எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, March 12, 2007

டெவில் ஷோ - கவுண்டர், டீ.ஆர்.

கவுண்டமணி, விஜய டீ.ராஜேந்தர் பங்கு பெறும் டெவில் ஷோ.

டெவில் ஷோவுக்கு வர அனைத்து நடிகர், நடிகைகளும் பயந்து கொண்டிருக்கும்
வேளையில் அதை அறிந்த டீ.ஆர் தான் அதில் கலந்துகொண்டால் வீராச்சாமிக்கு
இலவசமாக பப்ளிசிட்டி கிடைக்கும் என்ற நப்பாசையில் கவுண்டருக்கு போனை
போடுகிறார்.

கவுண்டரின் போன் அலறுகிறது.

இந்த போன எடுத்தா நச்சு நச்சுன்னு இவனுங்க தொல்ல தாங்கமுடியலப்பா! எந்த
பன்னிக்குட்டி ராமசாமி லைன்ல இருக்கானோ என்று

கவுண்டர்: ஹலோ

டீ.ஆர்: "தூங்கும்போது ஆட்டணும்டா காலு காலு
இல்லாட்டி விடிஞ்சிபுட்டா ஊத்திடுவான் பாலு பாலு"

கவுண்டர்: டேய் யார்ரா நீ பேர கேட்டா ஊள உடற? மரியாதையா பேர சொல்லு
இல்லாட்டி படுவா படுக்க பேன் பாத்துபுடுவேன்.

டீ.ஆர்: அழகுக்கு ஒரு அரவிந்தசாமின்னா வீரத்துக்கு இந்த வீராச்சாமி வெற்றிகரமா
ஓடிட்டு இருக்கற வீராச்சாமி ஹீரோ சார். டெவில் ஷோல என்னையும் சேத்துக்குங்க சார்.

கவுண்டர்: ஆஹா ஏழரை போன் பண்ணி அப்பாயிண்ட்மெண்ட் கேக்குதே, இத
சேக்கலாமா வேணாமா என்று கலவரமாகிறார். நம்ம திரையுலக வாழ்க்கைல இவன
மாதிரி எத்தனை பேர பாத்திருப்போம். வா மகனே இன்னிக்கு உனக்கு மொத்தமா
கஞ்சி ஊத்தறேன். உடனே கெளம்பி வா.

டேய் பசங்களா செட் ரெடி பண்ணுங்க, லைட்டு ஆன் பண்ணுங்க ஒரு வெயிட்டான
பார்ட்டி வந்துகிட்டு இருக்கு.

டேய் இங்க இருந்த ஆடியன்ஸ் எங்கடா ஒருத்தனையும் காணும். யாருமே இல்லன்னா
ரொம்ப கேவலமா போயிடுமே. எவனாச்சும் நாலு பேரை கூப்பிடுங்கடா...

சார் நீங்க போன் பேசிட்டு இருக்கும்போதே இன்னிக்கு யார் இன்னிக்கு கெஸ்ட்னு
தெரிஞ்சி போச்சு அப்பவே எல்லாரும் எகிறி குதிச்சி ஓடி போயிட்டாங்க சார்.

அப்ப நான் தனியா மாட்டிகிட்டனா... என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே
வாசலில் ஒரு கூட்டம் முண்டியடித்துக்கொண்டு வருகிறது.

வீராசாமிக்கு ஜே....
வீராசாமிக்கு ஜே....
வீராசாமிக்கு ஜே....

என்ற வீராசாமியின் தீம் பாடலை பாடியபடி வருகிறார்கள். நடுவில் டீ.ஆர் மஞ்சல்
கலர் பேண்ட் நீலக்கலருடன் கிளிப்பச்சை பார்டர் வைத்த சட்டை
அணிந்துகொண்டு
வருகிறார்.

கவுண்டர்: டேய் நில்லுங்கடா எல்லாரும், இங்க என்ன கட்சி மீட்டிங்கா நடக்குது பூரா
பேரும் அப்படியே ஓடிப்போயிடுங்க இந்தாள உள்ள விட்டதே பெரிய விஷயம் இதுல பிரியாணிகூட்டத்த பின்னாடியே கூட்டிட்டு வர்றியா. ஆல் புரொக்ராம் கேன்சல்.

தொண்டர்: எங்க தலைவர பேட்டி எடுக்கலன்னா இங்கயே எல்லாரும் தீக்குளிப்போம்..

