எல்லையற்ற அன்பு கொள்வோம்

Friday, November 10, 2006

குன்று முட்டிய குருவி - வாலிப வயசு - 4

இந்த பதிவு எங்க ஊரு போலி டாக்டருங்கள பத்தி.

தலைப்ப பார்த்துட்டு எல்லாரும் வரணும்னோ ஒரு விளம்பரமோ கிடையாதுங்க. உண்மையிலயே இந்த மாதிரி சம்பவம் நடந்ததுங்க அதுவுமில்லாம கிராமங்கள் எல்லாத்திலயும் ஒரு எம்.பி.பி.எஸ் டாக்டர் இருந்தாலும் ரெண்டு மூணு கம்பவுண்டர் டாக்டருங்க இருக்கத்தான் செய்யுறாங்க. மக்களும் அங்க போக வரத்தான் செய்யுறாங்க. அப்படி வேற வழியே இல்லாம நாங்க ஒரு போலி டாக்டர்கிட்ட போயி வைத்தியம் பாத்துகிட்டது ஒரு மறக்க முடியாத சம்பவம்.

பொதுவா இந்த மாதிரி டாக்டருங்களுக்கு வருமானமே ஒரிஜினல் டாக்டருங்ககிட்ட போக வழியில்லாம சீப்பா இங்க முடிச்சிக்கலாம்னு. இந்த மாதிரி டாக்டர்கள் முக்கால்வாசிப்பேரு ஹோமியோபதி என்று சொல்லப்படுகிற டாக்டருங்க. இவங்கள்லயும் ஒரிஜினல், போலிகள் இருக்காங்க. அதை ஈசியா கண்டுபிடிக்கலாம். எப்படின்னு கேக்கறிங்களா? போலி டாக்டர் கைதுன்னு செய்தி வந்தாலோ, போலி டாக்டர்கள தொடந்து கைது பண்ணிட்டு வராங்கன்னு டீவில செய்தி வந்தாவே போதும் இவங்க வெளில தொங்கிட்டு இருக்கற போர்டு, விளம்பர தட்டி எல்லாத்தையும் கமுக்கமா கழட்டி வீட்டுக்குள்ள வச்சிக்குவாங்க. கொஞ்ச நாள் அடக்க ஒடுக்கமா இருந்துட்டு சத்தம் ஓய்ஞ்ச பிறகு மறுபடியும் போர்டு போட்டு கல்லாவ தொறந்துடுவாங்க!

காதல் தோல்வி, கடன் தொல்லை, தீராத வியாதிக்காரங்க மருந்து குடிச்சிட்டாங்கன்னா அவங்கள இந்த மாதிரி டாக்டரு கிட்டதான் கூட்டிட்டு வருவாங்க. இவரும் என்ன மாயம் செய்வாரோ தெரியாது தொன்னூறு சதவீதம் உயிர் போகாதபடி பாத்து ஆள தேத்தி அனுப்புவாரு. இந்த டாக்டருக்கே டிமிக்கி குடுக்குற மாதிரி சில ஆளுங்க பூச்சி மருந்த ஒடச்சி வாயில ஊத்தாம காதுல ஊத்திக்கிற ஆளுங்க இருக்காங்க அந்த மாதிரி கேசுங்ககளுக்கு வேற வழியே இல்ல நேரா கபாலமோட்சம்தான் அவங்களுக்கு. எனக்கு இதுதான் புரிய மாட்டேங்குது காதல் தோல்வின்னாவே நேரா தற்கொலைதானா? அடுத்ததா ஒண்ணு தேடினா என்ன? இல்ல தேடாமலே விட்டாதான் என்ன?

அட! மேட்டர் வேற மாதிரி போயிகிட்டு இருக்கு!

பேக் டூ த பாயிண்ட்.

ஒரு நாள் ஆடிப் பதினெட்டுன்னு நினைக்கிறேன். ஒரு நாலஞ்சி வெட்டிப்பசங்க ஒண்ணு சேர்ந்துகிட்டு பக்கத்துல இருக்குற மலைக்கு ஜாலியா பைக்குல ஒரு ட்ரிப் போயிட்டு வரலாம்ணு ப்ளான் போட்டு கிளம்பியாச்சு.

