எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, July 16, 2007

அவியல்கள் + வலைப்பதிவர் சந்திப்பு

தலைப்புக்காக பெனாத்தல் சுரேஷுக்கு நன்றி.

Bus Conductor

எதாவது ஒரு கூட்டுறவு வங்கி கிராமத்துக் கிளையின் உதவியுடன் ஒரு முழு
மலையாளப்படத்தையும் எடுத்து விடலாம். ஷகிலா திரைப்படங்கள் நீங்களாக
அனைத்து மலையாளப்படங்களுக்கும் இது பொருந்தும். கூடவே திரையில் தன்
முகம் தெரிந்தால் போதும் சம்பளம் கூட தேவையில்லை என்று ஆசையில்
இருக்கும் சிலர் இருந்தால் இன்னும் சிறப்பாக எடுத்துவிடலாம். வசனம் எழுத
பேனா வாங்கும் செலவு மட்டும் கணிசமாக இருக்கும். (அம்புட்டு வசனம்யா!
க்ளைமேக்ஸ்ல கூட நம்ம கேப்டன் இந்தளவுக்கு பேச மாட்டாரு) ஆனால்
எந்த தளத்தில் இயங்கும் கதையானாலும் சரி அதன் ஆழம் வரை சென்று
உருப்படியான விஷயத்தை சொல்ல முயற்சிக்கிறார்கள் என்பதே பாராட்டும்
விஷயம்தான்.நகைச்சுவையில் இவர்களை அடிச்சிக்க ஆளே இல்லை. யாரையும்
புண்படுத்தாத, இயல்பான வசனங்கள் கொண்ட நகைச்சுவை காட்சிகள் ரசிக்க
வைக்கும்.

பாவனாவின் நடிப்பை திறனாய்வு செய்வதற்காக நான் எடுத்துக்கொண்ட முயற்சியில்
அவரின் சில படங்களை பார்த்தேன் அவற்றின் விளைவாக தெரிந்ததே இது.
அழகைத்தவிர குறிப்பிட்டு சொல்லும்படியாக பாவனாவிடம் ஒன்றுமில்லை.
நடிப்புத்திறமை கொஞ்சமே கொஞ்சம் இருக்கிறது. பக்கத்து அறையில் தங்கியிருக்கும்
சேட்டனிடன் அழுது அடம்பிடித்து வாங்கிய குறுந்தகட்டை வாங்கி பார்க்க
தொடங்கினேன் முழுவதுமாக ஒரு வட்டு முடிந்தும் பாவனாவை காணவில்லை
மறுவட்டின் கடைசி நாப்பது நிமிடங்களுக்கு மட்டும் மேக்கப் போடாமல்
கிளிசரின் மட்டும் போட்டு நடிக்க வைத்திருக்கிறார்கள். கதைன்னு பாத்தா
ஒண்ணும் கிடையாது லைட்டா விக்ரமன் வாடை அடிக்குது. எவ்வளவுதான்
அடிச்சாலும் க்ளைமேக்ஸ்ல மட்டும்தான் கதாநாயகன் அடிவாங்கி, அவமானபட்டு
உண்மைய போட்டு உடைக்கறது. மத்தபடி நகைச்சுவை ப்ரமாதமாக இருந்தது.
கமலுக்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் மம்முட்டிதான்.
அதனாலதான் இந்த படத்தை பார்த்தேன்னு சொன்னா நம்பவா போறீங்க.

தியேட்டர்களில் வெளிவராத திரைப்படத்துக்கு கூட விமர்சனம் எழுதி படமே
வேஸ்ட், பணம் வேஸ்ட் என்று ஒப்பாரி வைக்கும் சுப்புடுக்கள் இந்த மாதிரி
லோபட்ஜெட் படங்களை கண்டுகொள்வதே இல்லை அதனால் துணிந்து
எழுதுகிறேன்.

கருப்பசாமி குத்தகைக்காரர்.
நினைத்து நினைத்து பார்த்தேன்.
காசு இருக்கணும்.