கவுண்டர்: எவண்டா அவன் சவுண்டு உடறது?? பாக்கெட்ல டீ குடிக்க காசு இருக்கான்னு
செக் பண்ணுடா டீ கிளாசுக்கு பொறந்தவனே. இந்த பிட்டலாம் வேற எங்கயாச்சும்
போடு இங்க வேணாம் ஒழுங்க எல்லாரு ஓடி போயிருங்க.

யோவ் டீ.ஆரு அங்க என்னயா தாடிய சொறிஞ்சிகிட்டு இருக்க ஒழுங்க இவனுங்கள
வெளில போக சொல்லு.. இல்லன்னா அப்படியே நீயும் ஓடிப்போயிடு.

"அவங்க எல்லாம் என் தொண்டர் படை
போடாதிங்க நீங்க தடை
எனக்கு பிடிச்சது ஆமை வடை."

இவன விட்டா இப்படியே பேசி சாகடிச்சிடுவான் சட்டு புட்டுனு பேட்டிய எடுத்து இவன பேக்கப் பண்ணி அனுப்பிடணும் இல்லாட்டி அடுக்கு மொழி வசனம் பேசி எல்லாரையும் சாகடிச்சிடுவான்.

பேட்டி ஆரம்பமாகிறது.

கவுண்டர்: இப்ப தமிழ்ல என்ன ஹீரோவுக்கு பஞ்சம் வந்துடுச்சின்னு நீ இப்ப ஹீரோவ
வேசம் கட்டுன பாவம் மக்கள் பயந்துட மாட்டாங்களா?

டீ.ஆர்: சார் இன்னி வரைக்கும் நான் ஹீரோயின தொட்டு நடிச்சதில்ல, ரஜினிய விட
பத்து வயசு கம்மி கமல விட எட்டு வயசு கம்மி, விஜயகாந்த விட பத்து வயசு கம்மி ஏன் அவங்கல்லாம் நடிக்குறாங்க நான் நடிக்க கூடாதா?

கவுண்டர்: ஏண்டா தாடிக்கும் தலைக்கும் வித்தியாசம் தெரியாதவனே, அவங்க
நடிக்கறாங்கன்னா பாக்கறதுக்கு நிறைய பேர் இருக்காங்க நடிக்கறாங்க, நீ நடிச்சா உன்
பையனே கூட பாக்க மாட்டானே. அப்புறம் எதுக்கு நடிக்கற?

டீ.ஆர்: எனக்கும் ரசிகர் மன்றம் இருக்கு, என்னை ரசிக்கறவங்களுக்காக நான் படம் எடுக்கறேன். ஒரு படைப்பாளிக்கு சுதந்திரமே இல்லாம போச்சே. என்னை கலைஞனா
பாருங்க, இளைஞனா பாக்காதிங்க

கவுண்டர்: சரி விடு பொருத்துக்குவோம். புதுசா ஏதாச்சும் கதை சொல்லுவேன்னு
பாத்தா அதே பழைய தங்கச்சி, அம்மா செண்டிமெண்ட், நான் தெரியாமத்தான்
கேக்கறேன் உன் எல்லா படத்துலயும் உன் தங்கச்சி ஏண்டா உனக்கு பிடிக்காத ஒருத்தன
லவ் பண்றா?

உடனே கலையாத தலையை வேணுமின்னே சிலுப்பி கோதி விடுகிறார், சொடக்கு
போட்டவாறே

டீ.ஆர்: என் தங்கச்சி , பாசமுள்ள தங்கச்சி வேலிதாண்டி போகும்போது பாசக்கார
அண்ணன் தடுக்காம பின்ன முறுக்கு தின்னுகிட்டு இருப்பானா? சொல்லுங்க சார்.

கவுண்டர்: ஏன் எங்களுக்கு ஏமாத்திட்டு ஓடிப்போற தங்கச்சி, உனக்கு மட்டும் பாசமுள்ள தங்கச்சியா? எல்லாருக்கும் ஒரே மாதிரிதாண்டா தங்கச்சியிம். ஓவர் செண்டிமெண்ட் போட்டு உசுர வாங்கிரியேடா அஞ்சு ரூவா காயின் மண்டையா!

சரி ஒரே ஒரு கொஸ்டின் கேட்டுக்கிறேன். (கண்களில் கண்ணீருடன் கவுண்டமணி).
அந்த படத்துல ஒரு பாட்டு வருதே "வச்சிருக்கேன் நான் வச்சிருக்கேன்" னு ஒரு
பாட்டுல ஹீரோயின தொட மாட்டேன்னு மத்தபடி எல்லா வேலையும் செஞ்சுபுட்ட அதுவுமில்லாம சாதாரணமாவே நீ பிக்காரி மாதிரி இருப்ப இதுல லுங்கிய மடிச்சி
கட்டிகிட்டு மும்தாஜுக்கு சமமா கவர்ச்சி காமிக்கற. ஏன் இதெல்லாம்? தமிழ்நாடு
தாங்காதுடா..

