எல்லையற்ற அன்பு கொள்வோம்

Tuesday, December 25, 2007

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை - நாஞ்சில் நாடன்

கதாநாயக நடிகனுக்கு படத்துக்கு மூன்று கோடி ரூபாய்
சம்பளம் தருகிறார்கள். பத்தாயிரம் ரூபாய் மாத சம்பளம்
வாங்கும் உயர்நிலை பள்ளி ஆசிரியன் அந்தத் தொகையை
ஊதியமாக பெற 300 ஆண்டுகள் பணி செய்ய வேண்டும்.
முன்னூறு நெடிய ஆண்டுகள், முப்பது பெரிய தலைமுறைகள்.
கூலிக்காரன் என்றால் ஆயிரம் ஆண்டுகள்
அழுகை வரவில்லையா உங்களுக்கு?
எனக்கு வருகிறது.
நடிகனைத் தொட்டு பார்க்க விரும்பியவர் நாம்,
நடிகையைக் கோயில் கட்டிக் கும்பிட்டவர் நாம்,
கவர்ச்சி நடிகை குடித்து மிச்சம் வைத்த எச்சில் சோடாவை
அண்டாவில் விட்டு நீர் சேர்த்து கலக்கி அரைகிளாஸ்
பத்து ரூபாய் எனப் பிரசாதம் வினியோகித்தவர் நாம்,
பச்சை குத்திக்கொள்ளவும் தீக்குளிக்கவும் செய்பவர் நாம்,
நடிகைக்கு தீண்டல் தாண்டிப்போனால்
பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்துபவர் நாம்,
மன்றங்கள் நடத்தி மாற்று மன்றத்தின்
பட்டினிக் குடலைக் கிழித்து மாலை போடுபவர் நாம்,
நம்மை நாம் என்ன பெயர் சொல்லி அழைப்பது?
ஏமாளி என்றா? மூடன் என்றா? மூர்க்கன் என்றா?
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே
வாலுடன் பிறந்த வாயப்பன் என்பதா?



நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை இத்தலைப்பே கட்டியம் கூறும்
இக்கட்டுரைத் தொகுப்பின் சாரத்தை. நான் மதிக்கும் எழுத்தாளர்களில்
முதன்மை இடம் தரும் நாஞ்சில் நாடனின் பல்வேறு தலைப்பிலான
கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். இதை நான் எழுதும்போது எனக்கும்
குற்றவுணர்ச்சியே மேலொங்கி நிற்கிறது. சத்தியமாக இந்நூலின் அறிமுக
பதிவாகவே படிப்பவர்கள் உணர வேண்டும் என்ற முனைப்பிலேதான்
ஒவ்வொரு எழுத்தையும் யோசித்து எழுத வைக்கிறது என்னை. அத்தனை
வீரியமுள்ள வீச்சு நாஞ்சில் நாடனுக்கு. ஆகவே இதை சிறுவனின்
மழைக்கால குதூகலத்தை போலவே எண்ணி வாசிக்கலாம் என்றுமே
இப்பதிவு இந்நூலின் விமர்சனமாக அமைந்து விடாது என்பதை உணர்வேன்.

இத்தனை நாள் வாழ்ந்தும் இதுவரை வாய்க்கப்பெற்ற அனுபவங்களும்
எனக்கு கற்றுத் தந்தவை யாவும் பொய்யென உணர்த்தி பயங்கொள்ள வைக்கும்
கட்டுரைகள். இக்கட்டுரை வணிக ரீதியிலான பத்திரிக்கையிலும் வரும் காலம்
இதுவாக இருந்தால் கண்டிப்பாக நம் சமூகத்தின் நிலை இன்று வேறாகயிருக்கும்.
மக்களை போகத்தில் ஆழ்த்தி மூழ்கடிக்கும் வணிக பருவ இதழ்களுக்கு மத்தியில் வாசிப்பனுபவம் உள்ளவன் இதை படிக்கும்போது மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாவான். அதைப்போலதான் நானும். ஒவ்வொருமுறை புத்தகத்தை பிரிக்கும்போதும்
குற்றம் செய்தவன் போலவே முனை மடித்து உறங்குகிறேன்.

