எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, November 22, 2006

ஹுர்ர்ர்ர்ர் ஹ்ர்ர்ர்ர்ர்ர்

குமரவேலு கொஞ்சம் எந்திரிப்பா!

ஒரு பத்து நிமிஷம் கேப்பு விட்டியன்னா நாங்க கண்ண அசந்துடுவோம். அப்பால நீ எப்டி வேணா விட்டுக்க.

இதெல்லாம் அவரு காதுல விழாதுங்க செந்தில் சார். கொஞ்சம் உலுக்கினாப்புல எழுப்புங்க அப்போதான் எந்திரிப்பாரு.

தினம் தினம் இவனோட பெரிய ரோதனையா போச்சே.

இவங்கூட மாரடிக்கணும்னு எழுதி வெச்சிருக்கு போல. என்னத்த செய்யிறது. பத்து மாசமா ராவுல தூக்கம் வராம கஷ்டபடுறது எனக்குதான் தெரியும். நான் வேல செய்யிற கம்பெனிலதான் இவனும் வேல செய்யிறான். ஆனா இவனுக்கு மட்டும் எங்கருந்து இந்த அளவுக்கு
சவுண்டா தூக்கம் வருதுன்னு தெரியல.

படார்னு கதவ தொறந்துகிட்டு விஜயகாந்து மாதிரி வீங்கி போன மொகத்தோட ஒருத்தர் வந்து சோபாவில உக்காந்திருக்காரு.

கண்ணுல பாதி தூக்கம் அப்படியே இருக்குது, விட்டா "ஓ" ன்னு அழுதுடுவாரு போலருக்கு.

நமக்கும் தூக்கம் வரல. கொஞ்சம் கிண்டித்தான் பாப்போமே.

என்னங்க ஆச்சு?

அட அத ஏன் கேக்குறிங்க சார்! பக்கத்து ப்ளாட்டுகாரனெல்லாம் ராவில என்னயா இந்த சத்தம் வருதுன்னு திட்டிட்டு போறான். அவனுக்கே அந்த மாதிரி தொந்தரவா இருக்குதுன்னா பக்கத்து கட்டில்ல இருக்குற எனக்கு எப்படி இருக்கும்?

கொஞ்சம் டிஸ்டர்பாதான் இருக்கும். கடுமையா வேல செஞ்சா இந்த மாதிரி வர்றது சகஜந்தான விட்டுத்தள்ளுங்க சார்.

ப்ரிட்டிஷ்காரனுக்கு வேல செய்ய தெரியாது ஆனா வேலைய எப்படி அடுத்தவங்கிட்டருந்து வாங்கணும்னு தெளிவா தெரிஞ்சவன் அவன் ஒருத்தந்தான் இந்த உலகத்தில. அந்த மாதிரி கம்பெனில வேல செய்யிறோம். ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரிதான் வேல. ஞாயமா பாத்தா
நானும் தூங்கணுமா இல்லயா? கொஞ்சங்கூட கூச்ச நாச்சமே இல்லாம இப்படி பண்ணா கடுப்பா ஆகுமா ஆகாதா?

அவர பாத்தாலும் பாவமாதாங்க இருக்கு, என்ன தெரிஞ்சேவா விடறாரு?

இப்படிதாங்க பாவம் பார்த்து மாட்டிகிட்டு முழிக்கிறேன்.

அவரு மேல எனக்கு ஒரு நல்ல அபிப்ராயம் இருக்கு படிக்கிற உங்களுக்கு இந்த சமயத்துல சொன்னாதான் கரெக்டா இருக்கும்.

நானும் அவங்களும் ஒரே ப்ளாட்டுலதான் தங்கி இருக்கோம் ஒரு ப்ரிட்டிஷ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனில வேலை செய்றாங்க. தூங்கினாதான் அவரு சவுண்டு பார்ட்டி முழுச்சிட்டிருந்தார்னா
சாந்தமான பார்ட்டி. தரையே அதிராத மாதிரி ஒரு நடை.

முகத்தை பாத்திங்கன்னா "அடப்பாவிகளா இந்த பச்ச புள்ள மேலயா இந்த பழிய சுமத்தறிங்க. இந்த பாவம் உங்கள சும்மா விடாதுடான்னு சொல்ல வெக்கிற அப்பாவி முகம்.