டீ.ஆர்: சார் ரஜினியவிட பத்து வயசு கம்மி, கமலவிட அஞ்சு வயசு கம்மி,
விஜயகாந்த விட 8 வயசு கம்மி அவங்கல்லாம் அறுபது வயசு வரைக்கும் நானும்
போடுவேன் கும்மி. அவங்க எல்லாம் டம்மி. உருவத்த பாக்காதிங்க எனக்கு அவங்கள
போல கர்வம் இல்ல.

கவுண்டர்: பக்கத்தில் இருந்த சொம்பை எடுத்து டீ.ஆர் தலையில் ஓங்கி அடிக்கிறார்.
நாய, நாய சொம்பு திருடறவன் மாதிரி இருந்துகிட்டு அவங்கள எல்லாம் நக்கல் விடுது
பாரு. எந்த கேள்விய கேட்டாலும் இதே பதில சொல்லிகிட்டு இருக்கே இந்த டாபரு.
என்ன மேன் நினைச்சிட்டு இருக்க அவங்கள எல்லாம் வம்புக்கு இழுத்த
ஸ்டுடியோவுக்கு உள்ளயே பூந்து உன்னய தூக்கிட்டு போயிடுவானுங்க.

கவுண்டர்: வீராச்சாமி படத்துல நீதான் அந்த ஏரியா தாதா, முன்னால் எம்.எல்.ஏ
அப்படி இருந்தும் மும்தாஜை தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணாம அப்படியே
பெரிய தியாகி மாதிரி ஹஸ்கி வாய்சுல வசனம் பேசிகிட்டு அனாதையா
விட்டுட்டியேய்யா பாவம்யா அந்த பன்னு ச்சி பொண்ணு.

டீ.ஆர்: சார் அந்த சீனுக்கு முந்தின சீன் வரைக்கும் மும்தாஜ் என்னைய லவ் பண்றது
எனக்கு தெரியாது. தெரிய வரும்போது அதைவிட சூப்பர் பிகர் ஒண்ணு கரெக்ட் ஆச்சு
அதனாலதான் அப்படியே டீல்ல விட்டுட்டேன்.

ஆடியன்ஸ் பக்கமிருந்து ஒரு குரல் கவுண்டரய்யா இண்டர்வெல் எல்லாம் கிடையாதா,
எங்க தலைவர் பதில் சொல்லி டயர்டா ஆயிட்டாரு.

டேய் மாங்கா கொட்ட மண்டையனுங்களா இன்னும் பேட்டியவே ஆரம்பிக்கல அதுக்குள்ள என்னடா இடைவேளை, இது என்ன சினிமா தியேட்டரா இடைவேளை விடறதுக்கு என்று சொல்லிவிட்டு திரும்ப அங்கே டீ.ஆரை காணவில்லை.

டேய் அடுக்குமொழி மண்டையா சீக்கிரம் வா உனக்கு ஆப்பு கொஸ்டின்ஸ் நிறைய இருக்கு.


நாளை தொடரும்..

71 comments:

கதிர் said...

இந்த பதிவிற்கு வரும் பின்னூட்டங்கள் இன்னும் ஒரு மணி நேரம் சென்ற பிறகுதான் பப்ளிஷ் செய்யப்படும் என்பதை பகிரங்கமாக சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.(பணிவாக சொன்னாலும் (கலாய்க்கறாங்கப்பா)

அபி அப்பா said...

நான் தான் first!!

நாமக்கல் சிபி said...

சூப்பர் தம்பி!

கலக்குறீங்க!

நாமக்கல் சிபி said...

//(கலாய்க்கறாங்கப்பா) //

ஹேய்! யாருப்பா அது தம்பியண்ணாவைக் கலாய்க்குறது!

நான் ஒருத்தன் இங்கே இருக்கேன் என்பது தெரியலையா?

தம்பியைக் கலாய்க்கும்போது என்னையும் சேர்த்துக்குங்கப்பா! நானும் கலாய்க்குறேன்!

Anonymous said...

தம்பி,

டி.ஆரெல்லாம் வெறும் தங்கச்சி செண்டிமெண்டுலதான் படமெடுப்பார்.

நான் இருக்கேன் தம்பி செண்டுமெண்டுல படமெடுக்க! என்னைக் கூப்பிடுங்க! பட்டையக் கெளப்புறேன்!

