எல்லையற்ற அன்பு கொள்வோம்

Thursday, July 05, 2007

என்ன செய்ய???

"மச்சி என் ஃபோன புடுங்கி கால் ரெஜிஸ்டர் எல்லாம் செக் பண்றாடா" இவள
நம்பி எப்படி என் வாழ்க்கைய கொடுக்க முடியும் சொல்லு.

**********

"இந்தாளுக்கு விளம்பர இடைவெளைல பசிச்சா என்ன? எப்ப பாத்தாலும்
சீரியல் ஆரம்பிக்கும்போதுதான் பசிக்குது. ச்சே

**********

"எல்லா மாசத்துலயும் ஒண்ணுல இருந்து பத்து தேதிக்குள்ள" இருக்கற மாதிரி
செட் பண்ணிட்டா இருபதாம் தேதிக்கு மேல ஆறிப்போன காபி "டொக்"னு
சத்தத்தோட கிடைக்காம சூடா கிடைக்க வாய்ப்பு இருக்குமா?

**********

"அனுபவஸ்தன் சொல்றேன் கேட்டுக்கோ மேட்ரிமோனி புரொபைல்ல நீ பார்க்கறது
எல்லாம் உண்மைன்னு நம்பினா என்னை மாதிரிதான் ஆவ"

**********

"மச்சான் போன வைய்யி நான் அப்புறம் பேசறேன்"

ஏண்டா?

என் பொண்டாட்டி வர்றாடா...

நீ என்னமோ கள்ளக்காதலிகிட்ட பேசுன மாதிரி ஏண்டா பயப்படற? தங்கச்சிகிட்ட
நான் சொன்னேன்னு சொல்லு.

"சொன்னா மட்டும் வெளங்கிற போவுதா அவளுக்கு வைடா மாப்ள"

**********

"எத்தனை நாள்டா உள்ள இருந்த"?

"பதிமூணு நாள்"

கல்யாணம் ஆனவுடனே வெளிய விட்டுட்டாங்களா?

ம்ம்

ரெண்டு பேரும்தான ஓடிப்போனிங்க? ஏன் உனக்கு மட்டும் ஜெயிலு
அவளுக்கு வேற கல்யாணம்?

"......."

கேஸு?

வாபஸ் வாங்கிட்டதா ஸ்டேசன்ல சொன்னாங்க.

"இனிமேலாச்சும் பாத்து சூதானமா இருந்துக்க".

**********

இதெல்லாம் எங்கயோ பார்த்தது, கேட்டது, அனுபவிச்சது. அதது, அப்பப்போ,
அந்தந்த வயசுல வரணும். அது தானா வந்தாலும்,முக்கியமா வலுக்கட்டாயமா
வரவழைச்சாலும் ஆபத்துதான்.

எனக்கு தெரிஞ்சி ஏகப்பட்ட உதாரணங்கள் நட்பு வட்டாரத்துலயே இருக்காங்க
அதுல இன்னமும் ஒருத்தன் மீளாமல் இருக்கான். தேவையில்லாம அதுக்கு
முக்கியத்துவம் கொடுத்ததுனால அவனோட வாழ்க்கையே போச்சி. சமீபத்துல
அவனை பத்தி கேட்ட ஒரு செய்தியே இந்த மாதிரி டயலாக்கா அள்ளி
வீசுற அளவுக்கு போயிடுச்சி.

அப்படி என்னதான்யா இருக்கு அந்த வெங்காயத்துல?ன்னுதான்
கேட்க தோணுது.

33 comments:

வெங்கட்ராமன் said...

சூப்பர்

தம்பி கலக்கீட்டிங்க.

என்னத்த செய்ய ஆனாலும் கல்யாண ஆசை எல்லாருக்கும் இருக்கே . . . . . . ?

லொடுக்கு said...

ஆஹா! ஜகா வாங்குற மாதிரி தெரியுதே!

அபிஅப்பா, சீக்கிரம் தம்பிக்கு ஏற்பாடு பண்ண சொல்லுங்க. வர வர போக்கே சரியில்லை.

வல்லிசிம்ஹன் said...

கல்யாண ஆசையா, காதல் ஆசையா எதுவாயிருந்தாலும் புரிதல் தானே வேணும் தம்பி...