இப்பலாம் ரெண்டு குறுந்தகடு அடங்கிய ஒரு படத்தை பாத்து முடிக்கறதுக்குள்ள
தாவு தீர்ந்துடுது. இந்த மூணு படங்களை பார்க்க நான் எடுத்துக்கொண்ட முயற்சிகள்
தடங்கள்கள், இன்னல்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. பதிவாக மட்டுமே
போட்டு உங்களை இம்சிக்க முடியும்.

க.சா.கு

இந்த இயக்குனர் படம் இயக்கிக்கொண்டிருக்கையில் எல்லா இயக்குனர்கள் சொல்வது
போலவே "நான் சொல்லப்போற காதல் ரொம்ப வித்தியாசமானது" என்று சேனலே
இல்லாத டீவில் அளந்து விட்டுக்கொண்டிருந்தார். இந்த வசனத்தைதான் எல்லாரும்
சொல்லிட்டு சூப்பர் டூப்பர் மொக்கைகளா எடுத்துகிட்டு இருக்காங்க. அதே வரிசைல
ஒரு மொக்கையாத்தான் இதையும் சேர்க்க முடியும்.

படத்துல கரணை பார்த்ததுமே ராமராஜன பாத்த மாதிரி இருந்துச்சி. அப்படியே
கரகாட்டக்காரன் ராமராஜன் முகம். ரோஸ் பவுடர், லிப்ஸ்டிக் மட்டும் மிஸ்ஸிங்.
படத்தோட கதைய சொல்ல ஆரம்பிச்சா எல்லாரும் ஓடிருவிங்க. ஏன்னா அது ஒரு
கதையே இல்ல. கதாநாயகிக்கு பொண்ணுக்கு உண்மைலயே படிச்சி டாக்டராகணும்னு
ஆசை இருந்தா கண்டிப்பா டாக்டர் ஆகலாம். அதைவிட்டுபோட்டு எந்த நேரமும்
கண்ண கசக்கிகிட்டு கரண் பின்னாடி போய் என்னைய படிக்க வைங்க படிக்க
வைங்கன்னு படம் முழுக்க கெஞ்சிகிட்டு இருக்குது. ஏம்மா நீ பாட்டுக்கு காலேஜுக்கு
போய் வரலாம்ல ஏன் சின்ன புள்ள மாதிரி அடம்புடிக்கற?
கடைசி வரைக்கும் பொறுத்து பார்த்து கடைசியில் போங்கடான்னு விட்டுட்டேன்.
ஒருவேளை க்ளைமேக்ஸ்ல இயக்குனரு எதாச்சும் ட்விஸ்ட் வச்சிருந்து தெரியாத்தனமா
அதை மிஸ் பண்ணீருந்தேன்னா பின்னூட்டத்துல சொல்லுங்க.

நினைத்து நினைத்து பார்த்தேன்.

இன்னிவரைக்கும் இந்த படத்தை ஏண்டா பாத்தோம்னு நினைச்சி வேதனைப்படறேன்.
இன்றைய கல்லூரி மாணவிகள் தமிழை எப்படி டமிலாக பேசுகிறார்கள் என்பதனை
நாசூக்காக படத்தின் நாயகி மூலம் இயக்குனர் சொல்ல வருகிறார் என்று நினைத்து
ஆஹா பெரிய ஆள்தான் போலருக்குன்னு நினைச்சேன். கடேசில பாத்தா அந்த
கதாநாயகி பாகிஸ்தான்ல இருந்து வந்தாங்களாம். அப்போ பாகிஸ்தான்லயும்
சென்னைலயும், வட இந்தியாவுலயும், சேட்டுகளும் ஒரே மாதிரிதான் டமில்
பேசுகிறார்களா? இயக்குனர்தான் சொல்லணும்.

