எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, July 08, 2009

கேக்குறாங்கய்யா கேள்விகள...

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

தாத்தா வெச்சது. ரொம்ப

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

Into the wild படத்துல ஹீரோ உலகத்த வெறுத்து காட்டுக்குள்ள போயிடுவாரு அப்போ ஆனந்தசுதந்திரமா ஓடி விளையாடும் மான்கள பாக்கும்போது அவர் கண்ல தண்ணி வரும் அப்போ எனக்கும் வந்துச்சு.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

மொத ரெண்டு லைன் புடிக்கும் அதுக்கு மேல காது

4. பிடித்த மதிய உணவு என்ன?

முருங்கக்கா சாம்பார் + சோறு

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

அதெப்படி முடியும்

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா....அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

பாத்ரூம் தவிர எங்க குளிச்சாலும் புடிக்கும்

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

எல்லாத்தையும், உதட்ட முதல்ல பாக்குறது வழக்கம்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

தண்ணி போட்டா ரொம்ப பேசறது. ரொம்ப பேசறது

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

ஆள கண்டுபுடிச்ச உடனே பாக்கணும்

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அப்டிலாம் இல்லயே ரொம்ப யோசிச்சா தாத்தா வர்றார்.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

இல்ல

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

டிவி. ஓடி ஓடி விளையாடு ஓடி ஓடி விளையாட வாடி... இதத்தான் போடறானுங்க எப்பயுமே எல்லாத்துலயும்

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கறுப்பு

14. பிடித்த மணம்?

வெற்றிலை, காரணத்த விரிவா மறைவா சொன்ன கதைகள்ல படிக்கலாம்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

ராஜேஷ். நண்பர், நல்லா எழுதுவார்

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு

எ.நி.ச.அறை

17. பிடித்த விளையாட்டு?

திருடன் போலீஸ்

18. கண்ணாடி அணிபவரா?

இல்ல

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்

கலைப்படம். "கலை"ப்படங்களைப் பார்க்க ஆர்வமளித்த அண்ணாச்சிக்கே எல்லா புகழும்

20. கடைசியாகப் பார்த்த படம்?

நாடோடிகள்.

21. பிடித்த பருவ காலம் எது?

கடும் வெயில் கோடைக்காலம் அல்ல

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

என் கதை - நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்களின் வரலாறு

23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?



இந்த படத்தைத்தான் ரொம்ப நாளா வெச்சிருக்கேன். மோகன் தாஸ் எடுத்ததுன்னு நினைக்கிறேன்.
இதை வைத்தநாள் முதல் மாத்தல. பொதுவா நான் அடிக்கடி மாற்றுகிறவன் அல்ல.

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

ஓடை நீர் சலசலக்கும் சத்தம். குழந்தை அழும் சத்தம் சுத்தமா பிடிக்காது

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்சத் தொலைவு?

அமீரகம்

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

தெரிஞ்சா சொல்லுவம்ல

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

யாருக்காச்சும் தனியா காத்திருக்கறது.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோவம்

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கொடைக்கானல்

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

நல்லாவே இருக்கணும்னு

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

தெரில

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

அட சரியா தெரிலங்க.

எழுதறதுக்கான அமைப்புகள் சரியா இல்லாத காரணத்தால் எழுதறதில்ல. எப்பவாச்சும் எழுதற இந்தமாதிரி பதிவுகள்லயும் ஓரிரு வார்த்தைகளில் எல்லா பதில்களையும் எழுதிட்டேன். விரிவா எழுதுனாலும் வாசிக்கறதுக்கு ஆள் இல்லைங்கறது தெரிஞ்ச விஷயம்தான். அழைத்த அய்யனாருக்கு நன்றி. என்கிட்ட இருக்க எவ்வளவோ நல்ல குணங்கள்ல இருந்து எதையாச்சும் ஒண்ணை சொல்லிருக்கலாம். அத விட்டுபோட்டு நல்லா குடிப்பேன்னு சொன்ன உன் நல்ல உள்ளத்துக்கு தக்க நேரம் கிடைக்கும்போது கைம்மாறு செய்வேன் ஜாக்கிரத.

10 comments:

கோபிநாத் said...

\\தாத்தா வெச்சது\\

உனக்குமா!! ;)))

\\எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்

கலைப்படம். "கலை"ப்படங்களைப் பார்க்க ஆர்வமளித்த அண்ணாச்சிக்கே எல்லா புகழும்\\

வாழ்க அண்ணாச்சி ;))

வாழ்க அவர் கலைப்படம் பரப்பும் புகழ் ;))

ஒழிக அய்ஸ் ;))

சென்ஷி said...

//2. கடைசியாக அழுதது எப்பொழுது?

Into the wild படத்துல ஹீரோ உலகத்த வெறுத்து காட்டுக்குள்ள போயிடுவாரு அப்போ ஆனந்தசுதந்திரமா ஓடி விளையாடும் மான்கள பாக்கும்போது அவர் கண்ல தண்ணி வரும் அப்போ எனக்கும் வந்துச்சு.//

எதிர்க்க தண்ணி இருந்ததா இல்லியா :)

☀நான் ஆதவன்☀ said...

ரொம்ம ஷார்ட்டா, நீட்டா இருக்கு பதில்கள் :)

இராம்/Raam said...

neat... :)

வால்பையன் said...

//உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
தண்ணி போட்டா ரொம்ப பேசறது. ரொம்ப பேசறது//

அப்படி ஒன்னும் தெரியலையே தல!

ஒருவேளை என்னை மாதிரி ஞானசூனியத்துகிட்ட என்ன பேசுறதுன்னு விட்டுடிங்களோ!

வால்பையன் said...

//பிடித்த மணம்?
வெற்றிலை, காரணத்த விரிவா மறைவா சொன்ன கதைகள்ல படிக்கலாம்.//

ஹிஹிஹிஹிஹி!

படிச்சிருக்கோம்ல!

சென்ஷி said...

அந்த போட்டோ ரொம்ப கியுட்டா இருக்குது..

ஓ.. அந்த குடிகாரன் நீதானா :))

Ayyanar Viswanath said...

எலேய் அடிக்கடி எழுது இல்லனா இந்த மோசக்கார ஒலகம் உன்ன மறந்திடும் :)

சுரேகா.. said...

நல்லா சொல்லிருக்காருய்யா பதில்கள!

அப்புறம்..
நலமா?

சே.வேங்கடசுப்ரமணியன் said...

//கடும் வெயில் கோடைக்காலம் அல்ல//
விதியாசமான மனிதர்