாசித்து நிமிர்ந்து வலைப்பூ படிக்க ஆரம்பித்தால் ஸ்க்ரோல் பண்ணமட்டுமே முடிகிறது.
தலைப்புகூட மனதில் தங்குவதில்லை.

பின்குறிப்பு: தம்பினு இன்னொருத்தர் எழுதறாங்கண்ணே, என்ன ஏதுன்னு விசாரிங்க,
பகுமானமா இருந்துக்கப்பு, உம்பேர்ல வேற யாரோ பாத்தனே தம்பி, தம்பி... எங்கய்யா
ஆளையே காணும் கேப்புல உன்பேர்ல இன்னொருத்தர பாத்தனேப்பா நிஜார கெட்டியா
புடிச்சக்கப்பு என்று நண்பர்கள் சொன்னார்கள்.

எனக்கே நீண்ட நாளாக இதை மாற்றுவதில் எண்ணம் அதற்கான காரணங்கள் மூன்று.
என்னப்பா தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரன் மாதிரி பேர் வெச்சுகிட்டியா...?
மாதவன்னு நினைப்பா...?
முத்துன மாங்கா மாதிரி இருந்துகிட்டு தம்பினு பேர் வெச்சிருக்கியே என்னப்பா நியாயம்?

புதுசா வந்திருக்கும்(?) தம்பி என்ற நண்பருக்காகவும் ரொம்ப நாளா மனசுல இருக்கற என்
எண்ணத்துக்காகவும் நானே வெச்சுகிட்ட இந்த பேர மாத்தி என் பேரையே வெச்சுகிட
போறேன்.

சுயகுறிப்பு, சோறுபொங்கி சாப்பிட்டது, இன்னபிற குறிப்புகள் எழுதறத விடணும்னு
நினைச்சாலும் முடியல. எழுறதே இல்லையே ஏம்பா கதிரு என்னு கேட்ட அந்த
இரண்டு நல்ல(?) உள்ளங்களுக்கும் இந்தப்பதிவு சமர்ப்பணம்.

27 comments:

கீழை ராஸா said...

சில வருடங்களுக்கு முன் தங்கள் பதிவு மின் அஞ்சல் மூலம் கிடைக்கபெற்று வாசித்திருக்கிறேன்...அதன் பின் பதிவராகிய ( நானும் பதிவர் தாயா நம்புங்க)பின் நான் உலவும் நந்தவனங்கள் லிஸ்டில் உங்கள் ப்ளாக்கும் பதிவு செய்திருக்கிறேன்( அதில் மொத்தமே நான்கு தான்...அதில் நீங்கள் மட்டும் அறிமுக மில்லாதவர்)அவ்வப்போது பார்ப்பேன்...இது நாட்குறிப்பு என்பதை விட மாதக்குறிப்பு என்பதே சரி...இல்லையா தம்பி (எ) கதிர்...

கதிர் said...

இந்த நாட்குறிப்புகள மாதம் ஒரு முறை (இந்த இடத்துல என்னோட சுறுசுறுப்ப நீங்க பாராட்டணும்) எழுதறததுனால அப்படிதான் தெரியும். இத நாட்குறிப்புன்னும் சொல்லலாம் நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்.

நன்றி ராஸா... தொடர்ந்து வாசித்து துன்பமுறவும்.

ஆயில்யன் said...

// என் தொண்டையிலிருந்து அதிகபட்ச ஒலியினால் குறட்டை
விட ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட அது ஊளையினைப்போல இருந்திருக்கும்போல
அடித்து பிடித்து எழுந்துவிட்டனர் நான் ஒன்றுமே அறியாதவன் போல கண்ணை மூடி
அமர்ந்திருந்தேன்.//
:)))

நானும் கூட பொறுக்கமாட்டாத தருணங்களில் இது மாதிரி செஞ்சிருக்கேனாக்கும் :)

ஆயில்யன் said...

// என் தொண்டையிலிருந்து அதிகபட்ச ஒலியினால் குறட்டை
விட ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட அது ஊளையினைப்போல இருந்திருக்கும்போல
அடித்து பிடித்து எழுந்துவிட்டனர் நான் ஒன்றுமே அறியாதவன் போல கண்ணை மூடி
அமர்ந்திருந்தேன்.//
:)))

நானும் கூட பொறுக்கமாட்டாத தருணங்களில் இது மாதிரி செஞ்சிருக்கேனாக்கும் :)

ஆயில்யன் said...

// என் தொண்டையிலிருந்து அதிகபட்ச ஒலியினால் குறட்டை
விட ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட அது ஊளையினைப்போல இருந்திருக்கும்போல
அடித்து பிடித்து எழுந்துவிட்டனர் நான் ஒன்றுமே அறியாதவன் போல கண்ணை மூடி
அமர்ந்திருந்தேன்.//
:)))

நானும் கூட பொறுக்கமாட்டாத தருணங்களில் இது மாதிரி செஞ்சிருக்கேனாக்கும் :)

இராம்/Raam said...

