எல்லையற்ற அன்பு கொள்வோம்

Thursday, December 18, 2008

இரவின் இசை


இருபுறத்திலும் மரங்கள் அடர்ந்த யாருமற்ற
சாலையின் நள்ளிரவு சப்தங்களை
கேட்டுக்கொண்டிருந்தேன்.
முன்பே பலமுறை கேட்டு கவனித்திராத
சப்தங்கள் வினோதனமான நினைவலைகளை
உணர்த்தின. உன்னதமான ஒரு தருணத்தை பதிவிக்கும்
கலைஞனின் கவனத்தோடு அதனை
மன அறைகளில் பதிவிக்க ஆரம்பித்தேன்.
முதலில் ஆதியின் நிசப்தம். பின்பு தவளைகளின்
கூட்டுச்சப்தத்தோடு சீரான இடைவெளியில்
ஆந்தையின் கொஞ்சல். எங்கோ தொலைவில்
கிழவியின் ஒற்றை ஓலம். பெரிய
ஆற்றின் குறுக்கே ஓடையின் சலசலப்பு.
உறக்கம் தொலைத்த கிழவனின் முணுமுணுப்பு
வண்டுகளின் ரீங்காரம் என
எல்லாமும் சேர்த்தே பதிவித்தேன்.
விடியலில் பதிவித்ததை கேட்க முயற்சிக்கையில்
நகரத்தின் இரைச்சலில் இரவின்
இசை கலைந்து விட்டிருந்தது.

11 comments:

வால்பையன் said...

me the first

வால்பையன் said...

//இருபுறத்திலும் மரங்கள் அடர்ந்த யாருமற்ற
சாலையின்//

தூக்கத்துல கனவு கண்டுகிட்டு இருக்கிங்களா?
ரோடு அகலபடுத்துறேன்னு சொல்லி எல்லாத்தையும் வெட்டிடானுங்க

வால்பையன் said...

//உன்னதமான ஒரு தருணத்தை பதிவிக்கும்
கலைஞனின் கவனத்தோடு அதனை
மன அறைகளில் பதிவிக்க ஆரம்பித்தேன்.//

சாதாரண மனிதனுக்கும்,
உன்னத தருணங்களை பதிவிக்கும் மனிதனுக்கும் வித்தியாசம் என்ன?
சிறு குறிப்பு வரைக:

சாதாரண மனிதன்
சரக்கில் தண்ணி ஊத்தி அடிப்பான்

உன்னத மனிதன் தண்ணியில் சரக்கு ஊத்தி அடிப்பான்

வால்பையன் said...

//பின்பு தவளைகளின்
கூட்டுச்சப்தத்தோடு சீரான இடைவெளியில்
ஆந்தையின் கொஞ்சல்.//

ஆந்தையின் கொஞ்சல் தான் கொஞ்சம் இடறுது

Kathir said...

கதிர்,

ஊர்ல இருந்து எப்ப வந்தீங்க?


//நகரத்தின் இரைச்சலில் இரவின்
நகரத்தின் இரைச்சலில் இரவின்
இசை கலைந்து விட்டிருந்தது//

:))

Kathir

கோபிநாத் said...

;))

Unknown said...

//நகரத்தின் இரைச்சலில் இரவின்
இசை கலைந்து விட்டிருந்தது.//
அருமையான வரிகள்..

கப்பி | Kappi said...

நல்லாருக்கு! :-)

சென்ஷி said...

வெல்கம் பேக் தம்பி :))

உன்னிடமிருந்து இன்னமும் அதிகமாய் பதிவுகளை எதிர்ப்பார்க்கும் பேராசை கொண்ட ரசிகனாய்....

சென்ஷி

சென்ஷி said...

//வால்பையன் said...
//உன்னதமான ஒரு தருணத்தை பதிவிக்கும்
கலைஞனின் கவனத்தோடு அதனை
மன அறைகளில் பதிவிக்க ஆரம்பித்தேன்.//

சாதாரண மனிதனுக்கும்,
உன்னத தருணங்களை பதிவிக்கும் மனிதனுக்கும் வித்தியாசம் என்ன?
சிறு குறிப்பு வரைக:

சாதாரண மனிதன்
சரக்கில் தண்ணி ஊத்தி அடிப்பான்

உன்னத மனிதன் தண்ணியில் சரக்கு ஊத்தி அடிப்பான்
//

அது மாத்திரமில்ல வால் பையன்..

சாதாரண மனிதன் ஒருத்திய காதலிச்சு அவளையே கல்யாணம் பண்ணுவான்.

உன்னத மனிதன் ஒருத்திய கல்யாணம் பண்ணிட்டு அவளையே காதலிக்க ஆரம்பிப்பான்..

எங்க டிக்ஷ்னரியில இப்படித்தான் இருக்குது :-))

வால்பையன் said...

//சாதாரண மனிதன் ஒருத்திய காதலிச்சு அவளையே கல்யாணம் பண்ணுவான்.

உன்னத மனிதன் ஒருத்திய கல்யாணம் பண்ணிட்டு அவளையே காதலிக்க ஆரம்பிப்பான்..//


சிரிப்பு தான் வருது!
நீங்களும் உங்க காதலும்!
ஒரு பெண்ணுடன் பேச வாய்ப்பு கிடைத்தால் மட்டும் காதல்லல்ல!

என்ன சொல்ல! உங்களுக்கே புரிந்திருக்கும் என நம்புகிறேன்