கண்மணி குணசேகரனின் சிறுகதைகளை படித்தபோது திகைத்து போனேன்.
நம்மக்கள் சிறுகதை என்ற வடிவத்தை பேப்பர்களில் ஒருபக்க, அரை, முக்கால்,
ஒன்றரை பக்கங்களால எச்சில் படுத்தி வாசகர்களின் மீது எறிகிறார்கள்
என்று தோன்றியது.

மேற்கோல் காட்டப்பட்ட வரிகள் எனக்குள் ஏற்படுத்திய அதிர்வுகள் நிறைய.
வெந்ததை தின்று விதி வந்தால் சாவது என்ற கொள்கை மத்தியில் வாழும் மக்கள்
கூட்டத்தில் யார் வேண்டுமானாலும் தலைமை ஏறி மிதித்து வாழலாம். அப்படிப்பட்ட
சமூகத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மாற்று சிந்தனைகளுக்கும்
முயற்சிகளுக்கும் மதிப்பளிக்கும் காலம் வரும்போது எல்லாக்கதவுகளும் திறக்கும்.

படைப்பாளியின் பெயரைக் கொண்டே மொத்த படைப்பையும் எடைபோடும்
மனிதர்கள் இங்கு அனேகம். புறந்தள்ளுவதற்கும், உதாசீனப்படுத்தவும் நிறைய
காரணங்களை மடி மீதே வைத்து அலைகிறோம். தமிழில் ஏராளமான
இலக்கியவாதிகள் போலவே சர்ச்சைகளும் ஏராளம்.

தமிழ் வார்த்தைகளுக்கு அரசியல் பார்வை கொண்டு ஒதுக்கப்பட்டவையாக சில
வார்த்தைகளை கூறலாம். வழக்கொழிந்து போய்விட்ட காரணத்தினாலேயே அவை
கெட்ட வார்த்தைகளாக கற்பித்துக் கொண்டிருக்கிறோம். வெறும் அதிர்வுகளை
ஏற்படுத்த வேண்டி சேர்ப்பது அல்ல. வலியை பதிவிக்க சொந்த மொழியில்
உள்ள வார்த்தைகளை பயன்படுத்தவே இயலாத சூழல் நம் தமிழ்ச்சூழல் மட்டுமே.
அவ்வகையில் மங்கலம் குழூஉக்குறி இடக்கரடக்கல் என்ற கட்டுரையினை
தமிழ்மண சூழலில் உள்ள புனிதர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.

"மாங்கா மாங்கா ரெண்டு மாங்கா மார்க்கட்டு போகாத குண்டு மாங்கா"
என்றெழுதும் கவிச்சிற்றரசு, பேரரசு, இணையரசு, துணையரசு ஆகியோரின்
வம்சாவழியினர் எல்லாம் மாலதி மைத்ரிக்கும், குட்டி ரேவதிக்கும், சல்மாவுக்கும்,
கனிமொழிக்கும் உமா மகேஸ்வரிக்கும், க்ருஷாங்கினிக்கும், இளம்பிறைக்கும்
கவிதை எழுத பாடம் நடத்துகிறார்கள்.


கட்டுரைத் தொகுப்பு முழுவதும் எள்ளல் கலந்த கோப எழுத்துக்கள் நிறைந்து
காணப்படுகிறது ஒன்றையும் விடாது வாசிக்க வேண்டியவை. இலக்கிய அறிமுக
கொண்டவர், இல்லாதார் எவர் படைப்பையும் மிக நேர்மையாகவும் நேர்த்தியுடனும்
விமர்சித்திருக்கிறது. எல்லா இலக்கிய சர்ச்சைகளிலும் பங்கு கொண்டவராயினும்
எதிலும் நடுநிலையாக நின்று எவர்க்கும் பகையாளி என்றில்லாமல் இருக்கும்
ஒரே எழுத்தாளர்.

