எல்லையற்ற அன்பு கொள்வோம்

Friday, October 20, 2006

நரகாசுரன் - நினைவுநாள் - தீபாவளி

வலைப்பதிவாளர்களுக்கும் எனது வலைப்பதிவினை
தொடர்ந்து படிக்கும்(?) வாசகர்களுக்கும் வலைப்பதிவு
உலகினை சுவராசியமாகவும், கலவர பூமியாகவும்
மாற்றும் வல்லமை படைத்த அன்பு அனானிகளுக்கும்
தம்பியின் இனிமையான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தீபாவளி வாழ்த்துக்கள் எல்லாம் ஊர்ல உள்ள
மக்களுக்குத்தான். என்னய மாதிரி பொழைக்க
வந்த ஊர்ல இருக்கற மக்களுக்கு தீபாவளி
என்பது மற்றுமோர் நாளே.

Image Hosted by ImageShack.us
பயப்படுறதுக்கு ஒண்ணும் இல்ல, நம்ம மூஞ்சிதான்

ஒரு தீக்குச்சி கூட கொளுத்த முடியாத தீபாவளி
ஒரு தீபாவளியா? ஏதோ நம்மளால முடிஞ்சது
ஒரு ரூவாய்க்கு லைட்டர் ஒண்ணு வாங்கி
கேஸ் தீர்ந்து போகற வரைக்கும் கொளுத்திகிட்டே
தீபாவளி கொண்டாட வேண்டியதுதான்.

கொஞ்சமா கொசுவர்த்தி சுத்திக்கட்டுமா?

தீபாவளியன்னிக்கு பெரிய இம்சையே அன்னிக்கு
எண்ணெய் தேய்ச்சு குளிக்கணும்னு வீட்ல கட்டாய
"படுத்து"வாங்க. கண்ணுல, காதுல மூக்குல
எண்ணெய வழிய விட்டு முழி பிதுங்கி போயி
உக்காந்திருக்கணும். அடுத்து 'புலி மார்க்' சீயக்காய்
தூள ஒரு கிண்ணியில போட்டு அதில கொஞ்சம்
சுடுகஞ்சிய ஊத்தி குழப்பி அடிச்சி வச்சிருப்பாங்க.
குளிக்கும்போது தலைல அந்த கொழம்ப போட்டு
அரக்கி எடுப்பாங்க அந்த நேரத்தில கண்ணு எரியும்
பாருங்க ஏண்டா இந்த தீபாவளி வந்து தொலைக்குதுன்னு
தோணும்.

இந்த குளியல் படலும் முடிஞ்சிருச்சுன்னா ஒரு பெரிய
தலவலி முடிஞ்சிருச்சின்னு அர்த்தம். அடுத்த தலவலி
சாப்பாடு. வித விதமா செஞ்சிருப்பாங்க. உப்பு ஒரப்பு
பாக்கறதிலருந்து சட்டிய கவுத்து புல் கட்டு அடிச்சுட்டு
பார்த்தா எந்திரிச்சு நிக்கவே முடியாது.

நம்ம ஊருப்பக்கம் எல்லாம் இந்த குயில்மார்க், மயில்
மார்க், தவுசண்ட் வாலா, மும்பை வாலா, தாடி வாலா
இதையெல்லாம் வாங்கி காச கரியாக்க மாட்டானுங்க.
நூறு ரூபாய்க்கு நாட்டு வெடினு கேட்டா அஞ்சு கட்டு
தருவானுங்க. ஒரு கட்டுக்கு அம்பது. ஒண்ணு பத்த
வெச்சி வெடிச்சோம்னா பக்கத்து ஊருக்கே கேக்கும்
நல்லா கேக்கறவனுக்கும் காது கொஞ்ச நேரம்
கொய்ங்ங்தான்.

மச்சான் பத்த வச்சிட்டேன் உங்க ஊர்ல தெளிவா
சத்தம் கேக்குதான்னு பாரு, இல்லன்னா வெடிய
ரிட்டர்ன் பண்ணிருவோம்னு போன்ல லந்து பண்ற
பார்ட்டிகளும் இருக்கு.

தீவாலியன்னி என்ன ஒரே சந்தோஷம்னா சின்ன
வயசில ஒண்ணு மண்ணா படிச்ச பிகருங்க
பெரிய படிப்புக்கு வெளியூர், வெளி மாநிலம்
போயிருக்கும். அன்னிக்கு மட்டும் மத்தாப்பு
கொளுத்திக்கிட்டு வெளிய வந்து எங்கள மாதிரி
பசங்களுக்கு திவ்ய தரிசனம் தருவாங்க.

இப்ப அதுவும் பீஸ் போச்சு.

நண்பர்களே தீபாவளிய நல்லா கொண்டாடுங்க.

28 comments:

Sivabalan said...

போட்டோ நல்லா செய்திருக்கிறீர்கள்...

கப்பி | Kappi said...

