இப்ப தமிழ்மணத்துல எல்லாரும் பின்நவீனத்துவ கதைகள் எழுத முயற்சி எடுத்துகிட்டு
இருக்காங்க. கவிதைய முன்ன பின்ன எழுதி பழக்கமே இல்லாதவங்க கூட
கொலவெறியோட கலப்பைய புடிச்சிகிட்டு திரியரதா டீவில கூட் பாத்தேன்.
அதுவுமில்லாம புனைவு எழுத புற்றீசல் போல அனைவரும் புறப்பட்டுட்டாங்க.
இதெல்லாம் எங்க போய் முடியும்னு தெரியாம முழிச்சிகிட்டு இருக்கும்போதே நேத்து
நம்ம வலைய படிக்கற ஒருத்தர் போன் பண்ணி இருந்தார்.
எவ்வளவு செலவானாலும் பரவால்லிங்க தம்பி! நான் எப்படியாச்சும் பின்நவீனத்துவாதின்னு பேர் எடுக்கணும். அதுக்கு நீங்கதான் உதவி பண்ணனும்.
ரொம்ப நாள் இல்லாம கொஞ்ச சீக்கரமே ஆயிட்டா பரவால்ல.
அண்ணே நீங்க தப்பான அட்ரசுக்கு வந்திருக்கிங்க. எனக்கு கவுஜைய கூட ஒழுங்கா
எழுத தெரியாது.
உங்களுக்கு ரொம்ப தன்னடக்கம். எல்லாரும் சொன்னாங்க. நீங்க ரொம்ப நல்லா
சொல்லித்தருவிங்க.
"எவன் சொன்னான் அந்த மாதிரி. எனக்கு அதெல்லாம் தெரியாது மரியாதையா
ஆள விடு இல்லன்னா அய்யனார்கிட்ட புடிச்சி குடுத்துடுவேன்.
"ஆமா தம்பி ஆமா தம்பி. அவர மாதிரி ஆயிட்டன்னா கூட பரவால்ல"
யோவ் என்னய்யா இப்படி சொல்லிட்ட? அவர் மாதிரி ஆகறது என்ன அவ்வளவு
சாதாரண விஷயமா? அதுக்கெல்லாம் நிறைய படிக்கணும், அதவிட நிறைய
குடிக்கணும்.
"என்னது குடிக்கணுமா?"
நீங்க சரிப்பட்டு வரமாட்டிங்க போலருக்கு. எனக்கும் நிறைய வேலையிருக்கு.
"தம்பி, தம்பி ப்ளீஸ் தம்பி சபதமெல்லாம் போட்டுருக்கேன் எண்ணி நாப்பதே
நாள்ல பீனாவானா ஆகி காமிக்கிறேன்னு. கொஞ்சம் தயவு பண்ணுங்க தம்பி".
சரி உங்கள பாத்தாலும் பாவமாதான் இருக்கு.
சரி ம்ம்...
சுலபமான விஷயத்துலருந்து ஆரம்பிப்போம்.
சினிமா பாப்பிங்களா?
நிறைய பாப்பேங்க. ஜுராசிக்பார்க், காட்சில்லா, டைட்டானிக், அனகோண்டா
படத்தையே அஞ்சு முறை பாத்திருக்கேங்க. சமீபத்துல ரிலீஸ் ஆன கானல்
நீர், துள்ளல், காசு இருக்கணும். இதெல்லாம் கொஞ்சந்தான் இன்னும் நிறைய
மறந்துட்டேன்.
யோவ் நிறுத்துய்யா போதும். நான் சொல்றது அந்த மாதிரி படங்கள் இல்ல.
நீ முதல்ல தமிழ், ஆங்கிலப்படம் பாக்கறத நிறுத்தணும். புரியுதா?
"நீலப்படம் பாக்க சொல்றீங்களா?"
கூட கூட பேசாதய்யா...
"ப்ரெஞ்சு, ரஷ்யா, மாண்ட்ரீன், துளு இன்னும் பழங்குடியினர் பேசற பாஷை
படங்கள சப் டைட்டிலே இல்லாம பாக்கணும்."
"எனக்கு அந்த மொழியே தெரியாதுங்களே அய்யா"
யோவ் பாக்கறவனுக்கு மட்டும் தெரியுமா? படத்தை பார்த்ததும் புரிஞ்சிதோ
இல்லையோ அதுக்கு விமர்சனம்ற பேர்ல நீயா யோசிச்ச ஒரு கதையை பதிவா
எழுதணும்.
"தலைவா இப்படிலாம் பதிவு போட்டா யாராச்சும் படிப்பாங்களா? பின்னூட்டமாச்சும்
போடுவாங்களா?"