அம்மம்மா தம்பி என்று நம்பி! நான் உன்னை வளர்த்தேன்! னு பாட்டு போடுவோம்!

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை! அட எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை!

அபி அப்பா said...

வந்தாச்சு வந்தாச்சு கொஞ்சம் வெயிட் ப்ளீஸ்..

கோபிநாத் said...

\\நடுவில் டீ.ஆர் மஞ்சல்
கலர் பேண்ட் நீலக்கலருடன் கிளிப்பச்சை பார்டர் வைத்த சட்டை அணிந்துகொண்டு
வருகிறார்.\\

எலேய்...கற்பனையில கூட நினைத்து பார்க்க முடியல
அவ்வ்வ்வவ்வ்வ்வ்வ்வ்..

கோபிநாத் said...

\\ீ பிக்காரி மாதிரி இருப்ப இதுல லுங்கிய மடிச்சி
கட்டிகிட்டு மும்தாஜுக்கு சமமா கவர்ச்சி காமிக்கற.\\

அடப்பாவி வீராச்சாமியை விடிய விடிய நல்லா ரசிச்சிட்டு தான் இந்த பதிவை போட்டுறிக்கியா??? நல்லா இருடே...

-L-L-D-a-s-u said...

தம்பி.. நன்றாக உள்ளது .. நட்சத்திர வாழ்த்துக்கள்

கதிர் said...

//நான் தான் first!!//

முதல்ல வர்ற விஷயத்துல நாங்க தெளிவா இருப்போம். நாங்கதான் 1!

//சூப்பர் தம்பி!

கலக்குறீங்க!//

நன்றி நக்கலின் நாயகரே!

//ஹேய்! யாருப்பா அது தம்பியண்ணாவைக் கலாய்க்குறது!

நான் ஒருத்தன் இங்கே இருக்கேன் என்பது தெரியலையா?

தம்பியைக் கலாய்க்கும்போது என்னையும் சேர்த்துக்குங்கப்பா! நானும் கலாய்க்குறேன்! //

இது நல்லா இல்ல ஆமா!

கேப்டனே வந்துருக்காக! கேப்டன் உங்க சபரி தியேட்டர்ல ஓடுமா.

கதிர் said...

//அடப்பாவி வீராச்சாமியை விடிய விடிய நல்லா ரசிச்சிட்டு தான் இந்த பதிவை போட்டுறிக்கியா??? நல்லா இருடே... //

டீவில ட்ரைலர் பார்த்தேன் கோபி. நமக்கு அந்த அளவு தைரியம் ஜாஸ்தி கிடையாது.

கதிர் said...

//தம்பி.. நன்றாக உள்ளது .. நட்சத்திர வாழ்த்துக்கள் //

நன்றி தாஸ் அவர்களே!

Kasi Arumugam said...

RoTFL:-)

Syam said...

நட்சத்திர வாழ்த்துக்கள் தம்பி...


சூப்பரா கலாய்ச்சு இருக்கீங்க...அந்த ரெண்டும் கெட்டான் மண்டையன...

//எவண்டா அவன் சவுண்டு உடறது?? பாக்கெட்ல டீ குடிக்க காசு இருக்கான்னு
செக் பண்ணுடா டீ கிளாசுக்கு பொறந்தவனே//

ROTFL :-)

MyFriend said...

உங்க போஸ்டு இன்னைக்கு ஒன்னும் படிக்கலை.. நீங்கதான் பேசணும்ன்னா 4 - 5 கமேண்ட்ஸ் போட்டுட்டு வரணும்ன்னு கட்டளையெல்லாம் இட்டுட்டீர்களே!! அதுக்குதான்.. இது 1..

MyFriend said...

Ok.. ithu rendaavathu..

MyFriend said...

தம்பிண்ணா.. இது மூனுன்னு சொல்லுவாங்க.. Note this point தம்பிண்ணா...

MyFriend said...

ஓகே.. நாலாவது இது நாலாவது.. ;)

MyFriend said...

5 போட்டாச்சு!! இதோ வந்துக்கிட்டே இருக்கேன்.. ;)

மணிகண்டன் said...

//டீ கிளாசு மண்டையா
அஞ்சு ரூவா கயின் மண்டையா
மாங்கொட்டை மண்டையா
அடுக்குமொழி மண்டையா//

எப்டிங்க இதெல்லாம்?? நெஜமாவே ரூம் போட்டு யோசிச்சீங்களோ?

MyFriend said...

சரி.. இப்போ படிச்சிட்டு கமேண்டு போடுறேன்...

MyFriend said...