இந்தியப்பையன் பாகிஸ்தான் பொண்ண லவ் பண்ணும்போது சில தேசியவாதிகள்
எதிர்க்கிறார்கள் நான் பார்த்த வரைக்கும் இதான் கதை. இதுக்கு மேல பாக்க
முடியல, பாக்கவும் முடியாது.

காசு இருக்கணும்.

இந்த படத்தை பாக்கறதுக்கு காசு இருந்தாலும், இல்லாவிட்டாலும் படத்தை பார்த்த
பிறகு மருத்துவரிடம் செல்வதற்கு கண்டிப்பாக காசு தேவை. இந்தியாவே பாராட்டிய
ஒரு இயக்குனர் படத்தில் நடித்திருக்கிறார். பொண்ணை கதாநாயகியா போட்டு
இன்னொரு படம் எடுக்க போறாரோ என்னவோ. சார் பணமுடையா இருந்தாலும்
இந்த மாதிரி படத்துல நடிச்சி பேர கெடுத்துக்காதிங்க சார். இந்த படத்தோட
கதையெல்லாம் சொல்லணுமா... தேவையில்ல விடுங்க.

கொசுறு:

அல் அய்ன் ல் நடந்த வலைப்பதிவர் சந்திப்புக்கு பிறகு அதுகுறித்து பதிவு எதையும்
போடவில்லை என அபிஅப்பா, குசும்பன் எல்லாரும் திட்டி தீர்த்தார்கள். இதில்
குசும்பர் கொலைமிரட்டலே விட்டார். அதனால் அதுகுறித்து எனது பார்வையையும்
பதிகிறேன்.

முதலில் இதை வலைப்பதிவர் சந்திப்பு என்று சொல்லவே முடியாது. நெருங்கிய இதயங்களின்
சந்திப்பு என்று சொல்லலாம். (சந்திப்புக்கு பிறகு நொறுங்கியது என்று கூட சொல்லலாம்)
மின்னலுடன் ஒரு வருடமாக தொலைபேசிமூலம் பேசியிருந்தாலும் நேரில் பார்த்ததில்லை.
அவரும் துபாய் வரமுடியாத சூழ்நிலை அதனால் எல்லோரும் போவோம் என்று
முடிவாகி சென்றோம். சும்மா சொல்லக்கூடாதுய்யா மனுசன் எல்லாரையும் கைல வச்சி
தாங்காத குறைதான் அத்தனை உபசரிப்பு.

Photo Sharing and Video Hosting at Photobucket

வலமிருந்து இடமாக அபிஅப்பா, கோபி, லியோ சுரேஷ், மின்னுது மின்னல், குசும்பர் (இவர பாத்ததும் வைரமுத்துன்னே நினைச்சேன்), சென்ஷு, சென்ஷி பின்னால மகேந்திரன்.பெ, பக்கத்துல நான், எனக்கு முன்னாடி அய்யனார் மற்ற நால்வரும் அனானி தெய்வங்கள்.


நான் எதிர்பார்த்தை விட வித்தியாசமான உருவ அமைப்பில் இருந்தார். இரட்டை வேட
சரத்குமார் படங்களில் சரத்துக்கு தம்பி வேடம் போட்டால் எப்படி இருப்பாரோ அப்படி
இருந்தார். (யாருப்பா அது கொடுத்த காசுக்கு மேல கூவாதிங்கன்னு சொல்றது.)