வரும்போதுதான் பிரச்சினையே ஆரம்பிச்சுது. எங்க குரூப்புல ஒருத்தன் மட்டும் மிஸ்ஸிங். எங்க எங்கன்னு தேடினா அவரு "காய்ச்சற" இடத்துக்கே போயி "சர்பத்" சாப்பிட்டுட்டு வந்திருக்காரு. உனக்கு எப்படி தெரியும் இங்க காய்ச்சுறாங்கன்னு கேட்டேன்?

அங்க லேசா புகை வந்தது அதான் என்ன புகைன்னு பாக்கலாமின்னு போனேன். அப்படியே உப்பு இருக்கான்னு பாக்க சொன்னாங்க அதான் பாத்தேன்.

ஏண்டா நாய உப்பு ஒரப்பு பாக்கறதுக்கு அது என்ன கோழி குருமாவா?

இங்க ஏற்கனவே அனுபவம் இருக்கு இல்லன்னா எப்படி உனக்கு அந்த இடம் தெரியும்?

இல்லடா சும்மா போனேன் குடுத்தானுங்க டேஸ்ட்பாத்தேன் அவ்ளோதான். பின்னாடி உக்காரு போலாம்.

வேணாம்டா செல்லம் நீ போதையில இருக்கறதினால பாதையில ஓட்ட மாட்ட அதுவுமில்லாம இது சாதாரண ரோடு கிடையாது மலைப்பாதை. எத்தனை முறைசொன்னாலும் கேக்கல கவுரவக்கொறச்சலா போயிடும்னு அவரே ஓட்டினாரு. அவன நம்பி யாரும் பின்னாடி உக்காரலை.

நினைச்சா மாதிரியே ரெண்டாவது பெண்டுல "குன்று முட்டிய குருவி" மாதிரி விழுந்து கிடந்தாரு பாதைக்கு இந்த பக்கம் விழுந்ததால ஆளு இருக்கான் அந்த பக்கம் போயிருந்தா எலும்பு கூட கிடைச்சிருக்காது.முட்டி மட்டும் கொஞ்சமா கிழிஞ்சி போயிருந்தது. கொறஞ்சது நாலு தையலாவது போட்டாகணும். ஒரு கர்ச்சிப் போட்டு கட்டி பின்னாடி உக்கார வச்சோம்.

ஒழுங்கா சொன்ன பேச்ச கேட்டுருந்தா இப்படி ஆகியிருக்காது சரி தொலஞ்சு போகுது விடுன்னு மலைய விட்டு கீழ இறங்குனா ஒரு ஆஸ்பத்திரி கூட இல்ல. கடைசில ஒரே ஒரு ஆஸ்பத்திரி திறந்து இருந்தது தினம் தினம் நாங்க நக்கல் அடிக்குற அந்த கம்பவுண்டர்தான் டாக்டர் வேஷத்துல இருந்தாரு.

ஆபத்துக்கு பாவமில்ல இவருகிட்டயே தையல்போட்டுகிட்டு போலாமின்னு போனோம். மாட்டுக்கு கோணி ஊசில குத்தறமாதிரி நாலு தையல் போட்டாரு.

சார் டேப்ளட் எதுவும் தேவையில்லயா? செப்டிக் ஆச்சின்னா பிரச்சினைதானன்னு அறிவாளித்தனமா ஒருத்தன் கேட்க அவரும் கீழ இருக்கற மாதிரி ப்ரிஸ்கிரிப்ஷன் பேப்பருல எழுதினாரு.

"புண்ணுக்கு மருந்து கொடுத்து அனுப்பவும்"

இதப்போயி மருந்து கடையில கொடுத்தேன்னா மானமே போயிடும்!

நீங்களே சொல்லுங்க அவர் டாக்டர்தானா?

33 comments:

நாமக்கல் சிபி said...

தம்பி,
நம்ம கல்வராயன் மலையா???

அப்பறம் உப்பு, உரப்பு நீ பாக்கலையா?

Santhosh said...

// பூச்சி மருந்த ஒடச்சி வாயில ஊத்தாம காதுல ஊத்திக்கிற ஆளுங்க இருக்காங்க //
நிஜமா தம்பி? இல்லா சும்மா சொன்னிங்களா? நம்பவே முடியலை.

Mohan Madwachar said...