வெட்டியோட ஷோவை நீங்க திருடிடீங்களா? வெட்டி பர்மிஷன் கொடுத்துட்டாரா?

இராம்/Raam said...

/கவுண்டர்: ஏண்டா தாடிக்கும் தலைக்கும் வித்தியாசம் தெரியாதவனே, அவங்க
நடிக்கறாங்கன்னா பாக்கறதுக்கு நிறைய பேர் இருக்காங்க நடிக்கறாங்க, நீ நடிச்சா உன்
பையனே கூட பாக்க மாட்டானே. அப்புறம் எதுக்கு நடிக்கற?//

சூப்பர் கதிரு..... அட்டகாசமா இருக்கு சிரிச்சு சிரிச்சு வயிறுவலிக்குதுப்பா :))

MyFriend said...

டி.ஆர் இண்டெர்வியூ.. கற்பனை சூப்பர்..

MyFriend said...

//என்ற வீராசாமியின் தீம் பாடலை பாடியபடி வருகிறார்கள். நடுவில் டீ.ஆர் மஞ்சல்
கலர் பேண்ட் நீலக்கலருடன் கிளிப்பச்சை பார்டர் வைத்த சட்டை அணிந்துகொண்டு
வருகிறார்.//

வீரசாமியில் வருவாரே.. அந்த மாதிரி ஒரு இண்ட்ரோ இல்லையா??

MyFriend said...

25 நான் அடிச்ஷிட்டேன்னு நினைக்கிறேன்..ஏலேய் தம்பிண்ணா.. கமேண்ட்ஸ் அப்ப்ரூவ் பண்ணுங்கப்பா...

கதிர் said...

சோதனை மேல சோதனை...

MyFriend said...

comments moderation disable panni naanthaan 1st comment.. enakku oru special Choclate Shake plz.. :-D

MyFriend said...

போட்ட ஒரு 6 கமேண்ட்ஸ் காக்கா தூக்கிட்டு போச்சு!!! :-(

எல்லாமே மறந்து போச்சு!!

டி. ஆரு காணாம போச்சு!!!

ரைமிங் கரெக்டா இருக்கா தம்பிண்ணா??

MyFriend said...

23... நட்சத்திர தம்பிக்கு

MyFriend said...

24.. ஒரு ஓ போடுங்க மக்கா..

MyFriend said...

25.. அடிச்சாச்சு!!!

வர்ட்டா!!!! ;-)

இராம்/Raam said...

/கவுண்டர்: ஏண்டா தாடிக்கும் தலைக்கும் வித்தியாசம் தெரியாதவனே, அவங்க
நடிக்கறாங்கன்னா பாக்கறதுக்கு நிறைய பேர் இருக்காங்க நடிக்கறாங்க, நீ நடிச்சா உன்
பையனே கூட பாக்க மாட்டானே. அப்புறம் எதுக்கு நடிக்கற?//

கதிரு,

சான்ஸே இல்லே படிச்சுட்டு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது ராசா:)

சூரியனுக்கே டார்ச் அடிக்கிறமாதிரி சங்கப்பரிந்துரையிலே லிங்க் குடுத்துருக்கேன்ப்பா... :)

Anonymous said...

very good

தென்றல் said...

ஏங்ண்ண... பதிவின் ஆரம்பத்திலேயே, ஒரு எச்சரிக்கை போட்டு இருக்கிலாம்-ல..

"office -ல வைச்சி இந்த பதிவை படிக்க வேண்டாம்"-னு..

நான் தனியா சிரிச்சிக்கிட்டு இருக்க, என் boss என்னை ஒரு மாதிரி-யா பார்த்துட்டு போறாரு..!

நட்சத்திர வாழ்த்துக்கள்!

ஜி said...

இன்னும் அஞ்சுதான் இருக்குதா தம்பிண்ணே....

இந்த மலேசியால இருந்து வந்த மை ஃபிரண்ட் எங்க பணிய செவ்வனே செஞ்சு முடிச்சிருக்காங்க...

ஜி said...

யேய் தம்பி
நீ தங்க கம்பி
அப்டீனு உன்ன நம்பி
நான் இப்ப வெம்பி

இதுக்கு மேல வரல மாப்பி

-- டி. ஆர்..

ஜி said...

டேய் முகமுடி மண்டையா... அது ஏன் டா வீராவசனம்(?) பேசிட்டு இருக்கும்போதே திடீர்னு செண்டிமெண்ட் சீனப் போட்டு, அதுக்கு டாய்லெட் போறவன் மாதிரி மூஞ்ச வச்சிக்குற, கிழிஞ்ச வாயா??

-- கவுண்டர்

Santhosh said...