வெங்காயத்தில என்ன இருக்குனு பார்க்கிற ஆசைதான் இந்தக் காதல் கத்திரிக்காய்,கல்யாணம் எல்லாம். மேலும் தனிமைனு ஒரு பிசாசு துரத்தறதுனு பயந்து போயும் மாட்டிக்கிறாங்க. ஊரோட ஒத்து வாழணும்னும் ஆசை. எத்தனையோ காரணம் இருக்கு.

கோபிநாத் said...

அப்படின்னா? உனக்கும் பாவனாவுக்கும் கச முசான்னு கேள்விபட்டது உண்மை தான் போல

குசும்பன் said...

"மேட்ரி மோனியல"
அனுபவம் பேசுது போல தம்பி

Anonymous said...

ச்சீ..போய்யா

அபி அப்பா said...

ஏன் தம்பி இத்தன சலிப்பு! கல்யாணம் செஞ்சுகிட்டு பார், அந்த சந்தோஷம் தனிதான்.நீனு சீக்கிரம் கல்யாணம் கட்டிகிட்டு அபிஅப்பா அபிஅம்மா மாதிரி வாழ வாழ்த்தறேன்!

Jazeela said...

நல்ல அனுபவம். மற்றவர்கள் அனுபவம் ஒரு பாடம்தான். பிரச்சனைய பார்த்து திருத்திப்பீங்களா அத விட்டுட்டு சமாளிக்காம ஓடுனா எப்படி?

நாகை சிவா said...

ராசா.... என் செல்லமே....

வாடா... வாடா.... வந்து ஒரு உம்மா வாங்கிட்டு போடா...

இம்புட்டு நாள் நீ போட்ட பதிவுலே நல்ல பதிவுனா இது தான்ய்யா.... என்னமா வாழ்க்கையின் உண்மைய சொல்லிட்ட....

மாட்டுனவன் எல்லாம் உன்னையும் உள்ள இழுக்க பாக்குறாங்க....

உசாரா இருந்துக்கோ... மாட்டினா நிஜார் கூட தங்காது....

கப்பி | Kappi said...

மாட்டிக்கிட்டீயே சீயான் மாட்டிக்கிட்டியே :))

கதிர் said...

//சூப்பர்

தம்பி கலக்கீட்டிங்க.

என்னத்த செய்ய ஆனாலும் கல்யாண ஆசை எல்லாருக்கும் இருக்கே . . . . . . ? //

வாங்க வெங்கட்!
கல்யாணத்தையே தப்புன்னு சொல்ல வரவில்லை.
அடிப்படை புரிதல்கள் கூட இல்லாமல் கல்யாணம் செய்துகொண்டு பின் வாழ்நாள் முழுவதும் சண்டை போடுவதுதான் தவறுன்னு சொல்றேன்.

//ஆஹா! ஜகா வாங்குற மாதிரி தெரியுதே!//

ஜகா இல்லைங்க.

//அபிஅப்பா, சீக்கிரம் தம்பிக்கு ஏற்பாடு பண்ண சொல்லுங்க. வர வர போக்கே சரியில்லை. //

நமக்கெல்லாம் இன்னும் அந்த வயசு வரலங்க லொடுக்கு!

கோபிநாத் said...

\\//அபிஅப்பா, சீக்கிரம் தம்பிக்கு ஏற்பாடு பண்ண சொல்லுங்க. வர வர போக்கே சரியில்லை. //

நமக்கெல்லாம் இன்னும் அந்த வயசு வரலங்க லொடுக்கு!\\\


ரிப்பீட்டேய் ;)))

கதிர் said...

//கல்யாண ஆசையா, காதல் ஆசையா எதுவாயிருந்தாலும் புரிதல் தானே வேணும் தம்பி...//

வாங்க வல்லியம்மா

சரியா சொன்னிங்க!

