எல்லையற்ற அன்பு கொள்வோம்

Thursday, February 11, 2010

பூச்சிறுமி


னனிக்கு எதிலேயும் பூ வைத்து பார்ப்பதில்
பிரியம் அதிகம். நாய்க்கும் பூ வைப்பாள்
பள்ளிப்பேருந்திற்க்கும் பூ வைப்பாள்
வாசல்புறத்திலும் வாகனத்திலும்
எங்கேயும் எதிலும் பூ வைப்பதில் ஆனந்தம்
தங்கைக்கும் பூ வைப்பாள்
சாமிக்கென தனியே பூ கொய்வாள்
காலையில் செம்பருத்தி ரோஜாவும்
மாலையில் மல்லிகையும் சூடிக்கொள்வாள்
நேற்றிலிருந்து எனது கணினித்திரைக்கு
அடியிலும் சில பூக்களிட்டிருந்தாள்
இனி தினமும் வைக்கப்போவதாக
சொல்லியிருக்கிறாள்.

7 comments:

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்கு.

MSK / Saravana said...

"பூச்சிறுமி" :))

நல்லா இருக்கு..

ராமலக்ஷ்மி said...

பூவை நேசிக்கும் ஜனனிக்கு என் வாழ்த்துக்கள்:)!

உயிரோடை said...

பூச்சிறுமி மிக‌ அழ‌கு

☼ வெயிலான் said...

ஜனனி, பூ, கவிதை எல்லாமே நல்லாருக்கு கதிர்!

கோபிநாத் said...

அழகு டா மச்சி ;)

கதிர் said...

அனைவருக்கும் நன்றி