கிச்சன்ல பாத்திரம் வெளக்கும்போது கூட பாத்திரத்துக்கு வலிக்குமேன்னு பதவிசா தேய்க்குற பகுமானம்.

வெள்ளிக்கிழமைல துணிய தொவச்சி, காய வெச்சி, இஸ்திரி போட்டு பொறுப்பா வெச்சிப்பாரு.

ஆக்க பொறுத்தவன் ஆறவும் பொறுக்கனும்னு சொல்ற பழமொழிக்கேத்த மாதிரி சாப்பாடு செஞ்சவுடனே அவரோட மத்த ரெண்டு ரூம் மேட்ஸ் மாதிரி இல்லாம. பொறுமையா
நிதானமா சாப்பிட்டு தட்ட கழுவி சத்தமில்லாம வெப்பாரு.

கொஞ்சம் நேரம் எதுனா பேசிட்டு சிட்னி ஷெல்டன்ல ஒரு மணி நேரம் மூழ்கி முத்தெடுப்பாரு. எனக்கும் ஒரு டவுட்டு குமுதம், ஆனந்தவிகடன் படிக்கறச்சயே ரெண்டு கொட்டாவி வந்து ஆள இழுத்துகிட்டு போயிடுது. இந்த ஆளு மெய்யாவே படிக்கிறானா இல்ல படிக்கிற மாதிரி
பந்தா காமிக்கிறானான்னு.

ச்சேச்சே அப்படில்லாம் இருக்காது. விகடன்ல படிச்ச மொக்க ஜோக்கையே நாலு பேருகிட்ட சொல்லி சிரிக்கலன்னா நமக்கு தூக்கம் வராது. இந்தாளு இங்கிலிசு புக்கெல்லாம் படிக்கிறாரு ஆனா அத பத்தி நம்மகிட்ட மூச்சே விடறதில்ல.

ஒருவேள நம்மள ஞான்சூன்யம்னு நினைச்சிருப்பாரோ? அப்படியேதான் இருக்கட்டும். கேக்காம இருக்கற வரைக்கும் நல்லதுடா சாமி.

இப்படிப்பட்ட அனேக அருமையான விஷயங்கள் உள்ள ஒரு ஆள் தூங்கும்போது கன்னா பின்னா ன்னு விடற குறட்டை சத்தத்தால அவரோட இமேஜே டேமேஜ் ஆகிப் போச்சி. இவர்தான் அந்த குறட்டைக்கு சொந்தக்காரர்னு எனக்கு தெரியாமலே இருந்திருக்கலாம்.

இன்னும் ரெண்டு மாசத்துல ஊருக்கு போறார். வரும்போது மரியாதையா ஆபரேஷன் செஞ்சிகிட்டு வாய்யான்னு சொல்லி வெச்சிருக்கேன். அதுவரைக்கும் இதோ இந்த "பஞ்சு"தான் துணை சொல்லிட்டு ரெண்டு "இஞ்ச்"க்கு ரெண்டு காதுல இருந்தும் "பஞ்சு" எடுத்து போட்டாரு. இதையும் தாண்டி வருதேன்னு தாங்க எனக்கு கடுங்கோவமா இருக்கு அப்படின்னார்.

இப்படியே நாம் பேசிகிட்டு இருந்தோம்னா வேலைக்காகாது. போயி அவரை கொஞ்சம் "கேப்பு" விடச்சொல்லிட்டு தூங்கற வழிய பாருங்க சார்.

ஒரு நிமிஷம் செந்தில் சார்....

நான் தூங்கும்போது எதுனா கொறட்ட விடறேனா சார்?

"லைட்டா"

என்னாதிது வடிவேலு மாதிரி சொல்லிட்டு போறாருன்னு ஒரே கவலையா போச்சு எனக்கு. இத லைட்டா இருக்கும்போதே கட் பண்ணிறனும். இல்லைனா நம்மள வாட்ச் பண்ணி வேற
யாராச்சும் ஒரு பதிவ போட்டு இதே மாதிரி கலாய்ச்சிடுவாங்க.

விக்கி பசங்களா... ம்கூம் விக்கி பெரியவங்களா!!

எல்லாமே பெரிய பெரிய "தல"ங்க பேரு மட்டும் பசங்கன்னு
வெச்சிகிட்டாங்க.

இப்ப நமக்கு இதுவா முக்கியம். கொறட்டைய தடுப்பது எப்படி?
மூக்கையும், வாயையும் பொத்திகிட்டா வராதுன்னு யாரும் சொல்லிறாதீங்க.