வலைப்பதிவில் கும்மி அடிப்பது தமிழின் எதிர்காலத்தை பாதிக்கும்னு எழுத்தாளர் மாலன்
குறைபட்டு ஒரு பதிவு எழுதியதாக அய்யனார் சொன்னார். ஆமாம் உண்மைதான்
அவர்கள் எல்லாம் தொழில்முறையான துறையில் இயங்கி வருகிறார்கள். ஆனால் இங்கே
இருப்பவர்கள் கிடைக்கும் நேரத்தில், திராவிட, பார்ப்பனிய, கம்யூனிச, மக இக, சம்ஹாரங்களுக்கு இடையையே தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளவே வருகின்றனர்.
நல்ல கருத்துக்களை சொல்லும் பதிவுகளில் போய் கும்மி அடிப்பதில்லையெ கும்மிக்கென்றே
தனியாக ஒரு வலைப்பதிவில்தான் கும்மி அடிக்கிறோம் ஒருவேளை அப்படி எதாவது
நல்ல பதிவுகளில் போய் அதை திசை திருப்பும் விதமாக காமெடி செய்திருந்தால்
அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம். பதிவெழுதுவது கும்மியடிப்பது அவரவர் விருப்பம்
அதை யாரும் தடுக்க முடியாது என்று எனது கருத்தை சொன்னேன். கும்மியடிப்பதால்
மட்டும் இணையத்தில் தமிழ் பாதிக்கப்படுவதாக சொல்வது அபாண்டமான குற்றச்சாட்டு
என்று கும்மிகள் சார்பாக எனது கருத்தை சொன்னேன். எத்தனை காலத்துக்குதான்
கும்மி அடிப்பார்கள் அதுவும் ஒரு கட்டத்தில் சலித்து போனால் வேறு எதையாவது
தேடுவார்கள் ஆதலால் யாரும் கவலைப்படவேண்டிய அவசியமில்லை என்றேன்.
மாற்றுக்கருத்து உள்ளவர்கள் தாராளமாக தெரிவிக்கலாம்.

மற்றபடி ஆட்டம்,பாட்டம் கொண்டாட்டம் பயங்கரமாக இருந்தது. சந்திப்பு முடிந்தவுடன்
ஒருவருக்கு இரண்டு வீதம் "உடம்பு வலி நிவாரணி மாத்திரை"யை எல்லாருக்கும்
மின்னுது மின்னல் இலவசமாக அன்பளித்தார். அதுவும் பத்தாது எனக்கு என்று நான்காக
உள்ளே தள்ளியும் "முடியல" என்று குசும்பர் அழுத குரல் துபாய் வரை எட்டியது. எம்புட்டு சேதாரம்னு நீங்களே கணக்கு போட்டுக்குங்க.

அமீரகம் வந்ததுமுதல் இதுபோன்ற சந்தோஷமான நாளை அனுபவித்ததே இல்லை என்று
அனைவரும் மொழிந்தார்கள். இது வலைப்பதிவின் வெற்றியா அல்லது நட்பின் பூரணமா
என்று தெரியவில்லை. ஐந்து நிமிடம் கூட உட்கார விடாமல் எல்லா இடத்தையும் சுற்றி
காண்பித்து அழகான நட்பு பாராட்டிய மின்னலுக்கெ அனைத்து நன்றியும் சேரும்.

24 comments:

Ayyanar Viswanath said...

/அழகான நட்பு பாராட்டிய மின்னலுக்கெ அனைத்து நன்றியும் சேரும். /

ரிப்பீட்டே (கோபி இந்த வார்த்தைய நான் பயன்படுத்தலாமா?)

அடப்பாவி!! 10 படத்துக்கு மேல வாங்கிட்டு போனியே அதை பத்தி எழுதலாமில்ல..கிர்ர்ர்ர்ர்ர் இந்த படங்கள் தான கெடச்சதா..யாரையாவது கிண்டல் பன்னலினா தூக்கம்வராதே உமக்கு

Sridhar V said...

ஒரே பதிவுல பல விஷயங்கள்ல படம் பிடிச்சிட்டிங்க :-)

//க.சா.கு//

கவலப்படாதீங்க கிளைமேக்ஸ்ல ஒன்னியும் ட்விஸ்ட் கிடையாது. கதைய விடுங்க. அந்த 'மண் கமழும்' வசனங்கள் நிச்சயமாக ப்ள்ஸ் பாயிண்ட்தான்னு தோணுச்சு.

படம் நன்றாக இருந்தது. அப்படியே 'யார் பக்கத்துல யாரு, அவருக்கு என்ன பேரு' சொல்லிருந்தீங்கன்னா ஜூப்பரா இருக்கும்ல...