யோவ் என்னய்யா இப்படி கேட்டுபுட்ட? இந்த மாதிரி பதிவுகளுக்காகவே பல பேர்
கொலவெறியோட சுத்திகிட்டு இருக்காங்க தெரியுமா உனக்கு?
அந்த மாதிரி படம்லாம் எங்க தம்பி கிடைக்கும்?
எதாச்சும் ஒரு வீடியோ கடைக்கு போ, அங்க எவனுமே சீண்டாத சிடி,டிவிடி எதுன்னு
கேளு அவனே எடுத்து கொடுப்பான் அதெல்லாம் நல்ல படங்கள்தான்.
அப்புறம் இந்த பீனாவானா கவுஜ....
"இவ்ளோ சொன்னேன் அத சொல்ல மாட்டனா? ஏன் இந்த அவசரம்?
"இல்லிங்க மறந்துடுவிங்களோன்னு பயந்துட்டேன்"
"மெயின் மேட்டரே அங்கதான் சார் இருக்கு"
"கடையில இருந்து எடுத்துட்டு வந்த டிவிடிய அப்படியே பாக்க கூடாது. அதெல்லாம்
பாக்கறதுக்குன்னு சில முறை இருக்கு?
தலைகீழ கவுந்தடிச்சி பாக்கணுங்களா தம்பி?
யோவ் இந்த மாதிரி கூட கூட பேசறத நிறுத்துய்யா மொதல்ல.
மன்னிக்கனும். என்ன மொறைல பாக்கணும் தம்பி?.
அப்படி கேளுய்யா சிங்கம். படம் பாக்கறதுக்கு முன்னாடி கொறஞ்சது மூணு கட்டிங்
போடணும். அப்பதான் படம் தெளிவா புரியும்.
"நான் பதினஞ்சு நாளைக்கு ஒருக்கா தாங்க கட்டிங் போடுவேன்."
"யோவ் நான் நெப்போலியன் கட்டிங் சொல்றேன். நீயெல்லாம் பீனாவானா ஆகி
என்னத்த பண்ண போறியோ போ!
மன்னிக்கனும் நீங்க சொல்லுங்க தம்பி.
மூணு கட்டிங் அப்புறம் அரைவாசி படம் முடியும்போது ரெண்டு கட்டிங் போடணும்.
உன்னப்பாத்தா ஒரு கட்டிங்கே தாங்க முடியாத மாதிரி இருக்கு இருந்தாலும் பராவல்ல
அப்புறம் எப்பாடுபட்டாவது கிளைமேக்ஸ் மட்டும் பாக்காத ஆனா விமர்சனத்துல
நீ பாத்த மாதிரி உன்னோட கற்பனைய தட்டி விட்டு எழுதணும்.
ஒரிஜினலா படம் பாத்தவங்க படிச்சி திட்டுவாங்களே!
அதுக்கெல்லாம் கவலபடாத ராசா! அந்த மாதிரி படத்தை நாட்டுக்கே ஒருத்தந்தான்
பாக்க முடியும். விமர்சன பதிவா எழுதும்போது ஆகா, அருமை, கலக்கல்னு
ட்ரேட் மார்க் பின்னூட்டமா வரும். அதான் ஊக்கமா எடுத்துக்கணும்.
பீனாவானா கவுஜ...
கட்டிங்க போட்டு திரையில நீ பாக்கற பிம்பங்கள் அலை அலையா தெரியும்
அந்த கிறுகிறுப்புலயே பதினஞ்சி வரி, உனக்கு தோணுறதெல்லாம் எழுதிடு
கெட்ட வார்த்தையா இருக்குதேன்னு கவலபடாத. அதெல்லாம் இருந்தாதான்
பீனாவானா.
அப்புறம் இந்த புனைவு...
இப்ப கேட்டியே இது ஒரு நல்ல கேள்வி.
பதினஞ்சி வரி எழுதினா அதுக்கு பேரு பீனாவானா கவுஜ. அதையே கொஞ்சம்
நெருக்கியடிச்சி 150 வரி எழுதினா அதுக்கு பேரு புனைவு.
"தம்பி என்னால 150 வரியெல்லாம் டைப் அடிச்சிகிட்டு இருக்க முடியாதுப்பா"
அப்ப ஒண்ணு பண்ணு. கலப்பைய கம்பியூட்டர்ல இன்ஸ்டால் பண்ணாம உன்
வாயில இன்ஸ்டால் பண்ணிக்க. நீ பேசறது எல்லாம் திரையில தெறிச்சி
விழும் பாத்துக்க...
ஓகேவா இதுதான் எனக்கு தெரிஞ்ச பீனாவானா. இத புடிச்சிகிட்டு பெரியாளா வந்துடு.
"யாருக்கு தெரியும் நீயே நாளைக்கு பெரிய பீனாவானா ஆனாலும் ஆகலாம்."
வர்ட்டா....