நிஜமாவே கேக்குறேன். இதனால பாதிக்கப்பட்டவன் என்பதாலயும், யாரும் என்னால பாதிக்கப்படக்கூடாதுன்னு ஒரு அக்கறையிலயும் கேட்கிறேன்.

35 comments:

நாமக்கல் சிபி said...

தம்பி,
நான் தான் முதல் கமெண்ட்...

Anonymous said...

என்னயா நடக்குது இங்க?

Anonymous said...

டிஸ்கோ சாய் குடிக்க தெரியுமா?

கதிர் said...

//தம்பி,
நான் தான் முதல் கமெண்ட்... //

வெட்டி இந்த பதிவ போடறதுக்குள்ள தாவு தீர்ந்துடுச்சி! ஏதோ சாமி குத்தம் ஆகிப்போச்சி போல!

Sivabalan said...

//ஏதோ சாமி குத்தம் ஆகிப்போச்சி போல! //

Ha Ha Ha...

கதிர் said...

//ஏதோ சாமி குத்தம் ஆகிப்போச்சி போல! //

//Ha Ha Ha...//

சிரிப்பா சிரிக்கு நம்ம பொழப்பு :))
பதிவ பத்தி கருத்து ஒண்ணும் சொல்லலியே சி.பா

நாகை சிவா said...

நல்ல மனசு வேணும்ய்யா, நல்ல மனசு வேணும்.

மனசு நல்லா இருந்தா, இடி சத்தமாக இருந்தாலும் நிம்மதியாக தூங்கலாம்.

நாகை சிவா said...

//வெட்டி இந்த பதிவ போடறதுக்குள்ள தாவு தீர்ந்துடுச்சி! ஏதோ சாமி குத்தம் ஆகிப்போச்சி போல! //

அதுக்கு தான் பதிவு போடுவதுறகு முன்பு குளிச்சுட்டு பதிவு போடனும் என்று சொல்வது. அடுத்தப்பா சரியா பண்ணு என்ன?

நாகை சிவா said...

//எல்லாமே பெரிய பெரிய "தல"ங்க பேரு மட்டும் பசங்கன்னு
வெச்சிகிட்டாங்க. //

அவங்க மேல உனக்கு என்னய்யா அப்படி ஒரு வெறுப்பு. எல்லாரும் நல்ல மனுசங்க தானே.... என்னமோ போ....அவங்களை வம்புக்கு இழுக்குற.... எதாச்சும் நடந்தா சரி....

இலவசக்கொத்தனார் said...

தம்பி, நம்ம ஆளுங்களுக்குச் சொல்லி அனுப்பியாச்சு.. கூடிய சீக்கிரம் பதிவு ஒண்ணு வரும் பாருங்க.

நாமக்கல் சிபி said...

//ஏதோ சாமி குத்தம் ஆகிப்போச்சி போல!//

ஆமாம்பா கதிரு...
இந்த பதிவு சரியா வந்துச்சினா நம்ம ஊர் மாரியாத்தாவுக்கு நீ மொட்டையடிச்சி பூமிதிச்சி நாக்குல அளகு குத்தி முதுகுல அந்த கூரா ஒன்னு குத்தி (பேர் தெரியலைப்பா) தேர் இழுப்பனு வேண்டிக்கிட்டேன்...
அப்பறம் தெரு தெருவா பிச்சை எடுத்து பொங்க வைப்பனும் வேண்டிக்கிட்டேன்...

அப்பறம் திருப்பதிக்கும் பழனிக்கும் நம்ம ஊருல இருந்து நடந்தே வந்து மண்சோறு சாப்பிடுவன்னும் வேண்டிக்கிட்டேன்...

ஆத்தா காப்பாத்திட்டா :-)

யாருப்பா அங்க... தம்பிக்கு எல்லாம் ரெடி பண்ணுங்க :-)

நாகை சிவா said...

யோவ் கமெண்ட் போட்டு எம்மாம் நேரம் ஆச்சு....
இன்னும் வெளியீடாமல் இருப்பதன் மர்மம் என்ன?

கைப்புள்ள said...

ஒரு வேளை சிட்னி ஷெல்டன் புஸ்தகம் எல்லாம் படிக்கிறதுனால தான் உங்க நண்பருக்குக் குறட்டை வருதோ? வேணா நீங்களும் ஒரு வாட்டி முயற்சி பண்ணி பாருங்களேன்
:)

கதிர் said...

