எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, December 10, 2007

டேய் இன்னுமாடா திருந்தல நீங்க?இல்ல நான் தெரியாமத்தான் கேக்கறேன் கல்யாண போஸ்டர்லயும் போன் பேசறிங்க,
காதுகுத்து போஸ்டர்லயும் போன் பேசறிங்க கட்சி போஸ்டர்லயும் பேசறிங்க.
எதுக்குடா இந்த விளம்பரம்? போன் பேசறமாதிரி இல்லன்னா இந்த போட்டோ
ஒழுங்கா வராதா? இல்ல அம்புட்டு பிசியா இருக்கிங்களா? கருமத்த கண்டுபுடிச்சி
பத்து வருசத்துக்கு மேல ஆகுது. ஆரம்பத்துலதான் அழிச்சாட்டியம் பண்ணிங்க
ஓகே மன்னிச்சிடலாம். இன்னும் ஏன் இந்த மாதிரி படம் விட்டுகிட்டு இருக்கிங்க?

போனவாரம் ஊர்லருந்து ஒரு கல்யாண டிவிடி வந்திருந்தது அதுல வீடியோ
அவங்க பக்கம் திரும்பும்போதெல்லாம் மொபைல எடுத்து சும்மனாச்சுக்கும்
காதுல வச்சு பேசறானுங்க. அட பந்தில கூட ஒருத்தன் பாக்கெட்ட கஸ்டபட்டு
துழாவி எடுத்து காதுல வைக்கிறான்.

போட்டோ எடுக்கறாங்கன்னு தெரிஞ்சா போதும் மொகத்துல அரை கிலோ
கோலமாவ அப்பிகிட்டு வந்து போன்ல பேசற மாதிரி போஸ் கொடுப்பிங்களே!
திருங்கய்யா மக்கா திருந்துங்க!

14 comments:

ஆயில்யன் said...

:))))

பொது சனங்கன்னு மட்டும் இல்லைங்க!பொது வாழ்க்கைக்கு வந்த அரசியல்வியாதிகள் கூட இன்னும் இது மாதிரி போன் வைச்சுக்கிட்டு யாருக்கிட்டயோ பேசிக்கிட்டுத்தான் இருக்குங்க! (அவங்க் அவ்ளோ பிசின்னு நாம ஃபீல் பண்ணனுமாமாம்:)

இராம்/Raam said...

ஏலேய் தொம்பி,

நீ மட்டும் போட்டோ போஸ்'னதும் AVM சரவணன் மாதிரி நிக்கலாமா??? ஒனக்கு ஒரு நியாயம் ஊருக்கொரு நியாயமா.. :))

யோசிப்பவர் said...

//பேரன்பும் மிகப்பேரன்பும் மட்டுமே கொண்டவன்!
//
//டேய் இன்னுமாடா திருந்தல நீங்க?"//

நீங்கள் கேப்ஷனை மாற்றுவது பெஸ்ட்!

கதிர் said...

ஆயில்யன்!
அரசியல்வாதிங்க சின்ன வூட்டுகிட்ட கடல போடுவாங்க.
மீதி பேர் சொந்த பொண்டாட்டிகிட்ட அர்ச்சனை வாங்கிட்டு இருப்பாங்க.
சில பேர் செல்லே இல்லாம பேசிட்டு இருப்பாங்க. :)

கதிர் said...

வாய்யா வைகை!
என்னவோ சரவணந்தான் கை கட்டி நிக்கறத கண்டுபுடிச்ச மாதிரி சொல்றிங்க!
எனக்கு இயற்கைலயே அடுத்தவங்க மேல ஒரு மரியாதை இருக்கு யு நோ :)

கதிர் said...

//நீங்கள் கேப்ஷனை மாற்றுவது பெஸ்ட்!//

இந்த மாதிரி போஸ்டர் பாக்கும்போது யோசிக்காமலே கோவம் வந்திடுது. :)
ஆனா கேப்ஷன் மாத்த வேண்டியதில்லன்னு நினைக்கிறேன். இது அன்பான வேண்டுகோளோ எடுத்துக்காலாம்ல! :)

கோபிநாத் said...

\\"டேய் இன்னுமாடா திருந்தல நீங்க?"\\

இதெல்லாம்.....

Anonymous said...

அந்தப் படத்தப் பாருங்க.
ஒரு ஆளுக்கு 40 வயசுக்கு மேல இருக்கும் போல. இன்னொரு ஆளுக்கு 50 வயசுக்கு மேல இருக்கும் போல. இவிங்க ரண்டு பேரும் ரசினி ரசிகர்களாம். குடும்பத்த, பொழப்ப பாக்க வேண்டிய வயசில ரசிகர்மன்றமெல்லாம் தேவையா?

இப்படியே போனா, இந்த நாடு வெளங்குமாய்யா?

Unknown said...

மூஞ்சிய பாத்திய அதுங்கள?? செல்ல திருடிட்டு வந்த மாதிரியே முழிக்குதுங்க... இவனுங்க தலைவர் ஒரு பெரிய பேச்சாளர், இதுக வந்து பேசித்தான் தமிழ்நாட்ட காப்பாத்த போகுதுங்க.. பஞ்ச் டயலக் வேற இதுல.. இந்த செல்போன்காதனுங்க காதனுங்க தொல்ல தாங்க முடியலடா சாமியோவ்..(நம்ம கவுண்டர் இஸ்டைலில் படிக்கவும்.. )

நாகை சிவா said...

:))

அதும் வாய திறக்காமலே போன்ல எப்படி தான் பேச முடியுதோ இவங்களால...

வெட்டிப்பயல் said...

நான் கூட அந்த போஸ்டர்ல இருக்கற மேட்டருக்கோனு நினைச்சேன் ;)

கப்பி | Kappi said...

இவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸு :)))

Anonymous said...

எனக்கென்னவோ அந்த மீசக்கார அண்ணாச்சி ரிமோட் கன்ட்ரோலையும், அவுருக்கு பக்கத்துல இருக்கற அண்ணாச்சி கால்குலேட்டரையும் தன் காதுல வெச்சிருக்கற மாதிரி தோனுது.....

Ka.Sa.Sembian Moovendhan said...

எனக்கென்னவோ அந்த மீசக்கார அண்ணாச்சி ரிமோட் கன்ட்ரோலையும், அவுருக்கு பக்கத்துல இருக்கற அண்ணாச்சி கால்குலேட்டரையும் தன் காதுல வெச்சிருக்கற மாதிரி தோனுது.....