நாடு இவர்களுக்கு என்ன செய்யப்போகிறது என்ற கட்டுரையில் இடஒதுக்கீடு
பற்றியும் நம் கல்வி முறை பற்றியும் மிகச்சிறப்பான முறையில் எழுதியிருக்கிறார்.
"காலில் செருப்பின்றி நடப்பவன் குதிரை மீதேறி பறப்பவனுடன் போட்டியிட்டு
வெல்ல வேண்டியுள்ளது. ஸ்பார்டகஸ் போல. எத்தனை நியாயமற்றததொரு போர்?
வெறும் வார்த்தைகளை கொண்டு எழுதப்படாமல் பிரச்சினையின் ஆழம் தொடும்
அற்புதமான எழுத்து.

வாசச்சமையலும் ஊசக்கறியும் என்ற கட்டுரையில் நாஞ்சில் நாட்டு சமையல்
பற்றி மிக விரிவானதோர் கட்டுரை. வாசிக்கும்போதே பசியெடுக்கும் விதம்
அனுபவித்து எழுதியது. பசியுணர்ந்தவனுக்கு மட்டுமே ருசியின் அருமை தெரியும்
என்பது போல. தொலைக்காட்சியிலோ, முப்பது நாள் முப்பது கறி போன்ற
புத்தகங்களில் உள்ளது போல அல்ல.

நாவலாசிரியனுக்கு கட்டுரை, விமர்சன கட்டுரை என்பது தேவையில்லாத வேலை
என்கிறார்கள். பிறக்கும்போதே நாவலாசிரியனாக பிறக்கவில்லை. நாஞ்சில்
நாடனை பொருத்தவரை கட்டுரை வாசிப்பு என்பது சிறுகதை வாசிப்புக்கு
இணையான சுகத்தை தரவேண்டும். விஷயஞானம் உள்ள எவரும் எதையும்
எழுதலாம் என்கிறார். இவர் வைக்கும் வாதங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தாமல்
இல்லை மாறாக முனை மடிக்காமல் வாசிக்க தூண்டுகிறது. இலக்கிய நண்பர்களுடன்
அமர்வுகள் குறித்த கட்டுரை சுவாரசியமாக இருந்தாலும் பிற எழுத்தாளர்கள்
பற்றிய தெரிவு இல்லாததால் சலிக்க வைக்கிறது. தீவிர வாசிப்பு அனுபவம்
உள்ளவர்கள் எளிதாக புரிந்துகொள்ளலாம்.

கட்டுரை புத்தகங்கள் படிப்பதிலே இதுவரை சுணக்கம் இருந்தது. மாற்றிக்
கொள்ள வேண்டிய கருத்து இது.

எந்த வகையிலும் இப்பதிவு புத்தகத்தின் விமர்சனமாக ஆகாது. தொகுப்பின்
மொத்த சுவையையும் ஒரே பதிவில் கொண்டுவரமுடியாமைக்கு வருந்துகிறேன்.

22 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இதிலுள்ள சில கட்டுரைகளை வாசித்த ஞாபகம் இருக்கிறது.

நன்றாக எழுதியுள்ளீர்கள். ‘நடுநிலையோடு எழுதும் ஒரே எழுத்தாளர்' போன்ற அதீத தீர்ப்புகளை எழுதாமல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

சுரேகா.. said...

நல்ல பயணம்...

நாஞ்சில் நாடனுடன்.

சென்ற வாரம் அவருக்கு 60 ஆனது.

இன்னும் வீரியமான எழுத்துக்களுடன் வருவார்.

ஆழ்ந்து வாசிக்கிறீர்கள் என்று தெரிகிறது.

வாழ்த்துக்கள்!

சிறில் அலெக்ஸ் said...