:) :) :)

வல்லிசிம்ஹன் said...

நல்வரவு தம்பி. காணோமே என்று பார்த்தேன்.

எத்தனை தம்பி வந்தாலும் (நான் பார்க்கவில்லை) நீங்கதான் தம்பி கதிர்:)

வால்பையன் said...

//"அண்ணே கள்ளுக்காரன காலைல எழுப்பி கூட்டிகிட்டே போய் கள்ளு குடிச்ச ஆளுங்க
நாங்க" என்றேன்.//

ஹே ஹே ஹே

நாங்கெல்லாம் அப்பவேவா?

வால்பையன் said...

அடிக்கடி எழுதுங்க தல

கதிர் said...

ஆயில்
நான் நெஜமாவே குறட்டை விடுவேன். நீங்களுமா...

ராம்...

இது என்ன ஏளன சிரிப்பா...

வல்லியம்மா,
மிக்க நன்றி

வால்பையன்
கண்டிப்பா எழுதுறேங்க தல

நாகை சிவா said...

//"அண்ணே கள்ளுக்காரன காலைல எழுப்பி கூட்டிகிட்டே போய் கள்ளு குடிச்ச ஆளுங்க நாங்க" என்றேன்.//

அதானே... இந்த சுற்றுலா தளங்களில் நடக்கும் மோசடி ரொம்பவே அநியாயம்ப்பா?

//இரண்டு நல்ல(?) உள்ளங்களுக்கும் இந்தப்பதிவு சமர்ப்பணம்.//

நல்ல வேளை உன்னை ஒரு நாள் லேட்டா பிங் பண்ணியதால் அந்த பாவச்செயலில் இருந்து தப்பித்தேன். ;)

Unknown said...

// "அண்ணே கள்ளுக்காரன காலைல எழுப்பி கூட்டிகிட்டே போய் கள்ளு குடிச்ச ஆளுங்க
நாங்க" என்றேன். காசுகுடுத்தாச்சில்ல எடத்த காலிபண்ணுடே என்கிறார்.//

தல மறுபடியும் ஒரு நட ந்ம்ம ஊருக்கு வந்து நல்ல பனமரத்துக்கள்லா பாத்து அடிசுட்டு போங்க

ரௌத்ரன் said...

welcome back கதிர்...வடகலையோ தென்கலையோ..குறட்டையோட நிறுத்திகிட்டாரேன்னு சந்தோசப்படுங்க..அலுவலகத்தில் என் டேமேஜர் ராம்ஸ்வாமிக்கிட்ட நான் மூக்க பொத்தி கிட்டு படுற பாடு எனக்கு தான் தெரியும் :)

கள்...இத வேற நெனப்பு மூட்டி விட்டுட்டீங்க..திருச்சியில் கல்லூரிக்கு பக்கத்திலேயே இனாம்குளத்தூரில் உணவு இடைவேளக்கு சென்று குடிப்போம்..இது கள்ளு சீசனா என்ன?..ம்..இந்த வாட்டி ஊருக்கு போய் விசாரணைய போட வேண்டியதான்...

தமிழன்-கறுப்பி... said...

அதென்னது அமீரகத்துல இருந்தா மட்டும்தான் எழுதுவேளா இங்கல்லாம் எழுத மாட்டேளா...

ரொம்ப நாளா பாக்க முடியலை...

தமிழன்-கறுப்பி... said...

எனக்கும் பிரயாணங்களில் தூங்குகிற பழக்கம் இருக்கிறது ஆனால் குறட்டை எல்லாம் இல்லை அதே போல எப்பொழுதும் தூங்குபவன் அல்ல அது பயணத்தை பொறுத்தது...

\\
"அண்ணே கள்ளுக்காரன காலைல எழுப்பி கூட்டிகிட்டே போய் கள்ளு குடிச்ச ஆளுங்க நாங்க"
\\

எனக்கெல்லாம் பழக்கமே இல்லை அண்ணே...

தமிழன்-கறுப்பி... said...

\\
காதல் வைபோகமே பாடல் பார்த்தேன். நமீதா இல்லாவிட்டால் சரக்குகுமார், சுந்தர் சி
போன்றவர்கள் சினிமா அனாதைகள் ஆகிவிடுவார்கள் போல.
\\

எனக்கும் பிடிக்கவில்லை ஆனால் அந்த பழைய பாடலை தேடிப்பிடித்து பார்த்தேன் ரசித்தேன்..
படம் சுவரில்லாத சித்திரங்கள்

பரத் said...