சுவையான பதிப்பு

கதிர் said...

//தம்பி,
நம்ம கல்வராயன் மலையா???

அப்பறம் உப்பு, உரப்பு நீ பாக்கலையா? //

ஆமாப்பா கல்வராயன் மலையேதான் வேற எந்த மலை இருக்கு?

நமக்கு உப்பு ஒரப்பு பாக்குற பழக்கமே இல்லன்னு
.
.
.
சொல்ல வரல

ஆனா நாட்டு சரக்க டேஸ்ட் பண்ற அளவுக்கு தைரியம் பத்தாது! :))

கதிர் said...

//நிஜமா தம்பி? இல்லா சும்மா சொன்னிங்களா? நம்பவே முடியலை.//

அந்த மாதிரி சாவுகள் நானே நேர்ல பாத்துருக்கேங்க சந்தோஷ்!.

உயிர் பொழைக்கணும் ஆச இருக்கறவன் வாயில கொஞ்சூண்டு ஊத்திகிட்டு வீட்டுல இருக்கற ஆளுங்களுக்கு பூச்சி காட்டுவான். ரொம்ப விரக்தியடைஞ்ச ஆளுங்க டைரக்டா காதுல ஊத்திக்குவான். பத்தே நிஷம்தான் ஆள் காலி.

கதிர் said...

நன்றி லியோ மோகன்!

நாமக்கல் சிபி said...

//உயிர் பொழைக்கணும் ஆச இருக்கறவன் வாயில கொஞ்சூண்டு ஊத்திகிட்டு வீட்டுல இருக்கற ஆளுங்களுக்கு பூச்சி காட்டுவான். ரொம்ப விரக்தியடைஞ்ச ஆளுங்க டைரக்டா காதுல ஊத்திக்குவான். பத்தே நிஷம்தான் ஆள் காலி.//

இது நம்ம ஷேக்ஸ்பியர் போட்ட ஆம்ப்லேட் கூட இருக்கே (Hamlet :-))

கதிர் said...

//இது நம்ம ஷேக்ஸ்பியர் போட்ட ஆம்ப்லேட் கூட இருக்கே (Hamlet :-)) //

ஷேக்ஸ்பியர் போட்ட ஆம்லெட்டா?

இது என்ன புதுசா இருக்கு?

இராம்/Raam said...

//ஆபத்துக்கு பாவமில்ல இவருகிட்டயே தையல்போட்டுகிட்டு போலாமின்னு போனோம். மாட்டுக்கு கோணி ஊசில குத்தறமாதிரி நாலு தையல் போட்டாரு.//


கதிரு,

அந்த தையல் உனக்கு போட்டாதாப்பா???? :)))

இராம்/Raam said...

////நிஜமா தம்பி? இல்லா சும்மா சொன்னிங்களா? நம்பவே முடியலை.//

அந்த மாதிரி சாவுகள் நானே நேர்ல பாத்துருக்கேங்க சந்தோஷ்!.

உயிர் பொழைக்கணும் ஆச இருக்கறவன் வாயில கொஞ்சூண்டு ஊத்திகிட்டு வீட்டுல இருக்கற ஆளுங்களுக்கு பூச்சி காட்டுவான். ரொம்ப விரக்தியடைஞ்ச ஆளுங்க டைரக்டா காதுல ஊத்திக்குவான். பத்தே நிஷம்தான் ஆள் காலி. //

உண்மைதானாய்யா இது.... விஷம் அப்பிடியே போனாலும் எங்கே போயி உசுரை கொல்லும்???

இராம்/Raam said...

இவ்வளவு நேரமாக என்னுடைய பின்னூட்டங்களை வெளியிடாத தம்பியென்னும் கதிரே கன்னாபின்னாவென்னு கண்டிக்கிறேன்!!!

கதிர் said...

//அந்த தையல் உனக்கு போட்டாதாப்பா???? :)))//

அந்த "குன்று முட்டிய குருவி" நானில்லை ராமண்ணா!!

எனக்கு தெரியும் இப்படி யாராச்சும் கேப்பீங்கன்னு.

கதிர் said...

//உண்மைதானாய்யா இது.... விஷம் அப்பிடியே போனாலும் எங்கே போயி உசுரை கொல்லும்??? //

சந்தேகம் இருந்தா டெஸ்ட் பண்ணி பாத்துறலாமே! :))

என்ன சொல்றிங்க?