//மனசு நல்லா இருந்தா, இடி சத்தமாக இருந்தாலும் நிம்மதியாக தூங்கலாம். //

உன்னயதான் தேடிகிட்டு இருக்கேன் வாய்யா!

கதிர் said...

//அதுக்கு தான் பதிவு போடுவதுறகு முன்பு குளிச்சுட்டு பதிவு போடனும் என்று சொல்வது. அடுத்தப்பா சரியா பண்ணு என்ன? //


இது தனி மனித தாக்குதல். ஒரு நாள் இல்ல ஒரு நாள் இதுக்கு பதில் சொல்லியே தீரணும். :))

Divya said...

Tip for you:
If you are the bedmate of a snorer, use EARPLUGS.

Tips for your SNORING freind:
Try to sleep on your stomach, since snoring is less likely to occur in this position.

Adopt a healthy lifestyle. Extra weight, smoking, alcohol and drugs all exacerbate snoring.

நாமக்கல் சிபி said...

புலியின் அனைத்து கமெண்டுக்கும் பதில் சொல்லாத தம்பியின் இந்த பதிவை கன்னா பின்னானு புறக்கணிக்கிறேன்...

அப்படியே எங்க தலயையும் நீ புறக்கணிச்சிருக்க...

சீக்கிரம் பதில் சொல் இல்லையென்றால் வேண்டுதல் அதிகமாகும் :-)

கப்பி | Kappi said...

//நல்ல மனசு வேணும்ய்யா, நல்ல மனசு வேணும்.

மனசு நல்லா இருந்தா, இடி சத்தமாக இருந்தாலும் நிம்மதியாக தூங்கலாம்.
//

புலி..கரீட்டா சொன்னப்பா...

தம்பி..
கேட்டுக்க...தெளிஞ்சுக்க....

கப்பி | Kappi said...

//ஒரு வேளை சிட்னி ஷெல்டன் புஸ்தகம் எல்லாம் படிக்கிறதுனால தான் உங்க நண்பருக்குக் குறட்டை வருதோ? வேணா நீங்களும் ஒரு வாட்டி முயற்சி பண்ணி பாருங்களேன்
:) //

ஒரு வேளை வயசானா குறட்டை வருமோ?? தல உனக்கு எப்படி?? :))

கப்பி | Kappi said...

//இது தனி மனித தாக்குதல். ஒரு நாள் இல்ல ஒரு நாள் இதுக்கு பதில் சொல்லியே தீரணும். :))
//

அப்ப இந்த பதிவு?? ஒரு அப்பாவி குறட்டை விட்டு தூங்கினதை ஊர் உலகத்தையே கூப்பிட்டு சொல்ற இது தனி மனித தாக்குதல் இல்லையா?? என்னங்கய்யா உங்க நியாயம்??

Unknown said...

உங்களைப் போல பாதிக்கப்பட்டவன் இல்லை. பாதிப்பை ஏற்படுத்துபவன்.

என் ரூம் நண்பர் குசினி(சமையலறை)யில் உறங்குவார்.
snoreeze என்ற புது மருந்து 85 திர்ஹம். பயனில்லை

ஊருக்குப் போனபோது அறுத்துடென்று மருத்துவரிடம் சொன்னால் - உங்களுக்கு அறுத்தாலும் பலன் சந்தேகம்தான். மேலும் குரல் (பெண் குரல் போல) மாற வாய்ப்புண்டு. என்ன வசதி என்று நம்மைப் பார்க்கிறார். என்ன செய்வதென்று எதுவும் புரியவில்லை தம்பி.

உங்களுக்காவது ஏதாவது பதில் வருகிறதாவென்று பார்த்தாலும்..... ஊஹூம் பலனில்லை

கதிர் said...

//எல்லாமே பெரிய பெரிய "தல"ங்க பேரு மட்டும் பசங்கன்னு
வெச்சிகிட்டாங்க. //

//அவங்க மேல உனக்கு என்னய்யா அப்படி ஒரு வெறுப்பு. எல்லாரும் நல்ல மனுசங்க தானே.... என்னமோ போ....அவங்களை வம்புக்கு இழுக்குற.... எதாச்சும் நடந்தா சரி....//

யோவ் புலி ஒரு முடிவோடதான் வந்திருக்கே போலருக்கு! நல்லா புகை போடற நீ! நான் என்னயா தப்பா சொல்லிட்டேன் "விக்கிபசங்க" எல்லாரும் பெரிய மனுசங்கன்னு சொன்னது ஒரு குத்தமா?