//வெங்காயத்தில என்ன இருக்குனு பார்க்கிற ஆசைதான் இந்தக் காதல் கத்திரிக்காய்,கல்யாணம் எல்லாம். மேலும் தனிமைனு ஒரு பிசாசு துரத்தறதுனு பயந்து போயும் மாட்டிக்கிறாங்க. ஊரோட ஒத்து வாழணும்னும் ஆசை. எத்தனையோ காரணம் இருக்கு.//

அந்த ஆசை பொய்யாகும்போதுதான் எல்லாமே தப்பா போயிடுது. இப்பலாம் ஒம்பதாவது படிக்கும்போதே வந்துடுதாம். அதுக்குள்ள ஓடிப்போயிடறாங்க.
அந்த பெற்றோரின் வளர்ப்புமுறை எப்படியிருக்கும்.
அந்தளவுக்கு ஆகிப்போச்சு காலம். இதெல்லாம் தப்புன்னு சொல்றேன்.

தனிமைன்னு ஒரு பிசாசு துரத்தறதுனால கல்யாணம் பண்ணிக்கறாங்கன்னு சொல்றது இப்பதான் கேள்விப்படறேன். எனக்கு தெரிஞ்சு பெற்றோர்கள், உறவினர்கள் எல்லாருடைய வற்புறுத்தலாலதான் கல்யாணமே பண்ணிக்கறாங்க.

கல்யாணம்னாவே இந்த காலத்துல பசங்க எல்லாம் தெரிச்சி ஓடுற அளவுக்கு பயந்து போயிருக்காங்கன்னா
பாத்துக்கோங்க.

இந்த மாற்றம் ஏன் வந்துச்சு? எதுக்கு இத்தனை பயம்? யாரோட சுதந்திரம் பறிபோயிடுதுன்னு இத்தனை கூச்சல்?

இல்ல இதுவரைக்கு கல்யாணம் பண்ணிகிட்டு வாழ்ந்தவங்கதான் இத்தனை பயத்துக்கும் பொறுப்பு.

சந்தோஷமா வாழறவங்களும் இருக்காங்கன்னு சொல்லுவிங்க!

அங்கொண்ணும் இங்கொண்ணுமா சிலபேர் இருக்கத்தான் செய்றாங்க.

அடுத்த தலைமுறை வந்துச்சின்னா அதுவும் இல்லாமல் போகும்.

நாகை சிவா said...

//மாட்டிக்கிட்டீயே சீயான் மாட்டிக்கிட்டியே :)) //

உன்ன அருமை பெருமையா வளத்தேனே.....

இப்படி போய் மாட்டிட்டீயே சீயான்.......

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கதிர் said...

//அப்படின்னா? உனக்கும் பாவனாவுக்கும் கச முசான்னு கேள்விபட்டது உண்மை தான் போல //

100% உண்மை

ஆமாம்ல பாவனாவுக்கும் எனக்கும் கச முசாதான். செப்டம்பர் மாதம் எங்கள் சந்திப்பு நடக்க போகுது! பாவனா வரப்போறாங்கடோய்!

//"மேட்ரி மோனியல"
அனுபவம் பேசுது போல தம்பி //

ஆமாய்யா குசும்பா அனுபவம்தான் ஆனா இந்த மாதிரி அனுபவங்கள மத்தவங்ககிட்ட இருந்து படிச்சது.
இந்த விஷயத்துல மாணவனா இருப்பதூதான் சாலச்சிறந்தது.

//ஏன் தம்பி இத்தன சலிப்பு! கல்யாணம் செஞ்சுகிட்டு பார், அந்த சந்தோஷம் தனிதான்.நீனு சீக்கிரம் கல்யாணம் கட்டிகிட்டு அபிஅப்பா அபிஅம்மா மாதிரி வாழ வாழ்த்தறேன்! //

எனக்கு சலிப்பு இல்லங்க. இன்னமும் கல்யாணத்து மேல நம்பிக்கை இருக்கு. ஆனா அதை பண்ணிகிட்டு சந்தோஷமா இல்லாதவங்க மேலதான் வருத்தம். இப்பகூட உதாரணத்துக்கு இரண்டு பெரிய நடிகர்கள்.

உங்க வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

கதிர் said...

//நல்ல அனுபவம். மற்றவர்கள் அனுபவம் ஒரு பாடம்தான். பிரச்சனைய பார்த்து திருத்திப்பீங்களா அத விட்டுட்டு சமாளிக்காம ஓடுனா எப்படி?//

வாங்க ஜெஸிலாக்கா!