லொடுக்கு said...

--> தம்பி said...
அந்த "குன்று முட்டிய குருவி" நானில்லை ராமண்ணா!!


சரி சரி. நம்பறோம் வுடுங்க.

லொடுக்கு said...

அடைப்பலகை மாற்றத்திற்கு வாழ்த்துக்கள். :)

இராம்/Raam said...

//அந்த "குன்று முட்டிய குருவி" நானில்லை ராமண்ணா!!

எனக்கு தெரியும் இப்படி யாராச்சும் கேப்பீங்கன்னு. //

நாங்கெல்லாம் சந்தேகமின்னு ஒன்னு வந்துட்டா வந்து டக்குன்னு நிவர்த்தி பண்ணிருவோம்.

இராம்/Raam said...

//சரி சரி. நம்பறோம் வுடுங்க. //

தார்மீக ஆதரவு கொடுத்த லொடுக்கு அண்ணாவிற்கு நன்றி!!!

கதிர் said...

//சரி சரி. நம்பறோம் வுடுங்க.//

நீங்களாச்சும் நம்புனிங்களே ரொம்ப சந்தோஷம்.

அடைப்பலகைக்கு நானெ தேங்ஸ் சொல்லணும்.

நன்றி.

கதிர் said...

//நாங்கெல்லாம் சந்தேகமின்னு ஒன்னு வந்துட்டா வந்து டக்குன்னு நிவர்த்தி பண்ணிருவோம்.//

இதெல்லாம் நல்லா வெவரமாவே கேப்பீங்க க்ளாஸ்ல மாட்டும் தவறி கூட கேட்டுறாதீக! :)

//தார்மீக ஆதரவு கொடுத்த லொடுக்கு அண்ணாவிற்கு நன்றி!!! //

ஆஹா ஒண்ணு கூடிட்டாங்கய்யா ஒண்ணு கூடிட்டாங்கய்யா!

லொடுக்கு நாமெல்லாம் ஒரே ஊர்ல இருக்கோம். ராம் பெங்களூர்காரரு!

நாகை சிவா said...

//ஆனா நாட்டு சரக்க டேஸ்ட் பண்ற அளவுக்கு தைரியம் பத்தாது! :)) //

திறமை இல்லனு நேரடியா சொல்லிட்டு போக வேண்டியது தானே.... ஏன் இப்படி இழுத்துக்கிட்டு......

நாகை சிவா said...

//இதெல்லாம் நல்லா வெவரமாவே கேப்பீங்க க்ளாஸ்ல மாட்டும் தவறி கூட கேட்டுறாதீக! :) //

உனக்கு தெரியுமா, உனக்கு தெரியுமானு கேட்குகிறேன். என்ன என்ன கேள்வி கேட்டு இருக்காரு தெரியுமா அவரு... அவர பாத்து இப்படி ஒரு கேள்விய கேட்டுட்ட நீர்

நாகை சிவா said...

//லொடுக்கு நாமெல்லாம் ஒரே ஊர்ல இருக்கோம். ராம் பெங்களூர்காரரு! //

ஒரே ஊருல இருந்தா....

நீதி ஒன்னு இருக்குல
நேர்மைனு ஒன்னு இருக்கல
நியாயம் ஒன்னு இருக்கல
தர்மம் ஒன்னு இருக்கல....

இராம்/Raam said...

//இதெல்லாம் நல்லா வெவரமாவே கேப்பீங்க க்ளாஸ்ல மட்டும் தவறி கூட கேட்டுறாதீக! :) //


கதிரு,

எந்த கிளாஸ்'ன்னு தெளிவா சொல்லிருப்பா????

;)

கதிர் said...

//திறமை இல்லனு நேரடியா சொல்லிட்டு போக வேண்டியது தானே.... ஏன் இப்படி இழுத்துக்கிட்டு...... //

சாமிகளா!

இந்த விஷயத்துலா வீராப்பு பேச விரும்பல. அப்புறம் சொ.செ.சூ ஆகிடும்!

எஸ்கேப்.....

இராம்/Raam said...

