எல்லையற்ற அன்பு கொள்வோம்

Friday, December 26, 2008

மொக்கை குறிப்புகள்

தொடர்ச்சியாக வீட்டிலிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. சில இடங்கள், பல
முகங்களில் பழையதை தேடி தினமும் தோற்றுப்போகிறேன். எல்லாமே மாறி
விட்டிருக்கின்றன. முதல் இரண்டு வாரங்கள் அடர்மழையும் தேநீருமாக ரம்மியமாக
இருந்தது, கடந்த இரண்டு வாரங்களாக கடும் குளிர். மழையானாலும் குளிரானாலும்
நம் பழக்க வழக்கங்கள் எதையும் மாற்றிக்கொள்வதே இல்லை. இதுபோன்ற எதிர்
குணங்களால் உடல்நிலையில் பருத்த மாற்றம்.

சிலம்பாட்டம், சேவல், தெனாவட்டு, காதலில் விழுந்தேன் என்று அனைத்துப் புதிய
திரைப்படங்களுக்கும் நண்பர்கள் வலுக்கட்டாயமாக மாலைகளில் இழுத்துச்சென்றார்கள்
நான்கு அற்புதமான மாலைகள் வீணாகிய வருத்தமில்லை என்றாலும் இதுபோன்ற
படங்களையெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக எப்படி சகித்துக் கொள்கிறார்கள்
என்று தோன்றியது. சொன்னதையே திரும்பச்சொல்லும் கற்பனை வறட்சி மிக்க
இயக்குனர்களின் படங்களைப் பார்ப்பதைவிட தொலைக்காட்சி சீரியல்களை
பார்க்கலாம். குறிப்பாக சிலம்பாட்டம் படம் பார்க்கையில் நெரிசல் மிக்க பேருந்து
நிலையத்தின் கழுவாத கழிவறைக்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டது.

பொம்மலாட்டம் பார்க்க நேரத்திற்கு கிளம்பியும் அரங்கம் சென்றடைய தாமதம்.
டிக்கெட் கிழிப்பவரிடம் "உக்காரதுக்கு இடம் இருக்குங்களா அண்ணே" என்றேன்.
அவர் "படுத்துகிட்டே பாக்கலாம் சார்" என்றார். மொத்தக்குத்துகளையும் வைத்து
அவர் சொன்ன பதில் எனக்குப் பிடித்திருந்தது. முதல் பாதி சொக்கியது. இரண்டாம்
பாதியில் இமயத்தின் புலிப்பாய்ச்சல். படம் பார்க்கையில் இமயமே அவரைப்பற்றிப்
படமெடுக்க எதற்கு நானாபடேகர் என்று மனம் நினைத்தது ஆனால் முடிக்கையில்
அவரைப்பற்றி கொஞ்சமாகவும் மற்றும் சுதந்திரமான, நேர்த்தியான படைப்பாளியின்
நிலையை தெளிவாக விளக்குகிறது. இந்தப்படத்திலும் அர்ஜுன் வெளிநாட்டுக்கு
சென்று ஹீரோயினின் குண்டியை தடவுகிறார். விலுக் விலுக்கென்று ஆடுகிறார்.

இதுபோன்ற வெளிநாட்டு பாடல்காட்சிகள் பார்க்கும்போதெல்லாம் மனது மிகுந்த
அசௌகரியமாக உணர்கிறது. எதற்கு இந்த கோமாளி நடனங்கள்? இவர்கள்
இப்படி ஆடுவதைத்தான் மக்கள் ரசிக்கிறார்களா? அர்ஜுன், சிம்பு போன்றவர்கள்
நாயகியிடம் செய்யும் சில்மிஷங்களுக்குப் பதிலாக புணர்ச்சியே செய்துவிடலாம்.

நண்பர்களிடமிருந்தும், சொந்தமாகவும் இருபது நகைச்சுவை டிவிடிக்கள், இருபது
சினிமா நடிகர்கள், நடிகைகளின் சினிமா ஆடல், பாடல்கள் அடங்கிய டிவிடிக்கள் உள்ளது. இருபத்தி நான்குமணி நேர நகைச்சுவைச்சேனலும், பாடல் ஒலிபரப்பும் சேனலும்
ஆரம்பிக்கும் எண்ணம்கூட உள்ளது. கெக்கே பிக்கே என்று பேசி பாடல் ஒலிபரப்பலாம்.
அருக்கானி பிகர்கள் நிறையவும் உள்ள ஊர் என்பதால் நிறைய விளம்பரங்கள் வரலாம்.
நிறையக் கேணையர்கள் போன் செய்து விருப்பப் பாடலைக் கேட்பார்கள். அதைத் தன்
நண்பர்களுக்கு "டெடிகேட்" செய்து பரவசப்பட்டுக்கொள்வார்கள். இதெல்லாம் கூட
கொடுமையில்லை அடங்காத நிஷா ஆடிய ஆட்டத்தில் தமிழகமே துண்டாகிக்கிடந்த
காலையில் சன் மியூசிக்கில் ஒரு ஜந்து "happy Rainy day" என்று மெசெஜ்
அனுப்புகிறது அதையும் சேனல் வெளியிட்டு வாழ்த்துகிறது. உண்மையிலேயே
யாராவது அனுப்புகிறார்களா அல்லது சேனலே இப்படியா.... ரொம்ப ஆராய்ஞ்சிட்டெ
போனால் பெரிய அரசியல் தலைவர்களின் மகன்களின் குசுநாத்தம் அடிக்கிறது.
அதற்க்குப் பாடலையே பார்த்துவிடலாம்.