நான் எங்கங்க ஓடறேன். இப்படிலாம் இருக்குதேன்னுதான் சொல்றேன். :)
ஏன்னு உங்கள மாதிரி ஆளுங்கதான் விளக்கம் கொடுக்கணும்.

//ராசா.... என் செல்லமே....

வாடா... வாடா.... வந்து ஒரு உம்மா வாங்கிட்டு போடா...

இம்புட்டு நாள் நீ போட்ட பதிவுலே நல்ல பதிவுனா இது தான்ய்யா.... என்னமா வாழ்க்கையின் உண்மைய சொல்லிட்ட....

மாட்டுனவன் எல்லாம் உன்னையும் உள்ள இழுக்க பாக்குறாங்க....

உசாரா இருந்துக்கோ... மாட்டினா நிஜார் கூட தங்காது....//

செல்லம்...

நீயுமா! உன் பேரை பதிஞ்சாச்சு.

கதிர் said...

//மாட்டிக்கிட்டீயே சீயான் மாட்டிக்கிட்டியே :)) //

மெதுவா மாட்டிக்குவோம் இப்ப என்ன அவசரம்?

அங்க எப்படி வொய்...

//கோபிநாத் said...
\\//அபிஅப்பா, சீக்கிரம் தம்பிக்கு ஏற்பாடு பண்ண சொல்லுங்க. வர வர போக்கே சரியில்லை. //

நமக்கெல்லாம் இன்னும் அந்த வயசு வரலங்க லொடுக்கு!\\\


ரிப்பீட்டேய் ;))) //

எலே சிவாஜியே ரிலீஸ் ஆச்சி இன்னும் சந்திரமுகிலயே இருக்கயே!
இன்னுமா திருந்தல நீ?

களவாணி said...

aNNe naanum onga kesuthen,

naangallaam kadavul maadhiri oramaa ninnu vedikkai paarthuttu appadiye "S" aagitanum, thappi thavari ulla pugunthomnu vainga, kuniya vachi kummithaan.

kalakkal pathivu thala. makkals intha pathivap paarthaavathu konjam gavanamaa irunga.

களவாணி said...

//அப்படி என்னதான்யா இருக்கு அந்த வெங்காயத்துல?ன்னுதான்
கேட்க தோணுது. //

athula onnime illeenga. urikka urikka azhukaithaan varum. aanaa urichathukkapuram ulla onnime irukkaathu.

களவாணி said...

//வெங்காயம் said...
ச்சீ..போய்யா //

paartheengalaa? intha vengaayathukku nemba kusumbu...

களவாணி said...

BHAVANA-llaam kanavula mattumthaan illa aNNe. ABDUL KALAM sonnatha neengathaanga follow panreenga...

களவாணி said...

ippo naan jagaa vaangikkaren...

pathivu super

tanx,

kalavaani Senthil... :)

வல்லிசிம்ஹன் said...

நானும் வற்புறுத்திய அம்மாக்களில் ஒருத்திதான்.:)))

நாம் வற்புறுத்துவது நல்ல திருமணத்தை நோக்கி இருக்கணும்.
அதற்கு அப்புறம் திருமணத்தச் செம்மையா நடத்திக்கிறது புருஷன் பொஞ்சாதி கைலதான்.

பிள்ளைங்க,பொண்ணுங்க ரெண்டு பேருக்குமே பொறுமை குறைந்து போச்சு. கையில பணம் பார்க்கிறாங்க.

சுதந்திரம்னு நினச்சு இன்னொருத்தரை அண்டி வாழவும் இருவருக்குமே பயம் வந்து விட்டது.

அதுதான் வற்புறுத்த வேண்டி வருது.
தனிமைக்குப் பயந்து திருமணம் செய்த 45 வயது வாலிபரையும் பார்த்து இருக்கேன், இப்பவும் நான் தனிமையாத்தான் இருக்கேன்னு எங்க சிங்கத்துகிட்டச் சொன்னாராம்.

மனசுதான் காரணம் தம்பி. அபிஅப்பா மாதிரி நல்லாப் புரிஞ்சுகிட்ட தம்பதிகளும் இருக்காங்க.
உங்க அம்மா அப்பா,எங்களை மாதிரி விட்டுக்கொடுத்து வாழ்ந்து அமைதியா இருக்கிறவங்களும் இருக்காங்க.
உங்களுக்கும் நல்ல வாழ்க்கை அமையும்.