தம்பி,
ரொம்ப கலக்கல். ஒக்காந்து ரூம் போட்டு யோசிப்பிங்களோ? //
ஆஹா ஏழரை போன் பண்ணி அப்பாயிண்ட்மெண்ட் கேக்குதே// இது சூப்பரு கலக்கிப்பூட்டே.

Santhosh said...

//ஹேய்! யாருப்பா அது தம்பியண்ணாவைக் கலாய்க்குறது!

நான் ஒருத்தன் இங்கே இருக்கேன் என்பது தெரியலையா?

தம்பியைக் கலாய்க்கும்போது என்னையும் சேர்த்துக்குங்கப்பா! நானும் கலாய்க்குறேன்!//

கூப்பிட்டு அனுப்பி ஒரு நாள் ஆச்சி, ஏன்யா லேட்டு, வந்ததே லேட்டு இதுல இரண்டே இரண்டு பின்னூட்டம் மட்டும் போட்டுட்டு பேச்சு வேற.

Santhosh said...

மத்த மக்கள்ஸ் எல்லாம் எங்கப்பா வெட்டி, கப்பி, புலி, ஜி யாருமே ஆளை காணோம்!!.. சீக்கிரம் கிளம்புங்கப்பா

இலவசக்கொத்தனார் said...

வந்தான்யா எங்க ஆளு
இனிமே கவுண்டன் பாழு

கலக்கவே வந்தான் வீராச்சாமி
புறமுதுகு இவனுக்குக் காமி

கண்டவுடன் கலங்கிப் போனவந்தான்
கவுண்டன் காணாமலயே போனவந்தான்

இனி நடத்துவானா டெவில் ஷோவு?
இவனுக்கு சொல்றேன் நான் கோவு!

இலவசக்கொத்தனார் said...

ஐய்யய்யோ

ரண்டரக்கன்ன டண்டணகன்ன விட்டுட்டேனே! அண்ணன் கோபிக்கப் போறாரே.

போன பின்னூட்டம் படிச்சவங்க எல்லாம் கடைசியில் ஒரு ரண்டரக்கன்ன டண்டணகன்ன, ரண்டரக்கன்ன டண்டணகன்ன சேர்த்துக்குங்கப்பா.

இலவசக்கொத்தனார் said...

// தம்பிண்ணா.. இது மூனுன்னு சொல்லுவாங்க.. Note this point தம்பிண்ணா...//

ஆஹா! தம்பிண்ணா என்கின்ற ஒரு புது உறவு முறையைத் தந்த மை பிரண்ட் அவர்களுக்கு தங்கச்சிக்கா என்கின்ற பட்டம் கொடுப்பதில் யாம் மிகவும் பெருமையடைகிறோம்.

Anonymous said...

nalla karpanai - i think you have a `TREASURE' in your mind -

T.r. should read this - what would be his reaction by reading this -

valarattum ungal thondu

baskar

கதிர் said...

//RoTFL:-) //

நன்றிங்க காசி !

கதிர் said...

//நட்சத்திர வாழ்த்துக்கள் தம்பி...


சூப்பரா கலாய்ச்சு இருக்கீங்க...அந்த ரெண்டும் கெட்டான் மண்டையன...

//எவண்டா அவன் சவுண்டு உடறது?? பாக்கெட்ல டீ குடிக்க காசு இருக்கான்னு
செக் பண்ணுடா டீ கிளாசுக்கு பொறந்தவனே//

ROTFL :-) //

வாங்க நாட்டாமை!

மிக்க நன்றி நாட்ஸ். ஆனா உங்க அளவுக்கு காமெடியா எழுத வராது உண்மை அதுதான் :)

கதிர் said...

//உங்க போஸ்டு இன்னைக்கு ஒன்னும் படிக்கலை.. நீங்கதான் பேசணும்ன்னா 4 - 5 கமேண்ட்ஸ் போட்டுட்டு வரணும்ன்னு கட்டளையெல்லாம் இட்டுட்டீர்களே!! அதுக்குதான்.. இது 1.. //

இதையே எல்லாரும் பாலோ பண்ணாங்கன்னா எவ்வளவு நல்லா இருக்கும்..

கதிர் said...

//Ok.. ithu rendaavathu.. //

சரிங்க தங்கச்சிக்கா! சிலேட்டு பலப்பம் எடுத்துட்டு வரவா!

கதிர் said...

//தம்பிண்ணா.. இது மூனுன்னு சொல்லுவாங்க.. Note this point தம்பிண்ணா... //

மூனு வேற, மூணு வேற நீங்க எதை சொல்றிங்க?