நல்ல கட்டுரை. நூலைப் படிக்கத் தூண்டும் மேற்கோள்கள். நன்றி.

Anonymous said...

மற்ற குற்ற உணர்ச்சிகளெல்லாம் அப்புறமா இருக்கட்டும். சுட்டுட்டு போய் படிச்சு விமர்சனம் எழுதுன புத்தகங்களை மரியாதையை திருப்பிக் கொடுக்காத குற்ர உணர்ச்சியை மொதல்ல மன்சுலவச்சுக்க ராசா!நல்லா எழுதுறீங்கடா எழுத்து

(புத்தகம் கொடுத்த அண்ணாச்சிக்கு நன்றின்னு போட்டிருந்தா இப்படி ஒரு பின்னூட்டம் வந்திருக்குமா?)

சாத்தான்குளத்தான்

கதிர் said...

//நன்றாக எழுதியுள்ளீர்கள். ‘நடுநிலையோடு எழுதும் ஒரே எழுத்தாளர்' போன்ற அதீத தீர்ப்புகளை எழுதாமல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.//

நன்றி சுந்தர்.

நான் சொல்ல வந்தது என்னன்னா இலக்கிய சண்டை முடிந்த பிறகு இரு அணிகளாக பிரிந்திருந்த நண்பர் வட்டத்தை வலிமிகுந்த வார்த்தைகளோடு இருதரப்புக்கும் சாராதவாறு எழுதி இருப்பார். நடுநிலைமைன்னும் சொல்லலாம் அதனால் என்ன தவறுன்னு தெரில. யாராவது ஒரு பக்கம்னு இல்லாம தன் தரப்பு என்று இருப்பதில்லயா. அதுபோல. :)

கதிர் said...

நன்றி சுரேகா!
ஜெயமோகன் எழுதிய நாஞ்சில் 60 பதிவையும் படித்தேன். அவர் திரும்பி எழுத வேண்டும் என்பதே எல்லாருடைய விருப்பமும்.

கதிர் said...

நன்றி சிறில்.

அண்ணாச்சி,

பதிவுல சொன்னதையேதான் இங்கயும் சொல்றேன் இது என்றுமே விமர்சனம் ஆகாது. சிலாகிப்புன்னு சொல்லலாம்.:)

அப்புறம் உங்க கிட்ட ஆட்டைய போட்ட அய்யனார் அவரே நடந்து போய் இதை கடையில காசு குடுத்து வாங்கினதா சொன்னார். ரெண்டு பேர்ல யார் நிஜம்னு சொல்லுங்க பிறகு தட்டி கட்டலாம்.

சென்ஷி said...

படிக்க வேண்டும் என்ற ஆவலை எழுத்துக்களால் தூண்டி விட்டாய்... விரைவில் சந்திப்போம்... :))

புத்தகம் படிக்க கொடுத்தது அய்யனாரோ.. ஆசிப்போ எங்கிருந்தாலும் வாழ்க :))

Unknown said...

விரைவில் அதைப் படிக்க வேண்டுமென்ற ஆவலை ஏற்படுத்துகிறது உங்கள் எழுத்து.

கோபிநாத் said...

நன்றாக எழுதியிருக்கீங்க கதிர் :)

\\விரைவில் சந்திப்போம்... :))\\

சென்ஷி முந்திக்கிட்டார் வாழ்க..!

Ayyanar Viswanath said...

/தமிழ்மண சூழலில் உள்ள புனிதர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று/

டம்பி நீ எலக்கியவியாதியா ஆவு ஒண்ணும் பிரச்சினயில்ல..ஆனா பிநவநா வா மட்டும் ஆயிடாதே! இப்ப நீ எளுதறதுலாம் அது மாதிரி ஒரு பில்டப்ப கொடுக்குது :(

கதிர் said...

நன்றி சென்ஷி, சுல்தான், கோபி.