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

//ஒரு ரூவாய்க்கு லைட்டர் ஒண்ணு வாங்கி
கேஸ் தீர்ந்து போகற வரைக்கும் கொளுத்திகிட்டே
தீபாவளி கொண்டாட வேண்டியதுதான்.
//

:))


போட்டோவெல்லாம் போட்டு ஒரே கிராபிக்ஸ் மிரட்டல் தான் போங்க.. ;)

கதிர் said...

//போட்டோ நல்லா செய்திருக்கிறீர்கள்... //

நல்ல வேல பத்திரம் குடுத்துட்டிங்க, இல்லன்னா சங்கத்து பக்கம் இருந்து வந்து கலாய்ச்சியிருப்பாங்க!

நன்றி சிவபாலன்!

கதிர் said...

//போட்டோவெல்லாம் போட்டு ஒரே கிராபிக்ஸ் மிரட்டல் தான் போங்க.. ;) //

அது மிரட்டலா?

ஒரு பச்சபுள்ள வாழ்த்து சொல்ல வந்து நிக்குது, அதப்போயி மிரட்டல் அது இதுனு சொல்லிக்கிட்டு!

siva gnanamji(#18100882083107547329) said...

நன்றி கதிர்!
உங்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத்
தெரிவிக்கின்றேன். வாழ்க! வளர்க!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பட்டாசு வெடித்துக் காட்ட முடியாத பளபளப்பை, மிக அழகாக வாழ்த்து அட்டையில் காட்டியிருக்கீங்க!

குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் தீபாவளி நன்னாள் வாழ்த்துக்கள், தம்பி!!

இராம்/Raam said...

தம்பி கதிர்,

போட்டோவிலே ஏய் நீ ரொம்ப அழகாயிருக்கே!!!!!

Boston Bala said...

இனிமையான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

கதிர் said...

//நன்றி கதிர்!
உங்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத்
தெரிவிக்கின்றேன். வாழ்க! வளர்க!!//

நன்றி சிவஞானம்ஜி, உங்களிடம் வாழ்த்து பெறுவது மிகுந்த சந்தோஷம்.

கதிர் said...

//நன்றி கதிர்!
உங்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத்
தெரிவிக்கின்றேன். வாழ்க! வளர்க!!//

நன்றி சிவஞானம்ஜி, உங்களிடம் வாழ்த்து பெறுவது மிகுந்த சந்தோஷம்.

கதிர் said...

//பட்டாசு வெடித்துக் காட்ட முடியாத பளபளப்பை, மிக அழகாக வாழ்த்து அட்டையில் காட்டியிருக்கீங்க!

குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் தீபாவளி நன்னாள் வாழ்த்துக்கள், தம்பி!! //

உங்களுக்கு எனது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி K.R.S

கதிர் said...

//தம்பி கதிர்,
போட்டோவிலே ஏய் நீ ரொம்ப அழகாயிருக்கே!!!!!//

இது தனி மனித தாக்குதல். பதிவு உரிமை கமிஷன்ல புகார் சொல்லிறுவேன் ஆமா.

கதிர் said...

//இனிமையான தீபாவளி நல்வாழ்த்துக்கள். //

நன்றி பாபா :)

உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

VSK said...

தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாடிவிட்டு, இன்று அசலூரில் அல்லாடும் பல்லாயிரக்கணக்கான நம்மவர்களின் நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டி,
கூடவே உங்கள் தரிசனமும்காட்டி,

இந்த சாக்கில் அந்த பழைய ஃபிகருங்க எல்லாம் உங்களது தற்போதைய தோற்றத்தைப் பார்க்க வழி செய்து.

எங்களுக்கும் வாழ்த்து சொன்ன உங்களுக்கு,

என் இனிய நல்வாழ்த்துகள்!

ஒளி பரவட்டும்!
உளம் நிறையட்டும்!
வளம் செழிக்கட்டும்!
நலம் மலரட்டும்!

கதிர் said...

//தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாடிவிட்டு, இன்று அசலூரில் அல்லாடும் பல்லாயிரக்கணக்கான நம்மவர்களின் நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டி,
கூடவே உங்கள் தரிசனமும்காட்டி,//

ஆஹா எனக்கு புரிஞ்சிடுச்சு. இனிமேல போட்டோ எல்லாம் போடமாட்டென்!

//இந்த சாக்கில் அந்த பழைய ஃபிகருங்க எல்லாம் உங்களது தற்போதைய தோற்றத்தைப் பார்க்க வழி செய்து.//

ஹி ஹி ஹி ஒரு விளம்பரம்.

//ஒளி பரவட்டும்!
உளம் நிறையட்டும்!
வளம் செழிக்கட்டும்!
நலம் மலரட்டும்! //

வாழ்த்துக்கள் S.K அய்யா!

கைப்புள்ள said...

//பயப்படுறதுக்கு ஒண்ணும் இல்ல, நம்ம மூஞ்சிதான்//

அட! என்னங்க குறைச்சலு. நல்லா ஹீரோ கணக்காத் தான் இருக்கீங்க.

மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள்.

கதிர் said...