கதிர் said...

//தம்பி, நம்ம ஆளுங்களுக்குச் சொல்லி அனுப்பியாச்சு.. கூடிய சீக்கிரம் பதிவு ஒண்ணு வரும் பாருங்க.//

ரொம்ப நன்றிங்க கொத்ஸ் சாரி விக்கி தலைவரே.

ஒரு அறையில ஐந்தாறு பேருக்கு மேல தங்கியிருக்க வேண்டிய கட்டாயம் இருக்கு. அந்த மாதிரி சமயத்தில அஞ்சு பேருல ஓருத்தராவது குறட்டை விடுபவரா அமைஞ்சிடறாங்க இதனால கு.விடுபவருக்கு கஷ்டம், கு.கேட்பவருக்கு ரொம்ப ரொம்ப கஷ்டம். சீக்கிரமே பதிவ எதிர்ப்பர்த்துகிட்டு இருக்கேன்.

கதிர் said...

//ஆமாம்பா கதிரு...
இந்த பதிவு சரியா வந்துச்சினா நம்ம ஊர் மாரியாத்தாவுக்கு நீ மொட்டையடிச்சி பூமிதிச்சி நாக்குல அளகு குத்தி முதுகுல அந்த கூரா ஒன்னு குத்தி (பேர் தெரியலைப்பா) தேர் இழுப்பனு வேண்டிக்கிட்டேன்...
அப்பறம் தெரு தெருவா பிச்சை எடுத்து பொங்க வைப்பனும் வேண்டிக்கிட்டேன்...

அப்பறம் திருப்பதிக்கும் பழனிக்கும் நம்ம ஊருல இருந்து நடந்தே வந்து மண்சோறு சாப்பிடுவன்னும் வேண்டிக்கிட்டேன்...

ஆத்தா காப்பாத்திட்டா :-)

யாருப்பா அங்க... தம்பிக்கு எல்லாம் ரெடி பண்ணுங்க :-)//

இன்னும் எதயாவது மறந்திட்டியன்னா ஞாபகபடுத்தி சொல்லு வெட்டி.
இந்த தம்பிக்கு பாசமிகு அண்ணனா இருபேன்னு நினைச்சேன் இப்படி கொல சாமியா மாறுவேன்னு நினைச்சு கூட பாக்கல :(

ஏன் இந்த கொலவெறி?

கதிர் said...

//யோவ் கமெண்ட் போட்டு எம்மாம் நேரம் ஆச்சு....
இன்னும் வெளியீடாமல் இருப்பதன் மர்மம் என்ன? //

இதுல என்ன புலி மர்மம் வேண்டிகிடக்குது? நாம எழுதறதே பத்து நாளைக்கு ஒரு பதிவு அதுக்கே தொழில் நுட்ப கோலாரு இஞ்சினியர்லாம் சேர்ந்து மாரடிச்சிகிட்டுருக்காங்க உன்னும் கொஞ்ச நேரத்தில சரியாயிடும் கவலபடாத கஸ்டமருன்னு தகவல் வந்து பீதிய கெளப்புது.

இந்த பிரச்சினைய தீர்க்கறதுக்குள்ளவே கண்ண கட்டிடுச்சி அதனாலதாம்பா உடனடியா பதில் போட முடியல.

பிராது குடுத்துறாத புலி நாம எல்லாம் ஒரே ரத்தம்.

கதிர் said...

//ஒரு வேளை சிட்னி ஷெல்டன் புஸ்தகம் எல்லாம் படிக்கிறதுனால தான் உங்க நண்பருக்குக் குறட்டை வருதோ? வேணா நீங்களும் ஒரு வாட்டி முயற்சி பண்ணி பாருங்களேன்
:)//

இதுக்கு என்னோட பதில் நீங்க சொன்னதுதான்.

ஆணியே புடுங்க வேணாம்

நாந்தான் சொன்னனே ஆ.விகடன், குமுதம் போன்ற கில்மா புத்தகத்த ரெண்டு பக்கம் படிச்சாவே கண்ண கட்டிடுது இதுல ஷிட்னி ஷெல்டன் வேறயா? அவரும் பாவம் இல்ல!