கதிர் said...

//ஓகே.. நாலாவது இது நாலாவது.. ;) //

:))

கதிர் said...

//5 போட்டாச்சு!! இதோ வந்துக்கிட்டே இருக்கேன்.. ;) //

எட்டு போட தெரியுமா?

கதிர் said...

//எப்டிங்க இதெல்லாம்?? நெஜமாவே ரூம் போட்டு யோசிச்சீங்களோ?//

வாங்க மணிகண்டன்.

இதெல்லாம் தானா வர்றது அடுத்தவன கலாய்க்கணும்னா ரைமிங்கா கொட்டுது.
அதுவும் டீ.ஆர கலாய்க்கணும்னா நயாகரா மாதிரி கொட்டுது.

கதிர் said...

//வெட்டியோட ஷோவை நீங்க திருடிடீங்களா? வெட்டி பர்மிஷன் கொடுத்துட்டாரா? //

அவர் என்ன பர்மிஷன் குடுக்கறது
காப்பி பண்றதுக்கு காப்பிரைட்ஸ் வேணாம்னு ஒரு பழமொழியே இருக்குங்க தங்கச்சிக்கா.

கதிர் said...

//comments moderation disable panni naanthaan 1st comment.. enakku oru special Choclate Shake plz.. :-D //

சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு.

கதிர் said...

///கவுண்டர்: ஏண்டா தாடிக்கும் தலைக்கும் வித்தியாசம் தெரியாதவனே, அவங்க
நடிக்கறாங்கன்னா பாக்கறதுக்கு நிறைய பேர் இருக்காங்க நடிக்கறாங்க, நீ நடிச்சா உன்
பையனே கூட பாக்க மாட்டானே. அப்புறம் எதுக்கு நடிக்கற?//

சூப்பர் கதிரு..... அட்டகாசமா இருக்கு சிரிச்சு சிரிச்சு வயிறுவலிக்குதுப்பா :)) //

வாங்க ராயல் அண்ணே.

சங்கத்துல பரிந்துரைச்சதுக்கு மிக்க நன்றி.

காமெடியா எழுதறது எல்லாம் உங்கள பாத்து கத்துகிட்டதுதான்.

நன்றி.

கதிர் said...

//very good //

நன்றிங்க குமார்.

கதிர் said...

//ஏங்ண்ண... பதிவின் ஆரம்பத்திலேயே, ஒரு எச்சரிக்கை போட்டு இருக்கிலாம்-ல..

"office -ல வைச்சி இந்த பதிவை படிக்க வேண்டாம்"-னு..

நான் தனியா சிரிச்சிக்கிட்டு இருக்க, என் boss என்னை ஒரு மாதிரி-யா பார்த்துட்டு போறாரு..!

நட்சத்திர வாழ்த்துக்கள்!//

வாங்க தென்றல்! அழகான பெயர்.

அவரையும் கூப்பிட்டு சிரிக்க சொல்லுங்க. :))

கதிர் said...

//இன்னும் அஞ்சுதான் இருக்குதா தம்பிண்ணே....

இந்த மலேசியால இருந்து வந்த மை ஃபிரண்ட் எங்க பணிய செவ்வனே செஞ்சு முடிச்சிருக்காங்க... //

த.க.ச வில அவங்களுக்கு ஒரு உறுப்பினர் அட்டைய கொடுத்துவிடுங்க.

கதிர் said...

//யேய் தம்பி
நீ தங்க கம்பி
அப்டீனு உன்ன நம்பி
நான் இப்ப வெம்பி

இதுக்கு மேல வரல மாப்பி

-- டி. ஆர்..//

காலையில குடிக்கணும்டா காப்பி
சினிமாக்கு போலாமாடா மாப்பி?
பாலுமகேந்திரா போடுவாரு தொப்பி
ஜாவா பாவலருன்னா அது நம்ம கப்பி
அவருக்கு பிடிச்சது நாய்க்குட்டி பப்பி
ஏ டண்டனக்கா ஏ டணுக்குனக்கா
இப்படி போட்டுத்தாக்கணும்

பிரிதா ஜீயா..

கதிர் said...

//டேய் முகமுடி மண்டையா... அது ஏன் டா வீராவசனம்(?) பேசிட்டு இருக்கும்போதே திடீர்னு செண்டிமெண்ட் சீனப் போட்டு, அதுக்கு டாய்லெட் போறவன் மாதிரி மூஞ்ச வச்சிக்குற, கிழிஞ்ச வாயா??

-- கவுண்டர் //

அல்டிமேட் :))

கதிர் said...