Osai Chella said...

மகிழ்ந்தேன். சென்றவருடம் வந்தபோது அல் ஐன் வந்து ( அங்கு யாரையும் தெரியாது, வலயும் பதியவில்லை!) அங்கிருந்து டாக்சியில் ஜபல் ஹஃபீட் மலை சென்று வந்தேன். அவ்வூர் நிச்சயம் பசுமையானதுதான்! அடுத்து வரும் போது துபை, அலய்ன், சார்ஜா, ஃபுஜைரா என்று ரவுண்டு கட்டி பதிவர்கள் சந்தித்துவிட்டுதான் ஊர் திரும்பவேண்டும்என்று முடிவோடிருக்கிறேன்!

கதிர் said...

அய்யனார் நீங்க கொடுத்த படத்தை பாக்கறதே பெரிய விஷயம் அதுக்கு விமர்சனம் வேற எழுதணுமா?
தமிழ்ல வந்த வெள்ளைப்படத்தையே நான் பாக்கறதில்ல, இதுல ஆங்கிலத்துல வெளிவந்த அந்த காலத்து வெள்ளைப்படத்த கொடுத்து அதைப்பத்தி வேற எழுதணுமா?

வெங்கட்..

பேரு போட்டாச்சு பாருங்க.

வாங்க "நச்" செல்லா

அடுத்து வரும்போது கண்டிப்பா தெரியபடுத்துங்க. உங்கள பாக்கணும்னு கொலவெறியோட ஒருத்தர் காத்துகிட்டு இருக்கார். :)

லொடுக்கு said...

அபிஅப்பா சின்ன வயசு அசாருத்தீன் மாதிரி இருக்கிறார். :)

லொடுக்கு said...

நானும் வந்திருக்கலாமோ!! :(

Jazeela said...

அவியல் இல்லாம வலைப்பதிவர் சந்திப்பு மட்டும் போட்டிருந்தா ரொம்ப கஷ்டப்பட்டிருக்க மாட்டேன்ல ;-) நீங்கதான் ஒரு உருபடியான தெளிவான படம் போட்டிருக்கீங்க. நாலு அனானில 2 பேர் முகம்தான் தெரியுது. ம.பெ. சின்ன பையன் மாதிரி இருக்கிறார்களே? - ஒருவேளை தவறாக அவர்தான் ம.பெ.ன்னு எழுதிட்டீங்களோ?

கதிர் said...

பனிக்கட்டில கபடி விளாடலாம்னு கேட்டவருதான் அவரு. அசாருதீன் மாதிரியா இருக்காரு.

கண்டிப்பா வந்திருக்கலாம் லொடுக்கு.
அடுத்த முறை மிஸ் பண்ணாம வாங்க.

ஜெசிலா,
//அவியல் இல்லாம வலைப்பதிவர் சந்திப்பு மட்டும் போட்டிருந்தா ரொம்ப கஷ்டப்பட்டிருக்க மாட்டேன்ல ;-)//

அப்போ நாங்க மட்டும் கஷ்டபடலாமா!
படத்தை பாக்க வேணாம்னு உங்களுக்கெல்லாம் எச்சரிக்கை கொடுக்கறது தப்பா போச்சு!.

//நீங்கதான் ஒரு உருபடியான தெளிவான படம் போட்டிருக்கீங்க. நாலு அனானில 2 பேர் முகம்தான் தெரியுது. ம.பெ. சின்ன பையன் மாதிரி இருக்கிறார்களே? - ஒருவேளை தவறாக அவர்தான் ம.பெ.ன்னு எழுதிட்டீங்களோ?//

இந்த தெளிவான படம் போடறதுக்குதான் எத்தனை எதிர்ப்பு.
கால்வாசி முகம் கூட தெரியாம இருக்கறவர்தான் ம.பெ. சென்ஷிக்கு பின்னாடி இருப்பவர். போட்டோ எடுக்கும்போதெல்லாம் ஓடொ ஒளிந்தார், இல்லன்னா நானே எடுகக்றேன்னு சொன்னார். ஏன்னுதான் தெரியல!.

