எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, March 07, 2007

மகத்தானதொரு தினம் இன்று.

"டேய் தூங்குனது போதும் எந்திரிடா மணியாச்சு"

சுடுதண்ணி போட்டுட்டியா? இது நான்

ஏண்டா பத்து மணிக்கு எந்த புள்ளடா சுடுதண்ணில குளிக்குது? உனக்கே இது ஓவரா
தெரியல!

உம்புள்ள குளிப்பான், சுடுதண்ணி போடாம எழுப்பக்கூடாதுன்னு எத்தனை முறை
சொல்லியிருக்கேன்.

எல்லாம் ரெடியா இருக்கு பாத்ரூம்ல போடா!

"டேய் கதிர்வாலு சாப்டுட்டு அப்புறமா ஊர் சுத்த போடா" அம்மா

நீ போடுற சோத்த சாப்டுட்டு எப்படி ஊர் சுத்த முடியும். ஏம்மா நல்ல சோறு பொங்கி
போட தெரியாதா உனக்கு? எப்ப பாரு சாதம் சாம்பாரு இத விட்டா உனக்கு என்ன
தெரியும். ஆனா ஒண்ணு ஒம்பொண்ணுக்கு நீ எவ்வளவோ பரவால்ல.

"எங்க அந்த நளபாக அரசி"

"ஆமா இவரு பெரிய புதுமாப்பிள இவருக்கு கறியும்சோறும் ஆக்கிப்போடணும்"..

அடி செருப்பால வெட்டிச்சோறு திங்கும்போதே உனக்கு இவ்ளோ கொழுப்பு
கேக்குதா? கண்ட கண்ட ஓட்டல்ல வாய்க்கு ருசியா தின்னுபுட்டு வீட்டுலயும் அதையே எதிர்பாக்குறியா உனக்கு வாய்க்கு வக்கனையா சாப்பிடணும்னா அது எங்க
கிடைக்குதோ அங்க போய் கொட்டிக்கோ அநாவசியமா வீட்டு சமையல நக்கல்
பண்ணாத.

தோ பார்றா உண்மைய சொன்னா மட்டும் அம்மாவுக்கும் பொண்ணுக்கும் வருமே
மூக்கு மேல கோவம். இந்த கோவத்தை அப்படியே எப்படியாச்சும் நல்லா சமைச்சு
போட்டு தம்பிகிட்ட நல்ல பேரு வாங்கணும்னு ஒரு வைராக்கியமா மாத்தி
வெச்சிருந்தின்னா பரவால்ல, இந்நேரம் என்கிட்ட ஒரு நல்லபேரு வாங்கியிருப்ப. அத
விட்டுபோட்டு பொசுக் பொசுக்குனு கோவம் மட்டும் வருமே.

இவரு சர்டிபிகேட் கொடுத்துதான் எனக்கு ஆக போகுதா, தின்னா தின்னு தின்னாட்டி
போடா பொறுக்கி.

பொழுது விடிஞ்சி பொழுதுபோனா உங்க சண்டைய கேட்டு கேட்டு காது வலிக்குது
ஒரு நாளாச்சும் குறை சொல்லாம சாப்டுருக்கியாடா நீ? இது அம்மா

ஆமாம்மா இதே கேள்வியத்தான் நானும் கேக்கறேன் ஒரு நாளாச்சும் குறை சொல்லாத
அளவுக்கு செஞ்சிருக்கிங்களா நீங்க?

இவன்கிட்ட என்னம்மா பேசிட்டு இருக்க, எல்லாரும் ஒரு குறையும் சொல்லாம
சாப்டுட்டு போயிட்டாங்க தொற தொண்டையில மட்டும் இறங்க மாட்டேங்குதாக்கும்.

இதோ பாருக்கா நீ என்னதான் சொல்லு அந்த கரிகாலன் ரெஸ்டாரண்ட்ல போடறானே
ஒரு சில்லி சிக்கன் அது மாதிரி என்னிக்காச்சும் செஞ்சுருக்கியா, இல்ல
போட்டோலதான் அந்த மாதிரி ஐட்டங்கள பாத்துருக்கியா, நீயெல்லாம் எங்கத்த
கல்யாணம் பண்ணி குடித்தனம் பண்ண போற? எல்லாம் உன்னை சொல்லணும்மா
உன்ன மாதிரியே எல்லாத்தையும் கத்து கொடுத்துருக்க!

என்னை ஏண்டா இழுக்கற? இஷ்டம் இருந்தா சாப்பிடு இல்லாட்டி இடத்தை காலி
பண்ணு இன்னிக்கு சுமங்கலி அப்பா ஜெயில்ல இருந்து வருவானா
மாட்டானான்னு நானே தவியா தவிக்கிறேன், நீ வேற சும்மா அது சரியில்ல இது சரியில்லன்னுகிட்டு..