"திருவண்ணாமலை படம் பார்த்தவர்களுக்கு நேரடி ஒளிபரப்பில் பேரரசு ஆறுதல் சொல்லிக்
கொண்டிருந்தார்." அதில் ஒரு அப்பாவி ரசிகன் கேள்வி.

அ.ர: "சார் உங்க அடுத்த படம் எப்ப சார்?

பே: என்னோட அடுத்த படம் திருத்தணி. திருவண்ணாமலை ஆக்சன் ஜோதின்னா, திருத்தனி
ஆக்சன் அவதாரம்.

அ.ர: "ஏன் சார் தொடர்ந்து ஆக்சன் படமே எடுக்கறிங்க?

"மக்களுக்கு அதான் சார் புடிக்கிது" மக்கள் சந்தோஷமா இருக்கற ஒரே இடம் தியேட்டர்
தான் அதனால அவங்கள தொடர்ந்து சந்தோஷப்படுத்தறதுதான் என் சந்தோசம்.

பேரரசு ஆக்சன், ஜேகே ரித்திஸ் ஆக்சன், விஜயகாந்த் ஆக்சன், ரஜினி ஆக்சன், விஜய்
அஜித், சொம்பு, என்று ஒரே ஆக்சன் அதிரடிகளால் கோடம்பாக்கம் நிரம்பி இருக்கிறது.

இப்படியெல்லாம் பார்க்கப்போய் கொடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டி
இருப்பதால் டிஸ்கவரியையும், நேஷனல் சேனலையும் பார்க்கிறேன். "நாலு புலி சேர்ந்து
ஒரு காட்டெருமைய உயிரோட கடிச்சி திங்குறத பாக்குறியே அப்டினா உனக்கு எவ்ளோ
கல்நெஞ்சமா இருக்கும்டா" என்று பெற்ற தாய் திட்டுகிறார்.

இணைய இணைப்பு கிடைப்பதில் பெரிய தாமதம் ஏற்பட்டுவிட்டபடியால் வலை உலகில்
என் ஐம்பது நாள் இல்லாமல் போய்விட்டது(:))). இத்தனை நாட்களுக்குப் பிறகு
ரீடரைத்திருந்தால் ஆயிரத்தி சொச்சம். ஜெயமோகன் இருப்பதிலேயே டாப். 72 பதிவுகள்.
சும்மாவா சூறாவலி என்று சொல்கிறார்கள். இணையத்தில் எழுதுபவையையும் கெட்டி
அட்டையில் பதிப்பித்துவிடுவார் அப்போது படித்துவிடலாம் என்று அனைத்தையும்
படித்துவிட்டதாக காண்பிக்கும்படி ரீடரார் இடம் வேண்டிக்கொண்டேன். ஆனால் நண்பர்கள்
பரிந்துரைத்த மத்தகம் குறுநாவலை மட்டும் மென்நூலாக மாற்றிக்கொண்டேன்.
அதை வாசிக்க ஒரு நல்ல பொழுது வாய்க்கும் அதுவரை பொறுத்திருக்கலாம்.
இரண்டாவதாக R.P.ராஜநாயகத்தின் சுருக்கமான 60 பதிவுகள் நிச்சயமாக அனைத்தையும்
படித்தேன்.

அமீரகத்தில் வேலையின்போது நிறைய உபரி நேரம் சும்மா இருக்காமல் எதையோ எழுதி
கிழித்துக்கொண்டிருந்தேன். ஊரில் சும்மா இருக்கும்போது நேரமே கிடைப்பதில்லை.
நான்குபுறமும் நண்பர்களின் அழைப்பு என சென்றுவிடுகிறது. ஆனால் இன்னும் ஒரு
பதிவரைக்கூட சந்திக்கவில்லை(!)

கள்ளக்குறிச்சி நகர வீதிகளில் பதிமூன்று நாய்கள் ஒன்றாகவே சுற்றுகின்றன. அவை
பிரிவதே இல்லை. பரபரப்பான வீதியில் மனிதக்கூட்டங்களுக்கு நடுவே நுழைந்து
செல்கின்றன. திடீரென்று அவை அனைத்தும் திசைக்கொன்றாக பார்க்கின்றன.
நிற்கும் திசையில் பார்வையை கூர்மையாக கவனிக்கின்றன. எதோ ஒரு தாக்குதலுக்கு
வியூகம் அமைப்பது போல. ஆனால் அடுத்த நொடியும் கிளம்பி விடுகின்றன.
யாருக்கும் தொந்தரவு தருவதில்லை. "அதிகம் விற்பனையாகும்" நாளிதழ்களிலும்
செய்தி வெளியிட்டிருக்கின்றன. நானும் இரண்டு முறை அந்தக்காட்சியை பார்த்தேன்.
ஒன்றையும் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இரண்டு முறையும் எண்ணிக்கையை
சரிபார்த்தேன். சரியாக பதிமூன்று நாய்கள். அமைதி ஊர்வலம் போல செல்கிறது
வருகிறது, திடிரென நிற்கிறது பிறகு செல்கிறது.