லொடுக்கு said...

//கால்வாசி முகம் கூட தெரியாம இருக்கறவர்தான் ம.பெ. சென்ஷிக்கு பின்னாடி இருப்பவர்.//
அப்போ அவர் ப்ரொஃபைல் இருக்கும் படம் யாரோடது? ;)

கப்பி | Kappi said...

Bus Conductor சரி...மத்த மூனு படத்துக்கும் என்னால் போஸ்டரையே முழுசா பார்க்க முடியல..எப்படிய்யா உம்மால படத்தை பார்க்க முடிஞ்சது?

சந்திப்புல கலக்கியிருக்கீங்க...அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

கோபிநாத் said...

\\இது வலைப்பதிவின் வெற்றியா அல்லது நட்பின் பூரணமா
என்று தெரியவில்லை. ஐந்து நிமிடம் கூட உட்கார விடாமல் எல்லா இடத்தையும் சுற்றி
காண்பித்து அழகான நட்பு பாராட்டிய மின்னலுக்கெ அனைத்து நன்றியும் சேரும்.\\

உண்மை.....உண்மை.....மின்னலுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

கதிர் said...

//கால்வாசி முகம் கூட தெரியாம இருக்கறவர்தான் ம.பெ. சென்ஷிக்கு பின்னாடி இருப்பவர்.//
அப்போ அவர் ப்ரொஃபைல் இருக்கும் படம் யாரோடது? ;) //

இட ஒதுக்கீடு குறித்த போராட்டம் ஒன்றில் போலீசாரால் தாக்கப்பட்ட ஒரு பெண் தமிழ்ப்பெண். கோவையில் நடந்தது என்று சொன்னார். அதுக்கு மேல விவரம் தெரியல எனக்கு.

கதிர் said...

//Bus Conductor சரி...மத்த மூனு படத்துக்கும் என்னால் போஸ்டரையே முழுசா பார்க்க முடியல..எப்படிய்யா உம்மால படத்தை பார்க்க முடிஞ்சது?//

அதான்யா கப்பி சொல்றது...
வல்லவனுக்கு வல்லவன் துபாய்ல இருப்பான்னு. :) வேற வழி இல்லாம பாத்து தொலச்சிட்டேன் ஊருக்கு வந்த உடனே வண்டிய நேரா கோடம்பாக்கத்துக்கு விட்டு அவனுங்கள கொல்லணும்.

//சந்திப்புல கலக்கியிருக்கீங்க...அனைவருக்கும் வாழ்த்துக்கள்! //

நன்றி கப்பி.

கதிர் said...

//உண்மை.....உண்மை.....மின்னலுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். //

ரிப்ப்பீட்டேய்.. :)

சினேகிதி said...

எல்லாரும் ஓகே அபி அப்பா மட்டும் ஏனிப்பிடி முறைக்கிறாரு?? ஆமா உங்க ஊரில பெண் வலைப்பதிவர்கள் யாருமே இல்லையா??

Anonymous said...

தம்பி இந்த கூட்டத்துலயே நீங்கதான் பார்க்கறதுக்கு அழகா இருக்கீங்க. பாவனா உண்மையிலயுமே ரொம்ப கொடுத்து வெச்சவ.

(ஏதோ நம்மளால முடிஞ்சுது)

குசும்பன் said...

நந்தா said...
தம்பி இந்த கூட்டத்துலயே நீங்கதான் பார்க்கறதுக்கு அழகா இருக்கீங்க. பாவனா உண்மையிலயுமே ரொம்ப கொடுத்து வெச்சவ.

(ஏதோ நம்மளால முடிஞ்சுது)

தம்பி பார்த்துக்கு இதுக்கு தான் போட்டோவ போடாத போடாதன்னு அடிச்சுக்கிட்டேன்...நல்லா இருய்யா நல்லா இரு....