நீ வேணா பாரு அடுத்த எபிசோட்ல அவன தூக்குல போட போறாங்களாம். சம்பளம்
ஓவரா கேட்டானாம்ல அதான். இத பாக்குறதுல கொஞ்சம் வீடுகள பாத்துகிட்டாவது
இருக்கலாம். ஒண்ணுத்துக்கும் உதவாத சீரியல பாத்துகிட்டு கதை அடிச்சிட்டு
உக்காந்திருப்பிங்க.

ஒண்ணுத்துக்கும் உதவாதத பத்தி நீ பேசறியா?? :)) சிரித்துக்கொண்டே அக்கா!

பின்ன நான் பேசாம சாலமன் பாப்பையாவா வந்து பேசுவாரு??

அம்மா மரியாதையா இவன கொட்டிகிட்டு வெளில போயிட சொல்லு, இல்லன்னா
நடக்குறதே வேற.

எது நடந்தாலும் நீங்க திருந்த போறதில்ல, கடைசி வரைக்கும் இந்த சீரியல்,
சுண்ணாம்பு, வெத்தலன்னு காலத்தை ஓட்டப்போறிங்க! இங்க இவ்ளோ நடந்துகிட்டு
இருக்கு அங்க ஒண்ணுமே தெரியாத மாதிரி வெத்தலைக்கு பாக்கு இடிச்சிட்டு இருக்கு
பாரு கெழவி. ஏ கெழவி இதுங்க ரெண்டு பேத்தையும் என்னான்னு கேக்கக்கூடாதா??

"போடா போக்கத்த பயலே"

இந்த வார்த்தைய விட்டா உனக்கும் வேற ஒண்ணும் தெரியாதே! சரி சரி டிபன
போடுங்க வெளில முக்கியமான வேலை இருக்கு!

சீக்கிரம் சாப்பாடு போட்டு அனுப்புடி அவன! இருந்தா லொட லொடன்னு பேசிட்டே
இருப்பான்.

"வெளில அனுப்பறதுலயே குறியா இருங்க"

பெண்கள் தினம்னதும் முதல்ல எனக்கு ஞாபகம் வந்தது அம்மாதான்.

இதுமாதிரி தினமும் எங்கவீட்டுல சண்டை போடலன்னா நமக்கு தூக்கமே வராது.
அதே மாதிரிதான் அவங்களும்.

உண்மைய சொல்லணும்னா வீட்டு சாப்பாடு மாதிரி உலகத்துல வேற எதுவும்
சுகம் கிடையாது. இருந்தாலும் நாலு நக்கல் அடிச்சுட்டே சாப்பிடறதுல ஒரு தனி
கிக் இருக்கும். மத்தபடி சாப்பாட்டு விஷயத்துல எங்கம்மா ஒரு தங்கம்.

வீட்ட விட்டுட்டு இங்க வந்ததுக்கு அப்புறம்தான் அவங்க அருமையெல்லாம் தெரியுது.
என்னையெல்லாம் வச்சி காப்பாத்தியிருக்காங்கன்னா அதுவே ஒரு பெரிய சாதனைதான்.
அதனால நல்ல பிள்ளையா இன்னிக்காச்சும் அவங்கள நினைச்சு பாக்கணும். ஒருவகைல
நான் இங்க இருக்கறதும் நல்லதுதான் ஏன்னா என்னோட இம்சை இல்லாம இருக்கலாம் :))

இந்த வலையுலகம் எனக்கு தந்த சகோதரிகளுக்கு இந்த தம்பியின் மனமார்ந்த
"பெண்கள் தின வாழ்த்துக்கள்"

25 comments:

துளசி கோபால் said...

நன்றி( தங்க) தம்பி.

Santhosh said...

ஏம்பா கதிரு,
சித்த சும்மா இருக்க மாட்டியா இது மாதிரி பதிவை போட்டு நீ வேற வீட்டை ஞாபகப்படுத்துறே.

கோபிநாத் said...

அன்பு கதிர்
அருமையான பதிவு, உன்னுடன் சேர்ந்து நானும் வலையுலக அனைத்து பெண்களுக்கும் "இனிய பெண்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

கோபிநாத் said...

\\வீட்ட விட்டுட்டு இங்க வந்ததுக்கு அப்புறம்தான் அவங்க அருமையெல்லாம் தெரியுது.\\

உண்மை...உண்மை....