நாய்களுக்கு உள்ள பொதுவான குணம் "எங்க ஏரியா உள்ள வராதே" என்பதுதான்.
அதையும் மீறி இவை பதிமூன்றும் நட்புகொள்ள எது காரணமாக இருக்கும்?
இதன் பிண்ணனியை ஆராய்ந்தால் சுவையான சம்பவம் எதாவது ஒன்று இருக்கலாம்.

14 comments:

A N A N T H E N said...

:)

துளசி கோபால் said...

இன்னும் எவ்வளோ நாள் லீவு இருக்கு?

நான் எதையாவது மிஸ் பண்ணிட்டேனோ!!!

ஃபாரீன் லொகேஷன் பாட்டுன்னு அந்த பெர்ன் நகரத்தைப் பார்த்துப் பார்த்து அலுத்துப் போச்சு.

மத்தபடி,

ஹேப்பி நியூ இயர் தம்பி

Santhosh said...

தம்பி,
உன்னோட திரைப்பட விமர்சனங்களை ரசித்தேன்.. இன்னும் எம்முட்டு நாள் ஊர் பக்கம்.. எப்ப ஊருக்கு திரும்பி போற?

அன்புடன் அருணா said...

என்னா ரொம்ப நொந்து நூடுல்ஸ் ஆகி கன்ஃப்யூஸ் ஆகிட்டீங்க போலிருக்கு....cool down.
anbudan aruNaa

Ayyanar Viswanath said...

நீதான்யா சாருவோட ஒரிஜினல் சிஷ்யன் :) முதல் 4 பத்தி கோணல் பக்கங்கள் படிக்கிறா மாதிரிதான் இருந்தது..ஒலகப்படமும் ஓட்காவும் சாட்டு பிகருமா வாழ்ந்த ஆள்யா நீ இப்படித்தான் பேசுவ :)

ஆயில்யன் said...

/மக்களுக்கு அதான் சார் புடிக்கிது" மக்கள் சந்தோஷமா இருக்கற ஒரே இடம் தியேட்டர்
தான் அதனால அவங்கள தொடர்ந்து சந்தோஷப்படுத்தறதுதான் என் சந்தோசம்//

:)))))))

இன்னும் இந்த ஆளுக்கு படங்கள் ஓடிக்கிட்டுத்தான் இருக்கு...!

நாகை சிவா said...

:))

நல்லா இருக்குய்யா!

ஆனாலும் ஒரு வருத்தம் மேலோங்குது... நல்லா தானே இருந்தான் என்று..

தம்பி ஒரு விசயத்தை நல்லா புரிஞ்சுக்கனும்.. நீ பட்டு தெரிந்துக் கொண்டு, புரிந்துக் கொண்ட அதே கண்ணோட்டத்துடன் மற்றவர்களையும் காணக் கூடாது. அவர்கள் மாறும் வரை காத்து இரு அல்லது என் எண்ண ஒட்டத்துடன் உள்ளவர்களுடன் இணைந்து இரு... ;)

சுரேகா.. said...

//இன்னும் ஒரு
பதிவரைக்கூட சந்திக்கவில்லை(!)//

சந்திச்சிருவோமா?
:)

கதிர் said...

அனந்தேன், நன்றி :)
--
இன்னும் கொஞ்ச நாளைக்கு லீவ்தாங்க டீச்சர்.

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

--
சந்தோஷ் அண்ணே

ரொம்ப நன்றி. இதோ வந்துடறேன்.
--

அருணா,
டென்சன் ஆனா எப்டி, இன்னும் எவ்ளோ காலம் இருக்கே...

கதிர் said...

அய்யனார்,

நீ ஒருத்தன் போதும்யா எனக்கு ஆப்பு வைக்க.

ஆயில், சிவா, சுரேகா நன்றி

இராம்/Raam said...

:))

ஆளவந்தான் said...

//
படங்களையெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக எப்படி சகித்துக் கொள்கிறார்கள்
என்று தோன்றியது.
//
(நினைவில் இருந்து எழுதுகிறேன்)

ஒரு படத்துல நாகேஷ் நோயாளிக்கு இருமல் மருந்தை குடுத்து, “இதை தொடர்ந்து மூனு மாசம் சாப்பிடு” என்பார்

அவன் , “தொடர்ந்து சாப்பிட்டா இருமல் சரியாகிடுமா” என்பான்

நாகேஷ்.. ”இல்ல பழகிடும்”

அதான் நடக்குது.

வால்பையன் said...

சினிமா பற்றிய விமர்சனம் அருமை,

பதிவர் சந்திப்புகாக காத்து கொண்டிருக்கிறேன்

அபி அப்பா said...

This post has been removed by the author.