//உனக்கு தெரியுமா, உனக்கு தெரியுமானு கேட்குகிறேன். என்ன என்ன கேள்வி கேட்டு இருக்காரு தெரியுமா அவரு... அவர பாத்து இப்படி ஒரு கேள்விய கேட்டுட்ட நீர் //

புலி,

தீடிரென்னு வந்து என்னோட மானத்தே கப்பல் ஏறாமே பார்த்துக்கிட்டியே... ஆமா எனக்கு ஒரெஒரு டவுட் இதிலே ஏதும் உ.கு இல்லியே????

கதிர் said...

//உனக்கு தெரியுமா, உனக்கு தெரியுமானு கேட்குகிறேன். என்ன என்ன கேள்வி கேட்டு இருக்காரு தெரியுமா அவரு... அவர பாத்து இப்படி ஒரு கேள்விய கேட்டுட்ட நீர் //

ஏன்யா வரக்குள்ளவே இப்படி கொலவெறியோட வரீங்க?

சினிமால ப்ளாஷ்பேக் சீனுக்கு இப்படிதான் பில்டப் குடுப்பாங்க! :)

மு.கார்த்திகேயன் said...

//கிராமங்கள் எல்லாத்திலயும் ஒரு எம்.பி.பி.எஸ் டாக்டர் இருந்தாலும் ரெண்டு மூணு கம்பவுண்டர் டாக்டருங்க இருக்கத்தான் செய்யுறாங்க. //

உண்மை தம்பி.. எங்க ஊர்லயும் அப்படித்தான்..

//நீங்களே சொல்லுங்க அவர் டாக்டர்தானா?//

தம்பி, இந்த கேள்வியை மறுபடியும் நீங்க எங்க கிட்ட கேக்கலாமா

லொடுக்கு said...

ராம் சொன்னது...…

//சரி சரி. நம்பறோம் வுடுங்க. //

தார்மீக ஆதரவு கொடுத்த லொடுக்கு அண்ணாவிற்கு நன்றி!!!


ஒருத்தனை கவுத்தனும்னா நம்மள கூப்புடுங்க ராம். ஒடனே கூப்பிட்ட கொரலுக்கு ஓடோடி வர்ரேன். நம்ம ஆதரவு எப்போவும் ஆப்புக்குத் தான்.

தம்பி சொன்னது...…


//தார்மீக ஆதரவு கொடுத்த லொடுக்கு அண்ணாவிற்கு நன்றி!!! //

ஆஹா ஒண்ணு கூடிட்டாங்கய்யா ஒண்ணு கூடிட்டாங்கய்யா!

லொடுக்கு நாமெல்லாம் ஒரே ஊர்ல இருக்கோம். ராம் பெங்களூர்காரரு!

ஐ... தோடா.. ஒரே ஊர்ல இருந்தாப்ல... ஆப்பு வந்துட்டா ஒன்னு கூடிட மாட்டோம்... ஊராவது.. கீராவது...

நாகை சிவா சொன்னது...…

//லொடுக்கு நாமெல்லாம் ஒரே ஊர்ல இருக்கோம். ராம் பெங்களூர்காரரு! //

ஒரே ஊருல இருந்தா....

நீதி ஒன்னு இருக்குல
நேர்மைனு ஒன்னு இருக்கல
நியாயம் ஒன்னு இருக்கல
தர்மம் ஒன்னு இருக்கல....

அதானே!!

கைப்புள்ள said...

//சார் டேப்ளட் எதுவும் தேவையில்லயா? செப்டிக் ஆச்சின்னா பிரச்சினைதானன்னு அறிவாளித்தனமா ஒருத்தன் கேட்க அவரும் கீழ இருக்கற மாதிரி ப்ரிஸ்கிரிப்ஷன் பேப்பருல எழுதினாரு.

"புண்ணுக்கு மருந்து கொடுத்து அனுப்பவும்"

இதப்போயி மருந்து கடையில கொடுத்தேன்னா மானமே போயிடும்!

நீங்களே சொல்லுங்க அவர் டாக்டர்தானா?//

இல்லியா பின்னே? எம்புட்டு பெரிய டாக்டரு அவரு. புண்ணுக்கு மந்திரிச்சு வுட்டு அனுப்பவும்னு எழுதிக் குடுத்திருந்தா இந்தக் கேள்வியைக் கேக்கறது நியாயம்.