அய்யனார்,

//டம்பி நீ எலக்கியவியாதியா ஆவு ஒண்ணும் பிரச்சினயில்ல..ஆனா பிநவநா வா மட்டும் ஆயிடாதே! இப்ப நீ எளுதறதுலாம் அது மாதிரி ஒரு பில்டப்ப கொடுக்குது :(//

தோ பார்ரா ஐஎஸ்ஓ பீனாவானா சொல்லிட்டாரு. :)))

போய் சில்லுன்னு தண்ணிய குடி... தண்ணிய குடி...

சிறில் அலெக்ஸ் said...

சிந்திக்கத் தூண்டிய பதிவு என்பதால் சில 'மாற்று' சிந்தனைகள்.

முதலில் நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவது குறித்து நமக்க்ய் என்ன கவலை?

பணம் மட்டுமே வாழ்வின் இலட்சியமா? ஒரு ஆசிரியரால் இயன்றவரை தன் குடும்பத்தோடு ஒரு சீரான, பரபரப்பற்ற வாழ்க்கை வாழ முடிகிறது. ஆனால் அதிகமாய் சம்பாதிக்கும் மக்களைப் பாருங்க வேலை வேலைண்ணு இருப்பாங்களே தவிர வீட்டில் குடும்பத்தை கவனிக்க இயலாது.

ஒரு நடிகரைக் கேட்டா அவர் இப்படியும் சொல்லலாம். ஒரு வாத்தியாரா இருந்தோமா வருசத்துல 10 மாசம் வேல பாத்தோமா... மாசக் கடைசில சம்பளம் வாங்கினோமாண்ணு வாழ்ந்தா என்ன சுகமப்பா..

காசு மட்டுமே வாழ்க்கையின் தரத்தை மதிப்பிடக் கூடியதல்ல.

ஒருவரின் காசு என்பது முதலாளித்துவ மதிப்பீடு. எந்த துறையில் அதிக காசு புரள்கிறதோ அந்தத் துறையில் சம்பளமும் அதிகம் கிடைக்குது. மென்பொருள் துறை சிறந்த உதாரணம்.

Anonymous said...

டேய் தம்பி

இலக்கியவியாதிஆவுறதெல்லாம் இருக்கட்டும். ஒரு குடிகாரனைப் பத்தின் படம்ங்குறதாலத்தான் நீ அபி அப்பா எல்லாம் படம் பார்க்க வரலைன்னு அய்ய்னார் சொல்லிக்கிட்டிருந்தாரு. உண்மையா?

சாத்தான்குளத்தான்

கதிர் said...

//முதலில் நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவது குறித்து நமக்க்ய் என்ன கவலை?//

நடிகர்கள் எவ்வளவு வேணாலும் வாங்கிட்டு போகட்டுங்க அத பத்தி கூட கவலைப்படாம இருக்கலாம் ஆனா அவன் நடிக்கற படத்துக்கும் அது சொல்ல வரும் கருத்துக்கும் எந்தளவுக்கு வரவேற்பு இருக்குதுன்னு நினைக்கறிங்க? ஒரே மாதிரி நடிச்சு ஒரே மாதிரி கல்லா நிரப்பிட்டு போகறானே அந்த மாதிரி நடிகர்களால யாருக்கு என்ன லாபம்? மாதம் பத்தாயிரம் சம்பளம் வாங்குற வாத்தியாரின் பிள்ளைகளதான் ரசிகர்களா மாத்தி வச்சிருக்காங்க.

