எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, September 29, 2007

பாவனா ஒரு கேள்விக்குறி!!!

சமிபத்தில் (ஒரு வாரத்துக்கு முன்னாடி)என் நலம் விரும்பி ஒருவர் பாவனாவின்
சமீபத்திய (அதுவும் இப்பதான்னு நினைக்கிறேன்)பேட்டி ஒன்றை மடல் அனுப்பி
இருந்தார். வெகு நாட்களுக்கு அப்பால் பாவனாவை பார்க்க போகிற ஆவலில்
தரவிறக்கம் செய்து இரண்டு மூன்று முறை பார்த்தேன்.

வழக்கமான ஊறுகாய் நாயகிகள் போல அல்ல பாவனா என்பது ஓரிரண்டு
படங்களை தவிர்த்து பார்த்தால் தெளிவாக புரிந்து விடும். (கி.க.சா, ஆர்யா,
கூடல் நகர் இதெல்லாம் சேர்த்தி இல்லிங்க). வழக்கமான நடிகைகளின் பேட்டி
மாதிரி இல்லாமல் தோழியுடன் பேசுவது போல ஒரு உணர்வு.(ஓவரா இருக்குதோ)

பேட்டி கண்டவரின் மொக்கைத்தனமான கேள்விகளுக்கு வழக்கமாக நடிகைகள்
தரும் போலிப்புன்னகைள் பதிலைப்போல இல்லாம நிஜமாகவே பதில் அளித்தது
போல இருந்தது. அந்த முடிக்கற்றைகளை ஒதுக்குவதிலும், சிரிக்கும்போது வாயை
பொத்துவதையும் தவிர்த்து பார்த்தால்(எல்லா நடிகைகளும் அதத்தான செய்றாங்க)
நல்லாவே பேசி இருக்காங்க.

காதலைபத்தி கேள்வி கேட்டதும் அவங்க சொன்ன பதில் உண்மையாகவே இன்றைய
பெண்களின் மனதை பிரதிபலிப்பது போல இருந்தது. நிறைய டப்பு உள்ள
பையனைத்தான் காதலிப்பாங்களாம், கல்யாணம் பண்ணிப்பாங்களாம். யாருக்குதான்
இந்த எண்ணம் இல்ல? :)

எந்த சூட்டிங் போனாலும் ரத்த காயம் ஆச்சுன்னா அந்த படம் சூப்பர் ஹிட்
ஆகிடுமாம் அத தெரிஞ்சிகிட்ட ஒரு துபாய் சேட்டன் ஒரு பொட்டி நிறைய
பேண்டேஜ் அனுப்பினாராம் சிரிச்சிகிட்டே சொன்னாங்க. யாருப்பா அந்த சேட்டன்?

மேலே சொன்னது போல வாழ்க்கைக்கு உபயோகமாக பல விஷயங்களை தெரிஞ்சிக்க
முடிஞ்சது.

இந்த பேட்டியை வளரும் சிறுவர்களும், வளர்ந்த பெரியவர்களும் காண சிபாரிசு செய்கிறேன்.

13 comments:

மங்களூர் சிவா said...

//
வழக்கமான ஊறுகாய் நாயகிகள் போல அல்ல பாவனா என்பது ஓரிரண்டு
படங்களை தவிர்த்து பார்த்தால் தெளிவாக புரிந்து விடும்
//
மொத்தம் வந்திருக்கிறதே நாலஞ்சு படம் தானே

மங்களூர் சிவா said...

//
மேலே சொன்னது போல வாழ்க்கைக்கு உபயோகமாக பல விஷயங்களை தெரிஞ்சிக்க
முடிஞ்சது.
//
நல்லா இருங்கய்யா

மங்களூர் சிவா said...

அப்புறம் சொல்ல விட்டுட்டேன்

மீ த பர்ஸ்ட்டு

நாகை சிவா said...

அட அநியாய ஆபிஸரே!... அது போன வருசம் போட்ட பேட்டியின் மறுஒளிபரப்புய்யா... ஏண்யா இப்படி எல்லாம் இருக்கீங்க...

போன வருசமே கேட்டேன் நீ தான் பதில் சொல்லல.. ஞாபகம் இருக்கா...

கதிர் said...

//மொத்தம் வந்திருக்கிறதே நாலஞ்சு படம் தானே//

ஆமாங்க அந்த நாலஞ்சு படத்துல மூணு படம் மொக்கைப்படம் ஆனா கதைலதான் மிஸ்டேக் தவிர பாவனா மேல எந்த மிஸ்டேகும் இல்ல.

கதிர் said...

//நல்லா இருங்கய்யா//

ப்போம்.

//மீ த பர்ஸ்ட்டு//

தொத்திகிச்சா?

கதிர் said...

//அட அநியாய ஆபிஸரே!... அது போன வருசம் போட்ட பேட்டியின் மறுஒளிபரப்புய்யா... ஏண்யா இப்படி எல்லாம் இருக்கீங்க...//

நிஜமாவா சொல்ற புலி? ஆனா இப்ப பாத்தாலும் நல்லாவே இருக்கு, முகமும் கொஞ்சம் கூட மாறாம அப்படியே இருக்கு பாரேன்.

//போன வருசமே கேட்டேன் நீ தான் பதில் சொல்லல. . ஞாபகம் இருக்கா...//

அப்ப எனக்கு பாவனாவையே தெரியாது. இப்பதான பாத்தேன்.

Anonymous said...

மேலும் பாவனா பேட்டியை பார்க்க....http://kummionly.blogspot.com/2007/09/blog-post_28.html

கோபிநாத் said...

\\நிஜமாவா சொல்ற புலி? ஆனா இப்ப பாத்தாலும் நல்லாவே இருக்கு, முகமும் கொஞ்சம் கூட மாறாம அப்படியே இருக்கு பாரேன்.\\

அடேய்...ரீலு அந்து போச்சு டா :))

ALIF AHAMED said...

"பாவனா ஒரு கேள்வ்க்குறி!!!"
//


எதுக்கு இப்ப ஆச்சரியகுறி..???

ஜி said...

பாவனா பாவம்ணா...

மங்களூர் சிவா said...

தம்பி said...

//
//மீ த பர்ஸ்ட்டு//

தொத்திகிச்சா?
//
தமிழ்மணத்தில வந்து சேந்தாச்சுல்ல, அதோட எபக்ட் தான்

Anonymous said...

romba theliva irukeenga but innum intha paavana vilaiyaattu thaevaithaana... why you are spoiling your image.