Unknown said...

ம்ம்ம் ஒவ்வொருவருடைய அனுபவுமும் ஒவ்வொரு மாதிரி...

காயத்ரி சித்தார்த் said...

//அப்படி என்னதான்யா இருக்கு அந்த வெங்காயத்துல?//

வெங்காயம் கிருமி நாசினி.. அதுல நோய் எதிர்ப்பு சக்தி இருக்குன்னு எங்க அம்மாச்சி சொல்லும்! அவ்ளோதான் எனக்கு தெரியும்! :))

காயத்ரி சித்தார்த் said...

//அடுத்த தலைமுறை வந்துச்சின்னா அதுவும் இல்லாமல் போகும். //

ஏன் தம்பி இவ்ளோ அவநம்பிக்கை? கல்யாணம் பெரும்பாலும் ஊரோட ஒத்து வாழற முயற்சி தான். ஆனா அடிப்படைப் புரிதல்கள் எப்டி வரும் சொல்லுங்க? ரெண்டு பக்கமும் புரிஞ்சுக்கறதுக்கான முனைப்பு இருக்கனும். ''நான் இப்டி தான் இருப்பேன், நீ என்னை புரிஞ்சுக்கோ'' ன்னு ரெண்டு பேரும் நின்னா புரிதல் சாத்தியமேயில்லை.

என்னை பொருத்தவரை மனசுக்கு பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கனும்.. அதுக்குப்பிறகு அவங்ககிட்ட எத்தனை குறைகள் தென்பட்டாலும் அதையும் சந்தோஷமா ஏத்துக்கனும். பேசிக்கா மனசுல அன்பு இருந்தாலே குறைகள் கண்லயே படாது. விட்டுக்கொடுத்தல்கள் ஏதோ ஒரு பக்கம் முழுமையா இருந்தாக் கூட போதும்.. வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்!

(மொத தடவையா சீரியஸா ஒரு பின்னூட்டம் போட்ருக்கேன்..ஸ்ஸ்ஸ்.. ஜூஸ் கொண்டாங்கப்பா!)

கதிர் said...

பின்னூட்டமிட்ட அனைவரும் கவனிக்க...
இந்த பதிவில் கல்யாணம் என்பது மட்டுமே பிரச்சினை என்று சொல்லவில்லை. காதல்தான் பிரச்சினை என்று சொல்ல வருகிறேன்.

காயத்திரியக்காவ்...

ரெண்டு பேர் மனசும் ஒத்து வந்து காதல் பண்றாங்க. ஏதோ ஒரு சூழ்நிலைல சேர முடியாமல் போயிடுது. ஆனா பெண்கள் காதலை சீக்கிரமே மறந்து வேற கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா இருக்கறதுக்கான வாய்ப்புகள் அதிகம்.
அதே மாதிரி ஏன் இந்த ஆண்கள் இருப்பதில்லை. ரொம்ப நாளைக்கு அதே பெண்ணையே நினைச்சிகிட்டு, தாடி, தண்ணி இது மாதிரி சுத்தறது.
இவங்கள மாதிரி ஆளுங்களுக்கு எந்த விஷயத்துல ஏமாற்றம் வந்தாலும் தாங்கிக்கலாம் ஆனா காதல்ல மட்டும் ஏமாற்றம் வந்தா தாங்கிக்க முடியாது.
நீயும் வேற கல்யாணம் பண்ணிக்கோ ரெண்டுக்கு நாலா பெத்துக்கோ, சந்தோஷமா இரு.
முக்கியமா ஸ்கூல் பசங்களுக்கு தவறாம காதல் வந்திடும் குறிப்பா ஸ்கூல் முடிக்கறதுக்குள்ள.

என்னோட கருத்து என்னன்னா..