// கைப்புள்ள said...
//பயப்படுறதுக்கு ஒண்ணும் இல்ல, நம்ம மூஞ்சிதான்//

அட! என்னங்க குறைச்சலு. நல்லா ஹீரோ கணக்காத் தான் இருக்கீங்க.

மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள்//

நம்ம தலயே சொல்லிடுச்சி, தல அப்படியே உங்க செல்வாக்க வச்சி ஒரு படத்தில கீரோ சான்ஸு வாங்கி குடு தல.

உங்கள் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் தம்பியின் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

கைப்புள்ள said...

//நம்ம தலயே சொல்லிடுச்சி, தல அப்படியே உங்க செல்வாக்க வச்சி ஒரு படத்தில கீரோ சான்ஸு வாங்கி குடு தல.//

டாம் ஹேங்க்ஸ்னு நாம வளர்த்து வுட்ட ஒரு பயபுள்ள, இப்போ ஒரு படத்துல நான் சொல்லியும் நடிக்க மாட்டேன்னு லந்து பண்ணுது. அந்த படத்தை நீ பண்ணுறியா கண்ணு?

நாமக்கல் சிபி said...

தம்பி,
போட்டோவெல்லாம் அருமை...

அட்ட்டகாசம்!!!

தீபாவளி வாழ்த்துக்கள்

கதிர் said...

///டாம் ஹேங்க்ஸ்னு நாம வளர்த்து வுட்ட ஒரு பயபுள்ள, இப்போ ஒரு படத்துல நான் சொல்லியும் நடிக்க மாட்டேன்னு லந்து பண்ணுது. அந்த படத்தை நீ பண்ணுறியா கண்ணு?//

கைப்ஸ் நம்ம டார்கெட்டு கோலிவுட்டு அடுத்து பாலிவுட்டு, டோலிவுட்டு, ஹாலிவுட்டு இப்படி போகணும். நேரா ஹாலிவுட்டு போனாக்கா ஒத்துக்கிற மாட்டாக!

கதிர் said...

//தம்பி,
போட்டோவெல்லாம் அருமை...

அட்ட்டகாசம்!!!//

வா வெட்டி,

வளரெ நன்னி,

தீபா வலி வாழ்த்துக்கள்.

என்சாய்!

Anonymous said...

உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

லொடுக்கு said...

ஐ!! தோ பார்ரா தம்பியை... க்ராஃபிக்ஸ் செஞ்சு தீபாவளியை அசத்துராரு....

தம்பி! தீபாவளி வாழ்த்துக்கள்!!

வாழ்க வளமுடன்!!

கதிர் said...

உங்களுக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தூயா!
பெயர் ரொம்ப அழகா இருக்கு!

//ஐ!! தோ பார்ரா தம்பியை... க்ராஃபிக்ஸ் செஞ்சு தீபாவளியை அசத்துராரு....

தம்பி! தீபாவளி வாழ்த்துக்கள்!!//


ராமநாராயணனும், ஷங்கரும் எனக்கு தூரத்து சொந்தம்.

நன்றி லொடுக்கு!

உங்களுக்கு எனது இனிய ரமலான் வாழ்த்துக்கள்!!

லொடுக்கு said...

//ராமநாராயணனும், ஷங்கரும் எனக்கு தூரத்து சொந்தம்.
//

அப்படியா சொல்லவே இல்ல. அப்படின்னா சீக்கிரம் அவுங்கள வளைச்சு போட்டு அடுத்த படத்துல க்ராஃபிக்ஸ் உதவி: தம்பி -னு போட வைங்க... :)

கோவி.கண்ணன் [GK] said...

தம்பி அவர்களுக்கு !

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !

Hariharan # 03985177737685368452 said...

தம்பி உங்களுக்கு எமது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

//பிகருங்க எங்கள மாதிரி
பசங்களுக்கு திவ்ய தரிசனம் தருவாங்க.//

பாத்து தம்பி! பழக்க தோஷத்துல Native Gulf neighbour பிகரை முகம் பார்க்க முயற்சிக்க வேண்டாம் வெடியை உங்க மேல வெடிச்சிரப் போறாணுங்க :-))

இப்படிக்கு,
குவைத்தில் தீபாவளியை மற்றுமொரு நாளாய்க் கொண்டாடிடும் ஹரிஹரன்!

கதிர் said...

//தம்பி அவர்களுக்கு !

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்//

வாங்க G.K உங்களுக்கும் உங்கள் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

//பாத்து தம்பி! பழக்க தோஷத்துல Native Gulf neighbour பிகரை முகம் பார்க்க முயற்சிக்க வேண்டாம் வெடியை உங்க மேல வெடிச்சிரப் போறாணுங்க :-))//

வாங்க ஹரி,

எனக்கு தாவணிப்பார்வைகள் மட்டுமே உண்டு. :))

//இப்படிக்கு,
குவைத்தில் தீபாவளியை மற்றுமொரு நாளாய்க் கொண்டாடிடும் ஹரிஹரன்!//

அப்படின்னா தினமும் வாழ்க்கைய கொண்டாடறிங்களா?
குடுத்து வச்ச ஆளுதான் நீங்க :))

உங்களுக்கு எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.