டேய் சாப்பிடுடா...(என் அம்மா)

என்னா சாப்பாடு...(நான்)

சாம்பார், உருளைக்கிழங்கு....வாடா....(என் அம்மா)

இதெல்லாம் நீ சாப்பிடுவது ...நான் சாப்பிடுறா மாதிரி என்ன இருக்குன்னு கேட்டாவன்...(அதான் தினந்தோறும் பரோட்டா)

அந்த பாவம் எல்லாம் சும்மா விடுமா...அதான் அனுபவித்து கொண்டுயிருக்கிறேன்.

ஜி said...

காமெடியா ஆரம்பிச்சு, கடைசில செண்டியா முடிச்சிட்டீங்க தம்பி...

உங்களோட சேந்து நானும் வலையுலக சகோதரிகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள சொல்லிக்கிறேன்...

Leo Suresh said...

நெஞ்ச நக்கிட்ட தம்பி:-)
லியோ சுரேஷ்

லொடுக்கு said...

எல்லா வீட்டிலும் அன்றாடத்தை அழகாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தம்பி. :)

மற்றபடி, ஒவ்வொன்றும் ஒரு தினம் வைத்து கொண்டாடுவது எனக்கு உடன்பாடில்லாத ஒரு சங்கது. :)

கதிர் said...

//நன்றி( தங்க) தம்பி.//

வாங்க துளசியம்மா உங்க வருகையை எதிர்பார்த்தேன். வந்ததில் மகிழ்ச்சி.

//ஏம்பா கதிரு,
சித்த சும்மா இருக்க மாட்டியா இது மாதிரி பதிவை போட்டு நீ வேற வீட்டை ஞாபகப்படுத்துறே.//

வாங்க சந்தோஷ்!

இப்படியாச்சும் ஞாபகப் படுத்திக்கலாமேன்னுதாங்க சாமி
தப்பு தண்டா ஏதும் இருந்தா மன்னிச்சிடுவிங்களாம்.

கதிர் said...

எலேய் கோபிநாத்து

என்னைய மாதிரியே குசும்பு புடிச்ச ஆளா இருப்ப போலருக்கு!

அப்படிலாம் பண்ணதுக்கு தண்டனையாதான் மலையாளி கைல தின்னுட்டு இருக்க!

திருந்துடே!

கதிர் said...

//காமெடியா ஆரம்பிச்சு, கடைசில செண்டியா முடிச்சிட்டீங்க தம்பி...

உங்களோட சேந்து நானும் வலையுலக சகோதரிகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள சொல்லிக்கிறேன்...//

நான் சீரியசாதான் எழுதலாம்னு உக்காந்தேன். ஆனா சீரியசா சீரியஸ் பதிவு எழுத முடியல, இதான் உண்மை. :))

அனைவரும் பெண்கள் தினத்தை போற்றுவோம்!

கதிர் said...

வாங்க லியோ சுரேஷ்!

ஊருக்கு போன் பண்ணி உங்க தங்கமணிக்கு வாழ்த்து சொல்லிடுங்க!

அப்படியே என்னுடைய வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி தம்பி...வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டேன்.

கதிர் said...

//எல்லா வீட்டிலும் அன்றாடத்தை அழகாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தம்பி. :)//

நன்றி லொடுக்கு!


//மற்றபடி, ஒவ்வொன்றும் ஒரு தினம் வைத்து கொண்டாடுவது எனக்கு உடன்பாடில்லாத ஒரு சங்கது. :)//

அட நானும் இப்படிதாங்க!

"ஆத்துல தண்ணி போகுதுடா"

"ஆத்துல தண்ணி போகாம பின்ன என்ன வெண்ணையா போகும்"

போய் வேலைய பாருடா வெளக்கெண்ணை!

"ஆத்துல தண்ணி போறதுங்கறது அன்றாடம் நடக்குற விஷயம்", இதே ஆத்துல "வெள்ளம்" போகுதுன்னு சொல்லிப்பாருங்க அத்தன பேரும் போய் அங்கதான் நிப்பானுங்க!

அதுமாதிரிதான் பெண்கள் தினம்.

எங்க ஊருல இரு பெருசு இப்படிதான் விளக்கம் சொல்லுச்சி

கதிர் said...

//நன்றி தம்பி...வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டேன்.//

மிக்க நன்றிங்க சகோதரி!

அபி அப்பா said...

//அப்படிலாம் பண்ணதுக்கு தண்டனையாதான் மலையாளி கைல தின்னுட்டு இருக்க!//

ஆஹா! எந்த மலையாளி கோபிக்கு ஊட்டிவுடுறாங்க!! கோபிதம்பி வெவகாரமான ஆள்தான் போலயிருக்கு!!