//வடகலையா தென்கலையா என்று பிரித்தரிவதில் நான் இன்னும் தேர்ச்சி பெறவில்லை.//
:-))))
//நமீதா இல்லாவிட்டால் சரக்குகுமார், சுந்தர் சி
போன்றவர்கள் சினிமா அனாதைகள் ஆகிவிடுவார்கள் போல.//
100% true :))

கதிர் said...

நல்ல வேளை உன்னை ஒரு நாள் லேட்டா பிங் பண்ணியதால் அந்த பாவச்செயலில் இருந்து தப்பித்தேன். ;)//

இப்ப மட்டும் தப்பிச்சதா நினைக்காத புலி உனக்கும் இதை சமர்ப்பிக்கிறேன். டெடிகேட் பண்றதுதான் இங்க ரொம்ப சாதாரணமாச்சே...

@கார்த்திக்

சட்டத்தை தகர்த்து உங்க ஏரியால கள் இறக்குறதா தினசரில பாத்தேன். அங்கே வர ஆவலா இருக்கேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

கதிர் said...

\\கள்...இத வேற நெனப்பு மூட்டி விட்டுட்டீங்க..திருச்சியில் கல்லூரிக்கு பக்கத்திலேயே இனாம்குளத்தூரில் உணவு இடைவேளக்கு சென்று குடிப்போம்..இது கள்ளு சீசனா என்ன?..ம்..இந்த வாட்டி ஊருக்கு போய் விசாரணைய போட வேண்டியதான்...//

ஆஹா எல்லாருமே இதத்தான் செஞ்சிருக்காங்களா... நானெல்லாம் இந்த மாதிரி போகும்போது கள்ளுப்பானைய கீழ போட்டு ஓடிப்போயிருவாங்க. நம்ம உருவத்த பாத்து போலிஸ்னு நெனச்சிருவாங்க. அப்புறம் உண்மைய சொன்னோம்னா செம மரியாதையோட ஸ்பெசல் கவனிப்புதான். உங்களுக்கு இனாம்குளத்தூர்னா (அங்க இனாமா?) எனக்கு வாலிகண்டபுரம்.

@தமிழன் கறுப்பி

கள்ளு குடிச்சி பழக்கமில்லன்னா என்னங்க... பதனீர் குடிச்சு பாருங்க உடம்புக்கு மிகவும் நல்லது.

@பரத்

நன்றி

Unknown said...

// சட்டத்தை தகர்த்து உங்க ஏரியால கள் இறக்குறதா தினசரில பாத்தேன். அங்கே வர ஆவலா இருக்கேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.//

நாங்களும் தங்களின்(இலக்கிய சிஙத்தின்)வருகையை ஆவலோடு எதிர்பார்க்கிறோம் :-))

கதிர் said...

//10:41 AM
&
10:46 AM//

இந்த நேரத்துலயும் தமிழுக்கு சேவை செஞ்சிகிட்டு இருக்கற உங்கள பாத்தா எனக்கு என்ன சொல்றதுன்னே தெரிலங்க கார்த்திக். நீங்கதான் அக்மார்க் இலக்கியவாதி. இம்மீடியட்டா ஈரோடுக்கு ஒரு டிக்கெட் போட்டுடலாம்னு பாக்கறேன்.

Kathir said...

welcome back.

Kathir said...

////விமானம், ரயில், இன்னபிற
எந்த வாகனங்களில் சென்றாலும் அது எத்தனை மணி நேரம் என்றாலும் இம்மி
அளவு தூக்கம் வராது. என்றாவது ஒருநாள் வந்தால் அது பேரதிசயம்//

Same blood....
ஏதாவது பாட்டு கேட்டுக்கொண்டோ, படித்துக்கொண்டோ நேரத்தை சாப்பிடுவேன்....

Kathir said...

//டிவிஎஸ் அம்பதில்//

:)))

Kathir said...

//என்னப்பா தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரன் மாதிரி பேர் வெச்சுகிட்டியா...?
மாதவன்னு நினைப்பா...?
முத்துன மாங்கா மாதிரி இருந்துகிட்டு தம்பினு பேர் வெச்சிருக்கியே என்னப்பா நியாயம்?//

உண்மையான காரணம் என்ன?????

Kathir said...

//அதென்னது அமீரகத்துல இருந்தா மட்டும்தான் எழுதுவேளா இங்கல்லாம் எழுத மாட்டேளா...//

அதானே....

ராஜ நடராஜன் said...

வணக்கம் கதிர்.உங்களை தமிழ்மணம் பக்கம் அடிக்கடி காண முடியாததால் கூகிளாண்டவர் துணையோடு தேடிப் பிடித்தேன்.இலக்கியம்,அனுபவம் என சீரியசான பதிவர் எங்கே என்ற தேடலில் காரணமாக.