போன வருஷம் இதே நாள் என்ன சாப்பிட்டோம் என்பதை மறந்துடற மாதிரி பழைய காதல், வாழ்வின் கசப்பான சம்பவங்கள் இதெல்லாம் மறந்து போயிடற சூழ்நிலையை உருவாக்கணும். தேவைக்கதிகமான முக்கியத்துவம் குடுத்தாலே எதுவும் பிரச்சினைதான். முதல்காதல், ஸ்பரிசம்,புனிதம் etc.. மாதிரி
பேத்தனமா யோசிச்சிட்டு இருக்கறது வேஸ்ட்.

கண்மணி/kanmani said...

இம்புட்டு சலிச்சிக்கிறீரே ஏதோ ஒலகத்துல இருக்க அத்தனை துன்பத்துக்கும் பொம்பளைங்களும் கல்யாணமும் தாம் காரணம் மாதிரி எங்கே அடுத்த பதிவுல 'தம்பி சாமியார் ஆயிட்டார்'
இமய மலைச் சாரலைத் தேடி' ன்னு பதிவுகள் போடுங்க பாப்பம்.
பாவனா ன்னு ஜொல்லு உடறது.பின்னூட்டம் வருமிண்டு இப்படி பதிவு போடறது.
சின்னப் பொண்ணுனாலும் 'காயத்ரி' சொன்னது 100% நிஜம்.
ஒரு நாளைக்கு 10 முறை படிச்சுப் பாருங்க.

Ayyanar Viswanath said...

அப்படிப்போடு தம்பி

இந்த உலகத்துல பதினம வயதில் ஒவ்வொரு இளைஞனுக்கும் ஏற்படும் பிரச்சினைக்கு காரணமே பொண்ணுங்க தான்யா அதுவும் படிக்கிறச்ச இவளுங்க பண்ணும் அட்டகசம் இருக்கே..கொடும!! அய்யோ மக்கா எத்தன பேர் வாழ்வு சீரழிஞ்சி போயிருக்கு.எத்தனை அப்துல் கலாம்கள் டாஸ்மார்க் கடையில குத்த வச்சி உட்கார்ந்திருக்கானுங்கோ..எல்லாத்தையும் பண்ணிட்டு துட்டு கீற பையனா பாத்து கல்யாணம் பண்ணிட்டு குழந்தையோட ரோட்ல போவாளுங்க பாரு..சும்மா எரியும்யா வயிறு

கண்மனியக்கா..காயத்ரி டீச்சர் செம காமெடியா பின்னூட்டம் போட எங்க சொல்லித்தராங்க?..அட்ரஸ் ப்ளீஸ்

என் முந்தய பின்னூட்டங்களை போடாத உன் கருத்து சுதந்திர மீறலை வன்மையாக கண்டிக்கிறேன்

கதிர் said...

//இம்புட்டு சலிச்சிக்கிறீரே ஏதோ ஒலகத்துல இருக்க அத்தனை துன்பத்துக்கும் பொம்பளைங்களும் கல்யாணமும் தாம் காரணம் மாதிரி எங்கே அடுத்த பதிவுல 'தம்பி சாமியார் ஆயிட்டார்'
இமய மலைச் சாரலைத் தேடி' ன்னு பதிவுகள் போடுங்க பாப்பம்.
பாவனா ன்னு ஜொல்லு உடறது.பின்னூட்டம் வருமிண்டு இப்படி பதிவு போடறது.
சின்னப் பொண்ணுனாலும் 'காயத்ரி' சொன்னது 100% நிஜம்.
ஒரு நாளைக்கு 10 முறை படிச்சுப் பாருங்க. //


கண்மணியக்காவ்...

கூல்... கொஞ்சம் தண்ணி குடிங்க.

உலகத்துல இருக்கற அத்தனை துன்பத்துக்கும் பெண்கள்தான் காரணம்னு சொல்லலங்க கண்மணி. பல பிரச்சினைகளுக்கு பெண்கள்தான் காரணம்னு சொல்ல வரேன்.

வாழ்க்கையில எதுக்குமே கலங்காத இருக்கற ஆளுங்கள மூணு மாசம் நாலு மாசம் வந்துட்டு போற காதல் ரொம்ப கலங்கடிச்சிட்டு போயிடுது. அப்பன்னா எந்த அளவுக்கு காதல் மேல நம்பிக்கை வச்சிருக்கான் பாருங்க. பொண்ணுங்க காதல டேக் இட் ஈசியா எடுத்துக்கற மாதிரி ஆண்களும் எடுத்துக்கணும். அதான் நான் சொல்ல வர்றது. காதலிக்கற எல்லாருமே ஒண்ணு சேர்றாங்களா?
கிடையவே கிடையாது.