அப்படியே மீறி படிச்சாலும் நாலாவது வரி படிக்கும்போதே சொக்கிருவேன்.

இப்பலாம் என்னன்னே தெரியல ப்லாக் படிக்கும்போது கூட கண்ண கட்டுது.

நன்றி தல!

கதிர் said...

Tip for you:
If you are the bedmate of a snorer, use EARPLUGS.

//Tips for your SNORING freind:
Try to sleep on your stomach, since snoring is less likely to occur in this position.

Adopt a healthy lifestyle. Extra weight, smoking, alcohol and drugs all exacerbate snoring. //

உங்க டிப்ஸ்களுக்கு மிக்க நன்றி திவ்யா!

அவரு ரூம்ல இருக்குற ரெண்டு பேருமே சாப்பிடறாங்களோ இல்லையோ காதுல பஞ்சு வெச்சிக்க மட்டும் மறந்துட மாட்டாங்க!

ரெண்டாவது நீங்க சொல்றது நடக்கறதுக்கு வாய்ப்புகள் கம்மி!

மூணாவதா சொன்னதுல
அவருக்கு இந்த மாதிரி கெட்ட பழக்கம் எதுவுமே இல்லிங்களே திவ்யா!

எனக்கு உபயோகமா இருக்கும்னு நினைக்கிறேன்.

வருகைக்கு நன்றி!

கதிர் said...

//புலியின் அனைத்து கமெண்டுக்கும் பதில் சொல்லாத தம்பியின் இந்த பதிவை கன்னா பின்னானு புறக்கணிக்கிறேன்...//

//அப்படியே எங்க தலயையும் நீ புறக்கணிச்சிருக்க...//

அப்பவே சொன்னேன் புலி கூட ஒட்டு ஒறவு வெச்சிக்காதேன்னு இப்போ பாரு பிடில் போடற பழக்கம் உனக்கும் தொத்திக்கிச்சி!

//சீக்கிரம் பதில் சொல் இல்லையென்றால் வேண்டுதல் அதிகமாகும் :-)//

நீ வேண்டிக்கிட்டதே நிறைவேத்தறதுக்கே நாலு ஜென்மம் எடுத்தாலும் பத்தாது இதுல இன்னும் வேறயா?

வேணாம் சாமி!

பூமி தாங்காது!

கதிர் said...

//புலி..கரீட்டா சொன்னப்பா...

தம்பி..
கேட்டுக்க...தெளிஞ்சுக்க....//

கப்பி நீ கூடவா?????? :((

//ஒரு வேளை வயசானா குறட்டை வருமோ?? தல உனக்கு எப்படி?? :))//

தல என்றும் பதினாறுதான்

தல படுக்கும்போதெல்லாம் எதிரிங்க குறுக்கு கேப்புல சைக்கிள் விடறதினால ரொம்ப ஜாக்கிரதையாதான் தூங்குவாரு அப்போ குறட்டைக்கு நோ சான்ஸ்.

கதிர் said...

//அப்ப இந்த பதிவு?? ஒரு அப்பாவி குறட்டை விட்டு தூங்கினதை ஊர் உலகத்தையே கூப்பிட்டு சொல்ற இது தனி மனித தாக்குதல் இல்லையா?? என்னங்கய்யா உங்க நியாயம்?? //

இது ஒரு நல்ல்ல கேள்வி!

அவரு அப்பாவின்றதுதான் பிரச்சினையே அவருக்கு மட்டும் கொஞ்சம் எதிர்த்து பேசவும் தெரிஞ்சிருந்தா கேள்வியே வந்திருக்காது.

பொதுவா இந்த பிரச்சினையினால விவாகரத்து கூட ஆகியிருக்காம்.
எம்புருசன் கொறட்ட விடறாரு நீங்கதான் எசமான் டைவர்ஸ் வாங்கித்தரணும்னு கோர்ட்ல கேஸ் போட்டு ஜெயிச்ச்சிட்டாங்க! இது மாதிரி சின்ன சின்ன பிரச்சினைகள் ஏற்படுத்தற பின் விளைவுகள் வாழ்க்கையையே குலைச்சிடுது அதனாலதான் இந்த சந்தேகம் மத்தபடி இது எப்படி தனி மனித தாக்குதல் ஆகும்?