//பணம் மட்டுமே வாழ்வின் இலட்சியமா? ஒரு ஆசிரியரால் இயன்றவரை தன் குடும்பத்தோடு ஒரு சீரான, பரபரப்பற்ற வாழ்க்கை வாழ முடிகிறது. ஆனால் அதிகமாய் சம்பாதிக்கும் மக்களைப் பாருங்க வேலை வேலைண்ணு இருப்பாங்களே தவிர வீட்டில் குடும்பத்தை கவனிக்க இயலாது.//

படம் தயாரிப்பவருக்கும் பணிபுரிபவர்களும் லாபம் வரணும்னு சொல்ற நடிகர்கள் சொல்ற வார்த்தைகளும் இதுவும் ஒரு மாதிரிதான். எல்லாருக்கும் நிறைய சம்பாதிக்கணும்னு ஆசைதான் ஆனா மக்கள சுரண்டி அதுல வாழணும்னு எழுதி இருக்கா என்ன? இஷ்டம் இருக்கறவங்க பாக்கறாங்க உங்களுக்கென்னன்னு கேக்கலாம். பொழுதுபோக்குதான் சினிமான்னு மாறின பிறகு வேற என்னதான் செய்யமுடியும்? பக்கத்து மாநிலமான கேரளா நடிகைலாம் ஏன் இங்க வர்றாங்கன்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க. மக்கள்கிட்ட மறைமுகமா அடிக்கற கொள்ளைதான் இது பழக்கமாகிட்ட ஒரு விஷயத்துக்காக நாம கவலைப்பட மறந்தாச்சு.

//காசு மட்டுமே வாழ்க்கையின் தரத்தை மதிப்பிடக் கூடியதல்ல.//

இது மிக உண்மையான விஷயமா இருக்கலாம். ஆனா பாருங்க இந்த விஷயம் யார் கண்ணுக்கும் தெரியமாட்டேங்குது

//ஒருவரின் காசு என்பது முதலாளித்துவ மதிப்பீடு. எந்த துறையில் அதிக காசு புரள்கிறதோ அந்தத் துறையில் சம்பளமும் அதிகம் கிடைக்குது. மென்பொருள் துறை சிறந்த உதாரணம்.//

மென்பொருள் துறை சிறந்த உதாரணம் ஒத்துக்கலாம் தகுதி திறமை மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஊழியராலும் அந்தந்த கம்பெனிக்கு வருமானம். அதனால தனிமனித வருமானம் அதிகமாகிப்போச்சு. சமச்சீரான வளர்ச்சி இல்லை, ஒரு சாராருக்கு ஊதியம் அதிகமா கிடைக்குதுன்னு எல்லாரும் சொல்ற மாதிரி நானும் சொல்லமாட்டேன் அவங்கவங்க திறமை அதுபோகட்டும்
ஆனா அது ஏற்படுத்தி இருக்கும் மாற்றம் என்னன்னா செருப்பு அணியாதவன் குதிரை மீதேறி பறப்பவனுடன் போட்டி போடற மாதிரி. இங்க இரண்டு தரப்பையும் நான் குற்றம் சொல்ல மாட்டேன். ஆனால் செருப்பே அணியாதவன் சோகம்னு ஒண்ணு இருக்குல்ல அதை நினைச்சு பார்க்கணும்.

நன்றி சிறில்.

கதிர் said...

டேய் தம்பி

//இலக்கியவியாதிஆவுறதெல்லாம் இருக்கட்டும். ஒரு குடிகாரனைப் பத்தின் படம்ங்குறதாலத்தான் நீ அபி அப்பா எல்லாம் படம் பார்க்க வரலைன்னு அய்ய்னார் சொல்லிக்கிட்டிருந்தாரு. உண்மையா?

சாத்தான்குளத்தான்//

அண்ணாச்சி அய்யனார் கரீட்டாதான் சொல்லிருக்கார். குடிகாரங்கள பத்தின படத்துக்கு நாம ஏன் போய் பாக்கணும்னு அவர் நினைச்சிட்டாராம். ஆனா அபிஅப்பா சொன்னது என்னன்னா அய்யனாரை எப்படியாவது இந்த நிகழ்ச்சில கலந்துக்க வச்சு படத்தை பாக்க வைங்கன்னு சொன்னார்.

ஆனா ஒண்ணு இந்த மாதிரி அடுத்தவன இழுத்து வச்சு இஸ்திரி போடற உங்க கயமைய விடவே மாட்டிங்க போலருக்கு. :)

முபாரக் said...