ஆமா கொசுவத்திய பத்த வச்சு நெஞ்ச நக்கீட்டியே தம்பி!!

Unknown said...

//உண்மைய சொல்லணும்னா வீட்டு சாப்பாடு மாதிரி உலகத்துல வேற எதுவும்
சுகம் கிடையாது. இருந்தாலும் நாலு நக்கல் அடிச்சுட்டே சாப்பிடறதுல ஒரு தனி
கிக் இருக்கும். மத்தபடி சாப்பாட்டு விஷயத்துல எங்கம்மா ஒரு தங்கம்.
வீட்ட விட்டுட்டு இங்க வந்ததுக்கு அப்புறம்தான் அவங்க அருமையெல்லாம் தெரியுது.//

இதெல்லாம் வீட்டை விட்டு வந்து காய்ந்த ரொட்டி தின்றே காலம் கழிக்கும் போதுதான் புரிகிறது. ஊரிலேயே இருந்தால் இப்படி யோசிக்கத் தோன்றாதோ!. சாதாரணமாகத் தொடங்கி செண்டிமெண்டா முடிவது நல்லாருக்கு தம்பி.

கதிர் said...

//ஆஹா! எந்த மலையாளி கோபிக்கு ஊட்டிவுடுறாங்க!! கோபிதம்பி வெவகாரமான ஆள்தான் போலயிருக்கு!!//

நாளைக்கு வர்றிங்கல்ல அப்ப அவரே காமிப்பாரு, உங்களுக்கும் ஊட்டி

//ஆமா கொசுவத்திய பத்த வச்சு நெஞ்ச நக்கீட்டியே தம்பி!!//

இதுல என்னங்க நெஞ்ச நக்குற மாதிரி இருக்கு, உண்மையத்தான சொன்னே!

வாங்க சுல்தான்!

ஒண்ணை விட்டுப் பிரியும்போதுதான் அதோட அருமை தெரியும்!

வருகைக்கு நன்றி!

Anonymous said...

எலே தம்பி,

சோத்துக்காக இப்படி நெஞ்சை நக்கணுமா? மானமுள்ள மறத்தமிழனா ஏதாவது செய்வேன்னு பார்த்தா இப்படி தரையில் மல்லாக்க படுத்து நீச்சல் அடிக்குறியே?!! நல்லா இருலே!! :-)

சாத்தான்குளத்தான்

Jazeela said...

ம்ம் தூரத்தில் இருக்கும் போதுதான் அந்த அருமை தெரியும். உங்க அம்மாவ பத்தி நினச்சிப்பார்க்கக் கூட 'மகளிர் தினம்' வேணுமாக்கும்? கலி காலம் ;-)

கதிர் said...

//சோத்துக்காக இப்படி நெஞ்சை நக்கணுமா? மானமுள்ள மறத்தமிழனா ஏதாவது செய்வேன்னு பார்த்தா இப்படி தரையில் மல்லாக்க படுத்து நீச்சல் அடிக்குறியே?!! நல்லா இருலே!! :-)//


இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான்யா ரணகளமாகிப்போச்சு! இன்னுமா...

கதிர் said...

//ம்ம் தூரத்தில் இருக்கும் போதுதான் அந்த அருமை தெரியும். உங்க அம்மாவ பத்தி நினச்சிப்பார்க்கக் கூட 'மகளிர் தினம்' வேணுமாக்கும்? கலி காலம் ;-) //

அப்படிலாம் இல்லிங்க நேரம் கிடைக்கும்போதெல்லாம் போன்ல பேசறதுதான். இருந்தாலும் இன்னிக்கு கொஞ்சம் ஸ்பெசல் அவ்ளோதான்.

Anonymous said...

ரசிக்கும்படி இருக்கு இந்த மாதிரி நீங்க எழுதறது.

சசிதரன்

சென்ஷி said...

நட்சத்திர வாழ்த்துக்கள் தம்பிண்ணா..

(நான் ரொம்ப சின்ன தம்பில்ல அதான் அண்ணா :) )

சென்ஷி

Anonymous said...

உங்க அம்மாவும்..அக்காவும் சூப்பர்..உங்களுக்கு அவங்க தான் சரி :)

Anonymous said...

amma pasam orupuram irukkattum - intha akka paasam irukkuthe great-
antha kalam thirumpavum varaathaa

amma - akka thittinathellam ippa neenka kekka enguringa illa -

ithuthan kala mattam - ippa atha ninaithu santhosa padukireerkal.
intha anubavam ellarveettilaiyum irrukukm - athai neenka ninaivu paduthi viteerkal thambi
nalla interesting ga elutha varukirathu - keep it up - baskar