ரொம்ப சின்சியர் லவ்வுன்னு இந்த உலகத்துல எதுவுமே கிடையாது.
எந்த விஷயம் நடந்தாலும் பொண்ணுங்களுக்குதான் ரொம்ப சேஃப்.

யெக்கோவ்

பின்னூட்டம் வரும்னு இதெல்லாம் போடல. ஏதோ ஒரு ஆதங்கம். நல்ல திறமைசாலியான ஆளுங்க கூட இந்த விஷயத்துல ஏமாந்து போறாங்களேன்னு ஒரு பீலிங்.

பாவனா அழகா இருக்கான்னு ரசிக்கறது தப்பில்லங்க அடைய நினைச்சாதான் சரி. அழகை எப்பவுமே தூரத்துல வச்சி பாக்கணும்னு சொல்வாங்க பாவனா எவ்வளவு தூரத்துல இருக்கான்னு கூட தெரியாது. ரொம்ப சேப்டிதான இது :)

//சின்னப் பொண்ணுனாலும் 'காயத்ரி' சொன்னது 100% நிஜம்.//


இங்க யாரு சின்னபொண்ணு?
(காயத்ரியக்காவ் எம்புட்டு செலவாச்சு இதுக்கு?)

அந்த சின்ன பொண்ணுக்கு வர்ற வெவரம் ஏன் இந்த சின்ன பசங்களுக்கு வர மாட்டேங்குது. அதான் எங்க டவுட்டே.

கதிர் said...

//அப்படிப்போடு தம்பி

இந்த உலகத்துல பதினம வயதில் ஒவ்வொரு இளைஞனுக்கும் ஏற்படும் பிரச்சினைக்கு காரணமே பொண்ணுங்க தான்யா அதுவும் படிக்கிறச்ச இவளுங்க பண்ணும் அட்டகசம் இருக்கே..கொடும!! அய்யோ மக்கா எத்தன பேர் வாழ்வு சீரழிஞ்சி போயிருக்கு.எத்தனை அப்துல் கலாம்கள் டாஸ்மார்க் கடையில குத்த வச்சி உட்கார்ந்திருக்கானுங்கோ..எல்லாத்தையும் பண்ணிட்டு துட்டு கீற பையனா பாத்து கல்யாணம் பண்ணிட்டு குழந்தையோட ரோட்ல போவாளுங்க பாரு..சும்மா எரியும்யா வயிறு//

கூல் நீயும் தண்ணி குடிய்யா!

பாருங்க மக்களே இந்தளவுக்கு பேசறார்னா நீங்களே பாத்துக்குங்க. இவர் சொல்றது எல்லாமே உண்மை இல்லன்னாலும் 75% சதவீதம் உண்மை.

//கண்மனியக்கா..காயத்ரி டீச்சர் செம காமெடியா பின்னூட்டம் போட எங்க சொல்லித்தராங்க?..அட்ரஸ் ப்ளீஸ்//

ரொம்ப ஓவர்னு அவங்க நினைப்பாங்க.சோ வேணாம்.

//என் முந்தய பின்னூட்டங்களை போடாத உன் கருத்து சுதந்திர மீறலை வன்மையாக கண்டிக்கிறேன் //

இத போட்டதே பெரிய விஷயம் தலைவா! இதுக்கே உனக்கு எம்புட்டு அடிவிழ போகுதுன்னு தெரில.

ALIF AHAMED said...

தம்பி கலக்கீட்டிங்க.
என்னத்த செய்ய ஆனாலும் கல்யாண ஆசை எல்லாருக்கும் இருக்கே . . . . . . ?
//

இத மட்டும் ரிப்பிட்டு சொல்லிகிறேன்...

:)

Anonymous said...

என் முந்தய பின்னூட்டங்களை போடாத உன் கருத்து சுதந்திர மீறலை வன்மையாக கண்டிக்கிறேன்/
//

அய்ஸ் இது உங்களுக்கே நியாயமா...?
இத நீங்கா சொல்லலாமா...?
:)