நல்ல அறிமுகம்! நன்றி நண்பரே

சிறில் அலெக்ஸ் said...

தம்பி,
//இது மிக உண்மையான விஷயமா இருக்கலாம். ஆனா பாருங்க இந்த விஷயம் யார் கண்ணுக்கும் தெரியமாட்டேங்குது//

சரியா சொன்னீங்க. ஒரு அனுபவம் மிகுந்த எழுத்தாளர் இதுபோன்ற சிந்தனைகளை முன்வைத்து எழுதினா சிறப்பாயிருக்கும். நடிகர்களோடு , அல்லது பணக்காரர்களோடு ஒப்பிட்டு பேசி மக்களின் சாதாரண ஏக்கங்களைச் சுற்றி சில கட்டுரைகள் வரையப் பட்டிருக்கோண்னு நினைக்கிறேன்.

மாற்று சிந்தனைகள்.

நா.நா எழுதியிருப்பது தவறு எனச் சொல்ல அருகதை எனக்கு இல்ல.

தமிழ் நாட்டின் மிகப் புகழ் மிக்க நடிகர் ஒரு முறை சொன்னார். கடவுள் முந்தின ஜென்மத்துல யார் அதிக பாவம் செஞ்சாங்களோ அவங்களுக்கு அதிக பணம் குடுக்கிறான். அதைவிட அதிக பாவம் செஞ்சவங்களுக்கு புகழையும் சேர்த்து குடுக்கிறான்.

Be careful what you may wish for. It might come true.

இராம்/Raam said...

கதிரு,

நல்லதொரு புத்தக அறிமுகம்.... ஊருக்கு போகும் போது வாங்கி படிக்கனும்.. :)

Anonymous said...

தமிழ் நாட்டின் மிகப் புகழ் மிக்க நடிகர் ஒரு முறை சொன்னார். கடவுள் முந்தின ஜென்மத்துல யார் அதிக பாவம் செஞ்சாங்களோ அவங்களுக்கு அதிக பணம் குடுக்கிறான். அதைவிட அதிக பாவம் செஞ்சவங்களுக்கு புகழையும் சேர்த்து குடுக்கிறான்.

evvalavu thimirana vaarthaikal.yaarai muttal aakka
makkalai. makkalai thisai thiruppa.
ingkathan nadikan sollivitta vedha vaakachae. evvalavu thanthiram. thangalin vasathiyana vazhkkai makkalin kannai uruthakoodathu enpatharkkaka ippadi oru andaa puzhuga. enna oru vaarthai paarunka
eriyuthuppa.makkalai evvalavu muttala aakkukirarkal.
aana ippadi makkalai muttal aaki ippa pavathaithaan sampathikirarkal.
makkalae thirunthavitta yar enna pannuvathu. padam paakatheenga. yaetho nalla padam paarkalam thaan - athukkaka thalaiyil thooki vaithukondu aada vaendamae.parthvaeru entertainment tae illaiya.
nam naerathai nazhvazhiyil payanpaduthinal naam munaeruvom- nam nadu munnarum - pl. actor/actors ikku don't give much importance. just they are all entertainer. that's all. ignore them

தமிழ்நதி said...

அந்த எள்ளல் கலந்த கோபம்தான் எனக்கும் பிடித்தது. கட்டுரை என்றாலே வரட்சிதான் என்ற நினைப்பு மாறிக்கொண்டிருப்பது இத்தகைய எழுத்துக்களால்தான். நாஞ்சில் நாடனின் 'எட்டுத் திக்கும் மதயானை'தான் இப்போது கூட நடக்கிறது. நிறைய வாசிக்கிறீர்கள் போல... வேறும் நல்ல புத்தகங்கள் என்று தோன்றுவதைப் பரிந்துரையுங்கள்.நன்றி.

கதிர் said...

நன்றி தமிழ்நதி.