Anonymous said...

லொடுக்கு, அப்பன்னா எங்க ஆளு சங்கீதாபிஜ்லானி பின்னால போயிடுவாரா, அய்யகோ!

இராம்/Raam said...

கதிரு,


ப்ளு கலர் ஜீன்ஸ்'ம் ,ரெட் கலர் டீசர்ட் போட்டு ஒரு ஸ்மார்ட் ஆளு நிக்கிறாரே???

அவருதான் நம்ம அய்ஸ்'ஆ???

/தம்பி இந்த கூட்டத்துலயே நீங்கதான் பார்க்கறதுக்கு அழகா இருக்கீங்க. பாவனா உண்மையிலயுமே ரொம்ப கொடுத்து வெச்சவ. //

அப்பிடியா????? :((

கதிர் said...

//எல்லாரும் ஓகே அபி அப்பா மட்டும் ஏனிப்பிடி முறைக்கிறாரு?? ஆமா உங்க ஊரில பெண் வலைப்பதிவர்கள் யாருமே இல்லையா?? //

நாப்பது வயசுக்கு மேல உள்ளவங்களெல்லாம் இந்த கேமராவுல போட்டோ எடுக்க முடியாதுன்னு சொன்னாங்களாம் அதான் முறைக்கறாரு.

ரெண்டு பேர் இருந்தாங்க. இப்ப ஒரே ஒருத்தர்தான் இருக்காங்க. எனக்கு தெரிஞ்சு ஜெஸிலா மட்டும்தான் அமீரகத்தின் ஒரே ஸ்டார். வேற யாரும் இல்லேன்னு நினைக்கறேன்.

வருகைக்கு நன்றிங்க சினேகிதி

கதிர் said...

//தம்பி இந்த கூட்டத்துலயே நீங்கதான் பார்க்கறதுக்கு அழகா இருக்கீங்க. பாவனா உண்மையிலயுமே ரொம்ப கொடுத்து வெச்சவ. //

வாங்க நந்தா!

நீங்க உண்மைய சொல்றிங்க ஆனா
இந்த கமெண்டுக்கு எம்புட்டு செல்வாச்சுன்னு கேக்கறவங்க இருக்காங்கப்பா இங்க. :)

எதோ வந்தமா ரெண்டு கமெண்ட் போட்டமான்னு இருக்கணும் இந்த மாதிரி இல்லாததும் பொல்லாததும் சொல்லப்படாது.

//(ஏதோ நம்மளால முடிஞ்சுது) //

இது வேறயா. பத்த வைக்காமலே பத்திகிட்டு எரியுதுங்க இந்த ஊரு. :)

கதிர் said...

//தம்பி பார்த்துக்கு இதுக்கு தான் போட்டோவ போடாத போடாதன்னு அடிச்சுக்கிட்டேன்...நல்லா இருய்யா நல்லா இரு.... //

விழாநாயகன் வைரமுத்து சொன்னா சரியாதான் இருக்கும். இப்ப சொல்லு இன்னும் ரெண்டு போட்டோவ போடலாம். அழகுன்றது மனசுலதான்யா இருக்கு அதை பத்தி பதிவே போட்டுருக்கேன்.

கதிர் said...

//கதிரு,


ப்ளு கலர் ஜீன்ஸ்'ம் ,ரெட் கலர் டீசர்ட் போட்டு ஒரு ஸ்மார்ட் ஆளு நிக்கிறாரே???

அவருதான் நம்ம அய்ஸ்'ஆ???//

ஏய்யா இந்த கொலவெறி???
ஏன் அவரையே எல்லாரும் கட்டம் கட்டறிங்க?

Anonymous said...

தம்பி, நலமா?
நீங்களும் பதிவர் சந்திப்புக்கெல்லாம் போகின்றீர்களா?
படத்தில் இருப்பவர்களின் அறிமுகத்திற்கு நன்றி