//தம்பி,
ரொம்ப கலக்கல். ஒக்காந்து ரூம் போட்டு யோசிப்பிங்களோ? //
ஆஹா ஏழரை போன் பண்ணி அப்பாயிண்ட்மெண்ட் கேக்குதே// இது சூப்பரு கலக்கிப்பூட்டே.
//

தேங்க்ஸ் சந்தோஷ்.

கதிர் said...

//கூப்பிட்டு அனுப்பி ஒரு நாள் ஆச்சி, ஏன்யா லேட்டு, வந்ததே லேட்டு இதுல இரண்டே இரண்டு பின்னூட்டம் மட்டும் போட்டுட்டு பேச்சு வேற. //

அதான நல்லா கேளுங்க சந்தோஷ்..

கதிர் said...

//மத்த மக்கள்ஸ் எல்லாம் எங்கப்பா வெட்டி, கப்பி, புலி, ஜி யாருமே ஆளை காணோம்!!.. சீக்கிரம் கிளம்புங்கப்பா //

ஒருங்கிணைப்பாளர் பணியை செவ்வனே செய்யிறிங்க சந்தோஷ்

கதிர் said...

//வந்தான்யா எங்க ஆளு
இனிமே கவுண்டன் பாழு

கலக்கவே வந்தான் வீராச்சாமி
புறமுதுகு இவனுக்குக் காமி

கண்டவுடன் கலங்கிப் போனவந்தான்
கவுண்டன் காணாமலயே போனவந்தான்

இனி நடத்துவானா டெவில் ஷோவு?
இவனுக்கு சொல்றேன் நான் கோவு! //

செங்கல்லை அடுக்கி வீடு கட்டுவதை போல வார்த்தைகளை அடுக்கி அடுக்குமொழி பேசும் கொத்ஸ் வாழ்க!

கதிர் said...

//ஐய்யய்யோ

ரண்டரக்கன்ன டண்டணகன்ன விட்டுட்டேனே! அண்ணன் கோபிக்கப் போறாரே.

போன பின்னூட்டம் படிச்சவங்க எல்லாம் கடைசியில் ஒரு ரண்டரக்கன்ன டண்டணகன்ன, ரண்டரக்கன்ன டண்டணகன்ன சேர்த்துக்குங்கப்பா.
//

:)))))
சேர்த்தாச்சு

கதிர் said...

//ஆஹா! தம்பிண்ணா என்கின்ற ஒரு புது உறவு முறையைத் தந்த மை பிரண்ட் அவர்களுக்கு தங்கச்சிக்கா என்கின்ற பட்டம் கொடுப்பதில் யாம் மிகவும் பெருமையடைகிறோம். //

கொத்ஸ் இதே மாதிரி எல்லாரையும் உறவு முறை வெச்சி கூப்பிட ஆரம்பிச்சா தமிழ்மணத்துல உள்குத்து வெச்சி பதிவே வராதுல்ல :))

கதிர் said...

//nalla karpanai - i think you have a `TREASURE' in your mind -

T.r. should read this - what would be his reaction by reading this -

valarattum ungal thondu

baskar //

வாங்க பாஸ்கர் அண்ணே!

அய்யயோ டீ.ஆர் இதை படிச்சார்னா ப்ளைட் புடிச்சி வந்து என்னை அலேக்கா தூக்கிட்டு போய்டுவாரு.

யாரும் காட்டி குடுத்துடாதிங்க சாமிகளா!

இலவசக்கொத்தனார் said...

//கொத்ஸ் இதே மாதிரி எல்லாரையும் உறவு முறை வெச்சி கூப்பிட ஆரம்பிச்சா தமிழ்மணத்துல உள்குத்து வெச்சி பதிவே வராதுல்ல :))//

தமிழ்மணத்தில் ஏற்கனவே ஒருத்தர் இப்படி தப்பு தப்பா உறவை எல்லாம் சொல்லி மெயில் அனுப்பராரு. அதுவே தாங்கலை. நீங்க வேற!!

இலவசக்கொத்தனார் said...

//காமெடியா எழுதறது எல்லாம் உங்கள பாத்து கத்துகிட்டதுதான்.//

இப்போ என்ன? ராயல் ஒரு ஜோக்கர் அப்படின்னு வெளிப்படையாச் சொல்ல வறீயா? ;-)

வெண்ணை(VENNAI) said...

தம்பி

படிச்சு படிச்சு வயிறு வலிக்க சிரிச்சு சிரிச்சு எனோட அலுவலகமே என்ன திரும்பி பாக்குது கலக்குறிங்க ...வாழ்த்துக்கள்....

வெண்ணைய்