அப்புறம் தம்பி...நமக்கு எந்த ஊருங்ணா? மலை மேலல்லாம் வண்டி உட்டுருக்கீங்க அதுவும் தீர்த்தம் சாப்புட்டுட்டு? குறிஞ்சி நிலம்னு தெரியுது...ஆனா எந்த ஊரு? எந்த ஜில்லா?

கதிர் said...

//இல்லியா பின்னே? எம்புட்டு பெரிய டாக்டரு அவரு. புண்ணுக்கு மந்திரிச்சு வுட்டு அனுப்பவும்னு எழுதிக் குடுத்திருந்தா இந்தக் கேள்வியைக் கேக்கறது நியாயம். //

கைப்ஸ்
இன்னும் கல்லாவ தொறந்துதான் வச்சிக்கிறாராம் அட்ரஸ் குடுக்கறேன் போயி மீட் பண்ணி ஒரு ஜெனரல் ஜெக்கப் பண்ணிக்கோங்க :)

//அப்புறம் தம்பி...நமக்கு எந்த ஊருங்ணா? மலை மேலல்லாம் வண்டி உட்டுருக்கீங்க அதுவும் தீர்த்தம் சாப்புட்டுட்டு? குறிஞ்சி நிலம்னு தெரியுது...ஆனா எந்த ஊரு? எந்த ஜில்லா?//

குறிஞ்சி நிலம்னு முன்னாடியே தெரியுமா உங்களுக்கு அவ என்னோட க்ளாஸ்மேட்டுதான் முழுப்பேரு குறிஞ்சியமுதம் :))

கிட்டத்தட்ட வெட்டியும் நானும் ஒரே ஊருதான் கைப்ஸ்
எங்க ஊரு பேரு(U.K) யுனைட்டட் K.பாளையம்.

நன்றி கைப்ஸ்!

கதிர் said...

//ஐ... தோடா.. ஒரே ஊர்ல இருந்தாப்ல... ஆப்பு வந்துட்டா ஒன்னு கூடிட மாட்டோம்... ஊராவது.. கீராவது...//

லொடுக்கு,

ஐ ஆம் யுவர் பெஸ்ட் ப்ரெண்ட் :))

கப்பி | Kappi said...

//மாட்டுக்கு கோணி ஊசில குத்தறமாதிரி நாலு தையல் போட்டாரு.
//

நான் அஞ்சாம் கிளாஸ் லீவுல ஊருக்குப் போயிருந்தப்போ விளையாடும்போது மண்டையை உடைச்சுகிட்டேன்...எங்க ஊர்ல இருந்த எல்லா பேமிலிக்குமான ஒரே டாக்டர்(அவர் என்ன 'பதின்னு ஞாபகமில்ல) தையல் போட்டுவிட்டார்...அடுத்தநாள் காஞ்சிபுரத்துக்கு வந்து ஒரு நல்ல டாக்டர்கிட்ட காட்டினா
'இது வரைக்கும் இந்த நூலை வச்சு பாலியஸ்டர் துணிவகைகள் தைக்கறதுதான் பார்த்திருக்கேன்...உங்க காயத்துக்கும் அதே நூலை உபயோகிச்ச அந்த டாக்டரை நான் பார்க்கனுமே'ங்கறாரு...

என்னத்த சொல்ல :)


//"புண்ணுக்கு மருந்து கொடுத்து அனுப்பவும்"//

அதையாவது கரெக்டா செஞ்சாரே..புண்ணுக்கு பதில் கண்ணுக்குன்னு ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற போலி டாக்டர்ஸ் ஊர்ல நிறைய பேர் சுத்திட்டிருக்காங்க!!

ராசுக்குட்டி said...

//காதல் தோல்வின்னாவே நேரா தற்கொலைதானா? அடுத்ததா ஒண்ணு தேடினா என்ன? இல்ல தேடாமலே விட்டாதான் என்ன?//

தம்பி இதப் பத்தி தனி பதிவொன்று வரும்னு நினைக்கிறேன். btw அவர் டாக்டர்தான் தெரியாதத ஒத்துக்கரதுக்கும் தனி தைரியம் வேணும்ல அதுக்கே அவருக்கு டாக்டர் பட்டம் குடுக்கலாம்! சரிதானே