நான் எங்கனயாவது அவரை குறை சொல்லி இருக்கறேனா?

அதுவுமில்லாம அவருக்கே தெரியாது இந்த மாதிரி நான் ப்லாக்ல எழுதி இருக்கேன்னு! அப்புறம் எப்படி தனி மனித தாக்குதல் ஆகும்? பெயரை கூட மாத்திட்டேன்.

அவரு ரொம்ப நல்லவருப்பா கப்பி!

கதிர் said...

//என் ரூம் நண்பர் குசினி(சமையலறை)யில் உறங்குவார்.
snoreeze என்ற புது மருந்து 85 திர்ஹம். பயனில்லை//

பாவம்ங்க!

//ஊருக்குப் போனபோது அறுத்துடென்று மருத்துவரிடம் சொன்னால் - உங்களுக்கு அறுத்தாலும் பலன் சந்தேகம்தான். மேலும் குரல் (பெண் குரல் போல) மாற வாய்ப்புண்டு. என்ன வசதி என்று நம்மைப் பார்க்கிறார். என்ன செய்வதென்று எதுவும் புரியவில்லை தம்பி.//

ஒரு சின்ன விஷயத்துல இவ்ளோ மேட்டர் இருக்குதா?

ஆச்சரியமா இருக்குங்க சுல்தான்!

//உங்களுக்காவது ஏதாவது பதில் வருகிறதாவென்று பார்த்தாலும்..... ஊஹூம் பலனில்லை //

கண்டிப்பா பதில் வரும் தனி பதிவே போடரோம்னு விக்கி பெரியவங்க சொல்லிட்டாங்க! சோ சில தினங்கள் காத்திருந்திங்கன்னா நிச்சயம் ஒர்ர் தெளிவான் பதில் கிடைக்கும்!

ராசுக்குட்டி said...

//விகடன்ல படிச்ச மொக்க ஜோக்கையே நாலு பேருகிட்ட சொல்லி சிரிக்கலன்னா நமக்கு தூக்கம் வராது.//
me too same yaa...

பிரச்னை சீரியஸாகவே இருப்பதால் நானும் சீரியஸாகவே சொல்லிடறேன்!
ஜலதோஷம் சளி தொல்லைகள் இருந்தால் அதை சரி செய்யலாம்...சிகரெட்டை விடுவது, கொஞ்சம் உடற்பயிற்சி செய்வது என முயற்சி செய்யலாம். என் நண்பன் ஒருவன் புல்லாங்குழல் வாசிக்க ஆரம்பித்ததும் சுத்தமாக நின்றதாக அவன் அறை நண்பர்கள் சொன்னது "காமெடி கீமெடி" இல்லன்னா முயற்சிக்கலாம்!

லொடுக்கு said...

தம்பி,
விடை தெரிஞ்சா சொல்லி அனுப்புங்க. :)

கதிர் said...

//me too same yaa...//

ஒரே ரத்தம்! :))

//பிரச்னை சீரியஸாகவே இருப்பதால் நானும் சீரியஸாகவே சொல்லிடறேன்!
ஜலதோஷம் சளி தொல்லைகள் இருந்தால் அதை சரி செய்யலாம்...சிகரெட்டை விடுவது, கொஞ்சம் உடற்பயிற்சி செய்வது என முயற்சி செய்யலாம். என் நண்பன் ஒருவன் புல்லாங்குழல் வாசிக்க ஆரம்பித்ததும் சுத்தமாக நின்றதாக அவன் அறை நண்பர்கள் சொன்னது "காமெடி கீமெடி" இல்லன்னா முயற்சிக்கலாம்!//

கண்டிப்பா முயற்சிக்கிறேன் உடற்பயிற்சி செய்றதுதான் கொஞ்சம் கடினமா இருக்கும். புல்லாங்குழலுக்கு நான் எங்க போவேன்? அப்படியே நான் அதை வாசிச்சேன்னு வைங்க, குறட்டையே தேவலாம்னு சொல்வாங்க! படத்திலயும், திருவிழால மட்டுமே புல்லாங்குழலை பாத்திருக்கேன்.

ஆமா

எந்த புல்லாங்குழல சொல்றீங்க நீங்க?

கதிர் said...

//தம்பி,
விடை தெரிஞ்சா சொல்லி அனுப்புங்க. :)//

சேம் ப்ளட்???????

:))

நிச்சயமா சொல்றேன் லொடுக்கு!